சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 May 2010

மேட்ச் Fixing..!!அப்போ நான் MCA 3rd Year
படிச்சிட்டு இருந்தேன்..,

இப்ப மாதிரியே அப்பவும்
நடிகர் மாதவனும், நானும்
ஒரே சாயல்ல தான் இருப்போம்..

சரி. சரி.. Matter-க்கு வர்றேன்..

என் Friend--க்கு கல்யாணம்.
பொண்ணு From பெங்களூர்..

So., கல்யாணம் பெங்களூர்ல..

அந்த கல்யாணத்துக்கு
பொண்ணோட Friends
நிறைய பேர் வந்திருந்தாங்க..

அப்ப.,
என் Friend-டோட அக்கா
என்னை கைகாட்டி
ஒரு Aunty-கிட்ட எதோ பேசினாங்க.

அவங்களும் பக்கத்தில இருந்த
இன்னொரு Aunty-கிட்ட
என்னை கை காட்டி பேசினாங்க..

என்ன விஷயமா இருக்கும்..??
எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை..

அக்காவே என்னை கூப்பிட்டாங்க..
போனேன்..

" என்னக்கா நடக்குது இங்கே..? "

" ம்ம். உனக்கு பொண்ணு
பார்த்திட்டு இருக்கேன்.. "

" அப்படியா..!! என் Range-க்கு
இந்த மண்டபத்துல எந்த
பொண்ணும் இல்லையே..!! "

" ஆமாண்டா.. எல்லா பொண்ணும்
நல்லா படிச்சிருக்கு.,
அழகா வேற இருக்கு.. "

" ?????.......!! ""

என்ன ஒரு வில்லத்தனம்..?!!

பின்குறிப்பு :
மூணு Guest Rooms சாவி
என்கிட்ட இருந்தது..
அவங்க என்னை தேடினது அதுக்குதான்.


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( ஜெகன் )
சூடு கண்ட பூனை அடுப்படி
ஏறாது தானே..?
( இந்த கேள்வி உங்க போன Posting
பத்தி இல்ல..)


யார் சொன்னா..?
ஆறட்டும்னு Wait பண்ணும்..
( இந்த பதிலும் என் போன Posting
பத்தி இல்ல..)

இன்று ஒரு தகவல் :
---------------------

எல்லோருக்கும் ஒரு அட்வைஸ்..

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "
.
.

36 Comments:

ரசிகன் said...

VKS சங்கத்து தலைவர் பதவிக்கு
அனுவுக்கு சரியான போட்டியாளர் நீங்கதாங்க..

எங்களை விட நல்லாவே உங்க காலை
நீங்களே வாரிகிட்டு இருக்கீங்க..

Chitra said...

எல்லோருக்கும் ஒரு அட்வைஸ்..

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "


..... to follow this advice or not to? Thats the question! :-)

Prabu said...

//எல்லோருக்கும் ஒரு அட்வைஸ்..

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "//

Great Sir....
!!!பயங்கரம்!!!

ரசிகன் said...

//எல்லோருக்கும் ஒரு அட்வைஸ்..

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "//


நான் உங்க அட்வைஸை கேட்டு, இனி யாரு அட்வைஸையும் கேட்காம இருந்தா..
நான் நீங்க சொன்னபடி நடக்கறதா ஒத்துபீங்களா இல்லயா..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

போட்டோவில இருக்கிறவங்கதான் அங்க வந்த பொண்ணுங்களா? உங்க அழகுக்கு கொஞ்சம் சுமார்தான். நல்ல வேளை, நீங்க தப்பிச்சீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

போன கமென்ட் தப்பா போட்டுட்டேன்னு சொன்னா நீங்க வருத்தப் படலாம், ஆனா அதைப் படிச்சு கோபப்பட்டவங்க ஒரு வேளை சந்தோஷப் படலாமேங்கற ஒரு எண்ணத்துல அந்த கமென்ட் தப்பு அப்படின்னு இப்ப எழுதினா நீங்க அதை பப்ளிஷ் பண்ணுவீங்களோ மாட்டீங்களோங்கற பயம் இருக்கிறதால அந்த கமென்ட் அப்படியே இருக்கட்டும்னு தோணுது. ஆனா.......(ஏதோ சொல்ல வரேன்....ஆனா என்னன்னா புரிய மாட்டேங்குது)

ஜெய்லானி said...

//நடிகர் மாதவனும், நானும்
ஒரே சாயல்ல தான் இருப்போம்.//

மாதவனா யாரு அது ???

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

வெங்கட் said...

@ ரசிகன்.,

// எங்களை விட நல்லாவே உங்க
காலை நீங்களே வாரிகிட்டு இருக்கீங்க..//

என்னை மத்தவங்க கிண்டல்
பண்ணினா
கொதிச்சி எழவேணாமா..?
இப்ப்டியா உக்கார்ந்து
ரசிச்சி எழுதிட்டு இருப்பீங்க..!!

வெங்கட் said...

@ சித்ரா , பிரபு & ரசிகன்.,

// to follow this advice or not to.?
Thats the question! :-) //

// Great Sir....
!!!பயங்கரம்!!! //

// நான் உங்க அட்வைஸை கேட்டு,
இனி யாரு அட்வைஸையும் கேட்காம இருந்தா.,நான் நீங்க சொன்னபடி நடக்கறதா ஒத்துபீங்களா
இல்லயா.? //

ஆஹா..
எல்லாரும் " தெளிவா" " குழம்பி "
இருக்காங்கப்பா..!!
ஹி., ஹி., ஹி..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// உங்க அழகுக்கு கொஞ்சம் சுமார்தான்.
நல்ல வேளை, நீங்க தப்பிச்சீங்க..! //

இதை படிச்சிட்டு அப்படியே காத்துல
மிதந்துகிட்டு இருந்தேன்...

அடுத்த Comment வந்தது...

// போன கமென்ட் தப்பா போட்டுட்டேன்னு
சொன்னா நீங்க வருத்தப் படலாம், //

தொப்...,
இப்படியா சார் மேலே தூக்கிட்டு
போயிட்டு கீழே போடுவீங்க..??!!
ஐயோ.. கை காலெல்லாம்
வலிக்குதே..

அனு said...

//இப்ப மாதிரியே அப்பவும்
நடிகர் மாதவனும், நானும்
ஒரே சாயல்ல தான் இருப்போம்..//

இந்த ஒரு லைன்=அ படிச்சதுக்கு அப்புறம் மேல (கீழ) படிக்கவே முடியலே.. அவ்வளவு feelings.. ஏன் இப்படி?? நம்ம தான் ஏற்கனவே இதே போல பேசி ஆப்பு வாங்கியிருக்கோம்ல.. (புதுசா வந்திருக்கவங்க கட்டாயம் இங்க போய் பாருங்க "including comments" http://gokulathilsuriyan.blogspot.com/2010/04/behind-scene.html ) அதுக்கு அப்புறமும் எதுக்கு இந்த விளம்பரம்??

SUDHA said...

//எல்லோருக்கும் ஒரு அட்வைஸ்..

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "//

இன்னைக்கு தான் உருப்ப‌டியான‌ த‌கவ‌ல் சொல்லி இருக்கீங‌க‌

வெங்கட் said...

@ அனு.,

// அதுக்கு அப்புறமும் எதுக்கு
இந்த விளம்பரம்?? //

இப்படியெல்லாம் ஒரு Situation வரும்னு
தெரிஞ்சி தான் எனக்காக அப்பவே
கண்ணதாசன் பாட்டு எழுதி வெச்சிருக்காரு..

" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்.,
ஆதவன் மறைவதில்லை..
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை..! "

வெங்கட் said...

@ சுதா..,

// இன்னைக்கு தான் உருப்ப‌டியான‌
த‌கவ‌ல் சொல்லி இருக்கீங‌க‌ //

அப்பாடா..,
இன்னிக்கு தான் உருப்படியா
நான் சொல்ற அட்வைஸை
நீங்க கேட்டு இருக்கீங்க..!!

அனு said...

நான் போன போஸ்ட் கமெண்ட்ல நீங்க ஒரு சூப்பர் டூப்பர் ஹீரோ ஆகுறதுக்கு சான்ஸ் இருக்குன்னு சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்கன்னு நினைக்குறேன்..

நீங்க ஒரு சூப்பர் ஹீரோவாவோ இல்ல ஒரு டூப்பர் ஹீரோவாவோ ஆகுறதுக்கு தான் சான்ஸ் இருக்குன்னு சொன்னேன்.. இப்படி டாப்பர் ஹீரோ மாதவன் மாதிரி ஆவீங்கன்னு சொல்லல..

1. சூப்பர் ஹீரோஸ் கிட்ட எதுவும் லாஜிக் எதிர்பார்க்க கூடாது..

2. மத்தவங்கள கொல்றதுக்குன்னே ஒரு பவர் இருக்கும் அவங்க கிட்ட..

3. அவங்கள நம்ம ஒரு Normal Human-ஆ யாரும் consider பண்றதில்ல...

4. General Public கிட்ட இருந்து அவங்க Identityஅ மறைச்சு வாழுறது அவங்களுக்கு நல்லது...

5. எப்ப பாத்தாலும் ஒரு மாஸ்க் போட்டு ஊர ஏமாத்திட்டு இருப்பாங்க (நீங்க இங்க போட்டிருக்குற போட்டோ மாதிரி)..

இந்த எல்லாமே உங்களுக்கு பொருந்துவதால் தான் அப்படி சொன்னேன்.. அத படிச்சுட்டு இப்படி ஒரு பாம்-அ போடுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல.. என்னா ஒரு வில்லத்தனம்???

இன்னொரு முறை மாதவன் கூட உங்களை கம்பேர் பண்ணினீங்க.. வர்ற கோவத்துக்கு... படிச்சுட்டு இன்னொரு கமெண்ட் போடுவேன்..வேற என்ன பண்றது?

SUDHA said...

@ வெங்கட்.,

" உங்க Range தெரியாம
உங்ககிட்ட விளையாடிட்டேன்..
என்னை விட்டுடுங்க..
நான் கட்சியை கலைச்சிட்டு
சொந்த ஊருக்கே ஓடிபோயிடறேன்..!! "
இப்படி அனு என் கையை காலா
நினைச்சி கெஞ்சினாங்களாமே..!!

உண்மையா..????

அனு said...

@ரசிகன்
//VKS சங்கத்து தலைவர் பதவிக்கு
அனுவுக்கு சரியான போட்டியாளர் நீங்கதாங்க..

எங்களை விட நல்லாவே உங்க காலை
நீங்களே வாரிகிட்டு இருக்கீங்க..//

கன்னா பின்னா ரிப்பீட்டு + சப்போர்ட்டு..

அனு said...

@ பெ.சொ.வி..,

உங்க கமெண்ட்ட பாத்தா maggi noodlesஅ பாக்குற same effect வருது... எங்க இருந்து அரம்பிச்சா எனக்கு புரியும்??

SUDHA said...

@ அனு..,

ஐயோ..
இந்த கமெண்ட் நான் போடலீங்க..
என் பேர்ல வெங்கட் தான்
போட்டு இருப்பார்னு நினைக்கிறேன்..
என்ன ஒரு வில்லத்தனம்..??

நான் எப்பவும் நல்லவங்க கட்சி..

அனு said...

@SUDHA alias வெங்கட்

எங்களை எல்லாம் பாத்தா LKG, UKG படிக்குற மாதிரியா தெரியுது.. SUDHAவுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியாம போக..

இன்னும் சின்னப்புள்ளயாவே இருக்கியேப்பு..முதல்ல அனாவசியமா ஆச்சரிய குறி, கேள்விக்குறி, புல் ஸ்டாப்பு இதையெல்லாம் போடுறத நிறுத்துங்க.. அப்புறம் எங்க சங்கத்துல வந்து ஒரு மாசம் training எடுத்துக்கோங்க anonymous கமெண்ட் எப்படி போடுறதுன்னு..

அடுத்தவங்க போஸ்ட்ல அனானி கமெண்ட் போடுறவங்கள தான் பாத்திருக்கேன்.. தன்னோட போஸ்ட்க்கே அனானி கமெண்ட் போடுறத first டைம் இப்போ தான் பாக்குறேன்..

வெங்கட் said...

@ அனு..,

// இன்னொரு முறை மாதவன் கூட
உங்களை கம்பேர் பண்ணினீங்க..
வர்ற கோவத்துக்கு... //

சரி பண்ணலை..
அப்படியே இதை மாதவனுக்கும்
Inform பண்ணிடுங்க..

" இன்னொரு முறை வெங்கட் கூட
உங்களை கம்பேர் பண்ணினீங்க..
வர்ற கோவத்துக்கு... "

வெங்கட் said...

@ சுதா..,

// இந்த கமெண்ட் நானும் போடலீங்க.. என் பேர்ல வெங்கட் தான் போட்டு இருப்பார்னு நினைக்கிறேன்..//

ஐயோ..
இந்த கமெண்ட் நானும் போடலீங்க..
என் நலம் விரும்பிகள் யாராவது
தான் போட்டு இருப்பாங்கன்னு
நினைக்கிறேன்..

ஏம்பா.. அப்படிகூட யாராவது
இங்கிட்டு இருக்கீங்களா..?

// நான் எப்பவும் நல்லவங்க கட்சி //

என்ன ஒரு வில்லத்தனம்..??

வெங்கட் said...

@ ஜெய்லானி..,

// மாதவனா யாரு அது ??? //

அவரா செல் போன் விக்கறவர்ங்க.,
( Univercell )

வெங்கட் said...

@ அனு..,

// எங்க சங்கத்துல வந்து ஒரு மாசம்
training எடுத்துக்கோங்க anonymous கமெண்ட்
எப்படி போடுறதுன்னு.. //

இப்பதான் எனக்கு புரியுது..
இதெல்லாம் எதிர்கட்சிகாரங்க சதி..

வேணும்னே என்னை புகழ்ற மாதிரி
ஒரு கமெண்ட் போட்டுட்டு.,
( அதுவும் ஆச்சரிய குறி, கேள்விக்குறி,
புல் ஸ்டாப்பு எல்லாம் என்னை மாதிரியே )

கடைசில அதை நானே போட்டுடேன்னு
சொல்றதா..??

பேசாம இந்த பதிவுக்கு
" என்ன ஒரு வில்லத்தனம்னு "
Title வெச்சி இருக்கலாம் போல..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்,

யப்பா... மொதல்ல ஒரு DISCLAIMER போடுப்பா " என் பதிவுகளை படிப்பதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல. முடிந்தால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளவும்" னு. எல்லாரும் ஒரேடியா கொழம்பி போய் இருக்கிங்க. ஒருவேளை நீங்க உங்கள மாதவன்னோட compare பணத்தால எலோருக்கும் கிறுக்கு புடுசிடுச்ச இல்ல உங்க கேள்வியாள இப்படி ஆகிட்டாங்களா?

அருண் பிரசாத் said...

@ வெங்கட்,

போன பதிவில் உங்களுக்கு ஒரு விருது கிடைத்ததிற்கு வாழ்த்துக்கள். இந்த பதிவிற்காக VKS சங்கம் சார்பாக நான் ஒரு விருது கொடுக்கிறேன், சொந்த செலவில் சங்கத்திற்கு வந்து சங்க தலைவியிடம் பெற்றுகொள்ளுங்கள்.....

விருது 1 :
எங்கள் சங்கத்தில் அடிக்கடி விரிசல் எற்படுத்த முயற்சிபதால் " ஜீன்ஸ் போட்ட சகுனி" என்றும்

விருது 2 :
இந்த பதிவில் அனைவரையும் நன்கு குழப்பியதால் " ஜீன்ஸ் போட்ட விசு" என்றும்

வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லோரும் ஜோரா ஒரு முறை கைதட்டுங்க.....

அனு said...

//வேணும்னே என்னை புகழ்ற மாதிரி
ஒரு கமெண்ட் போட்டுட்டு.,
கடைசில அதை நானே போட்டுடேன்னு
சொல்றதா..??//

//பேசாம இந்த பதிவுக்கு
" என்ன ஒரு வில்லத்தனம்னு "
Title வெச்சி இருக்கலாம் போல..//

இல்லைங்க... "உலக மகா நடிப்புடா சாமி"-னு வைங்க.. அது தான் க்ரெக்ட்டா இருக்கும்..

SUDHA said...

@ அனு.,

cool down
cool down
cool down
தூரத்துல இருந்து பார்த்தா தான் வெங்க‌ட் comedy-a இருப்பார்
கிட்டத்துல இருந்தா TERROR-a, இருப்பாரு TERROR-a..... ...

@வெங்க‌ட்

கொஞ்சம் ஓவரா தான் போறமோ....?

பாப்போம் என்னதான் நடக்குதுன்னு.....!

மங்குனி அமைச்சர் said...

என்னாப்பா எல்லாம் ஆன்டிகலாவே இருக்கு? நான் இந்த ஆட்டைக்கு வல்ல

வெங்கட் said...

@ அருண்.,

// எங்கள் சங்கத்தில் அடிக்கடி விரிசல்
எற்படுத்த முயற்சிபதால்
" ஜீன்ஸ் போட்ட சகுனி" //

விருதுக்கு நன்றி..!

இப்படி ஒரு விருது வாங்கிட்டு
சும்மா இருந்தா அது அந்த
விருதுக்கே கேவலமில்லையா..?
நம்ம வேலைய ஆரம்பிச்சிட
வேண்டியதுதான்...

இங்கிட்டு போயி பாருங்க
நம்ம வேலைய..( Comment Section-ல )

http://arunprasathgs.blogspot.com/2010/05/blog-post_24.html

வெங்கட் said...

@ அனு.,

// இல்லைங்க...
"உலக மகா நடிப்புடா சாமி"-னு வைங்க.. அது தான் கரெக்ட்டா இருக்கும்.. //

அனாவசியமா பச்சபுள்ள மேல
பாய்ஸன் தெளிக்காதீங்க..!!

வெங்கட் said...

@ சுதா.,

// கொஞ்சம் ஓவரா தான் போறமோ.? //

பார்ரா.. இதுல சந்தேகம் வேறயா..?
சாதாரணமா ஓவர்னா
6 பால்தான் கணக்கு..
நீங்க இதுவரை 32 பால்
போட்டு இருக்கீங்க..
( எல்லாமே No Ball )

வெங்கட் said...

@ மங்குனி,

// என்னாப்பா எல்லாம் ஆன்டிகலாவே
இருக்கு.? //

ஹி., ஹி.., ஹி..
Photo-ல இருக்கறவங்கள தானே
சொல்றீங்க..??
நானும் அதையேதான் நினைச்சேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாதவனா யாரு அது ???//

அது நம்ம டீ கடை மாதவன் நாயர் தாங்க. മാത്തവന്‍ നായര്‍.

cheena (சீனா) said...

வெங்கட்

கெஸ்ட் ரூம் சாவி வச்சுக்கற வேலை தான் குடுத்தானா நண்பன் - பாவம் நீ

ஆமா நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா