சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 June 2011

புரிதல்..!
டிஸ்கி : Young World-ல வந்த சிறுகதை
அதை அழகா Translate பண்ணி
இங்கே எழுதியிருக்கறவங்க எங்க
VAS Member ஷாலினி..

-----------------------------------------------------------------

இந்த டைரி குறிப்ப படிங்க..
இது உங்கள புரிதலோட
புது உலகத்துக்கு கூடிட்டு போகலாம்

ஏப்ரல் 13 :
ப்ஸ்., இன்னிக்கு Bad Lucky Day..!
இந்த Science மிஸ் என்னை
இந்த சோம்பேரி சதீஷ்க்கு
Help பண்ண சொல்லீட்டாங்க..

அவன எனக்கு பிடிக்கவே பிடிக்காது.,
எனக்குன்னு இல்ல யாருக்குமே பிடிக்காது..,
அவன் சரியான மக்கு.., யாரையும் நேரா
பாத்து பேசவே மாட்டான்..

ஏன் தான் அவன் என் ஸ்கூல்ல இருக்கானோ.?

ஏப்ரல்14 :
இன்னிக்கு படில இறங்கிட்டு இருந்தோம்
எனக்கு முன்னாடி சதீஷ் தடுமாறி
விழுந்துட்டான்.

ஒரு ஷூ லேஸ் கட்ட இவனுக்கு எவ்ளோ
நேரம் ஆகும்..?! சே..! அவனுக்கு காலம் பூரா
வேணும் போல..

நானே என்னோட Birthday-க்கு என் Friends-ஐ
கூப்பிட்ற அவசரத்துல இருக்கேன்.. இதுல
இவன் வேற... ஹஹ்..

ஏப்ரல் 15 :
இந்த சதீஷ்க்கு ஏன் இவ்ளோ கொழுப்பு.?
இந்த முரடன் கிஷோர் இருக்கான்ல.,
அவனை பார்த்து.. உன்னை எனக்கு
பிடிக்கலங்குறான்.. மிஸ் மட்டும் அப்ப
Class-க்குள்ள வரலைனா இந்த லூஸ்
சட்னி ஆயிருக்கும்.

ஏப்ரல் 16 :
அம்மா Birthday-க்கு சதீஷையும் கூப்பிட
சொல்றாங்க.. நான் மாட்டேன்ப்பா..
யார்னாலா அந்த லூஸ்கிட்டயெல்லாம்
Friendship வச்சுக்க முடியும்..?

என் தம்பி அர்விந்த் கூட So Cute.!
செம சுறுசுறுப்பு., அவனுக்கு இப்ப 3 வயசு.

போன வாரம் என்னை அக்கான்னு
கூப்பிட்டான். அதுலருந்து அவனோட
காரை தரைலயும்., சுவத்துலயும் ஓட்டிகிட்டே
கா கா கான்னு கூப்டுடே இருந்தான் :)

ஏப்ரல் 17 :
அம்மாட்ட கேட்டேன் “ஏன்மா அர்விந்த்
நுனிகால்லயே நடக்குறான்.. நல்லவே
நடக்காம.? ”

அம்மா சொல்றாங்க அவன்
“ஆட்டிஸ பேபியாம்” ( Autism Baby )

அம்மாக்கே தெரில அவனுக்கு சரியாகுமா.?
அவனால எல்லாரயும் மாதிரி விளையாட
முடியுமா.? நார்மல் ஸ்கூல்ல சேர முடியுமா.?,
எல்லோரையும் நேரா பார்த்து பேச
முடியுமான்னு...!

எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு..
அழுதுட்டே இருந்தேன் தூங்கற வர...
அம்மாவும் அழுதாங்க.

ஏப்ரல் 18 :
இன்னிக்கு எனக்கு ஸ்கூலுக்கு போகவே
இஷ்டம் இல்ல. ஆனா அம்மா கண்டிப்பா
போகணும்னு சொல்லி அனுப்பி வச்சுட்டாங்க.

அச்சோ இந்த சதீஷ் தலைல காயம்.
இந்த ராஸ்கல் கிஷோர் நேத்து
தள்ளி விட்டுட்டானாம்.

நான் கிஷோர்ட்ட போய் “ இனி நீ
சதீஷ என்னவாச்சும் பண்ணுன
அப்றம் நான் உன்ன பிரின்ஸிட்ட
சொல்லி வச்சுடுவேன் இடியட் ”

அவன் காதுல விழுந்தத அவனால
நம்ப முடியல.

இன்னிக்கு மிஸ் வந்தும் கேக்கணும்..
" நான் சதீஷ் பக்கத்துல உக்கந்துக்கவான்னு.! "
.
.

46 Comments:

ராஜி said...

புரிதல் நு தலைப்பு போட்டிருக்கீங்க. ஆனால், ஒண்ணும் புரிய மாட்டேங்குது. அதுசரி உங்க சங்க ஆட்கள் எழுதுனது ஆச்சே, எப்படி புரியும்? இருங்க இன்னொருக்கா படிச்சுட்டு பார்க்குறேன் அப்பவாவது புரியுதானு?!

Lakshmi said...

அவன் ஆட்டிஸ பையனாம். அழுகை தாங்கலை. ஆண்டவன் படைப்பில் ஏன்
இந்த ஏற்றத்தாழ்வுகள்.

பெசொவி said...

@ venkat

உங்களுக்கு மட்டும் இல்லை, உங்க VAS குடும்பத்துக்கே அடுத்தவங்க அருமையா எழுதியதை மட்டுமே translateபன்னி எழுதும் கலை இருக்குன்னு புரிய வச்ச ஷாலினிக்கு ஸ்பெஷல் நன்றி!

பெசொவி said...

எனக்கு புரிஞ்சு போச்சு, எப்படியாவது உங்க பதிவைப் பாராட்டி VKS ஆளுங்களையும் எழுத வச்சுடனும்னுதான இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க?

Shalini(Me The First) said...

@ராஜி
//புரிதல் நு தலைப்பு போட்டிருக்கீங்க. ஆனால், ஒண்ணும் புரிய மாட்டேங்குது. அதுசரி உங்க சங்க ஆட்கள் எழுதுனது ஆச்சே, எப்படி புரியும்? இருங்க இன்னொருக்கா படிச்சுட்டு பார்க்குறேன் அப்பவாவது புரியுதானு?!//

உங்கள மாதிரி உள்ளவங்களை மனசுல வச்சி எழுதினது தான். மெதுவா படிங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VAS போலவே குழப்பமான கதை..

அனு said...

சிறுகதை ரொம்ப அழகா இருக்கு.. மனித உணர்வுகளை படம்பிடித்து காட்டிய அந்த ஒரிஜினல் authorக்கு வாழ்த்துக்கள்!!

(தலைவர் தான் சுட்டு போடுறார்ன்னு பாத்தா, அந்த groupப்பே அப்படித் தான் போல.. ம்ம்ம்.. தலைக்கு பின்னாடி தானே வாலும் போகும்.. :) )

Shalini(Me The First) said...

@Lakshmi
//அவன் ஆட்டிஸ பையனாம். அழுகை தாங்கலை. ஆண்டவன் படைப்பில் ஏன்
இந்த ஏற்றத்தாழ்வுகள்.//

கருணை, இரக்கம் போன்ற கடவுள் குணங்களை மனிதர்களில் பார்ப்பதற்காக இருக்குமோ?

Madhavan Srinivasagopalan said...

என்னாது..
சின்னபுள்ளத் தனமா இருக்கு..!

Shalini(Me The First) said...

@பெசொவி
//@ venkat

உங்களுக்கு மட்டும் இல்லை, உங்க VAS குடும்பத்துக்கே அடுத்தவங்க அருமையா எழுதியதை மட்டுமே translateபன்னி எழுதும் கலை இருக்குன்னு புரிய வச்ச ஷாலினிக்கு ஸ்பெஷல் நன்றி!//

என்னாங்க பண்றது உங்களுக்கு எல்லாம் தமிழ்ல சொன்னாதான் புரியுது. இப்படி நாங்க Translate பண்ணி போடறதாலதான் ஒரு சில அருமையான விஷயமாவது உங்களுக்கு தெரிஞ்சி இருக்கு.

//எனக்கு புரிஞ்சு போச்சு, எப்படியாவது உங்க பதிவைப் பாராட்டி VKS ஆளுங்களையும் எழுத வச்சுடனும்னுதான இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க?//
உங்களுகெல்லாம் புரியுறதே கஷ்டம் இதுல பாராட்டு வேற அப்டியே இவங்க பாராட்டையெல்லாம் வாங்கி நாங்க பம்பாய்ல் ஒரு பக்கிங்ஹம் உருவாக்க போறோம் பாருங்க ;)

Shalini(Me The First) said...

@ரமேஷ்
//VAS போலவே குழப்பமான கதை..
//
வயசாளிகளுக்கெல்லாம் ஆட்டிஸம் வராதே

Shalini(Me The First) said...

@அனு
//தலைக்கு பின்னாடி தானே வாலும் போகும்.. :) )
//
தலைக்கு பின்னாடி வால் போகலாம் ஆனா தலைக்கு மேல கொம்பு தான் இருக்கும் வால் இருக்காது

Shalini(Me The First) said...

@மாதவன்
//என்னாது..
சின்னபுள்ளத் தனமா இருக்கு..!//

என்னாது பெரியமனுஷ தோரணையா இருக்கு..!

karthikkumar said...

வாழ்த்துகள். யாருக்குன்னு பாக்குறீங்களா... இதை எழுதினவருக்கும், இதை ட்ரான்ஸ்லேட் பண்ணியவருக்கும், இதை ப்ளாக்ல போட்ட திருவாளர் வெங்கட் அவர்களுக்கும்தான்... :) இந்த கதைக்கு துளியும் சம்பந்தம் இல்லைனாலும் கூட, ( எழுதினது வேற ஒருவர், ட்ரான்ஸ்லேட் பண்ணியது பக்கத்து வீட்டு LKG பசங்க ) மொக்க கமென்ட் போடும் ஷாலினி இந்தளவுக்கு முன்னேறி இருப்பதை வரவேற்க வேண்டும்... :) வாழ்த்துகள் ஷாலினி :)

karthikkumar said...

Shalini(Me The First) said...
@அனு
//தலைக்கு பின்னாடி தானே வாலும் போகும்.. :) )
//
தலைக்கு பின்னாடி வால் போகலாம் ஆனா தலைக்கு மேல கொம்பு தான் இருக்கும் வால் இருக்காது////


சரி அப்புறம்?... :)

அனு said...

@ஷாலினி
//தலைக்கு பின்னாடி வால் போகலாம் ஆனா தலைக்கு மேல கொம்பு தான் இருக்கும் வால் இருக்காது//

ரைட்டு.. கதைய படிச்சுட்டு, நீங்க தெளிவா ஆகிடீங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.. இந்த கமெண்ட்ட போட்டு என் வயித்துல பாலை வார்த்தீங்க.. :)

karthikkumar said...

@ ஷாலினி
கருணை, இரக்கம் போன்ற கடவுள் குணங்களை மனிதர்களில் பார்ப்பதற்காக இருக்குமோ? ////

அதெல்லாம் இல்லாம போய்தான உங்க தல ப்ளாக் எழுதுறார்.. நீங்களும் அவர சப்போர்ட் பண்ணி மொக்க கமென்ட் போடறீங்க .. :)

Mohamed Faaique said...

////அவன் ஆட்டிஸ பையனாம். அழுகை தாங்கலை. ஆண்டவன் படைப்பில் ஏன்
இந்த ஏற்றத்தாழ்வுகள். ////

இதற்கு இறைவனை காரணம் சொல்ல முடியாது. பெற்றோரின் தவறான நடவடிக்கைகளே, பாவிக்கும் தவறான (கருத்தடை மாத்திரைகள் etc.)வ்ழிமுறைகளே இப்படி குழந்தைகள் பிறக்க முதல் காரணம்.. (ஆஹா... வெங்கட் ப்லாக்’ல சீரியஸ்’ஆ கொம்மண்ட் போட்டுட்டோமே)

Mohamed Faaique said...

//தலைக்கு பின்னாடி வால் போகலாம் ஆனா தலைக்கு மேல கொம்பு தான் இருக்கும் வால் இருக்காது///

ஆஹா!!!! என்ன ஒரு கண்டு பிடிப்பு???? யாருப்பா.. இந்த வில்லேஜ் விஞ்ஞானி....


(காபி அடிச்சாலும்)நல்ல பதிவு தல.. (விடு..விடு..வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ராரு....)

venkhat said...

@Mohhammed

// இதற்கு இறைவனை காரணம் சொல்ல முடியாது. பெற்றோரின் தவறான நடவடிக்கைகளே, பாவிக்கும் தவறான (கருத்தடை மாத்திரைகள் etc.)வ்ழிமுறைகளே இப்படி குழந்தைகள் பிறக்க முதல் காரணம்..//

i am venkhat a medical practioner, very true mr Mohammed God is not the cause of this problem.
we who are under the umbrella of the pharma field are the cause of the problem.
very difficult to make a list, but for a start we can blame the vaccines, and their ingredients.
mmr has be blamed for this problem.
and Dr Andrew Wakefeld who was in England was removed from practice for saying the truth.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

புரியுது ஆனால் புரியல

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

ரசிகன் said...

எதிர் கட்சியா இருந்தாலும் எப்பவாவது நல்லது சொன்னா என்கரேஜலாம்.. Good One to Share Shalini.(உங்க பாஸ் எழுத்துக்கள்ல இருந்து தப்பிக்க வழி செய்யுற எந்த செயலா இருந்தாலும் அதுக்கு என் பரிபூரண ஆதரவு உண்டு )

ரசிகன் said...

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லுவாங்க.. படிச்சாலும் தெரியும் போல... இத படிச்சி 4 பேர் தெரிஞ்சிகிட்ட சரி..

பெசொவி said...

//@ஷாலினி
//தலைக்கு மேல கொம்பு தான் இருக்கும் வால் இருக்காது//

பதில் மட்டும் சொல்லியிருக்கீங்க, போல? கேள்விய நானே கொடுத்துடறேன்!
"மெம்பர்களின் அங்க அடையாளங்கள் யாவை?"

அனு said...

@பெசொவி
//"மெம்பர்களின் அங்க அடையாளங்கள் யாவை?"//

அவங்க as usual தப்பா புரிஞ்சுக்க போறாங்க.. "VAS மெம்பர்களின் அங்க அடையாளங்கள் யாவை?"ன்னு தெளிவா சொல்லுங்க..

பெசொவி said...

@ Anu

மேடம், இந்தக் கேள்வியே VAS மெம்பர் ஆகுறதுக்கான எக்ஸாம்ல கேக்குறதுதான்!
(இந்த Examலதான் ஷாலினி First-ஆ வேற வந்தாங்க!)

அருண் பிரசாத் said...

கலாய்கலாம்னு வரப்போதான் நல்ல கதைய போடுறீங்க....

நல்லா மொழி பெயர்த்து இருக்கீங்க ஷாலினி....

@ வெங்கட்
உங்க சிஷ்ய புள்ள கூட பதிவு எழுத கத்துகிடாங்க. நீங்க எப்போதான் சொந்தமா பதிவு எழுதப் போறீங்களோ....

எவ்வளவு நாள்தான் பண்டபத்துல எழுதி கொடுத்ததையே போட்டு காலத்தை ஓட்டுவீங்க

பாலா said...

நெகிழ்ச்சி

middleclassmadhavi said...

அஞ்சலி படம் ஞாபகம் வருது...!!

வெங்கட் said...

@ ராஜி.,

// ஆனால், ஒண்ணும் புரிய மாட்டேங்குது.
அதுசரி உங்க சங்க ஆட்கள் எழுதுனது
ஆச்சே, எப்படி புரியும்? //

உங்களுக்கு புரியலன்னா பரவாயில்ல..
ஆனா உங்களுக்கு ஏன் புரியலைன்னு
எங்களுக்கு இப்ப புரிஞ்சி போச்சு..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி & அனு.,

// உங்களுக்கு மட்டும் இல்லை,
உங்க VAS குடும்பத்துக்கே அடுத்தவங்க
அருமையா எழுதியதை மட்டுமே
translate பன்னி எழுதும் கலை இருக்கு //

// தலைவர் தான் சுட்டு போடுறார்ன்னு
பாத்தா, அந்த groupப்பே அப்படித் தான்
போல.. //

அப்படி நல்ல நல்ல English கதைகளை
Translate பண்ணி தமிழ்ல எழுதறதே..
அப்பவாச்சும் நீங்க அதை எழுத்து
கூட்டி படிப்பீங்களேன்னு தான்..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// வயசாளிகளுக்கெல்லாம் ஆட்டிஸம்
வராதே //

எல்லா விஷயத்துலயும் Exception
இருக்கு.. இதுல ரமேஷ் ஒரு
Exception..!

வெங்கட் said...

@ அனு.,

// ரைட்டு.. கதைய படிச்சுட்டு, நீங்க
தெளிவா ஆகிடீங்களோன்னு
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..//

நாங்க அப்படி எல்லாம் பயப்பட
மாட்டோம்.. எங்களுக்கு தெரியாதா
உங்களை பத்தி..?!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// @ ஷாலினி Said.,
கருணை, இரக்கம் போன்ற
கடவுள் குணங்களை மனிதர்களில்
பார்ப்பதற்காக இருக்குமோ? ////

// அதெல்லாம் இல்லாம போய்தான
உங்க தல ப்ளாக் எழுதுறார்.. நீங்களும்
அவர சப்போர்ட் பண்ணி மொக்க
கமென்ட் போடறீங்க .. :) //

நீங்க தனியா வந்து மொக்கை கமென்ட்
போட்டு இங்க மாட்டிக்கும் போதெல்லாம்

நாங்க லேசா நாலு தட்டு மட்டும்
தட்டி அனுப்பறோமே.. ஏன்..?

எல்லாம் கருணை., இரக்கம்
இதெல்லாம் இருக்கறதால தான்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// எதிர் கட்சியா இருந்தாலும்
எப்பவாவது நல்லது சொன்னா
என்கரேஜலாம்.. //

நாங்களும் எங்க எதிர்கட்சியை
எப்பாவாச்சும் எங்கரேஜலாம்னு
தான் பார்க்கறோம்... ஹூம்... எங்கே..!

வெங்கட் said...

@ ராஜபாட்டை ராஜா.,

// புரியுது ஆனால் புரியல //

அப்படியே கிரேக்க தத்துவ மேதை
அரிஸ்டாட்டில் மாதிரியே போஸ்
குடுக்கறீங்க.. ஆனா இந்த சின்ன
விஷயம் புரியலன்னு சொல்றீங்க..?!

விளங்கலையே..!

வெங்கட் said...

@ Dr.Venkat.,

// very difficult to make a list, but for a start
we can blame the vaccines, and their ingredients.
mmr has be blamed for this problem.//

அப்ப தடுப்பூசி தான் இதுக்கு காரணமா
டாக்டர்..? அப்ப ஏன் இதை பத்தி WHO
கூட கண்டுக்கலை..

இந்த ஆட்டிஸம் நோயை பத்தின
அறிவு மேலை நாடுகள்ல கூட
இல்லையா..? அங்கேயும் இந்த
நோய் இருக்கு தானே..? அதுக்கு
என்ன காரணம்..?

வெங்கட் said...

@ அனு.,

//அவங்க as usual தப்பா புரிஞ்சுக்க போறாங்க..
" VAS மெம்பர்களின் அங்க அடையாளங்கள்
யாவை?"ன்னு தெளிவா சொல்லுங்க..//

Yes.. Yes..! நீங்க சொன்ன மாதிரி
அவங்க தப்பா தான் புரிஞ்சிக்கிட்டாங்க.

அந்த கேள்விக்கு VKS மெம்பர்களின்
அங்க அடையாளங்களை எழுதி
வெச்சிட்டாங்க..

skcomputers said...

நல்ல சிந்தனை சிறுகதை ரொம்ப அழகா இருக்கு.. பகிர்தலுக்கு நன்றி.
P.Suthan
Canada.

nvnkmr said...

SONTHAMA ELUTHA SARAKKU ILAYA
AANA SHALINI IPADI SUTTU ELUTHAVUM THIRAMAI VENUM

GOOD STORY

INIME ITHAYE NEEGA TRY PANALAM VENKAT

Shalini(Me The First) said...

@கார்த்தி
//வாழ்த்துகள் ஷாலினி :)//
தேங்க்ஸ் கார்த்தி :)

//( எழுதினது வேற ஒருவர், ட்ரான்ஸ்லேட் பண்ணியது பக்கத்து வீட்டு LKG பசங்க //
வயித்தெறிச்சல்படுவது கார்த்தி :)

//சரி அப்புறம்?... :)//
எப்ப பாரு கதை கேக்குற புத்தி :)

Shalini(Me The First) said...

@Mohammed Faaique
//ஆஹா!!!! என்ன ஒரு கண்டு பிடிப்பு???? யாருப்பா.. இந்த வில்லேஜ் விஞ்ஞானி....
//
னானும் பார்த்துட்டே இருக்கேன் அது என்ன வில்லேஜ் விஞ்ஞானி?
ஏன் வில்லேஜுலருந்து விஞ்ஞானி வரவே மாட்டாரா? இல்ல வில்லேஜுலருந்து வந்தா விஞ்ஞானி இல்லைன்னு ஆகிடுமா? இல்ல விஞ்ஞானி வில்லேஜுலருந்து வந்தா வில்லேஜு வில்லேஜ் இல்லன்னு ஆகிடுமா? இல்ல வில்லேஜ்ல விஞ்ஞானி இருந்தா அவர் விஞ்ஞானி இல்லைனு ஆய்டுவாரா?
மக்கள்களா இனி யாராச்சும் வில்லேஜ் விஞ்ஞானி, அர்பன் ஆர்டிஸ்ட்னு சொல்லுங்க ....!

Shalini(Me The First) said...

@ரசிகன்
//Good One to Share Shalini.//

நன்றி ரசிகன்!
இந்த கதை படிச்சதோட எனக்கு இத நெறைய பேர்ட்ட ஷேர் பண்ணனும்னு ஆசையா இருந்துச்சு எங்க பாஸ் கை குடுத்தாரு எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோசமா இருக்கு.
தேங்க்ஸ் பாஸ் தேங்க்யூ ஸோ மச்!

karthikkumar said...

னானும் பார்த்துட்டே இருக்கேன் அது என்ன வில்லேஜ் விஞ்ஞானி?
ஏன் வில்லேஜுலருந்து விஞ்ஞானி வரவே மாட்டாரா? இல்ல வில்லேஜுலருந்து வந்தா விஞ்ஞானி இல்லைன்னு ஆகிடுமா? இல்ல விஞ்ஞானி வில்லேஜுலருந்து வந்தா வில்லேஜு வில்லேஜ் இல்லன்னு ஆகிடுமா? இல்ல வில்லேஜ்ல விஞ்ஞானி இருந்தா அவர் விஞ்ஞானி இல்லைனு ஆய்டுவாரா?
மக்கள்களா இனி யாராச்சும் வில்லேஜ் விஞ்ஞானி, அர்பன் ஆர்டிஸ்ட்னு சொல்லுங்க ....!////

//னானும் //
//மக்கள்களா//

@ ஷாலினி
தங்கள் பேச்சில் தமிழ் தாண்டவமாடுவதை எண்ணி பூரிப்படைகிறேன்... இதற்கும் வாழ்த்துகள் ... :)

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...