சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 October 2010

இது தான் Surprise..!!?




















ஒரு நாள் காலையில Husband
அவசரமா Office கிளம்பிட்டு
இருக்கும் போது Wife கேக்குறா..

" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு
ஞாபகம் இருக்கா..?!! "

( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்...
" இது June மாசம்..!! ஓ.. என் Anniversary..!!
எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." )

" என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!!
Evening 5 மணிக்கு ரெடியா இரு..,
வெளியே Dinner-க்கு போலாம்.. "

Husband Office கிளம்பி போயாச்சு..

11.AM : Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில
ஒரு Bouquet வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband
உங்களுக்காக அனுப்பினார்.. !! "

அவளுக்கு அதை பார்த்ததும்
சந்தோஷம்..

1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில
ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband
உங்களுக்காக அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா..,
எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..
இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..

3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..

அங்கே ஒரு ஆள் கையில
ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்..

" மேடம்.. இதை உங்க Husband
உங்களுக்காக அனுப்பினார்.. !! "

அதை Open பண்ணினா
ஒரு அழகான Diamond Necklace..

இப்ப அவ இன்னும் ரொம்ப
சந்தோஷமாயிடுறா..

Husband எப்ப வருவார்னு ரொம்ப
ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா..

5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது..

அப்படியே ஓடி போயி அவரை
கட்டி பிடிச்சிக்கிறா..

" என்ன டார்லிங்.. நான் அனுப்பின
Gifts எல்லாம் பிடிச்சிருக்கா..? "

" ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "

" காலையில என்னமோ.. நான்
மறந்துட்டேன்னு சொன்னியே..
எப்படி நம்ம Surprise..?!! "

" சூப்பர்ங்க.., World Environment Day-கே
இப்படி கலக்கிட்டீங்களே.. அப்ப
அடுத்த வாரம் நம்ம Anniversary-க்கு
எப்படியெல்லாம் அசத்த போறீங்களோ..!!! "

" ??!!!!! "

டிஸ்கி : அப்பாடா போன பதிவுக்கு
இப்ப கணக்கு நேர்...!!
.
.

19 Comments:

மதுரை சரவணன் said...

super...pavam husband..!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

செம surprise உங்க சொந்த அனுபவமா!
என்னையும் VAS ல சேர்த்துகோங்க.

என்னது நானு யாரா? said...

இது...இது... இதுத்தான் வெங்கட் டச்ச்ன்னு சொல்றது.

உண்மையிலேயே நல்லா இருந்ததுப்பா ஜோக்.

உங்க வீட்டில உங்களுக்கு நடந்த உண்மை சம்பவமா இது? விளக்கம் சொல்லுங்க! அப்பத்தானே VKS ஆளுங்களுக்கு கலாய்க்க ஒரு மேட்டரு கிடைக்கும்.

VKS கட்சிக்காரர்களே! எனக்கு ரொம்ப பாராட்டு எல்லாம் வேணாம் சும்மா Madras-ல இருக்கிற Indoor Statium-மில ஒரு சிம்பிளா ஒரு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தா போதும்.. பகட்டெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது ஆமா...சொல்லிப்புட்டேன்.

Prabu said...

இது போன பதிவில்:
/@ பிரபு.,

// இந்த பதிவே உங்க ஹவுஸ் மினிஸ்டர
ஐஸ் வைக்கத்தான் போல தெரியுதே!!! //

கில்லாடிங்க நீங்க..!!

அவ்ளோ நுணுக்கமா படிச்சி இருக்கீங்க..
Very Good..!! /

இது இப்போ:
/டிஸ்கி : அப்பாடா போன பதிவுக்கு
இப்ப கணக்கு நேர் ஆயிடுச்சி..!!/

எப்படி நேராச்சினு புரியலை சார்..
கொஞ்சம் விளக்குங்களேன்..

அருண் பிரசாத் said...

//அடுத்த வாரம் நம்ம Anniversary-க்கு
எப்படியெல்லாம் அசத்த போறீங்களோ..!!! "//

அப்ப Anniversaryக்கு எப்படி அசத்துனீங்க வெங்கட்.

@ Mrs. வெங்கட்
ஏதாவது, பொய் சொல்றாறானு பார்த்துக்கோங்க.

(அப்பாடி, ஏதோ நம்மால முடிஞ்சது. நாராயணா நாராயணா)

அருண் பிரசாத் said...

@ என்னது நானு யாரா?
//உங்க வீட்டில உங்களுக்கு நடந்த உண்மை சம்பவமா இது? விளக்கம் சொல்லுங்க! அப்பத்தானே VKS ஆளுங்களுக்கு கலாய்க்க ஒரு மேட்டரு கிடைக்கும்.//
அட என்னா ஒரு கண்டுபிடிப்பு! உங்களுக்கு பாராட்டு விழா என்ன? மெரினால கண்ணகி சிலைக்கு பக்கத்துல ஒரு சிலையே வெச்சிடறேன்.

Madhavan Srinivasagopalan said...

எலேய்.. நாட்டுல எந்த ஊட்டுல மனைவிமாருங்க, தன்னோட புருஷனுக்கு 'உலக சுற்றுப்புற சூழல்' தினத்த ஞாபகப் படுத்துறாங்க..
நல்லா சுத்துறியே பூவ..

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

ரொம்ப அருமை

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க! ஆனா இந்த world environment dayதான் இடிக்குது!

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு வெங்கட் .............
அதன பார்த்தேன் எங்க நினைவு வைச்சு வந்கிகொடுதுடீன்களோன்னு (அந்த கச்டதே நினைவு வேற வைக்கனுமாக்கும் )

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா.ஹா.......

செல்வா said...

//(அப்பாடி, ஏதோ நம்மால முடிஞ்சது. நாராயணா நாராயணா)//
கலாய்ச்சிட்டாராம்ல.. ஐயோ சாமி , அவரு சொன்னது உங்களை ..!!
நீங்க போன்ல பேசிட்டிருக்கும் போது இப்படி நடந்து போச்சு அப்படின்னு சொன்னீங்கள்ள அதுதான்.. அதுக்குள்ளவா மறக்குறது ..!!?! இப்படி மறந்து மறந்துதான் உங்க கல்யாண நாளே மறந்து போய் environmental டேல பரிசு அனுப்பிருக்கீங்க ..!!

lekha said...

:-) nice nice

ரசிகன் said...

ம்ம்ம்.. மின்னலே மாதவன் rangeக்கு பின்றதா நினைச்சிக்கிட்டு செம சொதப்பு சொதப்பி இருக்காரே யாருங்க அவரு..? நம்ம ஜனாவா?? (அருண் மாதிரி, இது உங்க சுய சரிதையின் ஒரு பக்கம்னு நான் தப்பா நினைச்சிக்க மாட்டேன்.. wife கேட்டுட்டாங்களேன்னு, வாங்கி கொடுத்த பொட்டுக்கும் புடவைக்குமே பதிவு போட்டு புலம்பற ஆளு நீங்க.. நீங்களாவது வைர நெக்ளஸ் Surprise Giftஆ தர்றதாவது... )

மாதேவி said...

:)))

நல்லா மாட்டிக்கிட்டீங்களா. அய்யோ...பாவம்.

Vimalraj R said...

Super...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@வெங்கட்

போனவாரம் போன் பண்ணி ஒரே விசயத்துக்கு ரெண்டு தடவ செலவு பண்ணினேன்னு சொன்னீங்களே . அது இதுதானா? World Environment Day-க்கு gift கொடுத்த ஒரே இந்தியன் நீங்கதான். அதனால தைரியமா நீங்க "Me the first" அப்டின்னுசொல்லிக்கலாம்.

அனு said...

எப்படியோ உங்க மனைவி உங்க கிட்ட இருந்து ரெண்டு தடவை பரிசு வாங்கிட்டாங்கன்னு சொல்லுங்க!!

by the way, உங்க anniversary மார்ச் மாசம் தானே..அப்போ இது???
(வெங்கட் மனைவி கவனிக்கவும்!! கபர்தார்!!!)

(ஏதோ நம்மால ஆனது.. நாராயண..நாராயண..)

கருடன் said...

@VKS

எக்ஸ்கியூஸ் மீ!! இங்க VKS VKS அப்படினு ஒரு சங்கம் இருந்தது அதை காக்கா தூக்கி போய்டுத்தா??

@வெங்கட்

தல VKS தூக்கிட்டு KKS போடுங்க (கடமைக்கு கலாய்ப்போர் சங்கம்)...