சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 May 2010

சீரியல் கில்லர்ஸ்...!!டிஸ்கி : இது ஒரு டெரர் பதிவு.,
பயந்த சுபாவம் உள்ளவங்க
படிக்க வேணாம்..

மெகா சீரியல்னா வெறும்
அழுவறது மட்டுமில்லைங்க.,

இப்பல்லாம் Trend மாறிடுச்சி..

எல்லா சீரியல்லயும்
குத்து, வெட்டு, அருவா,
துப்பாக்கி, கொலைன்னு
பக்கா Action தான்..

அதுவும் யாரையாவது
பழிவாங்கறதுக்கு Technic
யோசிப்பாங்க பாருங்க..
வித்தியாசமா இருக்கும்..

உதாரணதுக்கு ஒண்ணு

நல்லபாம்பை விட்டு
ஒருத்தரை கடிக்க வெக்கணும்..
அதுக்கு ஒரு ஐடியா...,

அவரோட ஒரு துணியை
நல்லபாம்புகிட்ட போட்டுட்டா
போதும்..
அது மோப்பம் பிடிச்சிட்டு
போய் அவங்களை Correct-ஆ
கடிச்சிடும்..

இதுவரைக்கும் யாருக்குமே
தெரியாத.., ஏன்.,
நல்லபாம்புக்கு கூட தெரியாத
இந்த விஷயத்தை உலகத்துக்கு
சொல்லி குடுத்தது
" தங்கம் " சீரியல் ( சன் Tv )

ஏம்பா..,
National Geography.,
Discovery Channel.,
இதையெல்லாம்
நோட் பண்ணுங்கப்பா., நோட் பண்ணுங்கப்பா.,
பின்றாங்கப்பா...!

Last But Not Least..

" அவனை நான் உயிரோட விட
மாட்டேன்..! "
இந்த டயலாக் எல்லா
சீரியல்லயும் வருது..

ஒருவேளை நம்மளத்தான்
சொல்லுறாங்களோ..??!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருள்.APJ )
தங்கத்துக்கும்., சொக்கதங்கத்துக்கும்
என்னங்க வித்தியாசம்..?

தங்கம் - சின்னதிரை மெகா கொடுமை

சொக்கத்தங்கம் - பெரியதிரை மகா கொடுமை


இன்று ஒரு தகவல் :
---------------------

மெகா சீரியல்ஸ் பார்த்திட்டே
சாப்பிடாதீங்க..

ஏன்னா..,
துன்பம் வரும்போது சிரிங்கன்னு
தான் சொல்லியிருக்காங்க.,
சாப்பிடுங்கன்னு சொல்லலையே..!
.
.

31 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அவரோட ஒரு துணியை நல்லபாம்புகிட்ட போட்டுட்டா போதும்.. அது மோப்பம் பிடிச்சிட்டு போய் அவங்களை Correct-ஆ கடிச்சிடும்..//

பாஸ் இது ராம.நாராயணன் சொன்னது. அவர் படமெல்லாம் பாக்குரதில்லையா?

வெங்கட் said...

@ ரமேஷ்..,

ஓ. ஒருவேளை இவரு அவரோட
அசிஸ்டென்டா இருப்பாரோ..!!??

malgudi said...

நல்ல கடி

Chitra said...

/////ஒருவேளை நம்மளத்தான்
சொல்லுறாங்களோ..??!!////


..... " அவனை நான் உயிரோட விட
மாட்டேன்..! " எங்கே பாம்பு? பித்தளையை எல்லாம், தங்கம் - சொக்க தங்கம்னு கூவி விக்குறாங்க......

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

LK said...

:D

arul Sudarsanam said...

சூப்பர் அப்பு...

வெங்கட் said...

@ சித்ரா..,

// அவனை நான் உயிரோட விட
மாட்டேன்.! " எங்கே பாம்பு? பித்தளையை எல்லாம், தங்கம் - சொக்க தங்கம்னு கூவி விக்குறாங்க... //

நான் தான் பயந்த சுபாவம்
உள்ளவங்க படிக்க வேணான்னு
டிஸ்கி போட்டேனே..!!
பாருங்க பயத்துல
என்னனென்னவோ சொல்றீங்க..

வெங்கட் said...

வருகைக்கும்., வாழ்த்துக்கும் நன்றிங்க..

@ மால்குடி
@ T.V.R சார்
@ LK
@ அருள் சுதர்சனம்

அனு said...

எத்தனை வருஷ காலமா இந்த மாதிரி innovative வழிகளை பார்த்து வருகிறோம்.

எதிரியை சிவப்பு கலர் ட்ரெஸ் போட வச்சு மாட்டுக்கு முன்னாடி நிறுத்துறது.. இச்சாதிரி(??) பாம்பு வந்து பழி வாங்குறது..

எனக்கு பிடிச்சது, ஒரு படத்துல, ரேவதி தலைவர் விஜயகாந்த் சொன்னார்னு மூச்சை அடக்கிட்டே தற்கொலை பண்ணிப்பாங்க..(படம் பேரு தெரியல.. ரமேஷ், ஹெல்ப் பண்ணுங்கப்பா).. செம லாஜிக்...

இது பத்தாதுன்னு இறந்தவரை உயிர் பிழைக்க வைக்குறது, உயிரோட இருக்குறவரை காணாம அடிக்குறது..

இந்த மாதிரி எவ்வளவோ பாத்துட்டோம்.. இதை பாக்க மாட்டோமா?

//" அவனை நான் உயிரோட விட
மாட்டேன்..! "// இதை நம்ம அவங்களை பாத்து சொல்லனும்..

டிஸ்கி:
@வெங்கட்: உங்க ப்ளாக்-கும் மெகா சீரியல்ஸ்-க்கும் உள்ள ஒரு ஒற்றுமைய பத்தி நான் கமெண்ட் போட கூடாதுன்னு நீங்க ரொம்ப கெஞ்சி கேட்டு கிட்டதால, நான் அதைப் பத்தி எழுதல..சரிதானே??

Keerthi Kumar said...

//தங்கம் - சின்னதிரை மெகா கொடுமை

சொக்கத்தங்கம் - பெரியதிரை மகா கொடுமை//

@ வெங்கட் - Mega - மகா ... என்னங்க வித்தியாசம்..?

Keerthi Kumar said...

உண்மைய சொல்லுங்க.... வீட்ல எல்லாரும் mega serial பார்த்துட்டு இருந்து சாப்பாடு போடலங்கற கொவத்துலதானே இதை எழுதினீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனக்கு பிடிச்சது, ஒரு படத்துல, ரேவதி தலைவர் விஜயகாந்த் சொன்னார்னு மூச்சை அடக்கிட்டே தற்கொலை பண்ணிப்பாங்க..//

படம் என் ஆசை மச்சான்..

Dinesh said...

அந்த படம் என் ஆசை மச்சான் ஆ... எனக்கு அது காந்தி பிறந்த மண் என்று ஞாபகம்...

Dinesh said...

நீங்க சொக்கதங்கம் படத்தை மகா கொடுமை என்று சொன்னதார்க்கு நான் என்னுடய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் என் ஆசை மச்சான்..thaan

அனு said...

@keerthi
// Mega - மகா ... என்னங்க வித்தியாசம்..?//

இது ஆங்கிலம், அது தமிழ்..
இது 'மெ', அது 'ம' (நோட் த கொம்பு)

இதெல்லாம் சொல்லி தரனுமா, சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி..

//சாப்பாடு போடலங்கற கொவத்துலதானே இதை எழுதினீங்க?//
இல்லீங்க.. சீரியல பாத்துகிட்டு வெங்கட் அன்னைக்கு சாப்பாடு சமைக்கலியாம்.. அதுக்கு கிடைச்ச dose-ஸொட effect தான் இது...

அனு said...

@Dinesh

சினிமா விஷயத்துல ரமேஷ் கூட போட்டி போடாதீங்க.. அந்த விஷயத்தில அவர் ஒரு நடமாடும் encyclopedia.. அவர் ப்ளாக்-க ஒரு தடவை போய் பாத்திருந்தீங்கன்னா, இப்படி சொல்லியிருக்க மாட்டீங்க...

வெங்கட் said...

@ அனு.,

// நீங்க ரொம்ப கெஞ்சி கேட்டு கிட்டதால,
நான் அதைப் பத்தி எழுதல..சரிதானே?? //

ரொம்ப சரி..
நீங்க இதை சொன்னா..
நான் அதை சொல்லிடுவேன்னு
உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே..!
So.., ரெண்டு பேரும் Agreement-ஐ
காப்பாத்துவோம்... ஓ.கே..

// ரமேஷ் கூட போட்டி போடாதீங்க..
அவர் ஒரு நடமாடும் encyclopedia.. //

எனக்கு ஒரு Doubt..
இப்ப நீங்க கேவலப்படுத்தினது
ரமேஷையா..?
Encyclopidia-வையா..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அனு நாமெல்லாம் ஒரே கட்சின்னு மறுபடியும் நிருபிசிடீங்க. தேங்க்ஸ்.
@ வெங்கட் Encyclopidia க்கு என்ன அர்த்தம்ன்னு முதல்ல dictionary பாருங்க. dictionary னா என்னனு தெரியுமா?

வெங்கட் said...

@ கீர்த்தி..,

// Mega - மகா ... என்னங்க வித்தியாசம்..? //

உன் கேள்விக்கு பதிலை
அனு சொல்லிட்டாங்களே..

ஆஹா வடை போச்சே..!

வெங்கட் said...

@ தினேஷ்.,

// நீங்க சொக்கதங்கம் படத்தை மகா கொடுமை
என்று சொன்னதார்க்கு நான் என்னுடய
கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்
கொள்கின்றேன்.//

சாரிங்க..,
என்ன இருந்தாலும் நான்
K.பாக்யராஜ் சார் படத்தை
அப்படி சொல்லி இருக்க கூடாதுதான்..

ஹி., ஹி., ஹி.,

Anonymous said...

adha vida maga kodumai

paambu kadicha nite full-a thoongama irukranmnu

andha veetu marumagalgala ra-ra song-ku dance aada vitu andha kudumbame paathu rasikara mathiri scene...

ayyo kadavule..

karmam da saami

வெங்கட் said...

@ சச்சனா..,

இந்த கொடுமை வேற நடந்துச்சா..?

எப்படி பூ சுத்தினாலும்
மக்கள் நாடகத்தை பார்க்கறாங்க..,
இவிங்க ரொம்ப நல்லவங்கப்பா..!!

அகராதி said...

@ரமேசு, வெங்கட்டு
அது Encyclopedia வா, இல்ல Encyclopidia வா? முதல்ல அதை கண்டுபிடிங்க.

Keerthi Kumar said...

@அனு .... உங்கள மாதிரி பெரியவா இருக்கறச்சே நான் இன்னும் சின்ன பிள்ளைதானே

@அகராதி... அகராதிய புடிச்சிகிட்டு ஏன் இப்படி அகராதித்தனம் பண்ணறீங்க...

வெங்கட் said...

@ அகராதி..,

இந்த Encyclopedia பத்தி எந்த விளக்கம்னாலும் அனுவை கேளுங்க..
நான் அவங்களை பார்த்து தான் பிட் அடிச்சேன்..

ஓ...,
அதையும் தப்பா அடிச்சிட்டேன் போல.

அனு said...

@all
ஏங்க.. என்ன இது??

இங்க ஏதாவது இலக்கிய/இலக்கன க்ளாஸ் நடக்குதா என்ன?

விடுங்கப்பா.. எங்க பாட்டி சொன்னதை அப்படியே சொல்றேன்.. கோழி குருடாங்குறது முக்கியமில்ல.. குழம்பு ருசியா இருக்குதான்றது தான் முக்கியம்..

அனு said...

ஹிஹி.. நானும் தப்பா போட்டுட்டேனா!!!

அது இலக்கனம் இல்லீங்கோ.. "இலக்கணம்".. its all in the game :)

Anonymous said...

hahaha..

vaivitu sirithu nall aitu..

anaithum arumai..

neenga gracy sisyan apdinu cholama puria vaikrenga.

nandri
valga valamudan
complan surya

cheena (சீனா) said...

அது சரி வெங்கட் - பதிலும் தகவலும் சூப்பர் வழக்கம் போல - அதுவும் இடுகையும் சீரியல் பத்தி - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா