சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 November 2010

பீ கேர்புல்..!!

















நேத்து Evening..
என் Room-ல ஹாயா உக்காந்துட்டு

" மயங்கினேன்.,
சொல்ல தயங்கினேன்.,
உன்னை விரும்பினேன் உயிரே..!! "

இந்த பாட்டை ஜாலியா பாடிட்டு
இருந்தேன்..

அப்ப ரூமுக்குள்ள வந்த என் மனைவி..

" என்ன பாட்டெல்லாம் பலமா
இருக்கு..? "

" உன்னை நினைச்சேன்.. பாட்டு
தானா வருது....!! "

( எப்படி " ICE " வெச்சேன் கவனிச்சீங்களா..?!! )

இதை கேட்டு என் Wife என்னை
டெரரா ஒரு லுக் விட்டாங்க..

" ஏன்..? என்ன ஆச்சு..?
ஏன் அப்படி முறைக்கிற..? "

" என்னை நினைச்சா பாடுனீங்க..? "

" பிராமிஸா உன்னை நினைச்சி தான்..!! "

" மயங்கினேன்., தயங்கினேன்.,
விரும்பினேன்.. என்னா இது..?

எல்லாமே Past Tense..!! அப்ப
Present Tense-ல ஒண்ணும் இல்லையா..?!"

( ஆஹா.. நம்மள அடிக்கணும்னு முடிவு
பண்ணிட்டா எப்படி எல்லாம் குத்தம்
கண்டுபிடிக்கறாங்கடா சாமி..!!
அவ்வ்வ்வ்வ்வ்........!!!! )

டிஸ்கி : இந்த Post-க்கு ரஜினி சார் படம்
எதுக்குனு தானே பாக்குறீங்க..?

எல்லாம் ஒரு விளம்பரம் தான்.,
ரஜினி சாருக்கு..!!

ஹி., ஹி., ஹி..!!
( அடங்க மாட்டோம்ல... )
.
.

63 Comments:

அருண் பிரசாத் said...

சரி! ஆஸ்பிட்டல்ல இருந்து எப்போ டிஸ்சார்ஜ்...

உங்க கடமை உண்ர்ச்சிக்கு அளவே இல்லையா? பெட்ல அட்மிட் ஆகியும் பதிவு போடனுமா....

@ mrs. venkat,
வெங்கட் தலைல லைட்டா குட்டுங்க... மெதுவா மெதுவா... பாவம் ஏற்கனவே கண்ட இடத்துல அடிப்பட்டு இருக்கு.

Madhavan Srinivasagopalan said...

எதையுமே சுருக்கமாச் சொன்னாலும் சரியா நல்லா சொல்லுறீங்க.. well done

ஆனாலும் 'ICE ' னு சுருக்கி சொன்னது எதோட 'acoronym',?
( Internal Combustion Engine ? )

Madhavan Srinivasagopalan said...

// பீ கேர்புல்..!! //

ஆமாமாம்.. மழையடிச்சா கூட.. பிடிவாதமா AC நடுவுலே இருக்குது..
'B', ஜாக்குரதையா இரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/எப்படி " ICE " வெச்சேன் கவனிச்சீங்களா..?!!//

மனைவியை ICE வைக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப ICU ல போய் அட்மிட் ஆகிட்டீங்களே. உங்களுக்கு VKS சின் ஆழ்ந்த அனுதாபங்கள் .

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ .....ஹ ....நல்ல இருக்கு வெங்கட் .........சூப்பர் .....பதிவ சொன்னேன் மக்கா ...........

ராஜி said...

என்னங்க வெங்கட் இப்படியா பதிவ போடுவாங்க. இப்ப பாருங்க கல்யாணமாகாத சின்ன பசங்கலாம் கிண்டல் பண்றாங்க. பொண்டாட்டிகிட்ட அடிவாங்கதவங்க யாரு? அருண்லாம் இப்படியா வெளில சொல்றாங்க. இனி வெளில சொல்லாதீங்க. கமுக்கமா வச்சுக்கங்க.

எஸ்.கே said...

:-))))))
கொஞ்சம் சுருக்கமா ஆனா சம்பவமா நகைச்சுவை சொல்றீங்க!
ரொம்ப நல்லாயிருக்கு!

அன்பரசன் said...

ஹாஸ்பிட்டல் ரூம் நம்பர் சொல்லுங்க.
முடிஞ்சா ஒருஎட்டு வந்து பாத்துட்டு போறேன்.

அனு said...

என்னத்த சொல்ல.. ஏற்கனவே அடிபட்டு இருக்குற உங்களை இன்னும் காயபடுத்த விரும்பவில்லை..
என் அனுதாபங்கள்!!

Arun Prasath said...

ஹி ஹி... அடி வாங்கினத மறைசிடீங்க போல

NaSo said...

உண்மையச் சொல்லி நீங்க ஒரு ரஜினி ரசிகர்னு நிரூபிச்சிடீங்க வெங்கட்!!

ராஜி said...

நீங்க சொன்னதைப்போலவெ என் தளத்தை மாற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது பார்த்திவிட்டு, வேறு மாற்றமிருந்தால் சொல்லவும். நன்றி

செல்வா said...

@ அருண் :
அண்ணா கனவு கண்டது போதும் எந்திரிங்க .,
எப்பப் பாரு உங்க வீட்டுல நடக்குற விசயங்களையே மத்தவங்களுக்கும் கற்பனை பண்ணுறது..!!

செல்வா said...

///மனைவியை ICE வைக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப ICU ல போய் அட்மிட் ஆகிட்டீங்களே. உங்களுக்கு VKS சின் ஆழ்ந்த அனுதாபங்கள் .
///

அது அட்மிட் ஆகலைங்க ., ரஜினி சாருக்கு விளம்பரம் பண்ணிருக்காருள்ள , இதப் பார்த்துட்டு மத்த நடிகர்கள் எல்லோரும் எனக்கும் ஒரு விளம்பரம் பன்னு எனக்கும் ஒரு விளம்பரம் பன்னு அப்படின்னு தொந்தரவு தாங்க முடியல ., அதனாலதான் ICU போனார்..!! எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிகோங்க .. அது சரி VKS ல இருந்துட்டு எங்க சரியா புரிஞ்சிக்கறது .!!

Mohamed Faaique said...

//மனைவியை ICE வைக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப ICU ல போய் அட்மிட் ஆகிட்டீங்களே. உங்களுக்கு VKS சின் ஆழ்ந்த அனுதாபங்கள்///

இதையெல்லாம் பாத்துட்டு சிங்கம் இன்னுமா உறங்கிட்டு இருக்கு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ராஜி said... நீங்க சொன்னதைப்போலவெ என் தளத்தை மாற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது பார்த்திவிட்டு, வேறு மாற்றமிருந்தால் சொல்லவும். நன்றி//

என்ன வெங்கட் பிளாக் எழுதுறத விட்டுட்டு பிளாக் கன்சல்டன்ட்டா எப்ப மாறினீங்க. எவ்ளோ அமௌன்ட் தேறுச்சு. ராஜி ரொம்ப கஞ்சம். கொஞ்சம் கூட அமவுண்ட் தேறாதே?

வெங்கட் said...

@ அருண்.,

// சரி! ஆஸ்பிட்டல்ல இருந்து எப்போ டிஸ்சார்ஜ்.. //

ஆமா நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்க..?
வலைசரம்ல இருந்து

அங்கே உங்களை கட்டி வெச்சி
உதைச்சிட்டு இருக்கறதா News
வந்ததே..

எனக்கு வேற அங்கே
5 மணிக்கு மேல தான்
Appointment குடுத்து இருக்காங்க..
உங்களை அடிக்க

எதாவது பிளாக்ல( Black-ல ) டிக்கெட்
கிடைக்குமான்னு Try பண்றேன்..
இப்பவே வர..

மங்குனி அமைச்சர் said...

ஹே,ஹே,ஹே,................ ஓய பிளட் செம் பிளட் ,...... எங்க வீட்டுலையும் குற்றம் கண்டுபிடிச்சு அடிக்கிரானுகப்பா

வெங்கட் said...

@ மாதவன்.,

// ஆனாலும் 'ICE ' னு சுருக்கி சொன்னது
எதோட 'acoronym',? //

ஆஹா.. இவரு எதோ சதி பண்ற
மாதிரி தெரியுதே..

" எந்திரன் " பட Still போட்டதால
" ICE " சொன்னதை " ஐஸ் " ன்னு
தப்பா புரிஞ்சிக்கிட்டாரோ..?!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// மனைவியை ICE வைக்கிறேன்னு
சொல்லிட்டு இப்ப ICU ல போய்
அட்மிட் ஆகிட்டீங்களே. //

ஒண்ணும் தெரியாத மாதிரி
கேக்கறீங்க..

வலைசரம்ல டின் வாங்கின
நம்ம அருண் ICU-ல தானே
அட்மிட் ஆகி இருக்காரு..

அவரை பாக்க தான் ஒரு
நடை போயிட்டு வந்தேன்..!

ஆமா அவருக்காக வாங்கி வெச்சிருந்த
2 டஜன் ஆப்பிள்., 1 டஜன் சாத்துக்குடி
2 ஹார்லிக்ஸ் பாட்டில் எல்லாத்தையும்
நீங்க தூக்கிட்டு ஓடி வந்திட்டீங்களாமே..!!

என்ன போலீஸ் இது..?!!
ரொம்ப பீல் பண்ணினார்..

வெங்கட் said...

@ ராஜி.,

// என்னங்க வெங்கட் இப்படியா
பதிவ போடுவாங்க. இப்ப பாருங்க
கல்யாணமாகாத சின்ன பசங்கலாம்
கிண்டல் பண்றாங்க. //

கல்யாணம் ஆகாத சின்ன பசங்களா..?
யாரு..? ரமேஷா..? ஹி., ஹி., ஹி..!!

கல்யாணம் ஆகாதவங்க எல்லாம்
சின்ன பசங்கன்னா... அப்ப நம்ம வாஜ்பாய்.,
அப்துல் கலாம் எல்லாம் சின்ன பசங்களா..?

// அருண்லாம் இப்படியா வெளில சொல்றாங்க. //

அவர் எதுக்கு சொல்லணும்..?
அது அவரை பாத்தாலே தெரியும்..

வெங்கட் said...

@ அன்பரசன்.,

// ஹாஸ்பிட்டல் ரூம் நம்பர் சொல்லுங்க.
முடிஞ்சா ஒரு எட்டு வந்து பாத்துட்டு போறேன். //

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்..
Dean's ரூம்.

வெங்கட் said...

@ அனு.,

// ஏற்கனவே அடிபட்டு இருக்குற உங்களை
இன்னும் காயபடுத்த விரும்பவில்லை.. //

இவ்ளோ நல்லவங்களா நீங்க..?

அப்ப ஏன் உங்க வீட்ல அடிக்கடி
பூரிக்கட்டை உடையுது..?!!

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலிலேயே பீதியை கிளப்பி விசிட்டர்ஸை வர வைப்பது எப்படி?

மேட்டர் ஏதும் இல்லாமலேயே செம மேட்டர் போட்டது போல் பதிவு போடுவது எப்படி?

நோகாம நோம்பி கும்பிடுவது எப்படி?

அனைத்துக்கும் அனுகவும் வெங்கட் பிளாக்

வெங்கட் said...

@ நாகராஜசோழன்.,

// உண்மையச் சொல்லி நீங்க ஒரு
ரஜினி ரசிகர்னு நிரூபிச்சிடீங்க வெங்கட்!! //

அது எங்களுக்குள்ள ஒரு Understanding..!!

அவர் படத்துக்கு நான் ரசிகன்
என் Blog-க்கு அவர்..
Wait.. Wait..!! ஏன் எல்லோரும்
முறைக்கிறீங்க..?!!

இதுக்கு தான் நான் எல்லா உண்மையையும் சொல்றதேயில்ல..

சி.பி.செந்தில்குமார் said...

2 பதிவுகளுக்கிடையே போதிய இடைவெளி விடவும்

பெசொவி said...

// வெங்கட் said...
@ அனு.,
அப்ப ஏன் உங்க வீட்ல அடிக்கடி
பூரிக்கட்டை உடையுது..?!!
//

ஒரு வேளை உங்க வீட்டில இருக்கிற மாதிரி எவர்சில்வர் பூரிக்கட்டை இல்லையோ என்னவோ (அதுவும் நசுங்கின எவர்சில்வர் பூரிக்கட்டை). இதுக்காகவே ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து வாங்கினீங்கலாமே?

பெசொவி said...

//அருண் பிரசாத் said...
சரி! ஆஸ்பிட்டல்ல இருந்து எப்போ டிஸ்சார்ஜ்...
//

என்ன இப்படி கேட்டுட்டீங்க, அருண்? ஆஸ்பத்திரி போனா செலவு ஆகுதுன்னு ஒரு பெயின் பாம் மட்டும் வங்கிக் கொடுத்துட்டாங்களாம்,Mrs.
Venkat!

Chitra said...

எல்லாம் ஒரு விளம்பரம் தான்.,
ரஜினி சாருக்கு..!!


.....நினைப்ஸ் தான் உங்களுக்கு!

பாஸ்கர் said...

பாஸ், நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அனு அக்காவும், குந்தவை அக்காவும் ஒரே நபரா?

வெங்கட் said...

@ ராஜி.,

// நீங்க சொன்னதைப்போலவெ என் தளத்தை
மாற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது
பார்த்திவிட்டு, வேறு மாற்றமிருந்தால் சொல்லவும். //

பாத்துட்டேன்.. ரொம்ப முக்கியமா
ஒண்ணு மாத்தணும்..

" எனது வலைப்பதிவு பட்டியல் "
இதுல நம்ம Blog இல்ல..

ஹி., ஹி., ஹி..!!

நான் சொன்னதுலயே இன்னும்
ஒண்ணு Pending இருக்கே..

// 2. வலைபதிவு காப்பகம் தேதி
படி லிஸ்ட் பண்ணுது.. அதை
Month Wise-ன்னு Change பண்ணனும்..!! //

நான் என்ன சொல்ல வர்றேன்னு
புரியுதா..? உங்க Blog-ல Nov க்ளிக்
பண்ணினா.. லிஸ்டிங் தேதி வாரியா
வருது.. பதிவுகள் பெயர் தெரியல..

அதை மாத்தணும்.. அப்ப தான் ஒரு
குறிப்பிட்ட பதிவை பாக்கணும்னா
உடனே போக முடியும்..

இதை சரி பண்ண முடியலைன்னா..
அனேகமா உங்க Template Problem-ஆ
இருக்கலாம்.. Template Change பண்ணி
Try பண்ணி பாருங்க..

ஆல் த பெஸ்ட்..

வெங்கட் said...

@ Mohamed.,

// இதையெல்லாம் பாத்துட்டு சிங்கம்
இன்னுமா உறங்கிட்டு இருக்கு.... //

சிங்கம் கண்ணை மூடி இந்த
சுண்டெலிங்க விளையாடறதை
ரசிச்சிட்டு இருக்கு..

இப்பவே கச்சேரியை ஆரம்பிச்சா..
ஆளுக்கொரு பக்கம் பிச்சிகிட்டு
ஓடிடும்.. கொஞ்சம் உள்ளே வரட்டும்..
அப்ப தான் Interesting-ஆ இருக்கும்..!!

ரசிகன் said...

@venkat
//மயங்கினேன்.,
சொல்ல தயங்கினேன்.,
பாடிட்டு இருந்தேன்..//

ஜெயசந்திரன் சார்(இந்த பாட்டை பாடியவர்) மேல அப்படி என்ன கோபம்..
எதுவா இருந்தாலும் இந்த தண்டனை ஜாஸ்தி...

ரசிகன் said...

@venkat
//டிஸ்கி : இந்த Post-க்கு ரஜினி சார் படம்
எதுக்குனு தானே பாக்குறீங்க..?//

இல்ல.. இந்த Postஏ எதுக்குன்னு பாக்குறோம்..

அனு said...

@பாஸ்கர்

//பாஸ், நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அனு அக்காவும், குந்தவை அக்காவும் ஒரே நபரா//

கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.. போன ஜென்மத்துல நான் தான் ராஜராஜ சோழனோட அக்காவா இருந்தேன்.. உங்களுக்கு எப்படி தெரியும்? என்னை இவ்வளவு பாசமா அக்கான்னு சொல்றீங்களே.. ஒரு வேளை, நீங்க தான் ராஜராஜ சோழனோ??

டிஸ்கி: நீங்க வேற குந்தவை பத்தி கேட்டீங்கன்னா (நரசிம்மவர்ம பல்லவர் பொண்ணு, ராஜராஜனுடைய பொண்ணு etc etc).. ஸாரி, நான் அவங்க இல்லீங்கோ..

ரசிகன் said...

@anu

அனு..

//போன ஜென்மத்துல நான் தான் ராஜராஜ சோழனோட அக்காவா இருந்தேன்.. //

உங்களுக்கு வந்தியத்தேவரை பிடிக்கும்னு தெரியும்..
ஆனா குந்தவையே நாந்தான்னு சொல்ற அளவுக்கு பிடிக்கும்னு தெரியாது...
ம்ம்ம்.. ஏதோ குந்தவை செய்த புண்ணியம்..
பின் ஜென்மத்துல அனுவா பிறந்திருக்காங்க..

சௌந்தர் said...

நீங்க இருக்கிற ஹாஸ்பிடல் வார்டு நம்பர் என்ன சொல்லுங்க உங்களை வந்து பார்க்கணும்

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என்ன வெங்கட் பிளாக் எழுதுறத விட்டுட்டு
பிளாக் கன்சல்டன்ட்டா எப்ப மாறினீங்க. //

கரெக்டா சொல்லணும்னா..
April 16-ல இருந்து..

அப்படியே கீழே இருக்கிற மெயில்
ஞாபகம் வருதான்னு பாருங்க..

// ஹாய் Venkat நான் ரமேஷ் ரொம்ப நல்லவன். நான் என்னோட ப்ளாக் கை தூசிதட்டி எழுத ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். எனக்கு அது தமிலிஷ் ஒட்டு போடும் பகுதியை ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே எப்படி இணைப்பது என்று சொல்லுங்கள் ப்ளீஸ். அப்புறம் followers pakuthiyai eppadi inaippathu endrum sollungal.

உங்களுடைய நேரத்தில் சிறிது எனக்கு ஒதுக்கி எனது ப்ளாக் கில் ஏதாவது மாற்றவேண்டுமா என சொல்லுங்கள்.உங்கள் உதவிக்காக waiting

My id : www.sirippupolice.blogspot.com
Regards
Ramesh Subburaj //

அதுக்கு என் பதில்..

// i will guide you. don't worry. now i'm little busy. but surely i will help you //

-------------------------

// ராஜி ரொம்ப கஞ்சம். கொஞ்சம் கூட அமவுண்ட் தேறாதே? //

இதை நீங்க சொல்றீங்க..?!!
என்ன கொடுமை இது..!?!

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்..,

// 2 பதிவுகளுக்கிடையே போதிய
இடைவெளி விடவும் //

எவ்ளோ உங்கள மாதிரி 18 மணி
நேரமா.?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஒரு வேளை உங்க வீட்டில இருக்கிற
மாதிரி எவர்சில்வர் பூரிக்கட்டை
இல்லையோ என்னவோ //

ஒண்ணுமே நடக்காத மாதிரி இங்கே
வந்து சவுண்ட் விடறீங்களே..?!!
கில்லாடி சார் நீங்க...!!

அங்கே கொஞ்சம் பாருங்க...
உங்க Wife உலக்கை உடைஞ்சி
போச்சேன்னு சத்தம் போட்டுட்டு
இருக்காங்க..

வெங்கட் said...

@ அனு.,

// போன ஜென்மத்துல நான் தான்
ராஜராஜ சோழனோட அக்காவா இருந்தேன்.. //

ஒண்ணும் பயப்பட வேணாம்..
ஒரு 6 மாசம் Treatment எடுத்தா
சரியா போயிடும்..!!

இப்படிதான் எங்க ஊர்ல ஒருத்தர்
நான் தான் போன ஜென்மத்துல
ராஜராஜ சோழன்னு சொல்லிட்டு
இருந்தார்.. அவரே இப்ப
குணமாயிட்டார்னா பாருங்களேன்..!!

வெங்கட் said...

@ ரசிகன்..,

// உங்களுக்கு வந்தியத்தேவரை பிடிக்கும்னு
தெரியும்.. ஆனா குந்தவையே நாந்தான்னு
சொல்ற அளவுக்கு பிடிக்கும்னு தெரியாது... //

ரசிகன் எவ்ளோ நாசூக்கா சொல்லி
இருக்கீங்க..?!!

ஹி., ஹி., ஹி.,

ஆனா குந்தவையே நாந்தான்னு சொல்ற
அளவுக்கு _____________ பிடிக்கும்னு
தெரியாது...

இதானே நீங்க சொல்ல வந்தது..?!!!

Anonymous said...

venkat :)

" அப்படியே கீழே இருக்கிற மெயில்
ஞாபகம் வருதான்னு பாருங்க.. "

sema comedy reply to ramesh !!!
selective amnesia la vittutaar pola ;)

ungala deal panna konjam carefula irukkanum pola

கருடன் said...

@சி.பி.செந்தில்குமார்

//டைட்டிலிலேயே பீதியை கிளப்பி விசிட்டர்ஸை வர வைப்பது எப்படி?

மேட்டர் ஏதும் இல்லாமலேயே செம மேட்டர் போட்டது போல் பதிவு போடுவது எப்படி?

நோகாம நோம்பி கும்பிடுவது எப்படி?

அனைத்துக்கும் அனுகவும் வெங்கட் பிளாக்//

தன் கடையில் ஆள் இல்லாத காரணத்தால் கூட்டம் அதிகம் வரும் வெங்கட் ப்ளாக் வந்து செந்தில் அவர்கள் மேலே உள்ள ஐடியாக்களை ரமேஷ் ப்ளாக் உதரணமாக வைத்து மக்களுக்கு விளக்குகிறார். வேகம் முந்தவும்...

கருடன் said...

@ரசிகன்

//இல்ல.. இந்த Postஏ எதுக்குன்னு பாக்குறோம்..//

சரி போஸ்ட்ட முறைச்சி முறைச்சி பாத்தது போதும். இப்பொ போய் எழுத படிக்க தெரிஞ்ச யாரையாவது கூட்டி வந்து படிக்க சொல்லி இந்த போஸ்ட்டு எதுக்கு தெரிஞ்சிகோங்க.. :)

கருடன் said...

@அனு

// போன ஜென்மத்துல நான் தான் ராஜராஜ சோழனோட அக்காவா இருந்தேன்.. உங்களுக்கு எப்படி தெரியும்? என்னை இவ்வளவு பாசமா அக்கான்னு சொல்றீங்களே..//

அக்கா இல்லிங்க. அம்மா. வளர்ப்பு தாய்... பேரு மந்தாகினி தேவியார்.. :)))

Shalini(Me The First) said...

@anu
ஆஹா நீங்க தான் இந்த குந்தவையா?!
:)

@அனைவருக்கும் https://groups.google.com/group/panbudan/msg/ed6789013fa8eceb?hl=en&
இந்த லிங்க் பாருங்க புரியும்
:)

வெங்கட் said...

@ டெரர்.,

// அனு Said.,

போன ஜென்மத்துல நான் தான்
ராஜராஜ சோழனோட அக்காவா இருந்தேன்.. //

// அக்கா இல்லிங்க. அம்மா. வளர்ப்பு தாய்...
பேரு மந்தாகினி தேவியார்.. :))) //

( ராஜராஜசோழன் தனியாக புலம்பல்.. )

" டோட்டல் பேமிலி டேமேஜ்..!! "

அனு said...

@ரசிகன்

//உங்களுக்கு வந்தியத்தேவரை பிடிக்கும்னு தெரியும்.. //

உங்க நியாபக சக்திக்கு ஒரு சல்யூட்-ங்க.. நான் பொட்ட கமெண்ட்ட நானே மறந்துட்டேன்.. நீங்க ஞாபகம் வச்சிருக்கீங்க..

//ஏதோ குந்தவை செய்த புண்ணியம்.. பின் ஜென்மத்துல அனுவா பிறந்திருக்காங்க..//

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை :)

அனு said...

//இப்படிதான் எங்க ஊர்ல ஒருத்தர்
நான் தான் போன ஜென்மத்துல
ராஜராஜ சோழன்னு சொல்லிட்டு
இருந்தார்.. //

இப்படிதான் எங்க ராஜவம்சத்து பேரை கலங்கப்படுத்த நிறைய பேரு கிளம்பியிருக்காங்க.. என்ன பண்ணுறது? பிரபலமா இருந்தா இதெல்லாம் சகஜம் தான்.

//அவரே இப்ப
குணமாயிட்டார்னா பாருங்களேன்..//

btw, நீங்க குணமான விசயத்தை சொல்லவே இல்லயே..

அனு said...

//
@டெரர்
அக்கா இல்லிங்க. அம்மா. வளர்ப்பு தாய்... பேரு மந்தாகினி தேவியார்.. :))//

ஓ.. நீங்க தான் மந்தாகினி தேவியாரா? பாத்தா ஆள் அடையாளமே தெரியல...

அருள் (ராஜராஜனை நான் செல்லமா அப்படி தான் கூப்பிடுறது) அக்கான்னு சொன்னது உங்களையில்ல, என்னை தான்.. கவலைப் படாதீங்க...

அனு said...

@Shalini

//ஆஹா நீங்க தான் இந்த குந்தவையா?!//

அந்த கதையோட + என்னோட கருத்து:
போலிகளை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்!! :) :)

கருடன் said...

@வெங்கட்

//ஓ.. நீங்க தான் மந்தாகினி தேவியாரா? பாத்தா ஆள் அடையாளமே தெரியல... //

தல என் கமெண்ட் வாப்பஸ்... இவங்களுக்கு உங்க கமெண்ட் தான் கரைக்ட்.

//அருள் (ராஜராஜனை நான் செல்லமா அப்படி தான் கூப்பிடுறது)//

இந்த விஷயம் கல்கிக்கு தெரியுமா?

(தல சத்தியமா எனக்கு அவங்க கமெண்ட் புரியலை. ஒரு குத்து மதிப்பா டைப் பண்ணி இருப்பாங்களோ... அவ்வ்வ்வ்)

வெங்கட் said...

@ அனு.,

// உங்க நியாபக சக்திக்கு ஒரு சல்யூட்-ங்க..
நான் பொட்ட கமெண்ட்ட நானே மறந்துட்டேன்..
நீங்க ஞாபகம் வச்சிருக்கீங்க.. //

எல்லோரும் நல்லா கவனிகப்பா..
இவங்களுக்கு 20 நாளைக்கு முன்னாடி
இவங்க போட்ட கமெண்ட் மறந்து போச்சாம்..
ஆனா பூர்வ ஜென்ம ஞாபகம் இருக்காம்..

உளர்றதுக்கு ஒரு லிமிட் இல்லையா..?

வெங்கட் said...

@ டெரர்.,

// தல சத்தியமா எனக்கு அவங்க கமெண்ட்
புரியலை. ஒரு குத்து மதிப்பா டைப் பண்ணி
இருப்பாங்களோ... அவ்வ்வ்வ் //

எனக்கும் தான்..
நானும் அரை மணி நேரமா
இவிங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு
புரியாம முழிச்சிட்டு இருந்தேன்..!!

அனு said...

@டெரர்

1. நீங்க என்னோட பேரை போட்டு ராஜராஜனுடைய அம்மா-ன்னு mention பண்ணல.. ஸோ, நீங்க தான் அதுன்னு திருப்பி விட்டேன்..

2. ராஜராஜ சோழரோட இயற்பெயர் அருள்மொழி

@டெரர் & வெங்கட்

ஸ்ஸ்.. சீரியஸா என்னால முடியல.. கொஞ்ச நாள் முன்னாடி தான் தமிழ்ல எழுத/படிக்க சொல்லி கொடுத்தேன்.. இப்போ, தமிழ் ஹிஸ்டரியும் சொல்லி தரணும் போல இருக்கே...

Shalini(Me The First) said...

@venkat
//
உளர்றதுக்கு ஒரு லிமிட் இல்லையா..?//

அவங்க உளர்றதுக்கு அன்லிமிட்டட் போட்ருக்காங்களாம்

அனு said...

@வெங்கட்

//இவங்களுக்கு 20 நாளைக்கு முன்னாடி
இவங்க போட்ட கமெண்ட் மறந்து போச்சாம்.. ஆனா பூர்வ ஜென்ம ஞாபகம் இருக்காம்..//

உங்களுக்கு LKGல படிச்ச A,B,C,D ஞாபகம் இருக்கும்.. ஆனா, 20 நாளுக்கு முன்னாடி சாப்பிட்ட சாப்பாடு ஞாபகம் இருக்கா??

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அவங்க உளர்றதுக்கு அன்லிமிட்டட்
போட்ருக்காங்களாம் //

ஹா., ஹா., ஹா..!!

அதை மறுபடியும் அடுத்த கமெண்ட்ல
Prove பண்ணி இருக்காங்க பாருங்க..

அனு Rockzzzz..........!!

கருடன் said...

@அனு

//1. நீங்க என்னோட பேரை போட்டு ராஜராஜனுடைய அம்மா-ன்னு mention பண்ணல.. ஸோ, நீங்க தான் அதுன்னு திருப்பி விட்டேன்..//

யாரு பெத்தபுள்ளையோ தெரியலை இப்படி பொலம்புதே.. அம்மனி மேல பருங்களேன்.. வானத்துல இல்லைமா.. கமெண்டுக்கு மேல.. அய்யோ அதுக்குனு பதிவ பாக்காதிங்கமா.. இப்பொ இந்த கமெண்ட் இருக்கு இல்லியா? அது ஆரம்பிக்கிர இடத்துல @அனு அப்படினு இருக்கா... ஹும் அப்படி இருந்தா உங்களை சொல்ரேன் அர்த்தம்.. கமெண்ட்ல எல்லாம் பெயர் போடல சொல்லி அழ கூடாது. ஒ.கேவா?

//2. ராஜராஜ சோழரோட இயற்பெயர் அருள்மொழி//

என்னா ஒரு கண்டுபிடிப்புடா சாமி.. :)) . அவர் இயர்பெயர் அருள்மொழி சரி. ஆன நாவல்ல எங்கையும் குந்தவை அவரை அருள் அப்படினு கூப்பிட்ட ஞாபகம் இல்லை. அதான் கல்கிக்கு தெரியுமா கேட்டேன்.


//ஸ்ஸ்.. சீரியஸா என்னால முடியல.. //

நானும் அதான் சொல்ரேன். ஏன் சொந்தமா கமெண்ட் போட்டு இப்படி மாட்டிக்கிறிங்க. போய் ஆத்துகார் கிட்ட கன்சல்ட் பண்ணி போடுங்க.

//கொஞ்ச நாள் முன்னாடி தான் தமிழ்ல எழுத/படிக்க சொல்லி கொடுத்தேன்.. இப்போ, தமிழ் ஹிஸ்டரியும் சொல்லி தரணும் போல இருக்கே...//

கமெண்ட் படிக்கவே உங்களுக்கு சொல்லி தர வேண்டி இருக்கு நீங்க எனக்கு தமிழா.. சுத்தாம்.. உங்களை போய் நான் புத்திசாலி நம்ம்ம்ம்ம்ம்பி ஏமாந்து போய்ட்டேன்... :)))

கருடன் said...

@அனு

//உங்களுக்கு LKGல படிச்ச A,B,C,D ஞாபகம் இருக்கும்.. ஆனா, 20 நாளுக்கு முன்னாடி சாப்பிட்ட சாப்பாடு ஞாபகம் இருக்கா??//

LKGல ஒரு வருஷம் பூரா A,B,C,D சொல்லி கொடுத்தாங்க அது ஞாபகம் இருக்கு. ஆனா சாப்பாடு ஒரு வேளைக்கு ஒன்னு சாப்பிடறோம் மறந்து போகுது. நீங்க வேணும்னா உங்க வீட்டுகாருக்கு அடுத்த வருஷம் புல்லா 3 வேளையும் சாம்பார் சாதம் போடுங்க. அப்புறம் 50 வருஷம் கழிச்சி 2011ல் என்ன சாப்பிட்டிங்க கேட்டாலும் “சாம்பார்” அப்படினு சொல்லுவார்.... :)))

ரசிகன் said...

@டெரர்..
//LKGல ஒரு வருஷம் பூரா A,B,C,D சொல்லி கொடுத்தாங்க அது ஞாபகம் இருக்கு. ஆனா சாப்பாடு ஒரு வேளைக்கு ஒன்னு சாப்பிடறோம் மறந்து போகுது. நீங்க வேணும்னா உங்க வீட்டுகாருக்கு அடுத்த வருஷம் புல்லா 3 வேளையும் சாம்பார் சாதம் போடுங்க. அப்புறம் 50 வருஷம் கழிச்சி 2011ல் என்ன சாப்பிட்டிங்க கேட்டாலும் “சாம்பார்” அப்படினு சொல்லுவார்.... :)))//

ம்ம்ம்.. உங்க தலைவருக்கு புரியர மாதிரி நல்லா அழுத்தி சொல்லுங்க டெரர்..
போன ஜென்மம் முழுதும் அருள் மொழி வர்மருக்கு அக்காவா இருந்ததால அனுவுக்கு அது நியாபகம் இருக்கு...
ஒவ்வொரு போஸ்ட்க்கும் ஒவ்வொரு கமெண்ட் போடறதால அது மறந்துடுச்சி..
இதை போய் உளரல்னு சொல்றதா...??? விடாதீங்க .. கேளுங்க..

பாஸ்கர் said...

ஆஹா, நான் கேட்ட கேள்வி திசை மாறி எங்கோ சென்றுகொண்டுள்ளதே . சில ப்ளாக்களில் குந்தவை என ஒருவர் கமெண்ட் எழுதுவார். அவருடைய
எழுத்து நடையும், கிண்டல் தொனியும் அனு அக்காவின் எழுத்து நடையும், கிண்டல் தொனியும் ஒன்றாக தெரிந்ததால், நான் அந்த கேள்வி கேட்டேன்.

இப்படிக்கு

அருள்