சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 May 2011

எங்கிட்ட மோதாதே..!!
நேத்து எனக்கும்.,
என் Friend சுரேஷ்க்கும்
ஒரு சின்ன கருத்து மோதல்..!

கடைசி வரைக்கும் நான் சொன்னதை
அவன் ஒத்துக்கவே இல்ல..!

எனக்கு கோவம் வந்தது.. ஆனா
Control பண்ணிகிட்டேன்..
( அப்புறம் அவனுக்கும் கோவம்
வருமே.. ஹி., ஹி., ஹி... )

நான் கொஞ்சம் பொறுமையா
சொல்லி பார்த்தேன்..

" தம்பி.. நீ ஒரு எழுத்தாளர்கிட்ட
பேசிட்டு இருக்கேங்கறதை ஞாபகம்
வெச்சுக்க..! "

" எழுத்தாளரா..? யாருங்ணா அது..? "

" ஹி., ஹி., ஹி..! நான் தான்..! "

" என்னடா இது.. தமிழுக்கு வந்த
சோதனை..? "

" ஹே.. என்ன கிண்டலா.. நான் பிளாக்ல
எழுதறதை தினமும் 1000 பேர் படிக்கிறாங்க
தெரியுமா..? "

" 1000 பேர் படிச்சா.. நீ பெரிய பிஸ்தா..? "

" இல்லையா பின்ன..? "

" அப்படி பார்த்தா.. ' ஆனந்த பவன் '
ஹோட்டல் சப்ளையர் முருகன்
இன்றைய ஸ்பெஷல்னு எழுதறதை
தினமும் 5000 பேர் படிக்கிறாங்க..
அதுக்காக.? "

" டேய்ய்ய்.. வேணாம்...! என்னை
கடுப்பு ஏத்தாதே.. நான் கராத்தேல
Black Belt தெரியும்ல..! "

" ஹி., ஹி., ஹி..! எங்கே அந்த
Black Belt-ஐ கொஞ்சம் காட்டு
நானும் பார்க்கறேன்..! "

இப்படி சொல்லிட்டு என் பக்கத்துல
வந்தவன் என் சட்டையை காலரை
தூக்கி.. எதையோ பார்த்தான்..

" டேய்.., என் சட்டை காலர்ல
என்னடா இருக்கு..? விட்றா.. "

" இல்ல.. உங்களுக்கெல்லாம் Belt
கழுத்துல தானே கட்டுவாங்க..
அதான் இருக்கான்னு தேடுறேன்..! "

" பிளடி இடியட்.., நான் சென்ஸ்..,
கன்ட்ரீ ப்ரூட்..  "
.
.

51 Comments:

Speed Master said...

கட்ட அவுத்துட்டாங்களா

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

சூப்பரப்பு, என்ன ஒரு கற்பனை

Mohamed Faaique said...

///சூப்பரப்பு, என்ன ஒரு கற்பனை.///

நாம கற்பனை பண்ணி போட்டாலும் “ஆமா..அது நீங்கதானே!!’னு கடுப்பெதுவீங்க... இந்த தன்னடக்கத் தளபதி ஒரு உண்மையை சொல்லி இருக்காரு.. அத போயி கற்பனை’னு சொல்ரீங்களே!!!!!

Mohamed Faaique said...

///நேத்து எனக்கும்.,
என் Friend சுரேஷ்க்கும்
ஒரு சின்ன கருத்து மோதல்..! ///

சே!!! பெரிய மோதலா இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே!!!!

///கடைசி வரைக்கும் நான் சொன்னதை
அவன் ஒத்துக்கவே இல்ல..! ///

ஏதோ, அடுத்தவங்க எல்லாரும் ஒப்புக் கொண்டு சுரேஷ் மட்டும் ஒப்புக் கொள்ளாதது போலவே சொல்ரீங்க...

///எனக்கு கோவம் வந்தது.. ஆனா
Control பண்ணிகிட்டேன்.. ///

60 வயச தாண்டிட்டாலே என்ன ஒரு பக்குவம் ஸார்....

Madhavan Srinivasagopalan said...

வால நிமிர்த்த முடியுமா முடியாதா ?

கோமாளி செல்வா said...

எப்படியோ நம்ம சங்கத்துக்கு இருந்த திருஷ்டி கொறயரதுக்கு இப்படி எல்லாம் பதிவு போட வேண்டி இருக்கு. சரி விடுங்க தல! இத உண்மைன்னு நம்பிட்டு சிலர் (VKS ) பேசுவாங்க . அவுங்கள நினைச்சாதான் சிப்பு சிப்பா வருது :-)

Mohamed Faaique said...

////
" 1000 பேர் படிச்சா.. நீ பெரிய பிஸ்தா..? " ///

இந்த வரி’க்கு கீழ உங்கள நீங்களே கும்மு கும்மு’னு கும்மி இருக்குரதால, கல் நெஞ்ச காரனுக்கு கூட இதுக்கு மேல கும்ம மனசு வராது தல....

கிச்சா said...

அடப்பாவி உங்க சண்டக்குப்பின்னாலதான் சுரேஷ் கேப் வுடாம ஊசிப்போட்டுக்கிட்டு படுத்துக்கிட்டு இருக்கானா

royal ranger said...

//" பிளடி இடியட்.., நான் சென்ஸ்..,
கன்ட்ரீ ப்ரூட்.. லொள்., லொள்...!! "//

உங்க பதிவு ல இன்னைக்கு நெறைய spelling mistake

மீ பிளடி இடியட்.., மீ நான் சென்ஸ்..,
மீ கன்ட்ரீ ப்ரூட்.. மீ லொள்., லொள்...!!

இந்த மாதிரி கரீக்டா போடுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க ஊர்ல நாய் பிஸ்கட் அதிகமா விக்குதுன்னு ரிபோர்ட் வரும்போது கொஞ்சம் டவுட்டு வந்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TN 27 G 4260 , TN 05 G 3921 , TN 45 G 1984 இவை எல்லாம் நாய் பிடிக்கும் வண்டிகள்.எங்கேயாவது பார்த்தா எஸ்கேப் ஆகவும்#உயிர் காப்பான் தோழன்//

இத நான் சொல்லலை. உங்க நண்பர் சிபி உங்களுக்காக சொன்னது

karthikkumar said...

நாங்க அடிச்சா வலி ஜாஸ்தின்னு நீங்களே உங்கள அடிச்சுக்கறீங்களா.... பரவாயில்ல நீங்களும் கொஞ்சம் உடம்ப தேத்தனும்ல... அப்படியே இந்த
VAS -காரங்க வரிசையா வந்து ஒவ்வொருத்தரா அவுங்கவுங்களே அடிச்சுக்குங்க .....:))

samhitha said...

//" ஹே.. என்ன கிண்டலா.. நான் பிளாக்ல
எழுதறதை தினமும் 1000 பேர் படிக்கிறாங்க
தெரியுமா..? "
//
என்ன இது இவ்ளோ கம்மியா சொல்றீங்க ???

//எனக்கு கோவம் வந்தது.. ஆனா
Control பண்ணிகிட்டேன்..
( அப்புறம் அவனுக்கும் கோவம்
வருமே.. //
அவர் ஹெல்த் பத்தி என்ன அக்கறை உங்களுக்கு!!!இதான் நட்பு!!


//" இல்ல.. உங்களுக்கெல்லாம் Belt
கழுத்துல தானே கட்டுவாங்க..
அதான் இருக்கான்னு தேடுறேன்..! "
//
விடுங்க பாஸ் தன்னை போல் பிறரை நினை வழில வந்தவர் போல :D

samhitha said...

//நாம கற்பனை பண்ணி போட்டாலும் “ஆமா..அது நீங்கதானே!!’னு கடுப்பெதுவீங்க... //
unmaiya solli dhaane aaganum !!

//உங்க ஊர்ல நாய் பிஸ்கட் அதிகமா விக்குதுன்னு ரிபோர்ட் வரும்போது கொஞ்சம் டவுட்டு வந்தது//
neenga dhaane recenta salem ponadhu?? just clarification ;)

//TN 27 G 4260 , TN 05 G 3921 , TN 45 G 1984 இவை எல்லாம் நாய் பிடிக்கும் வண்டிகள்.எங்கேயாவது பார்த்தா எஸ்கேப் ஆகவும்//
ohhhhh crcta no ellam solreenga avlo dharam pidichitu poi irukaangala adhula:O

வெங்கட் said...

@ ஸ்பீடு மாஸ்டர்.,

// கட்ட அவுத்துட்டாங்களா //

கராத்தேல அடி படறது
சகஜம் இல்லையா..

அப்படி கழுத்துல எதாவது
அடி பட்டா அது சரியாகறதுக்காக
நாங்க ஒரு கருப்பு கலர் Belt
கழுத்தை சுத்தி போடுவோம்..
அதான் அவரு சொன்ன கருப்பு Belt..

நீங்க நினைக்கிற மாதிரி
அது நாய்ங்க கழுத்துல மாட்டி
இருக்குற ரமேஷ் Belt.. சே.. சாரி..
ரமேஷ் கழுத்துல மாட்டி இருக்குற
நாய் Belt இல்ல..!

வெங்கட் said...

@ ரமேஷ் பாபு.,

// சூப்பரப்பு, என்ன ஒரு கற்பனை //

கற்பனைன்னு எதை சொல்றீங்க..?!
இதையா..

// நான் பிளாக்ல எழுதறதை தினமும்
1000 பேர் படிக்கிறாங்க //

ஹி., ஹி., தினமும் 2500 பேர்
படிக்கறப்ப., வெறும் 1000 பேர்னு
சொன்னது கற்பனை இல்லைங்க..
தன்னடக்கம்..!

வெங்கட் said...

@ Mohamed.,

// நாம கற்பனை பண்ணி போட்டாலும்
“ஆமா..அது நீங்கதானே!!’னு கடுப்பெதுவீங்க...
இந்த தன்னடக்கத் தளபதி ஒரு உண்மையை
சொல்லி இருக்காரு.. அத போயி கற்பனை’னு
சொல்ரீங்களே!!!!! //

Gelusil ஒரு பாட்டில் வாங்கி.,
தினமும் மூணு வேளை 5 மி.லி
ஒரு வாரத்துக்கு சாப்பிட்டா..
இந்த மாதிரி வயித்தெறிச்சல்
எல்லாம் சரியா போகும்..!

வெங்கட் said...

@ Mohamed.,

// ஏதோ, அடுத்தவங்க எல்லாரும்
ஒப்புக் கொண்டு சுரேஷ் மட்டும்
ஒப்புக் கொள்ளாதது போலவே சொல்ரீங்க... //

பொதுவாவே ஜீனியஸ்கள் சொல்றதை
சாதாரண மக்கள் ஒத்துக்க மாட்டாங்க..

அரிஸ்டாஸ்டில் உலகம் உருண்டன்னு
சொன்னப்பவும் மக்கள் ஒத்துக்கல..

கலிலியோ பூமி தான் சூரியனை
சுத்துதுன்னு சொன்னப்பவும்
மக்கள் ஒத்துக்கல..

வெங்கட் said...

@ Mohamed.,

// 60 வயச தாண்டிட்டாலே என்ன
ஒரு பக்குவம் ஸார்.... //

அப்ப 5 வருஷம் முன்னாடியே
இந்த பக்குவம் உங்களுக்கு வந்து
இருக்கணுமே.. :-)

வெங்கட் said...

@ மாதவன்.,

// வால நிமிர்த்த முடியுமா முடியாதா ? //

முடியாது.. கட்டும் போதே நேரா
கட்டிக்கணும்.. ஆமா நீங்க Wall-ஐ
பத்தி தானே கேட்டீங்க..?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க பிரண்டு உங்களை விட பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அந்த ப்ளாக் பெல்ட்ட பர்மா பஜார்லதானே வாங்குனீங்க...? டக்குன்னு பில்ல எடுத்துக்காட்டி ப்ரூவ் பண்ண வேணாமா....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TN 27 G 4260 , TN 05 G 3921 , TN 45 G 1984 இவை எல்லாம் நாய் பிடிக்கும் வண்டிகள்.எங்கேயாவது பார்த்தா எஸ்கேப் ஆகவும்//
ohhhhh crcta no ellam solreenga avlo dharam pidichitu poi irukaangala adhula:ஒ//

@ Blogger samhitha

அதான் இது சிபி சொன்னதுன்னு சொல்லிருக்கனே படிக்கிரதில்லியா?

//உங்க ஊர்ல நாய் பிஸ்கட் அதிகமா விக்குதுன்னு ரிபோர்ட் வரும்போது கொஞ்சம் டவுட்டு வந்தது//
neenga dhaane recenta salem ponadhu?? just clarification ;)

ஆமா வெங்கட்டுக்கு வாங்கிட்டு போனேன். ஒருத்தர பார்க்க போகும்போது வெறுங்கைய வீசிட்டா போவாங்க. அவங்க சாப்புடுறத வாங்கிட்டு போகவேணாமா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

" பிளடி இடியட்.., நான் சென்ஸ்..,
கன்ட்ரீ ப்ரூட்.. "
. தொர இங்க்ளிபிசு எல்லாம் பேசுது

வெங்கட் said...

@ செல்வா.,

// இத உண்மைன்னு நம்பிட்டு
சிலர் (VKS ) பேசுவாங்க. அவுங்கள
நினைச்சாதான் சிப்பு சிப்பா வருது :-) //

VKS-ஆ..? அவங்கல்லாம் நாம
குடுக்குற தர்ம அடியை தாங்க
முடியாம சொந்த ஊருக்கு பேக்-அப்
பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க..

உனக்கு தெரியாதா..?!!

வெங்கட் said...

@ கிச்சா.,

// அடப்பாவி உங்க சண்டக்குப்
பின்னாலதான் சுரேஷ் கேப் வுடாம
ஊசிப்போட்டுக்கிட்டு படுத்துக்கிட்டு
இருக்கானா //

ஆமாங்ணா.. நீங்க வேணா வந்து
அவனை ரெண்டு கடி கடிச்சிட்டு
போங்களேன்..!

முள்ளை முள்ளால தானே
எடுக்க முடியும்..

வெங்கட் said...

@ ராயல் ரேஞ்சர்.,

// மீ பிளடி இடியட்.., மீ நான் சென்ஸ்..,
மீ கன்ட்ரீ ப்ரூட்.. மீ லொள்., லொள்...!!

கூல் டவுண்.. கூல் டவுண்..!

இருந்தாலும் உங்களுக்கு உங்க
மேலேயே இவ்ளோ கோவம் ஆவாது..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உங்க ஊர்ல நாய் பிஸ்கட் அதிகமா
விக்குதுன்னு ரிபோர்ட் வரும்போது
கொஞ்சம் டவுட்டு வந்தது //

ஆமா எந்தெந்த ஊர்ல நாய் பிஸ்கட்
அதிகமா விக்குதுங்கற ரிப்போர்ட்
எல்லாம் உங்களுக்கு எதுக்கு வருது..?!

அந்த ஊர்லயே பொண்ணு கட்டிகிட்டு
செட்டில் ஆகலாம்னு ஐடியாவா..?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//உங்க ஊர்ல நாய் பிஸ்கட் அதிகமா விக்குதுன்னு ரிபோர்ட் வரும்போது கொஞ்சம் டவுட்டு வந்தது //

என்னானு... நாம இருப்பது சென்னையில் அப்புறம் எப்படி அங்க விற்க்கிறது அப்படினா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//இத நான் சொல்லலை. உங்க நண்பர் சிபி உங்களுக்காக சொன்னது //

வண்டி உள்ள இருந்து தான் நம்பர பார்க்க முடியாதே அப்புறம் எப்படி நீ சொல்ல முடியும்.

(அனுபவமா கேட்டா செல்லாது)

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்திக்

//VAS -காரங்க வரிசையா வந்து ஒவ்வொருத்தரா அவுங்கவுங்களே அடிச்சுக்குங்க .....:))//

எப்படி நீங்க சந்தையில் நின்னுகிட்டு சவுக்கால அடிச்சிகிட்டு காசு கேக்கறிங்களே அப்படியா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஆமா வெங்கட்டுக்கு வாங்கிட்டு போனேன். ஒருத்தர பார்க்க போகும்போது வெறுங்கைய வீசிட்டா போவாங்க. அவங்க சாப்புடுறத வாங்கிட்டு போகவேணாமா? //

ஊர்ல சில பேரு இருப்பாங்க.. யாரையாவது பாக்க போர அப்போ அட அவங்களுக்கு பிடிக்கும் சொல்லி இவங்களுக்கு பிடிச்சத வாங்கிட்டு போறது. அதையும் இருந்து தின்னு தீர்த்துட்டு தான் வீட்ட விட்டு கிளம்பரது... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//அந்த ஊர்லயே பொண்ணு கட்டிகிட்டு
செட்டில் ஆகலாம்னு ஐடியாவா..?//

ஓ! அதனால தான் சினிமாவில் வில்லன் ரோட்ல போற நாய்க்கு கட்டி கொடுத்தாலு கொடுப்பேனே தவிற அவனுக்கு கட்டி வைக்க மாட்டேன் சொன்னதும் நம்ம ரமேஷ் சீட்ட விட்டு எழுந்து ஓடி போய் ஸ்கிரீன் கிட்ட நின்னு தலைமுடி எல்லாம் சரி பண்றார... :)

வெங்கட் said...

@ கார்த்தி.,

// நாங்க அடிச்சா வலி ஜாஸ்தின்னு
நீங்களே உங்கள அடிச்சுக்கறீங்களா //

எங்ககிட்ட தர்ம அடி வாங்கிட்டு.,
கார்த்தி ஓரமா ஒரு குட்டி சுவர்ல
உக்காந்துட்டு இருக்கும் போது..
அங்கே வர்ற ரெண்டு பேர்..

" அடி குடுத்த கைப்புள்ளக்கே இவ்ளோ
காயம்னா.. அடி வாங்குனவன் என்ன
ஆகியிருப்பான்..! "

" அதானே..!! "

கார்த்தி மனசுக்குள்..

" இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..! "

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// என்ன இது இவ்ளோ கம்மியா
சொல்றீங்க ??? //

ஹி., ஹி., ஹி,.,.!! தன்னடக்கம்..!

இப்ப கூட தமிழ்மணம்ல
நம்ம பிளாக்குக்கு 11 வது Rank
குடுத்து இருக்காங்க..

சரி., Top 10ல யாரெல்லாம்
இருக்காங்கன்னு ஒரு லுக் விட்டா..
அதுல சாரு., ஜெ.மோ., எஸ்.ரா
இவங்க பிளாக் எல்லாம் இல்ல..

இவ்ளோ ஏன்.. சிட்னி ஷெல்டன்.,
J.K.ரவுலிங் பிளாக் கூட அதுல இல்ல..

இதை எல்லாம் நான் வெளியே
சொல்றது இல்ல.. காரணம் அதே
Same தன்னடக்கம்..!

middleclassmadhavi said...

பதிவும் பின்னூட்டங்களும் - :-))))

பெசொவி said...

//" ஹே.. என்ன கிண்டலா.. நான் பிளாக்ல
எழுதறதை தினமும் 1000 பேர் படிக்கிறாங்க
தெரியுமா..? "
//

ஏன், 100000000-னு சொல்ல வேண்டியதுதான? சைபருக்கு மதிப்பில்லன்னு சின்ன வயசில யாரோ சொன்னதை நம்பி உங்க இஷ்டத்துக்கு சைபர் அள்ளிப் போட்டுக்கறீங்க, போல!

பெசொவி said...

//" 1000 பேர் படிச்சா.. நீ பெரிய பிஸ்தா..? "
//

யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் வெங்கட் பிஸ்தாதான். VKS-காரங்களுக்கு பாயசத்துல போடற பிஸ்தா, வெங்கட் தான்!

பெசொவி said...

//வெங்கட் said...
@ Mohamed.,

// 60 வயச தாண்டிட்டாலே என்ன
ஒரு பக்குவம் ஸார்.... //

அப்ப 5 வருஷம் முன்னாடியே
இந்த பக்குவம் உங்களுக்கு வந்து
இருக்கணுமே.. :-)

//

இப்படி சொல்லிட்டா உங்களுக்குப் பக்குவம் வந்திருச்சுன்னு நாங்க நம்பிடுவோமா?

பெசொவி said...

// வெங்கட் said...
@ Mohamed.,

பொதுவாவே ஜீனியஸ்கள் சொல்றதை
சாதாரண மக்கள் ஒத்துக்க மாட்டாங்க..

அரிஸ்டாஸ்டில் உலகம் உருண்டன்னு
சொன்னப்பவும் மக்கள் ஒத்துக்கல..

கலிலியோ பூமி தான் சூரியனை
சுத்துதுன்னு சொன்னப்பவும்
மக்கள் ஒத்துக்கல..
//

Well Said, வெங்கட்! எவ்ளோ தரம் சொன்னாலும்,உண்மைய புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே, இந்த செல்வா, டெரர், ஷாலினி இவங்களைதானே சொல்றீங்க?!

Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//Well Said, வெங்கட்! எவ்ளோ தரம் சொன்னாலும்,உண்மைய புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே, இந்த செல்வா, டெரர், ஷாலினி இவங்களைதானே சொல்றீங்க?!
//

சும்மா சொல்ல கூடாதுங்க ஆனாலும் உங்களுக்கு நம்ம கஜினிய விடவும் தன்னம்பிக்கை ஜாஸ்திங்க..:) என்னென்னமொ சொல்லி எங்கள பிரிச்சுடலாம்னு பாக்குறீங்க ஆனா ஒரு விஷயம் நீங்க தெரிஞ்சுக்கணும் என்னதான் பூமி நிக்காம நெலக்காம சூரியன சுத்தி சுத்தி வந்தாலும் அதால சூரியன தடுக்கவும் முடியாது இடிக்கவும் முடியாது ;-)

Shalini(Me The First) said...

@கார்த்தி
//நாங்க அடிச்சா வலி ஜாஸ்தின்னு நீங்களே உங்கள அடிச்சுக்கறீங்களா.... பரவாயில்ல நீங்களும் கொஞ்சம் உடம்ப தேத்தனும்ல... அப்படியே இந்த
VAS -காரங்க வரிசையா வந்து ஒவ்வொருத்தரா அவுங்கவுங்களே அடிச்சுக்குங்க .....:))
//
தம்பி கார்த்தி செல்லம் அடிச்சு வெளாண்டது போதும் போங்க போய் ஹோம்வொர்க் பண்ணுங்க இல்லன்னா உங்க மிஸ் உங்கள நிஜ அடி அடிச்சுடுவாங்க அப்புறம் ரெண்டு கையையும் ஊதிகிட்டெ திரியணும் விளாடு விளாண்டுடுவாங்க கண்ணு

Shalini(Me The First) said...

@ ஷம்ஹிதா
//அவர் ஹெல்த் பத்தி என்ன அக்கறை உங்களுக்கு!!!இதான் நட்பு!!
//
ஹாய் ஷமி! கலக்குறீங்க ;)
(உடனே இந்த VKS காபியா டீயான்னு கேக்குங்க பாருங்களேன் :))

Shalini(Me The First) said...

@ ரமேஷ்
//
ஓ! அதனால தான் சினிமாவில் வில்லன் ரோட்ல போற நாய்க்கு கட்டி கொடுத்தாலு கொடுப்பேனே தவிற அவனுக்கு கட்டி வைக்க மாட்டேன் சொன்னதும் நம்ம ரமேஷ் சீட்ட விட்டு எழுந்து ஓடி போய் ஸ்கிரீன் கிட்ட நின்னு தலைமுடி எல்லாம் சரி பண்றார... :)
//
போலீஸ்! எங்க சீனியர்ட்ட மாட்னீங்களா :))

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அண்ணே அந்த ப்ளாக் பெல்ட்ட
பர்மா பஜார்லதானே வாங்குனீங்க...?
டக்குன்னு பில்ல எடுத்துக்காட்டி
ப்ரூவ் பண்ண வேணாமா....? //

நோ., நோ.. இப்படி பொய் சொல்றது
எனக்கு சுத்தமா பிடிக்காது..

நான் இதுவரை பர்மாவுக்கு
போனதேயில்ல..!

வெங்கட் said...

@ ரமேஷு.,

// ஒருத்தர பார்க்க போகும்போது
வெறுங்கைய வீசிட்டா போவாங்க.
அவங்க சாப்புடுறத வாங்கிட்டு
போகவேணாமா? //

ஓ.. அதனால தான் உங்களை
பார்க்க வர்ற எல்லோரும்
2 கிலோ பருத்தி கொட்டை.,
5 கிலோ புண்ணாக்கு.,
2 கட்டு பழைய பேப்பர் எல்லாம்
வாங்கிட்டு வர்றாங்களா..?

வெங்கட் said...

@ மணி.,

// தொர இங்க்ளிபிசு எல்லாம் பேசுது //

ஹி., ஹி., ஹி.!!

எங்களுக்கு தமிழ் தான் தடுமாறும்..
இங்கிலீஸ்ல பூந்து விளையாடுவோம்ல...

வெங்கட் said...

@ டெரர்.,

// என்னானு... நாம இருப்பது சென்னையில்
அப்புறம் எப்படி அங்க விற்க்கிறது அப்படினா? :) //

சே., சே.. ரமேஷை பாத்தா..
நாய் பிஸ்கட் வாங்கி சாப்பிடறவரு
மாதிரியா இருக்கு.. இருக்காது..

யாராவது வாங்கி குடுப்பாங்களா
இருக்கும்.. ஓசி பிஸ்கட்..
அப்படிதானே ரமேஷூ..?!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இந்த செல்வா, டெரர், ஷாலினி
இவங்களைதானே சொல்றீங்க?! //

ஹி., ஹி., ஹி...!!

மக்கள்னு சொன்னதும் உங்களுக்கு
கூட எங்க ஆளுங்க ஞாபகம் தான்
வர்றாங்க.. உங்க ஆளுங்க ஞாபகம்
வரலை பாருங்க..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ஹாய் ஷமி! கலக்குறீங்க ;)
( உடனே இந்த VKS காபியா டீயான்னு
கேக்குங்க பாருங்களேன் :)) //

ஹி., ஹி., ஹி...!!
கேட்டாலும் கேப்பாங்க..!

வேர்ல்டு ' கப் '-ல " டீ " ஊத்தி
குடிக்க முடியுமான்னு கேட்டவங்க
தானே அவிங்க..!

பெசொவி said...

//Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//Well Said, வெங்கட்! எவ்ளோ தரம் சொன்னாலும்,உண்மைய புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே, இந்த செல்வா, டெரர், ஷாலினி இவங்களைதானே சொல்றீங்க?!
//

சும்மா சொல்ல கூடாதுங்க ஆனாலும் உங்களுக்கு நம்ம கஜினிய விடவும் தன்னம்பிக்கை ஜாஸ்திங்க..:) என்னென்னமொ சொல்லி எங்கள பிரிச்சுடலாம்னு பாக்குறீங்க ஆனா ஒரு விஷயம் நீங்க தெரிஞ்சுக்கணும் என்னதான் பூமி நிக்காம நெலக்காம சூரியன சுத்தி சுத்தி வந்தாலும் அதால சூரியன தடுக்கவும் முடியாது இடிக்கவும் முடியாது ;-)
//

வெரி குட், இப்படிதான் சம்பந்தமில்லாம பேசணும், அப்பத்தான் நீங்க VAS இனம்னு எல்லோருக்கும் புரியும்.
(நிலாவுக்குப் போறா மாதிரி சூரியனுக்கும் போகலாம், ஆனா, ராத்திரியில மட்டும் பிரயாணம் பண்ணாதான் சூரியன் நம்மை சுட்டெரிக்காது அப்படின்னு ஐடியா சொன்ன உங்க தலைவனுக்கேத்த தொண்டர் படை உங்க VAS தான்.