சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 September 2010

வாழ்த்த வருகிறேன்..!!??எல்லோருக்கும் இனிய ரம்ஜான்
வாழ்த்துக்கள்..

ரம்ஜான் Spl Posting எதுவும் போடலியான்னு
கேக்காதீங்க..நானே ஒரு குழப்பத்தில
இருக்கேன்..

எனக்கு 3 முஸ்லீம் Friends இருக்கானுங்க..

இன்னிக்கு அவங்க வீட்ல எல்லாம்
ரம்ஜான் Spl பிரியாணி கமகமக்கும்..
சுவை சுவைக்கும்..

அந்த பிரியாணி இருக்கே.. ஆஹா
அது தனி Taste ..

அதெல்லாம் சாப்பிட்டு பார்த்தவங்களுக்கு தான்
தெரியும்..

ம்ம்.. எனக்கு நல்லா தெரியும்..!!

ஏன் அப்படி பார்க்கறீங்க..?! இதை பத்தி
நம்ம சங்ககால இலக்கியத்துலயே
சொல்லி இருக்கு தெரியும்ல....!

" முகநக நட்பது நட்பன்று, ரம்ஜானுக்கு
பிரியாணிதரும் அகமது நட்பே நட்பு..!!

ஹி., ஹி., ஹி... சரி மேட்டர்க்கு வரேன்..
என் குழப்பம் என்னான்னா..

இப்ப நானு.. அன்வர், நியாஸ், நசீர்..
இதுல யார் வீட்டுக்கு போறது..?!!

" ஏன்னா எவனாவது ஒருத்தன் கூப்பிட்டு
இருந்தான்னா பரவாயில்ல... அவன் வீட்டுக்கு
மட்டும் போயிட்டு வந்திடலாம்...

இங்கே தான் மூனுபேரும் கூப்பிடலியே...

அதான் யார் வீட்டுக்கு போறதுனு
ஒரே கன்பியூசன்..?!! "

ஹி., ஹி., ஹி...!!!

என்ன பண்ணலாம்..??!!

சரி நமக்கு பிரியாணியா முக்கியம்..?!
வாழ்த்தறது தான் முக்கியம்..

So., 3 பேர் வீட்டுக்கும் ஒரு நடை போயி..,
" ரம்ஜான் வாழ்த்து " சொல்லிட்டு வந்திடலாம்..

எத்தனை மணிக்கு போலாம்..??

12 மணி..??!!

வேணாம்., வேணாம்...

12.30 மணி ( அது தான் Timing Correct-ஆ
இருக்கும்..!! )
.

.

19 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தல நீங்க சென்னை வந்தீங்கன்னா நம்ம நண்பர்கள் வீட்டுக்கு போய் ஒட்டக பிரியாணி சாப்பிடலாம். வர்றீங்களா. அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

Chitra said...

பிரியாணி கிடைச்சுதா?

Madhavan said...

ஒரு நட போயிட்டுத்தான் வாங்களேன் .. எது கெடைக்குதுன்னு பாப்போம்..

ரொம்ப வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்க..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh

ஒட்டக பிரியாணிலாம் பக்ரித் பண்டிகையின்போதுதான், நண்பரே!

@ Venkat

//" ஒரு பயலும் நம்மள வீட்டுக்கு
சாப்பிட கூப்பிடலியே..?!!
அப்ப யார் வீட்டுக்கு போறது..?!! "//

அதுக்குத்தான் நம்ம வீட்டு விசேஷத்துக்கும் மத்தவங்களை கூப்பிட்டு விருந்து வைக்கனும்கறது!

TERROR-PANDIYAN(VAS) said...

//" ஒரு பயலும் நம்மள வீட்டுக்கு
சாப்பிட கூப்பிடலியே..?!!
அப்ப யார் வீட்டுக்கு போறது..?!! "//

ஸேம் ப்லட்.... எனக்கும் அதே பிரச்சனைதான்....

ப.செல்வக்குமார் said...

//12.30 மணி ( அது தான்
Timing Correct-ஆ இருக்கும்..!! )///

காலைல இருந்து எல்லோரும் ரம்ஜான் கொண்டாட்டத்துல பிஸியா இருப்பாங்க.
அதனால மத்தியானமா போகலாம்னு நினைச்சா உங்க இந்த சமயோசித புத்திய இந்த VKS காரங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இனி என்ன என்னவெல்லாம் சொல்லுவாங்களோ ..?!?

Shalini said...

me the first.....!!!!

hi boss!

sukriya for your wishes!

என்ன பாஸ் இப்படி சொல்லீட்டீங்க! உங்களுக்காக எங்க பாஜிட்ட ஸ்பெசல் மட்டன் பிரியாணி, நெஞ்சுக்கறி தால்ச்சா, சிக்கன் ஃப்ரை, டேட் ஜாம், எல்லாம் பண்ண சொல்லியிருக்கேன்.
மறுக்காம , மறக்காம ப்ளீஸ் வந்துடுங்க.
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் பரம விசிறி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Shalini

//உங்களுக்காக எங்க பாஜிட்ட ஸ்பெசல் மட்டன் பிரியாணி, நெஞ்சுக்கறி தால்ச்சா, சிக்கன் ஃப்ரை, டேட் ஜாம், எல்லாம் பண்ண சொல்லியிருக்கேன்.
மறுக்காம , மறக்காம ப்ளீஸ் வந்துடுங்க.
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் பரம விசிறி //

சபாஷ் வெங்கட், ஓசியில சாப்பிட ஒரு ஏற்பாடு செய்யறதுக்குன்னே ஒரு பரம விசிறி இருக்காங்க, வாழ்க, வாழ்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Madhavan said... ஒரு நட போயிட்டுத்தான் வாங்களேன் .. எது கெடைக்குதுன்னு பாப்போம்..

ரொம்ப வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்க..//

ஓசில சாப்பிட போறேன்னு சொல்றாரு. நீங்க என்னன்னா ரொம்ப வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்கன்னு சொல்றீங்க. ஒரு வேளை வெங்கட் மட்டும்தான் ஓசில சாப்பிட போறாருன்னு சொல்ல வர்றீங்களா?

ப.செல்வக்குமார் said...

//ஓசில சாப்பிட போறேன்னு சொல்றாரு. ///
நான் நினைச்சேன் இப்படித்தான் நினைப்பாங்கன்னு ..
வாழ்த்து சொல்ல போறேன்னு சொன்னாரு அதய தப்பு தப்பா புரிஞ்சிக்க வேண்டியது ..அது சரி அவுங்க அவுங்க நினைப்புத்தானே மத்தவங்க மேலயும் வரும் ..!!

Vimalraj said...

enakkum tonguela water coming.. Venkat oru plate parcel please..

GSV said...

ரம்ஜான் வாழ்த்துக்கள் !!!

விழியில் விழிமோதி said...

வெங்கட்
நான் உங்களுக்கு ரம்ஜான் பரிசா வந்துட்டேன்ல...
இன்னும் பிரகாசிக்கும்...
சூரியனுக்கே காட்ற் டார்ச்....

வெங்கட் said...

ரம்ஜான் Update : 1 Pm..

ரெண்டு பேர் வீட்ல இருந்து
பிரியாணி பார்சல் வந்தது..

அந்த மீதி ஒருத்தனை தான்
தேடிட்டு இருக்கேன்..
சிக்க மாட்டேன்றான்..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//விழியில் விழிமோதி said...
வெங்கட்
நான் உங்களுக்கு ரம்ஜான் பரிசா வந்துட்டேன்ல...
இன்னும் பிரகாசிக்கும்...
சூரியனுக்கே காட்ற் டார்ச்....
//

என்னாதிது? புது புதுசா, தினுசு தினுசா கூவறாங்க! வெங்கட்டுக்கு பர்ஸ் காலியாகிகிட்டே வருது, போல?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அதுக்குத்தான் நம்ம வீட்டு
விசேஷத்துக்கும் மத்தவங்களை
கூப்பிட்டு விருந்து வைக்கனும்கறது! //

ஓ.. இதுல இப்படி ஒரு விஷயம்
இருக்கா..? ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// உங்களுக்காக எங்க பாஜிட்ட
ஸ்பெசல் மட்டன் பிரியாணி,
நெஞ்சுக்கறி தால்ச்சா, சிக்கன் ஃப்ரை,
டேட் ஜாம், எல்லாம் பண்ண சொல்லியிருக்கேன். //

ஆஹா.. ரம்ஜான்னா இத்தனை
Items பண்ணுவாங்களா..?
இந்த பசங்க நமக்கு பிரியாணியை
தவிர மத்ததை எல்லாம் கண்ணுலயே
காட்டினதில்லையே..?!!

உங்க அன்புக்கு நன்றி..

ஒரு வாரம் முன்னாடி சொல்லி
இருந்தீங்கன்னா கூட வந்திருப்பேன்..
" விசா " உடனே கிடைக்காதில்ல..

ரசிகன் said...

//ஒரு வாரம் முன்னாடி சொல்லி
இருந்தீங்கன்னா கூட வந்திருப்பேன்..
" விசா " உடனே கிடைக்காதில்ல..
//

ஹிஹி... எங்க‌ வ‌ந்துடுவீங்க‌ளோன்னுதானே ஒரு வார‌ம் முன்னாடி சொல்லாம‌ விட்ட‌தே.. இது தெரியாம் விசா அது இதுன்னு feel ப‌ண்ணி வ‌ருத்த‌ப்ப‌டறீங்களே.. (உங்க‌ வ‌ருத்த‌த்தை குறைக்க‌லாமேன்னு சொன்னேன்..)

வெங்கட் said...

@ விழியில் விழிமோதி.,

// வெங்கட்.. நான் உங்களுக்கு
ரம்ஜான் பரிசா வந்துட்டேன்ல...
இன்னும் பிரகாசிக்கும்...
சூரியனுக்கே காட்ற் டார்ச்.... //

ஏங்க.. செந்தில்..
முதல்ல ஒரு 10 Blog-ஐ
Follow பண்ண ஆரம்பிங்க..

இல்லைன்னா இது நான்
Create பண்ணின Fake ID-ன்னு
சொல்லுவாங்க இந்த VKS-காரங்க..

எல்லாம் எம்மேல இருக்கிற
பொறாமை.. பொறாமை..!!