சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 September 2010

காதல் சொல்ல சில Tips..!!





















"காதல்ங்கறது பக்கம் பக்கமா
பேசறது இல்ல.., பக்குவமா பேசறது.. "
இது நாகேஷ் ஒரு படத்தில சொன்னது..

உண்மைதான்..
So., காதலை எப்படி சுருக்கமா.,
Different-ஆ சொல்றதுன்னு பார்க்கலாம்..



1. நேத்து இருந்து என் பேனாவும்.,
என் இதயமும் Missing.,

ஒருவேளை அது உங்ககிட்ட இருந்தா...,
என் பேனாவை மட்டும் திருப்பி
கொடுத்திடுங்க ப்ளீஸ்.,


2. Excuse Me., கொஞ்சம் தண்ணி
கிடைக்குமா..?

உங்க அழகுல நான் மயங்கிட்டேன்..
அதான் முகத்தில தெளிச்சி
மயக்கம் தெளிச்சிக்கலாம்னு...


3. உங்களுக்கு கால் வலிக்கவே
இல்லையா..?

சதா என் மனசுல வட்டமடிச்சிட்டே
இருக்கீங்களே..!!


4. நேத்து உங்களை
Beauty Parlour-ல பாத்துட்டு
ஆச்சரியப்பட்டேன்..

" தேவதைகளுக்கே " Make-up
போடற Beauty Parlour-ஆ அது..!!?


5. உங்களுக்கு ' கண்டதும் காதல்' ங்கிற
Concept-ல நம்பிக்கை இருக்கா..?

இல்ல

இன்னொரு தடவை நான் உங்களை
Plan பண்ணி Meet பண்ணனுமா..??!!


6. நல்லவேளை உங்களை பார்த்தேன்..

இல்லன்னா " அனுஷ்கா " தான்
அழகுன்னு தப்பாயில்ல
நினைச்சிட்டு இருந்திருப்பேன்..!!


டிஸ்கி 1 : இதை Use பண்ணி
யாராவது., யார்கிட்டயாவது போயி
காதலை சொல்றேன்னு சொல்லி
அடியோ., உதையோ வாங்கிட்டு வந்தா
அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல..

டிஸ்கி 2 : Point No. 6 முதல்ல
Comment Section-ல தான் எழுதினேன்..
எனக்கு ரொம்ப பிடிச்சதால அதை
இங்கே Post-லயும் சேர்த்துட்டேன்..
.
.

59 Comments:

Sen22 said...

கலக்கல் ஐடியா's...

Anonymous said...

//1. நேத்து இருந்து என் பேனாவும்.,
என் இதயமும் Missing.,

ஒருவேளை அது உங்ககிட்ட இருந்தா...,
என் பேனாவை மட்டும் திருப்பி
கொடுத்திடுங்க ப்ளீஸ்., // உபயோகமானத திருப்பிக்கேக்கிறீங்க. உபயோகமற்றதை வேணாம் என்றீங்க. அது சரி என்னைய பார்க்க திருடர் மாதிரியா இருக்கு.

//2. Excuse Me., கொஞ்சம் தண்ணி
கிடைக்குமா..?
உங்க அழகுல நான் மயங்கிட்டேன்.. //
அவ்வளவு அகோரமாவா இருக்கேன்??

//3. உங்களுக்கு கால் வலிக்கவே
இல்லையா..?
சதா என் மனசுல வட்டமடிச்சிட்டே
இருக்கீங்களே..!!//
நடிகை சதா ஏன் உங்க மனசை வட்டமடிக்கிறா? ஏதும் கடன் வாங்கீட்டீங்களோ??அவங்க கடன் வாங்கியதிற்கு எனக்கு ஏன் கால் வலிக்க வேண்டும்
//4.நேத்து உங்களை
Beauty Parlour-ல பாத்துட்டு
ஆச்சரியப்பட்டேன்..//
துர்தேவதைகள் எல்லாம் அங்கே போய்த்தான் தேவதைகளாகிறார்கள்.

//5. உங்களுக்கு ' கண்டதும் காதல்' ங்கிற
Concept-ல நம்பிக்கை இருக்கா..?
இல்ல
இன்னொரு தடவை நான் உங்களை
Plan பண்ணி Meet பண்ணனுமா..??!!//
சாமி ! ஒருக்கா சந்தித்ததற்கே இந்த பாடு படுத்திறாய். இன்னொருதடவையா?
(என் நண்பனின் தோழியின் பதில்கள்.கொஞ்சமல்ல கொஞ்சம் Over ஆகவே உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.)

Thenral said...

Aahaa!Ukkaanthu yosippeengalo???!!!!Nallathaanga irukku

Chitra said...

"காதல்கறது பக்கம் பக்கமா
பேசறது இல்ல.., பக்குவமா பேசறது.. "
இது நாகேஷ் ஒரு படத்தில சொன்னது..


...... உங்கள் டிப்ஸ், இதில் பக்குவமா இல்லை, பக்கம் பக்கமா என்று தெரியலியே......... ம்ம்ம்ம்......

அனு said...

நான் எழுத நினைச்சதை எல்லாம் Barathy எழுதிட்டாரு.. இப்போ நான் என்ன பண்ணுறது??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்கிட்டயும் நிறையா ஐடியா இருக்கு. வேனும்கிறவங்க தொடர்பு கொள்ளலாம்..

Madhavan said...

உங்க பாட்டுக்கு (பதிவு) மட்டும் என்னால எதிர்பாட்டு (காமெண்டு) பாட முடியமாட்டேங்குது.. ஏன்னே தெரியலே..

ப.செல்வக்குமார் said...

என்னது இந்த பதிவ படிச்சிட்டு ரமேஷ் அண்ணா VAS ல செரப்போறதா சொன்னாரா ..?
அட ஆமாங்க.. அவருக்கு இது வரைக்கும் காதல எப்படி சொல்லுறது அப்படின்னு தெரியாம தவிச்சிட்டுருந்தாராம். இப்ப இந்த மாதிரி பதிவ படிச்ச உடனே அவருக்கு ஞானம் வந்துடுச்சு அப்படின்னு பேசிக்கிறாங்க ..!!
ஆனா அவருதான் எங்கிட்ட நிறைய ஐடியா இருக்கு அப்பின்னு சொல்லுறாரே..
அட போங்க இதே ஐடியாவ ரீமேக் பண்ணி வச்சிருப்பாரு ..!!

Balaji saravana said...

நோட் பண்ணுங்கப்பா ..டிப்ஸ் டிப்ஸ் :)

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

உங்களுக்கு எனக்கும் ஒரு டீல், உங்க Followers List 150 ஐ தொட போகுது. அதுக்கு ஒரு பதிவு போடமாட்டேன்னு பாடிகாட் முனீஸ்வரன் கோவில்ல காசு வெட்டி சத்தியம் பண்ணுங்க நான் இந்த பதிவுல உங்களை கலாய்க்காம இருக்கறேன்

அவ்வ்வ்வ்வ்வ்... எப்படிலாம் மிரட்டறாங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//நான் எழுத நினைச்சதை எல்லாம் Barathy எழுதிட்டாரு.. இப்போ நான் என்ன பண்ணுறது??//

ரொம்ப ஸிம்பிள்!! வாழ்க்கைல ஒரே ஒரு முறை சொந்தமா யோசிக்க முயற்ச்சி பண்ணூங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//என்கிட்டயும் நிறையா ஐடியா இருக்கு. வேனும்கிறவங்க தொடர்பு கொள்ளலாம்..//

இங்க யாரும் காதல் கொல்ல Tips கேக்கல... நீ கிளம்பு...

TERROR-PANDIYAN(VAS) said...

@Madhavan
//உங்க பாட்டுக்கு (பதிவு) மட்டும் என்னால எதிர்பாட்டு (காமெண்டு) பாட முடியமாட்டேங்குது.. ஏன்னே தெரியலே..//

ஒரு வேலை ஏதிர் கமெண்ட் போட முயற்சி பண்ணி அடி வாங்கி VKS அலற சத்தம் உங்க மனச பாதிச்சி இருக்குமோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னப்பா "Me the First" ட ஆளக்காணோம். VATE exam செல்லாதுன்னு certificate-ட அரசாங்கம் பறித்துக் கொண்டதா?

Shalini said...

hi boss!

itz amazing!

single subjectல mastery பண்ரவங்கள பாத்துருக்கேன்
double subjectல mastery பண்ரவங்கள பாத்துருக்கேன் but universal levelல all subjectலயும் mastery பண்றது you n you only!

i`m astound by your thoughts!
keep rocking!
(கொசுத்தொல்லை, எறும்புத்தொல்லைன்னு சொல்ரவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்”போற்றிவோர் போற்றட்டும்:
தூற்றுவோர் தூற்றட்டும்:
எம் கடன் உண்மையை உரக்கச் சொல்வதே!)

அனு said...

//வாழ்க்கைல ஒரே ஒரு முறை சொந்தமா யோசிக்க முயற்ச்சி பண்ணூங்க.//

இதை முதல்ல உங்க தலைவர் கிட்ட சொல்லுங்க!!

btw,சொந்தமா ஒரு லைன் எழுதுறேன்...

"Barathy சொன்னது எல்லாம் ரிப்பீட்டுடுடு!!!"

அனு said...

//ஒரு வேலை ஏதிர் கமெண்ட் போட முயற்சி பண்ணி அடி வாங்கி VKS அலற சத்தம் உங்க மனச பாதிச்சி இருக்குமோ..//

பதிவ போட்டுட்டு எல்லோர் கிட்டயும் அடி வாங்கி வெங்கட் அலறுகிற சத்தத்தை கேட்டா, ரொம்ப பாவமா இருக்கு..அதான்...

என்னது நானு யாரா? said...

இப்படி காதலிக்கும் போது ஓவரா அசடு வழிய வேண்டியது

அப்புறம் கல்யாணமான உடனே எல்லாம் கனவாய்..காணல்நீராய்.. ஆயிடிச்சேன்னு புலம்ப வேண்டியது...

எல்லா இளைஞர்களும் இளைஞிகளும் அசடுகளாய் கண்ணை கட்டி கொண்டு காதல் சடுகுடு ஆடிகொண்டிருக்கிறார்கள்.

வெங்கட்! நீங்களாவது அவங்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்க.. திருந்துறாங்களா பார்ப்போம்...

Shalini said...

//என்னப்பா "Me the First" ட ஆளக்காணோம். VATE exam செல்லாதுன்னு certificate-ட அரசாங்கம் பறித்துக் கொண்டதா?//
ஹல்லோ யாரு யார சொல்றது??

Anonymous said...

வெங்கட்! நீங்களாவது அவங்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்க.. திருந்துறாங்களா பார்ப்போம்...

yaarukku yaar puthi sovathu..

nallaa sonneega ponga...

Shalini said...

//என்னது இந்த பதிவ படிச்சிட்டு ரமேஷ் அண்ணா VAS ல செரப்போறதா சொன்னாரா ..?
அட ஆமாங்க.. அவருக்கு இது வரைக்கும் காதல எப்படி சொல்லுறது அப்படின்னு தெரியாம தவிச்சிட்டுருந்தாராம். இப்ப இந்த மாதிரி பதிவ படிச்ச உடனே அவருக்கு ஞானம் வந்துடுச்சு அப்படின்னு பேசிக்கிறாங்க ..!!
ஆனா அவருதான் எங்கிட்ட நிறைய ஐடியா இருக்கு அப்பின்னு சொல்லுறாரே..
அட போங்க இதே ஐடியாவ ரீமேக் பண்ணி வச்சிருப்பாரு ..!!

//

hello police, izit?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் கேள்விக்கு இப்படி பதில் வந்தா என்ன பண்ணுவீங்க?
"ஹல்லோ, எங்க வீட்டில நிறைய இதயமும் பேனாவும் சேர்ந்திருக்குது. உங்களுது எதுவோ அதை நீங்களே கண்டுபிடிச்சு எடுத்துட்டுப் போய்டுங்க"

இம்சைஅரசன் பாபு.. said...

//ன்கிட்டயும் நிறையா ஐடியா இருக்கு. வேனும்கிறவங்க தொடர்பு
கொள்ளலாம்..//
கண்ணுகள யாரும் ரமேஷ் கிட்ட டிப்ஸ் வந்கதீங்கோ அதுக்கப்புறம் செருப்படி வாங்கின நான் பொறுப்பு ஏற்கமுடியாது

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு said...
//இதை முதல்ல உங்க தலைவர் கிட்ட சொல்லுங்க!!//

சரிங்க அனு.

தல! அனுகிட்ட வாழ்க்கைல ஒரே ஒரு முறை சொந்தமா யோசிக்க முயற்சி பண்ண சொல்லி இருக்கேன். அதனால நீங்க அவங்களுக்கு எதும் ஐடியா கொடுக்க வேண்டாம். சரியா?

சொல்லிட்டேன் அனு.

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//பதிவ போட்டுட்டு எல்லோர் கிட்டயும் அடி வாங்கி வெங்கட் அலறுகிற சத்தத்தை கேட்டா, ரொம்ப பாவமா இருக்கு..அதான்...//

நீங்ககூட சில நேரத்துல புத்திசாலிதனமா பேசறிங்க அனு. நல்ல பதிவு அதிகமா போடாதிங்க சொன்னா கேக்கனும்... இப்பொ பாருங்க இலட்ச கணக்கான மக்கள் முதுகில தட்டி பாராட்டறாங்க, கை கொடுக்கறாங்க. நைட்டு எல்லாம் கை வலி, முதுகு வலி...

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
//முதல் கேள்விக்கு இப்படி பதில் வந்தா என்ன பண்ணுவீங்க?
"ஹல்லோ, எங்க வீட்டில நிறைய இதயமும் பேனாவும் சேர்ந்திருக்குது. உங்களுது எதுவோ அதை நீங்களே கண்டுபிடிச்சு எடுத்துட்டுப் போய்டுங்க"//

சரிங்க சொல்லி தேடர கேப்ல அவங்க இதயத்தை அடிச்சிடுவேம். முடியலனா அவங்க தங்கச்சி இதயத்த அடிச்சிட்டு வந்துடுவோம்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கவிதையாய் அழகிய ஜொள்ஸ்.!

அனு said...

@டெரர்
//சொல்லிட்டேன் அனு.//

VAS ஒரு விளங்காத சங்கம்-ன்றது கரெக்ட்டா தான் இருக்கு.. நான் என்ன சொன்னேன், நீங்க என்ன சொல்றீங்க?? இப்படிதான் ஏதாவது சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசிகிட்டே காலத்தை ஓட்டிட்டு இருக்கீங்க..

ஒண்ணு மட்டும் சொல்றேன்..கேட்டுக்கோங்க..
வாயால "நாய்"னு சொல்லலாம்.. ஆனா,நாயால "வாய்"னு சொல்ல முடியாது!!! (உங்களுக்கு ஈக்வலா எங்களுக்கும் சம்பந்தம் இல்லாம பேசத் தெரியும்ல!!!)

GSV said...

"VAS" மக்களே !!! இந்த ஐடியா எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு சொல்லுறதுக்கா இல்ல கல்யாணத்துக்கு முன்பு சொல்லுரதுக்காணு தெளிவா கேட்டு கிட்டு "TRY" பண்ணுங்க. உங்க தலைவர் சொன்னாருன்னு கண்ண முடிகிட்டு கப்பலேந்து எல்லாம் குதிக்க கூடாது.

GSV said...

வெங்கட் இந்த கடைசி வரிய மறந்துடிங்களே !!!

"எல்லாரும்(VAS) "try" பண்ணுங்க எப்படி ன்ன அந்த படத்துள உள்ள மதிரியே தலைகீழா நின்னுகிட்டு சொன்ன தான் உடனே பாஸ் ஆகலாம்"

வெங்கட் said...

@ பாரதி.,

1. // உபயோகமானத திருப்பிக்கேக்கிறீங்க.
உபயோகமற்றதை வேணாம் என்றீங்க. //

உங்களுக்கு சொந்தமானது ( இதயம் )
எனக்கு எதுக்கு..?
எனக்கு சொந்தமானதை மட்டும் ( பேனாவை )
குடுங்க..

// அது சரி என்னைய பார்க்க
திருடர் மாதிரியா இருக்கு. //

ஆமா அதுல என்ன சந்தேகம்..?
என் " உள்ளம் கவர் கள்ளி " நீங்க..

2. // அவ்வளவு அகோரமாவா இருக்கேன்?? //

என்ன இப்படி சொல்லிட்டீங்க..
நான் மட்டும் உங்களை பார்க்காம
இருந்திருந்தா ' அனுஷ்கா ' தான் அழகுன்னு
தப்பாயில்ல நினைச்சிட்டு இருந்திருப்பேன்..

3. // நடிகை சதா ஏன் உங்க மனசை
வட்டமடிக்கிறா? //

என் மனசுக்குள்ள வர்ற Try பண்ணி
வட்டமடிக்கிறாங்களோ என்னவோ..
அதெல்லாம் உங்க Department..
என்னை ஏன் கேக்குறீங்க..?!!

4. // துர்தேவதைகள் எல்லாம் அங்கே
போய்த்தான் தேவதைகளாகிறார்கள். //

நல்லவனை பார்த்து கெட்டவன்
திருந்தற மாதிரி..
உங்களை பார்த்து துர்தேவதைகள்
எல்லாம் தேவதைகளாகிறார்களா..?!!

5. // சாமி ! ஒருக்கா சந்தித்ததற்கே இந்த
பாடு படுத்திறாய். இன்னொரு தடவையா? //

ஆமாங்க.. ஒருக்கா சந்தித்ததற்கே
என் மனசை இந்த பாடு படுத்தறீங்களே..?!!

வெங்கட் said...

@ அனு.,

// நான் எழுத நினைச்சதை எல்லாம் Barathy
எழுதிட்டாரு.. இப்போ நான் என்ன பண்ணுறது??//

பாரதி மட்டுமா எழுதினாரு..,

இவங்க எழுத நினைச்ச
" சின்ன சின்ன ஆசை " பாட்டை
வைரமுத்து எழுதிட்டாரு..

" வந்தார்கள் வென்றார்கள் "
மதன் எழுதிட்டாரு..

" பொன்னியின் செல்வனை "
கல்கி எழுதிட்டாரு..

" எந்திரன் " கதையை
சங்கர் எழுதிட்டாரு..,

இவ்ளோ ஏன் " ஹாரி பாட்டரே "
இவங்க எழுத நினைச்சது தான்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என்கிட்டயும் நிறையா ஐடியா இருக்கு.
வேனும்கிறவங்க தொடர்பு கொள்ளலாம்.. //

எதுக்கு..? எந்த எந்த ஐடியாவெல்லாம்
Workout ஆகும்ணு இவிங்களை வெச்சி
Test பண்ணி தெரிஞ்சிக்கறதுக்கா..?!!

வெங்கட் said...

@ அருண்.,

// உங்களுக்கு எனக்கும் ஒரு டீல்,
உங்க Followers List 150 ஐ தொட போகுது.
அதுக்கு ஒரு பதிவு போடமாட்டேன்னு
பாடிகாட் முனீஸ்வரன் கோவில்ல
காசு வெட்டி சத்தியம் பண்ணுங்க //

என்ன கொடுமை முனீஸ்வரா இது..??

100வது Follower சேர்ந்தப்ப
ஒரு பதிவு போட்ட என்னை பாத்து
50வது Follower சேர்ந்ததுக்கே
ஒரு பதிவு போட்ட அருண் இப்படி
கிண்டல் பண்ணலாமா.?

பாடிகாட் முனீஸ்வரா..,
நீதாம்பா இந்த நியாயத்தை கேக்கணும்..!!

வெங்கட் said...

@ டெரர்.,

// இங்க யாரும் காதல் கொல்ல Tips கேக்கல...
நீ கிளம்பு... //

@ ரமேஷு..,

தொப்பி., தொப்பி..!!

வெங்கட் said...

@ ரமேஷு..,

// என்னப்பா "Me the First" ட ஆளக்காணோம்.
VATE exam செல்லாதுன்னு certificate-ட
அரசாங்கம் பறித்துக் கொண்டதா? //

VATE ( Venkatai Aatharippor Talent Exam )
மார்க்கை வெச்சி தான் இனிமே
Govt வேலைக்கே ( Both Central & State )
ஆள் எடுக்க போறாங்களாம்..

Govt Officials-கூட பேச்சு வார்த்தை
நடந்துட்டு இருக்கு..
நாங்கல்லாம் ( VAS ) அந்த Meeting-ல
பிஸியோ., பிஸி..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// i`m astound by your thoughts!
keep rocking!

( கொசுத்தொல்லை, எறும்புத்தொல்லைன்னு
சொல்ரவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்”
போற்றிவோர் போற்றட்டும்:
தூற்றுவோர் தூற்றட்டும்:
எம் கடன் உண்மையை உரக்கச் சொல்வதே!) //

அட., அட., அட..!!

( Mind Voice.. )

வெங்கட்..! இப்படிபட்ட
தீவீர ரசிகர்கள் / ரசிகைகள்
உனக்கு இருக்கிற வரைக்கும்
உன்னை யாரும்
அசைச்சிக்க முடியாது.,
அசைச்சிக்க முடியாது.,

வெங்கட் said...

@ அனு.,

// btw, சொந்தமா ஒரு லைன் எழுதுறேன்...
"Barathy சொன்னது எல்லாம் ரிப்பீட்டுடுடு!!!" //

நாங்க அரசியல் நாகரீகம்
தெரிஞ்சவங்க..,

எதிர்கட்சியா இருந்தாலும்..
அவங்க ஒரு நல்ல விஷயம்
பண்ணினா மனம் விட்டு
பாராட்டுவோம்..

முதல் முறையாக...,
சொந்தமாக ஒரு லைன் எழுதிய
அனுவுக்கு பாராட்டுக்கள்..!!

ரசிகன் said...

VAS members..
இந்த ஐடியாவ எல்லாம் follow பண்ணி , உங்க அனுபவத்தை சீக்கிரமா பதிவா போடுங்க.. நல்ல காமெடி cum ட்ராஜடி கட்டுரை படிச்சி நாளாகுது..

ரசிகன் said...

@shalini

//single subjectல mastery பண்ரவங்கள பாத்துருக்கேன்
double subjectல mastery பண்ரவங்கள பாத்துருக்கேன் but universal levelல all subjectலயும் mastery பண்றது you n you only!//


ராஜ‌ குலோத் துங்க‌வை விட்டுவிட்டீர்க‌ளே...!!

ரசிகன் said...

@Terror,

Anu,Ramesh, Maadhavanன்னு எல்லார் க‌ருத்துக்கும் comment போட்டீங்க‌ளே..
உங்க‌ த‌லையோட‌ ப‌திவுக்கு ஒரு comment போட்டீங்க‌ளா..?
சொல்ற‌துக்கு ஒண்ணுமில்ல‌யா... இல்ல‌..
சொன்ன‌துல‌ ஒண்ணுமில்ல‌யா..??

vinu said...

Point No. 6 முதல்ல
Comment Section-ல தான் எழுதினேன்..


யாரோட blog-post-comment areaa -லன்னு சொல்லவே இல்லையேயேயேயேயேயேயேயேயேயேயேயேயே he he he chumma oru general knowledgekkuthaan

vinu said...

அனு said...
ஒண்ணு மட்டும் சொல்றேன்..கேட்டுக்கோங்க..
வாயால "நாய்"னு சொல்லலாம்.. ஆனா,நாயால "வாய்"னு சொல்ல முடியாது!!!


: நாயால "நாய்"-னே சொல்ல முடியாது!!! அப்புறம் எங்கே அது "வாய்"- னு சொல்லுறது

siva said...

vengakat annan.

padivu ulga

kalaivaanar..valga
padivu ulga

kalaivaanar..valga

padivu ulga

kalaivaanar..venkat annan valga

Shalini said...

//ராஜ‌ குலோத் துங்க‌வை விட்டுவிட்டீர்க‌ளே...!!//

சாரி நாங்க எதையும் exaggeration பண்ணுரதில்லை!

சேலம் தேவா said...

இந்தமாதிரி டிபரண்ட்டா எத்தன பேர்கிட்ட சொல்லியிருக்கீங்க??

அனு said...

@vinu

//நாயால "நாய்"-னே சொல்ல முடியாது!!! அப்புறம் எங்கே அது "வாய்"- னு சொல்லுறது//

யாரங்கே!! vinu sirக்கு ஒரு பொற்கிழி பார்சல்!!!

அனு said...

@வெங்கட்

//கலக்கல் ஐடியா's...//

// but universal levelல all subjectலயும் mastery பண்றது you n you only!//

//vengakat annan.
padivu ulga kalaivaanar..valga //

குடுத்த காசுக்கு மேல கூவுறதுன்னா இது தானா??

btw, வர்ற காசை fullஆ இப்படி இமேஜ் பில்ட் அப்-க்கே செலவு பண்ணினா எப்படி? வீட்டுக்கும் கொஞ்சம் குடுங்க.. உங்க மனைவி ஃபோன் பண்ணி புலம்புறாங்க...

அனு said...

@ரசிகன்

//ராஜ‌ குலோத் துங்க‌வை விட்டுவிட்டீர்க‌ளே...!!//

ஹிஹி.. இது டாப்பு...

வெங்கட்.. உங்க மூக்கை எங்க காணும்?? இனிமேலாவது shalini IDல இருந்து உங்களை நீங்களே புகழ்ந்து கமெண்ட் போடுவதை நிறுத்துங்க!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//VAS ஒரு விளங்காத சங்கம்-ன்றது கரெக்ட்டா தான் இருக்கு.. நான் என்ன சொன்னேன், நீங்க என்ன சொல்றீங்க?? //

//யாரங்கே!! vinu sirக்கு ஒரு பொற்கிழி பார்சல்!!//

ஹி..ஹி..ஹி அனு நீங்க ராசா பரம்பரையா?? அப்போ சரி. இந்த மங்குனி ராஜாங்களுக்கு புலவர்கள் சொல் சிலேடை ஒன்னும் புரியாது. அதனால திட்டறாங்களா இல்லை பாராட்டறாங்களா தெரியாம தண்டனை கொடுப்பாங்க. விளக்கம் சொன்னதும் அசடு வழிந்து... கொண்டு வாருங்கள் பொற்கிழியை அப்படினு சமாளிப்பாங்க. அத மாதிரிதான் நீங்க புரியாம முழிக்கிறிங்க.

இப்பொ நீங்க கீழ விழுந்து மூக்கு உடைஞ்சி போச்சி வச்சிகலாம். நீங்க அருண்கிட்ட போய் அருண் என் மூக்கு உடைஞ்சி போச்சி சொல்றிங்க. அருண் முதல்ல இதை டாக்டர் கிட்ட போய் சொல்லுங்க சொல்றாரு. நீங்க டாக்டர் கிட்ட போய் டாக்டர் டாக்டர் உங்க மூக்கு உடைஞ்சி போச்சி சொல்லுவிங்களா?? இன்னும் புரியாத புள்ளையாவே இருக்கிங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//ஒண்ணு மட்டும் சொல்றேன்..கேட்டுக்கோங்க..
வாயால "நாய்"னு சொல்லலாம்.. ஆனா,நாயால "வாய்"னு சொல்ல முடியாது!!! (உங்களுக்கு ஈக்வலா எங்களுக்கும் சம்பந்தம் இல்லாம பேசத் தெரியும்ல!!!)////

உங்களுக்கு சம்பந்தம் இல்லாம மட்டும்தான் பேச தெரியும். நாய கல்லால அடிச்சா லொல்லுனு கத்தும். அதுக்கா லொல்லு பண்றவங்க எல்லாம் நாய கல்லால அடிச்சாங்க சொல்ல முடியுமா??

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன் said...
//@Terror,
உங்க‌ த‌லையோட‌ ப‌திவுக்கு ஒரு comment போட்டீங்க‌ளா..?
சொல்ற‌துக்கு ஒண்ணுமில்ல‌யா... இல்ல‌..
சொன்ன‌துல‌ ஒண்ணுமில்ல‌யா..?//

உங்க தல மதிரியே எங்க தலைய நினைச்சா எப்படி?? சூரியன் வந்து இருக்கு சொல்லிதான் தெரியனுமா?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// முதல் கேள்விக்கு இப்படி பதில்
வந்தா என்ன பண்ணுவீங்க?

"ஹல்லோ, எங்க வீட்டில நிறைய
இதயமும் பேனாவும் சேர்ந்திருக்குது.
உங்களுது எதுவோ அதை நீங்களே
கண்டுபிடிச்சு எடுத்துட்டுப் போய்டுங்க" //

அப்படியே கொஞ்சம் அசடு
வழிஞ்சிட்டே..

ஹி., ஹி., ஹி..!!
வேணாங்க..அந்த பேனாவை
நீங்களே வெச்சிக்கோங்க..

என்கிட்ட வேற நல்ல பேனா
இருக்கு.. அதை நான் வேற
நல்ல இடமா ( இதயமா ) பாத்து
Miss பண்ணிக்கிறேன்..

வெங்கட் said...

@ அனு.,
// வாயால "நாய்"னு சொல்லலாம்.. ஆனா,
நாயால "வாய்"னு சொல்ல முடியாது!!! //

வர வர நீங்க பேசுறது
" ஆமைக்கு அல்சர் வந்தா
உக்மா ஊசி போச்சுங்கற "
கதையா இருக்கு..!!

( நாங்களும் சம்பந்தம் இல்லாம
பேசுவோம்ல.. )

வெங்கட் said...

@ ரசிகன்.,

// VAS members..,
இந்த ஐடியாவ எல்லாம் follow பண்ணி ,
உங்க அனுபவத்தை சீக்கிரமா பதிவா போடுங்க..
நல்ல காமெடி cum ட்ராஜடி கட்டுரை படிச்சி நாளாகுது.. //

அவசரத்தில ஆள் மாத்தி கேட்டுடீங்க..
நாங்க கட்டுரை போட்டா..
அது ரொமாண்டிக் கட்டுரையா
இருக்குமே..!!!

கொஞ்சம் Wait பண்ணுங்க..

@ ரமேஷூ.,

உங்க அனுபவத்தை தான்பா
கேக்கறாங்க..சீக்கிரம் அந்த
காமெடி cum ட்ராஜடி., ட்ராஜடி., ட்ராஜடி
கட்டுரையை எழுதுங்க..

வெங்கட் said...

@ Vinu.,

// நாயால "நாய்"-னே சொல்ல முடியாது..!!!
அப்புறம் எங்கே அது "வாய்"- னு சொல்லுறது //

ஹிஹி.. இது டாப்போ டாப்பு..

@ அனு.,

// யாரங்கே!! vinu sirக்கு ஒரு பொற்கிழி பார்சல்!!! //

அனு.., எங்க உங்க மூக்கை ..,
ம்ம் இல்ல முகத்தையே காணும்??

வெங்கட் said...

@ சிவா.,

// padivu ulga kalaivaanar..
venkat annan valga //

இதெல்லாம் நான் சொல்லிகுடுக்கலைபா..
அவரே சொந்தமா யோசிச்சது..

ஹி., ஹி., ஹி..!!

Shalini said...

Boss, இந்த VKS members பார்த்தா பாவமா இருக்கு.
//குடுத்த காசுக்கு மேல கூவுறதுன்னா இது தானா//
//உங்களை நீங்களே புகழ்ந்து கமெண்ட் போடுவதை நிறுத்துங்க!!!//
இதை தவிர வேற ஐடியாவே அவங்களுக்கு தோண மாட்டேங்குதாம்
என்ன தான் நாமக்கு opposite partyயா இருந்தாலும்,மனிதாபிமான அடிப்படைல ஏதாச்சும் செய்யுங்க Boss

Shalini said...

//அனு.., எங்க உங்க மூக்கை ..,
ம்ம் இல்ல முகத்தையே காணும்??
//

sema sema Boss!!!!!!!!!!