சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 June 2011

" 5 " கண்டீஷன்ஸ்..!


இடம் : ஹாஸ்பிடல்

டாக்டரிடம் Patient-ன் மனைவி..

" டாக்டர்.. என் Husband எப்படி
இருக்காரு..? "

" மேடம்..! உங்க Husband Health
கொஞ்சம் Critical-ஆ தான் இருக்கு..! "

" என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க..?
நான் உங்களை தான் தெய்வம்
மாதிரி நம்பிட்டு இருக்கேன்..! "

" பயப்படாதீங்க மேடம்....நான் சொல்ற
மாதிரி செய்ங்க.. அவரு சீக்கிரமே
குணமாயிடுவாரு..! "

" சொல்லுங்க டாக்டர்.. என்ன செய்யணும்..?
அவருக்காக நான் என் உயிரையும்
குடுப்பேன்..! "

" ஓவரா உணர்ச்சிவசப்படாதீங்க.
நான் சொல்றதை மட்டும் Follow
பண்ணுங்க.அது போதும்.. "

" சரி.. சொல்லுங்க டாக்டர்.. "

" ம்ம்..

1. தினமும் அவருக்கு பிடிச்சமான
உணவை சமைச்சி குடுங்க.

2. அவர்கிட்ட அன்பா இருங்க., எந்த
விஷயத்துகும் சண்டை போடாதீங்க.

3. உங்க பிரச்னைகளை அவர்கிட்ட
சொல்லி புலம்பாதீங்க.

4. சேலை வேணும்., நகை வேணும்னு
அவரை டார்ச்சர் பண்ணாதீங்க..

5. முக்கியமா.. மெகா சீரியல் பார்க்காதீங்க.

இதையெல்லாம் நீங்க கரெக்டா Follow
பண்ணுங்க.. ஒரு வருஷத்துல
உங்க Husband நல்லாயிடுவாரு.. "

" சரிங்க டாக்டர்..! "

வீட்டுக்கு போற வழியில
கணவர் தன் மனைவியிடம்...

" டாக்டர் என்ன சொன்னாரு..? "

" நீங்க பொழைக்கறதுக்கு வழியே
இல்லன்னு சொல்லிட்டாருங்க..! "

" ?!!?!!?! "

டிஸ்கி 1 : " அந்த Patient யாரு.? "
" அந்த Wife யாரு..? " இப்படிபட்ட
மொக்கை கேள்வியை எல்லாம்
என்னை மாதிரி ஒரு டாக்டரை பாத்து
கேக்க கூடாது..

டிஸ்கி 2 : இன்னிக்கு நான் " டெரர் கும்மி "
பிளாக்ல எழுதின பதிவை படிக்க
இங்கே க்ளிக்.
.
.

42 Comments:

இம்சைஅரசன் பாபு.. said...

// நீங்க பொழைக்கறதுக்கு வழியே
இல்லன்னு சொல்லிட்டாருங்க..! "//

கடைசி செம பினிஷிங் மக்கா .ஹ ஹா ..எனக்கு என்னமோ இது நம்ம பன்னிகுட்டிய சொன்ன மாதிரி ஒரு பீலிங்

Madhavan Srinivasagopalan said...

எதிர்பாராத பல்பு.. கணவருக்கு..

Mahan.Thamesh said...

SUPER BASS

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு.... எங்க சுட்டீங்க பாஸ்????

Mohamed Faaique said...

///: " அந்த Patient யாரு.? "
" அந்த Wife யாரு..? " இப்படிபட்ட
மொக்கை கேள்வியை எல்லாம்
என்னை மாதிரி ஒரு டாக்டரை பாத்து
கேக்க கூடாது.. ///

ஆமா.... ஏன்னா, இவரு மாட்டு டாக்டர் மாத்திரமே!!!!

Mohamed Faaique said...

////இன்னிக்கு நான் " டெரர் கும்மி "
பிளாக்ல எழுதின பதிவை படிக்க ///

இதப் படிச்சதுக்கே கண்ண கட்டுது(டாக்டர், இதுக்கு மருந்து சொல்லி குடுப்பாரோ??) இதுல லின்க் வேற குடுக்குராரு.....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super joke. . . Super comedy

Mohamed Faaique said...

///Super joke. . . Super comedy///

அவரு பிரச்சனைய மனசு விட்டு சொல்லி இருக்காரு... ஆறுதல் சொல்ரத விட்டுடு, இப்படியெல்லாம் கடுப்பேதுரீங்க....

அருண் பிரசாத் said...

இடம்: ஹாஸ்பிடல்

டாக்டரிடம் வெங்கட்டின் மனைவி...

" டாக்டர்.. என் Husband எப்படி
லூசானாரு..இப்போ எப்படி இருக்காரு? "

" மேடம்..! உங்க Husband இப்பவும்
லூசா தான் இருக்கு..! "

" என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க..?
நான் உங்களை தான் தெய்வம்
மாதிரி நம்பிட்டு இருக்கேன்..! நீங்க தான் அவர் கிட்ட இருந்து எங்களை காப்பாத்தனும்..."

" பயப்படாதீங்க மேடம்....நான் சொல்ற
மாதிரி செய்ங்க.. அவரு சீக்கிரமே
குணமாயிடுவாரு..! "

" சொல்லுங்க டாக்டர்.. என்ன செய்யணும்..?
அவருக்காக நான் என் உயிரையும்
குடுப்பேன்..! "

" ஓவரா உணர்ச்சிவசப்படாதீங்க.
நான் சொல்றதை மட்டும் Follow
பண்ணுங்க.அது போதும்.. "

" சரி.. சொல்லுங்க டாக்டர்.. "

" ம்ம்..

1. இனி அவர் பிளாக் எழுத கூடாது

2. அப்படியே எழுதினாலும் மொக்கை போட கூடாது

3. SMSல வந்துச்சு, மெயில்ல வந்துச்சினு பதிவு போட்டு மத்தவங்களை டார்சர் பண்ண கூடாது

4. ஒபாமா கூப்பிட்டாங்க, ஜாக்கிசான் கூப்பிட்டாங்கனு பில்டப் குடுக்ககூடாது

5. முக்கியமா நல்லவங்க அதான்மா VKS மெம்பர்ஸ் சொல்லுறபடி நடக்கனும்

இதையெல்லாம் நீங்க கரெக்டா Follow
பண்ணுங்க.. ஒரு வருஷத்துல
வெங்கட் நல்லாயிடுவாரு.. "

" சரிங்க டாக்டர்..! "

வீட்டுக்கு போற வழியில
வெங்கட் அவர் மனைவியிடம்...

" டாக்டர் என்ன சொன்னாரு..? "

" நாங்க பொழைக்கறதுக்கு வழியே
இல்லன்னு சொல்லிட்டாருங்க..! "

ரசிகன் said...

@Arun..
:-)))))) தூள்.. பழிக்கு பழி.. ரத்தத்துக்கு ரத்தம்...

samhitha said...

:D :D :D
உங்களோட ரெண்டு பதிவும் சூப்ப்பர்ர்ர்..
சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது
உங்க கற்பனை(???) ரொம்ப நல்லா இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@அருண்

ROFL

முனைவர்.இரா.குணசீலன் said...

;)

அனு said...

அருண்.. கலக்கல்ல்.. VKSஆ கொக்கா.. :)

(என்னது.. பதிவு சம்பந்தமா ஒண்ணும் சொல்லலயேவா?? அதெல்லாம் இந்த மெயில வெங்கட்க்கு அனுப்பியவங்க கிட்ட டைரக்ட்டா சொல்லியாச்சு..)

//" டெரர் கும்மி" பிளாக்ல எழுதின பதிவை படிக்க இங்கே க்ளிக். //

விஷம் குடிக்குறதுன்னு முடிவாகிடுச்சு.. சிங்கிள் டோஸா இருந்தா என்ன, டபுள் டோஸா இருந்தா என்ன?? எல்லாம் ஒண்ணு தான்.. ம்ம்.. குடிக்கிறோம்.. இல்ல, படிக்கிறோம்..

Uma said...

வெங்கட் சுபெர்ப். செம காமெடி. நீங்களே யோசிச்சு எழுதினதா இல்ல சுட்டதா?

Uma said...

அருண் எழுதினதும் சுபெர்ப்.

royal ranger said...

அருமையான கதை ..........
சூப்பர் காமெடி ............
கடைசில செம்ம ட்விஸ்ட்டு .............

(நடுவுல மானே தேனே பொன் மானே எல்லாம் நீங்களே போட்டுகோங்க.....ஹி ஹி )

ராஜி said...

நீங்கதான் அந்த டாக்குடரா அப்போ பேஷன்ட்லாம் வெளங்குன மாதிரிதான். ஐயோ பாவம் பேஷண்ட்லாம்.

middleclassmadhavi said...

பதிவு :-))
பின்னூட்டங்கள் :-))))

கிச்சா said...

//டிஸ்கி 1 : " அந்த Patient யாரு.? "
" அந்த Wife யாரு..? " இப்படிபட்ட
மொக்கை கேள்வியை எல்லாம்
என்னை மாதிரி ஒரு டாக்டரை பாத்து
கேக்க கூடாது.. //
பாவா நீ எப்ப டாக்குட்டர் ஆன..ஓ டாக்குட்டர் விஜய் மாதிரி எங்கயாவது காசு கொடுத்து வாங்கிட்டியா

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// எனக்கு என்னமோ இது
நம்ம பன்னிகுட்டிய சொன்ன
மாதிரி ஒரு பீலிங் //

நோ. நோ.. நானாவது..
நம்ம பன்னிகுட்டியை
கிண்டல் பண்றதாவது..?

( அடுத்த வாரம் எனக்கு அவார்டு
தர்றேன்னு பன்னிகுட்டி சொல்லியிருக்காரு..
அதை கெடுக்க திட்டம் போடறீங்களா..?!

என்ன ஒரு வில்லத்தனம்..!? )

வெங்கட் said...

@ Mohamed.,

// ஆமா.... ஏன்னா, இவரு மாட்டு
டாக்டர் மாத்திரமே!!!! //

ஓ.. அப்படி நினைச்சி தான் போன வாரம்
எங்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்தீங்களா..?

நான் லண்டன் மெடிக்கல் காலேஜ்ல
1st Std -ல இருந்து டிகிரி வரைக்கும்
படிச்சவனாக்கும்..

வெங்கட் said...

@ அருண்.,

// இடம்: ஹாஸ்பிடல்
டாக்டரிடம் வெங்கட்டின் மனைவி... //

பதிவு எழுதி பெயர் வாங்கும்
பதிவர்கள் இருக்கிறார்கள்..

பதிவை உல்டா பண்ணியே
பெயர் வாங்கும் பதிவர்கள்
இருக்கிறார்கள்..

இதில் நீர் எந்த வகை என்று
உமக்கே தெரியும்..!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// :-)))))) தூள்.. பழிக்கு பழி..
ரத்தத்துக்கு ரத்தம்... //

என்னாது பழிக்கு பழியா..?

ஹலோ... நான் பதிவுல சொன்னது
அருணை பத்தியில்லங்க..

நீங்களா இப்படி ஒரு முடிவுக்கு
வந்தா எப்படி..?

@ அருண்.,

இந்த மாதிரி டெக்னிக்கலான கமெண்ட்
எல்லாம் உங்களுக்கு விளங்காது..
அதான் நானே நல்லா விலாவரியா
Explain பண்ணி எடுத்து குடுத்து
இருக்கேன்.. ஹி., ஹி..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//பதிவு எழுதி பெயர் வாங்கும்
பதிவர்கள் இருக்கிறார்கள்..

பதிவை உல்டா பண்ணியே
பெயர் வாங்கும் பதிவர்கள்
இருக்கிறார்கள்..

இதில் நீர் எந்த வகை என்று
உமக்கே தெரியும்..!//

என்ன சொல்லவரீங்கனு புரியுது... நீங்க தருமி, நான் நக்கீரன்...

சரிதான்... VKS எல்லாருமே நக்கீரர் மாதிரி தவறை யார் செய்தாலும் சுட்டி காட்டுவோம்...

நீங்க தருமின்றதுக்கு ஏத்த மாதிரி பதிவை மண்டபத்துல யார் எழுதி கொடுத்ததுனு சொல்லிடுங்க

samhitha said...

//ஓ.. அப்படி நினைச்சி தான் போன வாரம்
எங்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்தீங்களா..?
//
:D :D paavam padika theriyama vandhuruppar

//நான் லண்டன் மெடிக்கல் காலேஜ்ல
1st Std -ல இருந்து டிகிரி வரைக்கும்
படிச்சவனாக்கும்//
lkg ukg enga nu sollave illa :D

ரசிகன் said...

@venkat
// நான் பதிவுல சொன்னது அருணை பத்தியில்லங்க..நீங்களா இப்படி ஒரு முடிவுக்கு வந்தா எப்படி..? //
இந்த கோத்து விடற வேலையெல்லாம் இங்க செல்லாது.. நாங்கல்லாம், தெருவுல போற யார் கடிபட்டாலும், பரிதாபப்பட்டு காப்பாத்த கல்லெறியிற பொது நலவாதிங்க... அதான் பொதுமக்கள பழி வாங்கற‌ உங்கள அருண் திருப்பி பழி வாங்கினதுக்கு பாராட்டு வாங்கி குவிக்கறார்.. உங்களுக்கு பொறாஆஆஆஆமை..

வெங்கட் said...

@ அனு.,

// என்னது.. பதிவு சம்பந்தமா ஒண்ணும்
சொல்லலயேவா?? அதெல்லாம் இந்த
மெயில வெங்கட்க்கு அனுப்பியவங்ககிட்ட
டைரக்ட்டா சொல்லியாச்சு..) //

கொஞ்சம் விட்டா...
" கம்ப ராமாயணத்தை " படிச்சிட்டு
வால்மீகிக்கு வாழ்த்து சொல்லுவீங்க
போல இருக்கு..?!!

வெங்கட் said...

@ அனு.,

// விஷம் குடிக்குறதுன்னு முடிவாகிடுச்சு..
சிங்கிள் டோஸா இருந்தா என்ன,
டபுள் டோஸா இருந்தா என்ன??
எல்லாம் ஒண்ணு தான்.. ம்ம்.. குடிக்கிறோம்.. //

ம்ம்... Daliy உங்க சமையலை
நீங்களே சாப்பிடற ஆளாச்சே நீங்க..
அதுக்கு முன்னாடி இந்த விஷமெல்லாம்
எம்மாத்திரம்..?!

வெங்கட் said...

@ ராயல் ரேஞ்சர்.,

// நடுவுல மானே தேனே பொன் மானே
எல்லாம் நீங்களே போட்டுகோங்க... //

ஐ..! பார்க்கறதுக்கு அப்படியே அசப்புல
கமல் மாதிரியே இருக்கீரு..
( ' குணா ' கமல்..! )

வெங்கட் said...

@ உமா.,

// அருண் எழுதினதும் சுபெர்ப். //

அதை " எழுதினதுன்னு " சொல்லகூடாது..

உல்டா பண்ணினது, ஜெராக்ஸ் எடுத்தது.,
காப்பி அடிச்சது, பிட் அடிச்சது.,
சுட்டது., ரீமேக் பண்ணினது.,
டப்பிங் பண்ணினது ( ஓ.. இது சினிமாவுக்கு
மட்டும் தான் வருமோ..! ஹி., ஹி..! )

இப்படி எதாவது தான் சொல்லோணும்..

வெங்கட் said...

@ ராஜி.,

// நீங்கதான் அந்த டாக்குடரா அப்போ
பேஷன்ட்லாம் வெளங்குன மாதிரிதான்.
ஐயோ பாவம் பேஷண்ட்லாம். //

நீங்க மட்டும் என்னமோ பெரிய உசத்தி
டாக்டர்கிட்ட Treatment எடுத்துக்குற மாதிரி
பில்ம் காட்றீங்க..?!!

" கீழ்பாக்கம் ஹாஸ்பிட்டல்ல " இருக்குற
அந்த டாக்டரு கூட எனக்கு ஒரு வருஷம்
ஜூனியர் தான்.. தெரிஞ்சிக்கோங்க..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா & உமா.,

// உங்க கற்பனை (???) //

// வெங்கட் சுபெர்ப். செம காமெடி.
நீங்களே யோசிச்சு எழுதினதா இல்ல சுட்டதா? //

காமெடி சொன்னா அனுபவிக்கணும்..
இப்படி பிச்சி போட்டு.,
பஜ்ஜி போடக்கூடாது..!

உஸ்ஸப்பா..!!

வெங்கட் said...

@ கிச்சா.,

// பாவா நீ எப்ப டாக்குட்டர் ஆன..
ஓ டாக்குட்டர் விஜய் மாதிரி எங்கயாவது
காசு கொடுத்து வாங்கிட்டியா //

ஆ..!! எங்கேயோ காசு குடுத்தால்லாம்
டாக்டர் பட்டம் வராது பாவா..

அதெல்லாம் குடுக்க வேண்டிய
இடத்துல கரெக்ட்டா குடுக்கணும்..?

சரி.. உனக்கும் வேணானும்னா சொல்லு
ஒரு MD., FRCS பட்டம் ரெடியா இருக்கு..
கம்மி ரேட்ல முடிக்கலாம்..

வெங்கட் said...

@ அருண்.,

// VKS எல்லாருமே நக்கீரர் மாதிரி
தவறை யார் செய்தாலும் சுட்டி காட்டுவோம்... //

அப்படியா..?

சிவபெருமான் நெத்திகண்ல பொசுங்கணும்னு
உங்களுக்கு தலைவிதி இருந்தா..
அதை யாரால மாத்த முடியும்.?!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// lkg ukg enga nu sollave illa :D //

அது ஒண்ணும் சொல்லிகிற
மாதிரி பெரிய ஸ்கூல் இல்ல...

அதுக்கு பேரு...
" ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டினு"
நினைக்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அஞ்சு லிட்டர் பாலிடால் ப்ளீஸ்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 1 : " அந்த Patient யாரு.? "
" அந்த Wife யாரு..? " இப்படிபட்ட
மொக்கை கேள்வியை எல்லாம்
என்னை மாதிரி ஒரு டாக்டரை பாத்து
கேக்க கூடாது..
//////

நீங்களும் டாகுடரா? அப்போ எங்க சின்ன டாகுடர் கூட நடிப்பீங்களா?

பெசொவி said...

//வெங்கட் said...
@ ஷம்ஹிதா.,

// lkg ukg enga nu sollave illa :D //

அது ஒண்ணும் சொல்லிகிற
மாதிரி பெரிய ஸ்கூல் இல்ல...

அதுக்கு பேரு...
" ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டினு"
நினைக்கிறேன்..
//

எதுக்கும் யாரோ உங்க ஜூனியர், கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி டாக்டர்னு ஒருத்தரு சொன்னீங்களே, அவரைப் போய்ப் பாருங்க, சீக்கிரம் தெளிஞ்சுடும்! :)

பெசொவி said...

// Uma said...
வெங்கட் சுபெர்ப். செம காமெடி. நீங்களே யோசிச்சு எழுதினதா இல்ல சுட்டதா?
//

யாரைப்பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டீங்க, பதிவு சூடா இருக்கும்போதே தெரியலை, சுட்டது தான்னு?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருண் ROFL

RAMVI said...

வணக்கம் வெங்கட்.
நான் இன்று தான் உங்கள் பதிவுக்கு வருகிறேன். ’ஒரு பானை சோற்றிக்கு ஒரு சோறு” என்று சொல்லுவர்களே அது மாதிரி இந்த ஒரு பதிவிலேயே உங்களுடைய humor sense ஜ புரிந்து கொள்ள முடிந்தது. மற்ற பதிவுகளையும் கூடிய விறைவில் படிக்கிறேன்.