சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 June 2011

மாஸ்டர்..! கணக்கை மாத்தி போடுங்க..!

Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..

எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..

( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி......

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )

ஒரு தடவை கிளாஸ்ல அவர்
" பிதோகரஸ் தியரம் " எடுத்துட்டு
இருந்தாரு..

அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த " பிதோகரஸ்சை " கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!

ம்ம்...அன்னிக்கு " பிதோகரஸ்சை "
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..

( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )

அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி....

Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..


" இதுல " C "-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! "

அவன் திரு திருன்னு முழிச்சான்..

" என்னடா.. முழிக்கிற..? "

" சார் அது வந்து.. "

" சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க... அப்ப " C "-ன்
Value என்ன..? "

அவன் " டக்னு " Answer சொல்லிட்டான்..

" C = 7 சார்..! "

" என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு " ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..

( நல்லவேளை நான் எஸ்கேப்..! )

கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..

" ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? "

" என்றா சொல்ற..? "

" பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் " C = 7 "-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! "

" அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! "

( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )

டிஸ்கி : நேத்து நான் டெரர் கும்மில எழுதிய
காவியம்.. " அனுஷ்காவா.? தமன்னாவா..? "
படிக்க இங்கே க்ளிக்.
.
.

43 Comments:

RAMA RAVI (RAMVI) said...

கிளசுக்கு நான் first வந்துட்டேன் போல இருக்கே.எனக்கு கணக்கு பாடம் ரொம்ப் பிடிக்கும் வெங்கட்.....

Madhavan Srinivasagopalan said...

இதென்ன சின்ன புள்ளத் தனமா இருக்கு..



பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. --

அதாவது மாஸ்டர் சொன்ன பேச்சுக்கு தகுந்தா மாதிரி பதில் பேச்சு இருக்க வேணாமா ?

உங்கள் பிரண்டு, தான் இஷ்டத்துக்கு 'பேசலாமா' அதான்..

Madhavan Srinivasagopalan said...

கருத்து கூறும் இடத்திற்கு மேல் கண்ட வாசகம்..

//பாராட்டு்கள் - பெற்றுக்கொள்ள..! //

ஒக்கே -- நியாயம்.

//குட்டுகள் -
கற்றுக்கொள்ள..!
//

இது - எப்படி அடுத்தவனை குட்டுறதுன்னு கத்துக்கவா ?

Anonymous said...

////" பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் " C = 7 "-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ///பையன் சொல்லுறதிலும் நியாயம் இருக்கு தானே ))

செல்வா said...

//எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..//

அவரு நல்லா பாடம் சொல்லித்தரலைனா கூட அவர பாராட்டுற மனப்பக்குவம் VAS க்கு மட்டுமே உள்ள பெருந்தன்மை :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாவே கணக்கு பண்ணி இருப்பீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நீங்க கணக்குல பூனையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கெல்லாம் மேத்ஸ் சொல்லிக்கொடுத்ததுக்கு பதிலா அவர் டீ மாஸ்டரா இருந்திருக்கலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் " C = 7 "-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! "////////

ஒருவேள உங்க மாஸ்டருக்கு 7 ராசியில்லாத நம்பரா இருந்திருக்க போவுது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
கருத்து கூறும் இடத்திற்கு மேல் கண்ட வாசகம்..

//பாராட்டு்கள் - பெற்றுக்கொள்ள..! //

ஒக்கே -- நியாயம்.

//குட்டுகள் -
கற்றுக்கொள்ள..! //

இது - எப்படி அடுத்தவனை குட்டுறதுன்னு கத்துக்கவா ?
////////

அது அப்படியில்ல, குட்டுகள்னு எப்படி எழுதுறதுன்னு கத்துக்கிறாராம்....

எஸ்.கே said...

ஒரு பேச்சுக்கு...அவர் கணக்கு மாஸ்டரே இல்லன்னு வச்சுகிட்டா பதில் சொல்லவே தேவையில்லை!

rajamelaiyur said...

Your friend very brilliant like you . . .

அனு said...

உங்க ப்ரெண்ட் இப்படி குழம்ப காரணமா இருந்த சம்பவத்த மறைச்சுட்டீங்களே..

இடம்:அதே வகுப்பு
நேரம்: பதிவுல சொல்லி இருக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி

ஆசிரியர்: வெங்கட், 2 x 6 எவ்வளவு??
வெங்கட்: (ஓர கண்ணால் வாய்ப்பாடு புக்-கை பார்த்து) 12, சார்..
ஆசிரியர்: பரவாயில்லயே.. சரி.. 6 x 2 எவ்வளவு??
(ஆசிரியர் முன்னாடி பக்கத்த திருப்ப முடியாதுல்ல.. ஸோ, இல்லாத மூளைய use பண்ணுறார்)
வெங்கட்: 21 சார்..
ஆசிரியர்: ??#$@#%@#

அந்த அதிர்ச்சியில இருந்து ஆசிரியர் மீண்டுட்டார் (இவரை மாதிரி எத்தனை பேர பாத்திருப்பார்).. ஆனா பாவம் ஆனந்த், பத்து நாளைக்கு வேப்பிலை அடிச்சதாக தகவல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அனு said...
உங்க ப்ரெண்ட் இப்படி குழம்ப காரணமா இருந்த சம்பவத்த மறைச்சுட்டீங்களே..

இடம்:அதே வகுப்பு
நேரம்: பதிவுல சொல்லி இருக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி

ஆசிரியர்: வெங்கட், 2 x 6 எவ்வளவு??
வெங்கட்: (ஓர கண்ணால் வாய்ப்பாடு புக்-கை பார்த்து) 12, சார்..
ஆசிரியர்: பரவாயில்லயே.. சரி.. 6 x 2 எவ்வளவு??
(ஆசிரியர் முன்னாடி பக்கத்த திருப்ப முடியாதுல்ல.. ஸோ, இல்லாத மூளைய use பண்ணுறார்)
வெங்கட்: 21 சார்..
ஆசிரியர்: ??#$@#%@#

அந்த அதிர்ச்சியில இருந்து ஆசிரியர் மீண்டுட்டார் (இவரை மாதிரி எத்தனை பேர பாத்திருப்பார்).. ஆனா பாவம் ஆனந்த், பத்து நாளைக்கு வேப்பிலை அடிச்சதாக தகவல்..
//////////

என்ன இருந்தாலும் வெங்கட்டுக்கு வாய்ப்பாடு படிக்கத் தெரியும்னு நீங்க சொல்றது ஓவர்.....

சேலம் தேவா said...

//என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!!//

இவ்ளோ நாள் படிக்கற VKS காரங்களுக்கு ஏன் தல வரமாட்டேங்குது..?! :)

Mohamed Faaique said...

///ம்ம்...அன்னிக்கு " பிதோகரஸ்சை "
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்//

சும்மா திட்ட முடியுமா??? அதைப் பற்றி எதாவது தெரிஞ்சிருந்தானே திட்ட முடியும்???

///( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )///

அரைத்தூக்கத்துல இருக்கும் போது குறட்டை விடுவீங்களா??? யாரை ஏமாத்த பாக்குரீங்க???

Mohamed Faaique said...

//அவன் " டக்னு " Answer சொல்லிட்டான்..///

”டக்” அது பறவை பெயராச்சே... அதை சொன்னா அடி பின்னாம, வேற என்ன பண்ணுவாரு????

Mohamed Faaique said...

////நல்லவேளை நான் எஸ்கேப்..!///

எங்க க்லாஸ்’அல்யும் கொஞ்ச பேரு உங்கள போலவே இருந்தாங்க... ஆசிரியர், வேண்டியத பண்ணிக்கோ!!! நீ அடுத்தவங்கள டார்ர்ச்சர் பண்ணாம இருந்தாலே போதும்’னு அவர்களை அப்படியே விட்டு வைத்திருந்தார்...

////என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..///

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம் பூவும் சக்கரையாம்.... உங்க கூட compare பண்ணினா சிரிப்பு போலீஸ் கூட புத்திசாலியோ’னு எண்ண தோனுது!!!!

வெங்கட் said...

@ ராம்வி.,

// எனக்கு கணக்கு பாடம் ரொம்ப
பிடிக்கும் வெங்கட்.....//

ஓ.. இது வேறயா..?

நான் கணக்கு பாடம் பத்தி " திகில் பாடம்னு "
ஒரு பதிவு எழுதி இருக்கேன்.. அதில்
இருந்து சில வரிகள்....

" எத்தனை., எத்தனை Formula.,
என்னை இருக்க விடலையே Normala..!

இதுல ஏதாவது., நம்ம வாழ்க்கையில
எங்கயாவது Use ஆவுதா..?

பின்ன ஏன்..?
ஒரு குழந்தைய ( அட நம்மளதாம்பா..!)
இப்படி டார்ச்சர் பண்ணினீங்க..?

இதெல்லாம் கணக்குல
இருக்குங்கறதுக்காக
நாம படிக்கணுமா.?

Rocket விடக்கூடத்தான்
ஏதாவது கணக்கு இருக்கும்..,
அதையெல்லாம்கூட படிக்க
சொல்லுவாங்களோ..?! "

வெங்கட் said...

@ மாதவன்.,

// உங்கள் பிரண்டு, தான் இஷ்டத்துக்கு
'பேசலாமா' அதான்...//

இதென்ன வம்பா இருக்கு..?

நாங்க முழிச்சிட்டு இருக்கும் போது
சொல்லி குடுக்காததை எல்லாம்..
நாங்க தூங்கிட்டு இருக்கும் போது
கேள்வியா கேக்கலாமா..?!!

samhitha said...

//”டக்” அது பறவை பெயராச்சே... அதை சொன்னா அடி பின்னாம, வேற என்ன பண்ணுவாரு????
//
:D
//உங்க கூட compare பண்ணினா சிரிப்பு போலீஸ் கூட புத்திசாலியோ’னு எண்ண தோனுது//
apo ippo thonalaya?

//நாங்க முழிச்சிட்டு இருக்கும் போது
சொல்லி குடுக்காததை எல்லாம்..
நாங்க தூங்கிட்டு இருக்கும் போது
கேள்வியா கேக்கலாமா..?!!//
gud qus! but neenga eve v2ku poi alarm vachi mulipeengalame :D

//எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு.//
unmai boss neenga sonna madiri edhavadhu nadandhirundha namma countrya yaar kaapathuradhu ??nalla velai apdi edhuvum nadakkala!!

வெங்கட் said...

@ கந்தசாமி.,

// பையன் சொல்லுறதிலும் நியாயம்
இருக்கு தானே ))//

ம்ம்.. அப்படி சொல்லுங்க..

அன்னிக்கு எனக்கு எங்க சார் மேல
பயங்கர கோவம்.. ஆனா அவரு
நல்ல நேரம் அன்னிக்கு வெள்ளிக்கிழமையா
போச்சு..

வெள்ளிக்கிழமையானா நான்
" அடிக்கா விரதம் " இருப்பேன்..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// உங்களுக்கெல்லாம் மேத்ஸ்
சொல்லிக்கொடுத்ததுக்கு பதிலா
அவர் டீ மாஸ்டரா இருந்திருக்கலாம்.... //

ஹி., ஹி., ஹி..! அவர் டீ மாஸ்டரா
இருந்திருந்தா.. அந்த கடையில கூட
நாங்க " கணக்கு " வெச்சு இருக்க
மாட்டோம்..!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அப்போ நீங்க கணக்குல பூனையா? //

பூனைக்கும் கணக்கு தெரியாதா..?!

வெங்கட் said...

@ அனு.,

// உங்க ப்ரெண்ட் இப்படி குழம்ப காரணமா
இருந்த சம்பவத்த மறைச்சுட்டீங்களே.. //

பக்கத்து கிளாஸ்ல இருந்து இதையெல்லாம்
வேடிக்கை பார்த்த நீங்க.. உங்க கிளாஸ்ல
நடந்ததை மட்டும் மறைச்சிட்டீங்களே..

பக்கத்து 10th இங்கிலீஸ் கிளாஸ்..

இங்கிலீஸ் சார் : இந்தாம்மா அனு..
English Book எடுத்துட்டு வா..

அனு : இந்தாங்க சார்..

Book-ஐ பார்த்து., சார் ஷாக் ஆகிறார்..

இ.சார் : என்னமா இது.. இங்கிலீஸ் புக்
கேட்டா.. தமிழ் புக் கொண்டு வர்ற..?

அனு : சாரி சார்.. நான் அப்பவே நினைச்சேன்
என்னடா இது இங்கிலீஸ் புக் மேல தமிழ்னு
எழுதி இருக்கேன்னு..?!

இ.சார் : என்னம்மா உளர்ற..

அனு : வெளிச்சம் கம்மியா இருந்ததால
கலர் சரியா தெரியல சார்...

இ.சார் : கலரா..?

அனு : ஆமா சார்.. இங்கிலீஸ் புக் புளு கலர்ல
இருக்கும்.. தமிழ் புக் லைட் புளு கலர்ல
இருக்கும்..

இ.சார் : ஏம்மா.. அப்ப இவ்ளோ நாளும்
கலரை வெச்சு தான் எந்த புக்னு அடையாளம்
கண்டுபிடிச்சிட்டு இருந்தியா..? படிக்க எல்லாம்
தெரியாதா..?

அனு : ஹி., ஹி., ஹி...

இ.சார் : எழுத படிக்க தெரியாம எப்படிம்மா
10th வரை வந்தே..?

அனு : ( சற்று கோபமாக ) யாருக்கு சார்
எழுத படிக்க தெரியாது..வேணுமனா அனுங்கற
என் பெயரை Spelling Mistake இல்லாம எழுதி
காட்டடுமா..?!

இ.சார் : எங்கே எழுதி காட்டு பார்க்கலாம்..

அனு பேப்பரை எடுத்து எழுதுகிறார்,,,

" A U N "

இ.சார் : ?@#$>??@@?@!

இதுக்கு பிறகு இங்கிலீஸ் சார், அவர்
வேலையை ராஜினாமா பண்ணிட்டு.,
கல்லு உடைக்க போயிட்டதா தகவல்..

samhitha said...

//சும்மா திட்ட முடியுமா???//
yen neenga kaasu vaangitu daan thittuveengala??

//அதைப் பற்றி எதாவது தெரிஞ்சிருந்தானே திட்ட முடியும்???
//
faaique yen ipdi???
adha pathi theriyalena dhaan thittanum
thirinji irundha adha padichitu poite irukkanum

samhitha said...

//இதுக்கு பிறகு இங்கிலீஸ் சார், அவர்
வேலையை ராஜினாமா பண்ணிட்டு.,
கல்லு உடைக்க போயிட்டதா தகவல்..//
//ஆனா பாவம் ஆனந்த், பத்து நாளைக்கு வேப்பிலை அடிச்சதாக தகவல்..//
unga rendu peraiyum pesa vitta neraya unmaigal veliya varum pola irukke :D

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்ன இருந்தாலும் வெங்கட்டுக்கு
வாய்ப்பாடு படிக்கத் தெரியும்னு நீங்க
சொல்றது ஓவர்..... //

யாரை பாத்து வாய்பாடு படிக்க
தெரியாதுன்னு சொன்னீங்க..
இப்பவே தெரியும்னு Prove பண்ணவா...?!!

" தந்தானே.. தந்தன..,தந்தன.,
தந்தனா..

தந்தானே.. தந்தன..,தந்தன.,
தந்தானே...! "

ஆமா Mr.பன்னிகுட்டி..
எழுதும் போது வாய்பாட்டுல
" ட் " விட்டுடீங்களே..!

ஸ்பெல்லிங் மிஸ்டேகா..?!

Madhavan Srinivasagopalan said...

//வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// உங்களுக்கெல்லாம் மேத்ஸ்
சொல்லிக்கொடுத்ததுக்கு பதிலா
அவர் டீ மாஸ்டரா இருந்திருக்கலாம்.... //

ஹி., ஹி., ஹி..! அவர் டீ மாஸ்டரா
இருந்திருந்தா.. அந்த கடையில கூட
நாங்க " கணக்கு " வெச்சு இருக்க
மாட்டோம்..! //

HA.. Ha.. Ha..

ROFL..

இராஜராஜேஸ்வரி said...

//எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..//

பட்டுக்கொண்டுதானே இருக்கிறது.

Mohamed Faaique said...

வெங்கட் க்லாஸ்’ல கணித ஆசிரியர் வந்து ப்லாக் போர்ட்’ல எழுத ஆரம்பிக்கிரார்..

வெங்கட்: ஸார் இந்த கணக்கு எனக்கு புரியவே இல்ல....

ஸார்: யோவ்!!!! இது Date'ய்யா...... கணக்கு இல்ல...

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// இவ்ளோ நாள் படிக்கற VKS காரங்களுக்கு
ஏன் தல வரமாட்டேங்குது..?! :) //

மண்ணுல விதை போட்டா முளைக்கும்.,
ஆனா.. களிமண்ணுல விதை போட்டா
முளைக்குமா..?

ரசிகன் said...

// இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,//

Mathsல centum எடுக்கறதுக்கும்,டாக்டர் சீட் கிடைக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. மெடிக்கல் cutoffல எப்ப இருந்து Maths மார்க் சேக்கறாங்க‌ #டவுட்டு

வெங்கட் said...

@ Mohamed.,

// ”டக்” அது பறவை பெயராச்சே... //

சரியான " வாத்தா " இருப்பீங்க
போல இருக்கு..?

" டக்னு " Answer சொல்லிட்டான் =
உடனே Answer சொல்லிட்டான்.

வெங்கட் said...

@ Mohamed.,

// எங்க க்லாஸ்’அல்யும் கொஞ்ச பேரு
உங்கள போலவே இருந்தாங்க... //

இருந்தாங்களாமாம்.. இவரு அப்படியே
State 1st எடுத்தவரு.. அஞ்சாங் கிளாஸ்
பெயில் ஆயிட்டு.. துபாய்ல ஒட்டகம்
மேய்க்கும் போதே இவ்ளோ பில்டப்பா..?!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// but neenga eve v2ku poi alarm vachi
mulipeengalame :D //

அலாரம் எல்லாம் எதுக்கு..?
அதாம் 4 மணி ஆகிட்டா ஸ்கூல் பெல்
அடிப்பாங்கல்ல.. அப்ப முழிச்சிப்போம்..!

// unmai boss neenga sonna madiri edhavadhu
nadandhirundha namma countrya yaar kaapathuradhu ??
nalla velai apdi edhuvum nadakkala!! //

ம்ம்ம்...! நானும் மேத்ஸ்ல 82 /200 மார்க்
எடுத்தப்ப இதே தான் நினைச்சிக்கிட்டேன்..!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// nga rendu peraiyum pesa vitta neraya
unmaigal veliya varum pola irukke :D //

ஹி., ஹி., ஹி...

@ அனு

நாம இனிமே கொஞ்சம் உஷாராதான்
இருக்கணும் போல..

என்னை ஸ்கூலை விட்டு 2 தடவை
" சஸ்பெண்ட் " பண்ணினதை நீங்க
சொல்லாதீங்க..

உங்களை ஸ்கூலை விட்டு " டிஸ்மிஸ் "
பண்ணினதை நானும் சொல்லலை..

ஓ.கேவா..?!!

வெங்கட் said...

@ Mohamed.,

// வெங்கட்: ஸார் இந்த கணக்கு எனக்கு
புரியவே இல்ல....
ஸார்: யோவ்!!!! இது Date'ய்யா......
கணக்கு இல்ல... //

இது Too Much..! இப்படி எல்லாமா
நான் கேப்பேன்..

தினமும் போர்ட்ல..

No. on Roll : 36
No. of Present : 34
இப்படி எழுதுவாங்க..

இந்த கணக்கு கூடத்தான் எனக்கு
புரிஞ்சதில்ல.. என்னிக்காவது இதை பத்தி
மூச்சு விட்டு இருப்பேனா..?!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// Mathsல centum எடுக்கறதுக்கும்,டாக்டர் சீட்
கிடைக்கறதுக்கும் என்ன சம்பந்தம்..
மெடிக்கல் cutoffல எப்ப இருந்து
Maths மார்க் சேக்கறாங்க‌ #டவுட்டு //

லண்டன் மெடிக்கல் காலேஜ்ல
எல்லாம் இப்படிதான்.. இதெல்லாம்
உங்களுக்கு சொன்னா புரியாது..

அப்புறம்.. லண்டன் எங்கே இருக்குன்னு.?
கேப்பீங்க.. நான் " History Book-ஐ "
எடுத்து பாத்து அதை வேற நான்
Explain பண்ணிட்டு இருக்கணும்..

இதெல்லாம் தேவையா..?

பெசொவி said...

@ ரசிகன்
//
Mathsல centum எடுக்கறதுக்கும்,டாக்டர் சீட் கிடைக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.. மெடிக்கல் cutoffல எப்ப இருந்து Maths மார்க் சேக்கறாங்க‌ #டவுட்டு
//

நீங்க வேற! Ph.D. டாக்டருக்கும் MBBS டாக்டருக்குமே வெங்கட்டுக்கு வித்தியாசம் தெரியாது, அவர்கிட்டபோயி இந்த கேள்விய கேக்கறீங்களே!

பெசொவி said...

/@ venkat

//ம்ம்...அன்னிக்கு " பிதோகரஸ்சை "
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்//

ஆனா, பிதாகரஸ் இன்னிக்கு இல்லாததைப் பார்த்து சந்தோஷப்படற நல்ல உள்ளங்கள் VKS மட்டுமே!
(இருந்திருந்தா, இந்தப் பதிவைப் படிச்சுட்டு தற்கொலை பண்ணிகிட்டிருப்பாறு!)

பெசொவி said...

//டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி......

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!!//

நீங்க டாக்டர் ஆகியிருந்தா, இன்னும் எத்தனை பேரோட மூச்சை வாங்கியிருப்பீங்களோ! :)

பெசொவி said...

@ Venkat
//( நல்லவேளை நான் எஸ்கேப்..! )
//

எஸ்கேப் ஆனது உங்க Maths வாத்தியார்தான்! ஆனந்தாவது ஏழு சொன்னதுல ஒரு லாஜிக் இருக்கு (4+3= 7 தான?) ஆனா உங்களை கேட்டிருந்தா, உங்க பதில் மாஸ்டரையே குழப்பி விட்டிருக்கும்!