சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 June 2010

ஆஹா., நாமளும் Century போட்டுடோம்ல..!!


இது என் 100-வது Posting..

ஒரு புதுமையான,
Different-ஆனா,
அதிரடியான Posting-ஐ
எதிர்பார்த்தீங்களாக்கும்...!

நான் தான் சொல்றேன்னா
நீங்களாவது
யோசிக்க வேணாம்..?!

99 Posting-ல முடியாதது.,
100-வது Posting-ல மட்டும்
இவனால எப்படி முடியும்..?!!

ஒண்ணா இருந்தா என்ன..,
நூறா இருந்தா என்ன..?

நம்ம வழி எப்பவும்
அதே குறுக்கு வழி தான்..!!

For Eg..
இப்ப சைக்கிள் ஓட்ட
கத்துக்கறோம்.,

கத்துகிட்டு 100 நாள்
ஆயிடிச்சீங்கறதுக்காக
ஸ்பெஷலா தலைகீழாவா
ஓட்ட முடியும்..?

ஹி., ஹி.., ஹி.

FAQ :
--------

1. " நான் மாதவன் சாயல்ல இருக்கேன்னு "
நீங்களே அடிக்கடி சொல்லிக்கறீங்களே.
இது உங்களுக்கே ஓவரா தெரியல..?

I Strongly Object this..

" நான் மாதவன் சாயல்ல இருக்கேன்னு "
சொன்னதே கிடையாது..

" மாதவன் என் சாயல்ல இருப்பார்னு "
வேணா சொல்லி இருக்கேன்..

ஹி., ஹி.,ஹி..!

காந்தியை சுட்டது கோட்சே ன்னு
சொல்லலாம் - ஆனா
கோட்சே சுட்டது காந்தியை ன்னு
சொல்லக்கூடாது..!!

Check பண்ண
இங்கே Click பண்ணுங்க..


2. எதாவது உருப்படியா.,
Informative-ஆ எழுதலாம்ல..?

நான் என்ன வெச்சிகிட்டாங்க
வஞ்சனை பண்றேன்..?!


3. நீங்களும் மத்த Bloggers மாதிரி
கார சாரமா எதாவது எழுதலாமே..?

இவ்ளோ தானே உங்க ஆசை..
எழுதிட்டா போச்சு..

மிளகா பஜ்ஜி., இஞ்சி மரப்பா.,
பச்சை மிளகா., வர மிளகா.,
சில்லி சிக்கன்., மிளகு.,

இந்த காரம் போதும்களா..??


4. உங்களுக்கு 63 Followers இருக்காங்க.,
ஆனா Vote மட்டும் 10 தான் விழுவுது..
ஏன்..? ( இத்தனைக்கும் நானே
ரெண்டு Votes போடறேன்.. )

ஹி., ஹி., ஹி..!
Same Pinch..
யாரப்பா மீதி அந்த 6 நல்லவங்க..!


5. எப்படிங்க உங்களால தொடர்ச்சியா
100 ___________ Posting போட முடிஞ்சது..?
( மொக்கை, சூப்பர் )

ஹா., ஹா., ஹா..,

இது என் 100-வது Posting..
So., இன்னிக்கு பஞ்ச்
டயலாக் English-ல..

" Extraordinary has always
been Ordinary for me..!! "


இன்று ஒரு தகவல் :
---------------------

உங்களை எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..

So., Next Posting கொஞ்சம் லீவ்
விட்டு போடலாம்னு இருக்கேன்..

எவ்ளோ நாள் லீவ் வேணும்..?
3, 7 , 10 ( or ) 30..?
சரி Poll-ல Vote போட்டு
நீங்களே Decide பண்ணிக்கோங்க..

ஆனா.,
ஒரு மாசத்துக்கு மேல லீவ் கேட்டு
யாரும் எங்கிட்ட வராதீங்க..

அவ்ளோ நாள் உங்களை
சந்தோஷமா இருக்க விட
கம்பேனி Rules-ல இடமில்ல..
.
.

43 Comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

நூறு மொக்கை கண்ட சிங்கம் (பெண் சிங்கம் அல்ல) வாழ்க..

இன்னைக்கு மிச்ச ஆறு பேர்ல நானும் ஒருத்தன்..

ஜில்தண்ணி said...

வாங்க எல்லோரும் ஓட்டுப் போடுங்க
இவுர ஒரு 15 நாளாவது சும்மா இருக்க வைக்கனும்

100 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் நண்பரே

வெறும்பய said...

ஒரு புதுமையான,
Different-ஆனா,
அதிரடியான Posting-ஐ
எதிர்பார்த்தீங்களாக்கும்...!

////

அது எப்படி 99 பதிவுல எதிர்பாக்காதது இந்த 100 வது பதிவுல எதிபார்க்க முடியும்.

100 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

first of all congrats...

கத்துகிட்டு 100 நாள்
ஆயிடிச்சீங்கறதுக்காக
ஸ்பெஷலா தலைகீழாவா
ஓட்ட முடியும்..?

தன்னடக்கம்!!!!!!!!

எப்படியோ 100 வது பதிவு என்பதையும் சொல்லியாச்சு..

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள்!
Century போட்ட சிங்கம்,
எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கும் தங்கம்,
வருங்கால ஜனாதிபதி வெங்கட்

வாழ்க! வளர்க!!

தொடர்க உங்கள் பணி!
கருத்துசொல்ல நாங்க ரெடி!!
( அட கவிதை, கவிதை - நோட் பண்ணுங்கப்பா!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். ஒரு படம் நூறு நாள் ஓடுனா அந்த படத்துல வேலை பாத்தவங்களுக்கு ஷீல்டும், பணமும் கொடுப்பது வழக்கம். உங்க நூறாவது பதிவு வரைக்கும் கூட இருந்த எங்களுக்கு எப்ப விழா எடுத்து ஷீல்டும், ஐம்பதாயிரம் பணமும் கொடுக்க போறீங்க?

எட்வின் said...

நூறுக்கு வாழ்த்துக்கள்

Anani said...

Valthukkal thala ...
Thodarndhu meendum 100 mokkai pathivai ethirparthu irukkum ungal visiri

Madhavan said...

//" நான் மாதவன் சாயல்ல இருக்கேன்னு "
சொன்னதே கிடையாது..

" மாதவன் என் சாயல்ல இருப்பார்னு "
வேணா சொல்லி இருக்கேன்..//


உண்மையான 'மாதவன்' நான்தான்..

மங்குனி அமைச்சர் said...

அந்த ஆறு பேருல ஒருத்தன் நான் ........................... இல்லைங்கோ

சி. கருணாகரசு said...

நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//
Century போட்ட சிங்கம்,
எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கும் தங்கம்,
வருங்கால ஜனாதிபதி வெங்கட்

வாழ்க! வளர்க!!//

ங்கொய்யால.....வாங்கின காசுக்கு மேல கூவுறாருப்பா....

By the way, Congrats for the century.

The blogger of the century completes century!

Sen22 said...

Congrats for ur Century..

அனு said...

நூறு ஒரு சாதாரண நம்பர் இல்லைங்க.. It represent perfection, purity & wholeness..

எதையும் ஒப்பிடனும்னா இதைத்தான் baseஆ use பண்றோம் (Percentage)..
நூறு ஆயுசுன்னு தான் சொல்றோம்..
நிறைய விசயங்களை நூறு பகுதியா தான் பிரிக்கிறோம் (for eg. Rupees = 100 coins)..
சச்சின் நூறு போட்டா அதோட மதிப்பே தனி தான்..

எல்லாத்துக்கும் மேல, படிக்குறப்போ answer sheetல அந்த நம்பர பாக்குறதுக்கு தானே போராட்டமே ( இது வரைக்கும் நான் அதுல successfully unsuccessfulஆவே இருக்கேன்)..

அப்படியாப்பட்ட நூற achieve பண்றது அவ்வளவு ஈஸி இல்லைங்க.. சந்தோஷமா இருக்கு.. உங்க நூறு பதிவுகளை படிச்சு இன்னைக்கு அந்த நம்பரை கஷ்டப்பட்டு பிடிச்சுட்டேன் (+ உயிரோட இருக்கேன்).. என்னோட இந்த achievementஐ முன்னிட்டு நீங்கள் ஏன் எனக்கு ஒரு விருது வழங்க கூடாது???

டிஸ்கி:
Actually, நான் சொல்ல நினைச்சது என்னன்னா, "நூறுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்!!!"

Madhavan said...

//எவ்ளோ நாள் லீவ் வேணும்..?
3, 7 , 10 ( or ) 30..?
சரி Poll-ல Vote போட்டு//

'Indefinitely' -- இந்த ஆப்ஷன் இல்லையே ஏன் ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எவ்ளோ நாள் லீவ் வேணும்..?
3, 7 , 10 ( or ) 30..?
சரி Poll-ல Vote போட்டு
நீங்களே Decide பண்ணிக்கோங்க
//

லீவ் போடுறது எல்லாம் எங்க வேலை. சூரியனுக்கு எது ஓய்வு?

அனு said...

@அருண்

//(அட கவிதை, கவிதை - நோட் பண்ணுங்கப்பா!)//

கவிதையா? எங்கே?? எங்கே??

அனு said...

@ரமேஷ்
விழாவுக்கு என்னையும் கூப்பிடுங்கப்பா...

அனு said...

@பெ.சொ.வி

//ங்கொய்யால.....வாங்கின காசுக்கு மேல கூவுறாருப்பா....

By the way, Congrats for the century.

The blogger of the century completes century!//

"blogger of the century"ஆ??
உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார் வெங்கட்??

அனு said...

@Madhavan

//'Indefinitely' -- இந்த ஆப்ஷன் இல்லையே ஏன் ?//

'இன்னைக்கு' நம்ம ஒரு நாள்-னு சொன்னா நூறு நாள் மாதிரி.. ஸோ, ஒரு மாதம் optionஅ கிளிக் பண்ணினீங்கன்னா, almost தப்பிச்சுக்கலாம் (அதான், 2012ல உலகம் அழிய பொகுதாமே..)

அருண் பிரசாத் said...

@ அனு

VKS சங்க தலைவி என்பதை மறுபடி ஒரு முறை நிருபித்துவிட்டீர்கள்.

பாரபட்சம் இல்லாம கலாய்கராங்கபா. கட்சி மாறிடலாமா?

@ வெங்கட்

VAS (வெங்கட்டை ஆதரிப்போர் சங்கம்) - இல் vacancy இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விழாவுக்கு என்னையும் கூப்பிடுங்கப்பா...//

அணு எங்களுக்குன்னு சொன்னது உங்களையும் சேர்த்துதானே. இப்படி பிரிச்சு பேசலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//VAS (வெங்கட்டை ஆதரிப்போர் சங்கம்) - இல் vacancy இருக்கா?//

அருண் கட்சியே ஆரமிக்கலை. அதுக்குள்ளே சீட்டு வேனுமாயா? போகாத ஊருக்கு வழி கேக்ககூடாது...

அக்பர் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

ரசிகன் said...

Heartiest Congradulations... For the Quick and efficient Century !!!! நாங்க Fast,Spin,Bouncer என்ன போட்டாலும் சளைக்காம தடுத்தாடி இருக்கீங்க...

(இதுக்கு மேல பேசினா சங்கத்துல Charge sheet குடுத்துடுவாங்க..)

அது சரி.. இது சச்சின் Double Century போட்ட Match photoவாச்சே.. இதை எதுக்கு இங்க போட்டீங்க.?

சரி சரி..நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்.. Try பண்ணுங்க‌.. All the very best for the double century.

ஸ்ரீ.... said...

100 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சதங்களை அடைவதற்கும்!

ஸ்ரீ....

வெங்கட் said...

வாழ்த்து சொன்ன அனைத்து
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..!!

இந்த Achievement-க்கு நான்
மட்டுமே காரணம் இல்ல..
என் Blog-ல Comments
போடறவங்களுக்கும் இதுல
பங்கு இருக்கு..

ஜனா : என் நண்பன்.,
நான் எப்படி எழுதினாலும்
என்னை பாராட்டி Comment போடுவான்.
இதுதான் இவன்கிட்ட எனக்கு பிடிச்சது.
வேலை காரணாமா முன்னே மாதிரி
இப்பல்லாம் Comments போடறதில்ல..
" Return of the Dragon " - எப்போ..?

அனு : நான் எப்படி எழுதினாலும்
என்னை கலாய்ச்சி தான் Comment
போடுவாங்க. இதுதான்
இவங்ககிட்ட எனக்கு பிடிச்சது.

என் Blog Famous ஆகணுன்னு
என்னை விட இவங்களுக்கு
அக்கறை அதிகம்..
இவங்க Profile-ல Blogs Follow-ல
நம்ம Blog பேர் மட்டும் தான் இருக்கும்..
Thanks.....

ரசிகன் : ஆரம்பம் முதல் எனக்கு
Comment போடறவர்.. நடுநிலைவாதி..
பதிவு நல்லா இருந்து கைதட்டவும்,
சொதப்பலா இருந்தா குட்டவும்
செய்வார்.

After all ஒரு சதுர செயலாளார் பதவிக்கு
ஆசைப்பட்டு இவரும் இப்ப கட்சி
மாறிட்டாரேன்னு பீலிங்கா இருக்கு..


ஜெகன் : என் நண்பன் தான்,
பதிவு போடறதுக்கு முன்னாடி
இவன்கிட்ட தான் Opinion கேட்பேன்..

இவன் " பதிவு நல்லா இருக்குன்னு "
சொன்னா. - அது சொதப்பலாவும்.,

" பதிவு சொதப்பலா இருக்குன்னு "
சொன்னா. - அது Super Hit ஆகறது
இன்னிக்கு வரை நடந்துகிட்டு இருக்கு.


ரமேஷ் : இவர் சொந்தமா Blog ஆரம்பிச்ச
பிறகு ஒரு வரியில Comment போட
ஆரம்பிச்சிட்டார்.. ஆனா அதுவும்
கலக்கலா தான் இருக்கு..


சித்ரா : இவங்க ஒரு பின்னூட்ட புயல்.
நான் பதிவு போட்டுட்டு Refresh
பண்றதுக்குள்ள் இவங்க
Comment வந்து இருக்கும்..
Very Very Fast..

சீனா சார் : ஒரு நாள் காலையில
எழுந்து பார்த்த 56 Comments வந்து
இருந்தது.. எல்லாம் இவர் அனுப்பினது.
அன்பின் வெங்கட்னு இவர் ஆரம்பிக்கிற
அழகே தனி.,

என்னை வலைசரத்துல எழுத இவர்
கூப்பிட்டு 1 மாசத்துக்கு மேல ஆகுது..
கொஞ்சம் டைம் கேட்டு இருக்கேன்.
ஆனா என்னால அங்கே எழுத
முடியுமான்னு இன்னும் எனக்கு
Doubt-ஆ தான் இருக்கு..

அதுக்கு நிறைய Homework பண்ணனும்.
அதான் யோசனையா இருக்கு..

சுதா : எல்லா வடிவேல் டயலாக்கையும்
எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுட்டு
எனக்கு அதை சமயம் பார்த்து
Comment-ஆ போடுவாங்க..
பதில் சொல்றதுக்கு வடிவேல் டயலாக்
தேடினா எனக்கு ஒண்ணு கூட கிடைக்காது.

பெ.சொ.வி : நான் இங்கே Use பண்ணின
Tecniques எல்லாம் இவர் அவர் Blog-ல
ஏற்கனவே Use பண்ணி இருக்கார்.
கடைசில பார்த்தா நான் இவரை
காப்பி அடிச்ச மாதிரி ஆயிடிச்சி..

// " The blogger of the century completes century.! " //

ஹி., ஹி., ஹி..!
இது பொய்ன்னு தெரியும்..
இருந்தாலும் சந்தோஷமா இருக்கு..

அனானி ( பொன் ) : இவர் நான் Blog
ஆரம்பிச்சப்ப இருந்து Comment போடுறார்.
எப்பவும் இவர் நம்ம கட்சி..
என்னை Support பண்ணினா தன்னையும்
கும்மிடுவாங்களோன்னு பயந்துட்டாரே
என்னவோ. இப்பல்லாம் Only Mails.

கீர்த்தி & கிரிஷ் : என் மச்சான்கள்.,
ஒரு சில Comments தான் போட்டு
இருக்காங்க. இருந்தாலும் Super Comments.

அருண் : இவர் புது வரவு.,
VKS-ல இருந்து VAS மாறலாமான்னு
யோசனை பண்ணிட்டு இருக்கார்..

வாங்க வாங்க.. VKS-ல உங்களுக்கு
சதுர செயலாளர் பதவி தான் குடுப்பாங்க..
இங்கே நான் பொது செயலாளர் பதவியே
குடுக்கறேன்..

கவிதா : இவங்களும் புது வரவு..,
என்னை கலாய்க்காம Comments
போடறாங்க.. நீங்க இப்படியே
கடைசி வரக்கும் நல்லவங்களா
இருப்பீங்கன்னு நம்பறேன்.


மற்றும் இங்கே Comment போடும்
எல்லாருக்கும் நன்றிகள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// அதுக்கு நிறைய Homework பண்ணனும்.
அதான் யோசனையா இருக்கு..
//

உங்க பையனுக்கு நீங்க homework எழுதுற மாதிரி உங்களுக்கு உங்க பையன Homework எழுத சொல்லுங்க. எப்பூடி.

ராஜேஸ்வரி said...

@ வெங்கட்,

உங்களுக்கும், உங்களுக்கு கமெண்ட் போடுறவங்களுக்கும்
வாழ்த்துக்கள். உங்க பிளாக்ல ஒரு ஸ்பெஷாலிட்டியே
பதிவு + கமெண்ட்ஸ் சேர்த்து படிக்கறது தான்.
உண்மையை சொல்லணும்னா உங்க பதிவை விட
சில சமயம் கமெண்ட்ஸ் நல்லா இருக்கும்.

நீங்க குடுத்து வெச்சவர். எல்லொரும் எனோ தானோன்னு
கமெண்ட்ஸ் போடாமா அவங்க சிந்தனைகளை இங்கே விதைக்கறாங்க.

அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சேன்.
அப்ப தான் ஒரு விஷயம் தோணிச்சி. நீங்க எங்கேயும் " என் பிளாக்னு "
சொல்றதே இல்ல. எப்பவும் " நம்ம பிளாக்னு " தான் சொல்றீங்க அதான்
எல்லொரும் அவங்க பிளாக் மாதிரி ஒண்றிட்டாங்க போல இருக்கு.
வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எங்கேயும் " என் பிளாக்னு "
சொல்றதே இல்ல. எப்பவும் " நம்ம பிளாக்னு " தான் சொல்றீங்க அதான்
எல்லொரும் அவங்க பிளாக் மாதிரி ஒண்றிட்டாங்க போல இருக்கு.
வாழ்த்துக்கள்//

தனியா அடிவாங்க முடியாதில்ல அதான் நம்ம ப்ளாக் அப்டின்னு எஸ்கேப் ஆகிறார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மையை சொல்லணும்னா உங்க பதிவை விட
சில சமயம் கமெண்ட்ஸ் நல்லா இருக்கும்.//

அதென்ன சில சமயம். எப்பவுமே அப்படிதான். இந்த கமென்ட் போடுறதுக்கு வெங்கட் எவ்ளோ காசு கொடுத்தார் ராஜேஸ்வரி

அனு said...

@ராஜேஸ்வரி
//நீங்க எங்கேயும் " என் பிளாக்னு "
சொல்றதே இல்ல. எப்பவும் " நம்ம பிளாக்னு " தான் சொல்றீங்க//

ஹிஹி.. நீங்க இன்னைக்கு வெங்கட் போட்ட கமெண்ட்-ட பாக்கலன்னு நினைக்கிறேன்..
[சும்மா.. விளையாட்டுக்கு ;-) ]

@வெங்கட்

எங்க ஏரியாவுல ஒரே வெள்ளக்காடா இருக்குது.. எல்லாம் நீங்க வச்ச ஐஸ் தான்.. அடிக்கிற வெயில் தாங்காம எல்லாம் உருகி ஓடுது.. வெள்ள நிவாரண நிதி திரட்ட வேண்டியது உங்க பொறுப்பு...

வெங்கட் said...

@ ராஜேஸ்வரி.,

நீங்களாவது என் நல்ல மனசை
புரிஞ்சிக்கிட்டீங்களே..
சந்தோஷம்..
Comment போடறதுக்கு முன்னாடி ஒரு
வார்த்தை சொல்லி இருக்க கூடாதா..?

இன்னிக்கு பாருங்க என்னையும் அறியாம
என் Blog-ன்னு ரெண்டு தடவை எழுதிட்டேன்..
உங்க Comment படிச்சவுடனே Feelings ஆயிடிச்சி..
அதை ரப்பர் போட்டு அழிச்சிடுங்க..

இனிமே எப்பவும் இது " நம்ம Blog " தான்..

அருண் பிரசாத் said...

//காந்தியை சுட்டது கோட்சே ன்னு
சொல்லலாம் -
ஆனா
கோட்சே சுட்டது காந்தியை ன்னு
சொல்லக்கூடாது..!!//

என்னாது காந்தியா சுட்டுடாங்களா? உயிரோட இருக்காரா இல்லையா?

kartin said...

ஹலோ மாதவன்!

................பிடிச்சிருக்கு baasu :)

நூறுக்காவது வந்துட்டேனே! நிறைய எழுதுங்க!

கலாநேசன் said...

நூறுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சார் கோகுலத்தில்சூரியன் ப்ளாக் ஓனருங்களா சொற் ப்ளாக் எப்ப சார் திறப்பீங்க?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

ஏன் கலாய்க்க வேற ஆள்
கிடைக்கலையா..?

ம்ம்.. எப்படியோ Poll-ல
3 நாள் தான் லீவ் வேணும்னு
அதிகம் பேர் கேட்டு இருக்கீங்க..
So., நாளைக்கு நம்ம Blog
திறக்கப்படும்...

ஊரைவிட்டு ஓடிபோறவங்க
எல்லாம் இப்பவே ஓடிபோலாம்..
ரெடி., ரைட்.. ஜூட்..

அனு said...

@ரமேஷ்

//சார் கோகுலத்தில்சூரியன் ப்ளாக் ஓனருங்களா சொற் ப்ளாக் எப்ப சார் திறப்பீங்க//

நூறு அடிச்சுட்டார்ல..

இனிமே இப்படிதான்..[தமிழ்ப்படம் ஸ்டைல்ல படிங்க :) ]

@வெங்கட்

இது டூ மச்-ங்க.. minimumமே மூணு நாள் தானே optionல போட்டிருக்கீங்க?

Torture இல்லாம அமைதியா சந்தோஷமா இருக்குறதுக்கு எனக்கே bore அடிக்குது.. சீக்கிரம் வந்து ஆரம்பிங்க... 100(not out)-க்கு அப்புறம் அடிச்சு ஆட வேணாமா??

Anonymous said...

//உங்க பிளாக்ல ஒரு ஸ்பெஷாலிட்டியே
பதிவு + கமெண்ட்ஸ் சேர்த்து படிக்கறது தான்.
உண்மையை சொல்லணும்னா உங்க பதிவை விட
PALA சமயம் கமெண்ட்ஸ் நல்லா இருக்கும்.// Heartiest Wishes to Ramesh-rombanallavan/Anu/Arun prasad/jill thanni/Rasigan/Chitra...."Venkat".

கவிதா said...

முதல்ல 100-வது பதிவுக்கு
என்னுடைய மனமார்ந்த
வாழ்த்துக்கள்,
உங்களுடைய அடுத்துவரும்
பதிவுகளில் நான் அதிகம்
எதிர்பார்க்கிறேன்.என்னுடைய
எதிர்பார்ப்பு சரியானு தெரியலே,
இருந்தாலும் இது என்னுடைய
மேலான கருத்து அவ்வளவுதான்.

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

சதமடித்தமைக்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - அததனையும் நகைச்சுவை - நன்று நன்று - நலமே வாழ்க !

வலைச்சரம் பற்றி நினைவிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி

நட்புடன் சீனா

Gayathri said...

wow 100 postsa? பெரிய ஆளுங்க நீங்க ,வாழ்த்துக்கள். நான் வலைபதிவு உலகத்திர்க்கு புதுசு உங்க ப்லக் ல தன் மற்ற பதிவர்களைப்பற்றி தெரிஞ்ஜுகரேன்.

உங்கள் சேவை பதிவுலகத்திர்க்கு தேவை !