சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 May 2011

வூடு கட்டி அடிக்கறதுன்னா இதானா..?!


போன வாரம் ஒரு நாள் நைட்.,

எங்க வீட்டு வராண்டாவுல
என் ரெண்டு வாலு பசங்களும்
இங்கிட்டும்., அங்கிட்டும் தாவி தாவி
விளையாடிட்டு இருந்தாங்க..

நான் மட்டும் ஒரு ஓரமா உக்காந்து
ஒரு படுபயங்கரமான யோசனையில
இருந்தேன்..

ஏன்னா அடுத்த நாள்
என் சின்ன பையனுக்கு
LKG-ல சேர Entrance Exam..

அதை நினைக்கும் போதே
எனக்கு ஒரே டென்ஷனா இருந்தது..
( ஹி., ஹி..! Interview-ல என்னைய
எதாவது கேள்வி கேட்டுட்டா..!! )

60 நாள் லீவ்ல Pre KG-ல படிச்சதை
எல்லாம் மறந்து இருப்பானோ..?!
எதுக்கும் ஒரு சின்ன டெஸ்ட்
வெச்சு பார்க்கலாமா..?!

" கோகுல்.. இங்கே வா..! "

" என்னாப்பா..? "

( எங்க வீட்டு முன்னாடி நின்னுட்டு
இருந்த ஒரு நாயை காட்டி.. )

" கோகுல்.., அது என்ன ..? "

" ம்ம்.. நாய்பா.. "

" நாய்தான்.., அதை இங்கிலீஸ்ல
எப்படி சொல்லுவ..! "

" ம்ம்.., இங்கிலீஸ் நாய்..! "

சொல்லிட்டு.., அவன் மறுபடியும்
தாவ ஓடிட்டான்..

நான் ஷாக் ஆகி.. பக்கத்துல
இருந்த என் பெரிய பையன் கிட்ட..

" சூர்யா.. எனக்கு ஒரு டவுட்டு.. "

" என்னப்பா..? "

" இவன் போன ஜென்மத்துல
குரங்கா இருந்திருப்பானோ..?! "

" ஹா., ஹா., ஹா...!
அப்பா.. எனக்கு ஒரு டவுட்டு..! "

" என்ன..? "

" அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?! "

" அடிங்..! "

டிஸ்கி : இன்னிக்கு இந்த பதிவுக்காக
கூகுள்ல படம் தேடிட்டு இருந்தேன்..
அப்போ என் மனைவி..

" மாலா.. இந்த படம் போடவா..?! "

" ஐயே.. இது வேணாம்க.. இதுல
Father அழகாவே இல்ல..! "

" ஹி.,ஹி.,ஹி..!! "

" ரொம்ப வழியாதீங்க.. Atleast பதிவுக்கு
போடற படத்துலயாவது Father அழகா
இருக்கட்டுமேன்னு சொன்னேன்..! "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......! "
.
.

22 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

" அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?! "//

குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களே

Speed Master said...

அடக்கொடுமையே

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

நாமே ராஜா, நமக்கே விருது-8
http://speedsays.blogspot.com/2011/05/8.html

Mohamed Faaique said...

முடியல பாஸ்... நானும் VAS' சேர்ந்துரலாமானு இருக்கேன்.. உலகமே சேர்ந்து கும்மும் போது, பார்க்க பாவமா இருக்கு, உங்கள (பைசா வாங்கிட்டு) ஆதரிக்கிர ஒரு சில உள்ளங்கள்’அ நானும் சேர்ந்துரலாம்’னு இருக்கேன்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

" அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?! "//

குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களே ////

அது ஒரு தெய்வக்குழந்தை . . .
முன் ஜென்மம் பற்றி நல்ல தெரியுது . . .

ராஜகோபால் said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

" அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?! "//

குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களே ////

அது ஒரு தெய்வக்குழந்தை . . .
முன் ஜென்மம் பற்றி நல்ல தெரியுது . //


நீங்க கொஞ்சம் சும்மா இருங்க அப்பறம் அந்த தெய்வம் நாந்தான்னு சொன்னாலும் சொல்லுவாரு...
:))

middleclassmadhavi said...

புத்திசாலிக் குழந்தை!

மனைவி ஒரு மந்திரி!!

samhitha said...

//அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?
குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களே
//
வாவ்!! சிலர் ஏழு ஜென்மத்துக்கும் நீங்களே எனக்கு -------[relationship] வரணும்னு கேக்கற மாதிரி போன ஜென்மத்துல gokul kuttiyum ketrupan pola!!
அப்போவும் நீங்க நல்ல அப்பாவா இருந்து இருக்கீங்கனு பெருமை படுங்க ;)

//" ம்ம்.. நாய்பா.. "

" நாய்தான்.., அதை இங்கிலீஸ்ல
எப்படி சொல்லுவ..! "

" ம்ம்.., இங்கிலீஸ் நாய்..! "//
ச்சோ ச்வீட்ட்ட்... திருஷ்டி சுத்தி போடுங்க!!

//ரொம்ப வழியாதீங்க.. Atleast பதிவுக்கு
போடற படத்துலயாவது Father அழகா
இருக்கட்டுமேன்னு சொன்னேன்..!//
விடுங்க வெங்கட்.. காய்ச்ச மரம்னா கல்லடி பட தான் செய்யும்

//நீங்க கொஞ்சம் சும்மா இருங்க அப்பறம் அந்த தெய்வம் நாந்தான்னு சொன்னாலும் சொல்லுவாரு...//
ha ha கரெக்ட் தானே அது

அருண் பிரசாத் said...

என்னப்பா இது... வெங்கட் பிளாக்தானா? ரொம்ப நாள் கழிச்சி வந்து பார்கறேன்... எந்த முன்னேற்றமும் இல்ல!

அதே மொக்கை,
அதே பல்பு வாங்கற வேலை,
அதே தன்னை தானே கலாய்ச்சிகறது...

அட அதே 6 ஓட்டு, 7 கமெண்டு (எண்ணிக்கைய சொன்னேன் - நீங்க படிக்கறது பழைய பதிவுனு மொக்கை போட கூடாது)

சரி சரி நாடு இன்னும் திருந்தலை போல...

அருண் பிரசாத் said...

//"வூடு கட்டி அடிக்கறதுன்னா இதானா..?!"//

இல்லை, இது நீங்க கட்ட்ina வூட்டுல வந்து அடிக்கறது.... அதாங்க உங்க வீடுல (Blog) நாங்க வந்து கலாய்கிறோம்ல அதான் இது...

//நான் மட்டும் ஒரு ஓரமா உக்காந்து
ஒரு படுபயங்கரமான யோசனையில
இருந்தேன்..//
ஓ! உங்களை பத்தி யோச்சிட்டு இருந்தீங்களா? அதான் பயங்கரமா இருந்து இருக்கு... VKS பத்தி யோசிச்சி இருந்தா பயமா இருந்து இருக்கும் உங்களுக்கு...

//அதை நினைக்கும் போதே
எனக்கு ஒரே டென்ஷனா இருந்தது..
( ஹி., ஹி..! Interview-ல என்னைய
எதாவது கேள்வி கேட்டுட்டா..!! )//
அதை பத்தி நீங்க கவலை படாதீங்க... அவங்க அம்மா பார்த்துப்பாங்க... எப்படியும் வீட்டுல சொல்லி குடுக்க போறது அவங்க தான!

//" நாய்தான்.., அதை இங்கிலீஸ்ல
எப்படி சொல்லுவ..! "

" ம்ம்.., இங்கிலீஸ் நாய்..! "//
நல்ல வேளை அப்பாவை இங்கிலீஸ்ல எப்படி சொல்லுவனு கேட்டு வைக்கலை... அதே பதில் வந்து இருக்க போகுது

//" அப்பவும் இவனுக்கு நீங்க தான்
அப்பாவா இருந்து இருப்பீங்களோ..?! "//
சே.. சே... இந்த ஜென்மத்துலயும் அப்படியே தான் இருக்கறேன் சொல்லுங்க

//" ரொம்ப வழியாதீங்க.. Atleast பதிவுக்கு
போடற படத்துலயாவது Father அழகா
இருக்கட்டுமேன்னு சொன்னேன்..! "//
விடுங்க சகோ... வாழ்க்கைல சில சமயம் கடவுள் இப்படி தப்பு செய்யறது உண்டு...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களே //

ஹி., ஹி., இதை சொன்ன அதே
என் பையன் தான் உங்களை பாத்து..

" இவரை பாத்தா போலீஸ் மாதிரி
தெரியலையே., பிக்பாக்கெட் திருடர்
மாதிரி இருக்குன்னு " சொன்னான்..

குழந்தைங்க பொய் சொல்லாதில்ல
ரமேஷூ..!

வெங்கட் said...

@ Mohamed.,

// உலகமே சேர்ந்து கும்மும் போது,
பார்க்க பாவமா இருக்கு, //

இந்த 7 பேர் தான் உலகமா..?!

பூனை கண்ணை மூடிகிட்டா
உலகமே இருட்டாயிடிச்சின்னு
நினைக்குமாம்.. அது மாதிரியில்ல
இருக்கு..!

// நானும் VAS' சேர்ந்துரலாமானு
இருக்கேன்.. //

ஹி., ஹி., ஹி..!
அடி ரொம்ப பலமோ..!?

இந்த வீணா போன VKS-ஐ நம்பி
சவுண்ட் விட்டா இப்படிதான்..

வெங்கட் said...

@ ராக்ஸ் ராஜேஸ்.,

// அது ஒரு தெய்வக்குழந்தை...
முன் ஜென்மம் பற்றி நல்ல தெரியுது.. //

இந்த ஜென்மத்துல குரங்கா
இருக்கற ரமேஷே அதை பத்தி
துளிகூட கவலைபடாதப்ப..

நான் ஏன் போன ஜென்மத்தை
பத்தி கவலைபடணும்..?

வெங்கட் said...

@ ராஜகோபால்.,

// நீங்க கொஞ்சம் சும்மா இருங்க
அப்பறம் அந்த தெய்வம் நாந்தான்னு
சொன்னாலும் சொல்லுவாரு... //

சே., சே.. நான் அப்படி எல்லாம்
சொல்ல மாட்டேன்..

" தெய்வமே நீங்க எங்கேயோ
போயிட்டீங்கன்னு..! "
என் பக்த கோடிகள் வேணா
அப்படி சொல்லுவாங்க..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ மாதவி.,

// புத்திசாலிக் குழந்தை! //

நான் சின்ன பையனா இருக்கும்
போதும் எல்லோரும் இதே மாதிரி
தான் சொல்லுவாங்க...!

:)

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வாவ்!! சிலர் ஏழு ஜென்மத்துக்கும்
நீங்களே எனக்கு -------[relationship]
வரணும்னு கேக்கற மாதிரி போன
ஜென்மத்துல gokul kuttiyum ketrupan pola!! //

இருக்கும்., இருக்கும்..!!

அவன் பிறந்து ரெண்டாவது நாளே
என்னை பாத்து " அப்பான்னு "
கூப்பிட்டான்னா பாருங்களேன்..

// ச்சோ ச்வீட்ட்ட்... திருஷ்டி சுத்தி போடுங்க!! //

எதுக்கு..? அதான் எங்க ஊர் Enterance-ல
VKS Group Photo மாட்டி வெச்சி இருக்கோமே..
அது மாட்னதுல இருந்து எங்க ஊருக்கே
திருஷ்டி கழிஞ்சிடுச்சு..!

வெங்கட் said...

@ அருண்.,

// என்னப்பா இது... வெங்கட் பிளாக்தானா?
ரொம்ப நாள் கழிச்சி வந்து பார்கறேன்...
எந்த முன்னேற்றமும் இல்ல! //

நாங்க என்ன இங்கே நிலாவுக்கு
ராக்கெட் விடறதை பத்தி ஆராய்ச்சியா
பண்ணிட்டு இருக்கோம். தினமும்
முன்னேற்றம் காட்றதுக்கு..?!!

// அட அதே 6 ஓட்டு, 7 கமெண்டு //

அட பதிவு போட்ட 30 Second-ல
வந்துட்டீங்க போல...

// சரி சரி நாடு இன்னும் திருந்தலை
போல. //

அதெல்லாம் திருந்திடுச்சு.. அதான்
உங்க பிளாக் பக்கம் கூட்டமே
இல்லையாமே..!

வெங்கட் said...

@ அருண்.,

// VKS பத்தி யோசிச்சி இருந்தா பயமா
இருந்து இருக்கும் உங்களுக்கு... //

சே., சே.. எனக்கு பேய் பயமெல்லாம்
இல்ல.. அதனால இந்த
குட்டி சாத்தனுங்களுக்கெல்லாம்
நான் பயப்பட மாட்டேன்..

// விடுங்க சகோ... வாழ்க்கைல சில சமயம்
கடவுள் இப்படி தப்பு செய்யறது உண்டு... //

ஹி., ஹி.., ஹி..!! அன்னிக்கு KFC-ல
உங்க Wife உங்களை பத்தி என்ன
சொன்னாங்க தெரியுமா..?

அதை கேட்ட என்னாலயே தாங்க
முடியலையே.. நீங்க எப்படி.. அதை...

சரி., சரி.. அதை விடுங்க..
இப்ப ஏன் அதை சொல்லிகிட்டு...!

ரசிகன் said...

@samhitha
// காய்ச்ச மரம்னா கல்லடி பட தான் செய்யும் //

கல்லடி பட்டே காய்க்கிற மரம் கூட உண்டு போல... இங்க பாத்தாதான் தெரியுது..

samhitha said...

//கல்லடி பட்டே காய்க்கிற மரம் கூட உண்டு போல... இங்க பாத்தாதான் தெரியுது..//

ஆமா ஆமா
//"நானும் VAS' சேர்ந்துரலாமானு
இருக்கேன்.."//

இத பார்த்ததும் எனக்கும் அதான் தோணுச்சு :D

மங்குனி அமைச்சர் said...

( எங்க வீட்டு முன்னாடி நின்னுட்டு
இருந்த ஒரு நாயை காட்டி.. )///

யோவ் , பொய் சொல்லாத ...உனக்கு முன்னாடி இருந்த முகம் பார்க்கும் கண்ணாடிய பார்த்துதான இந்த கேள்விய கேட்ட ???

மங்குனி அமைச்சர் said...

" நாய்தான்.., அதை இங்கிலீஸ்ல
எப்படி சொல்லுவ..! "

" ம்ம்.., இங்கிலீஸ் நாய்..! "///

ஆமா ஆமா தப்புதான் இங்கிலீசுல "naai " அப்படின்னு சொல்லனும்

Madhavan Srinivasagopalan said...

//" ரொம்ப வழியாதீங்க.. Atleast பதிவுக்கு
போடற படத்துலயாவது Father அழகா
இருக்கட்டுமேன்னு சொன்னேன்..! "//

ஃபாதர்னா ...? ம்ம்ம் சர்ச்சுல 'வெள்ளை அங்கி'ல இருப்பாரே அவருதான...?

உங்களோட வலைப்பூவின் பெயர்க் காரணம் இன்று புரிந்துவிட்டது..