சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 January 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!
நேற்றைய தினத்தந்தி செய்தி :

Dr.ராமதாஸ் அவர்களின் பேட்டி..

வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க
தனித்து போட்டியிடாது. கூட்டணி
அமைத்து தான் போட்டியிடும்..

( ஒருவேளை அந்த கூட்டணி தோத்து
போயிட்டா.. தேர்தலுக்கு அப்புறம் ஜெயிச்ச
கூட்டணில போயி ஐக்கியமாயிடுவோம்..
அதையும் சேர்த்து சொல்லுங்க.. )

நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய
வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ
அதே போன்ற கூட்டணி அமையும்.

( சரத் - பா.ம.க..?! ., கார்த்திக் - பா.ம.க..?!.,
டி.ஆர் - பா.ம.க..?! )

பா.ம.க.விற்கு 45 தொகுதிகளை
ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று
கோருவோம்..

( ஆட்சி அமைக்க 45 சீட் போதுங்களா..?
2011-ல பா.ம.க ஆட்சி அமைக்கும்னு
முன்னே சொல்லிட்டு இருந்தீங்களே.
ஹி., ஹி., ஹி..!! )

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம்
10 தொகுதிகள் உள்ளன.. அதில் குறைந்தது
3 தொகுதிகளையாவது பா.ம.க.விற்கு
ஒதுக்கும்படி கேட்போம்..

( ஏன்..? அங்கிட்டு தான் மெடிக்கல் காலேஜ்
கட்ட இடம் கரெக்டா இருக்கா..?! )

பா.ம.க.வினர் திண்ணை பிரச்சாரம்
செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட
வேண்டும்..

( வீட்டுக்குள்ள எல்லாம் விட
மாட்டேங்குறாங்களோ.?! )

இந்த தேர்தலில் நாம் தனித்து நின்றே
வெற்றி பெற முடியும் என்றாலும்..

( One Minute..!! நான் சிரிச்சிக்கிறேன்..
என்னால சிரிப்பை அடக்க முடியல..
ஹா., ஹா., ஹா...!! ம்ம்.. இப்ப Continue... )

கூட்டணி அமைத்தே போட்டியிட
முடிவு செய்திருக்கிறோம்..

( அப்படியா..? அது சரி.. உங்களை கூட
சேத்துக்க யாராவது முடிவு பண்ணி
இருக்காங்களா..? )

பிரசாரத்தின் போது கூட்டணிக் கட்சியின்
கொள்கைகளையும்.,

( என்னாது " கொள்ளைகளா..?? "
ஓ.. " கொள்கைகளா..? " )

நமது கட்சியின் கொள்கைகளையும்
சேர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்..

( ம்ம்.. விளங்கிடுச்சு..!! " அன்புமணிக்கு
M.P பதவி குடுத்தா யார்கூட வேணா
கூட்டணி சேரத் தயார்." அதானே..? ரைட்டு..!! )

அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை
அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்..

( அழைச்சிட்டு வந்தா.? இழுத்துட்டு வந்தா..?
தெளிவா சொல்லுங்க.. இப்பல்லாம் பசங்க
ரொம்ப விவரமா இருக்கானுங்க..!! )

அது சரி.. இம்புட்டு நேரம் கூட்டணி கட்சி.,
கூட்டணி கட்சின்னு சொன்னீங்களே..

அது இவிங்களா.? இல்ல அவிங்களா..??


இன்றைய தினத்தந்தி செய்தி :

" தி.மு.க கூட்டணியில் பா.ம.க " - கருணாநிதி

" கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை "
- ராமதாஸ்.

என்னங்க நீங்க..? இப்படி Slow-ஆ இருக்கீங்க..?

குடும்பத்தோட உக்காந்து நல்லா
எண்ணி எண்ணி பாத்து சீக்கிரம்
ஒரு முடிவுக்கு வாங்க..

பின்ன..,
இந்த Election-ல எந்த கட்சிக்காரன் கூட
அடிச்சிக்கிட்டு ஆடணும்னு தொண்டர்களுக்கு
தெரியணும்ல..!!

டிஸ்கி 1 : பா.ம.க.வின் கூட்டணி சாதனைகள்
( இதுவரை... )

1998 - பாராளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க

1999 - பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க

2001 - சட்டசபை தேர்தல் - அ.தி.மு.க

2004 - பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க

2006 - சட்டசபை தேர்தல் - தி.மு.க

2009 - பாராளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!

டிஸ்கி 2 : இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!! நன்றி..!! நன்றி..!!
.
.

34 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதை விட காமெடி

ராமதாஸ்: தமிழ் விளையாட்டுக்கள் கபடி, சிலம்பாட்டம் அழிந்து வருவதற்கு கிரிக்கெட்டே காரணம். கிரிக்கட்டை அழிக்க பா.ம.க பாடுபடும். (சிறப்பு வரல?)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Auto coming, ushaaaaaaaaaaaaaaaaar!

Speed Master said...

ஹி ஹி காமெடிப்பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய் வெங்கட்.. அரசியல் பதிவு எல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க..?

சி.பி.செந்தில்குமார் said...

என்ன ஆச்சரியம்?ரமேஷ் முத கமெண்ட் போட்டிருக்கார். ஆனா மீ த ஃபர்ஸ்ட்.. அல்லது வட கமெண்ட் போடல.. இன்னைக்கு மழை வரும்டோய்

MANO நாஞ்சில் மனோ said...

ஒட்டகம் மேய்க்க இங்கே ஆள் குறைவா இருக்கு அனுப்புங்க அந்தாளை இங்கே......

Shalini(Me The First) said...

@ரமேஷ்

//(சிறப்பு வரல?//
இப்படி ஒரு தமிழன் இருக்கிறானேன்னு அது வரல

@பெசொவி

ஆட்டோ தான ச்சே எங்க ரேஞ்சுக்கு நாலு டாட்டா சுமோல வரனும்

@சி பி செந்தில்
//
என்ன ஆச்சரியம்?ரமேஷ் முத கமெண்ட் போட்டிருக்கார். ஆனா மீ த ஃபர்ஸ்ட்.. அல்லது வட கமெண்ட் போடல.. இன்னைக்கு மழை வரும்டோய்//

அப்ப ஆட்டோவும் வராதா?
( அவர மீ த ஃபர்ஸ்ட் போட சொல்லுங்க பார்ப்போம்)

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ராமதாஸ்: தமிழ் விளையாட்டுக்கள் கபடி,
சிலம்பாட்டம் அழிந்து வருவதற்கு கிரிக்கெட்டே
காரணம். கிரிக்கட்டை அழிக்க பா.ம.க பாடுபடும். //

டெல்லி கான்வெண்ட் ஸ்கூல்ல படிக்கிற
குழந்தைங்க எல்லாம் கிரிக்கெட் தான்
விரும்பி ஆடறாங்களாம்..

அவங்க Interest-ஐ கபடி, சிலப்பாட்டம்
பக்கம் திருப்பி., கிரிக்கெட்டை அழிக்க
தான் இவரோட பேரப் பிள்ளைகள்
டெல்லி கான்வெண்ட் ஸ்கூல்ல சேர்ந்து
படிக்கிறாங்க தெரியுமா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// Auto coming, ushaaaaaaaaaaaaaaaaar..! //

Thanks.. Same to You..!!

ஹி., ஹி., ஹி...!! நீங்க
டிஸ்கி நெ.2 -வை சரியா
படிக்கலை போல..

// டிஸ்கி 2 : இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!! நன்றி..!! நன்றி..!! //

எஸ்.கே said...

VKSக்கு தமிழில பாமகாவா?:-)

எஸ்.கே said...

எனக்கு ஒரு சந்தேகம், இந்த போஸ்ட்டை அன்னைக்கு ஏன் பப்ளிஷ் பண்ணிட்டு எடுத்தீட்டீங்க? (கட்சி மிரட்டல்?:-))

கோமாளி செல்வா said...

ஆனா கூட அவுங்க இந்த இரண்டு கட்சிகூடதான் கூட்டணி வச்சிருகாங்க பாருங்க தல .. ஹி ஹி ..

விடுத‌லைவீரா said...

நன்றி தோழரே...படித்து முடித்த பின்பும் சிரிப்பை அடக்க முடியல...வடிவேலையும் மிஞ்சிவிட்டார் அய்யா..

karthikkumar said...

டிஸ்கி 2 : இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!! நன்றி..!! நன்றி.///
இப்படி சொல்லி ஆட்டோ வந்தா எங்கள கோத்து விடலாம்னு....... நீங்களே இப்படி பயந்தா அப்புறம் VAS ல இருக்குற மத்தவங்க என்ன ஆவாங்க பாவம்....

karthikkumar said...

@ ஷாலினி
அப்ப ஆட்டோவும் வராதா?
( அவர மீ த ஃபர்ஸ்ட் போட சொல்லுங்க பார்ப்போம்)////

மீ த பர்ஸ்ட் போடறது ரொம்ப பெரிய சாதனை போல பெருமையா சொல்லிகறீங்க....நீங்க என்ன பண்ணுவீங்க உங்களால அது மட்டும்தான் பண்ணமுடியும் :)

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவிகளா ......இப்படி வெங்கட்ட கூட அரசியல் பேச வச்சிட்டிங்கலேடா ???

THOPPITHOPPI said...

http://2.bp.blogspot.com/_G9vH5kXoYRM/TN7MXRa5XMI/AAAAAAAAABM/pXQO-lHa1rI/s1600/confuse.கிப்

தமிழனின் இப்போதைய நிலை

இம்சைஅரசன் பாபு.. said...

வெங்கட் நீங்க எதோ ஜோக் எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன் .....பட் ஷாக் ஆகிட்டேன் நல்ல இருக்கு எழுதுங்க மக்கா ......

அனு said...

ஆமா. ஏதோ பதிவு போட்டிருக்கேன்னு சொன்னீங்களே, அது எங்க??

//இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!!//

இது என்ன புதுசா டிஸ்கி எல்லாம்.. எப்பவுமே ஏதாவது ஒரு தப்பு பண்ணிட்டு VKS பின்னாடி வந்து ஒளியுறது தான் உங்க வழக்கமாச்சே..

Chitra said...

:-))

ரசிகன் said...

ஆளும் வேந்தர்களும் சரியில்ல‌
எதிர்க்கும் சூரர்களும் சரியில்ல,
விதூஷகர்களை நொந்து என்ன பயன்.
இப்படி கொஞ்சம் சிரிப்பேனும் மிச்சம்
என்று சந்தோஷப்படலாம்...

கோமாளி செல்வா said...

//இப்படி சொல்லி ஆட்டோ வந்தா எங்கள கோத்து விடலாம்னு....... நீங்களே இப்படி பயந்தா அப்புறம் VAS ல இருக்குற மத்தவங்க என்ன ஆவாங்க பாவம்....
//

உண்மையா சொல்லுரதுக்குப் பேரு உங்க ஊருல பயமா மச்சி ? ஹய்யோ ஹய்யோ .. உங்க சங்கத்துல பயத்துக்கும் உண்மைக்கும் கூடவா விதிதியாசம் தெரியாம இருக்காங்க . கொடுமைடா சாமி ..

Shanthamoorthi said...

//( என்னாது " கொள்ளைகளா..?? " ஓ.. " கொள்கைகளா..? " )
தவறுதலாக டைப் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறன்....
//( என்னாது " கொள்கைகளா..?? " ஓ.. " கொள்ளைகளா..? " )
இல்லாத ஒன்றை எப்படி நம்புவது, என்ன சரிதானே?

Madurai pandi said...

அவர் ஒரு காமெடி பீசுங்க!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Anonymous said...

அவர் பேரு ராமதாசுக்கு பதிலா சீட்டு தாஸ்னு வைக்கலாம்

வெங்கட் said...

@ நாஞ்சில் மனோ.,

// ஒட்டகம் மேய்க்க இங்கே ஆள் குறைவா
இருக்கு அனுப்புங்க அந்தாளை இங்கே...... //

என்ன இப்படி பொசுக்னு
கேவலப்படுத்திட்டீங்க..- ஒட்டகத்தை..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// (சிறப்பு வரல? //

// இப்படி ஒரு தமிழன் இருக்கிறானேன்னு
அது வரல //

ஹா., ஹா., ஹா..!!

அவரு என்ன பண்ணுவாரு பாவம்..!!

நம்ம வகுப்பை விட்டு போனா
போதும்னு ஒவ்வொரு வகுப்புலயும்.,
ஒவ்வொரு பேப்பர்லயும் 34 மார்க் Extra
போட்டு " Pass " பண்ணி விட்ட அந்த
வாத்தியார்ங்களை சொல்லணும்..!!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// இந்த போஸ்ட்டை அன்னைக்கு ஏன் பப்ளிஷ்
பண்ணிட்டு எடுத்தீட்டீங்க? (கட்சி மிரட்டல்?:-)) //

அது இந்த போஸ்ட் இல்லை..
" வல்லரசு " போஸ்ட்.. அதை நைட்
தவறுதலா பப்ளிஷ் பண்ணிட்டேன்..
அதான் எடுத்துட்டேன்..

வெங்கட் said...

@ விடுதலைவீரர்.,

// வடிவேலையும் மிஞ்சிவிட்டார் அய்யா.. //

" இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிட்டு
இருக்குது..?!! " இந்த டயலாக் ஐயாவுக்கு
ரொம்ப பொருத்தமா இருக்கும்ல..!!

suthan said...

என்னாது " கொள்ளைகளா..?? " ஓ.. " கொள்கைகளா..? " ) supper ..!

LEKHA said...

//டிஸ்கி 1//

இதுல இருந்து என்ன தெரியுது?
avar எல்லோரையும் சமமா வச்சிருக்கார்

அந்த நல்ல மனசு ஏன் யாருக்கும் தெரியல ;)
யாரவது இவ்ளோ வெட்கமில்லாம இருக்காங்களா சொல்லுங்க???

ha h a ha let him see this post ;)
கொஞ்சம் கவனமா இருங்க உங்க போட்டோ வேற இருக்கு ப்ளாக்ல !!!

Anonymous said...

@இம்சை பாபு

//வெங்கட் நீங்க எதோ ஜோக் எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன் .....பட் ஷாக் ஆகிட்டேன் நல்ல இருக்கு எழுதுங்க மக்கா .....//

இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே உருப்படாமா ஆக்கிடுங்க.

suresh said...

நல்லா இருக்கு வெங்கட்..

சுரேஷ் கிருஷ்ணா

அருண் பிரசாத் said...

vks இருக்குதுனு தைரியத்துல இப்படிலாம் பேசிட்டு இருக்கீங்க..... பரவாயில்லை....எதிர்க்கட்சினாலும் உங்களை விட்டு தர மாட்டேன்