சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

15 January 2010

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1




முன்குறிப்பு : இரண்டாம் வகுப்பு படிக்கும்
என் மகன் பள்ளி சுதந்திர தின விழாவில்
பேசியது..!

தலைப்பு : நமது இந்தியா..!

நம்ம நாட்டுக்கு சொந்தமா
ஒரு கொடி பறக்குது.,
சுதந்திரமனா அது மட்டும் தானா..?

சுதந்திரத்துக்கு அப்புறம் பாகிஸ்தான்.,
ஆப்கானிஸ்தான், இலங்கை., மியன்மர்
இந்த நாடுங்க எல்லாம்
தட்டு தடுமாறி.,
தடம் மாறி போயிடுச்சி.,

ஆனா.., 62 வருஷமா நாம மட்டும்
ஸ்டெடியா இருக்கோம்.
ஏன்னா.,

" நம்ம வழி., தனி வழி..! "

வல்லரசுகளே ஆச்சரியப்படும்
நல்லரசு நம்ம இந்தியா..!

நிலாவ காட்டி சாப்பிட்டோம் -
அது அந்த காலம்...,
நிலாவுக்கே போயி சாப்பிடுவோம் -
இது இந்த காலம்.

இந்த வளர்ச்சி - சுதந்திரம் நமக்கு 
தந்தது.

சுதந்திர தினத்தை இப்பல்லாம்
யார் கொண்டாடுறா.?

அரசு கொண்டாடுது..,
ஸ்கூல்ல நாம கொண்டாடுறோம்..!
மத்தவங்கல்லாம் என்ன பண்றாங்க.?

ஒரு ரூபாய்க்கு கொடியை வாங்கி
சட்டைல குத்திக்கறாங்க.,
அதையும் பல பேர் தலைகீழா
குத்திக்கறாங்க.,

ஆபீசுக்கு லீவ் விடறாங்க.,

தலைவர்கள் அறிக்கை விடறாங்க.,

நடிகர்கள் பேட்டி கொடுக்கறாங்க.,

டிவில புது படம் போடறாங்க..!

அவ்ளோதான்...,

மொத்தத்துல சுதந்திர தினத்தை
திருவிழா மாதிரி கொண்டாடணும் - ஆனா
திரும்பிகூட பார்க்கறதில்ல நாம..

" என்ன கொடுமை சார் இது...! "

சுதந்திர தினம் அன்னிக்கு
நம்ம சட்டைல இருக்கிற தேசியகொடி
அடுத்த நாள் என்னாவுது..?

நம்ம கொடிக்கு ஒரே ஒரு நாள்தான் மதிப்பா.?

" கோடு எங்கே வேணா போடலாம்..- ஆனா
ரோடு வீட்டுக்கு வெளியில தான் போட முடியும்..! "

அதே மாதிரி
New Year., Friendship Day இதெல்லாம்
யார் வேணா கொண்டாடலாம் - ஆனா
நம்ம சுதந்திர தினத்தை
நாம தானே கொண்டாடணும்॥!?

" கூட்டி கழிச்சி பாருங்க
கணக்கு சரியா வரும்..! "

வருஷம் தவறாம் சுதந்திர தினம்
கொண்டாடுபவர்களே..!
இனியாவது தினங்களை விட்டு
சுதந்திரத்தை கொண்டாடுங்கள்.

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லுறேன்..
பஞ்ச் டயலாக்கெல்லாம் கடைசிலதான்
சொல்லணும்..

" இந்தியாவ நேசிங்க..,
அதை மட்டுமே யோசிங்க..! "

ஜெய் ஹிந்த்..!
பின் குறிப்பு : பேச்சில் நிறைய நெகடிவ்
விஷயங்கள் இருப்பதாக கூறி 1st Prize 
மறுக்கப்பட்டு 2nd Prize தான் தரப்பட்டது

இது மனதுக்கு சற்று வருத்தமாகத்தான்
இருந்தது.

நீங்க என்ன நினைக்கிறீங்க.?

டிஸ்கி : மேலும் சில பேச்சு போட்டிகள்..

பேச்சுப்போட்டி - 2
பேச்சுப்போட்டி - 3
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
.

3 Comments:

Anonymous said...

everything fact...always facts have bitter taste...
சுதந்திரத்தை கொண்டாடுங்கள்..
we have a long way to go... wen equality is given to all kind of people...

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

இரண்டாம் வகுப்பில் படிக்கும் பையனுக்கு இது அதிகம் தானே ! எழுதிக் கொடுத்து தயார் செய்வது சாதாரணமாக இப்படி இருக்காது. நமது கருத்தினை அவன் மீது ஏன் திணிக்க வேண்டும். பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இப்படி எல்லாம் பேசி விட்டு அதற்கு பரிசும் எதிர் பார்ப்பது சரியா ?

இருப்பினும் ஏழு வயதுப் பையன் இதை ஏற்ற இறக்கங்களோடு - தைரியமாக - அழகு தமிழில் - நகைச்சுவையுடன் - பாடி லேங்குவேஜும் சேர்த்து - கரகோஷம் எழ - பேசும்போது ( என் கற்பனை சரிதானே )- அவனுக்கு தனியாக ஒரு சிறப்புப் பரிசு கொடுக்கலாம் -

மகனுக்கு நல்வாழ்த்துகள் வெங்கட்

வெங்கட் said...

சீனா சார்..,
நடுவராக வந்த இரண்டு
ஆசிரியைகளும் முதல் பரிசுக்கு
என் மகனை
தேர்தெடுத்துவிட்டார்கள்.,

பிறகு Principal Madam
கேட்டுவிட்டு அவர்களும் ஓ.கே..,

கடைசியில்
Correspondent Madam தான்
Negative விஷயங்கள்
இருக்குன்னு சொல்லி.,
இவனுக்கு இரண்டாம் பரிசு
கொடுக்க சொன்னது..

அதுதான் வருத்தமே..!