சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 September 2010

நண்பேன்டா...!!
டிஸ்கி : இது பாஸ் ( எ ) பாஸ்கரன் பட
விமர்சனம் அல்ல..

என் Friend ஒரு Share Broking Office
நடத்திட்டு இருக்கான்..
அவனுக்கு நானும் ஒரு Client..

ஒரு நாள் அவன்  Office-ல உக்கார்ந்து
" 30 நாள்ல நம்ம இந்தியாவை
வல்லரசாக்கறது எப்படி..? " ன்னு
சீரியஸா Discuss பண்ணிட்டு இருந்தோம்..

அப்ப அவனுக்கு ஒரு போன் கால்
வந்தது..

அவனும் " ஓ.கே சார்னு.,
ஆகட்டும் சார்னு " ரொம்ப பவ்யமா
பேசினான்..

அப்பவே எனக்கு தெரியும்.,
Head Office-ல இருந்துதான் யாரோ
பேசறாங்கன்னு..

பேசி முடிச்சிட்டு.. என்னை பார்த்து..,

" Head Office-ல இருந்து இப்ப இங்கே
வர்றாங்களாம்.., முதல்ல நீ கிளம்பு..!! "

" நானும் ஒரு முக்கியமான Client..!!
என்னை எதுக்கு கிளம்ப சொல்ற..? "

" வர்றவங்ககிட்ட எதாவது போட்டு
குடுத்திட்டீன்னா..?!! "

" என்னை பார்த்து இப்படி சொல்லிட்டியே..!!
நான் உன் நண்பேன்டா.. "

" ம்ம்.. அதுதான்டா பயமே..!! "

" You Don't Worry..!! வர்றவங்ககிட்ட
உன்னை பத்தி பெருமையா
நாலு வார்த்தை சொல்லிட்டு
கிளம்பிக்கிறேன்..!! "

Head Office-ல இருந்து ரெண்டு பேர்
வந்திருந்தாங்க.. அவங்ககிட்ட என்னை
Intro பண்ணி வெச்சான் என் Friend..

" எங்க கம்பெனி சர்வீஸ் எப்படி இருக்கு.? "

" ரொம்ப நல்லா இருக்குங்க.. " ( ஒண்ணு )

" Statements எல்லாம் Correct-ஆ வந்துடுதா..? "

" அதெல்லாம் Perfect-ஆ வந்துடுது சார்..!! " ( ரெண்டு )

" எங்க Company News Letter வருதா.? "

" 5-ம் தேதிக்குள்ள வந்துடுதுங்க..!! " ( மூணு )

" எங்க சர்வீஸ் Improve பண்ண
எதாவது Suggestions இருக்கா..? "

" இப்ப நீங்க குடுக்கற சர்வீஸே
ரொம்ப நல்லா இருக்குங்க.. "  ( நாலு )

வந்தவங்களுக்கு முழு திருப்தி.
என் Friend முகத்திலயும் சந்தோஷம்..

" எதாவது குறை இருந்தாலும் சொல்லுங்க.. "

" அப்படி ஒண்ணும் இல்லைங்க..
ஆனா ஒரு சின்ன Doubt..."

" என்ன Doubt..?!! "

" அதோ அந்த சுவத்துல ஒரு பொட்டி
ரொம்ப நாளா மாட்டி வெச்சிருக்கே..
அது எதுக்குங்க..? "

இப்படி சொல்லி நான் கை காட்டினது.....

6 மாசத்துக்கு முன்னாடி Repair ஆகி
இன்னும் சர்வீஸே பண்ணாம
இருந்த Samsung Split AC..!!

( AC சர்வீஸ் பண்ணறதுக்குன்னு
3 மாசத்துக்கு முன்னாடியே
Head Office-ல இருந்து Rs 4000-க்கு Cheque
வந்த விஷயம் தான் எனக்கு தெரியுமே..!! )

ஹி., ஹி., ஹி..!!

நாங்கல்லாம்
சொன்னதையும் செய்வோம்..,
சொல்லாததையும் செய்வோம்ல..!!
.
.

50 Comments:

என்னது நானு யாரா? said...

போட்டுக்கொடுத்து பெருமைச் சேர்த்த பொற்கர பாண்டியன் வாழ்க!

உங்க நண்பருக்கு: இந்த மாதிரி நண்பர் உங்களுக்குத் தேவையா சொல்லுங்க? எங்காவது யாருக்கும் குறிப்பா வெங்கட்டுக்கு Address கொடுக்காம வேற புதிய இடத்துக்கு சொல்லிக்காம ஓடிப்போயிடுங்க சார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதுக்கப்புறம் அந்த நன்பெண்டா உங்களை சேலத்துல துரத்தி துரத்தி அடிச்சத சொல்லவே இல்லை..

Sen22 said...

:))))

Vijay Anand said...

வச்சுட்டான்யா ஆப்பு….

GSV said...

பத்த வச்சிட்டியே பரட்ட !!! :)

ரசிகன் said...

இருபத்தி ஓராம் நூற்றாண்டின்,
எட்டப்ப ராஜாவே...

பூவுலகப் பகை முடித்து,
பதிவுலகம் புகுந்துள்ள,
ப்ரூட்டஸே...

யூதாஸ் இல்லாக் குறை
தீர்த்திட வந்துதித்த‌
VASன் பாஸே

உம் நண்பர் பட்டியலில்,
தவறியேனும் இந்த‌
அறியாப் பிள்ளையின்
பெயர் இருப்பின்,
நீக்கி அருள்வீராக..

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// உங்க நண்பருக்கு: இந்த மாதிரி நண்பர்
உங்களுக்குத் தேவையா சொல்லுங்க? //

கண்டிப்பா தேவை..

4000 ரூபா பணம் வந்தும்
AC Service பண்ண Step எடுக்காம
இருந்தது என் நண்பனோட தப்பு..

நான் Pesonal-ஆ சொன்னப்ப எல்லாம்
" பாத்துக்கலாம்டான்னு " சொல்லிட்டான்..

ஆனா இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம்
ஒரே வாரத்தில AC Service பண்ணிட்டான்ல..

நண்பன் தப்பு பண்ணும் போது
பார்த்துட்டு சும்மா இருக்க கூடாது..
அவனுக்கு எது சரின்னு புரிய வைக்கணும்..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அதுக்கப்புறம் அந்த நன்பெண்டா உங்களை
சேலத்துல துரத்தி துரத்தி அடிச்சத சொல்லவே இல்லை.. //

ஹா., ஹா., ஹா..!!

அவன் என்னை துரத்தி துரத்தி
அடிக்கணும்னு மனசுல நினைச்சாலே
போதும்..,அதுக்கப்புறம் அந்த இடத்துல
இருந்து ஒரு அடி கூட அவனால
எடுத்து வைக்க முடியாது....

அவன் காலை., என் கை
Arrest பண்ணி வெச்சி இருக்கும்ல..

வெங்கட் said...

@ விஜய்.,

// வச்சுட்டான்யா ஆப்பு…. //

@ GSV.,

// பத்த வச்சிட்டியே பரட்ட !!! //

நீங்க நாயகன் படம் பார்க்கலையா..?

" நாலு பேர்க்கு நல்லது நடக்கணுமா..,
எதுவுமே தப்பில்ல.."

என் Friend Office-ல மொத்தம்
114 Clients..

So.,

" நூத்தி பதிநாலு பேர்க்கு நல்லது நடக்கணுமா.,
இதுவும் தப்பில்ல.."

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இருபத்தி ஓராம் நூற்றாண்டின்,
எட்டப்ப ராஜாவே... //

நான் எட்டப்பன்ன்னா
அவரு கட்டபொம்மனா..?

நாலாயிரம் ரூபா " சுட்ட " பொம்மன்..

Shalini said...

//நண்பன் தப்பு பண்ணும் போது
பார்த்துட்டு சும்மா இருக்க கூடாது..
அவனுக்கு எது சரின்னு புரிய வைக்கணும்..!!
//

நண்பனுக்கான இலக்கணமே இதானே

Shalini said...

//அதுக்கப்புறம் அந்த நன்பெண்டா உங்களை சேலத்துல துரத்தி துரத்தி அடிச்சத சொல்லவே இல்லை..

//

போலீஸ் உங்க அனுபவத்த இப்ப யார் கேட்டா?

Shalini said...

//போட்டுக்கொடுத்து பெருமைச் சேர்த்த பொற்கர பாண்டியன் வாழ்க!
//
இருபத்தி ஓராம் நூற்றாண்டின்,
எட்டப்ப ராஜாவே...

பூவுலகப் பகை முடித்து,
பதிவுலகம் புகுந்துள்ள,
ப்ரூட்டஸே...

யூதாஸ் இல்லாக் குறை
தீர்த்திட வந்துதித்த‌
VASன் பாஸே
//

தப்பு செஞ்சவன் நண்பனா இருந்தாலும் தட்டி கேக்கணும்னு சொன்னதுக்கா இப்படி?

பாஸ் இவங்கள நாடு கடத்துங்க இந்த மாதிரி ஆளுங்கனால தான் இன்னும் நம்ம நாடு இன்னும் வல்லரசாகலை!

Chitra said...

With friends like these, who needs enemies...... ha,ha,ha,ha,ha....

தியாவின் பேனா said...

நண்பேன்டா...!!

அருண் பிரசாத் said...

ஐ, Me The First - Missing....

ரமெஷ், நீங்க ஜெயிச்சிபுட்டீங்க...

Anonymous said...

வெங்கட்.
சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது.
சத்தியமாக இதுகளை பார்த்து நான் சிரிக்கவில்லை .
//அவனுக்கு நானும் ஒரு Client..//

//சீரியஸா Discuss பண்ணிட்டு இருந்தோம்//

pinkyrose said...

Shalini
//பாஸ் இவங்கள நாடு கடத்துங்க இந்த மாதிரி ஆளுங்கனால தான் இன்னும் நம்ம நாடு இன்னும் வல்லரசாகலை! //

யேய் Me the first உன்னை போன போகட்டும் இங்க intro பண்ணி வச்ச நீ அதிகமா பில்டப் கொடுக்கர

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஆமா,ரமேஷு Share Broking ஆபீஸ்
நடத்துராருனு எங்கிட்ட சொல்லவேயில்ல...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அப்புறம் நண்பரே, என்னை எப்ப உங்க வீட்டுக்குக் கூப்பிடப் போறீங்க? உங்களைப் பத்தி "நல்ல"தா நாலு வார்த்தை உங்க மனைவிகிட்ட சொல்லலாம்னுஇருக்கேன்!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்
//இருபத்தி ஓராம் நூற்றாண்டின்,
எட்டப்ப ராஜாவே...

பூவுலகப் பகை முடித்து,
பதிவுலகம் புகுந்துள்ள,
ப்ரூட்டஸே...

யூதாஸ் இல்லாக் குறை
தீர்த்திட வந்துதித்த‌
VASன் பாஸே

உம் நண்பர் பட்டியலில்,
தவறியேனும் இந்த‌
அறியாப் பிள்ளையின்
பெயர் இருப்பின்,
நீக்கி அருள்வீராக..//


இருபத்தி ஓராம் நூற்றாண்டின்,
அரிசந்திர ராஜாவே...

பூவுலகப் பொய்யர்களை முடித்து,
பதிவுலகம் புகுந்துள்ள,
சூரியனே...

மனுநீதி சோழன் இல்லாக் குறை
தீர்த்திட வந்துதித்த‌
VASன் பாஸே

உம் நண்பர் பட்டியலில்,
தவறாது இந்த‌
அறியாப் பிள்ளையின்
பெயர் சேர்த்து அருள்வீராக..

drbalas said...

அப்புறம் உங்க நண்பர் சொன்னாரா...'' உதைப்பேன்டா.!''
இதுல வேற...
''நாங்கல்லாம்
சொன்னதையும் செய்வோம்..,
சொல்லாததையும் செய்வோம்ல..!!''

அடக்க முடியாமல் சிரித்தேன்.

வெங்கட் said...

@ ஷாலினி.,

// பாஸ் இவங்கள நாடு கடத்துங்க
இந்த மாதிரி ஆளுங்கனால தான்
இன்னும் நம்ம நாடு இன்னும் வல்லரசாகலை! //

இப்படி சின்ன சின்ன தண்டனை
குடுத்தா இவங்கள மாதிரி
ஆளுங்களுக்கு பயம் வராது..

பெரிய தண்டனை குடுக்கணும்..

@ ரசிகன்.,

இன்னியில இருந்து நீங்க தினமும்
ரமேஷ் Blog-ல 4 பதிவு.,
அருண் Blog-ல 4 பதிவு.,
பெ.சொ.வி Blog-ல 4 பதிவு
படிக்கணும்..

( Mind Voice... )

" ரொம்ப கொடூரமான தண்டனையா
இருக்கே..!! ரசிகனுக்கு மனநிலை
பாதிச்சிட போகுது..!!"

" ஓ.. அப்படியா..? அப்ப தண்டனைய
கொஞ்சம் குறைச்சிடலாம்..!! "

" ரசிகன்.. இனிமே தினமும் இவங்க
மூணு பேர் Blog-க்கும் போயி.,
ரெண்டு நிமிஷம் கண்ணை மூடிட்டு
இருந்துட்டு வர்றீங்க.. ஓ.கேவா..? "

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@ ரசிகன்.,

இன்னியில இருந்து நீங்க தினமும்
ரமேஷ் Blog-ல 4 பதிவு.,
அருண் Blog-ல 4 பதிவு.,
பெ.சொ.வி Blog-ல 4 பதிவு
படிக்கணும்..//

அப்படியே டெரர் ப்ளாக் போய் அவரோட தமிழை படிங்கன்னு சொல்லிருந்தா, அப்புறன் உங்களை கொலை குத்தத்துல உள்ள போட்டிருப்பாங்க.

வெங்கட் said...

@ அருண்.,

// ஐ, Me The First - Missing....
ரமெஷ், நீங்க ஜெயிச்சிபுட்டீங்க... //

ஆமாங்க.. அவரு ஒலிம்பிக்
100 மீட்டர் Running Race-ல
உசைன் போல்ட்., நட்டு., ஸ்பேனர்
இவங்களை எல்லாம் Overtake
பண்ணி ஜெயிச்சிபுட்டாரு..

கூப்பிட்டு மெடல் குடுங்க..!!

வெங்கட் said...

@ பாரதி.,

// சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது.
சத்தியமாக இதுகளை பார்த்து நான்
சிரிக்கவில்லை //

நல்ல நல்ல Comment போட்டுட்டு
இருந்தாரே.. இப்படி ஆயிட்டாரே..!!?

எல்லாம் அனு இவரை
பாராட்டினதுக்கு அப்புறம் தான்..

பயப்படாதீங்க.., கோயில்ல
மந்திரிச்சி ஒரு தாயத்து கட்டினா
எல்லாம் சரியா போயிடும்..

வெங்கட் said...

@ பிங்கி.,

// யேய் Me the first உன்னை போன
போகட்டும் இங்க intro பண்ணி
வச்ச நீ அதிகமா பில்டப் கொடுக்கர //

ஹலோ.. என்ன இது..?

எங்க Area-வுக்கு வந்து..,
எங்க சங்கத்து ஆளுக்கே
Sound விடறீங்க..?

இன்னிக்கு நம்ம ஷாலினி
எவ்ளோ Popularity இருக்குன்னு
தெரியுமா..?!!

ரசிகன் said...

@Terror
//
இருபத்தி ஓராம் நூற்றாண்டின்,
அரிசந்திர ராஜாவே...

மனுநீதி சோழன் இல்லாக் குறை
தீர்த்திட வந்துதித்த‌
VASன் பாஸே
//

ஹலோ Mr.அரிச்சந்திரன், மனு நீதி சோழர இழுத்துட்டு வேக வேகமா எங்க போறீங்க..?
சொன்னா கேளுங்க.. ஏற்கனவே செத்துப் போனவங்களால தற்கொலை பண்ணிக்க முடியாது..

ரசிகன் said...

@Venkat
//இன்னியில இருந்து நீங்க தினமும்
ரமேஷ் Blog-ல 4 பதிவு.,
அருண் Blog-ல 4 பதிவு.,
பெ.சொ.வி Blog-ல 4 பதிவு
படிக்கணும்..
//

சின்ன‌ பாவ‌ம் ப‌ண்ணினா ஒரு கோயில் ஏறி ப்ராய‌சித்த‌ம் ப‌ண்ணிக்க‌லாம்..
பெரிய‌ பாவ‌ம் ப‌ண்ணினா கோயில் கோயிலா ஏறி இற‌ங்கி தான் ஆக‌ணும்..
ஆனாலும் ஒரு மொக்கை ப‌திவின் தாக்க‌த்திலிருந்து வெளி வ‌ர‌ 12 ந‌ல்ல‌ ப‌திவு ப‌டிக்க‌ணுமா...??

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இன்னிக்கு நம்ம ஷாலினி
எவ்ளோ Popularity இருக்குன்னு
தெரியுமா..?!! //

அத ஏன் கேக்கறீங்க? இன்னிக்கு காலையில கூட என் பிரெண்ட் கிட்ட "காதலுக்கு மரியாதை" படத்துல ஹீரோயின் யார்ருன்னு கேட்டா, me the first!னுதான் பதில் வருது!

வெங்கட் said...

@ மணி.,

// ஆமா,ரமேஷு Share Broking ஆபீஸ்
நடத்துராருனு எங்கிட்ட சொல்லவேயில்ல... //

ஹி., ஹி., ஹி..!!

Actually ரமேஷ் Share Broking ஆபீஸ்
நடத்தலை.. But கவனிச்சுக்கறார்..

I mean.. அவர் அங்கே Watchman-ஆ
இருக்கார்னு சொல்ல வந்தேன்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அப்புறம் நண்பரே, என்னை எப்ப
உங்க வீட்டுக்குக் கூப்பிடப் போறீங்க?
உங்களைப் பத்தி "நல்ல"தா நாலு வார்த்தை
உங்க மனைவிகிட்ட சொல்லலாம்னுஇருக்கேன்! //

கூப்பிட்டுட்டா போச்சு..!!

போன்ல Invite பண்ணினா
நல்லா இருக்காது..

So., நானே உங்க வீட்டுக்கு நேர்ல வந்து.,
உங்க மனைவிகிட்ட
உங்களைப் பத்தி "நல்ல"தா
நாலு வார்த்தை சொல்லிட்டு
விருந்துக்கும் Invite பண்ணிட்டு வர்றேன்..

சந்தோஷம் தானே..!!

அருண் பிரசாத் said...

//நண்பன் தப்பு பண்ணும் போது
பார்த்துட்டு சும்மா இருக்க கூடாது..
அவனுக்கு எது சரின்னு புரிய வைக்கணும்..!! //

நண்பன் தப்பு பண்ணா கண்டிக்கனும், இப்படி பப்ளிக்கா போட்டு குடுக்ககூடாது.

உங்களுக்கு கர்ணன் தெரியுமா? துரியோதனன் தப்பு செஞ்சாலும் கடைசி வரைகூட இருந்து உயிர் விட்டான். சபைல போட்டு குடுக்கல...

சரி உங்களுக்கு தளபதி ரஜினி தெரியுமா? மம்முட்டிக்கு துணையா கடைசி வரை இருந்தார்...

எல்லாம் விடுங்க, நட்புக்கு இலக்கணம் அருண்பிரசாத் தெரியுமா? கர்ணன், தளபதி ரஜினி பத்தியே தெரியாத உங்களுக்கு அருண், நட்புக்காக செஞ்சதை சொன்னா புரியவா போகுது?

வெங்கட் said...

@ அருண்.,

// உங்களுக்கு கர்ணன் தெரியுமா?
துரியோதனன் தப்பு செஞ்சாலும்
கடைசி வரைகூட இருந்து உயிர் விட்டான் //

// சரி உங்களுக்கு தளபதி ரஜினி தெரியுமா?
மம்முட்டிக்கு துணையா கடைசி வரை இருந்தார்... //

சிவாஜி நடிச்ச ' கர்ணன் ' படம்
பார்த்ததுக்கே இந்த பில்டப்பா..?

நீங்க சொல்றது True Friendship.,
நான் சொல்றது Good Friendship..

For Eg..

ஒரு வேளை நீங்க ஜெயிலுக்கு
போக வேண்டி வந்தாலும்.,
உங்க பக்கத்திலேயே இருக்கறவன்
உண்மையான நண்பன்..

ஆனா நீங்க தப்பு பண்ணும் போதே
Advise பண்ணி., பிரச்சினைய பெருசாகாம
பாத்துக்கறவன் தான் நல்ல நண்பன்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ஹலோ Mr.அரிச்சந்திரன், மனு நீதி சோழர
இழுத்துட்டு வேக வேகமா எங்க போறீங்க..? //

அரி : சோழரே சீக்கிரம் வாரும்..

மனு : என்ன விஷேசம் அரிசந்திரரே..?

அரி : பூலோகத்தில பொய்யே பேசாத
ஒரு மானிடன் இருக்கிறானாம்.,
பார்த்து விட்டு வரலாம்..

மனு : என்ன ஆச்சரியம்..? உம்மை விடவா
அவன் சிறந்தவன்..?

அரி : ஆம் சோழரே.. நான் எப்போதும்
" பொய் பேச மாட்டேன் " என்று சொல்லுவேன்..
அதிலே " பொய் " என்ற வார்த்தை வரும்..
ஆனால் அவனோ " பொய் " என்ற வார்த்தையை
கூட உச்சரிக்க மாட்டானாம்..

மனு : ஓ.. நீங்கள் வெங்கட்டை பத்தி தானே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்..?!!

அரி : ஆமாம்.. உங்களுக்கு ஏற்கனவே
வெங்கட்டை தெரியுமா..?!!

மனு : ஓ.., நான் போன வருஷமே
அவரிடம் Autograph வாங்கிவிட்டேனே..
Me the First..!!

அரி : அட Just Miss.., சரி., சரி என்னோடு
இன்னொரு முறை வாரும்..

( Mr.அரிச்சந்திரன், மனு நீதி சோழர
இழுத்துட்டு வேக வேகமா போறதுக்கு
முன்னாடி நடந்தது இது.. )

சேலம் தேவா said...

இதுக்கு ஆர்யாவே பரவால்ல!!!

இம்சைஅரசன் பாபு.. said...

// mean.. அவர் அங்கே Watchman-ஆ
இருக்கார்னு சொல்ல வந்தேன்..//

ஹ ......ஹா ..........அசிங்க பட்டன் போலீஸ் காரன்

Shalini(Me The First) said...

//ஐ, Me The First - Missing....

ரமெஷ், நீங்க ஜெயிச்சிபுட்டீங்க...//


இப்ப என்ன பண்ணுவீங்க?
இப்ப என்ன பண்ணுவீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//// mean.. அவர் அங்கே Watchman-ஆ
இருக்கார்னு சொல்ல வந்தேன்..//

ஹ ......ஹா ..........அசிங்க பட்டன் போலீஸ் காரன்//

இதுல அசிங்க பட என்ன இருக்கு. போலீஸ்னாலே சமூக அவலங்களை watch பண்ணி தட்டி கேட்கும் வாட்ச்மேன் தான!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// Shalini(Me The First) said...

//ஐ, Me The First - Missing....

ரமெஷ், நீங்க ஜெயிச்சிபுட்டீங்க...//


இப்ப என்ன பண்ணுவீங்க?
இப்ப என்ன பண்ணுவீங்க?//


உங்க அறிவை நினைச்சு VAS கண்கலங்கி நிக்கிறாங்களாம். சீக்கிரம் போய் "me the first" award வாங்குங்க..

வெங்கட் said...

@ பாபு..,

// ஹ.., ஹா.., அசிங்கபட்டான்
போலீஸ்காரன் "

அசிங்கப்படறதுக்கல்லாம்
அவரு அலட்டிக்கவே மாட்டாரு..
அதெல்லாம் அவருக்கு மெடல்
வாங்குற மாதிரி...

இப்ப Latest-ஆ ஒரு புது மெடல்
சேர்ந்திருக்கு..!!
Yes.., அப்படியே
ஷாலினி Comment-ஐ பாருங்க..

வெங்கட் said...

@ ஷாலினு.,

சூப்பர்., கலக்கல் ஐடியா..!!

ஹி., ஹி., அருண் இனிமே எப்படி
Comment போடுவாரு..?
அவருக்கு " Me the First " கலாய்க்கிறதை
விட்டா வேற Comment போட தெரியாதே..!!

ஹி., ஹி., ரமேஷ் இனிமே எப்படி
அவர் Blog-ல Posting போடுவாரு..?
அவருக்கும் " Me the First " கலாய்க்கிறதை
விட்டா வேற Posting போட தெரியாதே..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உங்க அறிவை நினைச்சு VAS கண்கலங்கி
நிக்கிறாங்களாம். சீக்கிரம் போய்
"me the first" award வாங்குங்க.. //

இங்கே ரமேஷு., ரமேஷுன்னு
ஒரு மானஸ்தரு இருந்தாரே..
அவரை எங்கே காணோம்..?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உங்க அறிவை நினைச்சு VAS கண்கலங்கி
நிக்கிறாங்களாம். சீக்கிரம் போய்
"me the first" award வாங்குங்க.. //

இங்கே ரமேஷு., ரமேஷுன்னு
ஒரு மானஸ்தரு இருந்தாரே..
அவரை எங்கே காணோம்..?!!//

நாங்கெல்லாம் இருக்குற இடத்துக்கு தக்க எங்களை மாத்திக்குவோம். VAS ஏரியாக்கு வரும்போது அவங்களா மாதிரி மாறினாதான நல்லா இருக்கும்..

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

ப.செல்வக்குமார் said...

கொஞ்சம் தாமதம் ஆகிப்போச்சு ..! இருந்தாலும் தப்பு எங்க இருந்தாலும் அது திருத்தப் படவேண்டும் . இதுதான் VAS ன் தாரக மந்திரம் ..!! அதுபடிதான் எங்க தலை நடந்திருக்கார் ..!!

ப.செல்வக்குமார் said...

// Shalini(Me The First) said...//
ஹா ஹா ஹா .. VASல Me The First ஆ இருந்தாங்க .. இப்ப அவுங்க பேரே அப்படி மாறிடுச்சு
எங்களுக்கு இப்படி வாழவச்சுத்தான் பழக்கம் .. எப்ப அடுத்தவுங்க தப்பு பண்ணுவாங்க ,
அதுல இருந்து ஒரு பதிவு போடலாம் அப்படின்னு நினைக்கிரவுங்க நாங்க கிடையாது ..

Madhavan said...

me the first..

Can you find what am I first for?

Shalini(Me The First) said...

//இன்னிக்கு நம்ம ஷாலினி
எவ்ளோ Popularity இருக்குன்னு
தெரியுமா..?!!//

நல்லா காதுல விழற மாதிரி சொல்லுங்க பாஸ்!

//அத ஏன் கேக்கறீங்க? இன்னிக்கு காலையில கூட என் பிரெண்ட் கிட்ட "காதலுக்கு மரியாதை" படத்துல ஹீரோயின் யார்ருன்னு கேட்டா, me the first!னுதான் பதில் வரு//

அட அட!

//உங்களுக்கு கர்ணன் தெரியுமா? துரியோதனன் தப்பு செஞ்சாலும் கடைசி வரைகூட இருந்து உயிர் விட்டான். சபைல போட்டு குடுக்கல..//
அதனாலதான் துரியோதனன் திருந்தாம போனான் Mr.sun`snetway

இதுல அசிங்க பட என்ன இருக்கு. போலீஸ்னாலே சமூக அவலங்களை watch பண்ணி தட்டி கேட்கும் வாட்ச்மேன் தான!!//

எப்படி போலீஸ் உங்களால மட்டும் இப்படி முடியுது?

//உங்க அறிவை நினைச்சு VAS கண்கலங்கி நிக்கிறாங்களாம். சீக்கிரம் போய் "me the first" award வாங்குங்க.//

அது சரி, அங்க ஏன் ஒரே கருகல் வாசனை வருது?


//சூப்பர்., கலக்கல் ஐடியா..!!//

உங்க சிஷ்யை பாஸ்!

//ஹி., ஹி., அருண் இனிமே எப்படி
Comment போடுவாரு..? //
இனியாச்சும் ஒழுங்கா எண்ட்ரன்ஸ்க்கு ப்ரிப்பேர் பண்ணட்டும்.

//ஹி., ஹி., ரமேஷ் இனிமே எப்படி
அவர் Blog-ல Posting போடுவாரு..?//

இனியாச்சும் சொந்தமா சிந்திக்கட்டும்!

//நாங்கெல்லாம் இருக்குற இடத்துக்கு தக்க எங்களை மாத்திக்குவோம். VAS ஏரியாக்கு வரும்போது அவங்களா மாதிரி மாறினாதான நல்லா இருக்கும்.//
போதும் போலீஸ் சமாளிஃபிகேசன் ஆமா எங்க உங்க தலைவி ஓடியே போய்டாங்களா?ஆளையே காணோம்?

//Can you find what am I first for?//

hello, "me the first" is copyrighted under venkat`s law

Madhavan said...

எம்.எஸ்.சி. இயற்பியல் படிச்சப்ப, நான்தான் 1st ராங்கு- கோல்ட் மெடல் வாங்கினேன்.. இப்ப சொல்லுங்க 'மீ தி ஃபர்ஸ்ட்' தானே.