16 May 2010
எங்கே எனது கவிதை..?!!
எனக்கு கருத்துள்ள கவிதை
எழுத வராதுன்னு நேத்து
ரசிகன் கிண்டல் பண்ணிட்டார்..
இலக்கிய வட்டாரம்
இந்த கிண்டலை கேள்விபட்டா
கொந்தளிச்சி போயிடுமே..!!
நான் காலேஜ் படிக்கும் போது
எனக்கு கவிதை அருவி
மாதிரி கொட்டும்..
அதை நான் என் டைரில
பிடிச்சி வெச்சுப்பேன்..
அதையெல்லாம் வரிசையா
எழுதி தள்ளிடலாம்னு முடிவு
பண்ணி என் கவிதை
டைரிய தேடிட்டு இருந்தேன்..
என் கெட்ட நேரமோ.. இல்ல..,
உங்க நல்ல நேரமோ தெரியலை
அந்த டைரி கண்ணுல சிக்கவேயில்ல..
( ஒருவேளை இன்னிக்கும்
நீங்க தப்பிச்சிகுவீங்களோ..?! )
விடக்கூடாது..
இதென்ன கெட்ட பழக்கம்..?
அதான் நடுவில ஒரு நாள்
லீவ் விடறேன்ல..
அன்னிக்கு மட்டும் சந்தோஷமா
இருந்தா போதாதா..?! - அப்புறம்
வாழ்க்கையில கஷ்டம்னா
என்னான்னு தெரியாமலே
போயிடுமே..
ஆங்.. கிடைச்சிடுச்சி...
என் பீரோ மேல இருந்த
ஒரு சூட்கேஸ்ல இருந்தது...
இடைபட்ட நேரத்துல வீடு
கொஞ்சம் அலங்கோலம்..
புதையல் கிடைச்சிருக்குல்ல
இது கூட ஆகலைன்னா எப்புடி..?
இதை பார்த்த என் Wife.
" ஏங்க இப்படி குப்பைய கிளறிட்டு
இருக்கீங்க..! "
என் கவிதை = குப்பையா..?
இதுக்கு ரசிகனே பரவாயில்ல
போல இருக்கே..
நான் டென்ஷன் ஆயிட்டேன்.,
So.., என் டைரிலஇருந்த
கவிதைகளை நான் இங்கே
எழுத போறதில்ல..
( என்ன சிரிப்பு..!? )
ஒருவேளை
என் Wife-வோட Statement-ஐ
நான் Confirm பண்ணின
மாதிரி ஆயிடிச்சின்னா..!!??
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( கீர்த்தி, லண்டன்ல இருந்து 60 மைல் தள்ளி )
"நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா..,
எதுவுமே தப்பில்ல" ஒத்துக்கறேன்
நாலு பேருக்கு எதுவும் நடக்கலைன்னா..,
எல்லாமே தப்புதானே..?
இதுக்கு நான் " ஆமாம்னு " பதில்
சொன்னா.. உடனே
" Blog எழுதறதை நிறுத்துங்கன்னு "
சொல்லுவீங்க..
எனக்கு தெரியும்லே உங்கள பத்தி..
இன்று ஒரு தகவல் :
---------------------
இன்னிக்கு அட்சய திருதியை.
நகை வாங்கினா ரொம்ப நல்லது..
( நகை கடைகாரங்களுக்கா..? )
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
நான் கொஞ்சம் கேப்பு விட்டா ஆளாளுக்கு எழுதக் கெளம்பிடுவீங்களே... இருங்க அடுத்த வாரம் நானும் எழுதுறேன்... :))
//எனக்கு கருத்துள்ள கவிதை
எழுத வராதுன்னு நேத்து
ரசிகன் கிண்டல் பண்ணிட்டார்..//
எழுத வராதுன்னு சொல்லல..
புரியாதுன்னுதான் சொல்லி இருந்தேன்..
(எழுதறது எல்லாமே புரிஞ்சா எழுதறோம்..?
எவ்ளோ Exam எழுதி இருக்கோம்..)
ஆனாலும் தலைப்பும், தொடக்கமும் பார்த்து..
சும்மா கிடந்த சங்கை ஊதிட்டோமோன்னு பயந்துட்டேன்..
நல்ல வேளை.. கடைசில ..
வயத்துல பாலையும், வாயில சிரிப்பையும்
சேர்த்து வார்த்தீங்க...
இல்ல.. அனு வும் ரமேஸும் என்ன பின்னி இருப்பாங்க..
நல்லா இருக்கு உங்கள் க(வி)தை. உங்களுக்கு தெரியுமா நீங்க கவிதை எழுதினா மாதிரி நானும் ஒரு படம் வரைஞ்சிருக்கேன். இங்க போய் பாருங்க.
http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.html
//நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு கவிதை அருவி மாதிரி கொட்டும்..//
தம்பி இப்ப அருவிலையே தண்ணி இல்லை. அப்டின்னா வேங்கட்டோட கவிதை எப்படி இருக்கும்னு மகா ஜனங்களே யோசிங்க. ரசிகன் நீங்க தப்பிச்சிட்டீங்க. அந்த பயம் இருக்கணும்.....
//எனக்கு கருத்துள்ள கவிதை
எழுத வராதுன்னு நேத்து
ரசிகன் கிண்டல் பண்ணிட்டார்..//
கணக்கும் தான் வராதுன்னு சொன்னார்.. அதைப் பத்தி மூச்சே விடல??
ரசிகன் கமெண்ட்ட பாத்ததுல இருந்து நீங்க கவுஜ கணக்குன்னு எந்த நேரமும் புலம்பிட்டு இருக்குறதா அண்ணி (உங்க மனைவி தாங்க) சொன்னாங்க.. அதனால் தான் பாவப்பட்டு என்னோட கவிதை டைரிய கடனாக் குடுத்தேன்.. அதையும் தொலைச்சுட்டீங்களா??
உங்களைப் பத்தி தெரிஞ்சு தான் அண்ணி அந்த டைரிய பத்திரமா திருப்பி எனக்கு அனுப்பிட்டாங்க.. by the way, நீங்க தேடி எடுத்தது டைரி இல்ல.. பழைய டெலிபோன் டைரக்டரி...
//இதுக்கு நான் " ஆமாம்னு " பதில்
சொன்னா.. உடனே
" Blog எழுதறதை நிறுத்துங்கன்னு "
சொல்லுவீங்க..//
இன்னுமா உங்களுக்கு புரியல???
//இன்னிக்கு அட்சய திருதியை.
நகை வாங்கினா ரொம்ப நல்லது.//
கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகி இருக்கோ அத்தனை பவுனுல தங்க நகை வாங்கி கொடுக்கனுமாமே?? அண்ணிக்கு வாங்கி குடுத்தாச்சா??
ஏதோ நம்மால ஆனது..
நாராயண நாராயண...
ஒருவேளை
என் Wife-வோட Statement-ஐ
நான் Confirm பண்ணின
மாதிரி ஆயிடிச்சின்னா..!!??
////////////
haa haa
//இன்னிக்கு அட்சய திருதியை.
நகை வாங்கினா ரொம்ப நல்லது..
( நகை கடைகாரங்களுக்கா..? )//
கண்டிப்பா.
நல்ல எழுதுறீங்க வெங்கட்.
@ விஜய்.,
// நான் கொஞ்சம் கேப்பு விட்டா
ஆளாளுக்கு எழுதக் கெளம்பிடுவீங்களே.//
அசந்தா அடிக்கிறது
உங்க பாலிஸி.,
அசராம அடிக்கிறதுதான்
நம்ம பாலிஸி..
இப்ப எதுக்கு இதை சொன்னேன்னு
பார்க்கறீங்களா..??
பஞ்ச் டயலாக் சொன்னா
அனுபவிக்கனும்., ஆராயக்கூடாது..!!
@ ரசிகன்.,
// எழுத வராதுன்னு சொல்லல..
புரியாதுன்னுதான் சொல்லி இருந்தேன்..//
இதுக்கு அதுவே பரவாயில்ல..
எப்படி இருந்த நான்..,
இப்படி ஆயிட்டேன்...!!
@ பெயர் சொல்ல விரும்பவில்லை.,
நல்லா இருக்குங்க உங்க படம்..
எனக்கு முன்னாடியே ( Ctrl + A )
நீங்க Use பண்ணிட்டீங்க போல.,
சத்தியமா நான் உங்களை
பார்த்து காப்பி அடிக்கலை..
@ ரமேஷ்.,
// தம்பி இப்ப அருவிலையே
தண்ணி இல்லை. அப்டின்னா வெங்கட்டோட கவிதை எப்படி இருக்கும்னு மகா ஜனங்களே யோசிங்க. //
ஹி., ஹி., ஹி.,
நீங்க இந்த நயாகரா., ஏஞ்சல் Falls
இதை பத்தியெல்லாம்
கேள்விபட்டதில்லையா..?
@ அனு.,
// அதனால் தான் பாவப்பட்டு என்னோட
கவிதை டைரிய கடனாக் குடுத்தேன்.. //
உங்க கவிதைய என் கவிதைன்னு
சொல்லுறதா..?
ஏதோ கொஞ்சம் வசன நடையில
எழுதினாலும்.., பரவாயில்ல..,
இதுவும் கவிதைதான்னு
ஒத்துகிட்டு இருக்காங்க..
அது பொறுக்கலையா உங்களுக்கு..??
@ அனு.,
// கல்யாணம் ஆகி எத்தனை வருஷம்
ஆகி இருக்கோ அத்தனை பவுனுல
தங்க நகை வாங்கி கொடுக்கனுமாமே??
அண்ணிக்கு வாங்கி குடுத்தாச்சா?? //
நான் பரவாயில்லைங்க..
8 பவுன் தான்.
உங்க கணவர்தான் ரொம்ப
புலம்பினார்.. பாவம்..
16 பவுன் வாங்கி தரணுமாமே..
ரொம்ப நன்றிங்க
@ பிரபு.,
@ அக்பர்
அன்பின் வெங்கட்
நீ எழுதுவது எல்லாம் கவிதை தானே - குப்பையாக இருப்பினும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா - கவிதை எழுதுக - கலங்காமல் எழுதுக - படிக்க நானிருக்கிறேன் - கும்ம வாலிருக்கிறார் - கலக்கலாமா
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
Post a Comment