12 May 2010
Homework - தாங்க முடியல ..!!
" Madam.., வர வர Homework அதிகமா
குடுக்கறீங்க.. என் பையனால முடியல..! "
ஒவ்வொரு Teachers - Parents Meeting-லயும்.,
என் பையனோட Class Teacher கிட்ட
இப்படி தான் தவறாம சொல்லுவேன்..
( இந்த Meeting மாசம் ஒரு தடவை
நடக்கும்..! )
நான் அந்த Teacher-கிட்ட சொன்னது
உண்மைதான்..
என் பையன் Homework பண்ண 6 மணிக்கு
எடுத்து வெச்சா.. முடிக்க 9.30 மணி வரை
ஆகுது..
No விளையாட்டு.,
No கார்ட்டூன்..,
நானும் Complaint பண்ணி பண்ணி
சலிச்சி போயிட்டேன்..
அப்பதான் எனக்கு அந்த தகவல் தெரிஞ்சது..
1st Rank வாங்கற பையனுக்கு Homework
முழுசும் அவங்க அப்பாதான் எழுதி
தர்றார்னு..
அப்புறம்தான் நானே யோசிச்சி
ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன்..
முதல்ல Homework-ன்னா என்ன..?
வீட்டு வேலை தானே..!!
அப்ப அதை வீட்ல இருக்கிற யார்
வேணாலும் செய்யலாம்ல..!!
( ஆஹா.. என்ன ஒரு சிந்தனை..!! )
அதனால நானும் என் Wife-ம் ஒரு
Agreement போட்டுகிட்டோம்..
Homework எழுதறது - என் பொறுப்பு.,
( Maths தவிர )
பாடம் சொல்லி தர்றது - அவங்க பொறுப்பு..
( ஹி., ஹி., நான் சொல்லி குடுத்தா அவன்
Fail ஆயிடுவான்..)
இந்த Method-க்கு நல்ல Result.. அடுத்த
Exam-லயே என் பையன்கிட்ட
நல்ல முன்னேற்றம்..
அடுத்த Teachers - Parents Meeting...
இந்த தடவை நானு அதே Class Teacher கிட்ட...
" Madam.., வர வர Homework அதிகமா
குடுக்கறீங்க.. என்னால முடியல..! "
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( சரவணன்.B.S )
நீங்க வெளியே கிளம்பும் போது
பூனை குறுக்க போனா என்ன பண்ணுவீங்க..?
பூனை குறுக்க போனா எலிதான்
பயப்படணும்..,
புலி எதுக்குலே பயப்படணும்..?
இன்று ஒரு தகவல் :
---------------------
" தந்தை மகற்காற்றும் உதவி விடுமுறையில்
சந்தோஷ டூர் கூட்டிச்செலல் "
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
32 Comments:
//" Madam.., வர வர Homework
அதிகமா குடுக்கறீங்க..
என்னால முடியல..! "//
சூப்பர்
தந்தை மகற்காற்றும் உதவி விடுமுறையில்
சந்தோஷ டூர் கூட்டிச்செலல்
..... also, home-work ஒழுங்கா வீட்டில் செய்யல். ஹா,ஹா,ஹா,ஹா...
//" Madam.., வர வர Homework
அதிகமா குடுக்கறீங்க..
என்னால முடியல..! "//
உங்க பையன் maths ல மட்டும் நல்ல மார்க்குன்னு கேள்விப்பட்டேன்..
தமிழ் ப்ளாக் ல இங்கிலீஷ் ல பெயர் வைத்ததை எதிர்த்து போராடப் போறோம். அனு சீக்கிரம் சாப்டு வந்துங்க. நாம உண்ணாவிரதம் இருக்கலாம்.
@ To All.,
இதன் மூலம்
எல்லாருக்கும் சொல்லிக்கிறது
என்னான்னா...
இன்னிக்கு நம்ம Blog-ஐ
வலைசரத்துல
திரு. சேட்டைக்காரன்
ஆஹா.., ஓஹோன்னு புகழ்ந்து
எழுதி இருக்காரு..
நம்ப மாட்டீங்களே..!!
அப்ப போயி பாருங்கோ..
http://blogintamil.blogspot.com/2010/05/blog-post_6887.html
//இன்னிக்கு நம்ம Blog-ஐ வலைசரத்துல திரு. சேட்டைக்காரன் ஆஹா.., ஓஹோன்னு புகழ்ந்து எழுதி இருக்காரு..//
இப்படிதான் எங்க ஊர்ல ஒருத்தர் நான் ஒரு படத்துல நடிக்கிறேன்னு சொல்லி ஓவரா சீன் போட்டார். சரி வா படத்துக்கு போகலாம்னு அந்த படத்துக்கு போனோம். கேமரா அவரை தாண்டி போகும். ஒரு செகண்ட் தான் அந்த காட்சி வரும். அதுவும் கூட்டத்துல ஒரு ஆளா நிப்பார். அதுக்கு அவர் கொடுத்த பில்ட் அப் இருக்கே. யப்பா.
வெங்கட் நான் உங்களைபத்தி எதுவும் சொல்லலை. என்ன உங்களை பத்தி வலைசரத்துல திரு. சேட்டைக்காரன் ஆஹா.., ஓஹோன்னு புகழ்ந்து எழுதி இருக்காரா. இப்பவே பாக்குறேன்.
@ சித்ரா..,
// also, home-work ஒழுங்கா வீட்டில் செய்யல்.//
உங்க வீட்லயும் இப்படி தானே..?
ஹி., ஹி., ஹி..
மச்சான் நீங்க இந்த blog எழுதுறத விட home work எழுதுறது நல்லதுன்னு நெனைக்கிறேன்...
நீங்க மூளைய கசக்குறத விட என் மாப்பிள்ள home work எழுதி கொஞ்சம் மூளைய வளத்துக்கலாமே..
ஆமா உங்களுக்கு home work எழுதவே நேரம் சரியா போய்டும் இந்த கேப்லையும் blog எழுதுறிங்களே எப்படி அது...
//Homework எழுதறது - என் பொறுப்பு.,
( Maths தவிர )
பாடம் சொல்லி தர்றது - அவங்க பொறுப்பு..//
நல்ல வேளை.. பொறுப்பை மாத்தியிருந்தீங்கன்னா, பையனோட எதிர்காலம் என்னத்துக்கு ஆகுறது.. இன்னும் ஹோம்வர்க்-கு மார்க் போடுற வழக்கம் வரல-ன்ற தைரியத்தில தானே அந்த department choose பண்ணினீங்க??
நாங்கல்லாம் homework பண்றதுக்கு யோசிச்சத விட, பண்ணாம போனா என்ன excuse குடுக்கலாம்னு தான் நிறைய யோசிச்சிருக்கோம்...
மறந்துடுச்சு, சைக்கிள் ரிப்பேர், deadline date ஞாபகம் இல்ல, காய்ச்சல், ஜுரம், தலைவலி, திருவிழா, லீவ்-ல இருந்தேன், புக் தொலைஞ்சு போச்சு... இந்த மாதிரி நிறைய இருக்கு..
எதுவும் workout ஆகாதுன்னு தொணிச்சுனா, bag-ஐ வேணும்னே ஸ்கூல்-லயே விட்டுட்டு வந்துடுறது... அடுத்த நாள் "bag-க மறந்து வச்சுட்டு போய்ட்டேன், மிஸ்.. ஹிஹி..."
எல்லா excuse-சுமே ஜுஜுபி மாதிரி தான் இருக்கும்.. ஆனா, எல்லாத்தையும் ஏற்ற இறக்கத்தோட டீச்சர் நம்புற மாதிரி சொல்றது ஒரு கலை.. வேணும்னா சொல்லுங்க.. வந்து க்ளாஸ் எடுக்குறேன்..
//பூனை குறுக்க போனா எலிதான்
பயப்படணும்..,
புலி எதுக்குலே பயப்படணும்..?//
மீண்டும் எழுத்து பிழை.. அது புலி இல்லைங்க "புளி"..
பாவங்க உங்க பையன்.. அவங்க டீச்சர்ஸ் "எக்ஸாம்ல ஒழுங்கா தானே எழுதுற.. ஹோம்வர்க்-ல மட்டும் ஏன் இவ்வளவு spelling mistake?"-னு கேட்டா என்ன பண்ணுவார்??
//அனு சீக்கிரம் சாப்டு வந்துங்க. நாம உண்ணாவிரதம் இருக்கலாம்.//
கொஞ்ச நாள் டயட்-ல இருக்கலாம்னு பாத்தேன்... உண்ணாவிரதம் அது இதுன்னு சொல்லி எல்லாத்தையும் கெடுத்துட்டீங்களே... சரி, ரெண்டு ப்ளேட் சிக்கன் பிரியாணி சொல்லி வைங்க.. வேலைய முடிச்சுட்டு வந்து உண்ணாவிரதத்துல ஜாய்ன் பண்ணிக்கறேன்....
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// தமிழ் ப்ளாக் ல இங்கிலீஷ் ல பெயர் வைத்ததை எதிர்த்து போராடப் போறோம். அனு சீக்கிரம் சாப்டு வந்துங்க. நாம உண்ணாவிரதம் இருக்கலாம்.//
ப்ளாக் - வலை பதிவு
இங்கிலீஷ் - ஆங்கிலம்
இப்படி எல்லாம் எழுதி இருந்தீங்கன்னா உங்க போராட்டதுல நானும் பங்கேற்றிருப்பேன்
@ அணு - Diet, Plate, Chicken, நீங்களும் காலி
அப்போ இனி வீட்டு வேலை தந்தா யோசிக்காம வாங்கிட்டு வரச்சொல்லணும் என் சிநேகிதியின் பிள்ளைகளை.அப்பிடித்தானே வெங்கட் !
@ அனு..,
// ஆனா, எல்லாத்தையும் ஏற்ற இறக்கத்தோட
டீச்சர் நம்புற மாதிரி சொல்றது ஒரு கலை..
வேணும்னா சொல்லுங்க.. வந்து க்ளாஸ் எடுக்குறேன்.. //
வேணாங்க..
என் பையன் வருங்காலத்துல
டாக்டர் ஆகாட்டியும் பரவாயில்ல..
Atleast ஒரு கம்பவுண்டராவாவது
ஆகட்டும்..
அதையும் கெடுத்து விட்டுடாதீங்க..
அப்புறம்.,
இப்ப உங்கப்பா Feel பண்ணிட்டு
இருக்கிற மாதிரி
Future-ல நானும் Feel பண்ண
வேண்டி இருக்கும்..
// மீண்டும் எழுத்து பிழை..
அது புலி இல்லைங்க "புளி".. //
ஹி.., ஹி.., ஹி..
நான் என்னை பத்தி பேசுனா..
நீங்க உங்களை பத்தி பேசுறீங்க..
@ ரமேஷ்..,
// தமிழ் ப்ளாக் ல இங்கிலீஷ் ல
பெயர் வைத்ததை எதிர்த்து
போராடப் போறோம். //
என்னே உங்க தமிழ் ஆர்வம்..?
இன்னில இருந்து உங்க Blog
Enter ஆகும்போது
Username., Password கேக்கும்ல
அங்கே தமிழ்லயே Type அடிச்சி
Enter ஆயிடுங்க..
ஒருவேளை அப்படி Enter
ஆகமுடியலைன்னா..?
மக்கள் தப்பிச்சுக்குவாங்க..
அவ்வளவுதான்..
@ கீர்த்தி..,
// ப்ளாக் - வலை பதிவு
இங்கிலீஷ் - ஆங்கிலம் //
Super..
நல்லவேளை ரமேஷ் அப்படி
எழுதலைன்னா நீங்களும்
அங்கே ஐக்கியமாயிருப்பீங்களே..
சப்போர்ட்டுக்கு ஒரு ஆளாவது
வேணும்ல..
( நான் ஒருத்தனே எத்தனை அடி
வாங்கறது..??!! )
@ கிரிஷ்.,
// நீங்க மூளைய கசக்குறத விட
என் மாப்பிள்ள home work எழுதி
கொஞ்சம் மூளைய வளத்துக்கலாமே..//
இங்கே பல பேரோட சந்தேகத்தை
நீ Clear பண்ணிட்ட..,
Thanks பாவா..!
ஹி., ஹி., ஹி..
எப்படியோ எனக்கு மூளை
இருக்குன்னு ஒத்துகிட்டல்ல...
@ ஹேமா..,
// இனி வீட்டு வேலை தந்தா
யோசிக்காம வாங்கிட்டு வரச்சொல்லணும்
என் சிநேகிதியின் பிள்ளைகளை. //
ம்ம்.. இதெல்லாம் ஆம்பளைங்க Dept..
உங்க சினேகிதியின் கணவர் இதை
முடிவு பண்ணனும்..
என்ன இருந்தாலும்..
ஒரு ஆம்பளையோட கஷ்டம்
இன்னொரு ஆம்பளைக்கு தான்
புரியும் பெரியவங்க சொல்லுறது
சரியாதான் இருக்கு..!!
@Keerthi..
//@ அணு - Diet, Plate, Chicken, நீங்களும் காலி//
என்னாது???
இதை எல்லாம் தமிழ்ல இருந்து தூக்கிட்டாங்களா?? எப்போலருந்து??
@Keerthi Kumar
அது வலை பதிவு இல்ல நைனா 'வலைப் பதிவு'...
அணு இல்ல 'அனு'...
'த மாரி தமிள ராங்கு ராங்கா பேஸ்றதுக்கு பதில் எங்க தாணையத் தல்வி அனு மற்றும் தங்க தலிவர் ரமேஸ் ஸ்டைலா பேஸ்ற தமிள்க்கு இன்னா கொர்ச்சல்?? ...
தம்பி கீர்த்தி பாவா, உங்கிட்டக்க ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்.. எங்க தலிவி அனு கிட்டக்க வச்சுக்காத.. அவங்க மின்னாடி நீ ஒரு பச்சா (பாச்சா அல்ல).. இத்த ரோசனைல வச்சிக்க.. பிரிய்தா??
//" Madam.., வர வர Homework
அதிகமா குடுக்கறீங்க..
என்னால முடியல..! "//
எங்களாலையும் முடியல.....
@அனு ரசிகன்
என்ன குறை சொல்லாதீங்க.... Google transliterate team என்ன குடுக்கரான்களோ அதை அப்படியே இங்குட்டு போட்டுர்றேன்.
//தம்பி கீர்த்தி பாவா//
இதுதான் பிரிய்யல அண்ணாத்தே!
//
//தம்பி கீர்த்தி பாவா//
இதுதான் பிரிய்யல அண்ணாத்தே!//
தம்பி கீர்த்தி பாவா,
நம்ம national pledge என்ன சொல்லுது?
"All Indians are my brothers and sisters (except one [two or more??], of course)"
அதனால, வெங்கட் எனக்கு அண்ணன் மாதிரி.. அப்போ கீர்த்தி எனக்கு பாவா முறை..
அதே லாஜிக் படி, தங்கச்சி (வெங்கட் மனைவி) எனக்கு தங்கச்சி மாதிரி.. அப்போ கீர்த்தி எனக்கு தம்பி முறை..
ரெண்டும் சேத்து "தம்பி கீர்த்தி பாவா".. என்ன, லாஜிக் சர்தானே??
@Keerthi Kumar
// Google transliterate team என்ன குடுக்கரான்களோ அதை அப்படியே இங்குட்டு போட்டுர்றேன்.//
அப்போ உங்களுக்கு Google transliterateல BackSpace, Context Menu லாம் தெரியாதா?
@அனு ரசிகன் ரசிகன்
நீங்க எனக்கு ரசிகனா? இல்ல, அனுவுக்கு டபுள் ரசிகனா.. கொஞ்சம் clarify பண்ணுங்க.. சங்கத்துல பிரச்சனை வந்துட கூடாது பாருங்க..
@வெங்கட்
இந்த அனு ரசிகன் ரசிகன் நான் இல்ல..
@அனு ரசிகன்
4 * (4 * 4) = 4 * 16
(LHS = RHS)
so, ரெண்டும் ஒன்னுதானே?
@அனு ரசிகம் ரசிகன்
ஆஹா...
இது படிச்ச பயபுள்ளயா இருக்கும் போலயே!!!
கணக்கப் பாத்தா எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வரும்... அதனால நான் எஸ்கேப்பு...
@ அனு ரசிகன் & அனு ரசிகன் ரசிகன்..
// நீங்க எனக்கு ரசிகனா..? இல்ல,
அனுவுக்கு டபுள் ரசிகனா..
கொஞ்சம் clarify பண்ணுங்க..
சங்கத்துல பிரச்சனை வந்துட கூடாது பாருங்க.. //
எதுக்குப்பா இப்ப அடிச்சிக்கறீங்க..?
சுபாஷ் சந்திரபோஸ் சண்டைக்கு
ஆள் பத்தலைன்னு கூப்பிட்டாரே..,
அப்ப நீங்க போயிருக்கலாம்ல..
ஓ இப்புடி ஒரு வழியிருக்கா பசங்க ஹோம் வொர்க் செய்ய????கலக்கல்ஸ்!
//சுபாஷ் சந்திரபோஸ் சண்டைக்கு
ஆள் பத்தலைன்னு கூப்பிட்டாரே..,
அப்ப நீங்க போயிருக்கலாம்ல..//
Sorry சார், அதெல்லாம் உங்க டைம்.. அப்ப நாங்க பிறக்கவே இல்ல..
அன்பின் வெங்கட்
வீட்டுப்பாடம் எழுதுவது - செய்வது எல்லாம் கடினம் தான் - என்ன செய்வது - ம்ம்ம்ம் - ந்லலாத்தான் இருக்கு இடுகை - ஹாய் வெங்கட் - தகவல் - நல்லாவே இருக்கு
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
ஆமா சேட்டைக்காரன் எழுதி யாச்சு வெங்கட் பத்தி - வெங்கட் எப்ப எழுதறதாம் ?????
Post a Comment