சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 May 2010

நானும் என் விசிறிகளும் ( இது " த்ரீ மச் " )


















நான் Blog எழுத ஆரம்பிச்சதுக்கு
பிறகு போன வாரம் தான்
ஒரு Function-க்கு போனேன்..

அங்கே...

1.அவ்ளோ கூட்டத்திலயும்
நாலு பேர் என்னை
அடையாளம் கண்டுகிட்டாங்க..
( என் சகலை, மச்சான்,
மாமனார், மாமியார் )

2. ஒரு பொண்ணு எனக்கு
ரோஜா பூ குடுத்திச்சி..
( எனக்கு மட்டுமா குடுத்திச்சி.,
அங்கே இருந்த எல்லார்க்கும்
தான் குடுத்திச்சி..)

3.ரெண்டு பேர் என் Blog Address
எழுதி வாங்கிக்கிட்டாங்க..
( எங்கே வாங்கினாங்க..!
அவங்கள இழுத்து வெச்சி.,
எழுதி குடுக்கறதுக்குள்ள நான்
பட்ட கஷ்டம்..! அப்பப்பா...!! )

4.அங்கே ஒரு பொண்ணு
அடிக்கடி என்னை திரும்பி
பார்த்திட்டே இருந்தாங்க..
( என் Wife-தான் அது.,
நான் இருக்கேனா., இல்ல
Escape ஆயிட்டேனான்னு
ஒரு Checking. )

5.என்னை மட்டும் விருந்துல
Special-ஆ கவனிச்சாங்க..
( மத்தவங்க இலையில
2 இட்லி தான் இருந்திச்சி.,
எனக்கு மட்டும் 3 )

6.எப்படிங்க உங்களால முடியுதுன்னு
ஒருத்தர் கேட்டார்..
( ஏன்னா.., இன்னொரு இட்லி
கிடைக்குமான்னு அவர்கிட்டதான்
நான் கேட்டேன்..)

7.Function-ல இருக்கும் போதுகூட
என் ரசிகைகிட்ட இருந்து போன்..
( சார்., ICICI Bank-ல இருந்து பேசறோம்..,
பர்சனல் லோன் வேணுமா சார்..?)

8.ஒரு Couple என்கூட நின்னு
போட்டோ பிடிச்சிக்கிட்டாங்க..
( ஹி., ஹி.., மாப்பிள்ளையும்.,
பொண்ணும் தான் )


பின் குறிப்பு :
பொறுங்க..!! பொறுங்க..!!
வாழ்க்கையில Control தான்
ரொம்ப முக்கியம்..

பொங்கறதுக்கு முன்னாடி
Ctrl+A அடிச்சி மறுபடியும்
முதல்ல இருந்து பாருங்க..



ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருள்.APJ )
தண்ணில இருந்து கரண்ட் எடுக்கும்
போது., கரண்ட்ல இருந்து தண்ணி
எடுக்க முடியாதா..?

ஓ.. தாராளமா...
ஒரு கரண்ட் வயரை பிடிச்சி
Try பண்ணி பாருங்களேன்..
தண்ணி வருதோ இல்லையோ.,
Atleast ஜன்னியாவது வரும்..!!

" சிகரெட்ல இருந்து புகை வரும்.,
புகைல இருந்து சிகரெட் வருமா..?? "


இன்று ஒரு தகவல் :
---------------------

நீங்க எப்பவும் உண்மைய தான்
சொல்லணும்..,
அதுக்காக எல்லா உண்மையையும்
சொல்லிடக்கூடாது..!!!
.
.

33 Comments:

Chitra said...

உண்மையை சொல்றேன்: அந்த கரண்ட் கம்பியில் தண்ணி வருதான்னு பார்த்து சொல்ல வெங்கட் போன போது, கன்ட்ரோல் இல்லாமல் போய், இந்த இடுகை போட்டு........ அவ்வ்வ்......!

அருண் பிரசாத் said...

ஏனுங்க வெங்கட், கரண்ட் அ மோட்டார் பம்ப் ல போட்டு தண்ணி எடுக்கலாமுங்க!

அனு said...
















ஹிஹி... Alt+F4 போட்டு என் கமெண்ட்-ட தெரிஞ்சுக்கோங்க...

Anonymous said...

இப்படி முட்டாளாக்கிட்டீங்களே...எத்தனை நாள் கங்கனம் கட்டினீங்க... அடிச்சிட்டு ஒன்னும் இல்லைனு வேறு பக்கம்சென்றதுதான நான் செய்த பிழை.இப்ப பார்த்தா என்னைபபார்த்து பரிதாமமாக அந்த வெள்ளை எழுத்துக்கள் முழிக்கின்றன...ச்ச...இப்படியும்.....வெங்கட்டிடம் ஜாக்கிறதை...மனம் சொல்கிறது...பொ

ஜெகன் said...

@அனு
//..Alt+F4 போட்டு என் கமெண்ட்-ட தெரிஞ்சுக்கோங்க..//

Already நிறைய பேர் உங்க கமெண்ட்டை அப்படி தான் "தெரிஞ்சு"க்கறாங்க.. சில பேர் CTRL+W கூட யூஸ் பண்றதா கேள்விப்பட்டேன்.

அனு said...

@ஜெகன்

ஒண்ணு கரைக்கு இந்த பக்கம் (என்னை மாதிரி) இருக்கனும் இல்ல அந்தப் பக்கம் இருக்கனும்..

உங்களை மாதிரி நடுல இருந்தா பிரச்சனை தாங்க..

(ஏதாவது புரிஞ்சதா?? mostly, புரிஞ்சிருக்காது.. அது தான் எனக்கு வேணும்..)

Keerthi Kumar said...

@அணு

இப்படி எல்லாம் comment அடிக்காதீங்க. என்னோட நண்பன் ஒருத்தன் நீங்க சொன்னத கேட்டு அப்படியே follow பண்ணிக்கிட்டு இருக்கான். அடுத்த
comment எதுவுமே அவனால படிக்க முடியல (இதையும் சேர்த்துதான்]

ஜெகன் said...

@அனு
//கரைக்கு இந்த பக்கம்.. அந்தப் பக்கம்.. ஏதாவது புரிஞ்சதா.. //

கறை நல்லதுன்னு சொல்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன்.. இப்படியெல்லாம் கஷ்டமா கேள்வி கேக்காதீங்க.. நான் non-புத்திசாலி :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Alt + F4 or Restart press panni paarungappa....

ரசிகன் said...

உங்க blog படிச்சா கவலைகள் எல்லம் deinstall ஆகி Happiness boot ஆகிடுது...

அப்பப்போ upgrade பண்ணி uninterrupted supply குடுங்க..

@ அருண் பிரசாத்
Motorம் currentம் மட்டும் இருந்தா பத்தாது, தண்ணியும் இருக்கணும்.
Motor தண்ணிய ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு Move பண்ண மட்டும்தான்.

தண்ணி இல்லாத இடத்துல Motor போட்டா... வெறும் காத்து தான் வரும்..
கொஞ்ச நேரம் கழிச்சி டமார்ன்னு சத்தம் வரும்..!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

முடியலடா சாமி.... முடியல...

வெங்கட் said...

@ சித்ரா..,

// கரண்ட் கம்பியில் தண்ணி
வருதான்னு பார்த்து சொல்ல
வெங்கட் போன போது, //

எங்க ஊரு கரண்ட் கம்பியில
கரண்டே ஒழுங்கா வர்றதில்ல..
இதுல எங்கேயிருந்து தண்ணி
வருதான்னு போயி பார்க்கிறது..!

வெங்கட் said...

@ அருண்.,

// கரண்ட்-அ மோட்டார் பம்ப்ல
போட்டு தண்ணி எடுக்கலாமுங்க! //

நல்ல சிந்தனை..,
நான் சொல்ல வேண்டிய
பதிலை ரசிகன் சொல்லிட்டார்..

வெங்கட் said...

@ அனு & ஜெகன்..,

// Alt+F4 போட்டு என் கமெண்ட்-ட
தெரிஞ்சுக்கோங்க... //

// சில பேர் CTRL+W கூட யூஸ்
பண்றதா கேள்விப்பட்டேன். //

இங்கென்னா கம்பியூட்டர் கோச்சிங்
கிளாஸா நடக்குது..?

வெங்கட் said...

@ Anony ( பொன் )

// இப்படி முட்டாளாக்கிட்டீங்களே...
எத்தனை நாள் கங்கனம் கட்டினீங்க...//

எனக்கு இந்த ஐடியாவை ( Ctrl + A )
கொடுத்தது என நண்பன் ஜெகன்..,
எதாவது திட்டணும்னா அவனையே
திட்டிக்கோங்க..
நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க
மாட்டேன்..

வெங்கட் said...

@ அனு.,

// ஒண்ணு கரைக்கு இந்த பக்கம் (என்னை மாதிரி)
இருக்கனும் இல்ல அந்தப் பக்கம் இருக்கனும்..
உங்களை மாதிரி நடுல இருந்தா பிரச்சனை தாங்க.. //

நிஜமாவே இது ஜெகனுக்கு புரியல..
போன் பண்ணி என்னை விளக்கம்
கேட்டான்..

இதோ அதுக்கான விளக்கம்..

ஒண்ணு கரைக்கு இந்த பக்கம்
(என்னை மாதிரி) = புத்திசாலி

இல்ல அந்தப் பக்கம்
இருக்கனும் = முழு _________

உங்களை மாதிரி நடுல
இருந்தா = அரை __________

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// Alt + F4 or Restart press panni
paarungappa.... //

நீங்களுமா..?

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உங்க blog படிச்சா கவலைகள்
எல்லம் deinstall ஆகி Happiness boot ஆகிடுது...
அப்பப்போ upgrade பண்ணி
uninterrupted supply குடுங்க..//

இது நிஜம்தானே..?!
இதுல உள்குத்து எதுவும் இல்லியே..?!
அப்படின்னா சந்தோஷம்..

வெங்கட் said...

@ கீர்த்தி..,

// அனு.., இப்படி எல்லாம் comment அடிக்காதீங்க.
என்னோட நண்பன் ஒருத்தன் நீங்க சொன்னத
கேட்டு அப்படியே follow பண்ணிக்கிட்டு இருக்கான்.//

யாருப்பா அந்த அதி புத்திசாலி
Friend..?
எப்படியோ Alt + F4 அடிச்சா
என்ன ஆகும்னு இப்ப
தெரிஞ்சிக்கிட்டாருல்ல..!!

வெங்கட் said...

@ தங்கமணி..,

// முடியலடா சாமி.... முடியல...//

ஏனுங்க.., இதுக்கே முடியலைன்னு
சொன்னா எப்படி..?
இன்னும் எவ்வளவோ இருக்கே..
மனசை திடப்படுத்திக்கோங்க..!!

மாலா said...

( கரகாட்டக்காரன் கவுண்டர் ஸ்டைலில்
படிக்கவும்.. )

மாலா : என்ன இது..?

வெங்கட் : ஒரு விளம்பரம்..!

மாலா : உங்க Blog-க்கு வர்றதே
அஞ்சி - ஆறு Visiters தான்..
அதுக்கு இந்த விளம்பரம் தேவையா..?

வெங்கட் said...

@ மாலா.,

என்னாது அஞ்சு - ஆறு பேரா..?
யார் அந்த ஆறாவது ஆள்..??

Anonymous said...

//நீங்க எப்பவும் உண்மைய தான்
சொல்லணும்..,
அதுக்காக எல்லா உண்மையையும்
சொல்லிடக்கூடாது..!!!
//

இது ஒரு அமெரிக்க கவிதையின் தழுவல்.

கவிஞர் பெயர்:

எமில் டிக்கின்ஸ்.

கவிதை

Tell all truth
But tell it slant.

ஒரு நீண்ட கவிதையில் முதலிரண்டு வரிகள்.

உங்க்ளுக்கு இதெல்லாம் தெரியாது. எனவே,

Great men think alike

என்று சொல்லிவிடலாம். ஆனால், மற்றவர் பெண்.

எப்படி சொல்வது:

A great man and a great woman think alike

என்று சொல்லலாமா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

விசிறியிலிருந்து காற்று வரும். காற்றிலிருந்து விசிறி வருமா... :)).

நல்லாருக்காங்களா உங்க விசிறிகள்.

வெங்கட் said...

@ ஜோ.,

// இது ஒரு அமெரிக்க கவிதையின் தழுவல்.//

நாங்க English கவிதையெல்லாம்
படிக்கறதில்லைங்க..
ஏன்னா.., எங்களுக்கு புரியற
மாதிரி எழுத அவங்களுக்கு
தெரியறதில்லைங்க..

ஹி., ஹி., ஹி.,

" இன்று ஒரு தகவல்" ல வர்ற
அந்த மேட்டர் நான் ஒரு புக்ல
படிச்சதுங்க..
ஒருவேளை அதை எழுதினவர்
அந்த கவிதயை படிச்சிருக்கலாம்க..!!

வெங்கட் said...

@ ஸ்டார்ஜன்..

// நல்லாருக்காங்களா உங்க விசிறிகள்.//

ஹி., ஹி., ஹி..,
அதான் அவங்க போட்டோவை
இந்த பதிவுல போட்டிருக்கேனே
கவனிக்கலையா..?

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

யப்பா - எப்பிடிப்பா எழுதறே - உனக்கு இவ்ளோ விசிறிகளா - இருந்தும் உனக்கு வேர்க்குதே ! ம்ம்ம்

ஆமா அந்த நாலு பேர்ல அப்பா அம்மா அண்ணன் தம்பி அக்கா தங்கச்சின்னு யாருமே இல்லையா

அடிக்கடி பாக்கற பொண்ண நீயும் அடிக்கடி பாத்தேல்ல - சரி சரி - மனைவின்னாலும் பாக்கலாம்

கூட நின்னு போட்டோ எடுத்தது சூப்பர்யா

எல்லா உண்மையையும் சொல்லிடக் கூடாது - சூப்பர் தத்துவம்யா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

வெங்கட் said...

@ சீனா சார்.,

// நாலு பேர்ல அப்பா அம்மா அண்ணன்
தம்பி அக்கா யாருமே இல்லையா //

அது எங்க மாமனார் சொந்தக்காரங்க
கல்யாணம் சார்..
எங்க வீட்ல இருந்து நாங்க ரெண்டு
பேர் மட்டும் தான் போயிருந்தோம்

Keerthi Kumar said...

@ Jo Amalan Rayen Fernando:

Great people think alike ன்னு சொல்லிக்கலாம்

Prasanna said...

soooooppar :)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... முதல் முறை உங்களை வாசிக்கிறேன். நல்ல நகைச்சுவை. ரசித்தேன்.

வெங்கட் said...

Thanks to..

@ பிரசன்னா.,

@ விக்னேஷ்வரி

Gayathri said...

சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ.நல்ல கற்பனை