சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 February 2011

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..?போன Saturday ( Feb 19th )
எங்க சின்ன பையன் ஸ்கூல்ல
Annual Day Function..

நாங்க வீட்ல இருந்து கிளம்ப
10 நிமிஷம் லேட்டாயிடுச்சு.

அதனால என் Wife-க்கு
என் மேல லேசா கோபம்..

அங்கே ஸ்கூலுக்கு போனா...

மேடையில White & White-ல
நிறைய பேர் உக்காந்து இருந்தாங்க..

இதென்ன அரசியல் கட்சி மீட்டிங்கா..?
இல்ல ஸ்கூல் Function-ஆ..?

அப்ப எங்க பக்கத்து ஊர் பஞ்சாயத்து
தலைவர் பேச ஆரம்பிச்சாரு..

" இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருக்கும்.,
விநாயகா மிஷன்ஸ் நிறுவனத்தில்
தன் சிறப்பான பணியை 15 ஆண்டுகாலமாய்
வழங்கி கொண்டிருக்கும்.. உயர் திரு....... "

நான் என் Wife-கிட்ட..

" இவரு பேசி முடிக்கறதுக்குள்ள
நான் போயி ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்.. "

" சீக்கிரம் வந்துடுங்க.. Function ஆரம்பிச்சுட
போறாங்க..!! "

" ஓ.கே.. ஓ,கே..!! "

நான் போயி Quick-ஆ ஒரு " டீ " குடிச்சிட்டு
வர்றதுக்குள்ள 5 நிமிஷம் ஆயிடுச்சு.. !!

" வருங்காலத்தில்.. ஜனாதிபதியாகவோ.,
பிரதமராகவோ., முதல்வராகவோ... "

இன்னும் அவரே தான் பேசிட்டு இருந்தார்..

என் Wife-கிட்ட கேட்டேன்..

" இன்னுமா இவரு பேசி முடிக்கலை..? "

" அவரு இன்னும் ' வணக்கமே ' சொல்லி
முடிக்கலைங்க..! "

" என்னாது..? இன்னும் " வணக்கமே "
முடியலையா..? ஆ...!! "

( ........... டாக்டராகவோ., விஞ்ஞானியாகவோ
வர கூடிய மாணவர்களுக்கும் என் அன்பு
கலந்த வணக்கம்..!! )

அட பாவி..!!
அவ்ளோ பெரிய அப்பாடக்கராய்யா நீ..?

எனக்கு செம டென்ஷன்..
மறுபடியும் நான் எந்திரிச்சேன்..

" எங்கே போறீங்க..? "

" நான் போயி " சுறா " பட DVD
யார்கிட்டயாவது கடன் வாங்கியாவது
பார்க்கறேன்..!!"

" அட., உக்காருங்க.. கொஞ்சம்
நேரத்துல முடிச்சிடுவாரு..!! "

" யாரை.., நம்மளயா..?! "

ஆனா மனுஷன் எதை பத்தியும்
கவலைபடாம பேசினாரு., பேசினாரு.,
பேசிட்டே இருந்தாரு..

( " எலேய்.. நிறுத்துலே..! இன்னும்
கொஞ்சம் நேரம் பேசுனே..
அப்புறம் கொலை கேஸுல
உள்ளே போயிடுவ..!! " )

நல்லவேளை இவரு MLA ஆகலை..

பின்ன இவரு சட்டசபைல போயி
200 பேருக்கு வணக்கம் வெச்சு பேச
ஆரம்பிக்கறதுக்குள்ள அடுத்த
தேர்தலே வந்துடும்...!!
.
.

49 Comments:

சங்கவி said...

//" நான் போயி " சுறா " பட டி.வி.டி
யார்கிட்டயாவது கடன் வாங்கியாவது
பார்க்கறேன்..!!" //

அதுக்கு அவர் பேச்சையே கேக்கலாம்....

nvnkmr said...

neenka podura pathiva vidava mokkai potaru???

inime neenka ethavathu function ku pokurathuku munadi unka blog padichutu ponk, appuram anka ethuvum mokkaiya theriyathu

எஸ்.கே said...

பயங்கர காமெடி!!!

(ஆமா யாருங்க அது ரமேஷா?)

மாணவன் said...

//பின்ன இவரு சட்டசபைல போயி
200 பேருக்கு வணக்கம் வெச்சு பேச
ஆரம்பிக்கறதுக்குள்ள அடுத்த
தேர்தலே வந்துடும்...!!//

he he he super...

வெங்கட் said...

@ சங்கவி.,

// அதுக்கு அவர் பேச்சையே கேக்கலாம். //

அவர் பேச்சை விட " சுறா " பட DVD
பார்க்கறதே மேல்... ஏன்னா...

1. பிடிக்கலைன்னா Off பண்ணிடலாம்.
2. Mute பண்ணிட்டு தூங்கலாம்.
3. கோவம் வந்தா DVD-ஐ ரெண்டா
உடைக்கலாம்.
4. #^#%?>&%$^%$)*&@$.... ( ஹி., ஹி., ஹி,,
நல்லா வாய்க்கு வந்தபடி திட்டலாம்.. )

Speed Master said...

கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போன அங்க ரெண்டு கொடுமை விஜய் படத்துக்கு டிக்கட்டேட வந்துச்சாம்

வேடந்தாங்கல் - கருன் said...

Nice.,


http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

VELU.G said...

நல்லா கொடுக்கறாங்கய்ய டீட்டெய்லு

வெங்கட் said...

@ நவீன்.,

// neenka podura pathiva vidava mokkai potaru??? //

யாரங்கே..!!

என் பதிவை மொக்கை என்று சொன்ன
இவரை அப்படியே குண்டுகட்டாக
தூக்கி போய்...,

அந்த பஞ்சாயத்து தலைவர் 3 மணி நேரம்
சிறப்புரை ஆற்ற இருக்கும் விழா தூணில்
கட்டி வைக்குமாறு உத்தரவு இருகிறேன்.

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// (ஆமா யாருங்க அது ரமேஷா?) //

ரமேஷா இருந்திருந்தா கல் எடுத்து
எறிஞ்சிருக்க மாட்டேனா..?!

அது வேற யாரோ.. ரமேஷ் Friend.!

வெங்கட் said...

@ Speed Master.,

// கொடுமை கொடுமைனு கோயிலுக்கு
போன அங்க ரெண்டு கொடுமை விஜய்
படத்துக்கு டிக்கட்டேட வந்துச்சாம் //

ஒண்ணு - விஜய்.!!
இன்னொன்னு - அவங்க அப்பாவா..?

எஸ்.கே said...

சட்டசபையில் வணக்கமெல்லாம் சொல்வாங்களா? நான் வெறும் சண்டை மட்டும் போட்டுப்பாங்கன்ல நினைச்சேன்!

வெங்கட் said...

@ வேலு.,

// நல்லா கொடுக்கறாங்கய்ய டீட்டெய்லு //

நான் குடுத்தது அவர் பேசினதுல
பாதி டீட்டெய்லு தான்..

அன்னிக்கு அரை மணி நேரத்துலயே
நான் மயக்கம் ஆயிட்டதால அதுக்கு
அப்புறம் அவர் என்னென்ன சொன்னார்னு
எனக்கு தெரியல...!!

மைந்தன் சிவா said...

ரொம்ப பேசுறவங்கள கண்டா பதிவர்களுக்கு பிடிக்காதே(ஹிஹி)
அவர் அப்பிடி பேசி இருக்காட்டிக்கு இப்ப ஒரு பதிவு போட்டிருப்பீன்களா பாஸ்?
பேசாம ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு வருவம்ன்னு இல்ல...

கோமாளி செல்வா said...

//" நான் போயி " சுறா " பட DVD
யார்கிட்டயாவது கடன் வாங்கியாவது
பார்க்கறேன்..!!" //

தல அவரு நம்ம VKS கட்சிக்கு பொருத்தமா இருப்பாரு போல .
ஹி ஹி .. அவுங்க தான் நம்மல கலாய்க்கிறேன்னு சொல்லிட்டு
இப்படி பேசிட்டு இருப்பாங்க .. ஹி ஹி

royal ranger said...

@ vebnkat

//அவர் பேச்சை விட " சுறா " பட DVD
பார்க்கறதே மேல்... ஏன்னா...
3. கோவம் வந்தா DVD-ஐ ரெண்டா
உடைக்கலாம்.
4. #^#%?>&%$^%$)*&@$.... ( ஹி., ஹி., ஹி,,
நல்லா வாய்க்கு வந்தபடி திட்டலாம்.. ) //

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய் படத்த பத்தி நல்லா சொன்னேள் போங்கோ ..........!!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு செம டென்ஷன்..
மறுபடியும் நான் எந்திரிச்சேன்..

" எங்கே போறீங்க..? "

வெங்கட்:

எனக்கு என்ன ஆனாலும் பரவா இல்லை.
யார்கிட்டையாவது லேப்டாப் கடன் வாங்கியாவது
என் ப்ளாக்கை படிச்சிட்டு வரேன்.. இந்த ஆளுக்கு என் ப்ளாக் எவ்ளோவோ தேவலை.

வெங்கட்டின் மனைவி: உங்க ப்ளாக்குக்கு இந்த ஆளு எவ்ளோவோ தேவலை.

Lakshmi said...

ஆமாங்க சிலபேரு மைக்கைக்கண்டாலே
பேச்சை நிறுத்தத்தெரியாம ரொம்பவே
கடுப்படிப்பாங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பள்ளிக் கொடத்துக்கும் இவனுக வந்துட்டாய்ங்களா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவேள நீங்கதான் ஒரேநாள்ல ஸ்கூல் மீட்டிங்க்குக்கும், கட்சிக் கூட்டத்துக்கும் போய்ட்டு வந்து ஒரு குத்து மதிப்பா பதிவு போட்டிருக்கீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருந்தாலும் இதுக்குப் போயி சுறா பாக்கப் போறது ஓவரு... (சைக்கிள் கேப்ல, நீங்க டாகுடரு ரசிகருன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க பாத்தீங்களா......?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆகவே எனது உரையை இத்தோடு நிறைவு செய்கிறேன்....

Chitra said...

ஆனா மனுஷன் எதை பத்தியும்
கவலைபடாம பேசினாரு., பேசினாரு.,
பேசிட்டே இருந்தாரு..

( " எலேய்.. நிறுத்துலே..! இன்னும்
கொஞ்சம் நேரம் பேசுனே..
அப்புறம் கொலை கேஸுல
உள்ளே போயிடுவ..!! " )


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... என்னமா மிரட்டல் வருது!
Why blood?

பட்டாபட்டி.... said...

பேசாம சாருவோட, சாணி புக் எடுத்துட்டு போய் , என்னதான் எழுதியிருக்குனு படிச்சிருக்கலாம்.. ஹி..ஹி

Arun Ambie said...

பதிவெழுதிய வெங்கட் அவர்களே! பின்னூட்டமிட்ட ...... ஓ.கே.... மை இல்லை என்பதால் ஒரே ஒரு கேள்வியுடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். அப்பாடக்கர் என்பவர் யார் என்று தெரியப்படுத்தினால்... அடுத்த தேர்தலில் அவருடன் லட்சியக் கூட்டணி கண்டு தமிழ்கத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆவன செய்வோம் என்று உறுதிகூறுகிற அதே வேளையிலே... அப்பாடக்கருக்கான விளக்கம் தருவோர்க்கு நன்றிகளை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஹீம் கஸாலி said...

என்னத்த சொல்ல ஐயோ...ஐயோ....

நம்ம கடையில் இன்று
தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

Vimalraj R said...

Good one.. venkat pol oruvan

சி.பி.செந்தில்குமார் said...

>>>>" அட., உக்காருங்க.. கொஞ்சம்
நேரத்துல முடிச்சிடுவாரு..!! "

" யாரை.., நம்மளயா..?! "

டேய்.. சி பி.. நோட் பண்றா...நோட் பண்றா... உல்டா பண்ணி ஒரு ஜோக் தேத்தலாம்...

middleclassmadhavi said...

விஷயமே இல்லாம பேசுவதும் ஒரு கலை தானே?!! :))

ரசிகன் said...

//மேடையில White & White-ல
நிறைய பேர் உக்காந்து இருந்தாங்க..
இதென்ன அரசியல் கட்சி மீட்டிங்கா..?
இல்ல ஸ்கூல் Function-ஆ..?//

இது மூலமா என்ன சொல்ல வர்றீங்க..
White & white போட்டவங்க கல்வியாளர்களா இருக்க முடியாதுன்னா.?
இல்ல கல்வியாளர்கள் White & white போட கூடாதுன்னா??

நீதி: ப்ளூ சட்ட போட்ட ஒருத்தர் பேளேடு போடறார்ன்றதுக்காக, ப்ளூ சட்ட போட்ட எல்லாரும் ப்ளேடு போடுவாங்கன்னு அர்த்தம் இல்ல...

ரசிகன் said...

@vimalraj
//venkat pol oruvan//

I Second you :-)

royal ranger said...

@ பஞ்சாயத்து தலைவர்

//அப்ப எங்க பக்கத்து ஊர் பஞ்சாயத்து
தலைவர் பேச ஆரம்பிச்சாரு..

" இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருக்கும்.,
விநாயகா மிஷன்ஸ் நிறுவனத்தில்
தன் சிறப்பான பணியை 15 ஆண்டுகாலமாய்
வழங்கி கொண்டிருக்கும்.. உயர் திரு....... " //

(ங்கொய்யால திங்க தெரியாதவனுக்கு தான் யா பன்னு கிடைக்குது

பேச தெரியாதவனுக்கு தான் யா மைக் கு கிடைக்குது )

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// சட்டசபையில் வணக்கமெல்லாம்
சொல்வாங்களா? நான் வெறும் சண்டை
மட்டும் போட்டுப்பாங்கன்ல நினைச்சேன்! //

Actually சண்டை போட்டுக்கறதுக்கு
முன்னால ' வணக்கம் ' சொல்லிப்பாங்க..

ஆனா இவரு போனா.. " வணக்கம் "
சொல்றதாலயே சண்டை வரும்..!!

வெங்கட் said...

@ மைந்தன் சிவா.,

// அவர் அப்பிடி பேசி இருக்காட்டிக்கு
இப்ப ஒரு பதிவு போட்டிருப்பீன்களா
பாஸ்? பேசாம ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு
வருவம்ன்னு இல்ல... //

' ஸ்பெக்ட்ரம் ' ராஜா to CBI Officer...

" நாங்க அப்படி ஒரு ஊழல் பண்ணாட்டி
நீங்கல்லாம் இப்படி சுறுசுறுப்பா வேலை
பாப்பீங்களா பாஸ்..? பேசாம எங்களுக்கு
ஒரு " Thanks " சொல்லுங்க.. "

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// எனக்கு செம டென்ஷன்..
மறுபடியும் நான் எந்திரிச்சேன்..

" எங்கே போறீங்க..? " //

வெங்கட் : நான் போயி அந்தாளை
ரெண்டு அடி கொடுத்துட்டு வர்றேன்..

மனைவி : வேணாங்க.. அவரை பாத்தா
ரமேஷ் பிளாக் படிக்கிறவர் மாதிரியே
இருக்கு. உங்களை புடிச்சி கடிச்சி வெச்சிட
போறாரு..

வெங்கட் : ஆமா.. ரமேஷ் பிளாக்ல என்ன
இருக்குன்னு அதை இவரு படிக்கிறார்னு
வேற சொல்ற..

மனைவி : என்னை கேட்டா..? அது அந்த
லூசை* தான் கேக்கணும்..

* இங்கே " லூசு " என்பது அந்த பஞ்சாயத்து
தலைவரை குறிக்கிறது,. நீங்களா அது
ரமேஷை குறிக்குதுன்னு நினைச்சிகிட்டா
அதுக்கு நாங்க பொறுப்பில்ல..

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// பள்ளிக் கொடத்துக்கும் இவனுக
வந்துட்டாய்ங்களா......? //

அனிமே இவிங்க மாதிரி ஆளுங்க
மேடையில பேசறதுக்கு முன்னால
ஒரு Entrance Exam வைச்சு.,
Pass ஆனாத்தான் பேச விடணும்..!!

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// ஆகவே எனது உரையை இத்தோடு
நிறைவு செய்கிறேன்....//

ஆஹா.. எவ்ளோ சுருக்கமா., நச்னு
மனசுல பதியற மாதிரி பேசறீங்க..

இனிமே நீங்க Chief Guest-ஆ வர்ற
Function-க்கு மட்டும் தான் நான் போவேன்.

வெங்கட் said...

@ பட்டாபட்டி.,

// பேசாம சாருவோட, சாணி புக்
எடுத்துட்டு போய் , என்னதான்
எழுதியிருக்குனு படிச்சிருக்கலாம்.. ஹி..ஹி//

" சாருவா.." அவரு யாரு..?
ரமேஷ் மாதிரி பெரிய (?! ) Blogger-ஆ..?!!

வெங்கட் said...

@ அருண் அம்பி.,

// அப்பாடக்கருக்கான விளக்கம்
தருவோர்க்கு நன்றிகளை இப்போதே
தெரிவித்துக் கொள்கிறேன். //

அப்பாடக்கர்னா - " டகால்டி " வேலை
காட்டும் " தில்லாலங்கடி" ன்னு
அர்த்தம்..!!

நோட் பண்ணுங்கப்பா.!!
நோட் பண்ணுங்கப்பா.!!

வெங்கட் said...

@ மிடில்கிளாஸ் மாதவி.,

// விஷயமே இல்லாம பேசுவதும்
ஒரு கலை தானே?!! :)) //

நிச்சயமா..!

பேச்சு Interesting-ஆ இருந்தா தான்
அது கலை..

Bore அடிச்சா அது கொலை..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆகவே எனது உரையை இத்தோடு நிறைவு செய்கிறேன்.... //

முடிச்சிகோ. இல்லைனா உன்னை முடிச்சிட போறாங்க.. :))

(சொல்லிட்டாரு கெவர்னரு, கலைக்டரு இப்படி ஏதாவது ரிப்ளை போட்டா....)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//பேசாம சாருவோட, சாணி புக் எடுத்துட்டு போய் , என்னதான் எழுதியிருக்குனு படிச்சிருக்கலாம்.. ஹி..ஹி //

ஏன்? ஏன்? ஏன் மச்சி ஏன்? இங்க எல்லாம் சைவம். ரத்த வாசனை தாங்க மாட்டாங்க.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//I Second you :-) //

சொந்தமா எதுவும் தோனாதா?

ரசிகன் said...

@ TERROR-PANDIYAN(VAS) said...
//I Second you :-) //

சொந்தமா எதுவும் தோனாதா?

இதுக்கு முந்தின கமெண்டு சொந்தமா என்னோட ஞான திருஷ்டியில உதிச்சது தானே... அத விட்டுட்டு , ஒரு வருங்கால VKS தளபதிய Encourage பண்ணிட்டு இருக்கும் போது ஏன் குறுக்க விழறீங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பள்ளிக் கொடத்துக்கும் இவனுக வந்துட்டாய்ங்களா......?//

நீ ப்ளாக்கர இருக்க அப்போ அவங்க பள்ளிகூடம் வந்தா தப்பா?

(சீக்கிரம் வந்து நல்ல ரிப்ளை போடு. மொக்க போட்ட...)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//அத விட்டுட்டு , ஒரு வருங்கால VKS தளபதிய Encourage பண்ணிட்டு இருக்கும் போது ஏன் குறுக்க விழறீங்க.. //

சரக்கு சுத்தமா தீர்ந்து போச்சி போல? யாராவது வந்து நான் வெங்கட்ட கலாய்க்காவா கேட்டகூட வருங்கால VKS தளபதி வாழ்க சொல்லி உள்ள இழுக்க பாக்கறிங்க... :)) .உங்க VKSல வெறும் தளபதிங்க மட்டும்தான? :))

வெங்கட் said...

@ ரசிகன்.,

// White & white போட்டவங்க கல்வியாளர்களா
இருக்க முடியாதுன்னா.? இல்ல கல்வியாளர்கள்
White & white போட கூடாதுன்னா?? //

போட்டோவ நல்லா பாத்தீங்களா..?
அவிங்கல்லாம் கல்வியாளர்களா..?

பஞ்சாயத்து தலைவர்னா.. உங்க ஊர்ல
Education Officer-ன்னு அர்த்தமா..?!!

ம்ம்.. உங்கள சொல்லி குத்தமில்ல..,
உங்க பைக் காணாம போனதுக்கு
போலீஸ் கிட்ட போகாம., வாட்ச்மேன்கிட்ட
கம்பிளைண்ட் குடுத்தவிங்க தானே நீங்க..?!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ஒரு வருங்கால VKS தளபதிய
Encourage பண்ணிட்டு இருக்கும்
போது ஏன் குறுக்க விழறீங்க.. //

ஆஹா.. இந்த புள்ள புடிக்கிற கோஷ்டி
தன் வேலையை ஆரம்பிச்சிடுச்சு
போல இருக்கே..?!!

சிட்டி பாபு said...

இதுக்குத்தான் அங்கே எல்லாம் போக கூடாதுங்கறது
அப்படி போனாலும் நாம மட்டும் மெதுவா வெளிய வந்தர்னும்