சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 May 2011

ஒரு மழை நாளில்..!!

( படித்ததில் பிடித்தது )


மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்..

" குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே..! "
என்றான் அண்ணன்.

" எங்கேயாச்சும் ஒதுங்கி
நிக்க வேண்டியது தானே..! "
என்றாள் அக்கா..

" சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு..! "
என்றார் அப்பா..

தன் முந்தானையால்
என் தலையை துவட்டிக் கொண்டே
திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!

---------------------------------------------------------

" அனைத்து அம்மாக்களுக்கும்
என் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்..! "
.
.

26 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமையான கவிதை நண்பா! அம்மா அம்மா தான்!

கலாநேசன் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்....

அனாமிகா துவாரகன் said...

Wow Vengat sir. Asathiteenga.

samhitha said...

//திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!
//
wow so cuteee
"hpy mothers day " to all moms

middleclassmadhavi said...

//அருமையான கவிதை நண்பா! அம்மா அம்மா தான்!// ரிப்பீட்டு!

இம்சைஅரசன் பாபு.. said...

venkat wow..fantastic.....makkaa

வெங்கட் said...

@ To All.,

நீங்கல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்க போல
இருக்கே.. இந்த கவிதையை எழுதினது
நான் தான்னு..

" ஆனந்த விகடன்"-ல வந்திருந்த இந்த
கவிதையை பாத்து., என் டைரில
எழுதினது சாட்சாத் நானே தான்..!!

ஹி., ஹி., ஹி..!!

Mohamed Faaique said...

mmmm.. அன்னையர் தினத்துக்கு சுடச் சுட ஒரு பதிவு...(சுட்டா..சூடாத்தானே இருக்கும்)

Mohamed Faaique said...

”கடனுக்கு வாங்கிட்டு போன ஜீன்ஸ்’அ நனைக்காதய்யா”னு இன்னும் சில கெட்ட வார்த்தைகளை சேர்த்து உங்க ஃப்ரண்டு திட்டினாரே!!! அதை ஏன் சொல்லல....
dressகளை கழுவினா மட்டும் போதாது. மழை வர முன்னே எடுக்க தெரியாதா’னு உங்க வைஃப் திட்டினதையும் சொல்லலையே!!!!

Mohamed Faaique said...

////@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அருமையான கவிதை நண்பா! அம்மா அம்மா தான்!////

///@அனாமிகா துவாரகன் said...
Wow Vengat sir. Asathiteenga.////

////@samhitha said...
//திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!
//wow so cuteee ////

//@middleclassmadhavi said...

//அருமையான கவிதை நண்பா! அம்மா அம்மா தான்!// ரிப்பீட்டு!////
///@இம்சைஅரசன் பாபு.. said...
venkat wow..fantastic.....makkaa////

அதெப்படி ஸார்..நீங்க எவ்வளவு பெரிய டுபாக்கூர் வேலை பார்த்தாலௌம் கைதட்டவும், விசிலடிக்கவும், உண்மையை நேர்மையை சத்தியத்தை முழங்கும் என்களை போல் உள்ளங்களில் நல்ல உள்ளங்களை போட்டு கும்மவும் ஒரு கூட்டம் இருந்துட்டே இருக்கு????

நான் கூட “வெயில் காலத்துல கஞ்சா அடிச்சா உடம்புக்கு நலல்து(http://faaique.blogspot.com/2011/03/normal-0-false-false-false-en-us-x-none.html)’னு ஒரு புரட்சிகரமான சமூக அக்கரையோடு ஒரு பதிவு போட்டேன். 10 ஓட்டு கூட தேரல...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//திட்டினாள் அம்மா..
என்னையல்ல.,
மழையை..!!//

அம்மான சும்மா இல்லைடா !

அனு said...

ரொம்ப உண்மையான கருத்து வெங்கட்..

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

சேலம் தேவா said...

அன்னையர்தின அசத்தல் கவிதைப்பதிவு தல..!!

Madhavan Srinivasagopalan said...

கவிதை அருமை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு மழை நாளில்..!!//

முதன் முறையா குளிச்சீங்க. அதான?

கிச்சா said...

நண்பா அதெல்லாம் சரி என் சுவாசக்காற்றே அரவிந்த்சாமிங்கிற நினப்புல‌
போய் ஒரு வயசானபாட்டி மேல மோதி நஷ்ட ஈடு கொடுத்ததெல்லாம் கவிதைல வரல போல‌

வெங்கட் said...

@ Mohamed.,

// அதெப்படி ஸார்..நீங்க எவ்வளவு பெரிய
டுபாக்கூர் வேலை பார்த்தாலௌம் கைதட்டவும்,
விசிலடிக்கவும், என்களை போல் நல்ல உள்ளங்களை
போட்டு கும்மவும் ஒரு கூட்டம் இருந்துட்டே இருக்கு???? //

ஹி., ஹி., ஹி...
அதெல்லாம் தொழில் ரகசியம்..
வெளியே சொல்றதுக்கில்ல..

எதுக்கும் காலையில எந்திரிச்சதும்
வெறும் வயத்துல 4 டம்ளர் தண்ணி
குடிங்க., மதியம் தயிர் சாதம் சாப்பிடுங்க..
இப்படியே ஒரு வாரம் பண்ணிட்டு வாங்க..

வயித்தெரிச்சல் குறையும்..!

// நான் கூட “வெயில் காலத்துல கஞ்சா
அடிச்சா உடம்புக்கு நல்லது ஒரு புரட்சிகரமான
சமூக அக்கரையோடு ஒரு பதிவு போட்டேன்.
10 ஓட்டு கூட தேரல... //

4 வோட்டு வாங்கினதை இப்படி கூட
சொல்லலாமா..?!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// முதன் முறையா குளிச்சீங்க. அதான? //

ரமேஷூ..! வர வர உங்க G.K ரொம்ப
improve ஆயிட்டே இருக்கு.. குளிக்கறதை
பத்தி எல்லாம் இப்ப தெரிஞ்சிகிட்டீங்க
போல...!

வெங்கட் said...

@ கிச்சா.,

// என் சுவாசக்காற்றே அரவிந்த்சாமிங்கிற
நினப்புல‌ போய் ஒரு வயசானபாட்டி மேல
மோதி நஷ்ட ஈடு கொடுத்ததெல்லாம்
கவிதைல வரல போல‌ //

லூசா பாவா நீ..?
கவிதையை இன்னொரு தரம்
நல்லா படி..

அது இன்னொருத்தர் கவிதை..
அதுல எப்படி என் மேட்டர் வரும்..?

பெசொவி said...

// வெங்கட் said...

@ கிச்சா.,

அது இன்னொருத்தர் கவிதை..
அதுல எப்படி என் மேட்டர் வரும்..?
//

தனக்குத் தானே கோல் போட்டுக்கற பழக்கத்தை என்னிக்குத் தான் விடப் போறீங்களோ?

இந்திரா said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

////அன்னையர் தின வாழ்த்துக்கள் //
அதை ஏன் இவருக்கு சொல்ரீங்க... தாத்தா தின வாழ்த்துக்கள் சொன்னாலும் பொருத்தமா இருக்கும்....

சிநேகிதன் அக்பர் said...

அந்தம்மா ரொம்ப நல்லவங்க பாஸ் :)

அன்னையர் தின வாழ்த்துகள்.

மங்குனி அமைச்சர் said...

ஆமா அன்னையர் தினத்துக்கு அன்னையர்களை தானே வாழ்த்தனும் ஏன் எல்லாரும் உன்னை வாழ்த்துறாங்க ??? # படு பயங்கரமான டவுட்

rajvel said...

அருமை