சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 August 2010

உள்குத்து ( ரிவர்ஸ் ஸ்விங் )

டிஸ்கி : இந்த பதிவு
அனைத்துலக மனைவிகளின் சார்பாக..,

" கணவன் எது செஞ்சாலும்
அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! "
இப்படி எல்லாம் யாருமே
சொன்ன மாதிரி தெரியல...

அர்த்தம் வேணா இல்லாம
இருக்கலாம்.. - ஆனா
உள்குத்து இருக்குமோன்னு சந்தேகம்....


1. எப்ப பார்த்தாலும் Tvல
National Geogaraphy., Animal Planet,
இந்த மாதிரி Channel-ஐயே
பார்க்கறாங்களே...

அது..

** பொது அறிவு வளர்த்துக்கவா..?

இல்ல

** போன ஜென்ம பந்தமா..??


2. நம்மள எப்ப சினிமாவுக்கு
கூட்டிட்டு போனாலும்
English படம்., Hindi படத்துக்கே
கூட்டிட்டு போறாங்களே..

அது..

** அவங்க படம் பார்க்கவா..?

இல்ல

** நம்மக்கிட்ட படம் காட்டவா..??


3. பசங்களுக்கு Homework
சொல்லி தரும் போது..,
' நானெல்லாம் படிக்கும் போது
100 மார்க் எடுத்தேன்னு '
அடிக்கடி சொல்றாங்களே..

அது...

** உண்மையான Mark-ஆ..?

இல்ல

** இவங்க Total Mark-ஆ..??


4. சிக்கலான பிரச்சினைன்னா
நம்ம கிட்ட ஐடியா கேட்கறாங்களே..

அது...

** நம்ம திறமை மேல உள்ள
நம்பிக்கையா..?

இல்ல

** அந்த விஷயம் சொதப்பிட்டா
நம்ம மேல பழி போடவா..??


5. " 2 நாள் எங்க அம்மா வீட்ல
இருந்துட்டு வர்றேன்னு ' சொன்னா..
உடனே சோகமாயிடறாங்களே..

அதுக்கு காரணம்...

** நாம ஊருக்கு போறோம்னா..?

இல்ல

** 2 நாள்ல திரும்பி வந்துடுவோம்னா..??


பின் டிஸ்கி :

பொண்ணுங்களை யார் கிண்டல்
பண்ணினாலும் எனக்கு பிடிக்காது..
அது நானாவே இருந்தாலும்..!!

அதனால தான்
என் உள்குத்து பதிவுக்கு எதிர்பதிவு இது..

ஹி., ஹி., ஹி..!!
.
.

35 Comments:

கலாநேசன் said...

பொண்ணுங்களை யார் கிண்டல்
பண்ணினாலும் எனக்கும் பிடிக்காது....

கலாநேசன் said...

நேற்றைய குத்துக்கு வாங்கிய குத்தா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
ஹி ஹி ஹி, வெங்கட் அவரையே அவர் கலாய்சிக்கும்போது, நாம்ம சங்க ஆளுங்க நமக்குள்ளே கலாய்ச்சா தப்பில்லை.//

@ அருண் நீங்க சொன்னது கரெக்ட்தான். வெங்கட்டை கலாய்க்க அவரே போதும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போன பதிவை போட்டுட்டு வீட்டுல செம அடி வாங்கிருப்பீங்க போல...

வெங்கட் said...

@ கலாநேசன்..,

// பொண்ணுங்களை யார் கிண்டல்
பண்ணினாலும் எனக்கும் பிடிக்காது..//

ஹி., ஹி., ஹி..
இது எல்லோரும் சொல்லுவாங்க..

// அது நானாவே இருந்தாலும்..!! //

ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// போன பதிவை போட்டுட்டு வீட்டுல
செம அடி வாங்கிருப்பீங்க போல... //

இவ்ளோ ஆணாதிக்கவாதியா நீங்க..??

கல்யாணம் ஆகாத நம்ம
பொண்ணுங்களே...!!
இப்ப இவரை பத்தி நல்லா
புரிஞ்சிட்டீங்களா..??

ஒருவேளை உங்களுக்கு
வரன் பார்க்கும் போது
இவர் ஜாதகம் வந்து..,

10 பொருத்தமும் அமைஞ்சி
இருந்தாலும்..,
உங்க அப்பா., அம்மாகிட்ட
என்ன சொல்லுவீங்க..??

" NO.. இவரை கட்டிக்க மாட்டேன்..!! "

ம்ம்.. அது...

இப்படியே Maintain பண்ணுங்க..
இவருக்கு எப்படி கல்யாணம்
நடக்குதுன்னு நானும் பார்க்கறேன்..!!!

அனு said...

அடி கொஞ்சம் பலமோ?? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

///இப்படியே Maintain பண்ணுங்க..
இவருக்கு எப்படி கல்யாணம்
நடக்குதுன்னு நானும் பார்க்கறேன்..!!!///

இங்க கிடைக்கலைன்னா என்ன. சிங்கபோபூர் பொய் ஒரு chinese பொண்ணையாவது கல்யாணம் பண்ணுவேன்...

வெங்கட் said...

@ கலா நேசன், ரமேஷ் & அனு.,

// நேற்றைய குத்துக்கு வாங்கிய
குத்தா இது?//

// போன பதிவை போட்டுட்டு வீட்டுல
செம அடி வாங்கிருப்பீங்க போல... //

// அடி கொஞ்சம் பலமோ?? :) //

சே..!! சே..!!

நான் தான் என்னோட போன
பதிவு Comment Section-லயே
சொல்லி இருந்தேனே..

// " திஸ் ஈஸ் ஓபினிங்..
யூ ஸி எண்டிங்....!! "
( ரஜினி Style-ல் படிக்கவும்.. ) //

உள்குத்து - 1st Part
உள்குத்து ( ரிவர்ஸ் ஸ்விங் - 2nd Part

இது முன்னமே Plan பண்ணினது
திடீர்னு பண்ணினது இல்ல..

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// இங்க கிடைக்கலைன்னா என்ன.
சிங்கபோபூர் பொய் ஒரு chinese
பொண்ணையாவது கல்யாணம் பண்ணுவேன்... //

" 30 நாளில் சைனீஸ் பேசுவது எப்படி..? "
இந்த Book எங்கிட்ட இருக்கு..

ஹி., ஹி., ஹி..!!

அதை நான் ரெண்டே நாள்ல
வேகமா கத்துக்க போறேன்..

Mohamed Faaique said...

போன பதிவினால் நிலவரம் கலவரம் ஆகிவிட்டதா.. திடீரென்று இப்படி ஒரு பதிவு..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//// இங்க கிடைக்கலைன்னா என்ன. சிங்கபோபூர் பொய் ஒரு chinese பொண்ணையாவது கல்யாணம் பண்ணுவேன்...///

அண்ணே அப்பரம் நம்ம தென் ஆப்ரிக்கா பொண்ணு பினிடாவோட நிலம என்னாவது ???

Chitra said...

அந்த பதிவுக்கு பயங்கர "effect " இருந்ததோ, வீட்டில? இந்த அளவுக்கு இந்த பதிவில பம்மி இருக்கீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Mohan said...

:-))))

malgudi said...

வாவ் சரவெடி.

ரொம்பவே ரசித்தேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அன்புள்ள வெங்கட்,
நான் நலம்,
ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டே நீங்கள் எழுதிய (ரிவர்ஸ் ஸ்விங்) பதிவு மிகவும் அருமை!
புது பூரிக்கட்டை பலப் பல சைசில வந்திருக்காம், கடைக்காரர் சொன்னார், வெய்ட்டும் இல்லையாம் வாங்கிக்குங்க, use ஆவும்

அனு said...

//சே..!! சே..!!
நான் தான் என்னோட போன
பதிவு Comment Section-லயே
சொல்லி இருந்தேனே..//

//இது முன்னமே Plan பண்ணினது
திடீர்னு பண்ணினது இல்ல..//

அண்ணே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

ஏற்கனவே ப்ளான் பண்ணினதுன்னா பதிவுலயே போட்டிருக்கலாமே.. Comment Sectionல, அதுவும் அவ்வளவு நேரம் கழிச்சு எதுக்கு போடனும்??
எப்பவுமே மினிமம் ரெண்டு நாள் லீவ் விடுறவரு, இந்த போஸ்ட்டை மட்டும் அவசர அவசரமா போட்டதற்கான காரணம் என்ன??

- இப்படிக்கு சமாளிப்பு சிங்கங்களை சமாளிப்போர் சங்கம்

ப.செல்வக்குமார் said...

//பொண்ணுங்களை யார் கிண்டல்
பண்ணினாலும் எனக்கு பிடிக்காது..
அது நானாவே இருந்தாலும்..!!///
எனக்கும் கூட..
VAS ல எல்லோருமே இவ்ளோ நல்லவங்களா இருக்கோமே ...?

வெங்கட் said...

@ ஜில்தண்ணி.,

// அண்ணே அப்பரம் நம்ம தென் ஆப்ரிக்கா பொண்ணு
பினிடாவோட நிலம என்னாவது ??? //

அந்த பொண்ணு பாவம் இவரை பத்தி
தெரியாம லவ் பண்ணிட்டு இருந்தது..

அப்புறம் நான் அந்த பொண்ணுகிட்ட
பேசி இந்த பாழும் கிணத்துல இருந்து
தப்பிக்க வெச்சுட்டேனே..

இது நடந்து மூணு மாசம ஆகுதுதே..!!

வெங்கட் said...

@ To All..,

என் மனைவியாவது.,
என்னை அடிக்கறதாவது..?!!

சிக்க மாட்டோம்ல..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டே நீங்கள் எழுதிய

(ரிவர்ஸ் ஸ்விங்) பதிவு மிகவும் அருமை! //

ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டே நீங்கள் எழுதிய கமெண்ட்-க்கு ரொம்ப நன்றி..

இதை நான் உங்களை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தப்பவே சொல்லி இருக்கலாமே..

உங்க பக்கத்துல உக்கார்ந்துட்டு தானே எழுதினேன்..?!!

என் பதிவை உங்க மனைவிகிட்ட படிச்சி காட்டின வரை தப்பில்ல..

அதுக்கு அப்புறம் விழுந்து விழுந்து ஏன் சிரிச்சீங்க..?
அதான் ஆஸ்பத்திரிக்கு போற மாதிரி விழுந்திருக்கு..!!

// புது பூரிக்கட்டை பலப் பல சைசில வந்திருக்காம், கடைக்காரர் சொன்னார், வெய்ட்டும் இல்லையாம் //

இதெல்லாம் இப்ப விசாரிச்சி என்ன பண்றது..??
முன்னமே உஷாரா இருக்கணும்ல..!!

சரி வருங்காலத்துக்காவது பயன்படும்..
சீக்கிரம் வாங்கிக்கோங்க..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat

எவ்ளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிக்கிறீங்களோ? பரவாயில்லை, நல்லா தான் ட்ரைனிங் கொடுத்திருக்காங்க உங்க வீட்டில!

வெங்கட் said...

@ அனு.,

// ஏற்கனவே ப்ளான் பண்ணினதுன்னா
பதிவுலயே போட்டிருக்கலாமே..
Comment Sectionல, அதுவும் அவ்வளவு
நேரம் கழிச்சு எதுக்கு போடனும்?? //

இதை பதிவுல போட மறந்துட்டேன்..
நான் பதிவை போட்டுட்டு அவசர
வேலையா வெளியே போயிட்டேன்..

வர Night ஆயிடுச்சு..

வந்த Comments எல்லாம் மொபைல்
வழியா Publish பண்ணினேன்..

கவனிக்க..
அதான் நான் யாருக்குமே
Reply போடலை..

// எப்பவுமே மினிமம் ரெண்டு நாள் லீவ் விடுறவரு,
இந்த போஸ்ட்டை மட்டும் அவசர அவசரமா
போட்டதற்கான காரணம் என்ன?? //

அவசரமா போட்டா..
அப்ப போஸ்ட் ரெடியா இருக்குன்னு
தானே அர்த்தம்..!!

அதானே நானும் சொன்னேன்..

விடிய விடிய சிவபுரணம் கேட்டு.,
விடிஞ்சி கேட்டா பார்வதிக்கு .,
பரமசிவன் கஸின் பிரதர்னு
சொன்னா எப்படி..?

( இங்கே " கஸின் பிரதர் " சொல்லகூடாது..
" கஸின்னு " மட்டும் தான் சொல்லணும்னு
யாரும் காமெண்ட் போடாதீங்க..
இது ஒரு Rhyming-க்காக.. )

வெங்கட் said...

@ VKS Members..,

ரசிகனை எங்கே காணோம்னு
தேடாதீங்க...

அவர் எங்க பாதுகாப்புல
பத்திரமா இருக்கார்..

டேய் மாயாண்டி., மொட்டை
இவரை நல்லா
பாத்துக்கோங்கடா..

ஹா., ஹா., ஹா..!!
( வில்லன் சிரிப்பு )

GSV said...

//சே..!! சே..!!

நான் தான் என்னோட போன
பதிவு Comment Section-லயே
சொல்லி இருந்தேனே//


என்னக்கு என்னமோ இரண்டு பதிவையும் வெட்டுல கான்பித்து பெர்மிச்சியன் வாங்கின அப்பறமா போட்ட மாதிரியே இருக்கு.... நாங்க இன்னும் அங்கிள் ஆகல அதனால இந்த அறிவு கம்மிதான்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஹிஹி ஹி வெங்கட் மீசைல மண்ணே இல்ல எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹிஹி ஹி வெங்கட் மீசைல மண்ணே இல்ல எல்லாரும் நல்லா பார்த்துக்கோங்க....//

அவர் நேத்துதான் மீசைய எடுத்தார். அப்புறம் எப்படி ஓட்டும்..

halim said...

/ரசிகனை எங்கே காணோம்னு
தேடாதீங்க...

அவர் எங்க பாதுகாப்புல
பத்திரமா இருக்கார்..

டேய் மாயாண்டி., மொட்டை
இவரை நல்லா
பாத்துக்கோங்கடா..

ஹா., ஹா., ஹா..!!
( வில்லன் சிரிப்பு \
epdidhaan neenga villan maari sirichaalum....joker maaridhaan irukeenga...

வெங்கட் said...

@ GSV.,

// என்னக்கு என்னமோ இரண்டு பதிவையும்
வெட்டுல கான்பித்து பெர்மிச்சியன் வாங்கின
அப்பறமா போட்ட மாதிரியே இருக்கு. //

உஷ்..!! சத்தம் போட்டு சொல்லாதீங்க..
எதுவா இருந்தாலும் நாம
பேசி தீர்த்துக்கலாம்..!!

சேலம் தேவா said...

நீங்க உண்மையிலேயே யாருக்கு support பண்றீங்க?நீங்கநல்லவரா?கெட்டவரா?

ரசிகன் said...

கறுப்பு coat போடல..
Back groundல Helicopter இல்ல...
இருந்தாலும் சொல்றேன்...
I'm Back... !!

ஒரு ரெண்டு நாள் ஊரில் தங்கி,
விழாவை சிறப்பிச்சிட்டு வரலாம்னா..
அதுக்குள்ள என்னா Build up...


ஆமா .. ஒருத்தரே 2 பக்கமும்
goal போடுற இந்த புது ஆட்டம்,
எப்ப start ஆச்சி...
ஒலிம்பிக்ல சேத்துட்டாங்களா இல்லயா..??

மாயாண்டி தாத்தா.., மொட்டை தாத்தா...
உங்களை Next meet பண்ணுறேன்..
(பின்ன.. இவங்க ரெண்டு பேரும்
நம்பியார் தாத்தா கிட்ட work
பண்ணிட்டிருந்து தலைவருக்கு பயந்து
தப்பிச்சி ஓடினவங்க தானே..
Terrorக்கு companions
வேணுமேன்னு சேத்துகிட்டீங்களா?)

வெங்கட் said...

@ ரசிகன்.,

1. இனிமே வெங்கட்டை கலாய்க்க
மாட்டேன்..

2. VKS -ஐ உடைக்க முழுமூச்சா
பாடுபடுவேன்.

இந்த மாதிரி 10 விஷயங்கள்
அடங்கிய ஒரு Agreement-ல
என்கிட்ட நீங்க Sign பண்ணினீங்களே...
அதையெல்லாம் இந்த நேரத்தில
சொல்ல வேணாமா..??

ஓகே..!!

ஒரு சின்ன விஷயம் என்னான்னா..
நீங்க இல்லைன்னா VKS
வெறும் டம்மி பீசு..

Actually நீங்க தான் VKS
தலைமை பதவிக்கு
தகுதியான ஆளு...

ரசிகன் said...

Very Sorry..
தலைவர் பதவிக்கு
Most eligible Candidate
நீங்க இருந்தும்,
அனுவை தலைமை தாங்க வச்சி
அழகு பாக்குறீங்க..
அப்படி இருக்க..
நான் எப்படி..??

பேசாம VAKS ன்னு தனி கட்சி
(வெங்கட்டை அவ்வப்போது
மட்டும் கலாய்ப்போர் சங்கம்)
ஆரம்பிச்சிடலாமான்னு தீவிரமா
யோசிச்சிடிருக்கேன்..
ஏன்னா, உங்களை நீங்களே
படு பயங்கரமா கலாய்ச்சிக்கும் போது,
உங்களை பாத்தா பாவமா இருக்கு..
வெந்த புண்ணுல வேலை
பாய்ச்ச மனசு வரமாட்டேங்குது..

வெங்கட் said...

@ ரசிகன்.,

அப்ப எல்லாம் நம்ம Agreement படி
தான் நடக்குது..

Very Good....!!

// 1. இனிமே வெங்கட்டை கலாய்க்க
மாட்டேன்.. //

இதுக்கு

// உங்களை பாத்தா பாவமா இருக்கு..
வெந்த புண்ணுல வேலை
பாய்ச்ச மனசு வரமாட்டேங்குது. //

இது OK..


// 2. VKS -ஐ உடைக்க முழுமூச்சா
பாடுபடுவேன். //

இதுக்கு

// பேசாம VAKS ன்னு தனி கட்சி
(வெங்கட்டை அவ்வப்போது
மட்டும் கலாய்ப்போர் சங்கம்)
ஆரம்பிச்சிடலாமான்னு தீவிரமா
யோசிச்சிடிருக்கேன்.. //

இது OK..

( Mind Voice.. )

சபாஷ்டா வெங்கிட்டு..!!
பல அரசியல் ராஜதந்திரங்களை
கரைத்து குடித்திருக்கிறாயடா நீ..!!

புலிகுட்டி said...

நீங்கள் என்ன சமதானம் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.வீட்டில் அடி வாங்கினது உன்மைதானே?.