அன்னிக்கு எதோ விசேஷமான நாள்.
எங்க வீட்டு Dinning Table-ல
புதுசா ஒரு Sweet இருந்தது..
என்ன Sweet-ன்னு எனக்கு தெரியல..
நான் என் Wife-ஐ கூப்பிட்டேன்..
" இது என்ன Sweet..? புதுசா இருக்கு..? "
" என்னங்க நீங்க..? இது தெரியாதா..?
இது பேரு சம்பாகளி.."
" என்னாது சம்பாகளியா..?
சுத்த கேனப்பசங்களா இருப்பானுங்க போல..
Sweet-க்கு போயி ஆரியக்களி., ராகிகளி.,
சம்பாகளின்னு பேரு வெச்சி இருக்கணுங்க..!!"
" அது சரி.. இந்த ஸ்வீட் இதுக்கு முன்னாடி
நீங்க சாப்பிட்டு இருக்கீங்க.. எங்கேன்னு
சொல்லுங்க பாக்கலாம்.. "
" வாயில.. "
" அட.., என் அண்ணன் கல்யாணத்துல
வெச்சாங்கல்ல அந்த ஸ்வீட்ங்க இது..!! "
" அது நடந்து 3 வருஷம் இருக்காது..?
இன்னுமா ஊசிப்போகலை..? "
( சரி., சரி.., இப்ப எதுக்கு அந்த கரண்டியை
எடுக்கற.. கீழே வை.. கீழே வை.. )
" ஆமா ஸ்வீட் பேருகூட தெரியாம தான்
எங்க அண்ணன் கல்யாணத்தில 4 ஸ்வீட்
எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வந்தீங்களா..?!! "
( ஹி., ஹி., ஹி..!! நல்லவேளை இவளுக்கு
பாதி விஷயம் தான் தெரிஞ்சி இருக்கு.. )
" இப்ப குழந்தைக்கு அம்மாவோட பெயரா
முக்கியம்..? அம்மா தானே முக்கியம்..
அது மாதிரி எனக்கும் ஸ்வீட் பெயரா
முக்கியம்.? ஸ்வீட் தான் முக்கியம்.. "
" ம்ம்... முதல்ல அந்த டைரியை தூக்கி
குப்பையில போடறேன்.. அப்புறம்
எப்படி பஞ்ச் டயலாக் பேசறீங்கன்னு
நானும் பாக்கறேன்..!! "
" சரி., சரி.. கூல்..!! "
ஒரு " சம்பாகளி " எடுத்து சாப்பிட்டேன்..
" ம்ம்.. நல்லா இருக்கே..!! Taste கூட
குலாப்ஜாமூன் மாதிரியே இருக்கு.. "
என் மனைவி என்னை கேவலமா
ஒரு லுக் ( வழக்கமா அப்படித்தான் )
விட்டுட்டு....
" அப்ப நீங்க இதுக்கு முன்னாடி
குலாப்ஜாமூனையும் பாத்ததில்லையா..? "
" யாரு., யாரு.. யார்கிட்ட..,
நான் குலாப்ஜாமூனை பாத்ததில்லையா.?
இதானே குலாப்ஜாமூன்...
@ To All.,
Wish You a Happy & Sweet Pongal..!!
.
. Tweet
38 Comments:
ஹைய்யா ஜாலி..!! எனக்குதான் முதல் சம்பாகளி, குலோப்ஜாமூன் எல்லாம்..!! :-))
பின்னூட்டம் போட்றவங்களுக்கு சம்பாகளி கிடைக்குமா???
உங்க ஊர் குலாப்ஜாமுன் இப்படிதான் இருக்குமா???
என் மனைவி என்னை கேவலமா
ஒரு லுக் ( வழக்கமா அப்படித்தான் )
விட்டுட்டு....///
உங்க வீட்லயும் அப்படித்தானா ????? ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
இதானே குலாப்ஜாமூன்...///
ஹைய்யோ ...ஹைய்யோ.............. என்னத்த சொல்ல ???
"தூள்" படத்துல - சந்திரபாபு நாயுடு - திருப்பதி லட்டை ஜாங்கிரியா மாத்திட்டாருனு, மயில்சாமி விவேக் கிட்ட ரீல் விட்ட மாதிரி இருக்குதே.... ஹா,ஹா,ஹா,ஹா...
ம்...ம்... வெளங்கிடுச்சி..
//" இப்ப குழந்தைக்கு அம்மாவோட பெயரா
முக்கியம்..? அம்மா தானே முக்கியம்..
அது மாதிரி எனக்கும் ஸ்வீட் பெயரா
முக்கியம்.? ஸ்வீட் தான் முக்கியம்.. " //
இது செம..
எப்படி யோசிக்கறீங்க.. அடுத்தவனோட ஐடியாவ சுடுறதுக்கு..
சரி அப்புறம்? நடந்தது என்ன?
//அன்னிக்கு எதோ விசேஷமான நாள்.//
ஒரு வேளை உங்க கல்யாணநாளோ!
//நான் என் Wife-ஐ கூப்பிட்டேன்..//
பார்ரா தைரியத்தை...
யாரு., யாரு.. யார்கிட்ட..,
நான் குலாப்ஜாமூனை பாத்ததில்லையா.?
இதானே குலாப்ஜாமூன்.////
உங்களுக்கு பகல்லயே பசுமாடு தெரியாது.. இதுல எதுக்கு இந்த விசபரிச்சை. கொடுத்தா வாங்கி சாப்ட்டுட்டு வேலைய பாக்க கெளம்ப வேண்டியதுதானே.. ஹையோ ஹையோ...
//டிஸ்கி : இதுதாங்க " சம்பாகளி "//
ஓ இதுதானா!
//" அது சரி.. இந்த ஸ்வீட் இதுக்கு முன்னாடி
நீங்க சாப்பிட்டு இருக்கீங்க.. எங்கேன்னு
சொல்லுங்க பாக்கலாம்.. "
" வாயில.. "//
அதானே! எல்லோரும் வாயிலதானே சாப்பிடுவாங்க!
அடுத்து காரமான நினைவுகள் ஏதாவது இருக்கா?
//அன்னிக்கு எதோ விசேஷமான நாள்.//
மறுபடியும் ஒரு பிளாஷ் backஆ ....?
எத்தன ....
//" என்னங்க நீங்க..? இது தெரியாதா..?//
ஓ...
இத நாங்க நம்பனுமா ...?
(அப்ப, இத தவிர மத்த எல்லாம் உங்களுக்கு தெரியும்னு உங்க வைப் நம்புறாங்களா?)
//" சரி., சரி.. கூல்..!! "//
ஓ ...
கூல் பார்ட்டி ...
(காமங் கூலா, ராகி கூலா)
//இதானே குலாப்ஜாமூன்...//
நோ டவுட் ....
confirmed.
//கேவலமா
ஒரு லுக் ( வழக்கமா அப்படித்தான் )
.//
மனைவி கிட்ட பயம் போய்டுச்சு போல!! ;)
//எங்கேன்னு
சொல்லுங்க பாக்கலாம்.. "
" வாயில.. "//
வெங்கட் உங்கள மாதிரி சிந்திக்கவே முடியாது யாரும்!!
நிஜமாவே இப்டி ஒரு மேட்டர் நடந்திருந்தா நீங்க உண்மையிலேயே தைரியசாலி தான்
(என்னமா பேசுறீங்க !!!)
adv pongal wishes 2 u and ur family
111 rs நீங்களே வச்சிகோங்க
என்னுடைய பொங்கல் பரிசு !! ;)
@ரமேஷ்
//சரி அப்புறம்? நடந்தது என்ன?//
யார்ப்பா அங்க ? கொஞ்சம் இந்த போலீஸ தண்ணி தெளிச்சி எழுப்பி விடுங்க எப்ப பாரு போட்டுருக்க காக்கி சட்டையையும், வச்சுருக்க பேரையும் பார்த்து நாம நிஜ போலீஸோனு நினைச்சுட்டு கேள்வி கேக்ற மாதிரி கனவு காண வேண்டியது!
@அருண்
////நான் என் Wife-ஐ கூப்பிட்டேன்..//
பார்ரா தைரியத்தை...//
பார்ரா பொறாமையை!
@கார்த்தி
//கொடுத்தா வாங்கி சாப்ட்டுட்டு வேலைய பாக்க கெளம்ப வேண்டியதுதானே.. //
(பாஸ் நீங்க சொன்னது சரி தான் இந்த பையன் ரொம்ப___________ தான் ;))
உடனே அறிவாளின்னு ஃபில்லப் பண்ண போறார்;)
@எஸ்.கே
//அதானே! எல்லோரும் வாயிலதானே சாப்பிடுவாங்க!//
ப்ச் உங்களுக்கு VKS பத்தி இன்னும் தெரியல போல வித்யாசமா திங்க் பண்றோம்னு சொல்லி அவங்க எப்படியெல்லாம் ட்ரை பண்வாங்க தெரியுமா? ;)
//அடுத்து காரமான நினைவுகள் ஏதாவது இருக்கா?//
காரமா? அப்டின்னா?!!!
v hav only sweet memories S.K! :)
@ ஷாலினி
பாஸ் நீங்க சொன்னது சரி தான் இந்த பையன் ரொம்ப___________ தான் ;))
உடனே அறிவாளின்னு ஃபில்லப் பண்ண போறார்;)////
அறிவாளிக நான் அறிவாளி நான் அறிவாளின்னு சொல்லமாட்டாங்க. ஓ எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு.. நீங்க இப்படிதான் அடிக்கடி ஃபில்லப் பண்ணி அறிவாளின்னு ப்ரூவ் பண்ணுவீங்களா :)
ஸ்வீட் ஆச்சு அடுத்து காரம் கூடவேகாஃபியும் உண்டா?
என்னோட கமெண்ட் எங்க?? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?
//ப்ச் உங்களுக்கு VKS பத்தி இன்னும் தெரியல போல வித்யாசமா திங்க் பண்றோம்னு சொல்லி அவங்க எப்படியெல்லாம் ட்ரை பண்வாங்க தெரியுமா? ;)//
அட நீங்க வேற? யாரு எந்த சங்கம்? சங்கத்தோட கொள்கை, யாரு தலைவர் எதுக்கு சங்கம் ஒன்னுமே புரியலை!
நானும் குத்து மதிப்பா நினைச்சுகிட்டு பேசிகிட்டு இருக்கேன்!:-)
//காரமா? அப்டின்னா?!!!
v hav only sweet memories S.K! :)//
காரம்னா என்னனு தெரியாதா??
(அப்பாடி! கண்டபடி திட்டிக்கிறாங்க எல்லோரும். காரம்னா என்னான்னு தெரியலன்றாங்களே!:-)))
வி ஹேவ் ஒன்லி ஸ்வீட் மெமரி ஓகே! பட் பார்த்து லிமிட்டா இருக்கணும்! (டயாபட்டீஸ்! டயபட்டீஸ்!)
கடைசில உங்களை களி திங்க வச்சிட்டாங்களா....
//அறிவாளிக நான் அறிவாளி நான் அறிவாளின்னு சொல்லமாட்டாங்க. ஓ எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு.. நீங்க இப்படிதான் அடிக்கடி ஃபில்லப் பண்ணி அறிவாளின்னு ப்ரூவ் பண்ணுவீங்களா :)
//
அறிவாளிக்கு தான் அறிவாளியா இல்லையான்னு தெரியும் .. அதே சமயம் ஹி ஹி
//அட நீங்க வேற? யாரு எந்த சங்கம்? சங்கத்தோட கொள்கை, யாரு தலைவர் எதுக்கு சங்கம் ஒன்னுமே புரியலை!//
VKS அப்படின்னு ஒரு சங்கம் இருந்துச்சுங்க , அது ரொம்ப காலத்துக்கு முன்னாடியே கலஞ்சு போச்சு , அதோட வரலாறுகள் கூட இல்லை .. விடுங்க அது பத்தி தெரிஞ்சிக்கிரதால நாட்டுக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை !!
// அனு said...
என்னோட கமெண்ட் எங்க?? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?
//
ஒருத்தர் வருவாரு , என்னோட கமென்ட் எங்கினு கேப்பாரு அப்படி கேட்டா நான் என்ன கமென்ட் போட்டினு சொல்லிடாதீங்க அப்படிங்கிற மாதிரி வந்து பில்ட் அப் கொடுக்குறீங்க ?
@ தேவா.,
// எனக்குதான் முதல் சம்பாகளி,
குலோப்ஜாமூன் எல்லாம்..!! :-)) //
இப்பவாச்சும் எது குலோப்ஜாமூன்னா
கரெக்டா தெரிஞ்சிக்கிட்டீங்களா.?
@ இந்திரா.,
// உங்க ஊர் குலாப்ஜாமுன் இப்படிதான்
இருக்குமா??? //
ஆமாங்க... ஆனா எங்க ஊர்ல
சில பேரு இதை " மைசூர்பாகுன்னு "
சொல்றாங்க.. சுத்த லூசுப்பசங்க..!!!
பின்ன " மைசூர்பாகு " இப்படியா இருக்கும்..?
முந்திரி, திராட்சை எல்லாம் போட்டு
அது உருண்டையால்ல இருக்கும்..!!?!
both sweets are sweets;
he he he cumma naamalum oru panchu dialogue
@ மங்குனி.,
// உங்க வீட்லயும் அப்படித்தானா ?????
ஆனாலும் உங்க நேர்மை எனக்கு
ரொம்ப புடிச்சிருக்கு //
எங்கே அப்படியே நைசா என்கூட
சேரப்பாக்குறீங்க..?
உங்க வூட்டுக்காரம்மா உங்களை
பூரிக்கட்டை உடையிற அளவு
அடிச்சாங்களே.. அது மாதிரி எல்லாம்
எங்க வீட்ல எப்பவுமே நடக்காது...
( பி.கு.. ஏன்னா எங்க வீட்ல
பூரிக்கைட்டையே கிடையாது.. )
@ அருண்.,
// ம்...ம்... வெளங்கிடுச்சி.. //
ஓ.கே.., அடுத்து அந்த கழித்தல்.,
பெருக்கல், வகுத்தல் கணக்கு
எல்லாம் போட்டு போட்டு
வெளங்குதான்னு பாருங்க..
@ மாதவன்.,
// எப்படி யோசிக்கறீங்க..
அடுத்தவனோட ஐடியாவ சுடுறதுக்கு.. //
இதுக்கு பேரு சுடுறது இல்ல..
எடுத்து ஆளுதல்..
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு..!!! "
இப்படி திருக்குறளை மேற்கோள்
காட்டினா கூட.. திருவள்ளுவரோட
ஐடியாவை சுட்டுடேன்னு சொல்லுவீங்க
போல..
@கார்த்தி
//அறிவாளிக நான் அறிவாளி நான் அறிவாளின்னு சொல்லமாட்டாங்க//
கண்டிப்பா அறிவாளிக நீங்க அறிவாளி நீங்க அறிவாளினு உங்களை சொல்ல மாட்டாங்க பட் உண்மைய ஒத்துக்கொள்கிற உங்க நேர்மை எனக்கு
ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சுருக்கு கார்த்தி ;)
@அனு
//என்னோட கமெண்ட் எங்க?? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா//
அதுக்குத்தான் காக்காகிட்டல்லாம் பறிச்சு சாப்பிட கூடாது இப்ப பாருங்க பழிவாங்கிடுச்சு :(
@எஸ்.கே
//நானும் குத்து மதிப்பா நினைச்சுகிட்டு பேசிகிட்டு இருக்கேன்!:-)//
அகிம்சை பூமில என்ன இது வெட்டு குத்துனுலாம் ;)
(டயாபட்டீஸ்! டயபட்டீஸ்!//
ஹா ஹா ஹா ஸ்வீட்ல சுகர் இல்லைனா தான் கஷ்டம் ;)
@ஷாலினி
//அதுக்குத்தான் காக்காகிட்டல்லாம் பறிச்சு சாப்பிட கூடாது இப்ப பாருங்க பழிவாங்கிடுச்சு//
வெங்கட்.. உங்களுக்கு வடை கிடைக்க விடலைன்னு தான் நீங்க என்னை பழிவாங்கிட்டீங்கன்னு உங்க ஜூனியரே ஒத்துக்கிட்டாங்க.. இப்பவாது என் கமெண்ட்ட தேடி கண்டுபிடிச்சு publish பண்ணங்க..
//டிஸ்கி : இதுதாங்க " சம்பாகளி //
குலோப் ஜாமூனே சரியா சொல்லத் தெரியலை, நீங்க சொன்ன ஐட்டம் இதுதான்னு நான் எப்படி நம்பறது?
Post a Comment