சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 February 2011

மறக்க முடியாத சென்னை - 2















சென்னை போன முதல் நாள்
Evening சிரிப்பு போலீஸ் ரமேஷ்
வந்து என்னை Meet பண்ணினாரு..!!

அன்னிக்கு நைட் நானும்., அவரும்
Dinner-க்கு KFC போனோம்..

அப்ப என் பர்ஸ்ல எல்லாமே
500 ரூபா நோட்டா தான் இருந்தது..

சரி பரவாயில்லைன்னு ஒரு 500 ரூபாயை 
ரமேஷ்கிட்ட குடுத்து..

2 சிக்கன் + 2 Veg பர்க்கர் ( Rs 149 )
வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்..

ஆனா அவர் போயி..
5 சிக்கன்., 2 சிக்கன் பர்க்கர்.,
2 பெப்ஸி வாங்கிட்டு வந்துட்டாரு..

Bill Amount Rs 510..

எனக்கு செம ஷாக்..

" என்னங்க இவ்ளோ வாங்கிட்டு
வந்துட்டீங்க..? "

" Bill அதிகமா போயிடுச்சின்னு Feel
பண்ணாதீங்க வெங்கட்.. நாம Share
பண்ணிக்கலாம்..! "

" அப்படியா..!! அப்ப ஓ.கே..!! "
( எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தது..)

சாப்பிட்டு முடிச்சிட்டு KFC-ஐ விட்டு
வெளியே வந்துட்டோம்.. ஆனா
ரமேஷ் பணம் எதுவும் எனக்கு தர
மாதிரி தெரியல..

பொறுத்து பொறுத்து பாத்து தாங்காம
நானே அவர்கிட்ட கேட்டுட்டேன்..,

" Bill-ஐ Share பண்ணிக்கலாம்னு
சொன்னீங்கல்ல..? "

" ஆமாம்..!! "

" அப்ப பணத்தை எடுங்க..!! "


" என்னாது.. பணமா..? நல்லா பாருங்க
வெங்கட்.. Bill Amount 510 ரூபா..,
நீங்க 500 ரூபா குடுத்தீங்க..
நான் 10 ரூபா குடுத்தேன்.
நீங்க ஒரு நோட்டு, நான் ஒரு நோட்டு
கணக்கு சரியா போச்சில்ல.. "


" ங்கொய்யாலே.. உங்க ஊர்ல
இதுக்கு பேருதான் Sharing-ஆ..?? "
.
.

79 Comments:

Chitra said...

KFC ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இங்கே பெருசா யாரும் அதை கண்டுக்கிறதில்லை.... அங்கே அவ்வளவு காசு கொடுத்து போறாங்க.... ஹையோ! ஹையோ!

சேலம் தேவா said...

12.ரூபாவாச்சும் கொடுத்தாரேன்னு சந்தோஷப்படுங்க... தல..!!

எஸ்.கே said...

அவரு கேரக்டரையே புரிஞ்சக்கலையே நீங்க!:-)

எஸ்.கே said...

//12.ரூபாவாச்சும் கொடுத்தாரேன்னு சந்தோஷப்படுங்க... தல..!!//

அவர் ஒரு தர்மவான்!

ரசிகன் said...

எப்பாடு பட்டாவது (2,3 கோழியைக் கொன்றாவது) VKSல் ஊடுருவி, அதனை பிளவு படுத்த திட்டமிட்டு,
சென்னை வரை சென்று,சிவனே என்றிருந்த சிரிப்பு போலிஸை உசுப்பி விட்டு,VAS போல எங்களின் கொலஸ்ட்ராலையும் ஆனவரை அதிகமாக்க முயன்று, முடியாததால், நல்லவரின் நற்பெயரை நாசமாக்கி,பழி வாங்கும் பொருட்டு இப்படி ஒரு பதிவு இடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.(சோடா ப்ளீஸ்..

எஸ்.கே said...

KFC சாப்பிடறதால ஏதோ உடம்புல பிரச்சினைகள் வருமாமே அப்படியா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>" ங்கொய்யாலே.. இதுக்கு பேருதான்
உங்க ஊர்ல Sharing-ஆ..?? "

ஹா ஹா ஹா யாருகிட்டே..?நம்ம ரமேஷ் கிட்டேயேவா?ஆனாலும் இதை ஒரு பதிவா போட்டு அவரை கேவாலப்படுத்தியது தப்புதான்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஃபிரண்டுக்காக ரூ 500 செலவு செய்யற ஆளா நீங்க.. ஏப்பா ஈரோடு கோவை திருப்பூர் பதிவர்கள் எல்லாம் கிளம்புங்க.. சேலத்துக்கு அடுத்த பஸ் எப்போ? போய் மிளகாய் அரைக்கலாம் வெங்கட் தலைல

இம்சைஅரசன் பாபு.. said...

நாதாரி தனம் பண்ணினாலும் நாசுக்காக பண்ணுவான் என் நண்பன் ரமேஷ் ......மக்கா ஏன் இப்படி ....

முனீஸ் said...

நல்லவேளை. பில்லைத்தான ஷேர் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்னு சொல்லி, அதை பாதியா கிழிச்சு கைல கொடுக்காம இருந்தாரே?

Shalini(Me The First) said...

பாஸ் பர்ஸ் செக் பண்ணீங்களா அப்புறமா?!
அவர் சொல்ரார் 500 ரூபாய உங்க பர்ஸ்லருந்து நீங்க எடுத்தீங்களாம் மீதி சில்லரய உங்க பர்ஸ்லருந்து அவர் எடுத்தாராம். அத தான் அவர் ஷேரிங்னு சொன்னாராம் ;)))

Shalini(Me The First) said...

@ எஸ்.கே
//KFC சாப்பிடறதால ஏதோ உடம்புல பிரச்சினைகள் வருமாமே அப்படியா//

ஆமா கண்டிப்பா வரும்!
(கோழி உடம்புக்கு தானே?!)
;)

Shalini(Me The First) said...

@ரசிகன்

//எப்பாடு பட்டாவது (2,3 கோழியைக் கொன்றாவது) VKSல் ஊடுருவி, அதனை பிளவு படுத்த திட்டமிட்டு,
சென்னை வரை சென்று,சிவனே என்றிருந்த சிரிப்பு போலிஸை உசுப்பி விட்டு,VAS போல எங்களின் கொலஸ்ட்ராலையும் ஆனவரை அதிகமாக்க முயன்று, முடியாததால், நல்லவரின் நற்பெயரை நாசமாக்கி,பழி வாங்கும் பொருட்டு இப்படி ஒரு பதிவு இடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.(சோடா ப்ளீஸ்.//

யார்ப்பா அங்க நம்ம ரசிகனுக்கு பத்மபூஷன் அவார்ட் தாங்கப்பா

Madhavan Srinivasagopalan said...

VKS ஆளோடப் போனா அப்படித்தான் நடக்கும்..

மங்குனி அமைச்சர் said...

எனக்கு மட்டும் பீச்சுல மொளகா பஜ்ஜி ...... உங்களுக்கு KFC ...............
ங்கொய்யாலே ..... என்னைய விட்டுட்டு போனில ..... வேணும் உனக்கு இன்னும் நல்லா வேணும். .......... போலீசு ஏண்டா இதோட விட்ட இன்னும் கொஞ்சம் பார்சல் வாங்கிட்டு இன்னொரு 500 புடுங்கி இருக்கவேண்டியது தானே .

Speed Master said...

சிக்கன் செறித்ததா

ரசிகன் said...

@Shalini
//யார்ப்பா அங்க நம்ம ரசிகனுக்கு பத்மபூஷன் அவார்ட் தாங்கப்பா//

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த களத்திலும் தீரத்தோடு போராடுவதால், பரம் வீர் சக்ராவே கொடுக்கலாம், என்றாலும் ராணுவ சேவை செய்யாத காரணத்தினால், அதை எதிர் பார்க்கவில்லை. எனினும், பாரத ரத்னா தவிர்த்து வேறெதுவும் வேண்டாம் என பகிஷ்கரிக்கிறேன்

karthikkumar said...

VKS ஐ வெச்சு ஒரு பதிவு தேத்திடீங்க. நீங்க என்ன பண்ணுவீங்க? பாவம்...... VAS MEMBERS ஐ வெச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாதுன்னு இந்த வேலை ஹ்ம் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போங்க தம்பி கேனத்தனமா பேசிக்கிட்டு. 12 ரூபாய் கொடுத்தனேன்னு சந்தோஷ படுங்க. இதுக்கு முன்னாடி வாங்கி கொடுத்தவங்க கிட்ட கேட்டு பாருங்க. நான் எவ்ளோ ஷேர் பண்ணிருக்கேன்னு. நாங்க ஓசில சாப்பிடாத ஏரியாவே கிடையாது. ஹேய் அருண் பிரசாத் இந்தவாரம் ஓசில சாப்பாடு வாங்கி தரேன்னு சொன்னீங்க. வரேவே இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Shalini(Me The First) said...

பாஸ் பர்ஸ் செக் பண்ணீங்களா அப்புறமா?!
அவர் சொல்ரார் 500 ரூபாய உங்க பர்ஸ்லருந்து நீங்க எடுத்தீங்களாம் மீதி சில்லரய உங்க பர்ஸ்லருந்து அவர் எடுத்தாராம். அத தான் அவர் ஷேரிங்னு சொன்னாராம் ;)))///

VAS ஆளுங்க கூட வெங்கட் பதிவை படிக்கிறதில்லையா. வெங்கட் வெட்கம், வேதனை அவமானம் உங்களுக்கு.

"அப்ப என் பர்ஸ்ல எல்லாமே
500 ரூபா நோட்டா தான் இருந்தது.."


இது வெங்கட் சொன்னது. Me the first போட்டா மட்டும் போதாது. பதிவை படிக்கணும். வெங்கட் உங்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் சுறுசுறுப்பு. ஆனா அறிவுதான் கொஞ்சம் கம்மி...

MANO நாஞ்சில் மனோ said...

ஙொய்யால சென்னை பசஙககிட்டே ஜாக்கிரதையா இருக்கொனும்டோய்..................

MANO நாஞ்சில் மனோ said...

//KFC ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இங்கே பெருசா யாரும் அதை கண்டுக்கிறதில்லை.... அங்கே அவ்வளவு காசு கொடுத்து போறாங்க.... ஹையோ! ஹையோ!//


இங்கே என் நண்பன் பிரகாஷ் kfc பேரை சொன்னாலே, பின்னங்கால் பெடரில அடிக்க ஓடுறான்...!!!
ஏண்டான்னு எவ்வளவோ நாள் கேட்டும் சொல்லலை. அப்புறமா ஒரு நாள் இன்னொரு நண்பன்தான் சொன்னான். பிரகாஷ் ஏற்கனேவே கொஞ்ச நாள் அங்கே வேலை பார்த்தானாம். ஸோ kfc ல என்ன ரகசியம்ன்னு பயபுள்ளைக்கு தெரிஞ்சிருக்கு போல. நானும் ரெண்டு வருஷமா அதை தொடுறதில்லை....

Madhavan Srinivasagopalan said...

// "அப்ப என் பர்ஸ்ல எல்லாமே
500 ரூபா நோட்டா தான் இருந்தது.."

இது வெங்கட் சொன்னது. Me the first போட்டா மட்டும் போதாது. பதிவை படிக்கணும். வெங்கட் உங்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் சுறுசுறுப்பு. ஆனா அறிவுதான் கொஞ்சம் //

துப்புர .. சாரி.. சாரி..
துப்பரியுற ஏஜென்சிக்கு அலேடுத்தா சொல்லுங்க.. போலீசு.. நல்லா துப்பி-தொலக்குவாறு..

Anonymous said...

ஓசி சாப்பாடு சாப்பிடாம 12 ரூபாய் தர முன்வந்த தன்மானச் சிங்கம் ரமேஷ் வாழ்க..

Anonymous said...

அட எல்லாரும் இத தான் சொல்லிருக்காங்க போலயே..

Shalini(Me The First) said...

@ரமேஷ்
//"VAS ஆளுங்க கூட வெங்கட் பதிவை படிக்கிறதில்லையா. வெங்கட் வெட்கம், வேதனை அவமானம் உங்களுக்கு.
அப்ப என் பர்ஸ்ல எல்லாமே
500 ரூபா நோட்டா தான் இருந்தது.."இது வெங்கட் சொன்னது.
//
நோட்டெல்லாம் 500 ரூபாயாத்தான் இருந்துர்கும் நான் சில்லறையை சொன்னேன் போலீஸ் சில்லறையை!

//வெங்கட் உங்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் சுறுசுறுப்பு. ஆனா அறிவுதான் கொஞ்சம் கம்மி...//

ஆனாலும் போலீஸ் நாங்க உங்கள்களை(VKS) எதிரியா தான் நினைச்சோம் ஆனா அடிமைன்னு நீங்களே சொல்றப்ப நாங்க என்னா பண்றது?!

Shalini(Me The First) said...

@கார்த்தி
//VKS ஐ வெச்சு ஒரு பதிவு தேத்திடீங்க. நீங்க என்ன பண்ணுவீங்க? பாவம்...... VAS MEMBERS ஐ வெச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாதுன்னு இந்த வேலை ஹ்ம்//

கார்த்தி, கொள்ளையடிக்கப்பட்ட பேங்க் பத்திதான் பேப்பர்ல ந்யூஸ் வரும் நல்லபடியா நடந்துட்டு இருக்க பேங்க் பத்தி வராது முதல்ல கைல இருக்க கிட்டிப்புல்ல தூக்கிப்போட்டுட்டு போங்க தம்பி போய் மிஸ் குடுத்த ஹோம்வொர்க்க செய்யுங்க

Shalini(Me The First) said...

@mathavan
//துப்புர .. சாரி.. சாரி..
துப்பரியுற ஏஜென்சிக்கு அலேடுத்தா சொல்லுங்க.. போலீசு.. நல்லா துப்பி-தொலக்குவாறு//
பாத்து பாத்து துப்புற துப்புல உங்க போலிஸோட பல் செட்டு கழண்டு விழுந்துட போகுது அப்றம் எதிர்ல இருக்குற கண்ணாடில பட்டு அது உடஞ்சு அது வேற தெண்டமாயிடபோகுது

karthikkumar said...

@ ஷாலினி
கார்த்தி, கொள்ளையடிக்கப்பட்ட பேங்க் பத்திதான் பேப்பர்ல ந்யூஸ் வரும் நல்லபடியா நடந்துட்டு இருக்க பேங்க் பத்தி வராது முதல்ல கைல இருக்க கிட்டிப்புல்ல தூக்கிப்போட்டுட்டு போங்க தம்பி போய் மிஸ் குடுத்த ஹோம்வொர்க்க செய்யுங்க///

ஆமா ஆமா திவாலான பேங்க் பத்தி (VAS)யார் பேசிக்க போறாங்க.....அக்கா, நான் எப்பவோ ஹோம் வொர்க் பண்ணி முடிச்சிட்டேன்.

உங்க மிஸ் ரெண்டாம் வாய்ப்பாடு எழுதி வர சொன்னாங்கல்ல. பாத்து எழுதிட்டு தரேன்னு சொல்லி என்னோட கணக்கு நோட்ட வாங்கிட்டு போநீங்கல்ல சீக்கிரம் எழுதிட்டு கொண்டாங்க..

அனு said...

ரமேஷ் சாப்பாட்டை தானே ஷேர் பண்ணிக்கலாம்னு சொன்னாரு...அவர் பணம் ஷேர் பண்ணிக்கலாம்னு சொன்னதா நீங்களா கற்பனை செய்து சிரிப்பு போலிஸை அவமான படுத்தியதால்.. அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை சிரிப்பு போலிஸ் உண்ணாவிரதம் இருப்பார் என்பதை தெரிவித்து கொள்(ல்)கிறேன்..

வெங்கட் said...

@ சித்ரா.,

// KFC - இங்கே பெருசா யாரும் அதை
கண்டுக்கிறதில்லை.... அங்கே அவ்வளவு
காசு கொடுத்து போறாங்க.... //

உண்மை தாங்க..!! ஆனா நாங்கல்லாம்
எப்பவாச்சும் இப்படி வெளியூர் போனா
தானே KFC -க்கு போறோம்..!!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// 12.ரூபாவாச்சும் கொடுத்தாரேன்னு
சந்தோஷப்படுங்க... தல..!!//

ஆமா.. கரெக்ட்டு..!!

இவரோட ஒரு டீ கடைக்கு போனா கூட..
" டீ ரொம்ப சூடா இருக்குல்ல.?! "-ன்னு
ஊதி ஊதி குடிச்சிட்டே இருக்காரு..
பில்லுக்கு நான் பணம் தர்ற வரைக்கும்..!!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அவரு கேரக்டரையே புரிஞ்சக்கலையே
நீங்க!:-) //

நல்லா புரிஞ்சிக்கிட்டேன்..!!
அதனால தான் அன்னியோட
அவர் சகவாசம் Cut..!

அதனால அடுத்து மூணு நாளும்
எனக்கு பல 500 ரூபாய்கள் மிச்சம்..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நல்லவரின் நற்பெயரை நாசமாக்கி,
பழி வாங்கும் பொருட்டு இப்படி ஒரு
பதிவு இடப்பட்டதை வன்மையாக
கண்டிக்கிறோம்.(சோடா ப்ளீஸ்.. //

ரசிகன்., ரசிகன்..!! எங்களை ரெண்டு
கோல் போட விடுங்களேன்..
நீங்களே ரமேஷை கலாய்ச்சி
Same Side Goals போட்டுட்டு இருந்தா
எப்புடி..?!!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// KFC சாப்பிடறதால ஏதோ உடம்புல
பிரச்சினைகள் வருமாமே அப்படியா? //

தெரியலைங்க..!! பொதுவாவே Non Veg
உடம்புக்கு கெடுதல் தான்..!!

ஆனாலும் நாங்க ஏன் Chicken . Mutton
எல்லாம் சாப்பிடறோம்னா.. அதுக்கு
காரணம் சேவை மனப்பான்மை தாங்க..

பின்ன இந்த கோழிகள்., ஆடுகள் Population
அதிகம் ஆகி.. அதனால மனுஷங்களுக்கு
இருக்க இடம் இல்லாம போயிடக்கூடாதில்ல !!

suthan said...

ஆனாலும் நாங்க ஏன் Chicken . Mutton
எல்லாம் சாப்பிடறோம்னா.. அதுக்கு
காரணம் சேவை மனப்பான்மை தாங்க..

பின்ன இந்த கோழிகள்., ஆடுகள் Population
அதிகம் ஆகி.. அதனால மனுஷங்களுக்கு
இருக்க இடம் இல்லாம போயிடக்கூடாதில்ல !!
super ...Ithu rempaa pidenthu erukku.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சிரிப்பு போலீசு 12 ரூவா கொடுத்தாரா? இத நாங்க நம்பனுமா? இது உங்களுக்கே ஒவரா தெரியல? எங்க்ஸ்ட்ரா 12 ரூவா குடுக்க முடியாம,மாவாட்டுனத மறைச்சு இப்பிடி சொன்னா எப்படி? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, KFC சேலத்துல இருக்கா? அங்க உள்ள KFC-ல இதுவரை சாப்ட்டதே இல்ல அதான் கேட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாராட்டு்கள் - பெற்றுக்கொள்ள..!
குட்டுகள் - கற்றுக்கொள்ள..!//////

திட்டுகள் - வாங்கிக்கொள்ள..!

ஸ்ரீ said...

ஹாஹா ஹா நல்லா எழுதறீங்க வெங்கட். சீக்கிரம் "பிரபல பதிவராக" வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

அவங்க டீச்சர் சொல்லித் தரலை போல... விடுங்க பாவம்...

வெங்கட் said...

@ சி.பி.,

// ஹா ஹா ஹா யாருகிட்டே..? நம்ம
ரமேஷ் கிட்டேயேவா? ஆனாலும் இதை
ஒரு பதிவா போட்டு அவரை
கேவாலப்படுத்தியது தப்புதான்.. //

512 ரூபா பில்லுல 12 ரூபா குடுத்த
ரமேஷின் உயர்ந்த குணத்தை பதிவா
போட்டா.. அவரை நான் கேவலப்படுத்திட்டேன்னு
சொல்றீங்களே இது நியாயமா.?!

ஆனா அவரு 12 ரூபா குடுத்தார்ங்கறதை
கூட இங்கே பல பேர் நம்ப மாட்டேங்குறாங்க.
ப்ளீஸ் நோட் த பாயிண்ட்..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அவர் சொல்ரார் 500 ரூபாய உங்க
பர்ஸ்லருந்து நீங்க எடுத்தீங்களாம்
மீதி சில்லரய உங்க பர்ஸ்லருந்து
அவர் எடுத்தாராம். அத தான் அவர்
ஷேரிங்னு சொன்னாராம் ;))) //

கரெக்ட்டு..!! அப்படிதான் இருக்கும்..
இந்த போலீசு.. பிக்பாக்கெட் அடிக்கிறதுல
கில்லாடியா இருப்பாரு போல இருக்கே..

ஹா., ஹா., ஹா..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// யார்ப்பா அங்க நம்ம ரசிகனுக்கு
பத்மபூஷன் அவார்ட் தாங்கப்பா //

அவரு கூவின கூவுக்கு இதெல்லாம்
போதாது... இந்த ஆஸ்கார் அவார்ட்.,
நோபல் பரிசு இதுல எதாவது தர சொல்லலாம்.!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// VKS ஆளோடப் போனா அப்படித்தான்
நடக்கும்.. //

ம்ம்.. இனிமே ரமேஷ் கூட ஹோட்டல்க்கு
போறதா இருந்தா நாங்க ரொம்ப உஷாரா
இருப்போம்..

ஹோட்டல்ல போயி மாவாட்டுனாலும்
சரின்னு பர்ஸை வீட்லயே வெச்சிட்டுல்ல
போவோம்..!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// எனக்கு மட்டும் பீச்சுல மொளகா பஜ்ஜி //

பீச்சில் நடந்தது..

நான் : மிளகா பஜ்ஜி சாப்பிடலாமா..?

ரமேஷ் : நீங்க வாங்கி தர்றதா இருந்தா
மிளகா பஜ்ஜி என்ன.. மிளகாவையே
நான் சாப்பிடுவேன்.

மங்குனி : இந்த விஷயத்தை எல்லாம்
ஏன் இப்படி பப்ளிக்கா சொல்றீங்க..?
நான் இப்படியா சொல்லிட்டு இருக்கேன்..?!

நான் : சரி. சரி.. வாங்க.. அந்த கடைக்கு
போலாமா..?

மங்குனி : அந்த கடை வேணாம்..? வேற
கடைக்கு போலாம்..

நான் : ஏன் பஜ்ஜி நல்லா இருக்காதா..?

மங்குனி : பஜ்ஜி நல்லா இருக்கம்..
எங்களுக்கு தான் நல்லா இருக்காது..

நான் : ஏன்..?

மங்குனி : போன வாரம் நானும்., ரமேஷும்
இந்த கடையில பஜ்ஜி சாப்பிட்டுட்டு காசு
குடுக்காம " எஸ் " ஆயிட்டோம்..

நான் : ஓ... அவங்களா நீங்க..?

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உயிருக்கு உத்தரவாதம் இல்லாத
இந்த களத்திலும் //

புரிஞ்சா சரி..!!

// தீரத்தோடு போராடுவதால் //

ஹி., ஹி., ஹி..!! போராடுறீங்களா..?

அது சரி.. " உங்க கத்திக்கு கைப்பிடி
அந்த பக்கம் இருக்கு..!! "

முதல்ல கத்தியை ஒழுங்கா பிடிக்க
Training எடுத்துட்டு வாங்க.. அப்புறமா
வந்து மனப்பாடம் பகுதியை எல்லாம்
ஒப்பிக்கலாம்..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நாங்க ஓசில சாப்பிடாத ஏரியாவே
கிடையாது. //

அது சரி.. ஏன் ஏரியா ஏரியா போயி
ஓசில சாப்பிடுறீங்க..? எதோ ஒரு
ஏரியாவை Permanent-ஆ Fix பண்ணுங்க..!!

வெங்கட் said...

@ மனோ.,

// பிரகாஷ் ஏற்கனேவே கொஞ்ச நாள்
அங்கே வேலை பார்த்தானாம். ஸோ kfc ல
என்ன ரகசியம்ன்னு பயபுள்ளைக்கு
தெரிஞ்சிருக்கு போல. //

ஆ...!! நல்லா கிளப்பறாங்கய்யா பீதி..!!

சரி.. அந்த ரகசியம் என்னான்னு கேட்டு
கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// வெங்கட் உங்களுக்கு வாய்த்த அடிமைகள்
மிகவும் சுறுசுறுப்பு. ஆனா அறிவுதான்
கொஞ்சம் கம்மி... //

ஹலோ.. This is Too Much..!!

உங்க கட்சியில உங்கள Treat பண்ற
மாதிரியே எங்க கட்சியிலயும்
நினைக்க கூடாது..

எங்க கட்சியில எல்லோருக்கும்
ஒரு பதவி குடுத்து., அவங்களுக்கு
தனி மரியாதை குடுக்கறோம்.

வெங்கட் - தலைவர்
டெரர் - தளபதி
செல்வா - கொள்கை பரப்பு செயலாளர்
ஷாலினி - மகளீர் அணி தலைவி

ஆனா உங்க சர்வாதிகார கட்சியில ( VKS )
தலைவிங்கறதை தவிர வேற யாருக்காவது
ஒரு வட்ட செயலாளர் பதவி.. Atleast
ஒரு சதுர செயலாளர் பதவியாவது இருக்கா..?

இப்பவாச்சும் புரிஞ்சிக்கோங்க யார்.,?
எங்கே அடிமையா இருக்காங்கன்னு..!!

வெங்கட் said...

@ இந்திரா.,

// அட எல்லாரும் இத தான்
சொல்லிருக்காங்க போலயே.. //

ஆமா எல்லோர்கிட்டேயும் ரமேஷ்
ஓசில சாப்பாட்டை ஆட்டைய போட்டு
இருக்காரு.. நான் ரொம்ப லக்கி.. அதான்
என்கிட்ட மட்டும் 12 ரூபா Share பண்ணிட்டாரு..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// நோட்டெல்லாம் 500 ரூபாயாத்தான்
இருந்துர்கும் நான் சில்லறையை
சொன்னேன் போலீஸ் சில்லறையை! //

// கார்த்தி, கொள்ளையடிக்கப்பட்ட பேங்க்
பத்திதான் பேப்பர்ல ந்யூஸ் வரும்
நல்லபடியா நடந்துட்டு இருக்க பேங்க்
பத்தி வராது //

ஹா., ஹா., ஹா..!!
கலக்கல் கமெண்ட்ஸ்..!!

@ ரமேஷ் & கார்த்தி.,

ஷாலினிகிட்ட அடி வாங்கறதே
உங்களுக்கு வேலையா போச்சு..
போங்க போயி வீட்ல நல்லா
ஹோம் வொர்க் பண்ணிட்டு வாங்க..

எஸ்.கே said...

///ஆமா கண்டிப்பா வரும்!
(கோழி உடம்புக்கு தானே?!)
;)//

ஆமாம். அதற்காக கோழியின் காலை பிடித்து(கடித்து?) மன்னிப்பு கேட்க வேண்டும்!

எஸ்.கே said...

//
வெங்கட் - தலைவர்
டெரர் - தளபதி
செல்வா - கொள்கை பரப்பு செயலாளர்
ஷாலினி - மகளீர் அணி தலைவி//

செல்வா கொள்கை பரப்பு செயலாளர்! எல்லாம் ஓகே!
what is the கொள்கை?

அப்புறம் அந்த எதிரணியின் கொள்கை என்ன?

ரசிகன் said...

@எஸ்.கே
//what is the கொள்கை?
அப்புறம் அந்த எதிரணியின் கொள்கை என்ன?//

ஹிஹி.. என்ன எஸ்.கே இப்படி கேட்டுட்டீங்க.. இன்னுமா தெரியாது.

VKS ன் கொள்கை VASஐ கலாய்ப்பது
VASன் கொள்கை வலிக்காத மாதிரியே நடிப்பது..

செல்வா said...

தல அவர்தான் VKS காரர்ல அவருக்கு எப்படி கணக்கு சரியா தெரியும் ?

அருண் பிரசாத் said...

வாழ்க ரமேஷ்

வெங்கட் said...

@ அனு.,

// ரமேஷ் சாப்பாட்டை தானே ஷேர்
பண்ணிக்கலாம்னு சொன்னாரு... //

அவரு Dinner-ஐ ஷேர் பண்ணின
அழகை சொல்லட்டுமா..

வெங்கட் ஷேர் - 2 சிக்கன் + 1 சிக்கன் பர்கர்

ரமேஷ் ஷேர் - 3 சிக்கன் + 1 சிக்கன் பர்கர்
+ 2 பெப்ஸி..

பெப்ஸி ரொம்ப ஜில்லுன்னு இருக்கேன்னு
ஓரமா வெச்சி இருந்தேன்பா..
டக்னு அதையும் எடுத்து அவரே குடிச்சிட்டாரு..
( நற.. நற.. )

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை
சிரிப்பு போலிஸ் உண்ணாவிரதம் இருப்பார்
என்பதை தெரிவித்து கொள்(ல்)கிறேன்.. //

ரமேஷு.., நீங்க கட்சி மாற வேண்டிய
நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்..

இதுக்கு மேலயும் அங்கேயே இருந்தீங்க..
அப்புறம் இப்படி உசுப்பு ஏத்தி.,
உசுப்பு ஏத்தியே உடம்பை ரணகளம்
ஆக்கிடுவாங்க.. ஜாக்ரதை..!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// எங்க்ஸ்ட்ரா 12 ரூவா குடுக்க முடியாம,
மாவாட்டுனத மறைச்சு இப்பிடி சொன்னா
எப்படி? //

ஹி., ஹி., ஹி..!!
தெரிஞ்சி போச்சா..?!!!

நான் மட்டும் தான் மாவாட்டுனேன்..
சிரிப்பு போலீஸ் பிளேட் கழுவுனாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ ரமேஷ்.,

// எங்க்ஸ்ட்ரா 12 ரூவா குடுக்க முடியாம,
மாவாட்டுனத மறைச்சு இப்பிடி சொன்னா
எப்படி? //

ஹி., ஹி., ஹி..!!
தெரிஞ்சி போச்சா..?!!!

நான் மட்டும் தான் மாவாட்டுனேன்..
சிரிப்பு போலீஸ் பிளேட் கழுவுனாரு..////

சரி சரி கண்ண தொடைங்க, அடுத்த வாட்டி கிரைண்டர் இருக்கற எடமா பாத்து போங்க, (அங்கேயும் சிரிப்பு போலீச பிளேட் கழுவ விட்டுட்டு, நீங்க கிரண்டர ஆன் பண்ற வேலைய எடுத்துக்கிட்டா போச்சு)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// பாராட்டு்கள் - பெற்றுக்கொள்ள..!
குட்டுகள் - கற்றுக்கொள்ள..! //

// திட்டுகள் - வாங்கிக்கொள்ள..! //

பேசாம 1st Line-ஐ தூக்கிட்டு..
இதை சேர்த்துக்கலாமோ..?!!
இப்படி...

" திட்டுகள் - வாங்கிக்கொள்ள..!
குட்டுகள் - கற்றுக்கொள்ள..! "

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// பாராட்டு்கள் - பெற்றுக்கொள்ள..!
குட்டுகள் - கற்றுக்கொள்ள..! //

// திட்டுகள் - வாங்கிக்கொள்ள..! //

பேசாம 1st Line-ஐ தூக்கிட்டு..
இதை சேர்த்துக்கலாமோ..?!!
இப்படி...

" திட்டுகள் - வாங்கிக்கொள்ள..!
குட்டுகள் - கற்றுக்கொள்ள..! "//////


அப்போ யாரும் பாராட்ட மாட்டாங்கன்னு ஒருவழியா தெரிஞ்சுக்கிட்டீங்க போல, இதுக்கே இம்புட்டு நாளாயிடுச்சே?

Radha said...

512-ல ரெண்டு digit share பண்ணி இருக்காரு. ஏன் இப்படி எல்லோருமா அநியாயமா திட்டறீங்க??

ரசிகன் said...

@venkat
//இப்பவாச்சும் புரிஞ்சிக்கோங்க யார்.,? எங்கே அடிமையா இருக்காங்கன்னு..!!//

VKSல் யாரும் அடிமை இல்லை..
நல்ல தலைவன் எனப்படுபவன் ஆராய்ந்து முடிவெடுத்தல் என்ற கூடுதல் அதிகாரம் உள்ள தொண்டன்... அவ்வளவே (எங்கேயோ படித்தது)
எங்களுக்கும் எங்க தலைவிக்கும் இது நல்லா தெரியும்..

ரசிகன் said...

//Radha said...
512-ல ரெண்டு digit share பண்ணி இருக்காரு. ஏன் இப்படி எல்லோருமா அநியாயமா திட்டறீங்க??//

Ha Ha Ha.. அதானே..!!

ரசிகன் said...

@venkat

//அது சரி.. " உங்க கத்திக்கு கைப்பிடி
அந்த பக்கம் இருக்கு..!! "

முதல்ல கத்தியை ஒழுங்கா பிடிக்க
Training எடுத்துட்டு வாங்க..//

கைப்பிடியை காட்டினாலே காத தூரம் ஓடுறீங்க ..
கத்தியை காட்டினா பயத்தில என்ன ஆவீங்களோ..
அதான் பரிதாபப்பட்டு திருப்பி பிடிச்சிருக்கேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் 12 ரூபாய் ஷேர் பண்ணிருக்கேன்னு தப்பா தகவல் கொடுத்ததால் இனிமே வர்றவங்க எனக்கு ஓசி சோறு வாங்கி கொடுக்காம ஷேர் எதிர்பார்த்தா என்ன பண்றது. என்னை அவமானப் படுத்திய வெங்கட் இனி மாசா மாசம் எனக்கு ஓசி சோறுக்கு Rs500 தர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// what is the கொள்கை?
அப்புறம் அந்த எதிரணியின் கொள்கை என்ன? //

VAS-ன் கொள்கை - எதிரிகளை கூட மன்னிப்பது..

( இங்கே எதிரிகள் என்பது VKS-ஐ குறிக்கவில்லை
ஏன்னா எங்களுக்கு எதிரியா இருக்க கூட
ஒரு தகுதி வேணும்..)

VKS-ன் கொள்கை - ஹி., ஹி., ஹி..,
Next Question Pls..?

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// அப்போ யாரும் பாராட்ட மாட்டாங்கன்னு
ஒருவழியா தெரிஞ்சுக்கிட்டீங்க போல,
இதுக்கே இம்புட்டு நாளாயிடுச்சே? //

தினமும் நிறைய பேர் கூட்டம் கூட்டமா
வந்து பாராட்டிட்டே தான் இருக்காங்க..
ஆனா நான் தான் Moderation வெச்சி
அந்த கமெண்ட்ஸ் எல்லாம் Delete பண்ணிடறேன்..

நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதில்ல..!

( அவ்வ்வ்வ்..!!! )

வெங்கட் said...

@ ரசிகன்.,

// VKS ன் கொள்கை VASஐ கலாய்ப்பது
VAS-ன் கொள்கை வலிக்காத மாதிரியே
நடிப்பது.. //

என்ன ரசிகன்.. இன்னிக்கு உங்க கற்பனை
கரை புரண்டு ஓடுது..?!!

முதல்ல அடி வாங்குன இடத்துக்கு
எல்லாம் ஒத்தடம் குடுங்க..!!
போங்க போங்க..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நல்ல தலைவன் எனப்படுபவன் ஆராய்ந்து
முடிவெடுத்தல் என்ற கூடுதல் அதிகாரம்
உள்ள தொண்டன்... அவ்வளவே
(எங்கேயோ படித்தது) //

இது நான் சொன்ன புதிய தத்துவம்
# 21573 ஆச்சே..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// கைப்பிடியை காட்டினாலேகாத தூரம்
ஓடுறீங்க.. கத்தியை காட்டினா பயத்தில
என்ன ஆவீங்களோ.. அதான் பரிதாபப்பட்டு
திருப்பி பிடிச்சிருக்கேன்.. //

அது சரி., முதல்ல அந்த தோசைக்கரண்டியை
கொண்டு போயி வெச்சிட்டு.. கத்தியை
எடுத்துட்டு வாங்க..

கத்தி எப்படி இருக்கும்னு வேற
தனியா பாடம் எடுக்கணும் போல
இருக்கே..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இனிமே வர்றவங்க எனக்கு ஓசி சோறு
வாங்கி கொடுக்காம ஷேர் எதிர்பார்த்தா
என்ன பண்றது.? //

இங்கே ரசிகன் ரசிகன்னு ஒருத்தர்
உசுரை கையில புடிச்சிட்டு
உங்களுக்காக வக்காலத்து வாங்கி
பேசிட்டு இருந்தாருல்ல.. அவருக்கு
இதை Dedicate பண்றேன்..!!

வெங்கட் said...

@ ராதா.,

// 512-ல ரெண்டு digit share பண்ணி இருக்காரு.
ஏன் இப்படி எல்லோருமா அநியாயமா திட்டறீங்க?? //

ம்ம்.. " 12 " இதை கூட்டினா
1 + 2 = 3 வருது..

அப்ப நான் 5 ., அவரு 3..
அதான் திட்டறோம்.. போதுமா..?!!

:)

பெசொவி said...

//எங்க கட்சியில எல்லோருக்கும்
ஒரு பதவி குடுத்து., அவங்களுக்கு
தனி மரியாதை குடுக்கறோம்.

வெங்கட் - தலைவர்
டெரர் - தளபதி
செல்வா - கொள்கை பரப்பு செயலாளர்
ஷாலினி - மகளீர் அணி தலைவி//

பதவி இல்லைனா, உங்க கட்சியில யாருமே இருக்க மாட்டங்கன்னு ஒப்புக் கொண்ட உங்கள் நேர்மைக்கு சபாஷ்!

பெசொவி said...

// வெங்கட் said...
@ ரமேஷ்.,

// அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை
சிரிப்பு போலிஸ் உண்ணாவிரதம் இருப்பார்
என்பதை தெரிவித்து கொள்(ல்)கிறேன்.. //

ரமேஷு.., நீங்க கட்சி மாற வேண்டிய
நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்..//

ஐநூறு ரூபாய் நீங்க செலவு பண்ணினபோதே நினைச்சேன், இப்படி உங்க கட்சிக்கு அவரை இழுக்க நீங்க செய்த சதின்னு.....

ரசிகன் said...

@venkat
//அது சரி., முதல்ல அந்த தோசைக்கரண்டியை
கொண்டு போயி வெச்சிட்டு.. கத்தியை
எடுத்துட்டு வாங்க..//

உங்களுக்கு எதைக்கண்டால் பயம் அதிகம்னு
மாலாண்ணி சொல்லி குடுத்துட்டாங்ணா...
இதுவரை நீங்க கத்தி குத்து பட்டதில்ல..
அதனால அதுக்கு பயப்படாம போகலாம்..
அதான் தோசைக் கரண்டி எடுத்துட்டு வந்தேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா...ஹா விடுண்ணே... ரமேஸுகிட்ட 1000 ரூ வாங்கித்தரேன்.. ஆனா எனக்கு அதுல 750ரூ பழைய பாக்கி வரனும்...

.. டீல் ஓ.கேனா ரமேஸொட வலதுகாதுல ஓங்கி விடுங்க..
மீதிய நான் பார்த்துக்குறேன்.. ஹி..ஹி