சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 May 2011

வாவ்.. என்ன ஒரு ஐடியா..!

உஷான்னு எனக்கு ஒரு Friend..

ரொம்ப வருஷம் கழிச்சி அன்னிக்கு
ஒரு கல்யாணத்துல உஷாவை
பார்த்தேன்..

என்னை பாத்தும்., என்கிட்ட ஒரு வார்த்தை
கூட பேசல.. எனக்கு ரொம்ப பீலிங்கா போச்சு..

எனக்கு எப்ப இப்படி பீலீங் ஆனாலும்
நானே போயி பேசிடுவேன்..

" ஹாய்..!  "

" நீங்க யாரு..? "

" என்னாது நான் யாரா..? என்னை தெரியல..? "

" ம்ஹூம்.. தெரியலையே..! "

" நான் தான் உன் சீனியர்.. ! "

" சீனியரா..? நான் Women's காலேஜ்லல்ல
படிச்சேன்..! "

" நான் கூட அங்க தான்.. சே..! இல்ல..
நாம கம்பியூட்டர் சென்டர்ல
ஒண்ணா படிச்சோமே.. "

" நான் கம்பியூட்டர் சென்டர் போனதே
இல்லையே..! "

" அட.., உன் உரிமையை நிலை நாட்ட கூட
நான் ஐடியா குடுத்தேனே...!! "

" என்ன ஐடியா..? எந்த உரிமை..? "

" நீங்க ஐடியா குடுத்தது எனக்கு..
அவ என்னோட அக்கா உமா..! " -
இப்படி பின்னாடி இருந்து வந்தது
உஷாவின் குரல்..

ஹி., ஹி.. உஷாவும், உமாவும்
Twins அதான் கொஞ்சம் Confusion..!!

இப்ப உமாவுக்கு அது என்ன ஐடியான்னு
தெரிஞ்சிக்க ஆர்வம்..

அது என்னான்னா.. ( Flash Back..)

உஷா எனக்கு காலேஜ்ல ஜூனியர்.,
ஆனா கம்பியூட்டர் சென்டர்ல
எனக்கு C++ Batch Mate..

( என் கூட படிக்காம இருந்திருந்தா
ஒருவேளை அவங்க C++ இன்னும்
நல்லா படிச்சிருக்கலாம்.. ஹி., ஹி..
நான் அவ்ளோ Fast.. )

Basic-ஆ உஷா ரொம்ப அப்பாவி..

C++ க்கு அப்புறம் C - - , C xx
எல்லாம் இருக்குன்னு சொல்லி
இருந்தேன். அதையும் உண்மைன்னு
நம்பினாங்கன்னா பாருங்க..

ஒரு நாள்.

உஷாவுக்கு ஒரு அக்கா இருக்கறதும்.,
இவங்க ரெண்டு பேரும் Twins-னு
எனக்கு தெரிய வந்தது..

அப்ப நான் கேட்டேன்..

" உங்க ரெண்டு பேர்ல யார் முதல்ல
பிறந்தது..? "

" அவ தான்., அரை மணி நேரம்
கழிச்சு நான் பிறந்தேன்..! "

" ஆஹா..,உன்னை ஏமாத்திட்டாங்க
உஷா..!! ஏமாத்திட்டாங்க..! "

" ஏமாத்திட்டாங்களா..? என்ன சொல்றீங்க..? "

" ஆமா Twins பொறுத்தவரை முதல்ல
பிறக்கறவங்க தங்கச்சி., ரெண்டாவதா
பிறக்கறவங்க தான் அக்கா..!! "

" நிஜமாவா சொல்றீங்க..?  "

" ஆமா..! உனக்கு இந்த ஆஸ்திரேலியா
கிரிக்கெட் Players Steve Waugh &
Mark Waugh தெரியும்ல..? "

" தெரியும்..! "

" ம்ம்.. அதுல முதல்ல பிறந்தவரு
Steve.. ஆனா Steve-ஐ எல்லோரும்
தம்பின்னு தான் சொல்லுவாங்க..
Mark தான் அண்ணன்..! "

" ஓ..அப்படியா..? "

" என்ன இவ்ளோ சாதாரணமா கேக்கற.?
பொறுத்தது போதும்.. பொங்கி எழு..! "

" இப்ப நான் என்ன பண்ணனும்..? "

" வீட்டுக்கு போன உடனே எல்லோர்கிட்டேயும்
' இன்னைல இருந்து நான் தான் அக்கான்னு '
Strict-ஆ சொல்லிடு...! "

" இவ்ளோ வருஷம் கழிச்சி சொல்லி
என்ன ஆக போகுது..? "

" அதுக்காக உன் உரிமையை
விட்டுக்கொடுக்கலாமா..? "

" அப்படிங்கறீங்க..?! சரி..,
சொல்லி பார்க்குறேன்..! "

அடுத்த நாள் Class-ல..

" என்ன வீட்ல சொல்லியாச்சா..? "

" சொன்னேன்.. ஆனா எல்லோரும்
என்னை ஒரு மாதிரி பார்க்குறாங்க..! "

" பார்ப்பாங்கல்ல.. பின்ன உரிமையை
மீட்கறதுன்னா சும்மாவா..? "

" ஆமா.. அப்ப இருந்து உரிமை.,
உரிமைன்னு சொல்றீங்களே..
அது என்ன உரிமை..! "

" ஹி., ஹி., அக்காவா இருக்கறவங்களுக்கு
தானே முதல்ல கல்யாணம் பண்ணி வெப்பாங்க..! "

" அடப்பாவி.. அப்ப எங்க வீட்ல நான்
கல்யாணத்துக்கு அவசரப்படறேன்னு
நினைச்சு தான் கிண்டலா பாத்தாங்களா..?! "

" ஹி., ஹி., அதே அதே..!! "

டிஸ்கி : உமாவுக்கு கல்யாணம் ஆகி
3 வருஷம் கழிச்சு தான் உஷாவுக்கு
கல்யாணம் ஆச்சாம்..!!
.
.

26 Comments:

vinu said...

ennathu report cardla parents signature vaanganumaaa?


sollavey illeyyyyy..........

thoppiyaa pocheyyyy

£€k#@ said...

//ஆமா., C++ க்கு அப்புறம் C - - , C xx
எல்லாம் இருக்குன்னு சொல்லி
இருந்தேன். அதையும் உண்மைன்னு
நம்பினாங்க..//
:| ungala poi nambunaangale!! avangala sollanum

//எனக்கு எப்ப இப்படி பீலீங் ஆனாலும்
நானே போயி பேசிடுவேன்..//
gud attitude :D


//ஹி., ஹி., அக்காவா இருந்தா தானே
முதல்ல கல்யாணம் பண்ணி வெப்பாங்க..!//
என்ன ஒரு நல்லெண்ணம் !! :D

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆமா., C++ க்கு அப்புறம் C - - , C xx
எல்லாம் இருக்குன்னு சொல்லி
இருந்தேன். அதையும் உண்மைன்னு
நம்பினாங்க..//

இப்படி உங்ககிட்ட ஒருத்தர் சொல்லி நீங்களும் நம்பிக்கிட்டு இருந்தீங்களே. அதையும் சொல்லிடுங்க.

£€k#@ said...

//உமாவுக்கு கல்யாணம் ஆகி
3 வருஷம் கழிச்சு தான் உஷாவுக்கு
கல்யாணம் ஆச்சாம்..!!//
உங்க பேச்சை கேட்டு இருந்தா இப்டி எல்லாம் நடந்து இருக்குமா?? ;)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" ஆமா Twins பொறுத்தவரை முதல்ல
பிறக்கறவங்க தங்கச்சி., ரெண்டாவதா
பிறக்கறவங்க தான் அக்கா..!! "//

நெசமாவா? நம்ப முடியலையே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கோகுலத்தில் சூரியா!

ப்ளீஸ் விசிட் மை ஏரியா!!
( ஹா......ஹா...... இது எப்படி இருக்கு? )

Chitra said...

டிஸ்கி : உமாவுக்கு கல்யாணம் ஆகி
3 வருஷம் கழிச்சு தான் உஷாவுக்கு
கல்யாணம் ஆச்சாம்..!!


...... வரலாறு முக்கியம், அமைச்சரே! எல்லாவற்றையும் தெளிவா சொல்லிட்டீங்க. தேங்க்ஸ். :-)))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எது எப்படியோ, உங்களுக்கும் ஒரு கேர்ள் பிரண்டு இருந்துச்சுன்னு சொல்றீங்களே, அதுதான் கொஞ்சம் இடிக்குது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///" நீங்க ஐடியா குடுத்தது எனக்கு..
அவ என்னோட அக்கா உமா..! " -
இப்படி பின்னாடி இருந்து வந்தது
உஷாவின் குரல்.. /////

இதுக்கு முன்னாடி வரைக்கும் நம்பற மாதிரி இருந்துச்சு, இது ஏதோ பின் இணைப்பு மாதிரி தோனுதே?

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்ன ஒரு ஐடியா...

ரசிகன் said...

//எது எப்படியோ, உங்களுக்கும் ஒரு கேர்ள் பிரண்டு இருந்துச்சுன்னு சொல்றீங்களே.. அதுதான் கொஞ்சம் இடிக்குது//

அவரு காலேஜ் படிச்சேன் கம்ப்யூட்டர் படிச்சேன்னு கூட தான் சொல்றார்... அந்த இடியெல்லாம் பழகிடுசில்லங்க.. இதுவும் பழகிப் போகும்...

Anonymous said...

நீங்க காலேஜ் போனீங்க..
கம்ப்யூட்டர் க்ளாஸ் போனீங்கனு இந்தப் பதிவு மூலமா விளம்பரப்படுத்திட்டீங்க..

ம்ம்ம் நடத்துங்க..

சேலம் தேவா said...

தல...நீங்க எங்கயோ போயிட்டிங்க..!! :)

பெசொவி said...

//அன்னிக்கு கல்யாணத்துல உஷாவை
பார்த்தேன்.. என்னை பாத்தும்.,
என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல..
எனக்கு ரொம்ப பீலிங்கா போச்சு..
//

பேசினப்புறம் அவங்க பீலிங் எப்படி இருந்ததுன்னு அவங்களுக்குதான் தெரிஞ்சிருக்கும்!

ராஜி said...

எப்படிங்க இப்படிலாம் யோசிக்குறீங்க.

ராஜி said...

இப்படியே ஏடாக்கூடமா யோசிச்சு யோசிச்சு ஐடியா குடுக்குறேன்னு இம்சை பண்ணி, இப்ப உங்க ஊருல பாதிப்பேர் ஊரைவிட்டே காலி பண்ணிக்கிட்டு போயிட்டாங்களாமே? அப்படியா?!

வெங்கட் said...

@ வினு.,

// ennathu report cardla parents signature
vaanganumaaa? sollavey illeyyyyy.......... //

அதெல்லாம் ஸ்கூலுக்கு போன
பிள்ளைகளுக்கு தெரியும்..!!

வெங்கட் said...

@ லேகா.,

// ungala poi nambunaangale..!! //

" நம்பிக்கை., நாணயம்., நற்பண்புக்கு "
அணுகவும்..
' கோகுலத்தில சூரியன் ' வெங்கட்.

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இப்படி உங்ககிட்ட ஒருத்தர் சொல்லி
நீங்களும் நம்பிக்கிட்டு இருந்தீங்களே.
அதையும் சொல்லிடுங்க. //

" C " முடிச்சிட்டு " C++ " கிளாஸுக்கு
போயி.., நானெல்லாம் நடுவுல " C+ "
படிக்காம Double Promotion வாங்கினவன்னு
நீங்க உளறினதையும் கூட சொல்லவா
ரமேஷூ..

வெங்கட் said...

@ ஓட்டவடை.,

// Twins பொறுத்தவரை முதல்ல
பிறக்கறவங்க தங்கச்சி., ரெண்டாவதா
பிறக்கறவங்க தான் அக்கா..!! "//

// நெசமாவா? நம்ப முடியலையே! //

Steve & Mark விஷயத்துல
Steve தான் முதல்ல பிறந்தாரு..
அவரை தான் அண்ணன்னும் சொல்றாங்க..

ஆனா.. சில பேர் Twins விஷயத்துல
இங்கே சொன்னபடியும் பெரியவங்க.,
சின்னவங்களை முடிவு பண்றாங்க..

நெட்ல தேடினா.. இதுக்கு ஒரு பெரிய
விவாதமே நடக்குது..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// எது எப்படியோ, உங்களுக்கும் ஒரு
கேர்ள் பிரண்டு இருந்துச்சுன்னு சொல்றீங்களே,
அதுதான் கொஞ்சம் இடிக்குது.....! //

" கேர்ள் பிரண்ட் " இல்ல..
ஒரு கேர்ள் எனக்கு பிரண்டா இருந்தாங்க..

ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ..!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// இதுக்கு முன்னாடி வரைக்கும் நம்பற
மாதிரி இருந்துச்சு, இது ஏதோ
பின் இணைப்பு மாதிரி தோனுதே? //

ஆஹா.. நமக்கு இன்னும் பயிற்சி
தேவையோ..?!

சிநேகிதன் அக்பர் said...

எப்படி இப்டியெல்லாம்... :)

Mohamed Faaique said...

////உஷாவுக்கு ஒரு அக்கா இருக்கறதும்.,
இவங்க ரெண்டு பேரும் Twins-னு
எனக்கு தெரிய வந்தது.. ///
நீங்க Computer படிக்க போனண்டதும் சந்தேகமாத்தான் இருந்துச்சு... இப்போத்தானே புரியுது அங்க போயி என்ன வேல பண்ணிடு இருந்திருக்கீங்கன்னு.....

Vimalraj R said...

Super.. Venkat vaakina bulp pathi oru post please..