சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 January 2011

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4
டிஸ்கி : 3rd Std படிக்கிற என் மகன்
குடியரசு தின விழா பேச்சுப்போட்டியில
பேசியது. ( 1st Prize )

தலைப்பு : இந்தியா வல்லரசாவதில்
மாணவர்களின் பங்கு..!!

வீடியோவாக பார்க்க.. க்ளிக்..!

ஆண்டவன் படைச்சதுலயே
ரெண்டு சிறந்த விஷயம்.

ஒண்ணு - இந்தியா
இன்னொன்னு - இந்தியன்ஸ்..

2020-ல இந்தியா வல்லரசு ஆகணும்.
அது நம்ம கனவு, இலட்சியம்.

சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..?

1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.?
2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?
3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?
இல்ல..
4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?

இப்படி இருந்தா தான் வல்லரசா..?

No..!!

எந்த ஒரு நாடு
1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்.,
4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்பு

இந்த 5 துறைலயும் தன்னிறைவு
அடைஞ்சி இருக்கோ அதுதான்
வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு..

இதுவரைக்கு இருந்த வல்லரசெல்லாம்
ஒரே மாதிரி - ஆனா இனிமே
இந்தியா தான் உலகத்துக்கே முன்மாதிரி

ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சியை,
அந்த நாட்டில் இருக்குற குழந்தைகளோட
கல்விதான் நிர்ணயிக்குது..

கல்விதுறை வளர்ந்தாலே மத்த
எல்லா துறையும் தானா வளர்ந்துடும்..

இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.?

கல்வி தான் அழியாத சொத்து..

அதனால நாம எல்லோரும்
நல்லா படிக்கணும்..

அது மட்டும் போதுமா நம்ம நாட்ல
இன்னும் 4 கோடி குழந்தைகளுக்கு
சரியான கல்வி கிடைக்கல..

அந்த நிலைமை மாறணும்..

"எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லனவே எண்ண வேண்டும்.
பாரதி சொல்றரு..

இந்த நிலைமை மாறணும்னு
நல்ல எண்ணம் இருந்தா மட்டும்
போதாது. நாமளும் எதாவது பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?

நாம எல்லோரும் லீவ் நாள்ல
பக்கத்தில இருக்கிற கிராமத்துக்கு
போயி அங்கே இருக்குற குழந்தைகளுக்கு
எழுத படிக்க Help பண்ணணும்..

அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்..

நம்ம வீட்டை சுத்தி, ஸ்கூலை சுத்தி
மரம் நட்டு வளர்க்கணும்..

நம்ம நாடு வளர இந்த மாதிரி
சின்ன சின்ன விஷயங்கள
நாம செஞ்சாலே போதும்..

இதெல்லாம் நீங்க பண்ண
போறீங்களான்னு சந்தேகமா பாக்காதீங்க..
கண்டீப்பா பண்ணுவோம்

நாங்கல்லாம் ஒரு தடவை முடிவு
பண்ணிட்டா.. எங்க பேச்சை நாங்களே
கேக்க மாட்டோம்..

சரி.. இப்ப கஷ்டப்பட்டு நல்லா
படிச்சிட்டோம்.. அது மட்டும் போதுமா.?

இனிமே தான் இருக்கு முக்கியமான
மேட்டர்..

இன்னிக்கு இந்தியா தான் உலகிலயே
மிக இளமையான நாடு..

117 கோடி மக்கள்ல 54 கோடி பேர்
இளைஞர்கள்..

திறமையும், உழைப்பும் இருக்குற
பெரிய இளைஞர் சக்தி நம்ம பலம்..

ஆனா இந்த மாபெரும் இளைஞர் சக்தி
" டாலர் " கனவுல தன் அறிவையும்
உழைப்பையும் வேற நாட்டு
வளர்ச்சிக்காக பயன்படுத்திட்டு இருக்கு..

அமெரிக்கா டாக்டர்கள்ல - 38% இந்தியர்கள்..

நாசா விஞ்ஞானிகள்ல - 36 % இந்தியர்கள்..

பில்கேட்ஸ் கம்பியூட்டர் கம்பெனியில
- 34 % இந்தியர்கள்..

நம்ம ஆளுங்களால தான் அமெரிக்கா
இன்னிக்கு வல்லரசா இருக்கு..

இப்ப புரியுதா..
இந்தியா தான் டாப்பு..
அமெரிக்கால்லாம் வெறும் டூப்பு..!!

உலகத்தையே கட்டி ஆளுற திறமை
இருக்கிற இந்திய இளைஞர்கள்
நம்ம நாட்டு வளர்ச்சியில அக்கறை
காட்டினா நாம தானே அடுத்த வல்லரசு..

நேற்றைய உலகம் அமெரிக்கா கையில்......!
இன்றைய உலகம் சைனா கையில்......!
நாளைய உலகம் நம் கையில்......!!

ஜெய் ஹிந்த்..!!

டிஸ்கி : மேலும் சில பேச்சுப் போட்டிகள்..


பேச்சுப்போட்டி - 6

98 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

super!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்.//

அது!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

(ஓகே, பையனைப் பாராட்டியாச்சு, இனி VKS வேளை)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல preparation, உங்க மனைவி அருமையா தயாரிச்சிருக்காங்க

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அது சரி, வெங்கட் ப்ளாக் எழுதறதை நிறுத்தினாலே போதும், இந்தியா வல்லரசு ஆகிடும்னு கூட உங்க பையன் பேசினதா ஒரு நியூஸ்?

மாணவன் said...

//உலகத்தையே கட்டி ஆளுற திறமை
இருக்கிற இந்திய இளைஞர்கள்
நம்ம நாட்டு வளர்ச்சியில அக்கறை
காட்டினா நாம தானே அடுத்த வல்லரசு..//

சூப்பரா சொல்லியிருக்கீங்க....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அமெரிக்கா டாக்டர்கள்ல - 38% இந்தியர்கள்..

நாசா விஞ்ஞானிகள்ல - 36 % இந்தியர்கள்..

பில்கேட்ஸ் கம்பியூட்டர் கம்பெனியில
- 34 % இந்தியர்கள்.. //

வல்லரசு விஜயகாந்த் படம்கறதால, இந்த புள்ளிவிவரமோ?

இம்சைஅரசன் பாபு.. said...

காலைல பேப்பர் ல ராசி பலன் பார்க்கும் போது .இன்று அதிசயத்தக்க விஷயம் நடக்கும் ன்னு போட்டு இருந்து ....உண்மைலேயே ஆச்சர்யம் தான் வெங்கட் ....உங்க கிட்ட இருந்து வித்யாசமான பதிவு ....சூப்பர் ...

இம்சைஅரசன் பாபு.. said...

//இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.? //

இது டாப் வெங்கட் .அருமையாக உதாரணம் சொல்லி இருக்கீங்க ....

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..?

1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.?
2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?
3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?
இல்ல..
4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?

இப்படி இருந்தா தான் வல்லரசா..? //


VKS அண்ட் VAS நான் யாருக்கும் support கிடையாது ஆனா உண்மைலேயே இதுக்கு விடை தெரிஞ்சா சொல்லுங்க ...சிந்திக்க வேண்டிய விஷயம் வெங்கட் மக்கா ....இன்றைய உலகம் இப்படி தான் சென்று கொண்டு இருக்கிறது

இப்ப பாருங்க நல்லதை நீங்க சொல்லுறீங்க ....ஆனா VKS ஆளுங்க வந்து இதை நக்கல் பண்ணுவாங்க ......அவங்க தான் வல்லரசு என்று சொல்லுவார்கள் ..
இந்தியா மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் ...இப்படி சொல்லுவாங்க VAS ஆள்கள் ....

ரசிகன் said...

//அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்.. //

இதான் சைக்கிள் Gapல ஆட்டோ ஓட்றதா? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது சரி, வெங்கட் ப்ளாக் எழுதறதை நிறுத்தினாலே போதும், இந்தியா வல்லரசு ஆகிடும்னு கூட உங்க பையன் பேசினதா ஒரு நியூஸ்? - இது இது இததான் நான் சொல்ல வந்தேன்..

பையனுக்கு வாழ்த்துக்கள்

ரசிகன் said...

(Admission Closed)என்று பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு போர்க்களம் புகுந்துள்ள கலக்கல் தளபதி கார்த்திக்கு ஒரு Warm Welcome.

சேலம் தேவா said...

//அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்..//

இதுதாங்க சூப்பர் பாயிண்ட்..!!ஹோம்ஒர்க் அதிகம்ன்றதை நாசூக்கா சொல்லிட்டிங்க..!!தல போல வருமா..?!ஹி.ஹி..ஹி...!!

Chitra said...

அடுத்த விஜயகாந்த் படத்துக்குத் தேவையான அத்தனை பஞ்ச் டையலாகும் இந்த பதிவுல இருக்குதே.....

PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//உங்க மனைவி அருமையா தயாரிச்சிருக்காங்க//

கனவனில் பாதி மனைவி... :) . அதான் அவங்களுக்கு பாதி டேலண்ட்

PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//கூட உங்க பையன் பேசினதா ஒரு நியூஸ்?//

இந்த விஷயம் அவரு பையனுக்கு தெரியுமா? :)

PANDIYAN(VAS) said...

@இம்சை

//அவங்க தான் வல்லரசு என்று சொல்லுவார்கள் ..//

அவங்க கள்ள அரசு.. :)

//இந்தியா மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் ...இப்படி சொல்லுவாங்க VAS ஆள்கள் ...//

ஆமாம். இந்தியா திருப்பி அடிக்கிற அப்போ உலகமே அடிவாங்கர நாட்டை பரிதாபமா பாக்கும்.

PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//இதான் சைக்கிள் Gapல ஆட்டோ ஓட்றதா? :-)//

இல்லை ஆட்டோ கேப்ல Auditorium கட்டறது.. :)

PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//இது இது இததான் நான் சொல்ல வந்தேன்..//

நீ எத எத எதத்தான் சொந்தமா சொல்லி இருக்க... :))

PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//(Admission Closed)என்று பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு போர்க்களம் புகுந்துள்ள கலக்கல் தளபதி கார்த்திக்கு ஒரு Warm Welcome.//

சரக்கு தீர்ந்து போய் ரொம்ப கஷ்டபடறிங்க தெரியுது. அதான் நீங்களே சமாளிப்பிங்க அப்படினு நம்பி எங்க தல பூட்டினாலும். மதில் ஏறி குதிச்சாவது வந்து உதவி பண்ணுங்க சொல்லி வெளிய இருந்து ஆள் தேடறிங்க. எங்களை பாருங்க வாங்க வாங்க சொல்லி யாரையாவது கூப்பிடரமா? :)

ரசிகன் said...

//இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.? //

One of the Finest and easiet way of telling the importance of education.Good one.கட்சி பேதங்களற்ற வாழ்த்துக்கள்

ரசிகன் said...

@[Ex.Terror] Pandian(VAS)

அச்சோ என்ன இது... எங்க போய் அடிவாங்கி இப்படி பாதியா வந்து நிக்கறீங்க.. அஹிம்சாவாதி ஆகி, நல்லவரா மாறிட்டேன்னெல்லாம் சொல்ல மாட்டீங்கள்ல ( நான் இன்ஷ்யூரன்ஸ் எதுவும் எடுக்கல)... 2012ல நிஜமாவே உலகம் அழியத்தான் போகுதா?

karthikkumar said...

நல்ல preparation, உங்க மனைவி அருமையா தயாரிச்சிருக்காங்க///

ஆமாங்க உங்க பையனுக்கு வாழ்த்துகள் சொல்லிருங்க... :) உங்க வீட்டம்மாவுக்கு நன்றிகள்....

karthikkumar said...

@ ரசிகன்

கார்த்திக்கு ஒரு Warm Welcome///
நன்றி ரசிகன் :)

அருண் பிரசாத் said...

முதல்ல பையனுக்கு வாழ்த்துக்கள்... என்னதான் உங்க மனைவி இவ்வளோ நல்லா எழுதி கொடுத்தாலும் (நோட் த பாயிண்ட் யுவர் ஆனர் - உங்க மனைவி எழுதி) மேடைல பேசறதுக்கு ஒரு தில் வேணும்....

அப்பாகிட்ட இல்லாத அந்த தில் உங்க பையன்கிட்ட இருக்குது...சபாஷ்

karthikkumar said...

@ பாண்டியன் /

சரக்கு தீர்ந்து போய் ரொம்ப கஷ்டபடறிங்க தெரியுது. அதான் நீங்களே சமாளிப்பிங்க அப்படினு நம்பி எங்க தல பூட்டினாலும். மதில் ஏறி குதிச்சாவது வந்து உதவி பண்ணுங்க சொல்லி வெளிய இருந்து ஆள் தேடறிங்க. எங்களை பாருங்க வாங்க வாங்க சொல்லி யாரையாவது கூப்பிடரமா? ///

மார்க்கெட்ல முத்துன கத்திரிக்காய வாங்க யாரும் ஆர்வம் காட்டமாட்டாங்க... அதுமாதிரி டெபாசிட் இல்லாத கட்சில சேர (VAS) யாரும் வரமாட்டாங்க.. :)

karthikkumar said...

ரமேஷ் SAID
அது சரி, வெங்கட் ப்ளாக் எழுதறதை நிறுத்தினாலே போதும், இந்தியா வல்லரசு ஆகிடும்னு கூட உங்க பையன் பேசினதா ஒரு நியூஸ்? - ///

அவரோட பையன் மட்டுமில்ல. இந்தியாவோட நலன் கருதி பலதரப்பட்ட மக்களின் எண்ணமும் கருத்தும் இதுதான்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//அஹிம்சாவாதி ஆகி, நல்லவரா மாறிட்டேன்னெல்லாம் சொல்ல மாட்டீங்கள்ல //

அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்... ஒரு ஹிம்சை பண்ரதுக்காக அந்த வேஷம். அறிம்சை எல்லாம் கோகுலத்துல மட்டும் தான்... :)

ரசிகன் said...

@PANDIYAN(VAS)
//சரக்கு தீர்ந்து போய் ரொம்ப கஷ்டபடறிங்க தெரியுது. அதான் நீங்களே சமாளிப்பிங்க அப்படினு நம்பி எங்க தல பூட்டினாலும். மதில் ஏறி குதிச்சாவது வந்து உதவி பண்ணுங்க சொல்லி வெளிய இருந்து ஆள் தேடறிங்க. எங்களை பாருங்க வாங்க வாங்க சொல்லி யாரையாவது கூப்பிடரமா? :)//


கூந்தலுள்ள சீமாட்டி அள்ளி முடியறா.. மொட்டத்தலைய வச்சிகிட்டு அவ கொண்டை கோணல்னு புகைவானேன்.

அனு said...

டேலண்ட் எங்க இருந்தாலும் நாங்க பாராட்டுவோம்.. Speech நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு.. இந்த முறையும் 1st prize கட்டாயம் சூர்யாவுக்கு தான்.. All the Best!!!

- வேறு வழியில்லாமல் எதிர் கட்சியை பாராட்டுவோர் சங்கம் :)

Madhavan Srinivasagopalan said...

// ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.? //

ஏன் முடியாது..?
நாங்கலாம் பதினொன்னாவது படிச்சப் தான் கம்பியூட்டர் பத்தி பாடம் சிலபஸ்ல இருந்திச்சு..
இப்ப நாலவதுலேயே அது சிலபஸ்ல இருக்கு..
அப்படீன்னா... என்னோட பதினொன்னாவது படிச்சிட்டு படிப்ப நிறுத்திட்டவரு, இன்னைய நெலைமைல நாலாவது கிளாஸ் படிச்ச மாதிரி தான..

இப்படிக்கு எதுலேயும் குத்தம், குறை கண்டுபிடிப்போர் சங்க உறுப்பினர்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//மேடைல பேசறதுக்கு ஒரு தில் வேணும்...//

அப்போ மைக் வேண்டாமா மச்சி!! மைக் இல்லாம பேசலாம் VKS மாதிரி வெறும் 5 பேரு வர கூட்டத்துக்கு.. :)

//அப்பாகிட்ட இல்லாத அந்த தில் உங்க பையன்கிட்ட இருக்குது...சபாஷ்//

சூரியன் இல்லாம சந்திரன் எப்படி மச்சி வரும். யானை இல்லாம தும்பிக்கை எப்படி மச்சி வரும்? அட! அதுக்குள்ள அழுதா எப்படி இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை.. :))

Madhavan Srinivasagopalan said...

// அமெரிக்கா டாக்டர்கள்ல - 38% இந்தியர்கள்..

நாசா விஞ்ஞானிகள்ல - 36 % இந்தியர்கள்..

பில்கேட்ஸ் கம்பியூட்டர் கம்பெனியில
- 34 % இந்தியர்கள்.. //

40 % வேணாமா பாஸ் பண்ண.. அப்ப நாம இன்னும் தேறலியோ ?

அருண் பிரசாத் said...

இனி நம்ம மேட்டர் ஆரம்பம்:

”மொக்கை அரசு..!!”

டிஸ்கி: இது 3rd std படிக்கற வெங்கட்டின் மகன் அவர் அப்பாவின் பதிவை பற்றி புலம்பியது

தலைப்பு: இந்தியாவை மொக்கையாக்குவதில் வெங்கட்டின் பங்கு

ஆண்டவன் படைச்சதிலேயே 2 மொக்கையான விஷயம்

ஒண்ணு - வெங்கட்
இன்னொன்னு - கோகுலத்தில் சூரியன்

2020-ல இந்தியா மொக்கையாகனும்றது எங்க அப்பா கனவு, லட்சியம்

சரி, முதல்ல மொக்கைனா என்ன?

1,2,3,4 பாயிண்ட்லாம் தேவை இல்லை... கோகுலத்தில் சூரியன் பிளாக் படிங்க அதைவிட பெரிய மொக்கை எதுவும் கிடையாது

VAS ல இருக்கறவுங்க பிளாக் எல்லாமே தன்னிறைவு அடைஞ்ச மொக்கை பிளாக்ஸ்தான்

இவங்க எல்லா பிளாக்குமே
ஒரே மாதிரி மொக்கைதான் - ஆனா
வெங்கட்தான் தான் மொக்கைக்கே முன்மாதிரி

ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சியை,
அந்த நாட்டில் இருக்குற குழந்தைகளோட
கல்விதான் நிர்ணயிக்குது..

கல்விதுறை வளர்ந்தாலே மத்த
எல்லா துறையும் தானா வளர்ந்துடும்..

ஆனா இவர் என் மூணாவது கண்க்கை கூட தப்பு தப்பா போட்டு டீச்சர்கிட்ட திட்டு வாங்க வெக்கறார்.

இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா இவரு மொக்கையா எழுத ஆரம்பிச்சாரு.
இப்ப படு மொக்கையா ஆயிட்டாரு

அதனால நானே Home work எழுதிக்கறேன்னு
சொன்னாலும் கேக்க மாட்டரார்...யாராவது
என்னை காப்பாத்துங்க..

அது மட்டும் போதுமா இவங்க 4 பேர்
மொக்கைல மாட்டி பதிவுலகமே
அழுவுது

அந்த நிலைமை மாறணும்..

"எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லனவே எண்ண வேண்டும்.
பாரதி சொல்றரு..

இந்த நிலைமை மாறணும்னு
நல்ல எண்ணம் இருந்தா மட்டும்
போதாது. நாமளும் எதாவது பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?

நாம எல்லோரும் இவங்க 4 பேருக்கும்
மொக்கை இல்லாம எழுத
கத்து கொடுத்துHelp பண்ணணும்..

அதுக்காக நம்ம நல்ல பதிவை
அவங்களுக்கு படிச்சி காட்டனும்
(பாவம் அவங்க எழுத்து கூட்டி
படிக்க லேட் ஆகும்)

இதெல்லாம் நீங்க பண்ண
போறீங்களான்னு சந்தேகமா பாக்காதீங்க..
கண்டீப்பா பண்ணுவோம்

நாங்கல்லாம் ஒரு தடவை முடிவு
பண்ணிட்டா.. எங்க பேச்சை நாங்களே
கேக்க மாட்டோம்.. (இதையே தான்
1 வருஷமா சொல்லிட்டு இருக்கோம்
VAS திருந்த மாட்டேங்குது)

நேற்றைய பதிவுலகம் இலக்கியம் கையில்......!
இன்றைய பதிவுலகம் மொக்கைகள் கையில்......!
நாளைய பதிவுலகம் அறிவாளிகள் VKS கையில்......!!

அனு said...

ஒவ்வொருவர் வாழ்க்கையிலயும் ஒரு வசந்தம் வீசும். அது ஒரு மனிதனை தலைகீழாக புரட்டி போடும்.. முரட்டு குதிரையையும் முயல் போல் மென்மையாக்கும்.. டெரராய் இருந்தவரை தென்றலாய் மாற்றிவிடும்..

'க்க்க்ர்ர்ர்' பாண்டியனாய் இருந்தவரை இப்படி 'மியாவ்' பாண்டியனாய் மாற்றிய பேதை யாரோ??

Speed Master said...

//அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்..


யப்பா கோப்புள் கெடா வெட்றது இதுதான்


பதிவு அருமை வெங்கட்

அரபுத்தமிழன் said...

அருமையான தயாரிப்பு

அரபுத்தமிழன் said...

//இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல
முடியுமா.? //

Super punch.

எஸ்.கே said...

உண்மையாலுமே கட்டுரை அருமையா இருக்கு!

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said..

சூரியன் இல்லாம சந்திரன் எப்படி மச்சி வரும். யானை இல்லாம தும்பிக்கை எப்படி மச்சி வரும்? அட! அதுக்குள்ள அழுதா எப்படி இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை.. :))///

நாங்க எதுக்குங்க அழனும்.. இப்படி ஒரு ஆள வெச்சிக்கிட்டு எப்படி இந்த VKS ஐ சமாளிக்கறது அப்டின்னு அங்க பாருங்க உங்க தல வெங்கட் எப்படி தேம்பி தேம்பி அழுறாரு..

எஸ்.கே said...

//
நேற்றைய பதிவுலகம் இலக்கியம் கையில்......!
இன்றைய பதிவுலகம் மொக்கைகள் கையில்......!//

மொக்கையும் ஒரு இலக்கியம்தானே!

மொக்கை பள்ளு பாட மொக்கைப் புலவர் செல்வாவை அழைக்கிறேன்!

எஸ்.கே said...

என்னாச்சு ரமேஷ் சார் வல்லரசுங்கிற பேரை பார்த்தும் விஜயகாந்தை பற்றி பேசாம இருக்கிறாரே?

MANO நாஞ்சில் மனோ said...

//ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.? //


இதுதான் டாப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

//காலைல பேப்பர் ல ராசி பலன் பார்க்கும் போது .இன்று அதிசயத்தக்க விஷயம் நடக்கும் ன்னு போட்டு இருந்து ....உண்மைலேயே ஆச்சர்யம் தான் வெங்கட் ....உங்க கிட்ட இருந்து வித்யாசமான பதிவு ....சூப்பர் ...//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

//அது சரி, வெங்கட் ப்ளாக் எழுதறதை நிறுத்தினாலே போதும், இந்தியா வல்லரசு ஆகிடும்னு கூட உங்க பையன் பேசினதா ஒரு நியூஸ்?//

ஆமாய்யா நானும் கேள்விபட்டேன் அது உண்மைதானோ....

MANO நாஞ்சில் மனோ said...

//இதான் சைக்கிள் Gapல ஆட்டோ ஓட்றதா? :-)//

ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...

வெங்கட் said...

@ To All.,

நாளைக்கு Function-ல என் மகனை
Stage-ல பேச வைக்க போறாங்களாம்..
இப்ப தான் ஸ்கூல்ல இருந்து போன்
வந்தது..

I'm Happy..!!

:)

வெங்கட் said...

@ To All.,

பதிவை பாராட்டின அனைத்து
நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...!!
( Pls Note..Only நல்ல உள்ளங்கள்.,
Not கள்ள உள்ளங்கள் )

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நல்ல preparation, உங்க மனைவி
அருமையா தயாரிச்சிருக்காங்க //

ஆமாங்க ரொம்ப அருமையா இருந்தது..

இன்னிக்கு மதியம் என் Wife தயாரிச்ச
" வெஜ் பிரியாணி " பத்தி தானே
நீங்க சொல்றீங்க..?!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// போர்க்களம் புகுந்துள்ள கலக்கல்
தளபதி கார்த்திக்கு ஒரு Warm Welcome. //

Warm Welcome-ஆ..??
நல்லா அடி வாங்கிட்டு வந்து இருப்பாரு..
ஒத்தடம் குடுக்கலாம்னு கையில
சுடு தண்ணியோட நிக்கறீங்களோ.?!!

கோமாளி செல்வா said...

//நாளைக்கு Function-ல என் மகனை
Stage-ல பேச வைக்க போறாங்களாம்..
இப்ப தான் ஸ்கூல்ல இருந்து போன்
வந்தது.. ///

ரொம்ப சந்தோசமா இருக்கு தல ..
உண்மைலேயே கலக்கலான பேச்சா இருக்கும் ..

கோமாளி செல்வா said...

@ அருண் :
//நாம எல்லோரும் இவங்க 4 பேருக்கும்
மொக்கை இல்லாம எழுத
கத்து கொடுத்துHelp பண்ணணும்.. //

அண்ணா உண்மைலேயே எனக்கு சிரிப்ப அடக்க முடியல . உங்களை பாராட்டியே ஆகணும் .. ( எப்படி இருந்தாலும் எங்க தல போஸ்ட பார்த்து எழுதினதுதானே .. ஹி ஹி ,.. VKS ஆவது ??? )

கோமாளி செல்வா said...

///மார்க்கெட்ல முத்துன கத்திரிக்காய வாங்க யாரும் ஆர்வம் காட்டமாட்டாங்க... அதுமாதிரி டெபாசிட் இல்லாத கட்சில சேர (VAS) யாரும் வரமாட்டாங்க.. :)
///

உண்மைதான் கார்த்தி , VAS ல சேர யாருமே வார மாட்டாங்க .. ஏன்னா ஏற்கெனவே எல்லோருமே VAS ல தான் இருக்காங்க .. உங்க 6 பேர தவிர .. ஹி ஹி ..

கோமாளி செல்வா said...

//நாங்க எதுக்குங்க அழனும்.. இப்படி ஒரு ஆள வெச்சிக்கிட்டு எப்படி இந்த VKS ஐ சமாளிக்கறது அப்டின்னு அங்க பாருங்க உங்க தல வெங்கட் எப்படி தேம்பி தேம்பி அழுறாரு..
///

அதுக்குப் பேரு ஆனத்தக் கண்ணீர். அது மட்டும் இல்ல., பாவம் நீ ரொம்ப சின்னப் பையனா இருக்கீல அதனால நாங்க அடிக்கிற அடிய தாங்குவியா மாட்டியா அப்படின்னு தான் அவர் அழுறார் .. ஏன்னா அவர் எதிரிகளையும் நேசிப்பவர்!!

வெங்கட் said...

@ அருண்.,

// இனி நம்ம மேட்டர் ஆரம்பம்:
”மொக்கை அரசு..!!” //

ம்ம்.. வந்துட்டார்யா உல்டா மன்னன்.,
பதிவை உல்டா பண்றேன்னு சொல்லி
பெருசா என்னமோ போட்டு இருக்காரு..

யாராவது இதை முழுசா படிச்சிட்டு
எதாச்சும் விளங்கினா எனக்கு
மெயில் பண்ணுங்க..

வெங்கட் said...

@ கார்த்தி.,

// மார்க்கெட்ல முத்துன கத்திரிக்காய
வாங்க யாரும் ஆர்வம் காட்டமாட்டாங்க... //

அப்படியா கார்த்தி..? அப்புறம்....

அட இருய்யா.. புள்ள ஏதோ தத்துவம்
சொல்லுது.. கேட்டுட்டு வர்றேன்..

*VELMAHESH* said...

good work

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said... @ பெ.சொ.வி.,

// நல்ல preparation, உங்க மனைவி
அருமையா தயாரிச்சிருக்காங்க //

ஆமாங்க ரொம்ப அருமையா இருந்தது..

இன்னிக்கு மதியம் என் Wife தயாரிச்ச
" வெஜ் பிரியாணி " பத்தி தானே
நீங்க சொல்றீங்க..?!!//

எப்போவுமே உங்க வீட்டுல சமைக்குறது நீங்கதானே. அப்புறம் என்ன இந்த விளம்பரம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said... @ அருண்.,

// இனி நம்ம மேட்டர் ஆரம்பம்:
”மொக்கை அரசு..!!” //

ம்ம்.. வந்துட்டார்யா உல்டா மன்னன்.,
பதிவை உல்டா பண்றேன்னு சொல்லி
பெருசா என்னமோ போட்டு இருக்காரு..

யாராவது இதை முழுசா படிச்சிட்டு
எதாச்சும் விளங்கினா எனக்கு
மெயில் பண்ணுங்க..///

இந்த சின்ன விசயம் கூட விளங்கலைன்னா அப்புறம் என்ன சொல்றது,..

Radha said...

சூப்பர் ! :-)

Radha said...

வல்லரசு ஆகறது இருக்கட்டும். முதல்ல நல்ல அரசு வேணும். இங்க மொக்கை போடற நாம எல்லாம் மொதெல்ல ஒழுங்கா ஓட்டு போடுவோம். :-)
அப்பறம், சின்ன குழந்தைகளை சந்தோஷமா ஓடி ஆடி விளையாட விடுங்க. இண்டர்நேஷனல் லெவல்-க்கு போட்டி மனப்பான்மையை வளர்த்து விடுவீங்க போல இருக்கே. :-)

karthikkumar said...

அதுக்குப் பேரு ஆனத்தக் கண்ணீர். அது மட்டும் இல்ல., பாவம் நீ ரொம்ப சின்னப் பையனா இருக்கீல அதனால நாங்க அடிக்கிற அடிய தாங்குவியா மாட்டியா அப்படின்னு தான் அவர் அழுறார் .. ஏன்னா அவர் எதிரிகளையும் நேசிப்பவர்!///

ஜூச்ஜூஜுஜூ அழாதடா கண்ணா. கண்டிப்பா VAS ஒருநாள் ( ஒருநாளாவது) VKS- ஐ திருப்பி அடிக்கும்.. இந்தா சோறு வாய்ங்க்க... என் கண்ணுல்ல... ஜூச்ஜூஜுஜூ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சார் வல்லரசு எப்போ வந்த படம், இப்போ போயி விமர்சனம் எழுதி இருக்கீங்க? ஒருவேளை பெரிய டாகுடரு பார்ட்-2 எதுவும் ரிலீஸ் பண்ணிட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ இது பேச்சுப் போட்டியா? சரி சரி படிச்சுட்டு வர்ரேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட நல்லா இருக்குங்க, இதுக்கு பரிசு கெடைக்கலேன்னாத்தான் ஆச்சர்யப்படனும்!

TERROR-PANDIYAN(VAS) said...

@karthikumar

//மார்க்கெட்ல முத்துன கத்திரிக்காய வாங்க யாரும் ஆர்வம் காட்டமாட்டாங்க... அதுமாதிரி டெபாசிட் இல்லாத கட்சில சேர (VAS) யாரும் வரமாட்டாங்க.. :) //

உனக்கு VKS விட்டா வேற இடம் கிடைக்காது சொல்லி என்னாம பேசற. நீ கவலை படாத மச்சி கும்பல்ல கோவிந்த போட VKS தான் சரியான இடம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//அவரோட பையன் மட்டுமில்ல. இந்தியாவோட நலன் கருதி பலதரப்பட்ட மக்களின் எண்ணமும் கருத்தும் இதுதான்... :) //

ஆனா ஒரு காக்க பிரியாணி வாங்கி கொடுத்தா அவங்க கருத்தை மாத்திபாங்க.

பலதரப்பட்ட மக்கள் = அனு, ரசிகன், பெ.சொ.வி, கார்த்தி, அருண், ரமேஷ்.. :)

(உங்க கட்சிக்கு அதான் வாங்கி கொடுத்தர கேக்க தடை)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//கூந்தலுள்ள சீமாட்டி அள்ளி முடியறா.. மொட்டத்தலைய வச்சிகிட்டு அவ கொண்டை கோணல்னு புகைவானேன்.//

அள்ளி முடியறேன் சொல்லிட்டு அலங்கோலம் பண்றதுக்கு மொட்டதலை மேல். அங்க இருக்கதே ஜவுரி முடி. அதுக்கு வேற பாரின் ஹேர் ஆயில் பாட்டில்ல தண்ணிய ஊத்தி வச்சி தடவிக்கிறாங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன்

//இப்படிக்கு எதுலேயும் குத்தம், குறை கண்டுபிடிப்போர் சங்க உறுப்பினர்.. //

நீங்க சின்ன வயசுல இரண்டு இட்லி சாப்பிடிங்க சொன்னா அதுக்கா இப்போ இரண்டு இட்லி சாப்பிடரவங்க எல்லாம் சின்ன பிள்ளையா?

குத்து மதிப்பாக பதில் சொல்லுவோர் சங்கம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

Mount volume Blogworld

blogworld mounted

blogworld> RUN மொக்கை அரசு..!!

lot of logical errors... program halted... beep beep

blogworld>debug

FIND ALL வெங்கட் related variables
REPLACE அருண் related variables

^S
^Q

blogworld> RUN மொக்கை அரசு..!!

Program successful...

OUTPUT : NOW EXCELLENT!!

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//'க்க்க்ர்ர்ர்' பாண்டியனாய் இருந்தவரை இப்படி 'மியாவ்' பாண்டியனாய் மாற்றிய பேதை யாரோ?? //

அதான் நீங்களே பேதை சொல்லிட்டிங்க. எங்கையாவது மல்லாட்ட பொருக்கிட்டு இருக்கும் பாருங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//எப்படி இந்த VKS ஐ சமாளிக்கறது அப்டின்னு அங்க பாருங்க உங்க தல வெங்கட் எப்படி தேம்பி தேம்பி அழுறாரு..//

உன்னை சேர்த்துட்டு VKSல கட்டி பிடிச்சி அழறாங்களே அதைவிடவா? :))

Anonymous said...

terror
//நீங்க சின்ன வயசுல இரண்டு இட்லி சாப்பிடிங்க சொன்னா அதுக்கா இப்போ இரண்டு இட்லி சாப்பிடரவங்க எல்லாம் சின்ன பிள்ளையா?//

pinreenga ponga

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//எப்போவுமே உங்க வீட்டுல சமைக்குறது நீங்கதானே. அப்புறம் என்ன இந்த விளம்பரம்?//

சமச்சி முடிக்கிறதுகுள்ள அவங்க வீட்டு வாசபடியில நீங்க போய் நிக்கற விஷயம் இப்போ ஊருக்கே தெரியனுமா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

// VKS- ஐ திருப்பி அடிக்கும்.. //

நேரா அடிக்கிறது பத்தாதுனு திருப்பி வேற அடிக்கனுமா?

//இந்தா சோறு வாய்ங்க்க... என் கண்ணுல்ல//

ஸ்ஸ்ஸ்ஸ்பா... சோறு உன் கண்ணுல வைக்க கூடாதுபா.. வாயில வைச்சி சாப்பிடு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஓ இது பேச்சுப் போட்டியா? சரி சரி படிச்சுட்டு வர்ரேன்....//

பாரு!! இன்னும் மொதல் வரியில மொதல் வார்த்தையே எழுத்து கூட்டிகிட்டு இருக்கிங்க. நீங்க படிச்சி முடுச்சிடாலும்... :)

வெங்கட் said...

VKS ( All out )

Terror (Not out )

;-)

skcomputers said...

சூப்பரா சொல்லியிருக்கீங்க....

அனு said...

//VKS ( All out )
Terror (Not out )
;-) //

ஆளில்லாத க்ரவுண்ட்ல வெறும் Batஐ சுத்திட்டு நாட் அவுட்டாமா?
பாத்து.. சுத்துன சுத்தில மயங்கி விழுந்திருக்க போறாரு.. போய் எழுப்பி விடுங்க..

Radha said...

//நீங்க சின்ன வயசுல இரண்டு இட்லி சாப்பிடிங்க சொன்னா அதுக்கா இப்போ இரண்டு இட்லி சாப்பிடரவங்க எல்லாம் சின்ன பிள்ளையா?
//
என்ன்ன்னா ஒரு கேள்வி கேட்டீங்க !!
:-)))))))))))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஆளில்லாத க்ரவுண்ட்ல வெறும் Batஐ சுத்திட்டு நாட் அவுட்டாமா?
பாத்து.. சுத்துன சுத்தில மயங்கி விழுந்திருக்க போறாரு.. போய் எழுப்பி விடுங்க..//

நான் பரவாயில்லை. நீங்க ஆறு பேரும் கேலரில பெஞ்சிக்கு அடியில ஒளிஞ்சி இருக்க வேண்டியது. VAS ல எல்லாரும் போனதும் கிரவுண்டல வர வேண்டியது. நீங்க யாருமே இல்லாத கிரிஸ்க்கு பால் போடுவிங்க அதுக்கு ரமேஷ் GOAL அப்படினு கத்துவாரு. Runner நிக்கர ஸ்டம்ப பார்த்து கார்த்தி பால் போடுவாரு அதுக்கு பெ.சொ.வி LBW கேப்பாரு, அருணு பால தூக்கி மேல போடுவாரு அதை ரசிகன் பிடிச்சிட்டு கேட்ச்னு கத்துவாரு

வெங்கட் said...

@ அனு.,

// ஆளில்லாத க்ரவுண்ட்ல வெறும்
Batஐ சுத்திட்டு நாட் அவுட்டாமா? //

வேற என்னங்க பண்றது...?

அவர் அடிச்ச சிக்ஸ்ல Ball
ஸ்டேடியமை தாண்டி விழுந்துடுச்சு..

Ball-ஐ தேடி கொண்டு வர்றோம்னு
போனீங்க.. ஆனா ரொம்ப நேரமா
யாரும் திரும்பி வரலை..
( ஓடி போயிட்டீங்களா..? )

அதான் சும்மா Shot Practice
பண்ணிட்டு இருக்காரு..!!

அனு said...

@டெரர் & வெங்கட்

எல்லோருக்கும் இன்னைக்கு லீவ்-ன்னு தெரிஞ்சு வச்சுகிட்டு திரும்பவும் காலி க்ரவுண்ட்ல சவுண்ட் விட்டுட்டு இருக்கீங்க பாத்தீங்களா... என்ன ஒரு ராஜதந்திரம்!!

பந்த் அன்னைக்கு, நான் போய் பஸ்ஸை பாய்ஞ்சு பிடிச்சு நிறுத்தினேன்னு பீலா விடுற ஆளுங்க தானே நீங்க...

வெங்கட் said...

@ அனு.,

// காலி க்ரவுண்ட்ல சவுண்ட் விட்டுட்டு
இருக்கீங்க பாத்தீங்களா... //

ஹி., ஹி., ஹி... !!

Man of the Match..
Man of the Series எல்லாம்
குடுத்துட்டு இருக்காங்க..

அதான் கொஞ்சம் சவுண்ட்..

அது சரி.. இதெல்லாம் உங்களுக்கு
எங்கே தெரிய போகுது.. என்னிகாவது
WIN பண்ணி இருந்தா தானே..?!!

வெங்கட் said...

@ To All.,

இந்த Speech-க்கு 1st Prize
கிடைச்சிடுச்சு.. நிறைய
கைதட்டல்கள்..!!

அனு said...

இந்த சின்ன வயசுல இவ்வளவு விஷயத்தையும் பயமில்லாம மேடையில பேசி ப்ரைஸ் (prize/praise) வாங்குறது ஈசி இல்ல.. Really Great!!

Congratulations-ங்க!!! சூர்யாவுக்கும் உங்க மனைவிக்கும்!!

தாயைப் போல பிள்ளை..
நூலைப் போல சேலை!!!

அனு said...

Net Practice பண்ணினதுக்கே Man of the match/seriesஆ?

உங்களை சொல்லி குத்தமில்ல.. இப்படியெல்லாம் பண்ணினா தானே உங்க கட்சி ஆளுங்களை பிடிச்சு வைக்க முடியும்.. இல்லாட்டி, இது தான் சாக்குன்னு ஓடிட மாட்டாங்க??

Anbu.Bala said...

super

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சூப்பரா இருந்திச்சு தல. படிக்கறப்போ அப்படியே நம்மலே மேடையில பேசுறாப்புல இருந்துச்சு.

அபு நிஹான்

Radha said...

@Venkat,
உங்க குழந்தைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ! May the Lord shower His choicest blessings on your family ! [so that you remain happy and keep writing more mokkai posts. :-) ]

karthikkumar said...

Anonymous said...
terror
//நீங்க சின்ன வயசுல இரண்டு இட்லி சாப்பிடிங்க சொன்னா அதுக்கா இப்போ இரண்டு இட்லி சாப்பிடரவங்க எல்லாம் சின்ன பிள்ளையா?//

pinreenga ponga////எது ஜடையா??......... :)

karthikkumar said...

@ டெரர்
உனக்கு VKS விட்டா வேற இடம் கிடைக்காது சொல்லி என்னாம பேசற. நீ கவலை படாத மச்சி கும்பல்ல கோவிந்த போட VKS தான் சரியான இடம்... :)///

VKS கிட்ட அடி வாங்கி அடி வாங்கி வர வர கண்ணும் சரியா தெரியறதில்ல போல....மேல இருக்குற கமெண்ட்ஸ் பாத்தா யாரு கும்பல்ல கோவிந்தா போடறாங்கன்னு தெரியும். நல்லா கண்ணுக்கு எண்ணைய ஊத்திட்டு தெளிவா பாருங்க....:)


@ VAS

VAS எல்லாம் ஒரே குட்டைல ஊறிக்கிட்டு இருக்குறீங்க... ஆனா VKS காட்டாறு மாதிரி... சில நேரம் அமைதியாத்தான் இருக்கும்... ஆனா சீறி பாயும்போது கையால கரை போட்டு தடுக்க நெனைக்காதீங்க.... BE CAREFUL :)

karthikkumar said...

வெங்கட் said...
@ To All.,

இந்த Speech-க்கு 1st Prize
கிடைச்சிடுச்சு.. நிறைய
கைதட்டல்கள்..!!//நல்லா உங்க பையன ட்ரைன் பண்ணிருக்காங்க உங்க மனைவி... ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்....

மங்குனி அமைச்சர் said...

பையன் அவுங்க அம்மா மாதிரி புத்திசாலி போல ????

மங்குனி அமைச்சர் said...

பைய்யன் அவுங்க அம்மா மாதிரி புத்திசாலி போல ????
ஏன்னா ? என்னதான் அவுங்க அம்மா எழுதி குடுத்து இருந்தாலும் ........... வெங்கட் மாதிரி கைகால் நடுங்காம , வாய் குளராம ஸ்டேஜுல பேசனும்ல

lekha said...

congrats to surya kutti (singa kutti nu sollanumo ;) )

சாதாரணமானவள் said...

//ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.?

கல்வி தான் அழியாத சொத்து. //

வித்யாசமான பார்வை...