சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 May 2011

உள்ளத்தில் நல்ல உள்ளம்.! ( ஹி., ஹி..! )நேத்து எங்க ஊர்ல
" Salem Rotary Club " சார்பா
ஸ்கூல் பிள்ளைகளுக்கு
ஒரு Drawing Competition நடந்தது..

என் பையனும் அதுல கலந்துக்கணும்னு
ஆசைப்பட்டான்னு கூட்டிட்டு
போயிருந்தேன்..

மொத்தம் 83 குழந்தைங்க
Competition-ல கலந்துகிட்டாங்க..
( ஹி., ஹி..! கணக்குல கரெக்ட்டா
இருப்போம்ல..! )

அங்கே ஒரு Sir-ம், ஒரு Madam-ம்
இருந்தாங்க.. அவங்க தான் எல்லா
வேலையையும் பாத்துகிட்டாங்க.

Competition 1 மணி நேரம்.,
சரின்னு அங்கேயே Wait
பண்ணி., பசங்க வரையறதை
வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்..!

அப்ப திடீர்னு அந்த Madam.,
பக்கத்துல இருந்த Sir-கிட்ட
என்னை கை காட்டி எதோ சொன்னாங்க.,
அவரும் " சரின்னு " தலையை ஆட்டினாரு,,!

எனக்கு ஒரே Confusion.!
" ஒரு வேளை நம்மள Judge-ஆ
இருக்க கேக்க போறாங்களோ..?!! "

கொஞ்ச நேரத்துல அந்த Madam
என்கிட்ட வந்து...

" சார்,,,, ஒரு சின்ன உதவி.? "

" தயங்காம கேளுங்க..! தினமும்
ரெண்டு பேருக்காவது உதவி
பண்ணலைன்னா எனக்கு நைட்டு
தூக்கமே வராது..! "

" ஓ., அப்படியா.!! "

" ம்ம்.. சரி., உங்களுக்கு நான் என்ன
உதவி பண்ணணும்..? "

" போட்டி முடிஞ்சதும்., எல்லா
பசங்களுக்கும் Participation Certificate
குடுக்கணும் சார்..! "

( ஆஹா.., நம்மள Chief Guest-ஆ
இருக்க கூப்பிடறாங்க போல.. )

" ஓ.., பசங்களுக்கு நான் Certificate
குடுக்கணுமா.?! "

" இல்ல சார்.. அது Chief Guest குடுப்பாரு..!!
நீங்க வந்து அந்த Certificates எழுதி
குடுங்க சார்,.! "

( அடப்பாவிகளா.. கடைசில என்னை
Cheap Guest ஆக்கிட்டீங்களே..! )

டிஸ்கி : என் பையனுக்கு " ஆறுதல் பரிசு "
கிடைச்சது..ஆனா 83 Certificates எழுதின
எனக்கு அது கூட கிடைக்கலை.. ம்ஹூம்..!!!

Mind Voice : ( விட்றா., விட்றா..
நாளைக்கு இதெல்லாம் உன் சரித்திரத்துல
வரும்., பசங்க எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க..!! )
.
.

56 Comments:

இம்சைஅரசன் பாபு.. said...

//( அடப்பாவிகளா.. கடைசில என்னை
Cheap Guest ஆக்கிட்டீங்களே..! ) //

நல்லா காலம் உங்களை sheep Guest.ஆக்கி ..ஆடு அறுத்து எல்லோருக்கும் கறி வைக்காம விட்டாங்கலேன்னு சந்தோஷ படுங்க மக்கா .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுல ஒரு சர்ட்டிபிகேட்ட ஆட்டைய போட்டு, அதுல் உம்ம பேர எழுதி வெச்சிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ சர்ட்டிபிகேட் எழுதுற அளவுக்கு பெரிய கை ஆகிட்டீங்க..... இதுவே பெரிய இம்ப்ரூவ்மெண்ட்டுதானே?

samhitha said...

// தினமும்
ரெண்டு பேருக்காவது உதவி
பண்ணலைன்னா எனக்கு நைட்டு
தூக்கமே வராது..! "//
அடடா என்ன உதவும் மனப்பான்மை!! என் மொபைல்க்கு ஒரு 110rs ரீசார்ஜ் பண்ணிவிடுங்க ;)

//ஆஹா.., நம்மள Chief Guest-ஆ
இருக்க கூப்பிடறாங்க போல.//
நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதுனு சொல்வாங்களே அது இதானா :D

//நீங்க வந்து அந்த Certificates எழுதி
குடுங்க சார்,.! "//
விடுங்க உங்க கையெழுத்து நல்ல அழகா இருக்கும்னு அவங்களுக்கும் தெரிஞ்சி போச்சு போல ..

// என் பையனுக்கு " ஆறுதல் பரிசு "
கிடைச்சது.//
congrats to surya!!!

//உள்ளத்தில் நல்ல உள்ளம்.! ( ஹி., ஹி..! )//
இதெல்லாம் கொஞ்சம் டூமச் இல்ல ??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Mind Voice : ( விட்றா., விட்றா..
நாளைக்கு இதெல்லாம் உன் சரித்திரத்துல
வரும்., பசங்க எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க..!! )//

இவ்ளோ கேவலமான கையெழுத்துல certificate எழுதி கொடுத்ததுக்கு அந்த பசங்க உங்களை நொங்கு எடுத்தாங்கலாமே..

Mohamed Faaique said...

////"உள்ளத்தில் நல்ல உள்ளம்.! ( ஹி., ஹி..! )"///

காமெடி சூப்பர்..

///Competition 1 மணி நேரம்.,
சரின்னு அங்கேயே Wait
பண்ணி.,
மொத்தம் 83 குழந்தைங்க
Competition-ல கலந்துகிட்டாங்க..
( ஹி., ஹி..! கணக்குல கரெக்ட்டா
இருப்போம்ல..! ) ///

இதப் போயி ஒரு மணித்தியாலமா எண்ணி இருக்கீங்க... வெளங்கிடும்..

Mohamed Faaique said...

///அப்ப திடீர்னு அந்த Madam.,
பக்கத்துல இருந்த Sir-கிட்ட
என்னை கை காட்டி எதோ சொன்னாங்க.,//பசங்க வரையறதை
வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்..!///

எங்கயோ இடிக்குதே!!!! (ஹி..ஹி... இந்த கொம்மண்ட்’அ உங்க மனைவி பாப்பாங்கதானே!!!!

Mohamed Faaique said...

///
டிஸ்கி : என் பையனுக்கு " ஆறுதல் பரிசு "
கிடைச்சது..ஆனா 83 Certificates எழுதின
எனக்கு அது கூட கிடைக்கலை.. ம்ஹூம்..!!!///
உங்கள உள்ள விட்டதே பெரிய மேட்டர்தானே!!! அதுக்காகவே ஒரு பதிவு எழுதி இருக்கீங்ளே!!!

///விட்றா., விட்றா..
நாளைக்கு இதெல்லாம் உன் சரித்திரத்துல
வரும்., ///
முதல்ல சரித்திரம் வரட்டும்....

//தயங்காம கேளுங்க..! தினமும்
ரெண்டு பேருக்காவது உதவி
பண்ணலைன்னா எனக்கு நைட்டு
தூக்கமே வராது..///
அப்பிடியா!!!! அப்போ எனக்கும் ஒரு உதவி ஸார், என்னுடைய கடைசி பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டுருங்களே!!! http://faaique.blogspot.com/2011/05/dubai-mall.html
(எரியுர வீட்ல புடுங்குரதெல்லாம் லாபம்தானே)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"உள்ளத்தில் நல்ல உள்ளம்.!//

விஜயகாந்த் ராதா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ( ஹி., ஹி..! )"

Mohamed Faaique said...

///Mind Voice : ( விட்றா., விட்றா..
நாளைக்கு இதெல்லாம் உன் சரித்திரத்துல
வரும்., பசங்க எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க..!! )//

இவ்ளோ கேவலமான கையெழுத்துல certificate எழுதி கொடுத்ததுக்கு அந்த பசங்க உங்களை நொங்கு எடுத்தாங்கலாமே..///

Like it. repeattu......

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுல ஒரு சர்ட்டிபிகேட்ட ஆட்டைய போட்டு, அதுல் உம்ம பேர எழுதி வெச்சிருக்கலாம்ல?///

பச்சை புள்ளைகிட்ட என்னெல்லாம் சொல்லி குடுக்குற Mr.பன்னிவால், , அதெல்லாம் படாது படாது . . .

வேனும்ன நம்ப கோகுல்க்கு நாலஞ்சு சர்டிபிகேட் பிரஸ்ல குடுத்து அடிச்சு லேமினேட் அப்ன்னிக்க தெரியாது . . .
என்ன இது சின்ன புள்ளத்தன ஆட்டைய போடுறது ? ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ samhitha said...

// தினமும்
ரெண்டு பேருக்காவது உதவி
பண்ணலைன்னா எனக்கு நைட்டு
தூக்கமே வராது..! "//
அடடா என்ன உதவும் மனப்பான்மை!! என் மொபைல்க்கு ஒரு 110rs ரீசார்ஜ் பண்ணிவிடுங்க ;) ////

excellent , marvelous, dhool , wonderful, amazing . .

யோவ் பன்னிகுட்டி நாம்பளுதான் இருக்கும் என்னைக்காவது இப்படி அறிவா , ஆக்க பூர்வமா, பல வித advantage ஓட ஒரு பின்னோட்டம் போட்டு இருப்போமா ?
பாருயா யோவ் பொண்ணு எவ்வளவு கருத்தோட இருக்கு , இது பொழைக்கிற பொண்ணுக்கு அழகு . . .

ஆமா நாம கேட்டுடாலும் கோகுல் ரீசார்ஜ் பண்ணிட்டுதான் மறு வேலை பார்ப்பாரு பாரு அப்படின்னு நீ சொல்லுறது என்ன காதுல கேக்குது Mr.பன்னிவால் , இருந்தாலும் என்ன பண்ண ? கடமைன்னு ஒன்னு இருக்கு இல்ல . ..

suresh said...

//அப்ப திடீர்னு அந்த Madam.,
பக்கத்துல இருந்த Sir-கிட்ட
என்னை கை காட்டி எதோ சொன்னாங்க.,
அவரும் " சரின்னு " தலையை ஆட்டினாரு,,!//
இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரே.....

//" இல்ல சார்.. அது Chief Guest குடுப்பாரு..!!
நீங்க வந்து அந்த Certificates எழுதி
குடுங்க சார்,.! " //
எங்க வெங்கட் அண்ண்கிட்டயேவா

//டிஸ்கி : என் பையனுக்கு " ஆறுதல் பரிசு "
கிடைச்சது..ஆனா 83 Certificates எழுதின
எனக்கு அது கூட கிடைக்கலை.. ம்ஹூம்..!!!//
நீங்க எழுதாம இருந்திருந்தா உங்க பையனுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கும்...(உங்க எழுத்த பார்த்து அந்த மேடம் கடுப்பாகி இருப்பாங்க)

கோமாளி செல்வா said...

அங்க வந்த chief guest உங்ககிட்ட வந்து
என்ன விட முக்கியமானவர் நீங்க இருக்கும்போது நான் எப்படி பரிசுகொடுக்குறதுன்னு உங்க கிட்ட கேட்டதையும் ,
chief guest ஆ வந்திட்டு குடுக்காம போனா அது மரியாதையா இருக்காதுன்னு சொல்லி அவர வற்புறுத்தி மறுபடி அவராவே பரிசு குடுக்கவச்சத ஏன் சொல்லல ?

இருந்தாலும் உங்க தன்னடக்கம் வரவர ரொம்ப அதிகமாய்ட்டே வருது தல!

பெசொவி said...

@ venkat

//தினமும்
ரெண்டு பேருக்காவது உதவி
பண்ணலைன்னா எனக்கு நைட்டு
தூக்கமே வராது..! "
//

ஆனா நீங்க உதவி பண்ணினா, அதுனால நாலு பேருக்குத் தூக்கம் போயிடுமே, அத பத்தி ஒண்ணுமே சொல்லலையே!

//நாளைக்கு இதெல்லாம் உன் சரித்திரத்துல
வரும்., பசங்க எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க..!! )
//

ரொம்ப அதிசயமான நிகழ்ச்சிதான் சரித்திரத்துல வரும், நீங்க பல்பு வாங்கறது சூரியன் காலையில கிழக்கே உதிக்கிறமாதிரி, அது சரித்திரத்துல வராது, பட், எத்தனை பல்பு வாங்கினாலும் அதை மறைக்காம சொல்ற உங்களோட இந்த நேர்மை பிடிச்சிருக்கு!

பெசொவி said...

@ இம்சைஅரசன் பாபு..
//உங்களை sheep Guest.ஆக்கி ..ஆடு அறுத்து எல்லோருக்கும் கறி வைக்காம விட்டாங்கலேன்னு சந்தோஷ படுங்க மக்கா .....
//

VKS மெம்பருக்கு இவரு எப்பவுமே Sheep Guestதானே, பாபு? ஆனா ஒண்ணு, எவ்ளோ அறுத்தாலும் தாங்கும், இந்த ஆடு ரொம்.........ப நல்ல ஆடு!

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// நல்லா காலம் உங்களை sheep Guest.ஆக்கி
ஆடு அறுத்து எல்லோருக்கும் கறி வைக்காம
விட்டாங்கலேன்னு சந்தோஷ படுங்க மக்கா //

ஆடு அறுப்பாங்களா..?
யாரை.. என்னையா..?
ஹா., ஹா., ஹா..!!

என்னைய பத்தி சரியா தெரியல
உங்களுக்கு.., நானெல்லாம் ஓட
ஆரம்பிச்சா.. ஒரு பய துரத்தி வந்து
பிடிக்க முடியாதாக்கும்..!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அதுல ஒரு சர்ட்டிபிகேட்ட ஆட்டைய
போட்டு, அதுல் உம்ம பேர எழுதி
வெச்சிருக்கலாம்ல? //

ஹி., ஹி., ஹி.. இதை தான்
" Great Men Think Alike " சொல்லுவாங்க..

எண்ணி கரெக்டா 83 Certificates தான்
என்கிட்ட குடுத்தாங்க.. அதான்
ஆட்டைய போட முடியல...!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அடடா என்ன உதவும் மனப்பான்மை!!
என் மொபைல்க்கு ஒரு 110rs ரீசார்ஜ்
பண்ணிவிடுங்க ;) //

110 ரூபாய்க்கு Offer எதுவும் இல்லையே.,
ஆனா " 111 " ரூபாய்க்கு Unlimited Local,
STD, ISD எல்லாம் இருக்கு.. ( என்ன
Signal மட்டும் தான் கிடைக்காது..! )
அதை பண்ணிவிடவா..?!

// விடுங்க உங்க கையெழுத்து நல்ல
அழகா இருக்கும்னு அவங்களுக்கும்
தெரிஞ்சி போச்சு போல.. //

அட ஆமாங்க.. Function முடிஞ்சப்புறம்.,
அடுத்த வாரம் இன்னொரு Competition
இருக்கு.. அதுலயும் வந்து Certificates
எழுதி தர்றீங்களான்னு கேட்டாங்க..

மீ எஸ்கேப்..!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இவ்ளோ கேவலமான கையெழுத்துல
certificate எழுதி கொடுத்ததுக்கு அந்த
பசங்க உங்களை நொங்கு எடுத்தாங்கலாமே.. //

யாரை பாத்து கேவலாமான
கையெழுத்துன்னு சொன்னீங்க..?

எங்க இங்கிலீஷ் மிஸ்ஸுக்கு
என் கையெழுத்துன்னா அம்புட்டு
பிரியம்.. அடிக்கடி கூப்பிட்டு சொல்வாங்க..

" டேய்.. உன் கையெழுத்து ரொம்ப
அழகா இருக்குடா.. Exam-லயும்
அப்படியே நாலு பேப்பருக்கு எதாவது
எழுதி வைடான்னு.! " கெஞ்சுவாங்க
தெரியுமா.?!

வெங்கட் said...

@ Mohamed.,

// எங்கயோ இடிக்குதே!!!! ( ஹி..ஹி... இந்த
கொம்மண்ட்’அ உங்க மனைவி பாப்பாங்கதானே! ) //

ஹி., ஹி..!! என் மனைவி பெயரை
சொன்னா பயந்துடுவோமாக்கும்..

" சிங்கம்லே... இந்த சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாது..! "

( என் மனைவி லீவுக்கு ஊருக்கு
போயிருக்காங்கல்ல.. ஒரு வாரத்துக்கு
பயப்பட மாட்டோம்ல.. )

வெங்கட் said...

@ Mohamed.,

// அப்பிடியா!!!! அப்போ எனக்கும் ஒரு
உதவி ஸார், என்னுடைய கடைசி பதிவுக்கு
ஒரு ஓட்டு போட்டுருங்களே!!! //

ஒரு ஓட்டு என்ன நாலு ஓட்டு
வேணாலும் போடறேன்..!

" அதுதான் என் கடைசி பதிவு.,
இனிமே பிளாக் எழுத மாட்டேன்னு "
சொல்லி என்னை சந்தோஷத்துல
திக்கு முக்காட வெச்சிட்டீங்க..

ஹைய்யா..! ஒரு விக்கெட் காலி..!

வெங்கட் said...

@ ராக்ஸ் ராஜேஷ்.,

// பச்சை புள்ளைகிட்ட என்னெல்லாம்
சொல்லி குடுக்குற Mr.பன்னிவால், ,
அதெல்லாம் படாது படாது . . . //

நல்லா கேளுங்க..!! இப்படியே தான்
தப்பு தப்பா சொல்லி குடுத்து
என் மனசை மாத்துறார்..

// வேனும்ன நம்ப கோகுல்க்கு நாலஞ்சு
சர்டிபிகேட் பிரஸ்ல குடுத்து அடிச்சு
லேமினேட் பன்னிக்க தெரியாது //

பிரஸ்ல குடுத்து அடிக்கறதுன்னு
ஆயிடிச்சு.. அதென்ன கஞ்சத்தனமா
நாலங்சு..? ஒரு 100 , 200 சொல்லுங்க..

samhitha said...

//, என்னுடைய கடைசி பதிவுக்கு
ஒரு ஓட்டு போட்டுருங்களே!!!//
இதான் சொந்த செலவுல சூனியம் வச்சிகறதா faaique :D??

//நானெல்லாம் ஓட
ஆரம்பிச்சா.. ஒரு பய துரத்தி வந்து
பிடிக்க முடியாதாக்கும்..!!//
rotfl அதானே யாருக்கும் உங்கள பத்தி தெரியல உடனே ஓடிக்காட்டுங்க பாஸ் :P

//என்னைக்காவது இப்படி அறிவா , ஆக்க பூர்வமா, பல வித advantage ஓட ஒரு பின்னோட்டம் போட்டு இருப்போமா ?
பாருயா யோவ் பொண்ணு எவ்வளவு கருத்தோட இருக்கு , இது பொழைக்கிற பொண்ணுக்கு அழகு . .//
ஆஹா ஓவரா புகழ்றீங்களே !!! புல்லரிக்குது!! ஹி ஹி :D

//" 111 " ரூபாய்க்கு Unlimited Local,
STD, ISD எல்லாம் இருக்கு.. ( என்ன
Signal மட்டும் தான் கிடைக்காது..//
பரவாயில்ல பண்ணுங்க.. உங்ககிட்ட இருக்கும் 111rs-a காலி பண்ணனும் அவ்ளோ தான் ;)

//எங்கயோ இடிக்குதே!!//
இடிக்குதுனா கொஞ்சம் தள்ளி நடங்க இல்ல நில்லுங்க இதுக்கு கூடவா வெங்கட் கிட்ட பெர்மிசன் கேப்பீங்க?

//வேனும்ன நம்ப கோகுல்க்கு நாலஞ்சு சர்டிபிகேட்..
நாம கேட்டுடாலும் கோகுல் ரீசார்ஜ் பண்ணிட்டுதான் //
ஆமா வெங்கட் எப்போ கோகுல் ஆனார்? ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அதுல ஒரு சர்ட்டிபிகேட்ட ஆட்டைய போட்டு, அதுல் உம்ம பேர எழுதி வெச்சிருக்கலாம்ல? //

ஓவிய கலையை கண்டுபிடிச்சவர் கிட்ட ஒன்ஸ்மோர் ஐஸ்மோர் படம் வரஞ்சி காட்டுங்க அப்படினு எக்மோர் ஸ்டேஷன்ல நின்னு எட்டாவது வாட்டி கேக்கர மாதிரி இருக்கு நீங்க சொல்றது.

(பல தடவை சொல்லிடேன் கண்ணாடி கழட்டிட்டு கமெண்ட் போடு அப்படினு)

TERROR-PANDIYAN(VAS) said...

@Samhitha

//அடடா என்ன உதவும் மனப்பான்மை!! என் மொபைல்க்கு ஒரு 110rs ரீசார்ஜ் பண்ணிவிடுங்க ;)
//

இன்னைய கோட்டா முடிஞ்சி போச்சி போய்ட்டு நாளைக்கு வாங்க பாக்கலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்)

//இவ்ளோ கேவலமான கையெழுத்துல certificate எழுதி கொடுத்ததுக்கு அந்த பசங்க உங்களை நொங்கு எடுத்தாங்கலாமே.. //

ஜெயில் கைதிகளுக்கு நன்னடத்தை Certificate கொடுக்க சொன்னா அதுல இவரு ரஜினி மாதிரி நல்ல நடந்தார், இவர் விக்ரம் மாதிரி நல்லா நடந்தார் அப்படினு எழுதி கொடுத்ததால வேலை போய் ப்ளாக் எழுதிட்டு திறியர நீங்க எல்லாம் பேச கூடாது ஸார்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

Mohamed Faaique

//காமெடி சூப்பர்..//

சிரிப்பது மனுஷங்களுக்கு மட்டும் உள்ள பண்புதான்... ஆனா சம்பந்தமே இல்லாம சிரிச்சா நீங்க கமெடி பீஸாகிடுவிங்க பாஸ். நான் சொல்றத சொல்லிடேன் அப்புறம் உங்க இஷ்டம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//விஜயகாந்த் ராதா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ( ஹி., ஹி..! )" //

இந்த அறிவ படிப்புல காட்டி இருந்த இன்னைக்கு மாடு மேய்க்கர பொழப்புக்கு வந்து இருப்பியா? :)

Mohamed Faaique said...

@shamhitha
///samhitha said...

//, என்னுடைய கடைசி பதிவுக்கு
ஒரு ஓட்டு போட்டுருங்களே!!!//
இதான் சொந்த செலவுல சூனியம் வச்சிகறதா faaique :D?? ///
ஆமாங்க.. என் பதிவுல அவர் போட்ட கொம்மண்ட்’ல என் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

TERROR-PANDIYAN(VAS) said...

@ராக்ஸ் ரஜேஷ்

//excellent , marvelous, dhool , wonderful, amazing . .. //

ராக்கு!!! ஏன்? ஏன்? ஏன்? நமக்கு எதுக்கு இந்த வீன் விளம்பரம்? Interviewல what is ur name? கேட்டாகூட.. சார் ஒரு க்ளு கொடுங்க அப்படினு கேப்ப. இங்க வந்து இங்கிலிபிச்சு....

TERROR-PANDIYAN(VAS) said...

பெ.சொ.வி

//ஆனா நீங்க உதவி பண்ணினா, அதுனால நாலு பேருக்குத் தூக்கம் போயிடுமே, அத பத்தி ஒண்ணுமே சொல்லலையே!//

நாலு பேரு இல்லை (VKS)ஆறு பேரு. எங்க தல புகழ் அதிகமாகர வய்த்தெறிச்சல்ல தூக்கம் போய் கண்ணு எறிச்சல்ல கஷ்டபடாதிங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//VKS மெம்பருக்கு இவரு எப்பவுமே Sheep Guestதானே, பாபு? //

Sheep Guest இல்லிங்க Sheep's Guest. உங்க வீட்டு கெஸ்ட்ட எப்படி சொல்ல முடியும். அங்க பாருங்க 8.75 ரூபாய் நோட்டு கீழ கிடக்கு.

(டேய் செல்வா!! சார் குனிஞ்சதும் வலிக்காம வெட்டனும்)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//ஆனா 83 Certificates எழுதின
எனக்கு அது கூட கிடைக்கலை.. ம்ஹூம்..!!!//


Rocket க்கு எதுக்கு Ranway!!!

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// நீங்க எழுதாம இருந்திருந்தா உங்க
பையனுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கும்... //

நாங்க என்ன பரிசுக்காகவா இதை
செய்யறோம்..? எதுக்கும் பதிவு
டைட்டிலை இன்னொரு தரம் படிங்க..
அப்ப என் நல்ல மனசு உங்களுக்கு புரியும்..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ரொம்ப அதிசயமான நிகழ்ச்சிதான்
சரித்திரத்துல வரும் //

அப்படியா..? அப்ப " அசோகர் மரம்
நட்டார்னு " சரித்திரத்துல வருதே..!
மரம் நடறது ஒரு அதிசயமான நிகழ்ச்சியா..?!
# டவுட்டு.

samhitha said...

@terror
//இன்னைய கோட்டா முடிஞ்சி போச்சி போய்ட்டு நாளைக்கு வாங்க பாக்கலாம்.//
உங்களை பொறுத்த வரைக்கும் tomorrow never comes னு நல்லாவே தெரியும்..
ஸோ டீலிங் உடனே முடிக்கணும்..

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@வெங்கட்
Rocket க்கு எதுக்கு Ranway!!!///வெங்கட் SAID : அதானே டெரர்... ஒரு பாட்டில் இருந்தா போதாது ....:))
ME :வெங்கட் ராக்ஸ் ...:))

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthik

//அதானே டெரர்... ஒரு பாட்டில் இருந்தா போதாது ....:)) //

உங்க VKS ரேஞ் என்னானு காட்டிட்ட பார்த்தியா... போடா போ போய் பெரியவங்களை கூட்டிடு வா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Samhitha

//உங்களை பொறுத்த வரைக்கும் tomorrow never comes னு நல்லாவே தெரியும்....//

எங்களை பொறுத்த வரைக்கும் தான tomorrow never comes? அப்போ உங்களுக்கு tomrrow வரும் இல்ல. அப்போ வாங்க. இப்போ கிளம்புங்க... :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@Karthik
///உங்க VKS ரேஞ் என்னானு காட்டிட்ட பார்த்தியா...///


@டெர்ரர் கொள்ளு பட்டாசு வெடிக்கறதுக்கு வூதுபத்தி எடுத்துட்டு போற ஆளுக நீங்க ....உங்க ரேஞ்சுக்கு எங்க ரேஞ் எவ்ளவோ பரவாயில்ல ...:))


///போடா போ போய் பெரியவங்களை கூட்டிடு வா... :)///

நாங்கெல்லாம் ராக்கெட்ட பாக்கெட்ல வெச்சே பத்த வெச்சவுங்க.... உங்களுக்கு நானே அதிகம்தான் ....:))

samhitha said...

//உங்க VKS ரேஞ் என்னானு காட்டிட்ட பார்த்தியா... போடா போ போய் பெரியவங்களை கூட்டிடு வா... :)
//
ha ha ha karthik
அடாது கமெண்ட் போட்டு விடாது கேவலப்படுவேன்னு இருக்கீங்களே!!!
ஷப்பா சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது

//ஆனா ஒண்ணு, எவ்ளோ அறுத்தாலும் தாங்கும், இந்த ஆடு ரொம்.........ப நல்ல ஆடு!//
:D

karthikkumar said...

@ சம்ஹிதா
ha ha ha karthik
அடாது கமெண்ட் போட்டு விடாது கேவலப்படுவேன்னு இருக்கீங்களே!!!
ஷப்பா சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது////

அந்த கமென்ட்கு என்ன ரிப்ளை போடறதுன்னு தெரியாம அவரே எதோ வாய்க்கு வந்தத சொல்லிட்டு போயிருக்கார் .... இவுங்களுக்கு அதை பாத்து சிரிப்பு வருதாம் சிரிப்பு ..போங்க போங்க போய் சுட்டி டீவில டோராவின் பயணங்கள் பாருங்க....:))

samhitha said...

//எங்களை பொறுத்த வரைக்கும் தான tomorrow never comes? அப்போ உங்களுக்கு tomrrow வரும் இல்ல. அப்போ வாங்க. இப்போ கிளம்புங்க... :)//
aiyayoo enadhu idhu?? daily idhaye sollitu irundha epdi??
sonna velaiya mudinga pa
but romba nalla samalikireenga :)


//நாங்கெல்லாம் ராக்கெட்ட பாக்கெட்ல வெச்சே பத்த வெச்சவுங்க...//
mm apdiya?? aama yaar pocketla nu sollave illa?? :) VKS ellam ipdi kokumaaka dhaane seiveenga adhaan keten

karthik idha padichadhum tom cat rocketa pidichite parakaradhu dhaan kan munnala vandhuchu tom ku badhila neenga :D

//போய் சுட்டி டீவில டோராவின் பயணங்கள் பாருங்க.//
ok uncle :|

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// பரவாயில்ல பண்ணுங்க.. உங்ககிட்ட
இருக்கும் 111rs-a காலி பண்ணனும்
அவ்ளோ தான் ;) //

இன்னுமா இந்த ஊரு நம்மள
நம்புது..?! :-)

வெங்கட் said...

@ டெரர்.,

// Rocket க்கு எதுக்கு Ranway!!!//

ஆஹா.. சூப்பரு..!

நாம வேணா " வெங்கட்., வெங்கட்..,
ராக்கெட் வெங்கட்.."-னு
உதித் நாராயணனை வெச்சு
ஒரு தீம் Song ரெடி பண்ணி
வெச்சுக்கலாமா..?!

வெங்கட் said...

@ கார்த்தி,

// நாங்கெல்லாம் ராக்கெட்ட பாக்கெட்ல
வெச்சே பத்த வெச்சவுங்க.... //

அதை கூட ஒழுங்கா எப்படி பத்த
வெக்கணும்னு தெரியல..
பேச்சை பாரு..!

சின்ன புள்ளங்கறது சரியாத்தான்யா
இருக்கு..

வெங்கட் said...

@ கார்த்தி,

// அந்த கமென்ட்கு என்ன ரிப்ளை
போடறதுன்னு தெரியாம அவரே
எதோ வாய்க்கு வந்தத சொல்லிட்டு
போயிருக்கார்.. //

ஆமா இவரு பெரிய கணித மேதை
ராமானுஜம்.. பெரிய கேள்வி கேட்டுட்டாரு..
நாங்கல்லாம் பதில் சொல்ல முடியாம
முழிக்கிறோம்..!

போங்க கார்த்தி.,மூக்குக்கு பக்கத்துல
ரத்தம் வருது பாருங்க., துடைச்சிட்டு
மருந்து போடற வழியை பாருங்க..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// போய் சுட்டி டீவில
டோராவின் பயணங்கள் பாருங்க.//

// ok uncle :| //

என்னாது இது..?

உங்க ஊர் பக்கமெல்லாம்
தாத்தாவை Uncle-ஆ கூப்பிடுவீங்க.?

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//கொள்ளு பட்டாசு வெடிக்கறதுக்கு வூதுபத்தி எடுத்துட்டு போற ஆளுக நீங்க //

எங்க ரேஞ்சிக்கு அனு குண்டு கூட கொளளு பட்டாசு தான். அதனால நாங்க எப்பவும் கொள்ளு பட்டாசு வெடிக்க ஊதுபத்தி கொண்டு வா அப்படினு தான் பேசிப்போம்.

//நாங்கெல்லாம் ராக்கெட்ட பாக்கெட்ல வெச்சே பத்த வெச்சவுங்க....//

வாங்கி வந்த ராக்கெட் பட்டாச பாக்கெட் (கவர்) பிரிக்கனும் சொல்லி கூட தெரியாதா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//அந்த கமென்ட்கு என்ன ரிப்ளை போடறதுன்னு தெரியாம அவரே எதோ வாய்க்கு வந்தத சொல்லிட்டு போயிருக்கார் ....//

விடு மச்சி! விடு மச்சி! நமக்கு எல்லாம் அசிங்கபடரது என்ன புதுசா? மூஞ்சியில இருக்க மண்ண தொடச்சிட்டு போய் அடுத்த பால போடு... :)

பெசொவி said...

@ வெங்கட் said...

" அசோகர் மரம்
நட்டார்னு " சரித்திரத்துல வருதே..!
மரம் நடறது ஒரு அதிசயமான நிகழ்ச்சியா..?!
# டவுட்டு.
//

மரம் நடறது அதிசயம் இல்லை, சாலை ஒரத்தில் மரம் நட்டு அதனால் நிழல் வர வழைச்சது, அவர் காலத்தில்தான். அது தான் அதிசயம். அதுனால தான் அது சரித்திரத்துல வருது. உங்க கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது.அது சரி, ஸ்கூல் படிக்கும்போது ஒழுங்காப் படிச்சிருந்தா இதெல்லாம் தெரியும்.

பெசொவி said...

@ வெங்கட்

//@ சுரேஷ்.,

எதுக்கும் பதிவு
டைட்டிலை இன்னொரு தரம் படிங்க..
அப்ப என் நல்ல மனசு உங்களுக்கு புரியும்..!
//
அப்ப ஒரு தடவை படிச்சா உங்க பதிவு புரியாதுன்னு சொல்றீங்க! இப்பதான் புரியுது, உங்க பதிவுகளுக்கு நிறைய Page Views எப்படி வருதுன்னு?

அனு said...

@terror

//எங்க ரேஞ்சிக்கு அனு குண்டு கூட கொளளு பட்டாசு தான். //

ஹிஹி.. புஸ்வானத்துக்கு காதை பொத்துறவங்க எல்லாம் வந்து அணுகுண்டைப் பத்தி பேசுறாங்க.. என்ன கலிகாலம்டா இது..

தம்பி.. தள்ளி நில்லுப்பா.. அக்கா மிளகாய் வெடி போட போறேன்ல..

வெங்கட் said...

@ அனு.,

// தம்பி.. தள்ளி நில்லுப்பா.. அக்கா
மிளகாய் வெடி போட போறேன்ல.. //

யக்கோவ்.. நீங்க இன்னும் இந்த
கெட்ட பழக்கத்தை விடலையா..?

யாருமில்லாத கடையின்னு தெரிஞ்சா
என்னா தில்லா சவுண்ட் விடறீங்க..?

காலையில நாங்க இருக்கும் போது
வாங்க அப்ப உங்க பஞ்ச் டயலாக்கை
எல்லாம் பஞ்சர் ஆக்கி காட்டுறோம்.!

குணசேகரன்... said...

way of writing is funny...super post.


http://zenguna.blogspot.com