சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 January 2011

சூர்யா.. ஒன் மினிட்..!!

















டிஸ்கி : அது Fair & Handsome Cream
மார்கெட்க்கு வந்த புதுசு..

அந்த Cream விளம்பரத்துல
சூர்யா வர்றதால அதை வாங்கி
Use பண்ணனும்னு இருந்தேன்..

என் Friend கடையில அந்த
Cream புதுசா வந்து இருந்தது..
சரி வாங்கலாம்னு போனா..

" உனக்கெதுக்கு இது..?
நீ சிகப்பா தானே இருக்கே..!!
உனக்கெல்லாம் தேவையில்லைன்னு "
சொல்லிட்டான் என் Friend.

எனக்கு செம கோவம்..

பின்ன அவ்ளோ சிகப்பா இருக்குற
சூர்யாவே அதை Use பண்றார்..
நான் Use பண்ண கூடாதா..?

( எல்லாம் பொறாமை பிடிச்ச பசங்க..
நான் இன்னும் அழகாயிட கூடாதுன்னு
சதி பண்றாங்க.. )

நான் விடுவேணா.. ஒரு Cream-ஐ
வாங்கிட்டு தான் வந்தேன்..

ரெண்டு நாள் கழிச்சு என் Friend
போன் பண்ணியிருந்தான்..

" என்னடா சிகப்பாயிட்டியா..? "

" சிகப்பு., சிகப்பா ஆயிட்டேன்.. "
( ஹி., ஹி., அலர்ஜி ஆயிடுச்சி )

" நான்தான் அப்பவே வேணாம்னு
சொன்னேன்ல.."

" ஆமாம்டா.., ஆனா இந்த கிரீமை
எப்படி தான் சூர்யா Use பண்றாரோ..? "

" அவர் Use பண்றதை நீ பாத்தியா.? "

" அதான் விளம்பரத்துல வர்றாருல்ல..!! "

" டேய் வெண்ணை.., அந்த விளம்பரத்தையாவது
ஒழுங்கா பாத்தியா..? "

" ஓ.. பார்த்தேனே...!! "

" ஆமா பாத்து கிழிச்ச.. விளம்பரத்துல கூட
சூர்யா அந்த கிரீமை Use பண்ண மாட்டாரு..
இன்னொருத்தனை தான் Use பண்ண
சொல்லுவாரு.. தெரியுமா...!! "

" அட ஆமால்ல..!! "
.
.

49 Comments:

Unknown said...

அட போங்கப்பா!!!

வெங்கட் said...

@ விக்கி.,

ஏன் இவ்ளோ சலுப்பு..?

சேலம் தேவா said...

பதிவுலக மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் பதிவு போட்ட வெங்கட் அவர்களை வாழ்த்துகிறேன்..!!வளர்க உங்கள் சேவை..!!

karthikkumar said...

இன்னொருத்தனை தான் Use பண்ண
சொல்லுவாரு..!! "

" அட ஆமால்ல..!!///
மொதல்லையே இதெல்லாம் யோசிக்கமாட்டீங்களா....

அருண் பிரசாத் said...

விடுங்க விடுங்க... அது எல்லாம் மனுஷங்க உபயோகிக்க வேண்டியது... நீங்க குரங்கு மார்க் சோப்பு யூஸ் பண்ணி பாருங்க....

சௌந்தர் said...

சரி சரி அந்த கிரீம்மை நீங்க யூஸ் பண்ணிட்டிங்கல நான்வேற எதுக்கு யூஸ் பண்ணனும் வேண்டாம்

Anonymous said...

ஓ இது ஆண்களுக்கான பதிவா??

அப்ப நா கிளம்புறேன்.
டா டா..

Chitra said...

பல்பு..... ouch!

அமுதா கிருஷ்ணா said...

பாவம் இந்த பசங்க. விளம்பரத்தையெல்லாம் உண்மை என்று நம்பி.

Madhavan Srinivasagopalan said...

// " அட ஆமால்ல..!! " //

Repeettoi..

வார்த்தை said...

செகப்பு தான் அழகுன்னு எந்த "leukoderma" வந்த டாக் கண்டுபிடிச்சதோ ......

செல்வா said...

// அருண் பிரசாத் said...
நீங்க குரங்கு மார்க் சோப்பு யூஸ் பண்ணி பாருங்க....//



நீங்க பயன்படுத்தறது அது , நாங்க இல்ல ..!! உங்களை மாதிரியே எல்லோரையும் நினைசிக்கறது .?!

மாணவன் said...

//" என்னடா சிகப்பாயிட்டியா..? "

" சிகப்பு., சிகப்பா ஆயிட்டேன்.. "
( ஹி., ஹி., அலர்ஜி ஆயிடுச்சி )//

hehehe super

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// பதிவுலக மக்கள் பாதிக்கப்படக்கூடாது
என்ற நல்லெண்ணத்தில் பதிவு போட்ட
வெங்கட் அவர்களை வாழ்த்துகிறேன்..!!
வளர்க உங்கள் சேவை..!! //

விடுங்க.. விடுங்க.. இதெல்லாம்
நம்ம கடமைங்க..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// மொதல்லையே இதெல்லாம்
யோசிக்கமாட்டீங்களா.... //

இதை பத்தி எல்லாம் யோசிக்க
நமக்கு எங்கே டைம்..?

நாம தான் முழு நேரமும்
இந்தியாவை வல்லரசாக்கறதை
பத்தியே யோசிச்சிட்டு இருக்கோமே..

வெங்கட் said...

@ அருண்.,

// நீங்க குரங்கு மார்க் சோப்பு யூஸ்
பண்ணி பாருங்க.... //

குரங்கு மார்க் சோப்..?
ஓ.. நீங்க Brand Ambassador-ஆ
இருக்கிற அந்த சோப்பா.. !!

நீங்க என்னை எவ்ளோ Canvass
பண்ணினாலும் சரி.. உங்க
கம்பெனி சோப் Use பண்ற ஐடியா
எனக்கு இல்ல.. Sorry..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

// @ அருண்.,

// நீங்க குரங்கு மார்க் சோப்பு யூஸ்
பண்ணி பாருங்க.... //

குரங்கு மார்க் சோப்..?
ஓ.. நீங்க Brand Ambassador-ஆ
இருக்கிற அந்த சோப்பா.. !!

நீங்க என்னை எவ்ளோ Canvass
பண்ணினாலும் சரி.. உங்க
கம்பெனி சோப் Use பண்ற ஐடியா
எனக்கு இல்ல.. Sorry..!!//

இதுக்குதான காத்து இருந்தேன்...

ஆமாம், சூர்யா மாதிரி பிராண்ட் அம்பாசிடர்தான்.... அதுக்குதான் உங்க மூஞ்சில பூசி பார்க்கனும்னு ட்ரை பண்ணுறேன்.... முடியல... அழகாயிடுவீங்களோனு ஒரு டவுட்டு தான்

வெங்கட் said...

@ சௌந்தர்.,

// சரி சரி அந்த கிரீம்மை நீங்க யூஸ்
பண்ணிட்டிங்கல நான்வேற எதுக்கு யூஸ்
பண்ணனும் வேண்டாம் //

அந்த கிரீம் ரொம்ப Concentrated..
Skin Rough-ஆ இருக்கிறவங்களுக்கு
அது ஓ.கே.. நம்மள மாதிரி
குழந்தை பசங்க Use பண்ணினா
இப்படிதான் ஆகும்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளம்பரம் பார்த்து வீணா போனவர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கட் வாழ்க

பெசொவி said...

:)

Smilie mattum poduvor sangam

Madhavan Srinivasagopalan said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளம்பரம் பார்த்து வீணா போனவர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கட் வாழ்க //

எலேய்.. ரமேஷ அப்படி சொல்லுறது..
ஏ.. ரமேஷு மூளைய யூசு பண்ணுரான்டோய்..

பெசொவி said...

எனக்கு இதில ஆச்சரியமே இல்ல, பிதாமகன் பாத்துட்டு அதில வர்ற சூரியா மாதிரியே மூணு சீட்டு விளையாடி போலீஸ்ல மாட்டின ஆளு தான, நீங்க?

HVL said...

" சிகப்பு., சிகப்பா ஆயிட்டேன்.. "
( ஹி., ஹி., அலர்ஜி ஆயிடுச்சி )

அதான் செவப்பா ஆயிட்டீங்கல்ல! வெளம்பரத்துல கரெக்டா தான் சொல்லியிருக்காங்க.

ராஜி said...

அட விடுங்க.ஃபிரண்ட் கிட்ட பல்ப் வாங்குறது என்ன உங்களுக்கு புதுசா என்ன?

வெங்கட் said...

@ இந்திரா.,

// ஓ இது ஆண்களுக்கான பதிவா??
அப்ப நா கிளம்புறேன். டா டா.. //

கிளம்புங்க.. கிளம்புங்க..

திரிஷா சொன்னாங்கன்னு - Vival Soap
காத்ரீனா சொன்னாங்கன்னு - Pantene Shampoo
அசின் சொன்னாங்கன்னு - Fair Ever Cream
கரீனா சொன்னாங்கன்னு - Sony Laptop
பிரியங்கா சொன்னாங்கன்னு - Pleasure Scooter
நயன்தாரா சொன்னாங்கன்னு - Pothys-ல Designer Saree..

எல்லாம் வாங்கி Use பண்ண வாழ்த்துக்கள்..

karthikkumar said...

@ வெங்கட்
திரிஷா சொன்னாங்கன்னு - Vival Soap
காத்ரீனா சொன்னாங்கன்னு - Pantene Shampoo
அசின் சொன்னாங்கன்னு - Fair Ever Cream
கரீனா சொன்னாங்கன்னு - Sony Laptop
பிரியங்கா சொன்னாங்கன்னு - Pleasure Scooter
நயன்தாரா சொன்னாங்கன்னு - Pothys-ல Designer Saree.. ///
TV -ய இந்தமாதிரி நடிகைகள் விளம்பரம் பாக்குறதுக்கு மட்டுதான் யூஸ் பண்ணுவீங்களா... டவுட்டு # 10254

சி.பி.செந்தில்குமார் said...

>>>" ஆமா பாத்து கிழிச்ச.. விளம்பரத்துல கூட
சூர்யா அந்த கிரீமை Use பண்ண மாட்டாரு..
இன்னொருத்தனை தான் Use பண்ண
சொல்லுவாரு.. தெரியுமா...!! "

ha ha haa while venkat get knosecut the mind get happy.. y?

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

:)m:)m

Philosophy Prabhakaran said...

நகைச்சுவையா இருந்தாலும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...

Anonymous said...

Ouch!!!!! Ha ha

Shalini(Me The First) said...

@அருண்
//ஆமாம், சூர்யா மாதிரி பிராண்ட் அம்பாசிடர்தான்.... அதுக்குதான் உங்க மூஞ்சில பூசி பார்க்கனும்னு ட்ரை பண்ணுறேன்.... முடியல... //
ப்ராண்ட் நேம்க்கு பொருத்தமான ப்ராண்ட் அம்பாசிடர்

//அழகாயிடுவீங்களோனு ஒரு டவுட்டு தான்//
வேண்டாம்ப்பா இப்பயே கோலிவுட்லருந்து ஹாலிவுட் வரை எப்ப ஸ்டாரிங்னு கேட்டு ஒரே தொல்லை!

Shalini(Me The First) said...

@ரமேஷ்
//வெங்கட் வாழ்க//

ஸாரி போலீஸ்! வாழ்க வாழ்கன்னு கோஷம் போட்டாலும் உங்களுக்கு நோ ஸீட்

@பெ.சொ.வி
//Smilie mattum poduvor sangam//
வேற வழி ;)

@கார்த்தி
// டவுட்டு # 10254//
பாத்து இந்த ரேஞ்சுக்கு போன டவுட்ட தவிர வேற ஒண்ணும் தெரியாம போயிட போகுது

மங்குனி அமைச்சர் said...

அதுக்குத்தான் சொல்றேன்

"அழகாக ஆசைப்படுற ஆம்பளையும் , அடுத்தவன காப்பியடிக்கிற வெங்கட்டும் அலர்ஜி வராம தப்பிச்சதா சரித்திரமே இல்லைன்னு "

அடடே மங்கு பன்ச் டயலாக் ..... பின்ரா, பின்ரா ..............

"புலியபாத்து பூனை சூடு போட்டுக்கிச்சாம் "

அட பழமொழி வேற ????? மங்கு நீ எங்கையோ போயிட்ட ............உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா அசத்து ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட பழமொழி வேற ????? மங்கு நீ எங்கையோ போயிட்ட ............உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா அசத்து ... ///

யோவ் மங்கு ஏன் பொய் சொல்ற. டெய்லி உன் பையன் உன்னையா மாத்து மாத்துன்னு மாத்துறானாமே..

Anonymous said...

//குழந்தை பசங்க Use பண்ணினா
இப்படிதான் ஆகும்..!!
//
ohh baby
do u want biscuit?

சம்ஹிதா said...

//எல்லாம் பொறாமை பிடிச்ச பசங்க..
நான் இன்னும் அழகாயிட கூடாதுன்னு
சதி பண்றாங்க//

இத விட அழகு வேணுமா என்ன?
அப்புறம் உங்கள கடத்திட்டு போய்டுவாங்க சூர்யா,மேடிக்கு பதிலா நடிக்க சொல்லி....

//" சிகப்பு., சிகப்பா ஆயிட்டேன்.. "
( ஹி., ஹி., அலர்ஜி ஆயிடுச்சி )
//

கண்ணு பட்டு இருக்கும் ;)

வெங்கட் said...

@ அமுதா கிருஷ்ணா.,

// பாவம் இந்த பசங்க.
விளம்பரத்தையெல்லாம்
உண்மை என்று நம்பி. //

பசங்க பாடு கொஞ்சம் தேவலாம்
மேடம்.. நம்ம பொண்ணுங்கள
கொஞ்சம் நினைச்சி பாருங்க..
@ அமுதா கிருஷ்ணா.,

// பாவம் இந்த பசங்க.
விளம்பரத்தையெல்லாம்
உண்மை என்று நம்பி. //

பசங்க பாடு கொஞ்சம் தேவலாம்
மேடம்.. நம்ம பொண்ணுங்கள
கொஞ்சம் நினைச்சி பாருங்க..

வெங்கட் said...

@ வார்த்தை.,

// செகப்பு தான் அழகுன்னு எந்த
"leukoderma" வந்த டாக் கண்டுபிடிச்சதோ //

திட்டுங்க.. இன்னும் நல்லா திட்டுங்க..!!

அப்பவாச்சும் " குரங்கு மார்க் " சோப்
Brand Ambassador அருண் பிரசாத்துக்கு
உறைக்குதான்னு பாப்போம்..

வெங்கட் said...

@ அருண்.,

// ஆமாம், சூர்யா மாதிரி பிராண்ட்
அம்பாசிடர்தான்.... //

போட்டோவ பாத்தா அப்படி
தெரியலையே..
ஆக்ஸிடெண்ட் ஆனா அம்பாஸிடர்
மாதிரியில்ல இருக்கு..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// விளம்பரம் பார்த்து வீணா போனவர்கள்
சங்கத்தின் தலைவர் வெங்கட் வாழ்க //

KFC-ல சிக்கன் வாங்கி குடுத்தேங்கறதுக்காக
உங்க சங்கத்துக்கு என்னை தலைவரா
தேர்ந்தெடுக்கறது எல்லாம் கொஞ்சம்
ஓவர்..

VKS தலைவி அனு தான் இந்த பதவிக்கும்
தகுதியான, சரியான ஆள்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// ஏ.. ரமேஷு மூளைய யூசு பண்ணுரான்டோய்.. //

மூளைய Use பண்ணினாரா..?
ஓ.. அவரு லஞ்சுக்கு ஆட்டு மூளை பிரை
சாப்பிட்டாரே அதை சொல்றீங்களா..?!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// பிதாமகன் பாத்துட்டு அதில வர்ற சூரியா
மாதிரியே மூணு சீட்டு விளையாடி
போலீஸ்ல மாட்டின ஆளு தான, நீங்க? //

அதெல்ல்லாம் அப்போ..

இப்ப " சிங்கம் " பாத்துட்டு அதில
வர்ற சூர்யா மாதிரியே போலீஸ் கமிஷ்னர்
ஆயிட்டேன் தெரியுமா உங்களுக்கு..?!!

Anonymous said...

//வெங்கட் said...


கிளம்புங்க.. கிளம்புங்க..

திரிஷா சொன்னாங்கன்னு - Vival Soap
காத்ரீனா சொன்னாங்கன்னு - Pantene Shampoo
அசின் சொன்னாங்கன்னு - Fair Ever Cream
கரீனா சொன்னாங்கன்னு - Sony Laptop
பிரியங்கா சொன்னாங்கன்னு - Pleasure Scooter
நயன்தாரா சொன்னாங்கன்னு - Pothys-ல Designer Saree..

எல்லாம் வாங்கி Use பண்ண வாழ்த்துக்கள்.. //


ஒரு விளம்பரம் விட மாட்டீங்க போல..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// TV -ய இந்தமாதிரி நடிகைகள் விளம்பரம்
பாக்குறதுக்கு மட்டுதான் யூஸ் பண்ணுவீங்களா...
டவுட்டு # 10254 //

ஹலோ... அது இந்திராவுக்கு Reply
போடறதுக்காக நம்ம சிரிப்பு போலீஸ்கிட்ட
வாங்கின விளம்பர லிஸ்ட்..

நான்தான் " சுட்டி T.V " தவிர வேற
எந்த சேனலும் பாக்கறதே இல்லையே..

Jayadev Das said...

ஹா.. ஹா.. ஹா.. ஹா.. சூப்பரப்பு. இந்த சூர்யா சொரி சிரங்கு படை கிரீம் தவிர மத்த எல்லா விளம்பரத்திலும் வர்றாரு, எந்த விளம்பரத்த பாத்தாலும் இவரே திரும்பத் திறம்ப காட்டி டார்ச்சர் பண்றாங்க. கொடுமை தாங்க முடியல. நீங்க சொன்ன மாதிரி இவங்க விளம்பரத்தில் காட்டுவது எதையும் பயன் படுத்துவதில்லை. லக்ஸ் சோப்பு விளம்பரத்துக்கு ஸ்ரீதேவி முதல் ஐஸ்வர்யா ராய் வரை அனைத்து பிரபல ஹிந்தி நடிகைகளும் நடிச்சிருக்காங்க. ஆனா அவங்க நிஜத்தில் லக்ஸ் சோப்பை கையுறை போட்டுக்கிட்டு கூட தொடுவாங்களா என்பது சந்தேகமே. குளிக்க கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ பொடி போன்ற ஆயிடங்களைத்தான் பயன் படுத்துவதாக சினேஹா ஒரு முறை கூறியிருக்கிறார், [நேர்மையானவங்க!] இந்த கிரிக்கெட் ஆடுற பயலுங்க பெப்சி குடிக்க ஆரம்பிச்சானுங்கன்னா என்னத்துக்காகும், ஆனா அதை நாம வாங்கி குடிச்சு குடல் அல்சர் வந்து சாக வேண்டும். இந்த அமிதாப் படச்சான் வெறும் சாக்கலேட் விளம்பரத்துக்கு வர்றார், அவரால சாக்கலேட் தின்ன முடியுமா? நீங்க சொன்ன மாதிரி அடுத்தவங்களுக்கு குடுப்பதும், தின்னச் சொல்வதும் தான் அவரு வேலை போல. ஹா... ஹா.... ஹா... நல்ல பதிவு.

வெங்கட் said...

@ மங்குனி.,

// அட பழமொழி வேற ?????
மங்கு நீ எங்கையோ போயிட்ட //

ஆமா.. இப்படி சொல்லிட்டே கல்கத்தா
போயி இப்ப நீங்க பங்களாதேஷ் பார்டர்ல
நிக்கறதா தகவல் வந்திருக்கு..

உங்க வீட்டுக்கார அம்மா வேற
போன் பண்ணி...

" மனசு மாறி திரும்பி எதாவது
வந்துடப்போறாரு.. அப்படியே
சைனா., ரஷ்யா.. அண்டார்டிக்காவுக்கு
அனுப்பி குடுங்கன்னு கெஞ்சறாங்க.. "

வெங்கட் said...

@ சம்ஷிதா.,

// இத விட அழகு வேணுமா என்ன? //
அப்புறம் உங்கள கடத்திட்டு போய்டுவாங்க
சூர்யா,மேடிக்கு பதிலா நடிக்க சொல்லி.... //

ஹி., ஹி., ஹி..

உங்களுக்கு விஷயமே தெரியாதா..?
இப்ப சூர்யாவும், மேடியும் நடிச்சிட்டு
இருக்கறதே எனக்கு பதிலா தான்..

பார்க்க இங்கே க்ளிக்

வெங்கட் said...

@ ஜெயதேவ்.,

// இந்த சூர்யா சொரி சிரங்கு படை கிரீம்
தவிர மத்த எல்லா விளம்பரத்திலும் வர்றாரு, //

ஹா., ஹா., ஹா.. சரியா சொன்னீங்க..
சூர்யா இதையெல்லாம் கொஞ்சம்
Consider பண்ணனும்..!!

எஸ்.கே said...

இதத்தான் ஊருக்கு உபதேசம்னு சொன்னாங்களோ!