சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 June 2011

டோட்டல் டேமேஜ் ( ஹிட்ஸ் பதிவு )

 இடம் : எங்க வீடு..

நேத்து Evening 5 மணி நான் மாடில
இருந்து இறங்கி வரும்போது.,
எதிர்கட்சியை ( VKS ) சேர்ந்த
பெ.சொ.வி ( PSV ) என் P.A-கிட்ட
எதோ பேசிட்டு இருந்தாரு..

" வெங்கட்-ஐ பார்க்கணுமே..! "

" இப்ப முடியாதே..! சாருக்கு இன்னிக்கு
அவார்ட் தர்றாங்க.. அந்த Function-க்கு
கிளம்பிட்டு இருக்காரு..! "

" அவார்டா..? எதுக்கு..? நாலு நாளா
பதிவு எழுதலையே அதுக்கா..? "

" விளையாடாதீங்க.. எங்க சார் பிளாக்
ஒரு லட்சம் ஹிட்ஸ் தாண்டிடுச்சில்ல..
அதை பாராட்டி அவார்ட் தர்றாங்க..! "
 

" அப்படியா..? யார் தர்றாங்க..? "

" வேற யாரு.. எல்லாம் இவர்கிட்ட
பணம் வாங்கிட்டு போனவங்க தான்..! "

" ஓ..! சரி., Function-ல Chief Guest யாரு..? "

" சார்ர்ர்ர்.. நல்லவேளை இதை எங்கிட்ட
கேட்டீங்க..! இதையே எங்க சார்கிட்ட
கேட்டிருந்தீங்க.. அவ்ளோ தான்....
ஓபாமால ஆரம்பிச்சு.. பேப்பர்ல படிச்ச
எல்லா பெயரையும்ல சொல்லுவாரு..! "

( படுவாவி..! கூட இருந்தே போட்டு
குடுக்கறானே...!! )

" ஆமா அங்கே ரூம்ல நாலு பசங்க
சின்சியரா கம்பியூட்டர்ல என்னமோ
பண்ணிட்டு இருக்காங்களே.. அவங்க யாரு..? "

" ஓ.. அவங்களா..? எங்க சார் பிளாக்கை
தினமும் 500 தடவை Open பண்ணி
ஹிட்ஸ் ஏத்தறதுக்காக வேலைக்கு
வெச்சு இருக்கோம்..! "

" அப்படியா சேதி..?! லட்சம் ஹிட்ஸ்
வந்தது இப்படிதானா..?! "

உடனே PSV மொபைலை எடுத்து
யாருக்கோ பேச...

( ஆஹா.. நம்ம மறுபக்கத்தை காட்ட
வேண்டிய நேரம் வந்துடுச்சிடோய்..! )

" என் பேரு வெங்கட்.. எனக்கு இன்னொரு
பேரு இருக்கு..." வெங்கட் பாட்ஷா...! "

" பாட்ஷா.. பாட்ஷா.. பாட்ஷா..! "
( ஹி., ஹி., ஹி..! Theme Music.. )

" டேய்.. அஜய், ராகுல், தீபக்
இவரை பிடிச்சி கட்டுங்கடா..! "

( இப்பல்லாம் அடியாளுங்க இப்படி தான்
பேன்சியா பேரு வெச்சிக்கிறானுங்க..)

 PSV கட்டி போடப்படுகிறார்..

" பாஸ்.. மத்த VKS ஆளுங்க உங்க சீக்ரெட்டை
பிளாக்ல எழுதி லீக் பண்ணிடுவாங்களே..!
அதனால VKS-ஐ மொத்தமா தூக்கிடலாமா..? "

" தேவையில்ல.. கார்த்திக்கு Blog இருந்தாலும்.,
அதுல எழுத தெரியாது., அனு & ரசிகன்
ரெண்டு பேருக்கும் Blog எப்படி ஆரம்பிக்கறதுன்னே
தெரியாது.. அதனால ரமேஷ்., அருண்
ரெண்டு பேரை மட்டும்  தூக்குங்க..! "

" பாஸ்.. ரமேஷ் சென்னையில இருக்காரு..! "

" அப்ப நீ இந்த பைக்கை எடுத்துக்கோ..! "

" பாஸ்.. அருண் மொரிஷியஸ்ல இருக்காரு..?! "

" அப்படின்னா.. நீ அந்த ஜீப்பை எடுத்துட்டு போ.! "

40 நிமிஷம் கழித்து..

" பாஸ்..! ரமேஷை தூக்கிட்டு வந்துட்டோம்..
வந்ததுல இருந்து.. சாப்பாடு போட சொல்லி
கூப்பாடு போடறாரு.. என்ன பண்ண..? "

" ம்ம்.. அவரையென்ன தலைதீபாவளிக்கு
மாமியார் வீட்டுக்கா கூட்டிட்டு வந்து
இருக்கோம்..?! போயி.. பட்டினி போட்ரா..! "

ஹா., ஹா., ஹா.. ( வில்லன் சிரிப்பு )

அன்னிக்கு Evening.. Function-ல்
என் சிறப்பு பேச்சு..

" என் பிளாக் லட்சம் ஹிட்ஸ் அடிக்க
உதவியாய் இருந்து தங்கள் பொன்னான
ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும்
என் இனிய VKS நண்பர்களே.......

( ஹி., ஹி., ஹி..!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..! )
.
.

30 Comments:

Lakshmi said...

ஹா, ஹா, ஹா

Madhavan Srinivasagopalan said...

HA.. HA..HA..

-----
அதெல்லாம் கெடக்கட்டும்..
அதான் 'அனு' அக்காவ ரொம்ப நாளா காணலியே..
அவங்கள 'வி.கே.எஸ்'லருந்து தூக்கிட்டு.. வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குற மொதோ ஆள 'வி.கே.எஸ்' ள போட வேண்டியதுதான..

அட்லீஸ்ட் 'ஆர்.ஏ.சி' யாவது தர வேண்டியதுதான..

samhitha said...

:D :D
லட்சம் ஹிட்ஸ் வாங்கினதுக்கு எப்பொ ட்ரீட்??
பாஸ் ஏன் இப்டி பொய் பொய்யா சொல்லி இருக்கீங்க?
//ஹிட்ஸ் ஏத்தறதுக்காக வேலைக்கு
வெச்சு இருக்கோம்..! "
//
ஒரு டவுட் "டோட்டல் டேமேஜ்" னு போட்டு இருக்கீங்க சரி, யாருக்கு னு சொல்லவே இல்லையே ;)

படிக்காதீங்க.. (இந்திரா) said...

லட்சம் ஹிட்ஸ்ஆஆஆ???

வாழ்த்துக்கள் வெங்கட் சார்..

அனு said...

@வெங்கட்

எப்படியோ எங்க பேரை use பண்ணியே ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்!! (எங்களுக்கு).. நானும் ரசிகனும் ப்ளாக் எழுத வந்தா உங்க ப்ளாக்க இழுத்து மூட வேண்டியதா இருக்கும்னு நீங்க கெஞ்சி கதறி உருண்டு புரண்டு அழுததையெல்லாம் நீங்க மறந்திருக்கலாம்.. நாங்க இன்னும் மறக்கல..

அனு said...

@மாதவன்
//அதான் 'அனு' அக்காவ ரொம்ப நாளா காணலியே..//

நான் இல்லைன்னா உங்க பதிவுக்கு எல்லாம் ஒரு ஓட்டு கம்மியா விழுந்திருக்கும் :)

//வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குற மொதோ ஆள 'வி.கே.எஸ்' ள போட வேண்டியதுதான..//

ம்ம்ம்.. எப்படியாவது போட்டிருக்கிற gateஅ உடைச்சுட்டு எப்படியாவது VKSகுள்ள நுழைஞ்சிடனும்னு நினைக்கிற உங்க ஆர்வம் புரியுது.. ஆனா, இப்போ vacancy இல்லயே.. ur service is important to us. pls stay on line till our representative contacts u.. :)

பெசொவி said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க, ஆனா, மீட்டிங் முடிஞ்சதும் என்ன ஆச்சுன்னு எல்லாருக்கும் தெரிய வேண்டாமா, இங்க வந்து பாருங்க!

http://ulagamahauthamar.blogspot.com/2011/06/blog-post_27.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேங்கப்பா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் வெங்கட், சங்கத்த வெச்சே ஓட்டிட்டீங்க?

கோமாளி செல்வா said...

// என் பிளாக் லட்சம் ஹிட்ஸ் அடிக்க
உதவியாய் இருந்து தங்கள் பொன்னான
ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும்
என் இனிய VKS நண்பர்களே....... //


எப்படியோ இப்படி எழுதினதால VKS காரங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க! சரி விடுங்க. வருஷம் முழுக்க நம்ம கிட்ட அடிவாங்குறாங்க, இன்னிக்கு ஒருநாளாவது சந்தோசமா இருந்திட்டு போகட்டும் :-)

கோமாளி செல்வா said...

//ur service is important to us. pls stay on line till our representative contacts u.. :)
//

Representative வச்சு ஆள் பிடிக்கிற அளவு VKS நிலைமை ஆனத நினைச்சா வருத்தமா இருக்கு :-(

வெங்கட் said...

@ மாதவன்.,

// அதெல்லாம் கெடக்கட்டும்.. அதான்
'அனு' அக்காவ ரொம்ப நாளா காணலியே.. //

உங்க கமெண்ட்ல எனக்கு பிடிச்சதே
நீங்க VKS தலைவியை " அக்கா " -னு
கூப்பிட்டது தான்..

// அவங்கள 'வி.கே.எஸ்'லருந்து தூக்கிட்டு..
வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குற மொதோ
ஆள 'வி.கே.எஸ்' ள போட வேண்டியதுதான.. //

அதெல்லாம் ரிஸ்க்கு..!

அப்புறம் அனு எனக்கு போன்
பண்ணி கதறி., கதறி அழுவாங்க..
அந்த கொடுமையை இந்த நாடு தாங்காது..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// பாஸ் ஏன் இப்டி பொய் பொய்யா
சொல்லி இருக்கீங்க? //

உங்க பாஸ் ஒரு தன்னடக்க தங்கம்னு
உங்களுக்கு தெரியாதா..?!

// ஒரு டவுட் "டோட்டல் டேமேஜ்" னு
போட்டு இருக்கீங்க சரி, யாருக்கு னு
சொல்லவே இல்லையே ;) //

முன்னே எல்லாம் VKS-ல யாரோ
ஒருத்தரை மட்டும் குறி வெச்சு
அடிச்சிட்டு இருந்தோம்.. ஆனா
இந்த பதிவுல தான் VKS மொத்தத்தையும்
கூண்டோட அடி பின்னிட்டோம்ல..

வெங்கட் said...

@ அனு.,

// நானும் ரசிகனும் ப்ளாக் எழுத வந்தா
உங்க ப்ளாக்க இழுத்து மூட வேண்டியதா
இருக்கும்னு //

நிசம் தான்.. ஒருவேளை நீங்க பிளாக்
எழுதியிருந்தா.. அதை பாத்து.. எனக்கு
பிளாக் எழுதற ஆசையே வெறுத்து போயி..
என் பிளாக்கை இழுத்து மூடியிருப்பேன்..

அருண் பிரசாத் said...

யப்பா.... ஒண்ணுமே இல்லாத பிளாக்க்குக்கு 100,000 ஹிட்ஸ் வரவைக்க நாங்க (VKS) படுறபாடு இருக்கே....

ஒரு சின்ன மாரல் சப்போர்ட்டுக்காச்சும் ஒரு நல்ல பதிவா எழுதறாரா இந்த வெங்கட்...

இனி மேலாவது திருந்துங்க? (இதையே எத்தனை முறைதான் நாங்க சொல்லிறதோ... உஸ்சப்பா)

அருண் பிரசாத் said...

எங்கப்பா என்னை தூக்க வந்த ஜீப்பை இன்னும் கானோம்...நானும் அப்படியே பீச்சு, சினிமானு அதுல சுத்தலாம்னு பார்த்தா இன்னும் வந்து சேரலையே.... ஒரு வேளை ஜீப்பை செல்வா ஓட்டுறானோ? இருக்கும், செண்டர் ஸ்டாண்டை எடுக்க மறந்து இருப்பான்

ராஜி said...

வாழ்த்துக்கள் வெங்கட் சார்.

சேலம் தேவா said...

தல போல வருமா..?! ஹி.ஹி... Theme Music போட்டுக்கோங்க...

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! உங்கள் பிளாக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததற்கு வாழ்த்துக்கள்!:-)

கிச்சா said...

//என் P.A-கிட்ட
எதோ பேசிட்டு இருந்தாரு.. //
அடப்பாவி பாவா உனக்கு ஏது பி.ஏ..
ராப்பிச்சைக்காரன்கிட்ட டீலிங் போட்டு அவன நடிக்கவச்சத நான் இங்க சொல்லமாட்டேனே

karthikkumar said...

தேவையில்ல.. கார்த்திக்கு Blog இருந்தாலும்.,
அதுல எழுத தெரியாது.,//

எப்படி எழுத முடியும் ? உங்கள மாத்தி ஒரு வழிக்கு கொண்டுவந்து உருப்படியா எதாச்சும் பதிவு எழுத வெக்கலாம்னு நானும் என்னோட ப்ளாக் எல்லாம் மறந்து பாடுபட்டுட்டு இருக்கேன்.. ஆனா அது நடக்காது போல இருக்கே.. :)

ரசிகன் said...

ம்ம்... நீங்க உருண்டு பிரண்டு நண்பர்கள் உதவியால ப்ளாக்(blog) ஆரம்பிச்சு, எங்க தயவால ப்ளாக்(block) ஆகாம ஓடிட்டிருக்கீங்க.. ஆரம்பிச்ச ப்ளாக்ல எப்டியாவது எழுதவும் கத்துக்கோங்க...

மங்குனி அமைச்சர் said...

நன்றி , நன்றி , நன்றி
இந்த ஹிமாலைய சாதனை படைக்க உதவிய அன்பு உள்ளம் கொண்ட வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

அத்தோடு எங்கள் தானைத் தலைவன் , தங்கத்திருமகன் , வெற்றி வேந்தன் , மனிதர்குல மாணிக்கம், புரட்ச்சித் தலைவன் , புன்னகை மன்னன் வெங்கட் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
நன்றி , நன்றி , நன்றி
இந்த ஹிமாலைய சாதனை படைக்க உதவிய அன்பு உள்ளம் கொண்ட வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

அத்தோடு எங்கள் தானைத் தலைவன் , தங்கத்திருமகன் , வெற்றி வேந்தன் , மனிதர்குல மாணிக்கம், புரட்ச்சித் தலைவன் , புன்னகை மன்னன் வெங்கட் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குறேன்
//////////

யோவ் மங்கு பெரிய அமௌண்ட்ட கரெக்ட் பண்ணிட்ட போல? வெங்கட், எங்களுக்கும் கொடுத்தா நாங்களும் கூவுவோம்ல?

£€k#@ said...

@karthi
// உங்கள மாத்தி ஒரு வழிக்கு கொண்டுவந்து உருப்படியா எதாச்சும் பதிவு எழுத வெக்கலாம்னு நானும் என்னோட ப்ளாக் எல்லாம் மறந்து பாடுபட்டுட்டு இருக்கேன்.. ஆனா அது நடக்காது போல இருக்கே.. :)
//

உங்க மறைமுக மெசேஜ் இதானே

" உங்கள மாதிரி உருப்படியா எதாச்சும் பதிவு எழுதலாம்னு நானும் பாடுபட்டுட்டு இருக்கேன்.. ஆனா அது நடக்காது போல இருக்கே.."

நீங்க VKS ல இருக்குற வரைக்கும் நடக்காது அதனால VASக்கு வாங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////

யோவ் மங்கு பெரிய அமௌண்ட்ட கரெக்ட் பண்ணிட்ட போல? வெங்கட், எங்களுக்கும் கொடுத்தா நாங்களும் கூவுவோம்ல?////

poyyaa loosu panni ,.... itha nee kavanikkalaiyaa????
/// வாழ்த்த வயதில்லை வணங்குறேன்////

hi.hi.hi........

karthikkumar said...

" உங்கள மாதிரி உருப்படியா எதாச்சும் பதிவு எழுதலாம்னு நானும் பாடுபட்டுட்டு இருக்கேன்.. ஆனா அது நடக்காது போல இருக்கே.."//

ROFL .. :)


//நீங்க VKS ல இருக்குற வரைக்கும் நடக்காது அதனால VASக்கு வாங்க//

@ லேகா, சிங்கம் எப்படி சிறுநரி கூட்டத்தில் சேரும்?... :)

கிச்சா said...

//புன்னகை மன்னன் வெங்கட் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குறேன்//
"புன்னகை மன்னன்" இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தோணுதே

Shalini(Me The First) said...

@கார்த்தி
// சிங்கம் எப்படி சிறுநரி கூட்டத்தில் சேரும்?... :)//

நோ சான்ஸ் கார்த்தி ஆனா அது சிங்கத்தோட கவலை நீங்க ஏன் கவலைபடணும்? ஓஹ் நாட்ல இருகக்கூட தகுதி இல்லைன்னு காட்டுக்கு விரட்டி விட்டுட்டாங்கள உங்கள? பாவம்ப்பா நீங்க :(

Mohamed Faaique said...

இந்த பதிவு எப்போ போட்டீங்க....... ??? இப்போதான் பாக்குரேன்..

ஒருத்தர், தான் வாங்கின பல்புகளை எழுதியே 100,00 ஹிட்ஸ் எடுக்குரது’ன்னா... நீங்க எவ்ளோ பெரிய ”பல்பர்” தல...

இந்த சாதனைய பாராட்டி என் ப்லாக் சார்பாக, “பல்ப் பாஷா”னு பட்டமும் வழங்கப் படுகிறது..