08 May 2010
ஆட்டோகிராஃப் ( இது கொஞ்சம் ஸ்பெஷல் )
ரொம்ப நாள் கழிச்சி
என் காலேஜ் Friend கிச்சாவை
ஒரு கல்யாணத்துல பார்த்தேன்..
கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.
அப்போ நான்....
" என் ஆட்டோகிராப் நோட்ல
நீ எழுதி குடுத்தது தான்
ரொம்ப ஸ்பெஷல்..! "
" அப்படியா..!! "
" எனக்கு எப்பவாவது மனசு
கஷ்டமா இருந்தா.., அதை எடுத்து
ஒரு தடவை பார்ப்பேன்..
உடனே மனசு லேசாயிடும்.. "
" அப்படி என்னடா நான்
எழுதி குடுத்தேன்..? "
" அதை நான் படிக்க மாட்டேனே.. "
" பின்ன..? "
" எடுத்து சும்மா பார்ப்பேன்..,"
" பார்த்து....!! "
" இந்த கையெழுத்தை விடவா
நம்ம தலையெழுத்து மோசமா
இருக்க போவுதுன்னு நினைச்சுக்குவேன்..
உடனே மனசு Recharge ஆயிடும்..! "
அதுக்கு அப்புறம் அங்கே
என்ன நடந்திருக்கும்னு தான்
உங்களுக்கே தெரியுமே..!!
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் ) -----------------------------------
( ரங்கநாதன் , சென்னை )
வரப்போற சட்டசபை Election-ல சரத்குமார் கட்சியும், கார்த்திக் கட்சியும் கூட்டணி வெச்சுகிட்டா எத்தனை இடதுத்துல ஜெயிப்பாங்க..?
குறைஞ்சது 22 இடத்துலயாவது
ஜெயிப்பாங்க..
( ஏன் நீங்க மட்டும் தான் காமெடி
பண்ணுவீங்களா..?
நாங்களும் பண்ணுவோம்ல..!! )
இன்று ஒரு தகவல் : ---------------------
தமிழ்நாட்டில் இன்னும்
ஓரிரு வருஷங்களில்
மின்சார பற்றாக்குறையே இருக்காது
- அமைச்சர் துரைமுருகன்
( ஹி., ஹி., ஹி.. )
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
21 Comments:
autograph really superb
நானும் அப்படித்தான். எனக்கு எப்பவாவது மனசு கஷ்டமா இருந்தா உங்க ப்ளாக்கை ஒரு தடவை பார்ப்பேன்..
உடனே மனசு லேசாயிடும்..
@ரமேஷ்
ஆஹா.. நான் போடனும்னு நினைச்சத நீங்க போட்டுட்டீங்க.. Copy Copy..
ஹிஹி.. நம்ம கட்சிக் கொள்கைய காப்பாத்திடீங்க... சபாஷ்..
//அதுக்கு அப்புறம் அங்கே
என்ன நடந்திருக்கும்னு தான்
உங்களுக்கே தெரியுமே..!!//
அப்புறம் நடந்தது...
கிச்சா: அந்த ஒரு qualification-அ வச்சு தான்டா இன்னைக்கு இவ்வளவு பெரிய டாக்டரா இருக்கேன்.. ஆமா, நீ என்ன பன்ற??
வெங்கட்: ப்ளாக் எழுதுறேன்டா.. நீ பாக்குறது இல்லயா??
கிச்சா: கேள்விப் பட்டேன்.. ஆனா, படிக்கலாம்னு தோணும் போதெல்லாம் நீ எழுதி குடுத்த ஆட்டோகிராப்-ப தான் படிச்சுப்பேன்..
வெங்கட்: எதுக்கு??
கிச்சா: அதைப் பாத்த அப்புறம் தான் எவ்வளவு பெரிய கண்டத்தில இருந்து தப்பிச்சிருக்கேன்னு புரியும்..
வாழ்க்கைல ரிஸ்க் எடுக்கலாம்.. ஆனா, வாழ்க்கையைய ரிஸ்க் எடுக்க முடியுமா??
@அனு superuuuuuuuuuuuuu
ha hahhahah....nice post Friend!
Vaazthukkal!
@ ரமேஷ்..,
// எனக்கு எப்பவாவது மனசு கஷ்டமா
இருந்தா உங்க ப்ளாக்கை ஒரு தடவை
பார்ப்பேன்.. உடனே மனசு லேசாயிடும்.. //
எப்படிங்க இப்படி..?
நானும் இதே காரணத்துக்காக தான்
உங்க Blog-ஐ வந்து பார்க்கிறேன்..!!
ஹி., ஹி., ஹி.,
@ அனு.,
// கிச்சா: அதைப் பாத்த அப்புறம் தான்
எவ்வளவு பெரிய கண்டத்தில இருந்து
தப்பிச்சிருக்கேன்னு புரியும்..
வாழ்க்கைல ரிஸ்க் எடுக்கலாம்.. ஆனா,
வாழ்க்கையைய ரிஸ்க் எடுக்க முடியுமா?? //
அப்புறம் நடந்தது...
நான் : ஆமா., எதுக்கு இப்ப நீ சம்பந்தமே
இல்லாம பன்ச் டயலாக் அடிக்கிற..?
என் Blogல ரிஸ்க் எடுக்கிற
அளவு என்ன இருக்கு..?
கிச்சா : என்ன இருக்கா..? சரியா போச்சு...!!
அனுன்னு யாரோ Comment போடறாங்களாமே..!!
அதை படிக்கிறது ரிஸ்க் இல்லையா..?
நான் : ம்ம்...!
ரொம்ப நன்றி..,
@ மணிவண்ணராஜ்
@ தேவா
///( ரங்கநாதன் , சென்னை )
வரப்போற சட்டசபை Election-ல
சரத்குமார் கட்சியும்,
கார்த்திக் கட்சியும் கூட்டணி
வெச்சுகிட்டா எத்தனை இடதுத்துல
ஜெயிப்பாங்க..?
குறைஞ்சது 22 இடத்துலயாவது
ஜெயிப்பாங்க..////
சிரிப்பு வரலயே...
:))
பாவா..
உங்க blog'a பாத்துட்டு எனக்கு ஒரே காய்சல் வாந்தி மயக்கம்.....
டாக்டர் கிட்ட போன நீ எதயோ பாத்து பயந்துருக்கனு சொன்னாரு...
நான்- ஆமாம் டாக்டர் என் மச்சான் வெங்கட் blog'a பார்ததுக்கு அப்ரொம் தான் இப்படி ஆச்சுன்னு சொன்ன..
ஓ ... அப்ப பின்னாடி திரும்பி பாரு உன்ன மாதிரி 150 பேர்க்கு மேல பெட்ல அட்மிட் ஆகி இருக்காங்க..
எல்லாரும் வெங்கட் blog'கால பாதிக்க பட்டவங்க.. இதுக்காகவே நான் வெங்கட்க்கு நன்றி கடன் பட்டுருக்கென்... சுமார் ஒரு ஆறு மாசமா எனக்கு நல்ல collection'நு சொன்னார்......
நான் உங்க blog'a பார்ததுக்கு எனக்கு நஸ்ட ஈடு வேனும் பாவா...
( ரங்கநாதன் , சென்னை )
வரப்போற சட்டசபை Election-ல
சரத்குமார் கட்சியும்,
கார்த்திக் கட்சியும் கூட்டணி
வெச்சுகிட்டா எத்தனை இடதுத்துல
ஜெயிப்பாங்க..?
குறைஞ்சது 22 இடத்துலயாவது
ஜெயிப்பாங்க..
( ஏன் நீங்க மட்டும் தான் காமெடி
பண்ணுவீங்களா..?
நாங்களும் பண்ணுவோம்ல..!! )
...... hilarious!!!
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை :)
அனைத்தும் கலக்கல் வெங்கட்.
அடிக்கடி எழுதுங்கள்.
@ கிரிஷ்.,
// வெங்கட்க்கு நன்றி கடன் பட்டுருக்கென்...
சுமார் ஒரு ஆறு மாசமா எனக்கு நல்ல
collection'நு சொன்னார். //
யார் அந்த டாக்டர்ன்னு மட்டும்
சொல்லு பாவா..
எனக்கு வர்ற கோவத்துக்கு நேரா
போயி நாலு வார்த்தை கேட்டுட்டு
வர்றேன்..
"அதான் நல்ல Collection ஆகுதுல்ல..
எனக்கு ஒரு Percetage குடுக்கணும்னு
தோனவேயில்லையான்னு " திட்டிட்டு
வர்றேன்..
அஹமத் & சித்ரா..,
சாமீ...,
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..
// சிரிப்பு வரலயே... //
// ...... hilarious!!! //
@ அக்பர்..,
// இது உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியலை :) //
தெரியுது.. என்ன பண்றது
பழக்க தோஷம்..!!
ஹி., ஹி., ஹி..!!
//யார் அந்த டாக்டர்ன்னு மட்டும்
சொல்லு பாவா..
எனக்கு வர்ற கோவத்துக்கு நேரா
போயி நாலு வார்த்தை கேட்டுட்டு
வர்றேன்..
"அதான் நல்ல Collection ஆகுதுல்ல..
எனக்கு ஒரு Percetage குடுக்கணும்னு
தோனவேயில்லையான்னு " திட்டிட்டு
வர்றேன்..//
நான் பேர சொல்லி அந்த டாக்டர் கிட்ட போய்டாத பாவா அங்க நல்ல கவனிச்சி அனுபிட போராங்க...
Percentage வேர கேக்குரிங்க.. டாக்டர்கிட்ட சொல்லி இருக்கேன் அவரு... என்ன தருவாருன்னு நீங்க போய் பாருங்க...
//ஆட்டோகிராஃப் ( இது கொஞ்சம் ஸ்பெஷல் )//
இதே தலைப்புல 5 -6 வருஷத்துக்கு முன்னால் வந்த படத்தோட முடிவுல, கல்யாண ரிசெப்ஷன் நடக்கும்.. அதுல ஒவ்வொரு சீனும் 'போடோ' எடுக்குராப்புல அமையும்..
அப்ப, ஒரு நண்பர் அடிச்சா கமெண்டு..
'இந்த படத்துக்கு, டைட்டில் photographன்னு வைச்சிருக்கலாம்"
அன்பின் வெங்கட்
நானும் படிப்பேன் - 1967 ஆட்டோ கிராப் - வெள்ளந்தியாக் - என்ன எழுதுவது எனத் தெரியாமல் எதையாவது எழுதிக் கையொப்பம் இட்டிருக்கும் நட்பினை நினைக்கும் போது மனம் லேசாகும்
ம்ம்ம்ம்ம்
பதிலும் தகவலும் சூப்பர்
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
Ippo dhaan unga blogs ellam padikka arambichi iruken. Romba funnya nalla irukku. Unga friends, appuram wife kooda pesura madhiri neenga podura blogs ellam super. Sirichikittae padikalam! Good ones
Post a Comment