சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

15 June 2011

டைனோசரையே வலை போட்டு பிடிக்கறவங்க..!
இந்த ஒரு வாரத்துல மட்டும்
என் Fish Tank-ன் Oxygen Motor
15 தடவைக்கு மேல அடிக்கடி
OFF பண்ணப்பட்டு இருந்தது..

ஆஹா..! என் மீனையெல்லாம்
கொல்ல யாரோ சதி பண்றாங்க..!

யாரா இருக்கும்..?!!

எங்க வீட்ல எல்லோரையும் Line-ல
நிக்க வெச்சு கேட்டுப்பாத்தாச்சு...
( எங்களுது Joint Family. )

" நான் OFF பண்ணலைப்பான்னு.."
ஒரே மாதிரி கோரஸா சொல்றாங்க..

" அப்ப யார்தான் அந்த கருப்பு ஆடு..? "

டூர்ர்ர்ர்ர்ர்ர்... ( என் Detective மூளை
வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..! )

ஒருவேளை இது எதாவது
வெளிநாட்டு சதியா இருக்குமோ..!?!

ம்ம்..., பிடிக்கறேன்.. அதையும்
கண்டுபிடிக்கறேன்..! அப்புறம்
இருக்குடி இந்த ஒபாமாவுக்கும்.,
அந்த டேவிட் கேமரூனுக்கும் உதை..!

நாங்கல்லாம் டைனோசரையே
வலை போட்டு பிடிக்கறவங்களாக்கும்..

பொதுவா அலார்ட்டா இருக்கற நான்..
அப்ப இருந்து நான் ரொம்ம்ம்ம்ம்ப
அலார்ட்டா இருக்க ஆரம்பிச்சேன்..

நேத்து மதியம் நான் லேசா
கண்ணயர்ந்த சமயம்....

Fish Tank இருக்குற ரூம்ல சின்னதா
எதோ ஒரு சத்தம்..

ஆஹா.. வெளிநாட்டு உளவாளிங்க
மறுபடியும் வந்துட்டாங்களா..?!

டகால்னு போயி., கபால்னு
பிடிக்கலாம்னு ஓடினேன்..

அங்கே போனா...

பக்கத்துல இருந்த Chair-ஐ போட்டு.,
மேல ஏறி.. Switch-ஐ OFF பண்ணிட்டு
இருந்தது LKG படிக்கிற
என் சின்ன பையன் கோகுல்.

" டேய்... என்னடா பண்ற..? "

" அப்பா..! Fish Tank-ல தண்ணி
Full ஆயிடிச்சிப்பா.. Motor-ஐ OFF
பண்ணிட்டேன்...! "

ஓ. My God..! இவன் Oxygen Motor-ஐ.,
தண்ணி Motor-னு நினைச்சிக்கிட்டானா..!

சே..!! டயனோசர் வலையில 
சுண்டெலி வந்து சிக்கிக்கிச்சே..!!!
.
.

51 Comments:

karthikkumar said...

டைனோசரையே வலை போட்டு பிடிக்கறவங்க..!///

இப்படியெல்லாம் அவமானம் வரும் தெரிஞ்சிதான் ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே டைனோசர் இனமே அழிஞ்சு போச்சு... :)

karthikkumar said...

டூர்ர்ர்ர்ர்ர்ர்... ( என் Detective மூளை
வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..! )////

வாழ்த்துகள் ... இப்பவாவது அது வேலை செய்ய ஆரம்பிச்சுதே.. :)

karthikkumar said...

பிடிக்கறேன்.. அதையும்
கண்டுபிடிக்கறேன்..! அப்புறம்
இருக்குடி இந்த ஒபாமாவுக்கும்.,
அந்த டேவிட் கேமரூனுக்கும் உதை..!//

உதையெல்லாம் கொடுக்க வேணாம் சார்.. உங்க ப்ளாக் லிங்க் கொடுங்க. படிச்சதும் அவங்களே சூசைட் பண்ணிக்குவாங்க.. :)

வெங்கட் said...

@ கார்த்தி.,

// இப்படியெல்லாம் அவமானம் வரும்
தெரிஞ்சிதான் ரொம்ப வருசத்துக்கு
முன்னாடியே டைனோசர் இனமே
அழிஞ்சு போச்சு... :) //

அப்ப நீங்க " ஜூராஸிக் பார்க் " படம்
பார்க்கலை போல இருக்கு..!

அதுல நடிச்சதெல்லாம்.. நாங்க
வலை போட்டு பிடிச்சி குடுத்த
டைனோசர்ஸ் தான்..

வெங்கட் said...

// @ கார்த்தி.,

// வாழ்த்துகள் ... இப்பவாவது அது
வேலை செய்ய ஆரம்பிச்சுதே.. :) //

மூளை இருக்கறவங்களுக்கு
அது கண்டிப்பா வேலை செய்யும்..

ம்ம்...உங்களுக்கு..
" Better Luck Next ஜென்மம்..! "
//

வெங்கட் said...

@ கார்த்தி.,

// உதையெல்லாம் கொடுக்க வேணாம் சார்..
உங்க ப்ளாக் லிங்க் கொடுங்க. படிச்சதும்
அவங்களே சூசைட் பண்ணிக்குவாங்க.. :) //

ம்ம்.. உணமை தான்..
மகாத்மா காந்தியோட " சத்திய சோதனை "
& " பகவத் கீதை " இதையெல்லாம் படிச்சா..

கெட்டவங்கல்லாம் தன் தப்பை
உணர்ந்துடுவாங்கன்னு சொல்றாங்களே..
அது மாதிரி..

கோவை நேரம் said...

இது அந்த டைனோசர்க்கு தெரியுமா ?

Madhavan Srinivasagopalan said...

பையனுக்கு நீங்கதான் சரியா சொல்லிக் கொடுக்கலை..

டாங்க் மேலேருந்து தண்ணி சைடுல வழிஞ்சாத்தான், டாங்க் ரொம்பிடிச்சினு அர்த்தம்..

Shalini(Me The First) said...

@ venkat
//" அப்பா..! Fish Tank-ல தண்ணி
Full ஆயிடிச்சிப்பா.. Motor-ஐ OFF
பண்ணிட்டேன்...! "
//
Chhhhho Chhweeeeeeet Gokul :)

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

செம பல்ப்...

ஹா ஹா ஹா

அருண் பிரசாத் said...

//" அப்பா..! Fish Tank-ல தண்ணி
Full ஆயிடிச்சிப்பா.. Motor-ஐ OFF
பண்ணிட்டேன்...! "
//
முதல்ல உங்க மனைவிகிட்ட, அடுத்து எங்ககிட்ட, அப்புறம் சூர்யாகிட்ட....

இப்போ கோகுல்கிட்டயும் வாங்க ஆரம்பிச்சாச்சா? என்னதா? பல்புதான்....

ஆயிரம் பல்பு...சே... சே... கோடி பல்பு வாங்கிய அபூர்வ கேடினு பட்டம் சீக்கிரம் வங்கிடுவீங்க

Sen22 said...

//ஆஹா.. வெளிநாட்டு உளவாளிங்க
மறுபடியும் வந்துட்டாங்களா..?! //

வெங்கட் உங்களுக்கு உள் நாட்டிலேயே நிறைய சதிகாரர்கள் இருக்காங்க.. அத கண்டுபிடியுங்க மொதல்ல... :)))

vinu said...

he he he he he he

ரசிகன் said...

//மகாத்மா காந்தியோட " சத்திய சோதனை " & " பகவத் கீதை " //

என்னது பகவத்கீதை எழுதினது மகாத்மா காந்தியா..?

Mohamed Faaique said...

////@ venkat
//" அப்பா..! Fish Tank-ல தண்ணி
Full ஆயிடிச்சிப்பா.. Motor-ஐ OFF
பண்ணிட்டேன்...! "
//
Chhhhho Chhweeeeeeet Gokul :) //

அய்யோ!!! முடியல.... பாச மலர் சிவாஜி தோத்துருவாரு போல இருக்கெ!!!!

கார்த்திக் குமார்’ட எல்லா கொம்மண்ஸ்’ம் ரிப்பீட்டு..

Mohamed Faaique said...

///
இந்த ஒரு வாரத்துல மட்டும்
என் Fish Tank-ன் Oxygen Motor
15 தடவைக்கு மேல அடிக்கடி
OFF பண்ணப்பட்டு இருந்தது..//

அடுத்தவன் டேன்க்’’ல இருந்து சுட்டுடு வந்தா அப்ப்டிதான் இருக்கும்.. புதுசா நல்லதா ஒன்னு வாங்கி போடுங்க ஸார்.

///ஆஹா..! என் மீனையெல்லாம்
கொல்ல யாரோ சதி பண்றாங்க..!//
நீங்க கூடத்தான் மீன்களை close -up ல போயி பாக்குரீஇங்க... அது மட்டும் கொலை முய்ற்ச்சி இல்லையா???

Mohamed Faaique said...

///டூர்ர்ர்ர்ர்ர்ர்... ( என் Detective மூளை
வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..! )///

அப்படா.... இனி மேலாலும் கொஞ்சம் மொக்கை குறையுதா’னு பார்ப்போம்.

////எங்க வீட்ல எல்லோரையும் Line-ல
நிக்க வெச்சு கேட்டுப்பாத்தாச்சு...
( எங்களுது Joint Family. )//

எப்படித்தான் உங்க கூட joint'ஆ இருந்து காலம் கடத்துராங்களோ!!!

///
ஒருவேளை இது எதாவது
வெளிநாட்டு சதியா இருக்குமோ..!?!//ம்ம்..., பிடிக்கறேன்.. அதையும்
கண்டுபிடிக்கறேன்..! அப்புறம்
இருக்குடி இந்த ஒபாமாவுக்கும்.,
அந்த டேவிட் கேமரூனுக்கும் உதை..!////

ப்லாக் எழுதிப்பார்...
காக்காய் கூட உன்னை கவனிக்காது, உலகமே உன்னை கவனிப்பது போல தோன்றும்

ரசிகன் said...

//டூர்ர்ர்ர்ர்ர்ர்... ( என் Detective மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..! )//

இது மெஷின் வேலை செய்ய ஆரம்பிக்கற சத்தம் மாதிரி கேக்கலயே.. கோவேறு கழுதைய குதிர ரேஸ்ல ஓட சொன்னா அப்ஜக்ட் பண்ணி கனைக்குமே அந்த சத்தம் மாதிரில்ல கேக்குது.. :)

Mohamed Faaique said...

//நாங்கல்லாம் டைனோசரையே
வலை போட்டு பிடிக்கறவங்களாக்கும்..///

தொழினுட்பம் எவ்ளோ முன்னேறிடுச்சு..இன்னும் வலை போட்டுத்தான் புடிக்கிரீங்களா???

///நேத்து மதியம் நான் லேசா
கண்ணயர்ந்த சமயம்.... ///

நல்ல நேரம், சாப்பிடுர நேரம் தவிர அடுத்த நேரம் எல்லாமெ இதுதானே வேலை..

////
டகால்னு போயி., கபால்னு
பிடிக்கலாம்னு ஓடினேன்..///

??????????
முடியல.. நான் போயிட்ரேன்பா.....

பெசொவி said...

//ஓ. My God..! இவன் Oxygen Motor-ஐ.,
தண்ணி Motor-னு நினைச்சிக்கிட்டானா..!
//

நீங்க கூட சைக்கிள்ள ஒரு மோட்டாரைக் கட்டிவிட்டுட்டு இதுதான் மோட்டார் சைக்கிள்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்களாமே?

பெசொவி said...

//ஆஹா..! என் மீனையெல்லாம்
கொல்ல யாரோ சதி பண்றாங்க..!
//

மீனுக்கு மட்டும் உங்க ப்ளாக் படிக்கத் தெரிஞ்சிருந்தா என்னிக்கோ தற்கொலை பண்ணிகிட்டிருக்கும்.

Anonymous said...

நகைச்சுவையோடு சொன்ன விதம் அருமை நண்பா ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பையன் உங்களை போலவே(!!!) அறிவாளி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டைனோசரை ஏங்க வலை போட்டு புடிக்கனும், அதுவும் ஆன்லைன்ல வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டூர்ர்ர்ர்ர்ர்ர்... ( என் Detective மூளை
வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..! )//////////

அதுல என்ன ஜெனரேட்டரா மாட்டி வெச்சிருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்புறம்
இருக்குடி இந்த ஒபாமாவுக்கும்.,
அந்த டேவிட் கேமரூனுக்கும் உதை..!
//////////

இவங்கள்லாம் உங்க பக்கத்து வீட்டுக்காரங்களாண்ணே?

HBA said...

// // @ கார்த்தி.,

// வாழ்த்துகள் ... இப்பவாவது அது
வேலை செய்ய ஆரம்பிச்சுதே.. :) //

மூளை இருக்கறவங்களுக்கு
அது கண்டிப்பா வேலை செய்யும்..

ம்ம்...உங்களுக்கு..
" Better Luck Next ஜென்மம்..! " //

பதிவுலகில் உள்ளவர்களுக்கு விமரிசணங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் ,கிண்டல்களை சாமர்த்தியமாக கையால தெரிய வேண்டும்

என்றும் அன்புடன்,
HBA.

Shalini(Me The First) said...

@Mohamed Faaique
//அய்யோ!!! முடியல.... //

ஹல்லோ யாரங்க சீக்கிரம் காஷுவாலிட்டி ரெடி பண்ணுங்க அடிக்க முன்ன ஒருத்தர் அழறார் :)

//பாச மலர் சிவாஜி தோத்துருவாரு போல இருக்கெ!!!!//
உங்க ப்ரொஃபைல் பார்த்து நீங்க நல்லவரூன்னு நெனச்சுட்டனே நஜிப் பாய் ;)

//கார்த்திக் குமார்’ட எல்லா கொம்மண்ஸ்’ம் ரிப்பீட்டு..//

பிட் அடிப்பானாம் பிரபாகர் அத பார்த்து அடிப்பானாம் அரவிந்து

பெசொவி said...

//Shalini(Me The First) said...

@ venkat
//" அப்பா..! Fish Tank-ல தண்ணி
Full ஆயிடிச்சிப்பா.. Motor-ஐ OFF
பண்ணிட்டேன்...! "
//
Chhhhho Chhweeeeeeet Gokul :)

//

வெங்கட்டுக்கு பல்பு குடுத்த கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கிறீங்களே, எப்ப இருந்து VKS க்ரூப்ல சேர்ந்தீங்க?
(வெங்கட் Admission Closed-னு போர்டு வேற வச்சிருக்காரு!)

ராஜி said...

அடடா கோகுல் அவங்கப்பா போல இல்லாமல் அவங்கம்மா மாதிரி அறிவாளினு நினைச்சேனே.

Mohamed Faaique said...

/////பாச மலர் சிவாஜி தோத்துருவாரு போல இருக்கெ!!!!//
உங்க ப்ரொஃபைல் பார்த்து நீங்க நல்லவரூன்னு நெனச்சுட்டனே நஜிப் பாய் ;)///

அதுல என்ன தப்பு.. நிறைய பேரு அப்பிடிதானே நெனச்சிடு இருக்காங்க... நானும் கூட...

Anonymous said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

Shalini(Me The First) said...

@பெசொவி
//வெங்கட்டுக்கு பல்பு குடுத்த கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கிறீங்களே, எப்ப இருந்து VKS க்ரூப்ல சேர்ந்தீங்க?
(வெங்கட் Admission Closed-னு போர்டு வேற வச்சிருக்காரு!)
//
ஆசை ஆசையாம் எலிக்கு ஒரு ஆசையாம்
பூனைமேலேறி பூலோகம் சுற்ற ஆசையாம்
அப்டியா பெசொவி? :))))

Shalini(Me The First) said...

@Mohammed Faaique
//அதுல என்ன தப்பு.. நிறைய பேரு அப்பிடிதானே நெனச்சிடு இருக்காங்க... நானும் கூட...//
SAME BLOOD :))))

வெங்கட் said...

@ கோவை நேரம்.,

// இது அந்த டைனோசர்க்கு
தெரியுமா ? //

" உன்னை வலை போட்டு பிடிக்க
போறோம்.. உஷாரா இருந்துக்கன்னு "
சொல்லிட்டா புடிப்பாங்க..?!

வெங்கட் said...

@ மாதவன்.,

// பையனுக்கு நீங்கதான் சரியா
சொல்லிக் கொடுக்கலை.. //

ரொம்ப சின்ன பையனா இருக்கான்.
கொஞ்சம் பெரியனா ஆகட்டும்
அப்ப சொல்லி தர்லாம்..

ஆமா.. நீங்க டைனோசரை வலை
போட்டு பிடிக்கற டெக்னிக்கை
தானே சொன்னீங்க..?!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// Chhhhho Chhweeeeeeet Gokul :) //

ம்ம்... நான் கூட சின்ன பையனா
இருக்கும் போது கிணத்துல தண்ணி
கம்மியா இருக்கே.. அதை Full
பண்ணனும்னு டம்ளர் டம்ளரா
தண்ணி கொண்டு போய் கிணத்துல
ஊத்திட்டே இருப்பேனாம்..!

அந்த பரம்பரையில வந்தவன்ல...

வெங்கட் said...

@ அருண்.,

// கோடி பல்பு வாங்கிய அபூர்வ கேடினு
பட்டம் சீக்கிரம் வங்கிடுவீங்க //

அப்படியா..? மிக்க நன்றி சீனியர் கேடி
அவர்களே...!

என்ன இருந்தாலும் இந்த பட்டத்தை
போன வருஷமே வாங்கினவருல்ல..
அதான் மரியாதை..!

வெங்கட் said...

@ Sen22.,

// வெங்கட் உங்களுக்கு உள் நாட்டிலேயே
நிறைய சதிகாரர்கள் இருக்காங்க..
அத கண்டுபிடியுங்க மொதல்ல... :))) //

ம்ம்.. நிறைய பேரெல்லாம் இல்ல..
மொத்தமே ஆறு பேர் தான்..

அவங்களையும் நாங்க எதுக்கு
விட்டு வெச்சிருக்கோம்னா..

அடிச்சி அடிச்சி விளையாட
எங்களுக்கும் ஆள் வேணும்ல..!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// என்னது பகவத்கீதை எழுதினது
மகாத்மா காந்தியா..? //

நல்லவேளை காந்திஜி தான்
கிருஷ்ண பரமாத்மாவான்னு
கேக்காம போனீங்க..?!

வெங்கட் said...

@ Mohamed.,

// அய்யோ!!! முடியல..,
பாச மலர் சிவாஜி தோத்துருவாரு
போல இருக்கெ!!!! //

ஆமா பின்ன.. உண்மையான
பாசத்துக்கு முன்னாடி., வெறும்
நடிப்பு நிக்க முடியுமா..?!

// கார்த்திக் குமார்’ட எல்லா
கொம்மண்ஸ்’ம் ரிப்பீட்டு.. //

கார்த்திக்கு குடுத்த எல்லா
உதையும் ரிப்பீட்டு..!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// கோவேறு கழுதைய குதிர ரேஸ்ல
ஓட சொன்னா அப்ஜக்ட் பண்ணி
கனைக்குமே அந்த சத்தம் மாதிரில்ல
கேக்குது.. :) //

அப்படியா..? சரி., சரி..
உங்க Pet Animal எப்ப., எப்படி
கனைக்கும்கறதெல்லாம் உங்களுக்கு
தானே கரெக்ட்டா தெரியும்..!

( யார்ப்பா அது.. " கழுதை மேய்க்கிற
புள்ளக்கு இவ்ளோ அறிவான்னு..? "
கேக்கறது..? )

ஆமா...குதிரை ரேஸ்க்கு எதுக்கு
கழுதையை கூட்டிட்டு போறீங்க..?!!

வெங்கட் said...

@ Mohamed.,

// தொழினுட்பம் எவ்ளோ முன்னேறிடுச்சு..
இன்னும் வலை போட்டுத்தான்
புடிக்கிரீங்களா???//

அட இன்னிக்கு முன்னேறிய
தொழில்நுட்பமே " வலை " தாங்க..
- InterNET

:)

Uma said...

நான் கூட சின்ன பையனா
இருக்கும் போது கிணத்துல தண்ணி
கம்மியா இருக்கே.. அதை Full
பண்ணனும்னு டம்ளர் டம்ளரா
தண்ணி கொண்டு போய் கிணத்துல
ஊத்திட்டே இருப்பேனாம்..!//

உங்க பையன் உங்களை மாதிரியே அறிவாளிதான்!

Uma said...

நீங்க கூடத்தான் மீன்களை close -up ல போயி பாக்குரீஇங்க... அது மட்டும் கொலை முய்ற்ச்சி இல்லையா???//

ஹா ஹா இது சுபெர்ப்

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க கூட சைக்கிள்ள ஒரு
மோட்டாரைக் கட்டிவிட்டுட்டு
இதுதான் மோட்டார் சைக்கிள்னு
ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு
திரிஞ்சீங்களாமே? //

அப்ப அது மோட்டர் சைக்கிள்
இல்லையா..? ஹி., ஹி., ஹி..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// மீனுக்கு மட்டும் உங்க ப்ளாக்
படிக்கத் தெரிஞ்சிருந்தா என்னிக்கோ
தற்கொலை பண்ணிகிட்டிருக்கும். //

அதுக்கு காரணமே நீங்க தான்..

நீங்க பிளாக் எழுதறீங்கன்னு
கேள்விப்பட்டு தான் " நாங்க இனிமே
ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு..! "
மீனெல்லாம் சொல்லிடுச்சாம்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உங்க பையன் உங்களை
போலவே(!!!) அறிவாளி //

அதல்லாம் " ஜீன் "..

ஆமா உங்க வீட்ல இந்த
" ஜீன் " Workout ஆகலை போல..

" இப்படி ஒரு லூசு.. எனக்கு பையனா
பிறந்து இருக்கானேன்னு.!! "
உங்கப்பா பீல் பண்ணினாராமே.!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// இவங்கள்லாம் உங்க பக்கத்து
வீட்டுக்காரங்களாண்ணே? //

ஆமாங்கோ..!

அமெரிக்கால White House-க்கு
லெப்ட் சைடுல., லைட் ப்ளூ கலர்
கேட் போட்ட வீடு நம்மளுது தான்..

அதே மாதிரி 11 Downing Street,
London.. இதுவும் எங்க வீடு தான்..
அதுக்கு முந்தின வீடு தான்
இங்கிலாந்து Prime Minister வீடு..!

£€k#@ said...

//" அப்பா..! Fish Tank-ல தண்ணி
Full ஆயிடிச்சிப்பா.. Motor-ஐ OFF
பண்ணிட்டேன்...! "
//
sooo cuteeee & sweeeetttt
தண்ணீர் சிக்கனம்னா என்னனு இப்போவே தெரிஞ்சி வச்சிருக்கான்..

//சே..!! டயனோசர் வலையில
சுண்டெலி வந்து சிக்கிக்கிச்சே..!!!//
this s too bad venkat
கோகுல் சிங்கக்குட்டி, சக்கரகட்டி அவன எப்டி சுண்டெலினு சொல்லலாம் நீங்க???

//நேத்து மதியம் நான் லேசா
கண்ணயர்ந்த சமயம்....

Fish Tank இருக்குற ரூம்ல சின்னதா
எதோ ஒரு சத்தம்..//
தூக்கத்துல கூட என்ன அலேர்டா இருக்கீங்க !! நீங்க தான் உண்மையான தலைவர் :D

nvnkmr said...

// டூர்ர்ர்ர்ர்ர்ர்... ( என் Detective மூளை
வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..! )//// நாங்கல்லாம் டைனோசரையே
வலை போட்டு பிடிக்கறவங்களாக்கும்..//போங்க பாஸ் எப்ப பார்த்தாலும் இல்லாதத பத்தி பேசுறதே உங்களுக்கு பொழப்ப போச்சு