சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 August 2010

நான் ரெடி.., நீங்க ரெடியா..??

உங்க எல்லோருக்கும்
என்னோட Friendship Day
வாழ்த்துக்கள்...

அப்படியே உங்ககிட்ட
ஒரு சின்ன Help...

( முதல்ல விஷயம் என்னான்னு
சொல்லுப்பா.., அது சின்னதா.,
பெருசான்னு அப்புறம் பேசிக்கலாம்... )

" சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. "

இந்த Topic-ல தான் என் பையன்
Speech Competition-ல பேச போறான்..

( சரி.., நாங்க போயி கைதட்டணுமா..?!! )

இனிமே தான் அந்த Topic-ல
நான் Speech ரெடி பண்ணனும்..

( ஓ.. அதுவே இன்னும் ரெடி
பண்ணலையா..?! )

இங்கே தான் உங்க Help
எனக்கு தேவைப்படுது..

( என்ன Help..?? )

இந்த Topic சம்பந்தமா
உங்களுக்கு என்ன தோணினாலும்

For Ex..

ஒண்ணு ரெண்டு Points .,
சின்ன கவிதை.,
பஞ்ச் டயலாக்.,
ஜோக்.,
புள்ளிவிபரம்.,

இப்படி உங்களுக்கு
எது தெரிஞ்சாலும்
அதை Comment-ல எழுதுங்க...

( அடப்பாவி.., கடைசியில எங்களை
யோசிக்க சொல்றியா..!!! )

முக்கியமான விஷயம்..
அதெல்லாம் இந்தியாவை புகழ்ற
மாதிரி இருக்கணும்..
இல்லைன்னா Prize கிடைக்காது..

( இதுல இதுவேறயா.., அப்ப எல்லா
உண்மையையும் சொல்லக்கூடாது..!! )

இதை ஏன் நான் உங்ககிட்ட
கேட்கறேன்னா...

நீங்கல்லாம் என்னை மாதிரியே
புத்திசாலிங்க...
சரி., சரி.. Tension ஆகாதீங்க..
என்னைவிட புத்திசாலிங்க...

( முடிஞ்சதா.., இன்னும் இருக்கா..?
ICE-ஐ சொன்னோம்.. )

எனக்காக இந்த சின்ன உதவி
பண்ணுவீங்க தானே..?!

( உனக்காக இந்த Blog-ஐ
தினமும் படிக்கறோமே
அதெல்லாம் உதவி இல்லையா..??!! )

O.K..

நான் ரெடி - Notes எடுக்க..

நீங்க ரெடியா - Points குடுக்க...?

( அட., இருப்பா யோசிக்கணும்ல.. )

பின் குறிப்பு :

இதுக்கு முன்னாடி என் பையன்
பேசின 2 Speech பார்க்க..
( For Your Reference )

1. சுதந்திர தின விழா - 2009
2. ஆண்டு விழா - 2009
.
.

32 Comments:

Unknown said...

நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

Unknown said...

இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவில்லை

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

சேலம் தேவா said...

இன்றைய (அ)லட்சியம் நாளைய
(ஏ)மாற்றம்.
உலகிலேயே 7வது பெரிய நாடு,4வது பெரிய ராணுவம்,3வது பெரிய ரயில்வே துறை,2வது பெரிய மக்கள்தொகை,2வது வளரும் பொருளாதாரம்,2வது பெரிய டீ மற்றும் அரிசி தயாரிப்பு,மைக்கா தயாரிப்பில் உலகில் முதலிடம்,உலகின் பெரிய ஜனநாயகநாடு,உலகின் பெரிய மனிதசக்தி,மிகப்பெரிய சக்தி 2020ல்,
INCREDIBLE INDIA.
இந்த sms உங்களுக்கு வந்ததா?

Anonymous said...

தவறாகப் பட்டால் மன்னிக்கனும்.. உங்கள் மகனுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தோ, லைப்ரரிக்கு அனுப்பியோ, இல்லை இணையத்தில் தேட வைத்தோ கலந்து கொள்ளச் செய்யுங்கள்.. நீங்கள் எழுதுவதை பேச்சுப் போட்டியில் மனனம் செய்து ஒப்பித்து வந்தால் நல்லதில்லை.. இது குறித்து அவனே தேடிப் படித்து விழிப்புணர்வு உண்டாக்கிக் கொள்வது தான் நன்று..

வெங்கட் said...

@ தேவா.,

Yes., Yes...
இது மாதிரி தான் எதிர்பார்த்தேன்..
ரொம்ப நன்றி..

இன்னும் வேறு எதாவது
தெரிஞ்சா கூட எழுதுங்க..

வெங்கட் said...

@ அனானி.,

// தவறாகப் பட்டால் மன்னிக்கனும்..
நீங்கள் எழுதுவதை பேச்சுப் போட்டியில்
மனனம் செய்து ஒப்பித்து வந்தால் நல்லதில்லை.. //

நீங்க சொன்னது தப்பில்ல..
ஆனா என் மகனுக்கு இப்போது 8 வயசு.,
3வது தான் படிக்கிறான்..

அவனே சுயமாக போட்டிக்கு தயாராக
இன்னும் குறைந்தது 3 வருடங்களாவது
ஆகும்.. அதுவரை என் துணை அவனுக்கு
தேவை..

முக்கியமாக அவனுக்கு மேடை பயம்
வரக்கூடாது என்பதற்காக தான்
இப்போதே அவனை மேடை ஏற்றி
பழக்குகிறேன்..

மற்றபடி நீங்கள் சொல்லவது போல்
புத்தகம் வாங்கிக் கொடுப்பது
லைப்ரரிக்கு அனுப்புவது,
இணையத்தில் தேட வைப்பது
எல்லாம் செய்ய கொஞ்சம் காலம்
பிடிக்கும்.. ( Atleast 3 Years )

அருண் பிரசாத் said...

ஆர்யபட்டர் - ஆஸ்ட்ராலஜி
சுஸ்ருதா - மருத்துவம்
பதஞ்சலி - யோகா
ராமானுஜம் - கணிதம்
சி வி ராமன் - இயற்பியல்
சாணக்கியா - அரசியல்
சந்திரபோஸ் - பல்துறை
அப்துல் கலாம் - வானியல்

போன்ற அறிவாளிகள்

காந்தி போன்ற அஹிம்சாவாதிகள்

விவேகானந்தர், அரவிந்தர் போன்ற ஞானிகள்

நிறைந்த தேசம். ஆதிக்கம் செலுத்தாத துறைகளே இல்லை.

விளையாட்டு முதல் விண்வெளிவரை.

விரைவில் நிலவில் இந்திய கொடி பறக்கும்(?!),

வெங்கட் said...

@ அருண்..,

தப்பா நினைக்க வேணாம்..

உங்க Comment படிச்சா
நல்லா Rhyming-ஆ இருக்கு..
But இதுல Topic ஒட்டி விஷயம்
வரலையே..

// ஆர்யபட்டர் - ஆஸ்ட்ராலஜி
சுஸ்ருதா - மருத்துவம்
பதஞ்சலி - யோகா
சாணக்கியா - அரசியல்
சந்திரபோஸ் - பல்துறை //

// காந்தி போன்ற அஹிம்சாவாதிகள்
விவேகானந்தர், அரவிந்தர் போன்ற ஞானிகள் //

இதுல சுதந்திர இந்தியாவின்
சாதனைகள் என்ன..??
எல்லாம் Before Independence-ஆ
இருக்கே..


// விரைவில் நிலவில் இந்திய கொடி பறக்கும்(?!), //

இது ரொம்ப நல்லா இருக்கு..

பெசொவி said...

கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், இந்தியா தானாக எந்த நாட்டின் மீதும் படை எடுக்கவில்லை. சரியாகச் சொன்னால், (ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்காவைப் போல் அல்லாமல்) அஹிம்சை என்னும் கொள்கையை போதிப்பதோடு இல்லாமல், அதை கடைப் பிடிக்கவும் செய்யும் உன்னதமான நாடு நம் நாடு.

சமீபத்திய நிலவில் தண்ணீர் உள்ளதாகக் கண்டுபிடித்தது நம் இந்தியா தானே!

அருண் பிரசாத் said...

//தப்பா நினைக்க வேணாம்//

சரி தான், அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதவேண்டியதுதான்

//விரைவில் நிலவில் இந்திய கொடி பறக்கும்(?!)//

அதில் நான் ஏன் (?!) என்று போட்டிருக்கிறேன் என யாராவது யூகியுங்கள் பார்க்கலாம்.

அருண் பிரசாத் said...

ஒரு புத்தன் சிரிப்பில், போக்ரான் சோதனை நடத்தி அணு அயுத பலத்தை காட்டியது

நிலவில் தண்ணீர் காட்டி விண்வெளி பலத்தை காட்டியது

ஐ பி எல் போட்டிகளை நடத்தி விளையாட்டை வேறு ஒரு சகாப்ததிற்கு கொண்டு சென்றது

விரைவில் ஜி7 ல் நிரந்தர உறுப்பினராகி வல்லரசு என நிரூபிக்கும்

வெங்கட் said...

@ அருண்.,

// விரைவில் நிலவில் இந்திய கொடி பறக்கும்(?!)

அதில் நான் ஏன் (?!) என்று போட்டிருக்கிறேன்
என யாராவது யூகியுங்கள் பார்க்கலாம். //

முதல்ல நம் கொடி நிலவில்
பறக்க வாய்ப்பு இருக்கான்னு
நம்பாம கேள்வி கேட்பாங்க...

ஆனா நாம அதை செஞ்சு
அவங்களை ஆச்சரியப்பட
வைப்போம்..

Correct தானே... நாங்க சிங்கம்ல..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

நீங்க சிங்கம் தான், ஆனா சிங்கம் வழுக்கிடுச்சி.

எல்லோருக்கும் தெரிஞ்சது, நிலவுல காற்று கிடையாது வெறும் Vacuum தான். காற்று இல்லைனா கொடி எப்புடி பறக்கும்?

கருடன் said...

@அருண்
//எல்லோருக்கும் தெரிஞ்சது, நிலவுல காற்று கிடையாது வெறும் Vacuum தான். காற்று இல்லைனா கொடி எப்புடி பறக்கும்?//

ஹ்ம்ம் அங்க ஒரு 52 இன்ச் டிவி வச்சி அதுல கொடி பறக்கற மாதிரி Live Relay பண்ணுவோம்... ஏனுங்க டிவி-ல கொடி பறக்க காத்து வேணுங்கள??

(டிவி கரண்ட் எப்படி வரும் கேக்ககூடாது... அது நம்ம ப்ளாக் பேருலே இருக்கு... சூரிய சக்தி.)

கருடன் said...

என்ன வெங்கட் இப்படி பொசுக்குனு கேட்டிங்க... பொதுவா நல்ல விஷயத்த பேசின எனக்கு ஜுரம் வரும்... அதனால கொஞ்சம் டைம் கொடுங்க... (லைட்ட ஆணி..)

Riyas said...

ஓ.. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துட்டாங்களா...?

ரசிகன் said...

அன்னை பூமியை,
அன்னியர்கள் ஆக்ரமிக்காமல்..
ஐம்பது வருடங்களுக்கு மேல்
அடை காப்பதே அசுர சாதனைதான்..

ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டு..
ஜனனாயக நாடாக மலர்ந்து..
வல்லரசுகள் போற்றும்
நல்லரசாக தொடர்ந்துகிட்டு இருக்கு..

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்க்குன்னு கேட்ட‌
ஜனங்களில் இருந்து,
கிரண் பேடியும்,
பாத்திமா பீவியும்
உருவானதும்
சாதனைதான்..

1947 12% ஆக இருந்த
literacy percentage
இப்போ, 80% எட்டி பிடிக்க பார்க்குதுல்ல..

விஞ்ஞானம்.
வியாபாரம்...
விளையாட்டு..
எல்லாத்திலயும்..
அசத்திகிட்டிருக்கோம்ல..
பையனுக்கு வாயிலயும்
மனசுலயும் நுழையற‌
Examples சோட,
இதை எல்லாம் எடுத்து விடலாம்..

ஆவ்வ்வ்.. தூக்கம் வந்துடிச்சி..
Next meet பண்ணறேன்...

வெங்கட் said...

@ டெரர்.,

// ஹ்ம்ம் அங்க ஒரு 52 இன்ச் டிவி வச்சி
அதுல கொடி பறக்கற மாதிரி Live Relay பண்ணுவோம்...
ஏனுங்க டிவி-ல கொடி பறக்க காத்து வேணுங்கள?? //

இந்த விஷயத்தை கூட
முடிஞ்சா Speech-ல Add பண்ண
Try பண்றேன்..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

வெங்கட் said...

@ ரசிகன்.,

நல்ல நல்ல Points குடுத்திருக்கீங்க..
நன்றி..

@ To All

கவிதை, ஜோக் , பஞ்ச் டயலாக்
இந்த மாதிரி எதாவது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

i dont have an idea. im escappuuuuuuuuuu

கருடன் said...

தங்கு தடைகளை தாண்டி பொங்கி வரும் பொன்னி நதியின் புது வெள்ளம்போல் சுகந்திரத்துக்கு பின்னல் இந்தியா எல்லா தடைகளையும் உடைத்து எரிந்து வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியாவின் அசூர வளர்ச்சி கண்ட பல வல்லரசு நாடுகள் இடி ஓசை கேட்ட நாகமாய் பயந்து அதை தடுக்க மறைமுகமாக முயன்று முடியாமல் இன்று நம்முடன் நட்பு பாராட்டி வருகிறது. நம்மை அச்சுரித்திய அண்டை நாடுகள் இன்று நமது இராணுவ பலம் கண்டு அடங்கி இருக்கின்றன..

(தல சும்மா கிரிக்கி இருக்கேன் முன்னுரை இல்ல முடிவுரைல சேர்க்க முடியுமா பாருங்க..)

Anonymous said...

niraiyaper vanthu kummuvaanga..ippa missing why...kandukkama iruppathe mel enta
arivu sarntha visayam...namakethukku vampu enta..

Anbu.Bala said...

Venkat,
Hi H r u ? I am Anbu from Washington. I am slightly not convinced with your statement.( for your reply for Anonymous’s)
Anyways, it’s my opinion. My son is doing 1st grade & he will read level3 books. He used to buy books at the age of 4 in his school book exhibition. He will go to library on his own & pick books on his own in his school library& he will return the books before the due date on his own. We won’t help him. In the weekends, we will take him to library & he will pick up books whatever he likes. Not only my son, here most of the kids will start reading at the age of 5.They will try to spell it out any big words.My daughter is just 1 yr old. We got some books (picture book) for her & she is trying opening the book & seeing the pictures. Reading book is not education. It’s language development/reading/writing/communication that’y it. Ask your son to read the books or you read the book. After that, ask to him write a story abt it or reproduce the story.
Don’t correct the spelling mistakes(if that spelling pronounce that word, that’s enough. eg grat –great,dinosaur-dinosaur)
If you need any info further, give me your phone no, I will call you (if you like)
If you feel, If I am talking too much. I am sorry abt it.
You can check with this Hollywoodbala(http://www.hollywoodbala.com/) or Mugilan (http://pithatralkal.blogspot.com/)

Thanks,
Anbu.Bala

அருண் பிரசாத் said...

கார்கில் ஆனாலும் காஷ்மீர் ஆனாலும்,
விளையாட்டானாலும் விண்வெளியானாலும்,
அஹிம்சையானாலும் அமெரிக்காவானாலும்,
இறையான்மையானாலும் ஈழம் ஆனாலும்,
இறுதியில் வெல்வது இந்தியா மட்டுமே!

வெங்கட் said...

@ அன்பு பாலா.,

// My son is doing 1st grade & he will read level3 books.
He used to buy books at the age of 4 in his school
book exhibition. //

உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள்..

இங்கு எங்கள் குழந்தைகள்
Tv-ல Cartoon-ல் பார்த்தே
நேரத்தை போக்குகிறார்கள்..

அதை ஒரு Control-க்கு கொண்டு
வரணும்னா அவங்களுக்கு
Books படிக்கிற ஆர்வத்தை
உண்டு பண்ணனும்னு இப்ப புரியுது..

இனிமே அதுக்கான Steps
நான் எடுக்க போறேன்..

Thanks for ur Kind Advise..

Jey said...

இருப்பா ஏதாவது யோசிச்சிட்டு வந்து ஏதாவது உருப்படியா சொல்லமுடியுமானு பாக்குரேன்.னேத்தே பதிவ போட்ருக்கே, பாக்காம விட்டுட்டேன்...

Jey said...

Narayana N.R. Murthy 08.13.07, 12:00 PM ET
Bangalore, India

http://india60year.blogspot.com/2007/08/sixty-years-of-progress.htm

வெங்கட் said...

@ ஜெய்.,

நன்றி..
நீங்க குடுத்த லிங்க்ல " html " ல
" l " missing..

So.., அவர் குடுத்த லிங்க் பார்க்க
இங்கே Click
பண்ணுங்க

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - வெங்கட்டினை விட வேறு யாரும் தக்வல் அளிக்க இயலுமா என்ன ? எழுதும் திறமை வெங்கட்டிடம் தான் இருக்கிறது - யாரையும் எதிர்பாராமல் எழுதுக - தயார் செய்க

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

ரெண்டு தடவயும் ரெண்டாவது பரிசே கிடைச்சா - இப்ப மொதப் பரிசு வாங்கணும்னா என்ன பண்ணனும் - எழுதற ஆள மாத்த்லாமா - சிந்திக்கவும்.

நல்வாழ்த்துகள் பயலுக்கும் அப்பாவுக்கும்
நட்புடன் சீனா

சேலம் தேவா said...

இது லேட்டஸ்ட் sms.38% அமெரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள்,12% அமெரிக்க விஞ்ஞானிகள் இந்தியர்கள்,36% நாசா விஞ்ஞானிகள் இந்தியர்கள்,34% மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இந்தியர்கள்,17% இன்டெல் ஊழியர்கள் இந்தியர்கள்,28% ஐ பி எம் ஊழியர்கள் இந்தியர்கள்.ஆனா,இவங்க எல்லாம் இந்தியாவில வேல செய்யாம அமெரிக்காவில வேல செய்றாங்க!!