சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 September 2010

Plan பண்ணி பண்ணுவோம்ல..!!

இவரு யாருன்னு தெரியுதா..?
நல்லா உத்து பாருங்க..

Lord லபக்தாஸ் மாதிரி
ஒரு Look..,
கையில இருக்கிற அந்த
திருட்டு Watch.,
Friend-கிட்ட ஆட்டைய
போட்ட Belt..
ஓசி T.Shirt.,

இப்ப தெரியுதா..?

ஆங்..,  இவர் தான்
நம்ம திருட்டு போலீஸ் ( Sorry..,  )
லூஸ் போலீஸ்., ( மறுபடியும் Sorry.. )
சிரிப்பு போலீஸ்.,

அதாங்க
ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )
இப்படி பொய் சத்தியம் பண்ணுவாரே..
அவரே தான்.. இவரு..

இவருக்கு இன்னிக்கு Birthday..

இன்னிக்கு இவருக்கு
எதாவது பண்ணனும்..
இல்ல
இவரையாச்சும் எதாவது
பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?!!
( Thinking.............. )

ஐடியா No.1:
ஒரு Birthday Cake பார்சல் அனுப்பலாமா..?

( என்னாத்துக்கு..?? சிங்கப்பூர்ல இருந்து
வரும் போது நமக்கு 10 பைசா மிட்டாய்
வாங்கிட்டு வந்தாரா..? இல்லையே...
அப்புறம் என்னாத்துக்கு Birthday Cake..? )

ஐடியா Dropped..

ஐடியா No. 2 :
புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..?

( கவிதை எழுதறதே கஷ்டம்..,
அதுல இவரை புகழ்ந்து வேற..
என்ன கொடுமை இது..?? )

அண்ணனுக்கு தம்பி நீ.,
தம்பிக்கு அண்ணன் நீ.,

அண்ணன் தம்பி இருவருக்கும்
ஆங்கிலத்தில் பிரதர் நீ.,

( வாவ்.. வாவ்.. வாவ் )

சினி க்விஸ் மன்னன் நீ..,
அழகு பெண்களின் சித்தாப்பு நீ.,

பதிவுலக சாத்தான் நீ..!
( ஹி.,ஹி., ஹி.., அவசரத்துல
உண்மைய உளறிட்டேன்..
இதோ Correct பண்ணிடறேன்.. )


பதிவுலக சுல்தான் நீ..!

ஐய்யோ.. கண்ணு இருட்டு கட்டுதே..,
மயக்கம் மயக்கமா வருதே..

( எனக்கு எப்பவும் ஓவரா பொய்
சொன்னா இப்படி தான் ஆகும்.. )

ஐடியா Dropped..

ஐடியா No. 3 :
கதை மாதிரி எதாவது எழுதிடலாமா..??!!

வேணாம்..!! வேணாம்..!!
பூச்சாண்டி கதைன்னு
குழந்தைங்க எல்லாம் பயந்துக்கும்..
( குழந்தைங்க மட்டுமா..??!! )

ஐடியா Dropped..

ஐடியா No.4 :
ஒரு Call or  SMS பண்ணி
வாழ்த்து சொல்லிடலாமா..?

Call பண்ணினா - 1 ரூபா.,
SMS பண்ணினா - 50 பைசா.,

இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா..??

ஐடியா Dropped..

ஐடியா No.5 :
சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி..!!

" Happy Birthday to RAMESH "

எல்லோரும் இப்படியே சும்மா
வேடிக்கை பார்த்திட்டு இருந்தா எப்படி..??

ம்ம்.. Start பண்ணுங்க..,

வந்து வாய்க்கு வந்த மாதிரி
ரமேஷை வாழ்த்த ஆரம்பிங்க...

டிஸ்கி :
நம்மள மாதிரியே
ரமேஷை ( வாழ்த்தி பதிவு ) போட்டு தள்ள
Plan பண்ணியவர்கள்..

.

.

64 Comments:

இம்சைஅரசன் பாபு.. said...

many mare happy returns of the day

Balaji saravana said...

ஹாப்பி பர்த் டே போலிஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது சிரிப்பு போலீஸ் க்கு பிறந்த நாளா? சொல்லவே இல்லை. நண்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிப்பு போலீஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அர்ச்சனை பண்ண நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன். அதுவரைக்கும் நீங்க இங்க அர்ச்சனை பண்ணுங்க..

Shalini said...

me the first
me the first
me the first

Anonymous said...

அண்ணன் ரமேசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்துச்சொன்னால் பார்ட்டி வைக்கணும். எப்ப எங்க என்று தனியாக எனக்கு மட்டும் அறிவிக்கவும்.
@வெங்கட் !! தயவு செய்து ரமேசின் Phone No உம் Address உம் எனக்கு அனுப்பவும். உங்களுக்காக நான் ரமேசின் Party யில் பங்குபற்றுகிறேன்.( Party தானம் கோடி புண்ணியம்.)

Thenral said...

Rameshku pirantha naal vaazhthukkal!!!Gokulathil suriyane!Ahaa.....Kavithai...Kavithai pramadham!!!Besh!Besh!!!

Chitra said...

HAPPPPPPPPPPY BIRRRRRRRRRRTHDAY, RRRRRRAMESH!

ருத்ர வீணை® said...

இப்போவே கண்ண கட்டுதே..!!

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரமெஷ்

என்னது நானு யாரா? said...

(வடிவேலு குரலில் படிக்கவும்)
என்னது இது சின்ன புள்ள தனமா இருக்கு..!!

பர்தடேன்னா வாழ்த்து சொல்லணும்.. காலை வாறி விடகூடாது. அதுக்கு தான் மீதி 364 நாள் இருக்கே!

வர்டா....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பதிவுலகில் பாபு said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

TERROR-PANDIYAN(VAS) said...

வாழ்த்துகள் ரமேஷ்...

Manish said...

ramesh many more happy returns of the day

with regards
manivannaraj

ப.செல்வக்குமார் said...

ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன்.

Gayathri said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் வந்துட்டேன். முதல்ல வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..

Deepa said...

:)) கவிதைக‌ள் சூப்பர்!
Happy Birthday Ramesh!

சந்தனமுல்லை said...

:)))

நல்லா சிரிக்க வைச்சுட்டீங்க...

happy Birthday!

pinkyrose said...

வாழ்த்துக்கள் ரொம்ப நல்லவரே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அண்ணன் ரமேசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்துச்சொன்னால் பார்ட்டி வைக்கணும். எப்ப எங்க என்று தனியாக எனக்கு மட்டும் அறிவிக்கவும்.
@வெங்கட் !! தயவு செய்து ரமேசின் Phone No உம் Address உம் எனக்கு அனுப்பவும். உங்களுக்காக நான் ரமேசின் Party யில் பங்குபற்றுகிறேன்.( Party தானம் கோடி புண்ணியம்.)//

பாரதி பார்ட்டி வேணும்னா என்கிட்டே கேக்கணும். வெங்கட் கிட்ட கேட்டா எப்படி? அக்கௌன்ட் நம்பர் கொடுங்க. அனுப்பிடலாம்.

ப.செல்வக்குமார் said...

கோவிலில் நானும் ஐயரும்
செல்வா : வணக்கம்க , ரமேஷ் அண்ணா பேருல ஒரு அர்ச்சனை பண்ணனும்.
ஐயர் : எந்த ரமேஷ் ..?
செல்வா : என்ன இப்படி கேட்டுடிருக்கீங்க , உங்களுக்கு எத்தன ரமேஷ் தெரியும்..?
ஐயர் : எனக்கு நிறைய ரமேஷ் தெரியும் , குறிப்பா சொல்லனும்னா நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் தெரியும்.
செல்வா : அவரே தான் .. அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள். அதுக்கு வாழ்த்து சொல்லணும்.
ஐயர் : எனக்குத் தெரியும் அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள் அப்படின்னு. அதான் காலைல போன் போட்டு வாழ்த்தலாம்னு கூப்பிட்டேன். அதுக்கு அவர் " பிறந்தநாளன எல்லோரும் குளிக்கசொல்லி மிரட்டுவாங்க. அதனால நான் அடுத்தவருசம் பிறந்தநாள் வச்சுக்கிறேன் அப்படினாரே.
செல்வா : அதெல்லாம் நாங்க கம்பெல் பன்னி இந்த வருசமே கொண்டாட வச்சிட்டோம். நீங்க அவரு பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க.
ஐயர் : இந்ந்த வருஷம் முதல் அவர் சினிமா புதிர் போடாமல் இருக்கவேண்டுமாய நமக.!
செல்வா : அதெல்லாம் வேண்டாம், அவரு அதைய நிறுத்தமாட்டார். வேற சொல்லுங்க.
ஐயர் : இந்த வருடம் முதல் அவர் அண்ணன் மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்று பல்பு வாங்காமல் இருக்கேவேண்டுமாய நமக.!
செல்வா : ஐயோ , அதைய அவரு எப்படி விடுவாரு..? வேற சொல்லுங்க .
ஐயர் : இந்த வருடம் முதல் அவருக்கு இங்கிலீஸ் பேசி பழக வேண்டுமாய நமக .!
செல்வா : ஏன் நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ..?
ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!
செல்வா : அப்பாடா , இப்பத்தான் ஒரு நல்ல வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!
அப்படியே நடக்கட்டும் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி..!! //

அதுக்கும் கரண்ட் செலவாகுமே. ஓஹோ உங்க வீட்ல கரண்ட் இலவசமா கிடைக்குதுன்னு கேள்விப்பட்டு ஆராய்ச்சி பண்ணினதுல சில தகவல்கள் கிடைச்சது. உங்க ப்ளாக் படிச்சதுக்கு (not comment section)அப்புறம் நிறைய பேர் கம்ப்யூட்டர் பக்கமே வராததால நிறைய கரண்ட் மிச்சமாம். அதனால ஆற்காட்டார் நன்றி தெரிவிச்சு உங்களுக்கு கரண்ட் இலவசமா குடுக்குறாராமே. அப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ வெங்கட்

ஷாலினி பொண்ணுக்கு ஒழுங்கா ட்ரைனிங் கொடுங்கப்பா. டெய்லி லேட்டா வந்துட்டு Me the first ன்னு ஒரே சவுண்ட்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பிறந்த நாள் வாழ்த்துகள் என்று ஒரே வரியில் வாழ்த்துவது அவ்வளவு நல்லா தான் இருக்காது என்றாலும், இதைவிட சிறப்பாக எப்படி வாழ்த்துவது என்று இப்போதைக்குதெரியாததால்,
ஒரே வரியில் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்லி அமைகிறேன்! (ஸ்......அப்பா! சோடா ப்ளீஸ்!)

Shalini said...

@ வெங்கட்

ஷாலினி பொண்ணுக்கு ஒழுங்கா ட்ரைனிங் கொடுங்கப்பா. டெய்லி லேட்டா வந்துட்டு Me the first ன்னு ஒரே சவுண்ட்./

hyyo birthday baby,me the first நான் சொன்னது எக்ஸாம் ரிஸல்ட்ட

இனி எப்ப வந்தாலும் Me the first தான்!
/என்னது சிரிப்பு போலீஸ் க்கு பிறந்த நாளா?/
பாஸ், பாருங்க போன போகுதுன்னு இவருக்கு உங்க ப்ளாக்ல பெரிய மனசு பண்ணி happy birthday சொன்னீங்கல்ல அது இவருக்கே தெரியலயாம்
எனக்கு தமிழ் சொல்லி தந்த மாதிரி இவருக்கும் சொல்லி கொடுங்க பாவம்

ரசிகன் said...

Hearty Birthday Wishes to Ramesh..!!

வெறும்பய said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

vinu said...

naanum presenttu and i too wishiinguuuuuuuuuuuuuu

Anbu.Bala said...

Venkat,
Just I posted this comment in karki’s blogspot, let us know what u think

Near my apt, there is an Indian groceries store. Last week, when I was chatting with the owner (tamil) & he was sharing some infos…I couldn’t digest & after that I am not able to eat atleast for 1 hrs(!!!)…that info is someone steals the “SURRA” movies DVD (2) from his shop. That DVD has 2 movies (Surra & villu).
They have taken only the DVD.. They left the cover. He was surprised why they have taken the SURRA DVD. It is not a super duper hit movie.
still why ? he said that he lost of hindi movies DVDs. Lot of hindi ppl/ Bangladesh/nepal ppl used to come his shop. obviously,they might have taken the Hindi DVDs.
Still why surra ?
What could be the reason karki ?
My guess are
1. They wanted to keep watching the movies for tamana or nayanthara.
2. They wanted to keep watching the movie to find the what’s story or vijay’s new expressions???
3. or preparing new story by watching his old movies!!!!

4. Preventing others watching this movie by stealing that DVD ?
Please let me your know thought on this.

Note1: me & my wife were great fans of Vijay(long long ago very long ago no one can predict that long ago)
Note2: still, my son is a Vijay’s fan. So watched all vijay’s movies.
Note3: the owner that he DVDs(both Surra/AAmbani) got profit from AAmbani dvd’s reny
Note4: I am going to request unnmaitamilan annan to invest this issue or will publish in idlyvadai blogspot.
Note5: he hasn’t lost any Ajith/simbu’s movies DVDs.

With SAD
Anbu.bala

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என்னது சிரிப்பு போலீஸ் க்கு
பிறந்த நாளா? சொல்லவே இல்லை.
நண்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா.... //

தன்னடக்கமாமாம்..!!

அப்ப எங்க 4 பேருக்கும்
ஆளுக்கு 2000 ரூபா அனுப்பி..,
" எனக்கு Birthday-க்கு
ஒரு Post போடுங்கன்னு "
கெஞ்சி, கெஞ்சி கேட்டீங்கல்ல
அதை இங்கே சொல்ல வேணாமா..?!!

வெங்கட் said...

@ பாரதி.,

// தயவு செய்து ரமேசின் Phone No உம்
Address உம் எனக்கு அனுப்பவும்.
உங்களுக்காக நான் ரமேசின் Party யில்
பங்குபற்றுகிறேன்.( Party தானம் கோடி புண்ணியம்.) //

Party என்ன Park Sheraton,
Taj Coromendal- லயுமா
நடக்க போகுது..??

இவரை நம்பி போனீங்க..,
கையேந்தி பவன்ல தான்
4 இட்லி வாங்கி தருவாரு..
(அதுவும் 4 மட்டும் தான்..
No Extra இட்லி.. )

பஸ் டிக்கெட் செலவு Waste..

வெங்கட் said...

@ @ என்னது நானு யாரா.,

// பர்தடேன்னா வாழ்த்து சொல்லணும்..
காலை வாறி விடகூடாது.
அதுக்கு தான் மீதி 364 நாள் இருக்கே! //

நாங்க எப்பவும் ஒரே மாதிரி தான்..
மனசுல ஒண்ணு வெச்சிட்டு.,
வெளியில ஒண்ணு பேச மாட்டோம்..

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்.,
அருமை., பெருமை., கண்-மை., உண்மை,

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// நான் வந்துட்டேன்...
முதல்ல வாழ்த்து சொன்ன
அனைவருக்கும் நன்றி.. //

இது என்ன நியாயம்..??
அப்ப ரெண்டாவதா, மூணாவதா
வாழ்த்து சொன்னவங்களுக்கெல்லாம்
நன்றி இல்லையா..??!!

நல்லா பாருங்க மகா ஜனங்களே..!!
இவருக்கு போயி நீங்க
வாழ்த்து சொன்னீங்களே..?!!

வேணும்னா இப்ப கூட
உங்க வாழ்த்தை வாபஸ் எடுத்துக்கலாம்..

யோசிங்க..

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// @ பாரதி பார்ட்டி வேணும்னா
என்கிட்டே கேக்கணும்.
வெங்கட் கிட்ட கேட்டா எப்படி?
அக்கௌன்ட் நம்பர் கொடுங்க. அனுப்பிடலாம்.//

எவ்ளோ அனுப்ப போறீங்க..??
16 ரூபாயா..??
( ஒரு இட்லி = 4 ரூபா )

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வெங்கட் said...

@ செல்வா..,

// ஐயர் : இந்த வருடம் அவருக்கு
கல்யாணம் ஆக வேடுமாய நமக .!

செல்வா : அப்பாடா , இப்பத்தான்
ஒரு நல்ல வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!
அப்படியே நடக்கட்டும் ..!! //

ஏன்.., ஏன்.., ஏன்..?

பெண் பாவம் பொல்லாதது
சொல்லிபுட்டேன்..!!!

Anu said...

Vijayakanthkku aduththadhaa (comedy) police get-up poruththamaa irukkuradhu namma sirippu police-ku thaan :)

Engal katchi singaththukku B'day wishes!!!!

வெங்கட் said...

@ தென்றல்.,
@ ருத்ரவீணை.,
@ தீபா.,
@ சந்தனமுல்லை.,
@ காயத்ரி.,
@ பாபு.,

நீங்கல்லாம் நம்ம Blog-க்கு
புதுசா வந்திருக்கீங்க..

Welcome..!!

வெங்கட் said...

@ Pinky.,

// வாழ்த்துக்கள் ரொம்ப நல்லவரே.! //

சே.. சூப்பர்ங்க..

நான் இவ்ளோ கஷ்ட்டப்பட்டு
ஒரு Post போட்டு
பண்ணினதை ( கலாய்ச்சதை )
ஒத்தை வரியில பண்ணிட்டீங்களே..!!

Great-ங்க நீங்க..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// me the first நான் சொன்னது எக்ஸாம் ரிஸல்ட்ட //

அப்படி போடுங்க அருவாளை..!!

" Me the First " -ன்னு இவங்க சொன்னது
VATE ( Venkatai Atharippor Talent Exam )-ல
World First வந்தாங்கல்ல.. அது..

// எனக்கு தமிழ் சொல்லி தந்த மாதிரி
இவருக்கும் சொல்லி கொடுங்க பாவம் //

இதுக்கு பேசாம
என்னை கரண்ட் கம்பியில
கை வெக்க சொல்லி இருக்கலாம்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Shalini said...
hyyo birthday baby,me the first நான் சொன்னது எக்ஸாம் ரிஸல்ட்ட
//

ஹலோ ஷாலினி:

வெங்கட் UG-ல university-ல first .
PG-ல University gold மெடல்
டெரர் 10 & +2 ல ஸ்டேட் பர்ஸ்ட். தமிழ்ல 200 க்கு 457. (அது எப்படின்னு கேக்குறீங்களா?நீங்க எடுத்த மார்க் : 1157 / 100 ( நூத்துக்கு ) இருக்கும்போது டெரர் 200 க்கு 457 க்கு எடுக்க கூடாதா?)

உங்க தலைங்க எல்லாம் இவ்ளோ தன்னடக்கமா இருக்கும் போது நீங்க மட்டும் ஏன் me the first ன்னு ஓவரா சவுண்ட் கொடுக்குறீங்க. வெங்கட் உங்க கட்சில இப்படி ஒரு ஆளா? நீங்க எவ்ளோ நல்லவரு. தன்னடக்கமானவரு..(ஐயோ நான் உங்களை பாராட்டுறனா கலாய்க்கிரனா?) ஒழுங்கா ட்ரைனிங் கொடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட தேங்க்ஸ் வெங்கட் உங்க ப்ளாக்ல பர்த்டே வாழ்த்து வந்தத பிறகு எனக்கு திருஷ்டி கழிஞ்சது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// Shalini said...
பாஸ், பாருங்க போன போகுதுன்னு இவருக்கு உங்க ப்ளாக்ல பெரிய மனசு பண்ணி happy birthday சொன்னீங்கல்ல அது இவருக்கே தெரியலயாம்//

ஹலோ மேடம் என்னமோ ப்ரீயா விளம்பரம் பண்ணின மாதிரி சொல்றீங்க. என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கு வெங்கட் 2000Rs வாங்கிருக்கார். காசு வாங்கி விஷ் பண்றதுக்கு பெரிய மனசெல்லாம் தேவை இல்லை.

இது வெங்கட் சொன்னதுதான்

அப்ப எங்க 4 பேருக்கும்
ஆளுக்கு 2000 ரூபா அனுப்பி..,
" எனக்கு Birthday-க்கு
ஒரு Post போடுங்கன்னு "
கெஞ்சி, கெஞ்சி கேட்டீங்கல்ல
அதை இங்கே சொல்ல வேணாமா..?!!

GSV said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி......

உங்க அலும்பு தாங்க முடியலைடா சாமி ..

Anonymous said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்
//பாரதி பார்ட்டி வேணும்னா என்கிட்டே கேக்கணும். வெங்கட் கிட்ட கேட்டா எப்படி? அக்கௌன்ட் நம்பர் கொடுங்க. அனுப்பிடலாம்.//
பார்ட்டியில் சாப்பாடு(/ இட்லி ) தட்டில கொடுப்பாங்க என்று தெரியும். ஆனா அக்கெளன்ட் நம்பரிலயுமா கொடுப்பாங்கலா??. சரி சரி ... அடுதபிறந்தநாள் பார்ட்டியை இரண்டு பேரா கொடுங்க.
@ வெங்கட்
//Party என்ன Park Sheraton,
Taj Coromendal- லயுமா
நடக்க போகுது..??//
அதுதான் தலை ரமேஸ் Address கேட்டேன்.வீட்டில போய் இறங்கீட்டால், அவர் இட்லி மட்டும் தந்து ஏமாத்தவிடமாட்டமே. அப்புறம்
Park Sheraton,
Taj Coromendal என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்.அது VAS கட்சி தொண்டர்களுடய‌ தனித்திறமை. உங்க கட்சியாட்களின் திறமையை சந்தேகிக்காதீங்க வெங்கட்!!!

GSV said...

கையில இருக்கிற அந்த
திருட்டு Watch.,
Friend-கிட்ட ஆட்டைய
போட்ட Belt..
ஓசி T.Shirt

இந்த போட்டோவுல தான் தளபதி ரொம்ப அழகா இருக்கார்..அதனால இதையே பொண்ணு பார்க்க கொடுக்கலாம்

வெங்கட் said...

@ அன்பு பாலா.,
// that info is someone steals the “SURRA” movies DVD (2)
from his shop. That DVD has 2 movies (Surra & villu). //

// My guess are
1. They wanted to keep watching the movies for tamana or nayanthara.
2. They wanted to keep watching the movie to find the what’s story or vijay’s new expressions???
3. or preparing new story by watching his old movies!!!!
4. Preventing others watching this movie by stealing that DVD ? //


ஒருவேளை " சுறா " படம்
திருட்டு DVD-ல தான் பார்க்க
லாயக்குன்னு சொன்னதை தப்பா
புரிஞ்சிக்கிட்டாங்களோ..??!!

( இது என் போன பதிவு
" விஜய்க்கு ஒரு ஐடியா "
சம்பந்தப்பட்ட Comment & Reply.. )

வெங்கட் said...

@ அனு.,

// Vijayakanthkku aduththadhaa (comedy) police
get-up poruththamaa irukkuradhu namma
sirippu police-ku thaan :) //

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..

இப்ப நீங்க கேவலப்படுத்தினது
விஜயகாந்தையா..? இல்ல
நம்ம ரமேஷையா..?!!

ரசிகன் said...

//சிங்கப்பூர்ல இருந்து
வரும் போது நமக்கு 10 பைசா மிட்டாய்
வாங்கிட்டு வந்தாரா..?

சிங்கப்பூர்ல 10 பைசா மிட்டாய்
எல்லாம் கிடைக்காது...
பாவம் ரமேஷ் என்ன பண்ணுவார்..

//புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..?

த‌ங்க‌ச் சிலைக்கு எதுக்கு வெள்ளிக்கொலுசு..
கவிதைக்கு எதுக்கு கவிதை...?

//குழந்தைங்க எல்லாம் பயந்துக்கும்..
( குழந்தைங்க மட்டுமா..??!! )

என்ன சின்னப்புள்ள தனமா சந்தேகம்,
எழுதறது நீங்களாச்சே...
எல்லாரும்தான் பயப்படுவாங்க..

//இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா..??

அதானே.. இதுக்காக எல்லாம்
mobile recharge பண்ண முடியுமா..!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

Please Note this Point..

// அப்ப எங்க 4 பேருக்கும்
ஆளுக்கு 2000 ரூபா அனுப்பி.., //

அனுப்பினீங்க சரி.., ஆனா
நாங்க Accept பண்ணிட்டோம்னு
சொல்லலியே..?!!

அதான் திருப்பி அனுப்பிட்டோம்ல..

பணத்தை Accept பண்ணியிருந்தா
இப்படியா Post போடுவோம்..??!!!
எல்லோரும் நல்லா யோசிங்கப்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...

வெங்கட் said...

@ GSV.,

// இந்த போட்டோவுல தான் தளபதி
ரொம்ப அழகா இருக்கார்.. அதனால
இதையே பொண்ணு பார்க்க கொடுக்கலாம் //

ஹா., ஹா., ஹா..

உங்களுக்கு நல்ல Sense of Humour..!!
கொஞ்சம் முயற்சி பண்ணினா
" கிரேஸி மோகன் " Range-க்கு வர
வாய்ப்பு இருக்கு.. Try பண்ணுங்க..

வெங்கட் said...

@ ரசிகன்..,

// த‌ங்க‌ச் சிலைக்கு எதுக்கு வெள்ளிக்கொலுசு..
கவிதைக்கு எதுக்கு கவிதை...? //

என்ன ரமேசு..
நாங்க திருப்பி அனுப்பின
பணத்தை ( 2000 x 4 )., அப்படியே
ரசிகன் A/c-க்கு Transfer பண்ணிட்டீங்களா..??

சவுண்ட் ஓவரா இருக்குது..!!

Shalini said...

//அப்படி போடுங்க அருவாளை..!!
//
எல்லாம் உங்க ட்ரைனிங் பாஸ்!
//இதுக்கு பேசாம
என்னை கரண்ட் கம்பியில
கை வெக்க சொல்லி இருக்கலாம்..!//
போயும் போயும் ஒரு போலீஸ்க்கு அதுவும் திருட்டு சாரி சாரி சிரிப்பு போலீஸ்க்கு இவ்ளோ மதிப்பு குடுக்க தேவை இல்லன்னு சொல்ல வர்ரீங்களா ஓகே ஓகே ஐ அண்டர்ஸ்டாண்ட்

Shalini said...

//நீங்க எடுத்த மார்க் : 1157 / 100 ( நூத்துக்கு ) இருக்கும்போது டெரர் 200 க்கு 457 க்கு எடுக்க கூடாதா?//
கண்டிப்பா எடுப்பார் ஏன்னா அவரும் எங்க பாஸ்ட்ட ட்ரைனிங் எடுத்தவர் தான்

//(ஐயோ நான் உங்களை பாராட்டுறனா கலாய்க்கிரனா?) ஒழுங்கா ட்ரைனிங் கொடுங்க..//
என்ன செய்றோம்னே தெரியல இதுல அடுத்தவங்களுக்கு அட்வைஸ் வேற முதல்ல நீங்க ஒழுங்கா ட்ரைனிங் எடுங்க திருடர்கள்ட்டருந்து உங்க அவார்ட காப்பாத்த

Shalini said...

//காசு வாங்கி விஷ் பண்றதுக்கு பெரிய மனசெல்லாம் தேவை இல்லை. //

அதான் திருப்பி அனுப்பிட்டார்ல அப்புறம் என்ன?
உங்கள விஷ் பண்றதே பெரிய விசயம்னு சொல்றீங்களா?

அருண் பிரசாத் said...

அப்பாடி ஒரு வழியா ரமெஷ் பிறந்த நாள் முடிஞ்சது. இனி வெங்கட்டை கலாய்க்கும் படலம் ஆரம்பம்...

//என்ன பண்ணலாம்..?!!
( Thinking.............. )//
உங்க பிலாக்கை மூடிடுங்க மக்கள் சந்தோஷமா இருப்பாங்க

//ஒரு Birthday Cake பார்சல் அனுப்பலாமா//
செலவாகுமே! ஏற்கனவே ஷாலினிய கட்ட்சில காசு குடுத்து சேர்த்துட்டு சம்பளம் குடுக்கவே முழிக்கிறீங்க (காசுக்கு சேர்ந்த கூட்டம் இல்லைனு டயலாக் விட சொல்லி எக்ஸ்ட்ரா அமெளண்டும் குடுத்தாச்சு)

//புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..? //
எப்படியும் எதாவது வைரமுத்து, வாலி இவங்களோட புத்தகத்தை பாத்து தான் காப்பி அடிக்கபோறீங்க. இப்படியே செய்துட்டு இருந்தா உலகம் மதிக்காதே! (இப்போ மட்டும்!)

//கதை மாதிரி எதாவது எழுதிடலாமா..?//
//பூச்சாண்டி கதைன்னு //
ஒரு வார்த்தையை விட்டுடீங்க “பூச்சாண்டி எழுதிய கதைன்னு”

//Call பண்ணினா - 1 ரூபா.,
SMS பண்ணினா - 50 பைசா.,

இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா//
அதுக்கு முதல்ல மொபைல் வாங்கனும். அதுக்கு முதல்ல செலவு பண்ணனும்

//சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி//

இது தான் உங்களுக்கு ஏற்ற வழி, சபாஷ்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அப்பாடி ஒரு வழியா ரமெஷ் பிறந்த நாள் முடிஞ்சது. இனி வெங்கட்டை கலாய்க்கும் படலம் ஆரம்பம்...//

பல்பு வாங்க ரெடி ஆகிட்ட ரைட்டு..... ஆரம்பி..

//உங்க பிலாக்கை மூடிடுங்க மக்கள் சந்தோஷமா இருப்பாங்க//

அது மக்கள் இல்லையா மாக்கள் (ஐந்து அறிவு ஜீவிகள்)


//செலவாகுமே! ஏற்கனவே ஷாலினிய கட்ட்சில காசு குடுத்து சேர்த்துட்டு சம்பளம் குடுக்கவே முழிக்கிறீங்க (காசுக்கு சேர்ந்த கூட்டம் இல்லைனு

டயலாக் விட சொல்லி எக்ஸ்ட்ரா அமெளண்டும் குடுத்தாச்சு)//

கரும்பு தின்ன கூலி வேற கொடுக்கணுமா?? நல்லா இருக்கே உன் கதை....


//எப்படியும் எதாவது வைரமுத்து, வாலி இவங்களோட புத்தகத்தை பாத்து தான் காப்பி அடிக்கபோறீங்க.//

என் தல... அவங்களே நீங்க டெய்லி கவிதை எழுதும்போது நல்லா இல்லை சொல்லி துக்கி போடற கவிதை எல்லாம் போட்டி போட்டு

வாங்கிபோறது அருணுக்கு தெரியாதா?


//ஒரு வார்த்தையை விட்டுடீங்க “பூச்சாண்டி எழுதிய கதைன்னு”//

எலேய் அவர் உன்னை கதை எழுத சொல்லள//அதுக்கு முதல்ல மொபைல் வாங்கனும். அதுக்கு முதல்ல செலவு பண்ணனும்//

அடபாவி!!! அப்போ இருக்க மொபைல் என்ன பண்றது? உங்க VKSல ஒரு ஒரு கால் பண்ணவும் புது மொபைல் வாங்குவிங்களா? செஞ்சாலும்

செய்வ நீ. செல் போன் சொல்லி டி.வி ரிமோட் தூக்கிட்டுபோன பையன்தான நீ....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்
//த‌ங்க‌ச் சிலைக்கு எதுக்கு வெள்ளிக்கொலுசு..//

தங்கத்துக்கு வெள்ளி வேண்டாம். ஆன பித்தளைக்கு ஈயம் பூசித்தான ஆகனும்.

//கவிதைக்கு எதுக்கு கவிதை...?//

spelling mistake? கழுதைக்கு எதுக்கு கவிதை..? இதன சொல்ல வந்திங்க..

(உங்க ஆளுக்கு எழுதி வச்சி இருந்த டைலாக் இங்க ரிலிஸ் பண்றிங்க போல)

TERROR-PANDIYAN(VAS) said...

@shalini
//hyyo birthday baby,me the first நான் சொன்னது எக்ஸாம் ரிஸல்ட்ட//

என்னனா...து? babyயா? ரமேஷ்க்கு MBA படிக்கிற ஒரு பொண்ணு இருக்குமா... வேனும்னா Birthday Daddy சொல்லுங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ GSV.,
//இதையே பொண்ணு பார்க்க கொடுக்கலாம் //

கொடுக்கலாம்... ஆன பொண்ணு அதை பாக்கனுமே...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//இவரை நம்பி போனீங்க..,
கையேந்தி பவன்ல தான்
4 இட்லி வாங்கி தருவாரு..//

கடைசியில் அவர் சாப்ட்ட 40 இட்லிக்கும் சேர்த்து நம்பள காசு தர சொல்லி தலை சொறிஞ்சிட்டு நிப்பாறு....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//டெரர் 10 & +2 ல ஸ்டேட் பர்ஸ்ட்.//

அப்போ நான் நாலம் வகுப்புல காலேஜ் பர்ஸ்ட் வந்தது யார் சொல்லுவா?