சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 June 2011

யப்பா..! மங்குனிக்கு இம்புட்டு அறிவா..?!!!





















நம்ம மங்குனி போன வாரம் புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினாராம்..

அதுல ஏகப்பட்ட  பிரச்னைன்னு
அந்த கம்பெனிக்கு ஒரு லெட்டர்
எழுதியிருக்காரு பாருங்க..
சான்ஸே இல்ல

மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா...

To
&%^$#@&*^%$#- HCL,

( மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்.. )

போன வாரம் நான் வாங்கின
கம்ப்யூட்டர்ல ஏகப்பட்ட தப்பு இருக்கு..

1. என் Keyboard-ல ABCD எல்லாம்
வரிசையா இல்லாம இடம்
மாறி மாறி இருக்கு..

2. என் Key Board-ல Control Key
இருக்கு. ஆனா எத்தனை தடவை
அழுத்தினாலும் என் Wife-ஐ என்னால
Control பண்ணவே முடியல.

3. தப்பு பண்ணினப்ப Wife-கிட்ட
மாட்டிக்காம இருக்க Escape Key-ஐ
அழுத்தி பார்த்தேன்.. அதுவும் சரியா
வேலை செய்யல.. தர்ம அடி..

4. என் Key Board-ல ரெண்டு
' Shift ' Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?

5. அந்த TV-ல ( Monitor ) சேனல்
மாத்தற பட்டனே இல்ல..
முக்கியமா நீங்க Remote தரலை..
( யாரை ஏமாத்த பாக்கறீங்க.?! )

6. ஆபீஸ்ல இருக்கும் போது
பல தடவை " Home " Button-ஐ
அழுத்தி பாத்துட்டேன்.. அது என்னை
வீட்டுக்கே கூட்டிட்டு போகலையே..

7. " $ " Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..

8. அதே மாதிரி " காபி " Button-ஐ
அழுத்தினாலும் " காபி " வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
( எலே மங்கு.. அது " Coffee " இல்ல.,
" Copy " )

9. Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?

10. என் பையன் Homework தப்பா
எழுதினப்பா " Delete " Key அழுத்தி
பார்த்தேன்.. ஆனா தப்பா எழுதினதெல்லாம்
அது அழிக்கலையே..

இதையெல்லாம் எனக்கு சரி பண்ணி
தரல.. பிச்சுபுடுவேன் பிச்சு...

இப்படிக்கு
அன்பு மங்குனி அமைச்சர்
( ஆமா.. இப்ப இது ஒண்ணு தான்
குறைச்சல்.! )

டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.
.
.

47 Comments:

rajamelaiyur said...

//
என் Key Board-ல ரெண்டு
' Shift ' Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?

///
நல்ல சந்தேகம்

Madhavan Srinivasagopalan said...

//" $ " Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..//

பழனிக்கு போங்க - முருகன் டாலர்
திருப்பதி போங்க - பாலாஜி டாலர்
சபரிமலை போங்க - ஐயப்பன் டாலர்...

இதெல்லாம் விட்டுட்டு.. US டாலர் வேணுமாம்.. ஆசைதான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்கு ஒரு நடமாடும் என் சைக்கிள பிடியா!!!

கூடல் பாலா said...

\\\டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.\\\ இதை பார்த்ததும் சூ சைடு பண்ணவேண்டிய அவசியம் இல்லை .தானாவே செத்து போயிடுவான் .....

கோவை நேரம் said...

ஹி..ஹி.ஹி ..ஹி

Mohamed Faaique said...

F1 F1 F1 F1 F1 F1 F1 F1 F1 F1

samhitha said...

:D :D :D
wt a doubttttt??
ellam seriyana sandhegama dhaane irukku??
andha companykaranuku ivlo arivu illa pola :D

ரசிகன் said...

New HardWare Requirements:
Key board : Key to Save from Gokulathilsuriyan
Mouse : With pointer auto closing this blog
Monitor : Deluminating Blogger’s snap
Our Memory : Highly volatile to forget this as soon as we could.

Manish said...

I LIKE THIS VERY MUCH

vinu said...

venky / manguni rocks

பெசொவி said...

எங்க ஆறு பேரைத் தவிர மத்தவங்கல்லாம் VAS மெம்பர்னு பெருமையா சொல்வீங்களே, மங்குனி VAS மெம்பர்னு நிருபிக்கிறாரு, அவ்ளோதான?

பெசொவி said...

// மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்..
//
இப்பதான் புரியுது, உங்க போஸ்ட்ல வர்ற கமெண்ட் ஏன் கம்மியா இருக்குன்னு, நீங்களும் உங்களைத் தாறுமாறா திட்டி வர கமெண்டை எல்லாம் டெலீட் பண்ணிடுறீங்களா?

பெசொவி said...

எல்லாம் சரி, கீ போர்டில Enterனு இருக்கறதைப் பார்த்துட்டு, அந்த பட்டனை எடுத்துட்டு உள்ள நுழையப் பார்த்தீங்களே, அது பத்தி ஒன்னும் சொல்லவே இல்லை?

பெசொவி said...

//. அதே மாதிரி " காபி " Button-ஐ
அழுத்தினாலும் " காபி " வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
//

எனக்கு காப்பி பிடிக்காது, டீ பட்டனே கொடுங்கன்னு நீங்க கடைக்காரன்கிட்ட கெஞ்சினதை மறந்துட்டீங்க, போலிருக்கு!

பெசொவி said...

// Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?
//

உங்ககிட்ட இருக்கற தொப்பியை எல்லாம்(Caps) வச்சு பூட்டப் பார்த்தீங்களே, அதை மறைக்கிறீங்களே?

பெசொவி said...

//டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.
//

ஏன்னா ஏற்கெனவே இந்த மாதிரி ஒரு லெட்டரை அவன் படிச்சிருக்கான், அது வெங்கட் எழுதினதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நம்ம மங்குனி போன வாரம் புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினாராம்..////////

மாடு மேய்க்கிறதுக்கு எதுக்கு கம்ப்யூட்டர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதுல ஏகப்பட்ட பிரச்னைன்னு
அந்த கம்பெனிக்கு ஒரு லெட்டர்
எழுதியிருக்காரு பாருங்க..
சான்ஸே இல்ல///////

ஓ மங்குவுக்கு லெட்டர்லாம் எழுத தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா...//////////

உங்கள விடவா? என்ன ஒரு தன்னடக்கம்... என்ன ஒரு தன்னடக்கம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////( மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்.. )//////////

இது என்ன லெட்டரா இல்ல பரிட்ச பேப்பரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////1. என் Keyboard-ல ABCD எல்லாம்
வரிசையா இல்லாம இடம்
மாறி மாறி இருக்கு..////////

மங்குவுக்கு தமிழே படிக்கத் தெரியாதே, அப்புறம் ABCD-லாம் எப்பிடி கண்டுபுடிச்சாரு? உண்மையச் சொல்லுங்க ... இது நீங்க எழுதிக் கொடுத்த லெட்டர்தானே?

இம்சைஅரசன் பாபு.. said...

இவ்வளவையும் கேட்டுகிட்டு உயிரோட இருக்காரே மங்குனி ..
அவரு ரொம்ப நல்லவரு ..வல்லவரு ..நாளும் தெரிஞ்சவரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்கு ஒரு நடமாடும் என் சைக்கிள பிடியா!!!
//////////

என்னது மங்கு உன் சைக்கிள புடிச்சுக்கனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////2. என் Key Board-ல Control Key
இருக்கு. ஆனா எத்தனை தடவை
அழுத்தினாலும் என் Wife-ஐ என்னால
Control பண்ணவே முடியல./////////

ஒரு வேள கரண்டு கனக்சன் கொடுக்காம இருந்திருப்பாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////3. தப்பு பண்ணினப்ப Wife-கிட்ட
மாட்டிக்காம இருக்க Escape Key-ஐ
அழுத்தி பார்த்தேன்.. அதுவும் சரியா
வேலை செய்யல.. தர்ம அடி..//////

ஒருவேள தப்புபண்ண முன்னாடியே escape கீய அழுத்தி இருக்கனுமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////4. என் Key Board-ல ரெண்டு
' Shift ' Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?
/////////

பகல்ல அது Day Shift, நைட்டு Night Shift......? இதுக்குப் போயி...? என்ன வெங்கட் நீங்களும் பக்கத்துலதனே இருந்தீங்க, சொல்றதில்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////5. அந்த TV-ல ( Monitor ) சேனல்
மாத்தற பட்டனே இல்ல..
முக்கியமா நீங்க Remote தரலை..
( யாரை ஏமாத்த பாக்கறீங்க.?! )//////

ஒருவேள அதுல தூர்தர்சன் மட்டும்தான் வருமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////6. ஆபீஸ்ல இருக்கும் போது
பல தடவை " Home " Button-ஐ
அழுத்தி பாத்துட்டேன்.. அது என்னை
வீட்டுக்கே கூட்டிட்டு போகலையே..//////

கம்ப்யூட்டர்கிட்ட யாரோட வீட்டுக்குன்னு சொல்லி இருக்கமாட்டாரு, கரெக்டா சொல்லவேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////7. " $ " Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..///////

யோவ் சும்மா அழுத்துனா எப்பிடி? எத்தன டாலர் வேணும்னு சொல்லிட்டு அழுத்தனும்யா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////8. அதே மாதிரி " காபி " Button-ஐ
அழுத்தினாலும் " காபி " வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..? ////////

அட என்னய்யா இது? பால் காப்பியா, வரக்காப்பியா, எத்தனை அப்படின்னு வெவரமா அழுத்த வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////9. Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?
/////////

அது கம்ப்யூட்டர பூட்டுறதுக்கா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////10. என் பையன் Homework தப்பா
எழுதினப்பா " Delete " Key அழுத்தி
பார்த்தேன்.. ஆனா தப்பா எழுதினதெல்லாம்
அது அழிக்கலையே.. ////////

அது கரெக்டா எழுதுனாத்தான் அழிக்குமாம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல./////////

இந்த லெட்டர படிச்சிட்டு வெறும் சூசைட் அட்டம்ப்ட் மட்டுமா பண்ணுனான்.....? ஷேம் ஷேம்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பெசொவி said...
எல்லாம் சரி, கீ போர்டில Enterனு இருக்கறதைப் பார்த்துட்டு, அந்த பட்டனை எடுத்துட்டு உள்ள நுழையப் பார்த்தீங்களே, அது பத்தி ஒன்னும் சொல்லவே இல்லை?
////////

அப்புறம் என்னாச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பெசொவி said...
//. அதே மாதிரி " காபி " Button-ஐ
அழுத்தினாலும் " காபி " வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
//

எனக்கு காப்பி பிடிக்காது, டீ பட்டனே கொடுங்கன்னு நீங்க கடைக்காரன்கிட்ட கெஞ்சினதை மறந்துட்டீங்க, போலிருக்கு!////////

அப்போ அந்த பட்டனை வெச்சித்தான் டெய்லி டீ குடிக்கிறாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பெசொவி said...
//டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.
//

ஏன்னா ஏற்கெனவே இந்த மாதிரி ஒரு லெட்டரை அவன் படிச்சிருக்கான், அது வெங்கட் எழுதினதுதான்!
////////

அப்போ அத மங்கு வழக்கம் போல காப்பி பேஸ்ட் பண்ணிட்டாரா?

குறையொன்றுமில்லை. said...

ஐயோ ,தாங்கலியே, இன்னும் சிருச்சிகிட்டே இருக்கேன். நல்ல கற்பனைதான் போங்க.

Shalini(Me The First) said...

:) :) :) :) :) :) :) :) :) :) :) :)

அருண் பிரசாத் said...

நானும் இப்போ வரும்... அப்போ வரும்னு ஒவ்வொரு பதிவுக்குவந்து பார்கறேன் வரவே மாட்டேங்குது....என்னது எதுவா? அட சொந்தமா நீங்க எழுதின பதிவுதாங்க....

அடுத்த மண்டபத்துக்கு போங்க...போய் ஒரு நல்ல பதிவா அடுத்தமுறையாவது தேத்திட்டு வாங்க

Mohamed Faaique said...

உங்க கூட நட்பு வச்சதுக்கு மங்குக்கு வேணும் ஸார்....

காந்திமதி said...

மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா
>>>>
அவர் ரொம்ப புத்திசாலினு எங்களுக்கெல்லாம் முன்னாடியே தெரியும் எப்படினு யோசிக்குறீங்களா? உங்கக்கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்போதே தெரியலியா அவர் "எம்புட்டு" புத்திசாலினு

வெங்கட் said...

@ அருண்.,

// நானும் இப்போ வரும்... அப்போ வரும்னு
ஒவ்வொரு பதிவுக்குவந்து பார்கறேன்
வரவே மாட்டேங்குது....என்னது எதுவா?
அட சொந்தமா நீங்க எழுதின பதிவுதாங்க.... //

பிச்சுபுடுவேன் பிச்சு..

இந்த பதிவுல இருக்குற எல்லாமே
நான் சொந்தமா எழுதினது தான்..

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ அருண்.,

// நானும் இப்போ வரும்... அப்போ வரும்னு
ஒவ்வொரு பதிவுக்குவந்து பார்கறேன்
வரவே மாட்டேங்குது....என்னது எதுவா?
அட சொந்தமா நீங்க எழுதின பதிவுதாங்க.... //

பிச்சுபுடுவேன் பிச்சு..

இந்த பதிவுல இருக்குற எல்லாமே
நான் சொந்தமா எழுதினது தான்..///

sari , sari vidu venkat....... yappaa pothu makkale intha pathiva yeluthi kuduththathu naan illai , naan illai , naan illai ........... pothumaa venkat

படிக்காதீங்க.. (இந்திரா) said...

ஹாஹா மங்கு ப்ரகாசமா எரியுறாரே...


சரி சரி.. என் பழைய ப்ளாக்குக்கு யாரோ செய்வினை வச்சுட்டாங்க. அதுனால புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன். வந்துட்டுப் போங்க.
வரலைனா உங்களுக்கு சூன்யம் வச்சிருவேன்.. சொல்லிபுட்டேன்...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இவ்வளவு சந்தேகமும் கணினியை வீட்டுக்கு கொண்டு வருமுன் இல்ல வந்திருக்கணும். இது என் சந்தேகம்

Kavasker said...

good keep going.... after long time i opened the blog today.... but not able to read .. i ill try to read some time soon

Kavasker Raman
Singapore

பட்டிகாட்டான் Jey said...

இந்தப்பதிவில், விட்டுப்போன , ஆனால் மங்குனி அனுப்பிய கடிததில் இருந்த மற்ர கேள்விகள்:-

11. விண்டோஸ் பட்டன் இருக்கு, அத அமுத்தினா ஆப்பீஸ் ஜன்னல் எல்லாம் கொளோஸ் ஆக மாட்டீங்குது....

12. Print Screen பட்டன் இருக்கு அமுத்துனா ப்ரிண்ட் வரலை...
13. F 1 பட்டன் இருக்கு, அமுத்துனா ஃபார்முலா ரேஸ் ஸ்கிரீனுல தெரிய மாட்டீங்குது...
13. Numlock அமுத்துனா, வலது சைடு இருக்கிர நம்பர்ஸ் மட்டும் லாக் ஆகுது... இடது லாக் ஆகலை...

14. Sleep அமுத்துனா தூக்கம் வரலை...........

15. Tab அமுத்துனா தலைவலி மாத்திரை கிடக்கலை.....