31 May 2010
நாங்களும் Book படிப்போம்ல..!!
நான் இன்னிக்கு ஒரு
Book Review எழுத போறேன்.
அதுவும் ஒரு English Book..
என்ன கொடுமை சரவணா இது..?
பயப்படாதீங்க...,
Dictionary பக்கத்தில வெச்சிட்டு
அப்படியே மெதுவா எழுத்து
கூட்டி தான் படிச்சேன்..
" Freedom " by Renu Sharma
( Ratna Sagar Publications )
இந்த Book-ஐ பார்த்தவுடனே
படிக்கணும்னு தோணும்..
காரணம் அட்டையில இருக்கிற
அந்த குழந்தை படம்..
ஆஹா.. என்ன அழகு..!!
இந்த Book-ல மொத்தம்
8 Short Stories..
முதல் கதை :
ஒரு டீச்சர், ஆறு Students-ஐ
சுத்தி நடக்குது..
யாருக்குமே அடங்காம
இருக்கறாங்க 6 Students,
அவங்களை தன் வழிக்கு
கொண்டு வர அந்த டீச்சர்
எவ்ளோ கஷ்டப்படறாங்கன்னு
ரொம்ப நகைச்சுவையா
சொல்லி இருக்காங்க..
அதுக்காக அந்த டீச்சர் போடுற
ஒவ்வொரு திட்டமும் சபாஷ்
போட வெக்குது..
இது ஒரு ஹாஸ்யமான.,
சுவாரஸ்யமான கதை
இந்த கதை முடிஞ்ச உடனே
அடுத்த பக்கத்தை திருப்பினா..
Meanings - 6
Fill in the Blanks - 5
Question and Answer - 5
இதெல்லாம் வேற இருக்கு..
ஹி., ஹி., ஹி..,
இது என் பையனோட
3rd Std English Book..
நான் தான் முன்னமே
English Book-ன்னு சொன்னேன்ல..
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( G.K. கௌதம் )
Love-ல ஜெயிக்க என்ன பண்ணனும்..?
முதல்ல Love பண்ணனும்..
பல பேர் அதைகூட ஒழுங்கா
பண்ணாம.,
" எனக்கு Love Failure -ன்னு "
சொல்றாங்க..
இன்று ஒரு தகவல் :
---------------------
English ஒரு Funny Language..
" Queue " - இதை க்யூன்னு
சொல்லுவாங்க..
அதுல கடைசி நாலு எழுத்தை
எடுத்திட்டாலும்., அப்பயும்
அதை ( Q ) க்யூன்னுதான்
சொல்லுவாங்க..
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
42 Comments:
/English ஒரு Funny Language..
" Queue " - இதை க்யூன்னு
சொல்லுவாங்க..
அதுல கடைசி நாலு எழுத்தை
எடுத்திட்டாலும்., அப்பயும்
அதை ( Q ) க்யூன்னுதான்
சொல்லுவாங்க..// :)
பாவம் சார் உங்க பையன், நீங்களே Dictionary ய பக்கதுல வெச்சிட்டு எழுத்து கூட்டி ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கறிங்க. அதுக்கு அப்பறம் Home work வேற எழுதிகுடுத்து அத பாத்து டீச்சர் வேற அவனை திட்டுவாங்க. எவளவு mistakes னு. பையன் எத்தன எடத்துல தான் கொடுமைய அனுபவிக்கிறது?
எல்லாம் சரி, Meanings - 6 , Fill in the Blanks - 5 , Question and Answer - 5 - இதுக்கு எல்லாம் Answer தெரிஞ்சிதா?
நீங்கள் ஒரு மங்கனி அமைச்சர் என்று நீங்கள் எழுதும் பதிவிற்கு ஒரு முறை காட்டிக்கொண்டு இருக்குறீர்
//ஹி., ஹி., ஹி..,
இது என் பையனோட
3rd Std English Book..//
அப்போ உங்க பையன் உங்களைவிட மூணு கிளாஸ் கூட படிக்கிறாரா?
//English ஒரு Funny Language..//
's' is pronounced as 'yes'
while 'yes' is read as 's'.
//English ஒரு Funny Language..//
எனக்கும் Bernard Shaw சொன்ன example ஞாபகம் வருது..
GHOTI - இதை எப்படி pronounce பண்ணனும்?? கோடி-னு தானே.. According to above principle, நம்ம Fish-னு கூட pronounce பண்ணலாம்.. விளக்கம் கீழே..
GH like in Rough, Tough
O like in Women
TI like in Nation, Station
எப்பூடி?? நாங்களும் படிச்சவுக தான்-னு prove பண்ணிட்டோம்ல..
//முதல்ல Love பண்ணனும்..
பல பேர் அதைகூட ஒழுங்கா
பண்ணாம.,
" எனக்கு Love Failure -ன்னு "
சொல்றாங்க..//
எனக்கு இதுல ஒரு டவுட்டு...
A B-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாரு..
B C-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாங்க...
C D-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாரு..
D A-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாங்க...
அப்போ, Aவும் Bவும் & Cயும் Dயும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அங்கே லவ் ஜெயிச்சுச்சா தோத்துச்சா??
//இது என் பையனோட
3rd Std English Book..//
என்னாது??
3rd Std English Book-க நீங்க படிச்சீங்களா?? காமெடி பண்ணாதீங்க.. உங்க பையன் படிக்க படிக்க நீங்க உங்க பையன் கிட்ட கதை கேட்டீங்க.. அதானே நடந்தது??
அப்போ உங்க பையன் உங்களைவிட மூணு கிளாஸ் கூட படிக்கிறாரா?
அதான!!!
மொத்தம் 8 கதைனு சொன்னீங்க,
அதில ஒரு கதையை தான்
சொல்லியிருக்கிங்க.அதெல்லாம் சரி,
மீதி 7 கதையைசொல்லி பதிவை
ஓட்டலாங்கிற எண்ணமா?(எப்படியெல்லாம்
சமாளிக்க வேண்டியிருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
@ To All.,
Today i'm little busy. So i will reply later.
ஆஹா.. என்ன அழகு..!!
@அனு
//Aவும் Bவும் & Cயும் Dயும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அங்கே லவ் ஜெயிச்சுச்சா தோத்துச்சா?//
Aவும் Bவும் & Cயும் Dயும் கல்யாணம் பண்ணிக்கிட்டா... அங்கே லவ் ஜெயிக்கும். எப்படின்னு கேக்கறிங்களா? Because "English is a funny language".
சினிமா விமர்சனம்னு போட்டுடே 75% Story சொல்லிடறாங்க...
School book தானே...
அந்த ஹாஸ்யமான,சுவாரஸ்யமான Idea ல ஒண்ணாவது
சொல்லி இருக்கலாம்ல..
தப்பி தவறி கூட எங்களை திருப்தி படுத்திட கூடாதுன்னு சபதமா..
இப்பொ பாருங்க... 3 standard பசங்க எங்க இருக்காங்கன்னு
வீடு வீடா தேடிட்டு இருக்கேன்..
(Finished in Ur own style.. Enjoyed.. :-))
நன்றி..,
@ ராபின்,
@ மாதவன்,
@ யாதவன்
@ அருண்.,
ஹா., ஹா., ஹா
( வில்லன் சிரிப்பு )
நான் பரவாயில்ல.,
எனக்கு English தான் தடுமாறும்..
உங்களுக்கு தமிழே இப்படி டான்ஸ்
ஆடுதே..!!
பாவங்கங்க உங்க பாப்பா..!!
// உங்க பையன், நீங்களே Dictionary ய 'பக்கதுல' வெச்சிட்டு எழுத்து கூட்டி ரொம்ப கஷ்டப்பட்டு 'படிக்கறிங்க.'
அதுக்கு அப்பறம் Home work வேற எழுதிகுடுத்து அத பாத்து டீச்சர் வேற அவனை திட்டுவாங்க. 'எவளவு' mistakes னு. பையன் எத்தன எடத்துல தான் கொடுமைய அனுபவிக்கிறது? //
@ சுதா.,
// நீங்கள் ஒரு மங்கனி அமைச்சர் என்று நீங்கள் எழுதும் பதிவிற்கு ஒரு முறை காட்டிக்கொண்டு இருக்குறீர் //
க க க போ..,
( கருத்துக்களை கச்சிதமாக
கவ்விக்கொள்கிறீர்கள் போங்கள்..)
@ பெ.சொ.வி & ரமேஷ்.,
// அப்போ உங்க பையன் உங்களைவிட மூணு கிளாஸ் கூட படிக்கிறாரா? //
யாரை பாத்து., யாரை பாத்து
இந்த கேள்வி..??
ஒரு தடவை நான் +2
3rd Year படிக்கும் போது
எங்க Head Master என்ன கூப்பிட்டு
HM : இந்த தடவையாவது எப்படியாவது பாஸ் பண்ற வழிய பாருடா..
நான் : அதெல்லம் முடியாது..
இன்னும் ரெண்டு வருஷமாவது படிப்பேன்.. என் படிப்பு ஆர்வத்தை கெடுக்காதீங்க.
HM : டேய்.. நீ பாஸ் பண்ணினா தாண்டா வேற பசங்க நம்ம ஸ்கூல்ல வந்து சேருவாங்க..
நான் : அப்படியா..? முயற்சி பண்றேன்..
அப்புறம் நான் +2 பாஸ் ஆயிட்டேன்..
எனக்கு என்னமோ எங்க HM மேல தான்
சந்தேகமா இருக்கு.. அவர்தான் சேஸ் பண்ணி பாஸ்
பண்ணிவிட்டிருப்பாரோன்னு
@ அனு.,
// A B-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாரு..
B C-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாங்க...
C D-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாரு..
D A-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாங்க... //
இதை படிச்சவுடனே எனக்கு
விஜய் Tv-ல வந்த சீரியல்.
" இது ஒரு காதல் கதை "
ஞாபகம் வருது..
சக்தி & ஜானகி லவ்வர்ஸ்.,
சக்தியோட Friend சுதா இந்த
லவ்வை பிரிக்க நினைக்கிறாங்க..
ஏன்னா அவங்க சக்தியை லவ்
பண்றாங்க..
ஒரு வழியா லவ்வர்ஸ் பிரிஞ்சடறாங்க..
Then.,
ஜானுவை அவங்க அத்தை பையன்
அனந்து லவ் பண்றான்..
சுதாவும், சக்தியும் லவ் பண்றாங்க..
அந்த லவ்வுக்கும் இடைசல்
சக்தியோட மாமா பொண்ணு
பரிமளா மூலமா வருது..
ஏன்னா பரிமளாவும் சக்தியை
லவ் பண்றாங்க..
இந்த பரிமளாவை அவ கூட படிக்கும்
மாணிக்கம் லவ் பண்றான்..
இந்த Gap-ல சக்தி மறுபடியும்
ஜானகியை லவ் பண்றார்..
இப்படி போகும் கதை..
இந்த சீரியலை நான்
ஒரே ஒரு நாள் பார்க்கலை.
சீரியல் முடிச்சிட்டாங்க.
யார் யார் கூட
ஜோடி சேர்ந்தாங்கன்னு
கடைசிவரைக்கும் எனக்கு தெரியலை..
@ கவிதா.,
// மொத்தம் 8 கதைனு சொன்னீங்க,
அதில ஒரு கதையை தான்
சொல்லியிருக்கிங்க.. //
ஹி., ஹி., ஹி..
அந்த 8 கதையில இந்த ஒரு
கதையை தான் எனக்கு புரியற
மாதிரி அவங்க எழுதி இருந்தாங்க..
@ ஜெகன்.,
// Aவும் Bவும் & Cயும் Dயும்
கல்யாணம் பண்ணிக்கிட்டா...
அங்கே லவ் ஜெயிக்கும்.
எப்படின்னு கேக்கறிங்களா?
Because "English is a funny language". //
ஹி., ஹி., ஹி..!
ஒண்ணும் புரியல..
அப்படியே English Class-ல
உக்கார்ந்த மாதிரி இருக்கு..!!
@ ரசிகன்.,
// அந்த ஹாஸ்யமான, சுவாரஸ்யமான
Idea ல ஒண்ணாவது சொல்லி இருக்கலாம்ல..//
அதெல்லாம் எங்கள மாதிரி
குழந்தை பசங்களுக்கு..
உங்களுக்கு எல்லாம் பிடிக்காது..
at அனு / வெங்கட்:
//A, B, C, D..//
லவ்'ன்றது ஜாக்கி மாதிரி.. நீங்க சொன்ன A, B, C, D எல்லாம் குதிரை மாதிரி.. லைஃப்ங்கற ரேஸ்ல எப்பவுமே ஜெயிக்கறது தோக்கறது எல்லாம் குதிரைங்க தான், ஜாக்கி இல்ல..
@ஜெகன்
//Aவும் Bவும் & Cயும் Dயும் கல்யாணம் பண்ணிக்கிட்டா... அங்கே லவ் ஜெயிக்கும். எப்படின்னு கேக்கறிங்களா? Because "English is a funny language".//
A=B
C=D
அப்போ A=Cஆ??
நல்லா இருக்குங்க உங்க லாஜிக்.. Keep it up...
@ரசிகன்
புது ID..
புது image..
புது Profile..
கலக்குறீங்க ரசிகன்...
உங்க profile பார்த்தேன்.. நம்ம ரெண்டு பேருக்கும் similar interests போல.. Harry Potter, Dan Brown, Ponniyin Selvan..
வந்தியத்தேவன் Fan நான்.. :) "The Lost Symbol" படிச்சாச்சா?
@வெங்கட்
//" இது ஒரு காதல் கதை "
ஞாபகம் வருது..//
எனக்கு இதை கேட்கும் போதே இவ்வளவு கண்ணைக் கட்டுதே.. பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும்??
//யார் யார் கூட
ஜோடி சேர்ந்தாங்கன்னு
கடைசிவரைக்கும் எனக்கு தெரியலை.//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. விக்கிரமாதித்தானும் வேதாளமும் கதை கேக்குற effect வருது.. யாருக்காவது தெரிஞ்சா முடிவ சொல்லுங்கப்பா...
@அனு ரசிகன் ரசிகன்
//லைஃப்ங்கற ரேஸ்ல எப்பவுமே ஜெயிக்கறது தோக்கறது எல்லாம் குதிரைங்க தான், ஜாக்கி இல்ல..//
நீங்க நம்ம ஜெகன் மாதிரி இல்ல.. கொஞ்சம் விவரமா தான் பேசுரீங்க..
அப்போ, Love Failure-னு சொல்றோமே..அப்படின்னா என்ன??
இந்த புத்தகப் பரிந்துரையே ஒரு நல்ல விஷயம்..! நாம படிச்ச புத்தகம் ரொம்ப நல்லாயிருந்தா, எல்லாரையும் படிக்கச் சொல்லலாம்..! இன்னொரு ரூட்டு என்னன்னா, நமக்கு புரியாத புத்தகம் ஏதாவது இருந்தா, அதை நண்பர்கள்கிட்ட நல்லபுத்தகம்னு படிக்கச் சொல்லி, ஒருநாள் அவங்க வாயைக்கிண்டி, அதுல என்னதான் இருந்ததுன்னு கேட்டுக்கிடலாம்..! ஹிஹி..! இதுல நீங்க எந்த category..!
-
DREAMER
@ அனு
// உங்க profile பார்த்தேன்..
நம்ம ரெண்டு பேருக்கும் similar interests போல.. //
அட., அட., அட..
கட்சிக்கு என்னாமா ஆள் பிடிக்கறீங்க..!!
உங்க ஐஸ்க்கு எல்லாம்
ரசிகன் மயங்க மாட்டார்..
அவர் நடுநிலைவாதி..
சந்தேகமா இருந்தா என்
" Exam - கீதாசாரம் " பதிவுக்கு
ரசிகன் எழுதின Comment-ஐ பாருங்க..
// ரசிகன் said...
எப்போதெல்லாம் லொல்ளு அதிகமாகிறதோ அப்போது குட்டவும், எப்போதெல்லாம் காமெடி
கரை புரண்டு ஓடுகிறதோ அப்போது கைதட்டவும், பதிவுகள் தோறும் நான் தோன்றுவேன். //
@ அனு.,
// நீங்க நம்ம ஜெகன் மாதிரி இல்ல..
கொஞ்சம் விவரமா தான் பேசுரீங்க..//
ஹி., ஹி., ஹி..!!
உங்ககிட்ட எனக்கு
பிடிச்சதே இது தான்..
பாராபட்சம் பார்க்காம
போட்டு தாக்கறீங்கல்ல..
அதை சொன்னேன்..
@ Dreamer.,
இதை நான் தமிலீஷ்ல
" நகைச்சுவை " Category-ல
Add பண்ணினேன்..
" புத்தகம் " Category-ல Add பண்ணி
இருந்தா புத்தக பிரியர்கள்
என்னை ஒரு பிடி பிடிச்சி
இருப்பாங்கன்னு
எனக்கு தெரியாதா என்ன..!!
//கட்சிக்கு என்னாமா ஆள் பிடிக்கறீங்க..!! //
அனு ஏற்கனவே சதுர செயலாளர் பதவி எனக்கு குடுத்துட்டாங்க..
@அனு
பார்த்தீங்களா.. இன்த மாதிரி similar interests உள்ளவங்களை
தெரிஞ்சிக்கதான் Profile. பண்ணிணதே..
I too Like vandhiyathevan more than ArulMozhivarman.. Deception Point தவிர மத்ததெல்லாம் படிச்சிட்டேன்.. Just Love Harry and dumbledore..
எங்கயோ புகை வர்ற மாதிரி இல்ல..?
@ ரசிகன்.,
// எங்கயோ புகை வர்ற மாதிரி இல்ல..? //
எங்கயோ இல்ல..
என் பனியன் தான் கருகுது..!!
@ரசிகன்
நம்ம கட்சியில கலகம் பண்றதயே ஒரு குறிக்கோளா வச்சிருக்கார் இந்த வெங்கட்
@வெங்கட்
இங்கபார்ரா!! ஏது.. கலவர பூமில காத்து வாங்குறீங்களா??
@அனு:
//அப்போ, Love Failure-னு சொல்றோமே..அப்படின்னா என்ன??//
உண்மையில சொல்ல போனா Love Failure அப்படின்றதே ஒரு oxymoron தான். ஒரு விஷயத்துக்கு ஏதாவது motive இருந்தாதான் அதுக்கு Success அல்லது Failure இருக்க முடியும். Motiveவோட பண்ணினா அது Loveவே கிடையாது. So...
@அனு ரசிகன் ரசிகன்
//உண்மையில சொல்ல போனா Love Failure அப்படின்றதே ஒரு oxymoron தான். //
I think you meant Paradox
இப்போ, நீங்க என்ன சொல்ல வரீங்க? நாம் லவ் பண்ணும் போது எதுவுமே எதிர்பார்க்கக் கூடாதுன்னா? not even love from the other side?? என்னாது இது, சின்னப்புள்ள தனமா??
by the way, நீங்க எந்த மலை-ல சாமியாரா இருக்கீங்க?
@ அனு ரசிகன் ரசிகன் & அனு.,
// Love Failure அப்படின்றதே ஒரு oxymoron தான்.//
// I think you meant Paradox //
ஏய்.. யாரப்பா இவிங்கள
உள்ள விட்டது..!!
ஒன்னு கம்பியூட்டர் Class
எடுக்க வேண்டியது..
இல்லையா..
English Class எடுக்க வேண்டியது..
இதே வேலையா போச்சு இவங்களுக்கு..
என்னங்க இது நான் எதாவது ப்ளாக் மாறி வந்துட்டேன்னா? ஒரே ஒளி வட்டம்மா தெரியுது!
ஒன்னுமே புரியல உலகத்துல!
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!!
@வெங்கட்,
Note: கஷ்டப்பட்டு ஸ்பெல்லிங் Mistake இல்லாம டைப் செய்து இருக்கேன்.
super
அன்பின் வெங்கட்
இப்படியாவது புத்தகம் படிக்கணும்
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
// அனு said...
எனக்கு இதுல ஒரு டவுட்டு...
A B-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாரு..
B C-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாங்க...
C D-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாரு..
D A-ய ஒழுங்கா sincere-ஆ லவ் பண்றாங்க...
அப்போ, Aவும் Bவும் & Cயும் Dயும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அங்கே லவ் ஜெயிச்சுச்சா தோத்துச்சா??//
அடங்கப்பா....
கமெண்ட் போடணும்னா கூட இவ்ளோ விஷயம் தெரிஞ்சு இருக்கணுமா.....
மாடு மேக்கிற புள்ளைக்கு இவ்ளோ அறிவா...
@santhosh
//மாடு மேக்கிற புள்ளைக்கு இவ்ளோ அறிவா..//
ஒழுங்கா ஆடு கூட மேய்க்க தெரியாதவர் ப்ளாக் போடும் போது, மாடு மேய்க்கிறவங்க இந்த அளவு கூட யோசிக்க மாட்டோமா என்ன?
Post a Comment