சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 November 2010

லிவிங்க் டுகெதர் ( 25 + )















என்ன அப்படி பார்க்கறீங்க..?

என்கிட்ட இருந்து இப்படி
ஒரு பதிவை நீங்க எல்லாம்
எதிர்பாக்கலை தானே..?!!

என்ன பண்றது..?

* வீதியில நடக்க முடியல.,

* நாலு பேர் கிட்ட Chat
பண்ண முடியல..

* டீக்கடைக்கு போயி
ஒரு டீ கூட குடிக்க முடியல..

" லிவிங் டுகெதர் " பத்தி பதிவு போடாத
நீயெல்லாம் ஒரு பதிவரான்னு..?
நல்லா நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேக்கறாங்க..!!

" லிவிங் டுகெதர் " பத்தி
நம்ம கருத்தை தெரிஞ்சிகிட்டு.,
அதுபடி Follow பண்ண ஒரு
2 கோடி பேர் ஒத்தைக்கால்ல
நிக்கறதா வேற ஒரு தகவல்..

இளைய பாரதமே நம்ம நம்பி
இருக்கும் போது அதுக்கு
சரியான பாதையை காட்டுறது
நம்ம கடமையாச்சே..!!

அதான் சரின்னு நானும் இந்த
பதிவை எழுதிட்டேன்..

" லிவிங் டுகெதர்" இது நல்ல விஷயம்.

சொல்ல போனா நாம எல்லோருமே
அதை Follow பண்ணனும்..

ஏன்னா.. அந்த காலம் மாதிரி
இப்ப இல்ல..

இப்பல்லாம் ஆண்களுக்கு சமமா
பெண்களும் நல்லா படிச்சிருக்காங்க.,
வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க..

So., கணவன் மனைவிக்குள்ள
சண்டைகள்., EGO Problem
இதெல்லாம் இப்ப ரொம்ப சகஜம்..

அதுக்காக கோவிச்சுக்கிட்டு.,
சண்டை போட்டுகிட்டு..,

" உங்க அப்பா வீட்டுக்கு போ " ன்னு
Husband சொல்றதும்..,

" நான் தனியா ஹாஸ்டல்ல போயி
தங்கிக்கிறேன்னு ., " Wife சொல்றதும்
இப்ப ரொம்ப அதிகமாகிட்டு வருது..!!

Arranged Marriage-ஆ இருந்தாலும் சரி.,
Love Marriage-ஆ இருந்தாலும் சரி.,

இந்த மாதிரி சின்ன சண்டைகளுக்காக
கணவனும், மனைவியும்
தனித்தனியா வாழறது..,
கோர்ட்., கேஸ்னு போறது..
இதெல்லாம் நல்லதா..?!!

யோசிங்க..!! யோசிங்க..!!

அதனால.., கணவன் - மனைவி
ரெண்டு பேரும் மனசுவிட்டு
அவங்க பிரச்சினைகளை பேசி.,
ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து.,
ஒரே வீட்ல சந்தோஷமா
" லிவிங் டுகெதரா " இருங்க..

அது எல்லோருக்குமே நல்லது..!!

( என்ன நான் சரியா சொல்றேனா..?!! )

டிஸ்கி : இது திருமணம் ஆனவர்களுக்காக
எழுதப்பட்ட பதிவு. இந்தியரின் சராசரி
திருமண வயசு 25..

அதான் இந்த Post Title-ல 25+.

ஹி., ஹி., ஹி..!!
.
.

47 Comments:

Madhavan Srinivasagopalan said...

'T ' வூட்டுல கெடையாதா ?
அப்ப லிவிங் டு 'T ' கேதரா ?

மங்குனி அமைச்சர் said...

பார்ரா நம்ம வெங்கட் கூட பெரியபதிவா போடவேண்டிய நிலைமைக்கு வந்துட்டாரு .....ஹா ,ஹா,ஹா,............. இருந்தாலும் சரியா சொல்லி இருக்கீங்க

Praveenkumar said...

//டிஸ்கி : இது திருமணம் ஆனவர்களுக்காக
எழுதப்பட்ட பதிவு. இந்தியரின் சராசரி
திருமண வயசு 25..//

ஹி..ஹி.. இப்போதைக்கு நான் தப்பிச்சேன்.

Madhavan Srinivasagopalan said...

என்னோட மொதோ கமெண்டுக்கு ரேபாரன்ஸ் வரிகள் இது

// டீக்கடைக்கு போயி
ஒரு டீ கூட குடிக்க முடியல..//

ஹீ..... ஹீ.. வட வாங்குற அவசரத்துல வெங்கட் சொன்ன டீக்கடை'டீ'ய மறந்துட்டேன்..

NaSo said...

//அதான் இந்த Post Title-ல 25+.///

நான் இந்த பதிவைப் படிக்கவில்லை. பத்து வருஷத்துக்கு அப்புறம் படிச்சுக்கிறேன்.

Arun Prasath said...

ரைட், நீங்களுமா

ரஜின் said...

சகோ வெங்கட் அவர்களுக்கு.கல்யாணம் பண்ணிகிட்டு அதே living together வாழ்வை அவர்களால்,வாழ முடியும்தானே,.ஒருத்தருக்கொருத்தர் சரியான புரிதல் உண்டுதானே.ஆனாலும் கல்யாணம் வேண்டாம் என்பார்கள்.

ஏனெனில்,ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்,தேவைதான்.ஆனால் அவள் மீது எனக்கும்,என்மீது அவளுக்கும் எப்பொருப்பும் இருக்கக்கூடாது,யாரும் யாரையும் கேள்வி கேட்க கூடாது.என்பதால்தான் இது தேர்வு செய்யப்படுகிறது.

தங்களது வாதம் சரியானது.அதே புரிதல் உள்ளவர்கள்,கல்யாணம் செய்து கொண்டு living together ஆக இருங்கள்.பிடிக்காவிட்டால் பிரிந்து விடுங்கள்.நான் இக்கருத்தை ஆமோதிக்கிறேன்.

இது தொடர்பாக இதில் உள்ள பாதகங்களை அலசும் எனது பதிவில் மேலும் விவரங்கள் உள்ளன,நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்..

http://sunmarkam.blogspot.com/2010/11/blog-post_24.html

நன்றி..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ரைட்டு , அப்போ எனக்கு இன்னும் 25 ஆகல அதனால நான் வரட்டா? . . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

so this is not for me. Im still 10+

அருண் பிரசாத் said...

நான் பிளாக் மாறி வந்துட்டேன் போல...

எக்ஸ்கியூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா? அதாங்க கோகுலத்தில் சூரியன் பிளாக் அட்ரஸ்

Shalini(Me The First) said...

Present boss!
nothing to say
but itz a nice way
to live together:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, அப்போ 25 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாம இருக்கவங்களுக்குத் தனியா பதிவு போடுவீங்களா?

£€k#@ said...

venkat
u made several people to lie ;)
hmm first me too thought "wt hpd to him"
but as expected u gave a new pt,, :)

"அதுபடி Follow பண்ண ஒரு
2 கோடி பேர் ஒத்தைக்கால்ல
நிக்கறதா வேற ஒரு தகவல்..
"

is it?? ;)

mm gud post yaar

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்ப செரி..ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

so this is not for me. Im still 10+
//


ஹி..ஹி.. அறியாப்புள்ள தப்பா சொல்லிருச்சு.. யாரும் கோவிச்சுக்காதீங்கண்ணே..

@ரமேஸு..
வயசுனா, முழு உடம்புக்குத்தான்.. பிரிச்சு சொல்லக்கூடாது.. ஹி..ஹி

கருடன் said...

@பட்டா

//@ரமேஸு..
வயசுனா, முழு உடம்புக்குத்தான்.. பிரிச்சு சொல்லக்கூடாது.. ஹி..ஹி//

பட்டா ரமேசுக்கு இப்படி சொன்னா புரியாது. நேர சொல்லனும். ரமேசு.. உன் மூளைக்கு ஆகர வயச இங்க யாரும் கேக்கல... :))

எஸ்.கே said...

இணைந்து வாழனும்னு சொல்ல வர்றீங்க!

THOPPITHOPPI said...

இப்படியே ஆள் ஆளுக்கு இதப்பத்தியே பதிவு போட்டுட்டு இருந்தா பொறக்க போற குழந்தைக்கு யாராவது லிவிங்க் டுகெதர்னு பேர் வைக்க போறாங்க

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் வெங்கட் ,டைட்டிலைப்பார்த்தும் ,25 + பார்த்தும் நம்பி வந்த எங்களை ஏமாத்திப்புட்டீங்களே?இது நியாயமா?


ஆனா பதிவு செம கலக்கல்.


இந்த வாரமும் டாப் 10 ல வந்துடனும்கற உங்க ஆர்வம் புரியுது


வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

நாம் 2 பேரும் இன்று ஒரே டைமில் பதிவு போட்டோம்.ஆனா என்னை விட ஓட்டிலும்,விசிட்டர்ஸ் டு டே விலும் நீங்க முன்னிலைல இருக்கீங்க.எனவே நான் பதிவை விட்டு (கவனிக்க -பதிவுலகை விட்டு அல்ல)

வெளிநடப்பு செய்கிறேன்

செல்வா said...

//டிஸ்கி : இது திருமணம் ஆனவர்களுக்காக
எழுதப்பட்ட பதிவு. இந்தியரின் சராசரி
திருமண வயசு 25..//

கலக்கிட்டீக தல ., நான் என்னத்த சொல்லுறது ..? இப்படி ஒரு தெளிவான சிந்தனை உங்களை விட வேற யாருக்கும் வராது ..! உங்களை நம்பி 2 கோடி பேர் மட்டும் இல்ல உலகமே உங்களை நம்பித்தான் இருக்கு .. அத விட 18 + போடுறதுக்கு பதிலா 25 + அப்படின்னு ஒரு புது + கண்டு பிடிச்சதால நம்மளுக்கு(VAS ) நல்ல பேரு கிடைக்கப் போகுது ..!!

செல்வா said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

so this is not for me. Im still 10+///

எத்தன 10 அப்படின்னு சொல்லிட்டா நல்லா இருக்கும் ..?!

இம்சைஅரசன் பாபு.. said...

சபாஷ் வெங்கட் ............சூப்பர் .............நல்லா இருக்கு மக்கா ...............இந்த ஒரு பதிவு உங்களுக்கு தமிழ் மனதுல இந்த வாரமும் டாப் 10 தான் (யாராவது அப்ப இதுக்கு முந்தின பதிவு நல்லா இல்லையா ன்னு கேட்ட பிச்சு போடுவேன் )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

நாம் 2 பேரும் இன்று ஒரே டைமில் பதிவு போட்டோம்.ஆனா என்னை விட ஓட்டிலும்,விசிட்டர்ஸ் டு டே விலும் நீங்க முன்னிலைல இருக்கீங்க.எனவே நான் பதிவை விட்டு (கவனிக்க -பதிவுலகை விட்டு அல்ல)

வெளிநடப்பு செய்கிறேன்///

ஐயோ ராமா இவரு இம்சை தாங்க முடியலை. தமிழ்சினிமா ல பேர் வந்திருச்சு நான் பிரபல பதிவர்ன்னு ஊர் முழுவதும் சொல்லிக்கிட்டு அலையுறாரு.

வெங்கட் said...

@ மங்குனி.,

// பார்ரா நம்ம வெங்கட் கூட பெரியபதிவா
போடவேண்டிய நிலைமைக்கு வந்துட்டாரு //

இத பார்ரா.. பிரபல பதிவர்ரெல்லாம்
( அப்படின்னு தன்னை நினைத்துக் கொள்ளும் )
மங்குனி நமக்கு Comment போட்டு இருக்காரு..!!!

ஆமா என்னை காப்பி அடிச்சி நீங்களும்
உங்க பதிவுக்கு " லிவிங்க் டுகெதர் ( 18+ ) "
தலைப்பு வெச்சி இருக்கீங்களாமே..?!!

சொந்தமா யோசிங்கப்பா..!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// ஹீ..... ஹீ.. வட வாங்குற அவசரத்துல
வெங்கட் சொன்ன டீக்கடை'டீ'ய மறந்துட்டேன்.. //

பாத்துங்க.. அவசரத்துல மறந்துட்டேன்னு
சொல்லி " தர்மத்தின் தலைவன் " ரஜினி
மாதிரி என்னிக்காவது ஆபீஸ் போயிட போறீங்க..!!

வெங்கட் said...

@ நாகராஜசோழன்.,

// நான் இந்த பதிவைப் படிக்கவில்லை.
பத்து வருஷத்துக்கு அப்புறம் படிச்சுக்கிறேன். //

இந்த பதிவை படிக்க இன்னும்
நீங்க 10 வருஷம் Wait பண்ணனுமா..?
So Sad..,

நான் 5 வருஷம் Wait பண்ணினா
போதும்..

சௌந்தர் said...

எனக்கு இன்னும் 25 வயசு ஆகலை நான் படிக்கலை

வெங்கட் said...

@ ரஜின்.,

// இது தொடர்பாக இதில் உள்ள பாதகங்களை அலசும்
எனது பதிவில் மேலும் விவரங்கள் உள்ளன, //

ஐயோ.. என்னங்க இது..?

நீங்க பதிவை சரியா புரிஞ்சிக்கலை
போல.. இது சேர்ந்து வாழ்வதை
பற்றிய பதிவு அல்ல..

கணவன் - மனைவி சண்டைபோடாமல்
ஒத்துமையா சேர்ந்து வாழ்வதை
பற்றிய பதிவு..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// So this is not for me. Im still 10+ //

ஹைய்யா.. ஜாலி..!! ஜாலி..!!

அப்ப நம்ம ரமேஷுக்கு கல்யாணம்
ஆக இன்னும் 15+ வருஷம் இருக்கு..

@ To All வயசுப் பொண்ணுங்க..,

இன்னும் ஒரு 15 வருஷத்துக்கு
உங்களுக்கு ரமேஷ் தொல்லை இல்ல..

எங்கே நம்மள பிடிச்சி ரமேஷக்கு
கட்டி வெச்சிடுவாங்களோன்னு
இனிமே யாரும் பயப்பட வேணாம்....!

தைரியமா இருங்க..!!

அனு said...

அப்போ 25 வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணினவங்க எல்லாம் பிரிஞ்சு வாழனும்னு சொல்றீங்களா??

என்ன ஒரு வில்லத்தனம்!!!

அனு said...

//ஐயோ.. என்னங்க இது..?

நீங்க பதிவை சரியா புரிஞ்சிக்கலை
போல.. இது சேர்ந்து வாழ்வதை
பற்றிய பதிவு அல்ல.. //

ஹிஹி.. இது எனக்கு பிடிச்சிருக்கு.. என்னடா, இந்த பேருல பதிவு போட்ட அப்புறமும் ஒருத்தர் கூட சண்டை போட வரலயேன்னு பார்த்தேன். ரஜின் என் ஆசைய நிறைவேத்தி வச்சுட்டாங்க.. வாழ்க ரஜின்!!!

இப்போ சொல்லுங்க வெங்கட்.. நீங்க ரஜின் சொல்ற கருத்துக்கு உடன்படுறீங்களா இல்லையா??
(பத்த வச்சுட்டயே பரட்டை!!!)

வெங்கட் said...

@ அருண்.,

// நான் பிளாக் மாறி வந்துட்டேன் போல...
எக்ஸ்கியூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க
இருக்குனு சொல்ல முடியுமா? //

நீங்க இன்னும் இந்த கெட்ட பழக்கத்தை
விடலையா..?

ஸ்கூலுக்கு போக சொன்னா..
சினிமா தியேட்டர்க்குள்ள போயி
" எக்ஸ்கியூஸ் மீ எங்க ஸ்கூல்
எங்கேன்னு..? " கேப்பீங்க..

அப்புறம் காலேஜ் போக சொன்னா...

( Wait.. Wait..Wait..
இவர் காலேஜ் எல்லாம் போனாரா..?
பொய் சொல்லாதீங்க வெங்கட்..!! )

அட நிசமாதாங்க..
10th Fail ஆகிட்டு டுடோரியல் காலேஜ்
போனாருங்க.. நம்புங்க..

Anonymous said...

venkat
//
எங்கே நம்மள பிடிச்சி ரமேஷக்கு
கட்டி வெச்சிடுவாங்களோன்னு
இனிமே யாரும் பயப்பட வேணாம்....!
//

classic 15 more yrs
ha ha ha hmm ramesh ku kalyanam aanapla dhaan

sathyama arubadham kalyanam dhaan ;)


//அட நிசமாதாங்க..
10th Fail ஆகிட்டு டுடோரியல் காலேஜ்
போனாருங்க.. நம்புங்க.//

neenga 10th pass anadha yen post paneenga nu ippo daan therinjadhu ;)

பழமைபேசி said...

சரிங்க வெங்கட்!

ராஜி said...

இதப்பாருடா இந்த பிளாக்குக்கு வந்த சோதனை நூறு பேரு நூறு விதமான டாபிக்க எழுதறதவிட்டுட்டு.. நூறு பேரும் ஒரே டாபிக்க எழுதுறாங்க. ஒரே டாபிக்குக்கு பின்னூட்டம் போட்டு போட்டு போரடிக்குது. PLEASE LEAVE IT PA. லிவிங் டு கெதர் டாபிக் க அறிமுகப்படுத்துனவன் மட்டும் என் கையில கிடைச்சா.. விருதகிரி படத்தை தொடர்ந்து நூறு SHOW பார்க்கசொல்வேன்

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

// எச்சூஸ் மி, அப்போ 25 வயசுக்கு மேல
கல்யாணம் ஆகாம இருக்கவங்களுக்குத்
தனியா பதிவு போடுவீங்களா? //

ஆஹா.. இது ரொம்ப நல்லா
இருக்கே..!! இன்னொரு பதிவுக்கு
மேட்டர் கிடைச்சிடுச்சு..!!

கோலா பூரி. said...

உங்க பதிவை விட பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில் செமை. இதப்பாருடா.??!!!!!!!!1

வெங்கட் said...

@ லேகா.,

// அதுபடி Follow பண்ண ஒரு 2 கோடி பேர்
ஒத்தைக்கால்ல நிக்கறதா வேற ஒரு தகவல்..//

// is it?? ;) //

என்ன இவ்ளோ சந்தேகமா கேக்கறீங்க..?

நான் Post போட்டப்ப 2 கோடி பேர்தான்
இருந்தாங்க..,ஒருவேளை நீங்க Comment
போடுறதுக்குள்ள 10 - 15 லட்சம் பேர்
அதிகமாயிட்டாங்களோ என்னமோ..!!

Anonymous said...

தர்மத்தின் தலைவன் " ரஜினி
மாதிரி என்னிக்காவது ஆபீஸ் போயிட போறீங்க..!!

venkattt ha ha ha

ALHABSHIEST said...

2,00,00,001

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// நாம் 2 பேரும் இன்று ஒரே டைமில் பதிவு போட்டோம்.
ஆனா என்னை விட ஓட்டிலும்,விசிட்டர்ஸ் டு டே விலும்
நீங்க முன்னிலைல இருக்கீங்க. //

பதவிக்காகவோ., பணத்துக்காகவோ
நாங்கள் இங்கே போட்டியிடவில்லை..
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
அது தான் எங்கள் கொள்கை., குறிக்கோள்..

ஓ.. சாரி.. இது நான் அரசியல்ல
குதிச்சதுக்கு அப்புறம் பேசறதுக்காக
ரெடி பண்ணி வெச்ச டயலாக்..

இருங்க இப்ப கரெக்டா சொல்றேன்
பாருங்க....

ஓட்டுக்காகவோ., Top 20 லிஸ்ட்ல
வரணுகறதுக்காகவோ நான் பதிவு
எழுதறதில்ல.. இங்கே வர்ற மக்கள்
சந்தோஷமா இருக்கணும்.. அவ்ளோ தான்..!!

வெங்கட் said...

@ அனு.,

// அப்போ 25 வயசுக்கு முன்னாடி கல்யாணம்
பண்ணினவங்க எல்லாம் பிரிஞ்சு வாழனும்னு
சொல்றீங்களா?? //

இடம் : அனு வீடு..,

( அனுவின் கணவர் சாப்பிட்டு கொண்டு
இருக்கிறார் )

அனு கணவர் : அனு.., இன்னொரு சப்பாத்தி
வை.. நல்லா இருக்கு..

அனு : அப்ப நான் நேத்து சுட்ட தோசை
நல்லா இல்லன்னு சொல்றீங்களா..?

அனு கணவர் : ஐயோ.. நான் எப்ப
அப்படி சொன்னேன்..??

அனு : இப்பதான்.. சப்பாத்தி நல்லா
இருக்குன்னு சொன்னீங்கல்ல..
அதுக்கு அதான் அர்த்தம்..

அனு கணவர் : அப்படியா..? சரி., சரி.,
எனக்கு சப்பாத்தி வேணாம்..

அனு : ஓ.. இப்ப சப்பாத்தியும் நல்லா
இல்லைன்னு சொல்றீங்களா..?!!

அனு கணவர் : ( கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ )

வெங்கட் said...

@ ராஜி.,

// லிவிங் டு கெதர் டாபிக் க அறிமுகப்படுத்துனவன்
மட்டும் என் கையில கிடைச்சா.. விருதகிரி படத்தை
தொடர்ந்து நூறு SHOW பார்க்கசொல்வேன் //

ஹி., ஹி., ஹி..!!

அப்படியே..
" எனக்கு பிடித்த ரஜினி டாப் டென் படங்கள் "
இந்த டாபிக்கை அறிமுகப்படுத்தினவரையும்
எதாவது பண்ணுங்க..

நான் வேணா அவரை காட்டிக் கொடுக்கிறேன்..

அதுக்காக எனக்கு அவார்ட் குடுக்கறது.,
பாராட்டு விழா நடத்தறது.,
இதெல்லாம் வேணாம்னு நான் சொன்னாலும்
நீங்க என்ன கேக்கவா போறீங்க..?!

வெங்கட் said...

@ கோமு.,

// உங்க பதிவை விட பின்னூட்டங்களுக்கு
கொடுத்திருக்கும் பதில் செமை. //

ஹி., ஹி., ஹி...!!
ரொம்ப நன்றிங்க..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்படியே..
" எனக்கு பிடித்த ரஜினி டாப் டென் படங்கள் "
இந்த டாபிக்கை அறிமுகப்படுத்தினவரையும்
எதாவது பண்ணுங்க..

நான் வேணா அவரை காட்டிக் கொடுக்கிறேன்..

அதுக்காக எனக்கு அவார்ட் குடுக்கறது.,
பாராட்டு விழா நடத்தறது.,
இதெல்லாம் வேணாம்னு நான் சொன்னாலும்
நீங்க என்ன கேக்கவா போறீங்க..?!//

ஒரே கட்சியா இருந்தாலும் நானும் வழி மொழிகிறேன் ஹிஹி

பெசொவி said...

நல்லா யோசிச்சிருக்கீங்க, ஆனா நான் இன்னும் கொஞ்சம் மேல யோசிச்சிருக்கேன்.