சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 May 2010

மாயவலை..!!















( படித்ததில் பிடித்தது...! )

பக்கத்து வீட்டுக்காரன்
பெயர் தெரியாவிட்டாலும்
அமெரிக்க நண்பனின்
காலை டிபன் பற்றி
விசாரிக்க வசதியிருக்கிறது..!

வாசலில் கதறும்
பிச்சைக்காரனிடம்
இறுகும் மனம்.,
இ-மெயிலில் தெரியும்
சோமாலியா மக்களுக்காய்
இளகுகிறது..!!

சகோதரனிடம் விளையாட
சண்டையிடும் சிறுவனால்.,
முகம் தெரியாத
யாரோ ஒருவருடன்
இன்டர்நெட்டில்
விளையாட முடிகிறது..!!

கடவுளே..!!
தூரங்களை
அருகில் கொண்டுவரும்
மாயையில்.,
கொஞ்சம் கொஞ்சமாக
தொலைந்து போய்விடுவானோ
மனிதன்..??!!


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

(மேனகா மணிவண்னன்., மல்லசமுத்திரம் )
அண்ணா., நீங்க நல்லவரா.? கெட்டவரா.?

என் Friend மணிவண்ணனை
உங்களுக்கு கல்யாணம் பண்ணி
வெச்சிட்டேங்கறதுக்காக
என்னை பார்த்து இப்படியெல்லாமா
கேள்வி கேக்கறது..?


இன்று ஒரு தகவல் :

---------------------

கோவப்படறது ரொம்ப ஈஸி..,
ஆனா..,
சரியான காரணத்துக்காக.,
சரியான ஆள் மேல.,
சரியான நேரத்துல கோவப்படுறது..
அவ்வளவு ஈஸியில்ல..
.
.

25 Comments:

Chitra said...

உங்களை 'மாம்பழம்" என்று கூப்பிட்டால், உங்களுக்கு கோபம் வராது என்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா....

முனைவர் இரா.குணசீலன் said...

இன்று ஒரு தகவல் :
---------------------

கோவப்படறது ரொம்ப ஈஸி..,
ஆனா..,
சரியான காரணத்துக்காக.,
சரியான ஆள் மேல.,
சரியான நேரத்துல கோவப்படுறது..
அவ்வளவு ஈஸியில்ல..


உண்மைதான்..

மங்குனி அமைச்சர் said...

//இன்று ஒரு தகவல் :
---------------------

கோவப்படறது ரொம்ப ஈஸி..,
ஆனா..,
சரியான காரணத்துக்காக.,
சரியான ஆள் மேல.,
சரியான நேரத்துல கோவப்படுறது..
அவ்வளவு ஈஸியில்ல..///

எனக்கு உங்க மேல கோபமே இல்ல
இம்மம்ம்மம்ம்ம்ம் .............கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

VELU.G said...

//கடவுளே..!!
தூரங்களை
அருகில் கொண்டுவரும்
மாயையில்.,
கொஞ்சம் கொஞ்சமாக
தொலைந்து போய்விடுவானோ
மனிதன்..??!!
//

அருமை

Anonymous said...

கடவுளே..!!
தூரங்களை
அருகில் கொண்டுவரும்
மாயையில்.,
கொஞ்சம் கொஞ்சமாக
தொலைந்து போய்விடுவானோ
மனிதன்..

உங்களின் ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது...நீங்கள் எழுதி இருக்கிற முன்றுமே உண்மை...சத்தியமான உண்மை...இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலை. சொந்தங்களைத் தேடுவோமோ இல்லையோ வெங்கட் என்ன பதிவு போட்டிருக்கிறார் என்றுத்தானே முதலில் தேட தோணுகிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@வெங்கட்
ஏன் கேள்வியை மாத்திட்டீங்க..

வெங்கட் said...

@ சித்ரா..,

// உங்களை 'மாம்பழம்" என்று கூப்பிட்டால்,
உங்களுக்கு கோபம் வராது என்கிறேன்.
ஹா,ஹா,ஹா,ஹா.... //

நல்லவேளை மாங்கான்னு
கூப்பிடாம போனீங்களே..!!

Ahamed irshad said...

//வாசலில் கதறும்
பிச்சைக்காரனிடம்
இறுகும் மனம்.,
இ-மெயிலில் தெரியும்
சோமாலியா மக்களுக்காய்
இளகுகிறது..!!///

சோமாலியா இல்லை, நைஜிரியா... எவ்ளோ சொல்லிக்கொடுத்தாலும் மண்டையில ஏறவே மாட்டேங்குதே.. போப்பா போய் "வெயில்ல" முட்டிய போடு.. இதுக்கு பேசாம "ஆணியே புடுங்கியிருக்கலாம்"

வெங்கட் said...

@ குணசீலன்
ரொம்ப நன்றிங்க..

@ மங்குனி..,
ஏங்க என்மேல இவ்ளோ காண்டு..?

Krish said...

மச்சான் நீங்க சொல்ரது எல்லாம் உண்மை தான்... இத நாம சொல்லி புலம்ப தான் முடியும் மாத்த யாரலையும் முடியாது...

ஏன்ன இப்ப இது தான் ஒட்டு மொத்த உலகத்தோட கலாசாரமா மாரிடுச்சி...

இது இன்னும் மோசமாதான் போகுமே தவிர இத கட்டு படுத்த கூட முடியாத நெலமைல தான் இருக்கு.....

ஏன் நம்ம ரெண்டு பேரையும் எடுதுக்கோங்க இப்ப கூட பாருங்க நீங்க நம்ம ஊருல தான் இருக்கிங்க, ஆனா நம்ம தினமும் chat room'ல தான பேசிக்கிரோம்....

அனு said...

கலாய்க்க முடியாத மாதிரி ஒரு பதிவு போட்டுட்டீங்க.. என்ன பன்றது?? வேற வழி இல்ல.. பாராட்டி தான் ஆகனும்.. உண்மை நிலை இதுதான்.. நிறைய பேர், வீட்டில் செலவழிக்கும் நேரத்தை விட நெட்-டில் செலவழிக்கும் நேரம் அதிகம்.. அட்லீஸ்ட் நெட்-லயாவது ஒற்றுமையா வாழ்ந்தா சரி..

---------------------

//என் Friend மணிவண்ணனை
உங்களுக்கு கல்யாணம் பண்ணி
வெச்சிட்டேங்கறதுக்காக//

ஏற்கனவே அவங்க கொலைவெறியில இருப்பாங்க.. இந்த பதிலை கேட்டவுடனே கட்டாயமா ஒரு பாம்-க்கு ஆர்டர் குடுத்திருப்பாங்க (அமிருதாஞ்சன் பாம் அல்ல)..

-----------------------
மொக்கை போடுறது ஈஸி..
ஆனா, எல்லா நாளும்
எல்லா பதிவிலயும்
எந்த லாஜிக்-கும் இல்லாம
போடுற மொக்கைய தாங்குறது
அவ்வளவு ஈஸியில்ல..
(இப்படிக்கு, வெங்கட்-டால் கீழ்பாக்கம் extn-க்கு மாற்றப் பட்டோர் சங்கம்...)

அனு said...

@ரமேஷ்

கேள்விய மாத்தலைங்க.. பதில தான் மாத்தியிருக்கார்.. கேள்வி பதில் போட்டு போட்டு பயங்கர confuse ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன்...

actually, மாம்பழத்தை சில பேருக்கு பிடிக்காதுன்னு சொன்னதால மாம்பழ உற்பத்தியாளர்கள், ஒரு லோடு அழுகின மாம்பழத்த இவர் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்... அதோட effect தான் இது..

அனு said...

@அஹமது இர்ஷாத்

//சோமாலியா இல்லை, நைஜிரியா...//

இப்போ என்ன சொல்ல வரீங்க..

சோமாலியாவுல பஞ்சம் வரவேயில்லன்னா?
இல்ல, அந்த புகைப்படங்கள் எல்லாம் ஈ-மெயிலில் வரலன்னா?
இல்ல, நைஜிரியால மட்டும் தான் பஞ்சம், வறட்சி எல்லாம் வந்ததுன்னா??
ஒண்ணுமே புரியல..

மாணவர் தப்பு பண்ணினா, வெயில்ல முட்டி போட சொல்லலாம்.. ஆசிரியர் தப்பு பண்ணினா??

ஹேமா said...

வணக்கம் வெங்கட்.எல்லாமே அசத்தலா இருக்கு.கோபம் பற்றின கருத்து.பக்கத்திலிருப்பவர் பற்றி அக்கறையில்லாமல் போகும் மனிதம்..எல்லாமே !தொடருங்கள்.வருவேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//actually, மாம்பழத்தை சில பேருக்கு பிடிக்காதுன்னு சொன்னதால மாம்பழ உற்பத்தியாளர்கள், ஒரு லோடு அழுகின மாம்பழத்த இவர் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்... அதோட effect தான் இது..//

இருக்கும். அண்ணன் வெங்கட் சேலம் ஊர்க்காரர் வேற. அதனால மாம்பழ சங்கம் அவர் மேல மான நஷ்ட வழக்கு போடா போறதா கேள்விபட்டேன்.

வெங்கட் said...

@ Annony & வேலு.,

அந்த கவிதை
நான் எழுதியது அல்ல..,
ஒரு புத்தகத்தில் படித்தது..
உங்கள் பாராட்டுக்களுக்கு
தகுதியானவர் அந்த கவிஞர்தான்.

வெங்கட் said...

@ கிரிஷ்.,

// இப்ப கூட பாருங்க நீங்க நம்ம ஊருல
தான் இருக்கிங்க, ஆனா நம்ம தினமும்
chat room'ல தான பேசிக்கிறோம்....//

இப்ப நீ என்ன சொல்ல வர்ற..?
நான் ரொம்ப Famous ஆயிட்டேன்னு
தானே..??!!
அதை நேரடியாவே சொல்லேன்பா..
ஹி., ஹி.., ஹி..!

வெங்கட் said...

@ அனு.,

ரொம்ப நன்றிங்க..,
இது நாள் வரை நீங்க எங்கே
இருந்து Comment போடறீங்கன்னு
எங்க எல்லோருக்குமே தெரியாம
இருந்தது..
இப்ப நீங்களே உண்மைய
சொல்லிட்டீங்க.. Thanks..

// (இப்படிக்கு, வெங்கட்-டால் கீழ்பாக்கம் extn-க்கு மாற்றப் பட்டோர் சங்கம்...) //

இதை பார்த்திட்டு
நான் அங்கே டாக்டரா இருக்கேன்.,
நர்ஸா இருக்கேன்னு
எதாவது தோசைய திருப்பி போட
Try பண்ணுனீங்க..
டாக்டரை விட்டு ரெண்டு ஊசி
போட சொல்லிடுவேன்...

மணிவண்ணன் said...

// அண்ணா., நீங்க நல்லவரா.? கெட்டவரா.? //

இதே கேள்வியதான் உன் மனைவியும்
எங்கிட்ட போன் பண்ணி கேட்டாங்க..
அதுக்கு உண்மையான காரணம்
இதுதானா.?

வெங்கட் said...

@ ஹேமா..,

// தொடருங்கள்.வருவேன்.//

வருகைக்கு நன்றி..!
உங்க Blog பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்
நீங்க ஒரு சிறந்த கவிஞர்னு..
நிறைய எழுதி இருக்கீங்க..
பொறுமையா படிக்கணும்..
தொடருங்கள்..,
நானும் வருவேன்..!!

வெங்கட் said...

@ மணிவண்ணன்..

// இதே கேள்வியதான் உன் மனைவியும்
எங்கிட்ட போன் பண்ணி கேட்டாங்க..//

ஹா., ஹா., ஹா..
Same Pinch..!!

அனு said...

//இப்ப நீ என்ன சொல்ல வர்ற..?
நான் ரொம்ப Famous ஆயிட்டேன்னு
தானே..??!!//

என்னாது?? chat roomல பேசினா famous ஆகிடலாமா?? எனக்கு இது வரைக்கும் தெரியாம போச்சே...
என்ன கொடுமை சரவணா இது??

Krish said...

//இப்ப நீ என்ன சொல்ல வர்ற..?
நான் ரொம்ப Famous ஆயிட்டேன்னு
தானே..??!!
அதை நேரடியாவே சொல்லேன்பா..
ஹி., ஹி.., ஹி..!//

நான் famous'நு சொல்லல இது கொஞ்சம் over'அ இருக்குன்னு தான் சொல்றேன்...

உங்கள நீங்கலே famous'நு சொல்லிக்கிட்டா தான் உண்டு...

வெங்கட் said...

@ அனு & கிரிஷ்.,

// உங்கள நீங்களே Famous-ன்னு
சொல்லிக்கிட்டா தான் உண்டு...//

ஹி., ஹி.., ஹி..!

நம்மள பத்தி நாமளே புகழ்ந்து
பேசலைன்னா..
மத்தவங்க எப்படி பேசுவாங்க..??

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

இன்றைய நிலை - இது தவிர்க்க இயலாதது - முகம் தெரியாத நட்பிடம் காட்டும் அன்பு பரிவு அததனையும் நம்முடனேயே இருக்கும் நட்பிற்குக் காட்டாதது ஏன் - அதுதான் மனித சுபாவம்

தகவலும் பதிலும் சூப்பர்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா