சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 May 2010

ஹூம்ம்.. இவன் என் நண்பன்..!!
என் Friend ஒரு Medical Shop
வெச்சி இருக்கான்
Daily Evening அவன் கடையில
நான் ஆஜர் ஆயிடுவேன்..

Atleast ஒரு அரை மணி
நேரமாவது பேசிட்டு இருப்போம்..

அவனுக்கும் எனக்கும் ஒரு
பொது எதிரி உண்டு..

அந்த எதிரி எங்ககூட
படிச்சவன்.. - ஆனா
சரியான காரியவாதி..

So., அவன்கிட்ட நான்
சுத்தமாவே பேச்சு
வெச்சிக்கிறதில்ல..,

என் Friend மட்டும்
அப்பப்ப அவன்கிட்ட பேசுவான்..

நேத்து..,
எங்க எதிரி பைக்ல போனான்..

அப்ப என் Friend..

Friend : அங்கே போறான் பாருடா..
அவன் தான் என் Best Friend..!

நான் : அப்ப நானு..

Friend : உன்னைவிட அவன்
எவ்ளவோ தேவலை..! "

நான் : அடப்பாவி.., எப்படிடா சொல்ற..?

Friend : 1. அவன் Blog எழுதறதில்ல..,
2. என் Blog-ஐ படிச்சியான்னு.,
தினமும் என்னை தொந்தரவும்
பண்றதில்ல..!!

" கால் வெக்கிற இடமெல்லாம்
கண்ணி வெடி வெக்கறாங்களே..!!! "


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( நிர்மலா )
" Fire Service " - அவங்க என்ன
Fire-ஆ Supply பண்றாங்க..?
தண்ணி தானே கொண்டு வர்றாங்க.!
அப்ப ஏன் Fire Service-ன்னு பேர்..?

என்னாது Fire Service-ஐ
Water Service-ன்னு மாத்தணுமா..?
அப்புறம் பொம்பளைங்க
குடத்தோட வந்து வண்டியை
மறிச்சிட்டாங்கன்னா..?!

இங்கிலீஸ்காரன் எவ்ளோ
பெரிய அறிவாளி பாருங்க..
இதையெல்லாம் அப்பவே சிந்திச்சி
அப்படி பேரு வெச்சி இருக்கான்..


இன்று ஒரு தகவல் :
---------------------

Life-ல ஜெயிக்க ரெண்டே ரெண்டு
Rules தான் இருக்கு..

1. உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாம்
எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டு
இருக்காதீங்க..!

2.......................................................
.
.

27 Comments:

Chitra said...

கண்ணி வெடி....... "With friends like that, who needs enemies?" ha,ha,ha,ha,ha,ha....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்று ஒரு தகவல் பத்தி நான் சொல்ல விரும்பறது என்னன்னா....
----------------------------------------------------

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Atleast ஒரு அரை மணி
நேரமாவது பேசிட்டு இருப்போம்//

ஆரம்பத்திலேயே ப்ளாக் படிக்கச் சொன்னா ஓடிடுவானோன்னு பேச்சு முடிவுல (அரைமணி நேரம் கழித்து)தானே ப்ளாக் படிச்சியான்னு கேப்பீங்க? (எப்படித் தெரியும்னு பாக்காதீங்க, நாங்களும் ப்ளாக் வச்சிருக்கோமில்ல!)

அனு said...

எனக்கு 5 உண்மைகள் தெரிஞ்சாகனும்..

1. நீங்க எப்பொழுதுல இருந்து எங்க கட்சியில சேர்ந்தீங்க?

2. நீங்க ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் உங்க நண்பர் நிஜாமாவே உங்களை அவர் Medical Shopகுள்ள சேர்க்குறாரா?

3. உங்க ப்ளாக்-கு வர்றதே நாலு பேரு.. அதுலயும் ரெண்டு மூணு பேரு தான் கமெண்ட் போடுறாங்க.. ஆனா, ஹாய் வெங்கட் பகுதியில தினமும் ஒரு புதுப்புது பேர்ல கேள்வி வருது (அதுவும் mostly, பெண்கள் பேர்ல).. அதன் ரகசியம் என்ன?

4. ஹாய் வெங்கட் பகுதியில வர்ற கேள்விகள் எல்லாம் நீங்களா யோசிச்சு எழுதுறீங்களா? எங்கயாவது வாசிச்சதா? இல்ல ப்ரெண்ட்ஸ் கிட்ட கேள்விப்பட்டதா?

5. -------------------------
(எப்படியும் இதுக்கு answer பண்ண மாட்டீங்க.. அப்புறம் எதுக்கு கேள்விய waste பண்ணிக்கிட்டு..)

ரசிகன் said...

உங்க வீட்டுக்கு எதிர்ல பரோட்டா கடை வச்சிருக்கற உங்க Friend கூட.. "நல்ல வேளை எனக்கு எழுத படிக்க தெரியாது"ன்னு பெருமூச்சு விட்டதா காத்து வாக்குல செய்தி வந்தது....

அருண் பிரசாத் said...

...................................................................................................................................................................................................................................................................

கலாநேசன் said...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெங்கட் said...

@ சித்ரா.,

// "With friends like that,
who needs enemies?" //

அதே.. அதே..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி, அருண், கலாநேசன்

// ----------------------------- //

என்னாப்ப எல்லாரும்
கோடா போட்டு தள்ளறீங்க...
யார் யாரை பாத்து பிட்
அடிச்சீங்க..?!

வெங்கட் said...

@ பெ.சொ.வி,

// ஆரம்பத்திலேயே ப்ளாக் படிக்கச் சொன்னா
ஓடிடுவானோன்னு பேச்சு முடிவுல தானே
ப்ளாக் படிச்சியான்னு கேப்பீங்க..? //

ஆஹா., அப்படியே பக்கத்துல இருந்து
பார்த்த மாதிரி சொல்றீங்க..?

ஹூம்ம்..
ஒரு Blog ஓனரோட கஷ்டம்
இன்னொரு Blog ஓனருக்குதான்
தெரியும்னு சும்மாவா சொன்னாங்க..!

வெங்கட் said...

@ அனு.,
// ஹாய் வெங்கட் பகுதியில தினமும் ஒரு புதுப்புது பேர்ல கேள்வி வருது (அதுவும் mostly, பெண்கள் பேர்ல).. அதன் ரகசியம் என்ன? //

இப்படி கூடவா அபாண்டமா
பேசுறது..?

மே மாசம் கேள்வி கேட்டவங்க List..

நிர்மலா, ஜெகன், முருகன், பால கண்ணன்,
ஹாசினி, கீர்த்தி - 2 கேள்வி, பிரபு,
சரவணன் B.S, மேனகா மணிவண்ணன்
ரங்கநாதன், அருள் APJ - 2 கேள்வி

மொத்தம் : 13 கேள்வி
ஆண்கள் : 10 கேள்வி
பெண்கள் : 3 கேள்வி

பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட்
யுவர் ஆனர்..

வெங்கட் said...

@ அனு.,

// ஹாய் வெங்கட் பகுதியில வர்ற கேள்விகள்
எல்லாம் நீங்களா யோசிச்சு எழுதுறீங்களா? //

ஏதோ நல்லவங்க நாலு பேர்
கேள்வி அனுப்பறாங்க..
அது உங்களுக்கு பொறுக்கலையா..?

இந்த மெயில பாருங்க..


In fact i am visiting the blog only now after you
had started Q & A. please carry on.
All the questions were fine.
( Please note that i am not commenting the
answers given to them )

Regards,

S A Vasudevan
Chief Manager- Secretarial & Accounts
Arkema Peroxides India Private Limited
628-Anna Salai, Chennai-6000018, INDIA

ஏன் இந்த கொலைவெறி..?

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உங்க வீட்டுக்கு எதிர்ல பரோட்டா கடை
வச்சிருக்கற உங்க Friend கூட..
"நல்ல வேளை எனக்கு எழுத படிக்க
தெரியாது" ன்னு பெருமூச்சு விட்டதா
காத்து வாக்குல செய்தி வந்தது.... //

அட அதுக்குள்ள இந்த News
வெளியே தெரிஞ்சிடுச்சா..?
இந்த BBC-காரன் தொல்லை
தாங்க முடியலைப்ப..
ஏன் தான் என்னை
இப்படி Follow பண்றாங்களோ..!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Atleast ஒரு அரை மணி
நேரமாவது பேசிட்டு இருப்போம்..//

உங்க ப்ளாக்கோபோபியா வியாதிய பத்தியா?

LK said...

hmm nice post

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உங்க ப்ளாக்கோபோபியா வியாதிய பத்தியா.? //

இது தப்பு..
Phobia = பயம்
என் Blog பார்த்து மத்தவங்க
வேணா பயப்படலாம்..
எனக்கு என்ன பயம்..?
ஒருவேளை இது
" ப்ளாக்கோமேனியாவா " இருக்குமோ..??

( Mania = பேரார்வம் )

வெங்கட் said...

@ LK.,

// hmm nice post //

ஹி., ஹி.., ஹி..
நிசமாத்தான் சொல்லிறீங்களா..?

அனு said...

//ப்ளாக்கோபோபியா//
//ப்ளாக்கோமேனியாவா//

இங்க என்ன medical class-ஆ நடக்குது? ?என்ன பேர் சொன்னாலும் இது ஒரு Terror Blogன்றது மறுக்க முடியாத உண்மை..

phobia-ஓ mania-ஓ ரெண்டுமே normal கிடையாது.. இதை ஒத்துக்கிட்ட உங்க நேர்மை பிடிச்சிருக்கு, வெங்கட்..

அனு said...

//ஹி., ஹி.., ஹி..
நிசமாத்தான் சொல்லிறீங்களா..?//

இப்படியெல்லாம் கேக்காதீங்க.. அப்புறம், அவர் உண்மைய சொல்லிட போறாரு..

ரசிகன் said...

//அட அதுக்குள்ள இந்த News
வெளியே தெரிஞ்சிடுச்சா..?
இந்த BBC-காரன் தொல்லை
தாங்க முடியலைப்ப..
ஏன் தான் என்னை
இப்படி Follow பண்றாங்களோ..!? //

ம்ம்ம்... மக்கள் விரோத சக்திகள் List ல‌
பின்லேடனை பின்னுக்கு தள்ளிட்டு,
நீங்க முன்னேறிகிட்டு இருக்கீங்களாம்...
Follow பண்ணாம என்ன பண்ணுவாங்க..!!

ரசிகன் said...

Life‍ல Blogger ஆக‌ ரெண்டே ரெண்டு
Rules தான் இருக்கு..

1. உங்க‌ளுக்கு தெரியுமோ தெரியாதோ..
ஏதாவ‌து சொல்லிகிட்டே இருங்க‌...

2.Point no 1 ல‌ ரெண்டு comma (,)& 3 ஆச்ச‌ர்ய‌ குறி சேர்த்து,
அதையே ஒரு blogஆ போட‌ற‌ techniqueஐ க‌த்துகோங்க‌..

வெங்கட் said...

@ அனு

// என்ன பேர் சொன்னாலும் இது
ஒரு Terror Blogன்றது மறுக்க முடியாத உண்மை.. //

இருந்தாலும் இவ்ளோ
தன்னடக்கம் கூடாது..
அது Terror Blog-ஆ மாறுனதே
நீங்க Comment போட வந்ததுக்கு
அப்புறம் தானேங்க..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// மக்கள் விரோத சக்திகள் List ல‌
பின்லேடனை பின்னுக்கு தள்ளிட்டு,
நீங்க முன்னேறிகிட்டு இருக்கீங்களாம்... //

இதை நான் வன்மையா கண்டிக்கறேன்..
நான் பொறுமையா இருக்கேன்னு
எதை வேணா சொல்லுறதா.??

பின்லேடன் எப்ப நமக்கு
முன்னாடி இருந்தாரு..?
அவருக்கு எப்பவுமே 2nd Place தானே..
ஹி., ஹி., ஹி..

ரசிகன் said...

//பின்லேடன் எப்ப நமக்கு
முன்னாடி இருந்தாரு..?//

பின்லேடன், 90's லயே Al Qaeda Start பண்ணிட்டார்...
Till Dec2009 20 வருஷமா அவர் தானே No1.
ஆனாலும் இந்த Janல Blog ஆரம்பிச்ச நீங்க அவர
அசால்டா overtake ப‌ண்ணிட்டீங்கன்னு சொல்ல வந்தேன்..
அது mis communicate ஆகிடுச்சு... Sorry boss.

வெங்கட் said...

@ ரசிகன்.,

// பின்லேடன், 90's லயே Al Qaeda Start பண்ணிட்டார். Till Dec2009 ,
20 வருஷமா அவர் தானே No1. //

இதுல லாஜிகே இல்லையே..

ஒரே ஒரு பையன் மட்டும்
ஓடிட்டு., நான் தான் ரன்னிங்ல
First-ன்னு சொன்னா எப்படி..?

போட்டிக்கு ஆள் வேணும்ங்க..
அப்பதான் No.1., No.2., யார்னு
முடிவு பண்ணமுடியும்..

அதான் Jan-க்கு அப்புறம்
பின்லேடன் No.2- ன்னு
நீங்களே சொல்லிட்டீங்களே..!!

Madhavan said...

//இங்கிலீஸ்காரன் எவ்ளோ
பெரிய அறிவாளி பாருங்க..
இதையெல்லாம் அப்பவே சிந்திச்சி
அப்படி பேரு வெச்சி இருக்கான்..//

HA HA HA..

cheena (சீனா) said...

இபடித்தான் நமம் நண்பர்கள் எல்லாம் கால வாருறாங்க - நான் அதனால் எழுதறதேயே நிறுத்திட்டேன் - நம்புங்க சாமிகளா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா