சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 August 2010

ராக்கி...!!

அப்ப நான் B.Com 3rd Year..,
அன்னிக்கு Raksha Bandhan..

எங்க Junior கதீஜா
எனக்கு ராக்கி கட்டி விட்டாங்க..

நான் : Thanks.,

கதீஜா : என்னண்ணா வெறும் Thanks
மட்டும் தானா..??

நான் : பின்ன..,

கதீஜா : தங்கச்சிங்க ராக்கி கட்டினா.,
அண்ணங்க 50, 100-ன்னு தரணும்..

( 5 ரூபாய்க்கு ஒரு கயித்தை கட்டிட்டு
50 ரூபாய்க்கு மேட்டர் போடறீயே...!!
இவ்ளோ புத்திசாலியா நீ..?! )

நான் : சரி., ஜனாவுக்கு ராக்கி கட்டினியா..?

கதீஜா : கட்டிட்டேன்..

நான் : என்ன குடுத்தான்..?

கதீஜா : அவருக்கு சேர்த்து உங்ககிட்ட
வாங்கிக்க சொல்லிட்டாரு..

( அடப்பாவி., நான்தான் சிக்கிட்டேனா..?!! )

ம்ம்.. வேற வழி..?!!

சரின்னு மனசை தேத்திட்டு
என் பாக்கெட்ல கையை விட்டு..

ரெண்டு 50 பைசா எடுத்து
கதீஜா கையில குடுத்துட்டு
சொன்னேன்..

" Happy Raksha Bandhan.. "


டிஸ்கி : வேற யாராவது எனக்கு
ராக்கி கட்டணுமா..?!! அப்ப
ராக்கியும்., Gift-ம் அனுப்புங்க..

என்கிட்ட நிறைய " 50's " இருக்கு..
.
.

27 Comments:

என்னது நானு யாரா? said...

தல! அப்போ அந்த பொண்ணு, கோபத்தில துரத்தினப்பா எங்கே ஓடி ஒளிஞ்சீங்க? (எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க. நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50 காசு சில்லறை எல்லாம் நீங்களும் டேரரும் சேர்ந்து கோவில் வாசல்ல கலெக்ட் பண்ணினதுதான!!!!

Keerthi Kumar said...

இப்படி பட்ட occasion ல கைவசம் வச்சு இருக்க வேண்டிய gift இது

http://www.hotlix.com/insect_candy/scorpion_candy.html

more @ http://www.hotlix.com/insect_candy/insect_candy.html

ப.செல்வக்குமார் said...

இந்த VKS காரங்களுக்குத்தான் கட்டணும்.
///சரின்னு மனசை தேத்திட்டு
என் பாக்கெட்ல கையை விட்டு..

ரெண்டு 50 பைசா எடுத்து
கதீஜா கையில குடுத்துட்டு
சொன்னேன்..///
இது தான் நம்மளோட திறமை. புயலே வந்தாலும் அலட்டிக்க மாட்டோம்.
இதெல்லாம் சப்ப மேட்டர்.

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// அப்போ அந்த பொண்ணு கோபத்தில
துரத்தினப்பா எங்கே ஓடி ஒளிஞ்சீங்க.? //

ஹி.,ஹி., ஹி..!!

என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க..
நீங்க ஒளிஞ்சிட்ட இருந்த மரத்துக்கு
பக்கத்து இருந்த மரத்துல தான்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// 50 காசு சில்லறை எல்லாம் நீங்களும்
டேரரும் சேர்ந்து கோவில் வாசல்ல
கலெக்ட் பண்ணினதுதான!!!! //

YES...,

கோவில் வாசல்ல
உங்ககிட்ட 500 ரூபா
சலவை நோட்டை குடுத்து
சில்லரை மாத்தினோமே..!!

ஒண்ணும் தெரியாத மாதிரி
கேக்கறீங்களே..
இமேஜ் பில்டிங்கா..??!!

அனு said...

இடம்: வெங்கட்-டின் கல்லூரி
நாள்: Raksha bandhan காலை..

சூழ்நிலை: ஆண்கள் எல்லோரும், கூட படிக்கிற பொண்ணுங்க எங்க நமக்கு ராக்கி கட்டிடுமோ-ன்னு பயந்து ஓடிட்டு இருக்க, வெங்கட் மட்டும் தைரியமா உலாவிட்டு இருக்கார்..

வெங் to பெண்1: தங்கச்சி.. எப்படிம்மா இருக்கே? Happy Raksha Bandhan.. அண்ணனுக்கு ராக்கி எல்லாம் கிடையாதா?

பெண்1: உங்களுக்கு இல்லாததா அண்ணா.. (மனதிற்குள்) (போச்சு.. என்னோட 5 ரூபாய் வீணா போச்சே)

வெங் to பெண்2: தங்கச்சி.. அண்ணனுக்கு ராக்கி...

பெண்2: ஒழுங்கா பாரு.. நான் உங்க க்ளாஸ் டீச்சர்..

வெங்: ஹிஹி.. நீங்க ரொம்ப இளமையா இருக்கிறதுனால் குழம்பிட்டேன்.. அதனால என்ன, தம்பிகளுக்கும் ராக்கி கட்டலாம் தப்பில்ல..

பெண்2: எல்லாம் நேரம் தான்.. சரி, கைய காட்டு..

இப்படியே, 50 பைசா கொடுத்து officially நிறைய பெண்களின் அண்ணா ஆகிவிடுகிறார்..

வெங்: (மனதிற்குள்)ம்ம்.. இன்னைக்கு நல்ல வேட்டை தான்...

--------------------------

அதே இடம்..
அதே சூழ்நிலை..
ஆனால், நேரம் மட்டும் மதியம்..

வெங்கட் ஒரு மரத்தடியில்.. சுற்றி பெண்கள் கூட்டம்.. வெங்கட் குரல் மட்டும் சத்தமா கேட்குது..

"எதை எடுத்தாலும் ரெண்டு ரூபா..
அஞ்சு ரூபா ராக்கி கயிறு ரெண்டு ரூபாய்க்கு..
எதை எடுத்தாலும் ரெண்டு ரூபா.. ரெண்டு ரூபா!!"

அனு said...

@செல்வக்குமார்

//இந்த VKS காரங்களுக்குத்தான் கட்டணும்.//

அப்படி ஒரு எண்ணம் இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க.. நான் ஒரு நல்ல பெரிய தாம்பு கயிறா வாங்கி வைக்கிறேன்...

கலாநேசன் said...

ok ok

ஜெகன் said...

களவாணி டைட்டில்'ல Our sincere thanks to Mr. Venkat னு போடறாங்களே அது நீங்க தானா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கோவில் வாசல்ல
உங்ககிட்ட 500 ரூபா
சலவை நோட்டை குடுத்து
சில்லரை மாத்தினோமே..!!
//

அப்பத்தான் பிரிண்ட் அடிச்சு சுடச் சுட கோவில் வாசல்ல சில்லறை மாத்தி......வெங்கட் திறமை யாருக்கு வரும்?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எங்க Junior கதீஜா
எனக்கு ராக்கி கட்டி விட்டாங்க..//

உங்க குணம் தெரியாம உங்ககிட்ட காசு எதிர்பார்த்தாங்களே, அவங்க நிச்சயம் ஜூனியர் தான். உங்க கூட படிச்சிருந்தா அப்படி செஞ்சிருக்கமாட்டாங்க தானே?

அனு said...

@ஜெகன்

//களவாணி டைட்டில்'ல Our sincere thanks to Mr. Venkat னு போடறாங்களே அது நீங்க தானா?//

கரெக்ட்டா அந்த ஸ்லைட்-க்கு முன்னாடி "Cigarette smoking is injuirious to health, alcohol destroys your life & home" போட்டாங்களே, அதை கவனிக்கலயா??

இப்பவாது லிங்க் புரிஞ்சதா??

Anonymous said...

@ வெங்கட்
எவ்வளவு கொடுக்குறோம் என்பது முக்கியமல்ல. கொடுப்பதுதான் முக்கியம். 50 காசு இவர்களிற்கு வேண்டுமானால் சின்னதாக இருக்கலாம். ஆனால் அதுவே பாகிஸ்தானில்/வங்காள தேசத்தில் 75 காசு. அதுவே இலங்கையில் 1.50 ரூபாய். அதுவே பர்மாவில் 14 ரூபாய். இன்னும் தள்ளி ஆபிரிக்காவில் பார்த்தால், சிம்பாபேயில் சில லட்சம் டாலர்கள்.ஆகவே வெங்கட்! நீங்கள் இவர்களின் வாய்ச்சவடாலுக்கு அஞ்சாமல், சில்லறைகளை அள்ளிவீசுங்கள்
அத்துடன் பெண்கள் இப்போதெல்லாம் சில்லறையை சிதறவிடுவதுபோல் சிரிப்பதில்லயாம். உங்கள் சேவையினால் அவர்கள் மீண்டும் அதுபோல் சிரிக்காவிடினும் சில்லறையையாவது சிதறவிடட்டும்.

சேலம் தேவா said...

பாசமலர் சிவாஜிக்கு அப்புறம் சிறந்த அண்ணன்னா அது வெங்கட் சார் மட்டும்தான்!!

Chitra said...

HAPPY RAKHI!!! HAPPY KAJOL!!!!
HAPPY DEEPIKA!!!

வெங்கட் said...

@ கீர்த்தி..,

// இப்படி பட்ட occasion ல கைவசம்
வச்சு இருக்க வேண்டிய gift இது //

எதுக்கு..?
50 பைசா குடுக்கறவங்களுக்கு
Gift-ஆ தரவா..?

ஏன் இந்த கொலை வெறி..?!!

வெங்கட் said...

@ செல்வா.,

// இந்த VKS காரங்களுக்குத்தான்
கட்டணும். //

அது சரி..,
அவங்களுக்கு இந்த
கயிரெல்லாம் பத்தாது..
இரும்பு சங்கிலி தான் Best..!!

வெங்கட் said...

@ அனு.,

கதீஜா தன் கையிலிருக்கும்
50 பைசாவை முறைத்தபடியே
கிளாஸுக்குள் வர்றாங்க..

அனுகிட்ட நடந்ததெல்லாம்
சொல்றாங்க..

அனு : சரி., எனக்கு ரெண்டு
ராக்கி குடு..

கதீஜா : எதுக்கு..?

அனு : வெங்கட்-க்கும்.,
ஜனாவுக்கும் கட்ட..

கதீஜா : என்னை பார்த்ததுக்கு
அப்புறமுமா அவங்களுக்கு
ராக்கி கட்றேன்னு சொல்ற..??

அனு : Yes..!!
( மனசுக்குள்.. )
ஒரு ரூபா வந்தாலும் லாபம் தானே..!!
நாம என்ன ராக்கி காசு போட்டா
வாங்கினோம்..!!

கதீஜா ரெண்டு ராக்கி தர்றாங்க..

--------------------------------

அனு., வெங்கட்டை தேடி பிடிச்சு
ராக்கி கட்டி விடறாங்க..

வெங்கட் : Thanks.,

அனு : என்னண்ணா வெறும் Thanks
மட்டும் தானா..??

வெங்கட் : பின்ன..,

அனு : தங்கச்சிங்க ராக்கி கட்டினா.,

வெங்கட் : போதும்., போதும்.. இதுக்கு
மேல டயலாக் எனக்கு தெரியும்..

ம்ம்.. வேற வழி..?!!

சரின்னு மனசை தேத்திட்டு
என் பாக்கெட்ல கையை விட்டு..

ரெண்டு 50 பைசா எடுத்து
அனுகிட்ட காட்டி சொன்னேன்..

" இங்கே பாருங்க என்கிட்ட
எல்லாமே 50 பைசா தான் இருக்கு..

கொஞ்சம் Wait பண்ணுங்க..

பக்கத்து டீகடையில
இந்த 50 பைசாவுக்கு சில்லரை
மாத்தி உங்களுக்கு தர்றேன்..!! "

வெங்கட் said...

@ ஜெகன்.,

// " களவாணி " டைட்டில்'ல
Our sincere thanks to Mr. Venkat னு
போடறாங்களே அது நீங்க தானா? //

ஹி., ஹி., ஹி...!!

நமக்கு இந்த விளம்பரம்
பிடிக்காதுன்னு சொன்னா
கேட்க மாட்டேன்றீங்களே...!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// அப்பத்தான் பிரிண்ட் அடிச்சு
சுடச் சுட கோவில் வாசல்ல சில்லறை மாத்தி..... //

ஆமா சார்.. தப்பு தான்..

பிரிண்ட் அடிச்சி குடுத்து..
" கோவில் வாசல்ல சில்லரை
மாத்தேன்னு " நீங்க சொன்ன
Advise-ஐ நான் கேட்டிருக்கணும்..

இப்ப பாருங்க..,
நம்ம Matter எல்லோருக்கும்
தெரிஞ்சி போச்சு..

I'm Sorry..

வெங்கட் said...

@ அனு.,

// கரெக்ட்டா அந்த ஸ்லைட்-க்கு முன்னாடி
"Cigarette smoking is injuirious to health,
alcohol destroys your life & home" போட்டாங்களே,
அதை கவனிக்கலயா??
இப்பவாது லிங்க் புரிஞ்சதா?? //


நாம தான் நம்ம Blog மூலமா
இப்படி பிரச்சாரம் பண்றோமா..
அதான் டைட்டில்'ல
Our sincere thanks to Mr. Venkat னு
போட்டாங்க..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பாரதி..,

// 50 காசு இவர்களிற்கு வேண்டுமானால்
சின்னதாக இருக்கலாம். ஆனால் அதுவே
பாகிஸ்தானில்/வங்காள தேசத்தில் 75 காசு.
அதுவே இலங்கையில் 1.50 ரூபாய்.
அதுவே பர்மாவில் 14 ரூபாய்.
இன்னும் தள்ளி ஆபிரிக்காவில் பார்த்தால்,
சிம்பாபேயில் சில லட்சம் டாலர்கள். //


இது சூப்பரு..

நமக்கு சுப்ரமணிய பாரதியே
ஆதரவு தர்ற மாதிரி ஒரு Feel வருது...!!
கலக்குங்க..

I Like Your Comment..!!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// பாசமலர் சிவாஜிக்கு அப்புறம்
சிறந்த அண்ணன்னா அது வெங்கட்
சார் மட்டும்தான்..!! //

ஹி., ஹி., ஹி..!!

ரொம்ப நன்றி..

வெங்கட் said...

@ சித்ரா.,

// HAPPY RAKHI!!!
HAPPY KAJOL!!!!
HAPPY DEEPIKA!!! //

Happy Sharuk..!!!
Happy Amir..!!!
Happy Hrithik..!!!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

ராக்கி - 5 ரூபா 50 காசு 500 ரூபா நோட்டு அது அடிச்ச கதை - எல்லாமே நல்லா இருக்கு. வி.வி.சி

ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வள்ளல் வெங்கட் வாழ்க..