சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 August 2010

ஏன்..? எதுக்கு..??



















உங்களுக்கெல்லாம் ஒரு
சந்தோஷமான விஷயம்..

எனக்கு 10 நாள் லீவ் வேணும்..

ஏன்..? எதுக்கு..??
அதை அப்புறமா சொல்றேன்..

முதல்ல
என் லீவ் லெட்டரை பிடிங்க.,

Respected Sir / Madam.,

As I'm Suffering from Fever....

( சே... Leave Letter-ன்னாலே
இப்படிதான் எழுத வருது..!! )

சரி.. Net-ல வேற எதாவது
Format கிடைக்குமான்னு
நண்பர் வசந்தை கேட்டப்ப
அவர் ஒரு மெயில் அனுப்பினார்.,

அடேங்கப்பா..!! எத்தனை Formats..!!!
பின்றாங்கப்பா..

நோட் பண்ணிக்கோங்க..
Use ஆகும்..

* குடும்பத்தோட ஊருக்கு போயி
நிலத்தை விக்கணுமா..?
அதுக்கு இப்படி எழுதணும்..

" Since I have to go to my village
to sell my land along with my Wife,
Please sanction me one-week leave."


* குலதெய்வம் கோவில்ல பையனுக்கு
மொட்டை போட...

" As I want to shave my Son's head,
Please leave me for two days.."


* துக்கமான Half Day Leave..

" Since I've to go to the cremation ground
at 10 o-clock and I may not return,
please grant me half day casual leave "


* துக்கமான 10 நாள் Leave..

"As my Mother-in-law has expired and
I am only one responsible for it,
Please grant me 10 days leave."


* மனைவிக்கு உடம்பு சரியில்லையா..

" My wife is suffering from sickness and
as I am her only husband at home
I may be granted leave ".


* Fever-க்கு லீவ்...

" I am suffering from Fever,
Please declare one day Holiday."


* தலைவலிக்கு...

" As I am studying in this school.,
I am suffering from headache.
I request you to leave me today "


* Letter எழுத பயிற்சி..

" I am in well here and
hope you are also in the same well."


* வேலைக்கு Apply பண்ண..

" This has reference to your advertisement
calling for a ' Typist and an Accountant - Male or Female'...

As I am both (!!) for the past several years and
I can handle both with good experience,
I am applying for the post. "

-----------------------------------------------------------------

நேத்து நைட் : 8 pm

என் மொபைல் Ring ஆச்சு..
எடுத்து பேசினா..,
லைன்ல நம்ம VAS சங்கத்
தளபதி டெரர் பாண்டியன்..

டெரர் : ஹலோ பாஸ்., என்ன
திடீர்னு 10 நாள் லீவ்..?

நான் : நேத்து தான் நம்ம
Blog Stats பார்த்தேன்..

டெரர் : சரி..,

நான் : அப்ப தான் ஆப்பிரிக்கா கண்டத்துல
நம்ம Blog-ஐ யாருமே படிக்கறதில்லைங்கற
விஷயம் தெரிஞ்சது..,

டெரர் : ஓ.. அதனால தான் அதை
" இருண்ட கண்டம்னு " சொல்றாங்களோ..?!!

நான் : அதான் ஆப்பிரிக்காவுக்கு
10 நாள் Tour போலாம்னு.

டெரர் : நம்ம Blog Promotional Tour -ஆ..?
என்ன பாஸ் இது..?
" நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி..? "

நான் : No., No., இது Awareness Tour..!!
.
.

60 Comments:

Unknown said...

நல்லாருக்கு. இதுல எந்த லீவ் வேணும்....

தமிழினியன் said...

ஆரம்பத்துல என்ட்டர் கவிதை மாதிரி ஆரம்பிச்சு போகப் போக டெரர் கவித ரேஞ்சுக்கு மாறிடுச்சு,
//
" Since I have to go to my village
to sell my land along with my Wife,
Please sanction me one-week leave."
//
அதுலயும் இந்த கடுதாசிக்கு விவிசி

Shalini(Me The First) said...

hai!
me the first!

Shalini(Me The First) said...

//டெரர் : ஓ.. அதனால தான் அதை
" இருண்ட கண்டம்னு " சொல்றாங்களோ..?!
நான் கூட எத்தனையோ டைம் யோசிச்சு இருக்கேன் எதுக்கு இப்டி ஒரு பேரு? அங்க சூரியனே உதிக்காதோ?

ஆன இப்பத்தான் தெரியுது அங்க கோகுலத்தில் சூரியன்ங்ற விசயம் இல்லைன்னு...

உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு மட்டும் இல்ல உலகத்துக்கே தேவை!

keep rocking!

Shalini(Me The First) said...

Hi to evrybody!
me, Shalini from urs neighbour country!
நான் வெங்கட்டோட தீவிர ரசிகை, fan, காத்தாடி...
அவரோட சிஷ்யையும் கூட...
அவரோட ப்ளாக் படிச்சி தான் நான் G.K ல எப்பவும் centum எடுக்குறேன்.
இவ்ளோ அழகா தமிழ் எழுதுறனே இதுக்கும் காரணம் இவர் ப்ளாக் தான்.
அவரோட ஒவ்வொரு பதிவும் சரி அதை அவர் டைப் பண்ர விதமும் சரி so cute...
இவரை மாதிரி ஊருக்கு நாலு பேரு இல்ல, நாட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும் சீக்கிரம் வல்லரசாகிடலாம்.அதான் இந்தியா 2020-ல வல்லரசாகிடும்னு கலாம் சொன்னாரு போல...

எனக்கு கொஞ்சம் விசா prob... எல்லாத்தையும் முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடுரேன்.அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது venkat`s fan Shalini...
ta-ta ba-bye...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இவ்ளோ அழகா தமிழ் எழுதுறனே இதுக்கும் காரணம் இவர் ப்ளாக் தான்.
அவரோட ஒவ்வொரு பதிவும் சரி அதை அவர் டைப் பண்ர விதமும் சரி so cute...
இவரை மாதிரி ஊருக்கு நாலு பேரு இல்ல, நாட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும் சீக்கிரம் வல்லரசாகிடலாம்.அதான் இந்தியா 2020-ல வல்லரசாகிடும்னு கலாம் சொன்னாரு போல...///

@ வெங்கட் நேத்து போன் ல பேசும்போது யாருக்கோ காசு கொடுத்து கூவ சொன்னதா சொன்னீங்களே. அவங்க பேரு ஷாலினின்னு சொல்லவே இல்லை. நல்ல வேலை இவங்க உங்க ப்ளாக்-கோடா நின்னுட்டாங்க. அப்படியே டெரர் பக்கம் போயிருந்தா இன்னும் நல்லா தமிழ் கத்துக்கிட்டுஇருப்பாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஷாலினி profile பாருங்க மகா ஜனங்களே. கொஞ்சம் சந்தேகமா இல்லை. என்னவோ இவரே creat பன்னிருப்பாருன்னு நினைக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் : No., No., இது Awareness Tour..!!//

எதுக்கு கோகுலத்தில் சூரியன் ப்ளாக் படிக்க வேணாம்ன்னு Awareness Tour..ரா?

என்னது நானு யாரா? said...

நண்பா! உங்க டச் நல்லா இருக்கு! நான் கொடுத்தது வெறும் அரிசி! அதை பக்குவமா சமைச்சி சக்கரை பொங்கள் ஆக்கிட்டீங்க! சூப்பர்! சூப்பரோ சூப்பரூ!!!

//இவரை மாதிரி ஊருக்கு நாலு பேரு இல்ல, நாட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும் சீக்கிரம் வல்லரசாகிடலாம்.அதான் இந்தியா 2020-ல வல்லரசாகிடும்னு கலாம் சொன்னாரு போல...//

ஷாலினி என்னமா பின்றாங்க நண்பா! எவ்வளவு கொடுத்தீங்க! கொடுத்ததை விட அதிகமா கூவறாங்க!

நம்ப பக்கம் இந்த மாதிரி ஆளுங்க இருக்கிற வரை உங்களை யாராலேயும் அசைச்சிக்க முடியாது

2021-ல, நிங்க தான் நிரந்தர முதல்வர்!!! வர்டா...

Anonymous said...

வெங்கட், உங்களிடம் எனக்கு பிடித்ததே இந்த தன்னடக்கம்தான். நீங்க ஆபிரிக்கா போறதென்று தெரிந்தவுடன் உங்களுடய பாதுகாப்பை உறுதிப்படுத்த UN பாகி மூனுடன் தொடர்பு கொண்டேன். அவர் சொல்லித்தான் உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டேன்.இத்தால் அனைவருக்கும் அறியத்தருவத் யாதெனில்"UN ஆதரவில் ஆபிரிக்காவை Promote பண்ணத்தானான் வெங்கட் அங்கே போகிறார்." UN ஆதரவில் ஆபிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ள பொது கூட்டங்களில் வெங்கட் பேசவுள்ளார்.அதை கேட்க வெங்கட் ரசிகர்கள் ஆசியா , அமெரிக்கா , ஜரோப்பாவிலிருந்து எல்லாம் வரவுள்ளனர்.இறுதியாக எரித்திரியாவில் வெங்கட்டிற்கு பாகி மூன் தலைமையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.இதில் ஷகீராவின் "வெங்கட் எழுச்சிப்பாடலும்" இடம்பெறவுள்ளது

Anonymous said...

வெங்கட் உங்களுடய FLAG COUNTER பார்த்தாலே தெரியுது உஙகளிற்கு ஆபிரிக்காவில் இலட்சக்கணக்கான ரசிகர் என்று, பிறகு ஏன் இந்த சின்னப்பிள்ளைத்தனாம காரணம். யாருக்காவது FLAG COUNTER இல் ஆபிரிக்க நாடுகள் தெரியாவிட்டல் அதற்கு காரணமும் வெங்கட்தான். அவ்வளவு அதிகமாக ரசிகர்கள் கோகுலத்தில் சூரியனை நோக்கி வருவதால் COUNTER பழுதாகிவிட்டது. இப்போது காட்டுவது, கோகுலத்தில் சூரியன் உதித்த முதலாம் நாள் சூரியனை பார்த்தவர்கள் மட்டுமே.( இது எனக்கு எப்படி தெரியும் என்று நினைப்பவர்களிற்கு" வெங்கட்டே ஆபிரிக்கா போகலாம் என்றால், எங்களிற்கு Google இல் ஆட்கள் இருக்கமாட்டர்களா??")

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட் - விவிசி - இவ்ளோ நாள் எத்தனை லீவ் லெட்டர் எழுதி இருப்பேன் - இது மாதிரி எழுதத் தெரியலியே - ம்ம்ம்ம்

நல்லாருக்கு - இருண்ட கண்டத்துலே போயி சூரிய வெளிச்சம் அடிக்க நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Mohamed Faaique said...

தல.. நீங்க என்ன பீலா விட்டாலும் பரவியில்ல...
பத்து நாள் லீவு மேட்டர்'எ மறந்துராதீங்க...
Eid 'ஐ கொண்டாடறதா? இல்ல உங்க லீவ்'ஐ கொண்டாடறதா? ஒண்ணுமே புரியல....
போகும் பொது டோர்ச்'ஐ மறந்துராதீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்புறம் நானும் ஒரு லீவ் லெட்டர் எழுதுவேன்...

As Im suffering from head ache after readin venkat's blog(not a comment section). Please grand me logn life leave for only one day....

ரசிகன் said...

//எனக்கு 10 நாள் லீவ் வேணும்..//

காரணம் எதுவானால் என்ன..
நமக்கு காரியம் தான் முக்கியம்..
Granted,sanctioned,accepted....
அனுமதிக்கப்பட்டது,
வழங்கப்பட்டது..

//அதான் ஆப்பிரிக்காவுக்கு
10 நாள் Tour போலாம்னு.//

அப்படியே Kruger National Park
பக்கம் எட்டி பாருங்க..
(அந்த பக்கம் தான்
Man Eating lions இருக்காம்:-)..)

வெங்கட் said...

@ கலாநேசன்.,

// இதுல எந்த லீவ் வேணும்.. //

அதான் போன் Conversation-ல
தெளிவா சொல்லி இருக்கேனே..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// நான் வெங்கட்டோட தீவிர ரசிகை,
fan, காத்தாடி...அவரோட சிஷ்யையும் கூட... //

ஹி., ஹி., ஹி..!!

// அவரோட ப்ளாக் படிச்சி தான்
நான் G.K ல எப்பவும் centum எடுக்குறேன்.
இவ்ளோ அழகா தமிழ் எழுதுறனே
இதுக்கும் காரணம் இவர் ப்ளாக் தான். //

இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாதுன்னு
சொல்லி இருக்கேன்ல..
நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுப்பா..

// இவரை மாதிரி ஊருக்கு நாலு பேரு இல்ல,
நாட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும் சீக்கிரம்
வல்லரசாகிடலாம். அதான் இந்தியா 2020-ல
வல்லரசாகிடும்னு கலாம் சொன்னாரு போல... //

ம்ம்.. உங்கள மாதிரி நாலு பேர்
நம்ம கூட இருந்தா போதுமே..
2015-லயே வல்லரசாக்கிடலாம்..!!

VAS மகளீர் அணி தலைவி
தேர்வு நடக்க இருக்கு..?
Apply பண்றீங்களா..??!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நேத்து போன்ல பேசும்போது யாருக்கோ
காசு கொடுத்து கூவ சொன்னதா சொன்னீங்களே.
அவங்க பேரு ஷாலினின்னு சொல்லவே இல்லை.
நல்ல வேலை இவங்க உங்க ப்ளாக்-கோடா நின்னுட்டாங்க. //

இங்கே ஏதோ பனியன் கருகுற
வாசனை வருதே..!!

Shalini(Me The First) said...

//@ வெங்கட் நேத்து போன் ல பேசும்போது யாருக்கோ காசு கொடுத்து கூவ சொன்னதா சொன்னீங்களே. அவங்க பேரு ஷாலினின்னு சொல்லவே இல்லை. நல்ல வேலை இவங்க உங்க ப்ளாக்-கோடா நின்னுட்டாங்க. அப்படியே டெரர் பக்கம் போயிருந்தா இன்னும் நல்லா தமிழ் கத்துக்கிட்டுஇருப்பாங்க..//

ஷாலினி profile பாருங்க மகா ஜனங்களே. கொஞ்சம் சந்தேகமா இல்லை. என்னவோ இவரே creat பன்னிருப்பாருன்னு நினைக்கிறேன்//


hello,உங்க “பன்னி...” தமிழுக்கு என் தமிழ் எவ்ளவோ பெட்டர்

அதை விட உங்க பீட்டர் ம்ம்ஹும்
எதுவும் சரியில்லை ...

ஆமா, என்னொடprofile ல create பண்ண தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் மக்கு இல்ல..

எத்ன டைம் வெங்கட் சொல்லியிருக்கார் இது காசு கொடுத்து சேர்ந்த கூட்டமில்லைன்னு

ஹைய்யொ....

அனு said...

//எனக்கு 10 நாள் லீவ் வேணும்..//

அப்பாடா!!!!

இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்...

சேலம் தேவா said...

ஸ்கூல் படிக்கும்போது இதெல்லாம் தெரியாம போச்சே?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// இவரே creat பன்னிருப்பாருன்னு
நினைக்கிறேன //

// உங்க “பன்னி...” தமிழுக்கு
என் தமிழ் எவ்ளவோ பெட்டர் //

இதை இப்படி சொல்லணும்..!!

ரமேஷ் வேற எதாவது தப்பா புரிஞ்சிகிட்டு
அழுவ ஆரம்பிச்சார்னா.,
அந்த கொடுமையை இந்த பூமி தாங்காது..

கருடன் said...

@ரமேஷ்
//வெங்கட் நேத்து போன் ல பேசும்போது யாருக்கோ காசு கொடுத்து கூவ சொன்னதா சொன்னீங்களே. அவங்க பேரு ஷாலினின்னு சொல்லவே இல்லை. நல்ல வேலை இவங்க உங்க ப்ளாக்-கோடா நின்னுட்டாங்க. அப்படியே டெரர் பக்கம் போயிருந்தா இன்னும் நல்லா தமிழ் கத்துக்கிட்டுஇருப்பாங்க..//


கண்ணாடி சூரிய ஒளி பிரதிபலிக்கும் இது இயற்கை. நல்ல மனம் உள்ளவர்கள் வெங்கட்ஐ பாரட்டுவர் இது உலகநியதி... இது கூட தெரியல. நல்லவேலை என் ப்ளாக் அவங்க வரவில்லை. அப்புறம் டோட்டல் டேமேஜ் உங்கலூக்குதான்... ஹி..ஹி..ஹி

GSV said...

யோவ், யாருய்யா கோகுலத்தில் சூரியன் blog வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ?....................ஓ அதனாலதான் இன்னைக்கு லைன் ல நிக்கிரங்கலோ.

Chitra said...

Have a safe "awareness tour" (?????!!!!) :-)

கருடன் said...

@ரசிகன் said...
//காரணம் எதுவானால் என்ன..
நமக்கு காரியம் தான் முக்கியம்..
Granted,sanctioned,accepted....
அனுமதிக்கப்பட்டது,
வழங்கப்பட்டது..//

YYYYYYY?? VKSla எல்லாம் மறுபடியும் டயர்டு அகிடிங்களா? இப்பேதான் ஒரு வாரம் லீவ் கொடுத்தோம்.

//அப்படியே Kruger National Park
பக்கம் எட்டி பாருங்க..
(அந்த பக்கம் தான்
Man Eating lions இருக்காம்:-)..)//

ஏன்? நாலு கால் சிங்கம் இரண்டு கால் சிங்கத்த பாக்க ஆசைபடுதா?

கருடன் said...

@ரமேஷ்
//ஷாலினி profile பாருங்க மகா ஜனங்களே. கொஞ்சம் சந்தேகமா இல்லை. என்னவோ இவரே creat பன்னிருப்பாருன்னு நினைக்கிறேன்.//

ஆம. ஷாலினி Profile வெங்கட் create பண்ணி கொடுத்தாரு. டெரர் அப்படினு ஒரு Profile create பண்ணி ரமேஷ களாய்க்கராரு. Flag counter பாருங்க அந்த நாட்டுக்கு எல்லாம் தினமும் வெங்கட் போய் அவர் ப்ளாக் பாக்கராரு....

GSV said...

@ ஷாலினி.@ வெங்கட்

// உங்க “பன்னி...” தமிழுக்கு
என் தமிழ் எவ்ளவோ பெட்டர் //

"Bunny" Tamil

ஆ இதுகூட நல்லா இருக்கே ..

For more details please contact ..

Developer,
Google Transliterate Tamil team, neighbour busstand எதிர்புறம், neighbour தெரு,
neighbour country.

அருண் பிரசாத் said...

என்னது காந்தி செத்துட்டாரா?

முதல்ல இந்த பழைய மெயில்லை பதிவா போடுறத வெங்கட் பிளாக்ல தடை பண்ணனும்.

-----------------------------------

south Africa, Uganda - இந்த நாட்டுகாரங்க பார்த்ததை மறைச்சிடலாம். ஒருத்தன் Mauritius ல இருந்து தினமும் வந்து கும்முறனே அதை பாத்தும் எப்படி ஆப்பிரிகா கண்டத்துல யாரும் வரலைனு சொல்லாம் நீங்க.

அருண் பிரசாத் said...

@ Shalini

//hai!
me the first!//
யாருப்பா இது பல்பு வாங்கிட்டே உள்ள வந்து இருக்கறது. சரி பழக்க படுத்திக்கோங்க இனி நிறைய வாங்குவீங்க

//Shalini from urs neighbour country!//

பாகிஸ்தானா?? ஆப்கானிஸ்தானா??
இருக்காதே அங்க கூட மூளை இருக்கறவங்க தான இருக்க முடியும்!

//நான் G.K ல எப்பவும் centum எடுக்குறேன்.//
ஹி ஹி ஹி... நல்ல டைமிங் ஜோக். ஆப்பிக்கால எத்தனை நாடுனு உங்க குருவை கேட்டு சொல்லுங்க தாயி

//நாட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும் சீக்கிரம் வல்லரசாகிடலாம்//
இவ்வளோ நாள் இந்தியா ஏன் வல்லரசு ஆகலைனு இப்பதான் தெரியுது.
வெங்கட், ஆப்பிரிக்கா போறார்னு சொன்னவுடனே இந்தியா வல்லரசு ஆகிடும்னு சொல்லிட்டீங்க... Welcome to VKS

DR.K.S.BALASUBRAMANIAN said...

" Since I have to go to my village
to sell my land along with my Wife,
Please sanction me one-week leave."
மனைவியை ஒரு வாரத்தில் விற்க முடியுமா.!. லீவு ஒரு வாரம் போதுமா....?

GSV said...

VKS தலைவி,தளபதி,கோ.ப.ச மற்றும் க.பே ஆணி பிடுங்குவதால் .. VKS சை வெளிஇலேந்து அதரவு தரும் தொண்டன்

G.S.V

செல்வா said...

இப்பதாங்க நம்ம ஒபாமா எனக்கு கால் பண்ணினார்.
அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இங்கே :
ஒபாமா : என்ன செல்வா , உங்க தலைவர் ஆப்ரிக்கா டூர் போறார்னு கேள்விப்பட்டேன்.
செல்வா : ஆமாங்க , அங்க Awarness Tour போக பிளான் பண்ணிருக்கார்.
ஒபாமா : பிச்சிபுடுவேன் பிச்சு .. என்ன இது , அவரு போயிட்டா ப்ளாக் எல்லாம் இருண்டு போய்டாதா..? அதைய நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அப்படியே இருந்தாலும் 10 நாட்கள் எல்லாம் அதிகம். அவரு 10 ப்ளாக் எழுதறத நிறுத்திட்டா எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியாது. தயவு செய்து அவர லீவ் போடாதீங்க அப்படின்னு சொல்லு .
செல்வா : இத நீங்க அவரு கிட்டவே சொல்லிருக்கலாம்ல ..?
ஒபாமா : அட போப்பா , காலைல இருந்து அவருக்குத் தான் ட்ரை பண்ணிட்டிருக்கேன் , லைன் கிடைக்கலை. அதான் உனக்கு கூப்பிட்டேன்.
செல்வா : எது எப்படியோ , அது எங்க தலையோட முடிவுலதான் இருக்கு.
நீங்க சொன்னதுக்காகவெல்லாம் அவர் அந்த டூர் ப்ரோகிராம கான்செல் பண்ண மாட்டார். எதுக்கும் சொல்லிப்பாக்குறேன்.

பெசொவி said...

மக்களுக்குத் தேவையான ஒரு flash-back
ஒரு இருபது வருடங்களுக்கு முன் :

அந்த வகுப்பில் ஆசிரியர் சொன்னார்: "மாணவர்களே, உங்க எல்லாருக்கும் ஒரு கட்டுரைப் போட்டி: தலைப்பு இதுதான் - சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டி பற்றி ஒரு கட்டுரை வரைக: எழுதுங்க!"
எல்லோரும் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்க, ஒரு மாணவர் மட்டும் ஒரே வரியில் எழுதிவிட்டு பேப்பரை கொடுத்துவிட்டு போய்விட்டார். அதில் எழுதியிருந்தது இதுதான்: "மழை காரணமாக நடக்கவிருந்த போட்டி கைவிடப் பட்டது"
flash back over!

இப்ப சொல்லுங்க, இப்படிபடிக்கற காலத்தில ஓ-பி அடிச்சா எப்படி படிப்பு வரும்? அதே போலத் தான் letter writing-உம்.

அந்த மாணவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். வெங்கட்-தான்னு நீங்களே கண்டிபிடிசுக்குங்க!

@ Shalini said...

hai!
me the first!

மூணாவதா கமென்ட் போட்டுட்டு நான்தான் பஸ்ட்-னு குதிக்குதே, இந்த வெள்ளைக்காரப் பொண்ணை எங்கிருந்து பிடிச்சீங்க, வெங்கட், உங்களுக்கு ஏத்த விசிறிதான்.

@ Selvaa
//செல்வா : இத நீங்க அவரு கிட்டவே சொல்லிருக்கலாம்ல ..?
ஒபாமா : அட போப்பா , காலைல இருந்து அவருக்குத் தான் ட்ரை பண்ணிட்டிருக்கேன் , லைன் கிடைக்கலை. அதான் உனக்கு கூப்பிட்டேன்//

இதுக்கெல்லாம் சந்தோஷப் படக் கூடாது, போன் பில் கட்டலன்னா, யார் போன் பண்ணினாலும் பேச முடியாது.

பெசொவி said...

//Since I have to go to my village
to sell my land along with my Wife,
Please sanction me one-week leave."//


முந்தின பதிவுக்கே, ஒரு நாள் முழுக்க ஆஸ்பத்திரில இருந்துட்டு ட்ரீட்மென்ட் முடிஞ்சு அடுத்த நாள் பரிகாரம் பண்ணினீங்க, இந்த வரிகளுக்கு எத்தனை நாள் ஆஸ்பத்திரியோ, எத்தனை பரிகாரப் பதிவுகளோ?

Jey said...

ஹஹஹ. சூப்பர். லீவ் லெட்டெர்ஸ்.

வெங்கட் said...

@ என்னது நானு யாரா..,

// 2021-ல, நீங்க தான் நிரந்தர முதல்வர்..!! //

முதல்ல 2011., & 2016..,
அப்புறம் தான் 2021..
ஓ.. அப்ப அவ்ளோ நாள்
Wait பண்ணனுமோ..??

அப்ப சரி..,
2019-ல Parliment Election வரும்..
அதுல நின்னு Prime Minister
ஆகிட வேண்டியது தான்..!!

அதுக்காக
" இந்தியாவின் நிரந்தர பிரதமர்னு "
யாரும் சவுண்ட் குடுக்க வேணாம்..

அப்புறம் அமெரிக்க ஜனாதிபதி
Post-ஐ யார் பார்த்துக்கறதாம்..??

வெங்கட் said...

@ பாரதி..,

// " UN ஆதரவில் ஆபிரிக்காவை Promote
பண்ணத்தானான் வெங்கட் அங்கே போகிறார்."
UN ஆதரவில் ஆபிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ள
பொது கூட்டங்களில் வெங்கட் பேசவுள்ளார். //

சரியான ஓட்டை வாயா இருக்கீங்களே..??
இப்படியா எல்லாத்தையும் உளறுவீங்க..??

இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா.,
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆப்பிரிக்கா
வந்தாடுவாங்க..

அப்புறம் அத்தனை பேருக்கும் உணவு,
தங்க இடம்., அமைப்பாளர்களால
Arrange செஞ்சி தர முடியாதேன்னு
நான் இந்த பயணம் பத்தி ரகசியமா
வெச்சி இருந்தேன்..

காரியத்தையே கெடுத்திட்டீங்களே..!!

வெங்கட் said...

@ Mohamad.,

// Eid 'ஐ கொண்டாடறதா.? இல்ல..
உங்க லீவ்'ஐ கொண்டாடறதா..?
ஒண்ணுமே புரியல.... //

நம்மள பகைசிக்காதீங்க..!!
அப்புறம் நீங்க லீவுக்கு ஊருக்கு
போக முடியாது..!!

நீங்க போற பிளைட்
எங்க வீட்டு மொட்டை மாடி
வழியா தான் போகும்..

பிளைட்டை., கைய காட்டி நிறுத்தி..,
உங்கள கும்முவோம்..

ஜாக்ரதை..!!

வெங்கட் said...

@ அனு.,

// அப்பாடா!!!!
இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்... //

ஓ.. 15 நாள் லீவ் முடிஞ்சி
இன்னிக்கு ஆபீஸ் போறீங்களா..??!!
Good Morning..!!
Sweet Dreams..!!

வெங்கட் said...

@ GSV.,

// கோகுலத்தில் சூரியன் blog வாசல்லே
" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது ?
ஓ அதனாலதான் இன்னைக்கு லைன்ல நிக்கிரங்கலோ. //

" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது
- இது உண்மை..!!

மக்கள் லைன்ல நிக்கறாங்க -
இதுவும் உண்மை..!!

ஆனா கொஞ்சம் நல்லா பாருங்க..
அது கோகுலத்தில் சூரியன் Blog
வாசல் இல்ல.. VKS ஆபீஸ்..!!

வெங்கட் said...

@ அருண்.,

// ஒருத்தன் Mauritius ல இருந்து தினமும்
வந்து கும்முறனே அதை பாத்தும்
எப்படி ஆப்பிரிகா கண்டத்துல யாரும்
வரலைனு சொல்லாம் நீங்க...? //

ஓ.. இப்ப புரியுது..
ஆப்பிரிக்கா கண்டத்தை ஏன்
" இருண்ட கண்டம்னு " சொல்றாங்கன்னு..!!

// பாகிஸ்தானா?? ஆப்கானிஸ்தானா??
இருக்காதே அங்க கூட மூளை
இருக்கறவங்க தான இருக்க முடியும்! //

ஓ.. அதனால உங்களுக்கு அங்கே
விசா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா..?

// நான் G.K ல எப்பவும் centum எடுக்குறேன். //

// ஹி ஹி ஹி... நல்ல டைமிங் ஜோக்.
ஆப்பிக்கால எத்தனை நாடுனு உங்க
குருவை கேட்டு சொல்லுங்க தாயி //

ஆப்பிரிக்கா கண்டத்துல இருக்கறது
மொத்தம் 53 நாடுங்க..

சரி இப்ப ஒத்துக்கறீங்களா..?
அவங்க G.K ல Centum எடுக்குறாங்கன்னு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது
- இது உண்மை..!!

மக்கள் லைன்ல நிக்கறாங்க -
இதுவும் உண்மை..!!

ஆனா கொஞ்சம் நல்லா பாருங்க..
அது கோகுலத்தில் சூரியன் Blog
வாசல் இல்ல.. VKS ஆபீஸ்..!!///

கண்டிப்பா நாங்கதான் தற்கொலை முயன்றவருக்கு மறுவாழ்வு மையம் நடத்துரமே. VAS க்கு போய் தற்கொலை பண்ண போறவங்களை மனமாற்றம் செய்து காப்பாதுரத்தான் VKS வேலை....

வெங்கட் said...

@ அருண் & பெ.சொ.வி.,

// hai!
me the first! //

// யாருப்பா இது பல்பு வாங்கிட்டே
உள்ள வந்து இருக்கறது. //

// மூணாவதா கமென்ட் போட்டுட்டு
நான்தான் பஸ்ட்-னு குதிக்குதே,
இந்த வெள்ளைக்காரப் பொண்ணை
எங்கிருந்து பிடிச்சீங்க, //

நான் Comment Moderation வெச்சி
இருக்கறதால., அது 1st-ஆ .,
3rd-ஆன்னு அவங்களுக்கு தெரியல..

@ Shalini.,

Don't Worry..!!
இனிமே நீங்க எத்தனாவதா
Comment போட்டாலும்..
" Me the First "-ன்னே போடுங்க..

உங்களுக்கு முன்னாடி இருக்கிற
எல்லா Comment-ஐயும்
நான் Delete பண்ணிடறேன்..

@ VKS.,

இப்ப என்ன பண்ணுவீங்க..?!
இப்ப என்ன பண்ணுவீங்க..?!

வெங்கட் said...

@ டெரர்.,

// ஏன்? நாலு கால் சிங்கம்
இரண்டு கால் சிங்கத்த பாக்க ஆசைபடுதா? //

இது சுப்பரு..
புல்லரிக்குதுப்பா..!!

// Flag counter பாருங்க அந்த நாட்டுக்கு
எல்லாம் தினமும் வெங்கட் போய்
அவர் ப்ளாக் பாக்கராரு.... //

ரமேஷூ..!! ஹி., ஹி., ஹி..!!!

அது எப்படிதான் சளைக்காம
தினமும் நம்ம டெரர் கிட்ட
பல்ப் வாங்கறீங்களோ..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஒபாமா : காலைல இருந்து அவருக்குத்
தான் ட்ரை பண்ணிட்டிருக்கேன் ,
லைன் கிடைக்கலை. //

// போன் பில் கட்டலன்னா, யார் போன்
பண்ணினாலும் பேச முடியாது. //

ஆமா.. இந்த Basic Knowledge-கூட
இல்லாமலா ஓபாமா அமெரிக்க
ஜனாதிபதியா இருக்காரு..?!!

வெங்கட்.., நீ அமெரிக்க ஜனாதிபதி
ஆகுற நேரம் ரொம்ப பக்கத்தில
இருக்குடோய்..!!

ஆமா ஓபாமா ஏன் டெலிபோன் பில்
கட்டலை..??!

Anonymous said...

//ஆப்பிரிக்கா கண்டத்துல இருக்கறது
மொத்தம் 53 நாடுங்க..//
வெங்கட்!!
விக்கிப்பீடியாவில் ஆபிரிக்காவில் 52 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் 2 அரைகுறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் இருப்பதாக உள்ளது. அப்படியாகில் நீங்க ஏதோ ஒரு நாட்டை அங்கீகரிச்சிட்டதாகத்தானே அர்த்தம். அது எந்த நாடு? Somaliland? Sahrawi Araப் ? சொன்னீர்கள் என்றால் எங்களிற்கும் மகிழ்ச்சி. கோகுலத்தில் சூரியனை வாசிக்கும் அந்த ஊர் மக்களிற்கு மகிழ்ச்சி...

Mohamed Faaique said...

போஸ்.... ஆர்டிக் & அண்டார்டிக் இலிருந்தும் யாரும் உங்க ப்ளாக்'கை படித்ததில்லையே.. ஆறு மாசம் லீவ் எடுத்து விட்டு VAS உறுப்பினர் சகிதம் அங்கு போய் வரலாமே ..... (ஷப்பா.... ஆறு மாசம் நிம்மதியா தூங்கலாம்பா ..)

வெங்கட் said...

@ பாரதி.,

// நீங்க ஏதோ ஒரு நாட்டை
அங்கீகரிச்சிட்டதாகத்தானே அர்த்தம்.
அது எந்த நாடு.?
Somaliland. ? Sahrawi Araப் ? //

No., No..,
இது அப்படி இல்ல..

பஸ்ல போகும் போது
ரெண்டு சின்ன குழந்தைகள் இருந்தா..
நாம என்ன பண்றோம்..?

2 அரை டிக்கெட் = 1 Full டிக்கெட்
இந்த மாதிரி டிக்கெட் எடுக்கறோம்ல..

அதே மாதிரி இப்போதைக்கு
அந்த ரெண்டு குட்டு நாடுகளையும்
சேர்த்து ஒரு நாடுன்னு சொல்லி
இருக்கேன்..

கூடிய சீக்கிரம் அவை
தனி தனி நாடுகளா அறிவிக்க
நடவடிக்கை எடுக்கப்படும்..

வெங்கட் said...

@ Mohamed.,

// ஆர்டிக் & அண்டார்டிக் இலிருந்தும்
யாரும் உங்க ப்ளாக்'கை படித்ததில்லையே.. //

இந்த செவ்வாய் கிரகம்,
சந்திர மண்டலம்
இதையெல்லாம் ஏன் விட்டுடீங்க...,
இங்கே எல்லாம் கூட தான்
யாருமே படிக்கறதில்ல..

vinu said...

kalakkal maamooi

ரசிகன் said...

@Terror.,

// ஏன்? நாலு கால் சிங்கம் இரண்டு கால் சிங்கத்த பாக்க ஆசைபடுதா? //

எப்படியோ.. ஐந்தறிவு ஜீவன்னு ஒத்துகிட்டா சரி...
அட இன்னொரு வித்தியாசத்தை விட்டுடீங்களே...
அதாங்க.. அந்த சிங்கத்துக்கு initial இல்ல..
நீங்கல்லாம் தமிழோட முதலெழுத்தையே,
தங்களது முதலெழுத்தா வச்சிருக்கற சிங்கங்களாச்சே... !!!

கருடன் said...

@ரசிகன்
//எப்படியோ.. ஐந்தறிவு ஜீவன்னு ஒத்துகிட்டா சரி...
அட இன்னொரு வித்தியாசத்தை விட்டுடீங்களே...
அதாங்க.. அந்த சிங்கத்துக்கு initial இல்ல..
நீங்கல்லாம் தமிழோட முதலெழுத்தையே,
தங்களது முதலெழுத்தா வச்சிருக்கற சிங்கங்களாச்சே... !!!//

4 கால் சிங்கத்துக்கு - 5 அறிவு., But
2 கால் சிங்கத்துக்கு - 7 அறிவு.,

பரிணாம வளர்ச்சியில
2 கால் குறைஞ்சி.,
2 அறிவு அதிகம் ஆகிட்டது..

அப்புறம் அந்த Initial Matter..
சிங்கத்தோட அப்பா பேரு ARIMA.
So., Singam.A ( சிங்கம்.அ )..

" அரிமா சிங்கம் "
நிறைய கேள்விபட்டு
இருப்பீங்களே.

பெசொவி said...

@ Venkat
//உங்களுக்கு முன்னாடி இருக்கிற
எல்லா Comment-ஐயும்
நான் Delete பண்ணிடறேன்..

@ VKS.,

இப்ப என்ன பண்ணுவீங்க..?!
இப்ப என்ன பண்ணுவீங்க..?!//

அப்போ ஷாலினி முதல் கமெண்ட் போட மாட்டாங்கன்னே முடிவு பண்ணிட்டீங்க, போல?
எப்படியோ VAS-க்கு ஆளு புடிச்சா போதும்கற நிலைமைக்கு வந்துட்டேன்களே, உங்கள பாத்தா பாவமா இருக்கு!

@ என்னது நானு யாரா?

//2021-ல, நிங்க தான் நிரந்தர முதல்வர்!!!

முதல்வர்-னா பிரின்சிபால் தானே? அப்போ VAS-ங்கற பெயரில ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு முதல்வரா வேணா வரலாம். (VAS-காரங்க மட்டும்தான் சேருவாங்கங்கறது வேற விஷயம்!)

ரசிகன் said...

@terror

//2 கால் குறைஞ்சி

அட ஆண்டவா...
காலுக்கு பதிலா
வால குறச்சிருக்க கூடாதா...!!

//2 கால் சிங்கத்துக்கு - 7 அறிவு.,

ஓ.. ரெண்டேகால்(2 ¼ ) சிங்கத்துக்கு
7 அறிவு
அப்போ ஒரு சிங்கத்துக்கு
3 அறிவு தானா...
நான் தான் அவசரப்பட்டு
5ன்னு சொல்லிட்டேனா..
VKS members.. மன்னிச்சுகோங்க..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அப்போ ஷாலினி முதல் கமெண்ட்
போட மாட்டாங்கன்னே முடிவு
பண்ணிட்டீங்க, போல? //

என்ன கட்சிக்குள்ள குழப்பம்
ஏற்படுத்த பார்க்கறீங்களா..??
நடக்காது..!!

அவங்க இப்போ
VATE ( Venkatai Atharippor Talent Exam )
ரொம்ப சின்சியரா படிச்சிட்டு
இருக்காங்க..

// முதல்வர்-னா பிரின்சிபால் தானே? //

என்னாது..?

இன்னும் எலிமெண்டரி ஸ்கூல்லயே
இருந்துட்டு இருந்தா இப்படி தான்
தோணும்..!!

கருடன் said...

@ரசிகன்
//அட ஆண்டவா...
காலுக்கு பதிலா
வால குறச்சிருக்க கூடாதா...//

வால் இருந்தா தப்பு இல்ல. VKS மாதிரி அறுந்தா வால் இருந்தாதான் கஷ்டம்.


//ஓ.. ரெண்டேகால்(2 ¼ ) சிங்கத்துக்கு
7 அறிவு
அப்போ ஒரு சிங்கத்துக்கு
3 அறிவு தானா...
நான் தான் அவசரப்பட்டு
5ன்னு சொல்லிட்டேனா..
VKS members.. மன்னிச்சுகோங்க.//

VKSல நீங்கதான் கொஞ்சம் புத்திசாலி நினைத்தேன். இப்போ அதும் போச்சா.. அது ரெண்டேகால் இல்லப்பு இரண்டு கால் (1/4 + 1/4 = 1/2). பாதி சிங்கத்துகு 7 அறிவு. அப்போ ஒரு சிங்கத்துகு 14 அறிவு.

ஜெகன் said...

*@வெங்கட்:*
எக்ஸாம்ன்ற பேர்ல ஷாலினிக்கும் வேட்டு வெச்சிட்டீங்களா?

யாருங்க அது வெங்கட்டுக்கு 6 அறிவு 7 அறிவுன்னு சண்டை போடறது.. அவருக்கு இருக்கறது ∞ அறிவு in 1 brain! (1/∞)

Anonymous said...

Thanks for good stuff.

Anonymous said...

Awesome post. Really enjoyed reading your blog posts.