சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 January 2011

பதிவர் திருவிளையாடல்...!!!


தண்டோரா : தமிழ்மணம் சிறந்த பதிவு
போட்டி.. பரிசு ரூபாய் 1000..

( கோவிலில் தருமி புலம்பல்... )

ஐயோ.. ஒரு காசா., ரெண்டு காசா.,
ஆயிரம் ரூபாவாச்சே..!!
ஆயிரம் ரூபாவாச்சே..!!

இந்த நேரம் பாத்து நமக்கு
ஒரு பதிவும் எழுத வரலையே..

ம்ம்.. நமக்கு பதிவு எழுதறதுக்கே
வழிய காணோம்.. இதுல சிறந்த பதிவு
எங்கே போயி எழுதறது..?

எனக்கில்ல்.. எனக்கில்ல..
அந்த 1000 ரூபா எனக்கில்ல...

( ஹீரோ Enters... ஹி., ஹி., நான்தான்.. )

" என்ன Man தனியா புலம்பிட்டு இருக்க.? "

" நீ யார்யா..? "

" நான் ஒரு Blogger "

" நம்ம ஜாதியா..? உனக்கும் விஷயம்
தெரிஞ்சி போச்சா.. அதான் போட்டிக்கு
வந்துட்டியா..? "

" எனக்கு அந்த பரிசு வேணாம்.. நீயே வாங்கிக்க.. "

" என்கிட்ட தான் பதிவே இல்லையே.. "

" நான் தர்றேன்... "

" என்னாது.. உன் பதிவை கொண்டு போயி
என் பதிவுன்னு சொல்லி பரிசு வாங்கறதா..?
நான் சுமாரா தான்யா எழுதுவேன்..
இருந்தாலும் Blogger-ன்னு ஒத்துகிட்டு
இருக்காங்க.. அதையும் கெடுக்கலாம்னு திட்டமா..? "

" பரவாயில்லப்பா.. நீயே பரிசு வாங்கிக்க.. "

" யோவ்.. இப்ப புரிஞ்சுதுய்யா..
நீ புதுசா பதிவு எழுதி பழகற..
அதை நீயே உன் Blog-ல போட்டா
எப்படி கும்முவாங்களோன்னு பயந்துகிட்டு
என்னை வெச்சி Trial பாக்குற..
ஏன்யா இந்த கொலை வெறி..? "

" ஹா., ஹா.. என் திறமை மேல சந்தேகமா.?
என்னை Test பண்ணி பாரேன்..
உனக்கு திறமை இருந்தா.. "

" எது.. எது.. என்கிட்டயே.., என்கிட்டயே
மோதறீயா..? தயாரா இரு.. "

" கேள்வியை நீ கேக்குறயா..?
இல்ல நான் கேட்கட்டுமா..? "

" ஆ... Wait.. Wait.. நானே கேக்குறேன்..
எனக்கு கேக்க மட்டும் தான் தெரியும்.. "

சேரக்கூடாதது - புனைவும், Chat History-ம்

சேர்ந்தே இருப்பது - கமெண்ட்டும்., வடையும்

செய்யக் கூடாதது - சக பதிவரிடம் குஸ்தி

செய்ய வேண்டியது - பதிவுக்கு டிஸ்கி

போடக்கூடாதது - எதிர்பதிவு

போடக்கூடியது - தொடர்பதிவு

சொல்லக்கூடாதது - ஓட்டு போட சொல்லி கெஞ்சியதை

சொல்லக்கூடியது - தமிழ்மணம் Rank

பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog

பார்த்து ரசிப்பது - கோகுலத்தில் சூரியன் Blog

கலையில் சிறந்தது - பிளாக் எழுதுவது

பிளாக் என்பது - White-க்கு Opposite

பொதுநலம் என்பது - மத்த பிளாக்கில் நாம் போடும் ஓட்டு

சுயநலம் என்பது - நம் பிளாக்கில் நாமே போடும் கள்ள ஓட்டு

வடை என்பது - Me the First

வடைக்கு - செல்வா

ஹிட்டுக்கு - சினிமா பதிவு

சூப்பர் ஹிட்டுக்கு - வம்பிழுக்கும் பதிவு

திரட்டிக்கு - இண்ட்லி

மொக்கைக்கு - VKS

அறிவுக்கு - VAS

அழகுக்கு - நான் ( ஹி., ஹி., இது நேயர் விருப்பம்.. )

" தல.. நீங்க தான் Blogger..!! "
.
.

70 Comments:

Arun Prasath said...

" தல.. நீங்க தான் Blogger..!! "//

எப்டி எல்லாம் prove பண்ண வேண்டி இருக்கு

கோமாளி செல்வா said...

//பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் ப்ளாக்//
ஹா ஹா , இது பதிவுலகத்துக்கு அவசியமான ஒன்று!

//பிளாக் என்பது - White-க்கு ஒப்போசிடே//
தல இதுதான் கலக்கல்.

//மொக்கைக்கு - VKS

அறிவுக்கு - VAS ///

ஹய்யோ , இத பார்த்துட்டு நம்ம அருண் அண்ணன் வந்து இதே மாதிரி எழுதுவாரு பாருங்க , அவரு மட்டுமா , மொத்த VKS காரங்களும் வந்து உங்களை கலாய்க்கிறேன் அப்படின்னு இதவே பண்ண போறாங்க .. அப்புறம் பார்த்துக்கலாம்!

sakthistudycentre.blogspot.com said...

அருமையான கற்பனை.
உட்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
நான் ஓட்டு போட்டுட்டேன்..

http://www.sakthistudycentre.blogspot.com/

samhitha said...

ha ha ha venkattt
superrrrrrrr

"அழகுக்கு - நான் "

தல விட்டுடீங்களே இத !!

வெங்கட் said...

@ Arun.,

// எப்டி எல்லாம் prove பண்ண வேண்டி
இருக்கு //

ஹி., ஹி., ஹி..

கணக்கு வாத்தியார் Board-ல
" Prove that A x ( B + C) = A x B + A x C " -ன்னு
எழுதி நம்மள Prove பண்ண சொன்னா
வாத்தியாருக்கு கணக்கு தெரியலைன்னு
அர்த்தமா.?!!

வெங்கட் said...

@ செல்வா.,

// இத பார்த்துட்டு நம்ம அருண் அண்ணன்
வந்து இதே மாதிரி எழுதுவாரு பாருங்க , //

அது தெரிஞ்ச விஷயம் தானே..

அவரு தளபதி விஜய் மாதிரி
ஒரிஜினலை எல்லாம் Re-Make
பண்ணி கெடுக்கறதுல..

வெங்கட் said...

@ சக்தி.,

// அருமையான கற்பனை. உட்காந்து
ரூம் போட்டு யோசிப்பீங்களோ? //

ரொம்ப நன்றிங்க..!
( வர வர நம்மள பாராட்டின எப்படி
பதில் சொல்றதுன்னே மறந்து போச்சு.. )

LEKHA said...

ஹாய் வெங்கட்

உங்க போஸ்ட் சூப்பரா இருக்கு!!
எங்க இருந்துங்க பிடிகிறீங்க இப்டி எல்லாம் !!!
இத சிந்திச்ச இடத்தை பார்க்கணும் னு ரொம்ப ஆசையா இருக்கு

கலக்குங்க 1000 rs உங்களுக்கு தான்

வெங்கட் said...

@ சம்ஹிதா.,

// "அழகுக்கு - நான் "
தல விட்டுடீங்களே இத !! //

ஹி., ஹி., ஹி..!!
இப்ப சேர்த்தாச்சு..!!

Speed Master said...

அய்ய சாமி ஆளைவிடு

Madhavan Srinivasagopalan said...

ஐ அம் வெயிடிங் ஃ பார் நக்கீரன் என்ட்ரி..

சேலம் தேவா said...

பின்னீட்டிங்க..!! சூப்பர்..!!

வெங்கட் said...

@ லேகா.,

// எங்க இருந்துங்க பிடிகிறீங்க இப்டி எல்லாம் !!! //

நேத்து திருவிளையாடல் படம்
DVD-ல பாத்தேன்.. அதான் உல்டா
பண்ணிட்டேன்..

இதையும் உல்டா பண்ண ஒரு
கோஷ்டி வரும் பாருங்களேன்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// ஐ அம் வெயிடிங் ஃ பார் நக்கீரன் என்ட்ரி.. //

ஆமா.. அப்புறம் நக்கீரனை
நெற்றிக்கண்ணாலசுட்டு பொசுக்குவோம்..
அதையும் பாத்துட்டு போங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ...ஹா ....சூப்பர் .VERY FANTAASTIC மக்கா வெங்கட் ......

மாணவன் said...

//" தல.. நீங்க தான் Blogger..!!//

சூப்பர் தல...

மாணவன் said...

//பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog//

உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...ஹிஹிஹி

அருண் பிரசாத் said...

பிசியா இருக்கறப்போ போஸ்ட் போட்டுட்டீங்க... இருந்தாலும் விட மாட்டேன்...இதோ வரேன்

அருண் பிரசாத் said...

சேரக்கூடாதது - Me the Firstஉம், ஷாலினியும்

சேர்ந்தே இருப்பது - வெங்கட்டும் மொக்கையும்

செய்யக் கூடாதது - கோகுலத்தில் சூரியன் படிப்பது

செய்ய வேண்டியது - படிக்காமல் வெங்கட்டை கலாய்ப்பது

போடக்கூடாதது - வெங்கட்டை புகழ்ந்து கமெண்ட்

போடக்கூடியது - வெங்கட் பதிவுக்கு கேட்

சொல்லக்கூடாதது - வெங்கட் பிரபலபதிவர்

சொல்லக்கூடியது - VKS ROCKS

பார்க்க கூடாதது - வெங்கட் போட்டோ

பார்த்து ரசிப்பது - VKS comments


கலையில் சிறந்தது - பிளாக் எழுதுவது

பிளாக் என்பது - வெங்கட் எழுதாதது

பொதுநலம் என்பது - வெங்கட் பிளாகை HACK செய்வது

சுயநலம் என்பது - வெங்கட்டே பிளாக்கை மூடிவிடுவது ( சுயநலம் - மூடினால் அவர் வாங்கற அடி குறையுமே)

வடைக்கு - காக்கா

வடை என்பது - வெங்கட் பிளாக்கில் கிடைக்காதது (பூட்டி வெச்சிகிறார்)

ஹிட்டுக்கு - cockroach சாகும்

சூப்பர் ஹிட்டுக்கு - வெங்கட் பிளாக் படிச்சி அனைவரும் சாவர்

திரட்டிக்கு - வரட்டி

மொக்கைக்கு - ONE AND ONLY VENKAT

அறிவுக்கு - வெங்கட் தவிர உலக தமிழர் அனைவரும்


" தல.. நீங்க தான் உலக மகா மொக்கை..!! "

samhitha said...

//ஆமா.. அப்புறம் நக்கீரனை
நெற்றிக்கண்ணாலசுட்டு பொசுக்குவோம்..
அதையும் பாத்துட்டு போங்க..//

adhuuuuuuuuu ha ha ha
any nakkeerar here?

samhitha said...

arun
wts t meaning for this

"திரட்டிக்கு - வரட்டி"

பிரபு எம் said...

"தண்டோரா" , "தருமி" என்ற பெயர்களிலேயே சீனியர் பதிவர்கள் இருப்பதனால்...
எங்கே நீங்கள் பதிவுலக திருவிளையாடலின் "செய்யக் கூடாததை" செய்திருக்கிறீர்களோ என்று நினைத்துவிட்டேன்!! ஹஹஹா

சௌந்தர் said...

இன்னைக்கு தான் இவ்வளவு பெரிய பதிவு........ ம்ம்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தண்டோரா : தமிழ்மணம் சிறந்த பதிவு
போட்டி.. பரிசு ரூபாய் 1000..//

பதிவர் தண்டோரா(மனிஜி) பரிசு அறிவிச்சிருக்காரா? இருங்க அவர் கிட்ட போன் பண்ணி கேக்குறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ்மணம் சிறந்த பதிவு///

வெங்கட் எழுதி கொடுத்து பரிசா. விளங்கிடும். தமிழ்மணம் சிறந்த பதிவாம். ஆனால் கேள்வி பதிலில் திரட்டிக்கு - இண்ட்லி யாம். பின்ன எப்படி பரிசு கொடுப்பாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

LEKHA said...

ஹாய் வெங்கட்

உங்க போஸ்ட் சூப்பரா இருக்கு!!
எங்க இருந்துங்க பிடிகிறீங்க இப்டி எல்லாம் !!!
இத சிந்திச்ச இடத்தை பார்க்கணும் னு ரொம்ப ஆசையா இருக்கு

கலக்குங்க 1000 rs உங்களுக்கு தான்//


போனவாரம் ஜாக்பாட்டுல சின்னி ஜெயந்த் பேசினதை பட்டி டின்கேரிங் பண்ணி போட்டிருக்காரு. நீங்க ஜெயா டிவி க்குதான் போகணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...//பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் ப்ளாக்//
ஹா ஹா , இது பதிவுலகத்துக்கு அவசியமான ஒன்று!//

ஆமா என் பதிவுகளை படித்து மெய் மறந்து அவங்களோட வேலை பாதிக்க படுமே அதான்.

LEKHA said...

//ஆமா என் பதிவுகளை படித்து மெய் மறந்து அவங்களோட வேலை பாதிக்க படுமே அதான்.
//

இது கொஞ்சம் 2much-a இல்ல?

// பட்டி டின்கேரிங் பண்ணி போட்டிருக்காரு.//

உங்க வேலை சம்பந்தமான வார்த்தைகள் அடிக்கடி வருமோ ;) just kidding

Madhavan Srinivasagopalan said...

// இன்னைக்கு தான் இவ்வளவு பெரிய பதிவு........ ம்ம்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு //அட.. ஆமால்ல..
அதெப்படி.. ரமேஷ் , அருண் பதிலுக்கு போட்டு தாக்குறாங்க..
சபாஷ்.. சரியான போட்டி.. (இவங்கதான் நக்கீரர்களோ ?)

Chitra said...

நீரே ப்லாக்கர் ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கலக்கிட்டீங்க!

வெங்கட் said...

@ மாணவன்.,

// பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog //

// உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...ஹிஹிஹி //

இது உலகத்துக்கே தெரியுமே..

லாக்-அப்ல பெரிய பெரிய கிரிமினஸ்கிட்ட
இருந்து உண்மையை வாங்கணுமா
இவர் பிளாக்கை காட்டி தான்
அவங்களை பயமுறுத்துவாங்களாம்..

அவங்களும் உசுருக்கு பயந்து
உண்மையை கக்கிடுவாங்களாம்..

சில சமயம் இவர் பிளாக்கை
எதேச்சையா பாக்குற கான்ஸ்டபிள்ஸ்
தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள்
வேற நாலு அஞ்சு தடவை நடந்து இருக்கு..!

வெங்கட் said...

@ அருண்.,

// பிசியா இருக்கறப்போ போஸ்ட்
போட்டுட்டீங்க... இருந்தாலும் விட
மாட்டேன்...இதோ வரேன் //

என்னமோ பெரிய ஆபீசர் மாதிரி...

மேனேஜர்க்கு " டீ " வாங்கிட்டு
வர போயிருந்தேன்னு நேராவே
சொல்லுங்க...

வெங்கட் said...

@ அருண்.,

// சேரக்கூடாதது - Me the Firstஉம், ஷாலினியும்
சேர்ந்தே இருப்பது - வெங்கட்டும் மொக்கையும் //

வந்துட்டார்யா உலக மகா
உல்டா மன்னன்..

பதிவு தான் சொந்தமா யோசிச்சி
போடறதில்ல.. Atleast கமெண்டாவது
சொந்தமா யோசிச்சி போட முயற்சி
பண்ணுங்க..

வெங்கட் said...

@ சம்ஹிதா.,

// arun.., wts t meaning for this

"திரட்டிக்கு - வரட்டி" //

ஹி., ஹி., ஹி..!!

@ அருண்..,

Mr. அருண்.,
ரைமிங்கா எழுதினா போதுமா..
மீனிங் வேணாமா..?!!

இது புத்திசாலிகள் அதிகமா
நடமாடுற பிளாக்..

இனிமே இப்படி தத்து பித்துன்னு
கண்டதையும் உளற கூடாது..
என்ன புரிஞ்சதா..?!!

வெங்கட் said...

@ பிரபு.,

// "தண்டோரா" ,"தருமி" என்ற
பெயர்களிலேயே சீனியர் பதிவர்கள்
இருப்பதனால்... //

எனக்கும் அவர்களை தெரியும்..
இந்த பதிவுக்கும் அவர்களுக்கும்
சம்பந்தம் இல்லை..

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக..

இங்கே தருமி என்பது திரு.நாகேஷ்
அவர்கள் Character-ஐ குறிக்கிறது என்பது
பதிவை படித்தாலே புரிகிறது என்று நம்புகிறேன்..

வெங்கட் said...

@ சௌந்தர்.,

// இன்னைக்கு தான் இவ்வளவு பெரிய பதிவு.. //

நான் எழுதி வெச்சிருந்ததுல
பாதி டயலாக்சை கட் பண்ணிட்டேன்..
அப்படியும் பதிவு கொஞ்சம் பெருசா
தான் போச்சு.. என்ன பண்ண..?!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பதிவர் தண்டோரா(மனிஜி) பரிசு
அறிவிச்சிருக்காரா? இருங்க அவர் கிட்ட
போன் பண்ணி கேக்குறேன் //

ஆமாம்.. அவரு எல்லா பதிவர்களுக்கு
E-Mail அனுப்பினாரே.. உங்களுக்கு
வரலையா..?

ஓ.. உங்களை அவர் பதிவராவே மதிக்கலை
போல இருக்கு..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// தமிழ்மணம் சிறந்த பதிவாம். ஆனால்
கேள்வி பதிலில் திரட்டிக்கு - இண்ட்லியாம்.
பின்ன எப்படி பரிசு கொடுப்பாங்க.. //

என்னாது..? பரிசுக்காக பொய் சொல்றதா..?

வானமே இடிஞ்சி கீழே விழுந்தாலும்
பொய் மட்டும் சொல்ல கூடாதுன்னு
எங்க தாத்தா எனக்கு சொல்லி குடுத்து
இருக்காரு..

அதை தான் நான் வேத வாக்கா
நினைச்சி கடைபிடிச்சிட்டு வர்றேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்கள் பாடலில் பொருட்குற்றம் உள்ளது புலவரே.....

///பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog////

என்று அல்ல....

"போகக் கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog"

என்றல்லவா இருக்க வேண்டும்.... ?

அங்கே போய்விட்டு பார்க்காமல் இருக்கமுடியுமா? அதற்கு போகாமலே இருப்பதுதானே சரி?

ம்ம்ம்.... யாரங்கே பொய்க்கருத்துக் கூறிய இந்த தருமியைத்தூக்கி எண்ணைக் கொப்பறையில் கடாசுங்கள்...........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சுயநலம் என்பது - நம் பிளாக்கில் நாமே போடும் கள்ள ஓட்டு////

அப்போ நம்ம ப்ளாக்ல நல்ல ஓட்டும் போட்டுக்கலாமா?

Philosophy Prabhakaran said...

பின்னிட்டீங்க தல...

சி.பி.செந்தில்குமார் said...

sema செம கலக்கல் பதிவு ( ஒப்பந்தப்படி என் செல் நெம்பருக்கு ரீ சார்ஜ் செய்து விடவும்)

சி.பி.செந்தில்குமார் said...

>>>பார்க்க கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog

பார்த்து ரசிப்பது - கோகுலத்தில் சூரியன் Blog


இது ஓவரு.. ரமேஷ்க்கு கோபமே வராதுங்கறதுக்காக் என்ன வேணாலும் எழுதறதா..?நாங்க இருக்கோம்யா. வம்புச்சண்டைக்கு... நண்பேண்டா..

சி.பி.செந்தில்குமார் said...

இதை கற்பனை பண்ணி டைப் பண்ண ஒரு மணீ நேரம் ஆகி இருக்குமே?வழக்கமா உங்க பதிவோட கான்செப்ட் 20 நிமிஷத்துல டைப் பண்ற மாதிரி இருக்கும் இதுல நல்ல உழைப்பு

சி.பி.செந்தில்குமார் said...

சினிமா பதிவு தான் சூப்பர் ஹிட் என்பதில்லை,அரசியல் பதிவுகளும் சூப்பர் ஹிட் ஆகின்றன (நம்ம லைனுக்கு வந்துடக்கூடாதுன்னு எப்படி எல்லாம் உசுப்பேத்த வேண்டி இருக்கு)

ரசிகன் said...

உதிரந்தேர் வாழ்க்கை அஞ்சிறை நுளம்பே
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் ந‌ரியின‌ன்
இல்லெயிற்று றமதன் எழுத்தினின்
வலியவும் உளவோநீ யறியும் க‌டியே
(வெறுந்தொகை , ரசிகன்)

ரத்தத்தை தேடுவதையே வாழ்வெனக் கொண்ட கொசுவே..
உன் கருத்தை சொல்லாமல், கண்டறிந்த உண்மையைச் சொல்,
நரியினை ஒத்த என் நீண்ட நாள் நண்பர்
பல்லில்லாத அவர்(அ மதன்) எழுதும் எழுத்துக்களைக் காட்டிலும்,
வலி தரும் கடியை நீ அறிந்ததுண்டா..?

Anonymous said...

//உதிரந்தேர் வாழ்க்கை அஞ்சிறை நுளம்பே
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் ந‌ரியின‌ன்
இல்லெயிற்று றமதன் எழுத்தினின்
வலியவும் உளவோநீ யறியும் க‌டியே
(வெறுந்தொகை , ரசிகன்)

rasigan
wt hpd 2 u?
hope u r all right :)

மங்குனி அமைச்சர் said...

சொல்லக்கூடாதது - ஓட்டு போட சொல்லி கெஞ்சியதை///

சரி விடுங்க வெங்கட்

மங்குனி அமைச்சர் said...

கொஞ்சம் வெளிய போகவேண்டி இருக்கு ......அப்பாலிக்க வந்து வச்சுக்கிர்றேன்

ரசிகன் said...

@Anonymous
//rasigan
wt hpd 2 u?
hope u r all right :)//
Perfectly alright. ;-))))

பாண்டிய மன்னனின் கேள்வி:
பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா செயற்கை மணமா?
சொக்க நாதரின் பதில்:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ யறியும் பூவே.
இது மாதிரி ஒரு த‌ழுவ‌ல் try ப‌ண்ணினேன்.. ஹிஹி..

karthikkumar said...

எல்லாம் முடிஞ்சிருச்சா...

karthikkumar said...

///இது புத்திசாலிகள் அதிகமா
நடமாடுற பிளாக்..////

புத்திசாலிகளா இருந்தா உங்க ப்ளாக் எதுக்கு படிக்காறாங்க?

அப்புறம் ப்ளாக் படிக்கதான் முடியும்.. அதுல எப்படி நடமாடுறது..

எஸ்.கே said...

" தல.. நீங்க தான் Blogger..!! "

எஸ்.கே said...

படிச்சு ரொம்ப ரசிச்சு சிரிச்சு மகிழ்ச்சி அடைந்தேன்!

Best Online Jobs said...

Superb......

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஆமா என் பதிவுகளை படித்து மெய் மறந்து
அவங்களோட வேலை பாதிக்க படுமே அதான். //

ரமேஷு.., சின்ன Correction
அது வேலை இல்ல மூளை..

வெங்கட் said...

@ லேகா.,

// பட்டி டின்கேரிங் பண்ணி போட்டிருக்காரு. //

// உங்க வேலை சம்பந்தமான வார்த்தைகள்
அடிக்கடி வருமோ //

இது இவர் வேலை சம்பந்தமான
வார்த்தைகள் இல்லையே..?!!

இவரு ரங்கநாதன் Street-ல பலூன்
விக்கிறவரு..!!

வெங்கட் said...

@ மாதவன்..,

// சபாஷ்.. சரியான போட்டி..
( இவங்கதான் நக்கீரர்களோ ?) //

நக்கீரர்களா..? இவங்களா..?!!
ஹா., ஹா., ஹா..!!
Good Joke...

" நக்கீரன்னா " வாரம் ரெண்டு தடவை
வருமே அந்த புக்னு நினைச்சீங்களா..?

தங்கராசு நாகேந்திரன் said...

செம ரசனையான கற்பனை மிக்க பாராட்டுக்கள்

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// " போகக் கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog"
என்றல்லவா இருக்க வேண்டும்.... ? //

தப்பி தவறி போனாலும் படிக்க
கூடாதது - சிரிப்பு போலீஸ் Blog..

// அங்கே போய்விட்டு பார்க்காமல்
இருக்கமுடியுமா? //

உசுரு முக்கியமா..? இல்லையா..?

வெங்கட் said...

@ சிபி.,

// ( நம்ம லைனுக்கு வந்துடக்கூடாதுன்னு
எப்படி எல்லாம் உசுப்பேத்த வேண்டி இருக்கு) //

உங்க கூட மோத முடியுமா..?
நீங்க தான் " தமிழ்மணம் நிரந்தர முதல்வர் " ..

எங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு
மூணு தடவை சாப்பிடணும்னு தான்
சொல்லி குடுத்தாங்க..

ஆனா உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு
மூணு தடவை பதிவு போடணும்னு
சொல்லி குடுத்துட்டாங்க போல..

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//புத்திசாலிகளா இருந்தா உங்க ப்ளாக் எதுக்கு படிக்காறாங்க? //

புத்திசாலிங்க எதுக்கு உங்க ப்ளாக் படிச்சி இன்னும் அறிவ வளர்த்துக்கனும் கேக்கறியா? இல்லை புத்திசாலிங்க இங்க வர மாட்டங்க சொல்ல வரியா? அப்போ நீ ஏன் வந்த? நீ புத்திசாலி இல்லியா? என்ன சொல்லவர

//அப்புறம் ப்ளாக் படிக்கதான் முடியும்.. அதுல எப்படி நடமாடுறது..//

பிரபல பதிவர் கதை, கவிதை எழுதினா உங்க நடை அருமை சொல்றாங்களே. அப்படினா அவங்க கம்பியூட்டரை கவுத்து போட்டு அது மேல நடக்கறாங்க அர்த்தமா மச்சி!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உதிரந்தேர் வாழ்க்கை அஞ்சிறை நுளம்பே
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் ந‌ரியின‌ன்
இல்லெயிற்று றமதன் எழுத்தினின்
வலியவும் உளவோநீ யறியும் க‌டியே
(வெறுந்தொகை , ரசிகன்) //

" கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன்சிவன் பெருந்தன்மையே. "
( குறுந்தோகை )

ஒரு கிணற்று ஆமை.,
கடல் ஆமையைப்பார்த்து...,
" நீ இருக்கும் கடல், இந்த
கிணற்றினைப் போல் இருக்குமோ
என்று கேட்டதாம். "

ஹி., ஹி., ஹி..

குறுந்தொகை பாட்டு தெரியலைன்னாலும்
கூகுள்ல தேடி எடுப்போம்ல..

LEKHA said...

//குறுந்தொகை பாட்டு தெரியலைன்னாலும்
கூகுள்ல தேடி எடுப்போம்ல..//

ரசிகனும்,நீங்களும் இப்டி புல்லரிக்க வைக்கிறீங்களே!!!!!!!!!!!

Shalini(Me The First) said...

@கார்த்தி
//எல்லாம் முடிஞ்சிருச்சா..//

//@ டெரர்

புத்திசாலிங்க எதுக்கு உங்க ப்ளாக் படிச்சி இன்னும் அறிவ வளர்த்துக்கனும் கேக்கறியா? இல்லை புத்திசாலிங்க இங்க வர மாட்டங்க சொல்ல வரியா? அப்போ நீ ஏன் வந்த? நீ புத்திசாலி இல்லியா? என்ன சொல்லவர?//


நோ நோ இப்பத்தான் ஆரம்பிச்சுருக்கு உங்களுக்கு ;)

Shalini(Me The First) said...

@லேகா
//ரசிகனும்,நீங்களும் இப்டி புல்லரிக்க வைக்கிறீங்களே!!!!!!!!!!//
அச்சோ ஆடு தேடி வந்துடப்போகுது :)
தென் எப்டி இருக்கீங்க லேகா?

சேலம் தேவா said...

தமிழை இப்படி போட்டி போட்டு வளக்கறாங்களே..?! முடியல.....
:-)

Lakshmi said...

கலக்கல் பதிவு. இன்னமும் சிரிப்பு அடங்கலை.

LEKHA said...

//அச்சோ ஆடு தேடி வந்துடப்போகுது :)
தென் எப்டி இருக்கீங்க லேகா?
//

ஆடு தேடி வந்தா உங்க கிட்ட அனுப்பிடுறேன்
பிரியாணி பண்ணிடுங்க ha ha ;)

நான் நல்லா இருக்கேன் ஷாலினி
நீங்க எப்டி இருக்கீங்க??

cheena (சீனா) said...

அழகுக்கு நான் - ஓஓஓ -அப்படி ஒரு ஆச இருக்கா - சரி சரி