சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 May 2011

புதிய சட்டசபையை என்ன செய்வது.? ( லொள்ளு டிப்ஸ் )


இப்ப தலைமை செயலகம் மறுபடியும்
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே போயிடுச்சு.

அதனால 1200 கோடி ரூபாய் செலவுல
கட்டின புதிய சட்டசபை கட்டிடம்
வீணா போகுதேன்னு நிறைய பேர்
பீல் பண்றாங்க..

Don't Worry..! அப்படி எல்லாம்
வீணா போக விட்டுடுவோமா..?!

அந்த கட்டிடத்தை எப்படி எல்லாம்
Use பண்ணிக்கலாம்னு " அம்மா" வுக்கு
சில டிப்ஸ்...


1. அதை Shopping Mall-ஆ மாத்தி
வாடகைக்கு விடலாம்.. அதனால
Govt-க்கு Extra வருமானம்.

2. தமிழ்நாட்ல இருக்கிற ஜோசியக்காரங்க,
வாஸ்து நிபுணர்கள், நியூமரலாஜி.,
ஜெம்மாலஜி, ஓலைசுவடி படிக்கிறவங்கன்னு
எல்லோரையும் மொத்தமா அள்ளிட்டு 
வந்து இங்கே குந்த வெச்சி  ஒரு
" ஜோசிய நகரம் " உருவாக்கலாம்.!

3. சினிமா ஸ்டுடியோவா மாத்தி
ஷூட்டிங்குக்கு வாடகைக்கு விடலாம்,
அப்படியே " ஜாக்பாட் " நிகழ்ச்சிக்கும்
அங்கேயே ஒரு செட் போட்டுக்கலாம்..!

4. அரசே இங்கே சொந்தமா ஒரு மதுபான
தயாரிப்பு கம்பெனி ஆரம்பிச்சு., டாஸ்மார்க்கு
சப்ளை பண்ணலாம்., இதனால அரசுக்கு
வருமானம் கூட வாய்ப்பு இருக்கு.

5. Building-ஐ Full-ஆ AC பண்ணி.,
கோயில் யானைகளுக்கு Relax Camp
இனிமே இங்கேயே நடத்தலாம்.

6. கல்யாண மண்டபமா மாத்தலாம்.
108.,1008-ன்னு மெகா இலவச திருமணங்கள்
நடத்த வசதியா இருக்கும்..!

7. Building-க்கு உள்ளே., வெளியேன்னு
சுத்தி சுத்தி குழி வெட்டி., ஒரு மெகா
" மழை நீர் சேகரிப்பு மையமா "  இதை
மாத்திடலாம்..!

8. வண்டலூர் Zoo-வை கொண்டு வந்து
இங்கே Set பண்ணிடலாம்.. பாவம்
மிருகங்களுக்கும் ஒரு மாற்றம் வேணும்...!
( அடுத்ததா அவிங்க ஆட்சிக்கு வந்தா..
Zoo இருந்த இடத்துலயா சட்டசபையை
வெப்பாங்க.. செக் வெச்சோம்ல..! )

9. கண்ணகி சிலை., இன்னும் இது மாதிரி
வாஸ்து படி சரிவராத சிலையெல்லாம்
தூக்கிட்டு வந்து இங்கே வெச்சி ஒரு
" மியூசியம் " நடத்தலாம்..

Last But Not Least..

10. ஜெயிலா கூட மாத்திடலாம்.,
உள்ளே பிடிச்சி போட வேண்டியவங்க
லிஸ்ட் பெருசா இருந்தா., அதுக்கு இந்த
இடம் தான் வசதியா இருக்கும்..

டிஸ்கி : ஆனா எக்காரணம் கொண்டும்
இதை " VAS Head Office-ஆ " வெச்சிக்கோங்கன்னு
எங்களை Compel பண்ணாதீங்க..!

இந்த சின்ன இடமெல்லாம் எங்களுக்கு
தோதுபட்டு வராது..
.
.

36 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

2. தமிழ்நாட்ல இருக்கிற ஜோசியக்காரங்க,
வாஸ்து நிபுணர்கள், நியூமரலாஜி.,
ஜெம்மாலஜி, ஓலைசுவடி படிக்கிறவங்கன்னு
எல்லோரையும் மொத்தமா அள்ளிட்டு
வந்து இங்கே குந்த வெச்சி ஒரு
" ஜோசிய நகரம் " உருவாக்கலாம்.!


ஆஹா அவங்கமேல என்ன கடுப்பு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

8. வண்டலூர் Zoo-வை கொண்டு வந்து
இங்கே Set பண்ணிடலாம்.. பாவம்
மிருகங்களுக்கும் ஒரு மாற்றம் வேணும்...!
( அடுத்ததா அவிங்க ஆட்சிக்கு வந்தா..
Zoo இருந்த இடத்துலயா சட்டசபையை
வெப்பாங்க.. செக் வெச்சோம்ல..! )///

ஹி ஹி ஹி ஹி ......... இது செம செம செம!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கலக்கல் ஐடியாக்கள் நண்பா!!

வெங்கட் said...

@ ஓட்டை வடை.,

// ஆஹா அவங்கமேல என்ன கடுப்பு? //

ஹி., ஹி., ஹி..!! கடுப்பெல்லாம்
ஒண்ணும் இல்லையே..

ஆஹா.. ஒரு விஷயம் சொல்ல
மறந்துட்டேனே..

எது பண்றதா இருந்தாலும் முதல்ல
Building-க்கு Full-ஆ பச்சை கலர் பெயிண்ட்
அடிக்கணும்..!

Chitra said...

சினிமா ஸ்டுடியோவா மாத்தி
ஷூட்டிங்குக்கு வாடகைக்கு விடலாம்,
அப்படியே " ஜாக்பாட் " நிகழ்ச்சிக்கும்
அங்கேயே ஒரு செட் போட்டுக்கலாம்..!


....very good idea!!! :-))))))

Mohamed Faaique said...

///Building-க்கு உள்ளே., வெளியேன்னு
சுத்தி சுத்தி குழி வெட்டி., ஒரு மெகா
" மழை நீர் சேகரிப்பு மையமா " இதை
மாத்திடலாம்..! //

இந்த போட்டோ’வ பாக்கும் போதே பெரிய தண்ணீர் டேங்க்”னுதான் நெனச்சேன். பார்த்தா சட்ட சபை’னு போர்டு போட்டிருக்கு....

கக்கு - மாணிக்கம் said...

இரண்டாவதாய் சொன்ன ஐடியாதான் மிக பொருத்தம்.

Mohamed Faaique said...

இப்பிடி மொக்க போடுர free advise பண்ணுர அளுங்கள புடிச்சு அடச்சு வெக்கலாமே!!! மக்களாவது நிம்மதிய இருப்பாங்க...

Mohamed Faaique said...

//வண்டலூர் Zoo-வை கொண்டு வந்து
இங்கே Set பண்ணிடலாம்.. பாவம்
மிருகங்களுக்கும் ஒரு மாற்றம் வேணும்...!
)///

//ஆனா எக்காரணம் கொண்டும்
இதை " VAS Head Office-ஆ " வெச்சிக்கோங்கன்னு
எங்களை Compel பண்ணாதீங்க..! ///

வைக்கனும்’னு சொல்ரீங்களா??? வேணாம்’னு சொல்ரீங்களா????

ready 123 said...

karunanithi kudumpathuku rent vitralam , avaroda kudumba urupinarkaluku pathuma nu theriyala

பெசொவி said...

//ஜெயிலா கூட மாத்திடலாம்.,
உள்ளே பிடிச்சி போட வேண்டியவங்க
லிஸ்ட் பெருசா இருந்தா., அதுக்கு இந்த
இடம் தான் வசதியா இருக்கும்..
//

இப்படியும் சொல்லிட்டு,
//இந்த சின்ன இடமெல்லாம் எங்களுக்கு
தோதுபட்டு வராது..//

இப்படியும் சொல்றீங்களே, ஜெயில்ல போட வேண்டியதே உங்க VAS ஆளுங்களைத் தானே?

Madhavan Srinivasagopalan said...

இன்னும் ஐடியா இருந்தா..
தொடர் பதிவா (பத்து பத்து ஐடியாவா) போடுங்க..
பொளப்பு நல்லாப் போகும்...

Speed Master said...

நம்ம பதிவர் சங்க மீட்டிங்கை இங்கே வைக்கலாம்

கோமாளி செல்வா said...

நம்மளோட நிலையப் புரிஞ்சிக்க வைக்க இவ்ளோ டிப்ஸ் தரவேண்டி இருக்கு! நம்மதான் முதல்ல இருந்தே VAS தலைமைச் செயலகமா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டே இருக்கோமே , அப்புறம் எதுக்கு அவ்ளோ சின்ன எடத்த நம்ம தலைல கட்டப்பாக்குறாங்க ?

தினமும் எனக்கு எக்கச்சக்க கால்ஸ் வருது . எப்படியாவது உங்க தலைவர் கிட்ட பேசி சம்மதிக்க வைங்க வைங்கன்னு பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் ஒரே டார்ச்சர் .. இந்தப் போஸ்ட் போட்ட அப்புறமாவது குறையுதான்னு பார்க்கலாம்!

£€k#@ said...

//இந்த போட்டோ’வ பாக்கும் போதே பெரிய தண்ணீர் டேங்க்”னுதான் நெனச்சேன். //
:D :D

ம்ம் இந்த யோசனைகளை செயல் படுத்தினாலும் ஆச்சர்யம் இல்லை :D

//karunanithi kudumpathuku rent vitralam , avaroda kudumba urupinarkaluku pathuma nu theriyala//
கண்டிப்பா பத்தாது :)

வெங்கட் said...

@ Mohamed.,

// இந்த போட்டோ’வ பாக்கும் போதே
பெரிய தண்ணீர் டேங்க்”னுதான் நெனச்சேன்.
பார்த்தா சட்ட சபை’னு போர்டு போட்டிருக்கு.. //

அது ஒண்ணுமில்ல.. இந்த கட்டிடத்துக்கு
பிளான் போட்டுட்டு இருக்கும் போது
அந்த இஞ்சினியர் ஒரு தண்ணி Tank-க்கும்
டிசைன் போட்டுட்டு இருந்தாராம்..

குடுக்கும் போது ரெண்டும் மாறி
போச்சாம்..!

வெங்கட் said...

@ கக்கு மாணிக்கம்.,

// இரண்டாவதாய் சொன்ன ஐடியாதான்
மிக பொருத்தம். //

அதாவது " ஜோசிய நகரம் "
உருவாக்கறது..! ரைட்டு..!

அப்படியே உள்ளே ஒரு
யாகசாலையும் வெச்சிட்டா..
அமாவாசை, பௌர்ணமின்னு
சும்மா யாகம் நடத்திட்டே இருக்கலாம்..

வெங்கட் said...

@ Mohamed.,

// இப்பிடி மொக்க போடுர free advise
பண்ணுர அளுங்கள புடிச்சு அடச்சு
வெக்கலாமே!!! மக்களாவது நிம்மதிய
இருப்பாங்க... //

என்னாது..? Free Advise-ஆ..?

இது Chief Minister ஜெ. Personal-ஆ
கேட்டுகிட்டதால குடுத்த Advise..!

எதோ நம்ம Chief Minister
அப்படீங்கறதால எங்க Fees-ல
25% Concession குடுத்தோம்..
அவ்ளோ தான்..!

வெங்கட் said...

@ ரெடி 123.,

// karunanithi kudumpathuku rent vitralam ,
avaroda kudumba urupinarkaluku pathuma nu
theriyala //

கண்டீப்பா பத்தும்ங்க..!

இனிமே அவங்க குடும்பத்துல
பாதி பேர் டெல்லிலல்ல இருக்க
போறாங்க..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஜெயில்ல போட வேண்டியதே
உங்க VAS ஆளுங்களைத் தானே? //

காந்தியும் ஜெயில்ல இருந்து இருக்காரு..
கோட்சேவும் ஜெயில்ல இருந்து
இருக்கான்.. அதுக்காக ரெண்டும் ஒண்ணா..!?

நாங்கல்லாம் காந்தி வம்சம்..!

வெங்கட் said...

@ மாதவன்.,

// இன்னும் ஐடியா இருந்தா..
தொடர் பதிவா (பத்து பத்து ஐடியாவா)
போடுங்க.. பொளப்பு நல்லாப் போகும்... //

அட., ஒரே விஷயத்தை பத்தி
நிறைய பதிவு போடறதா..?

அப்ப ஜெ.அம்மா தினமும்
புதுசு புதுசா பதிவு போட ஐடியா
குடுப்பாங்களே அதையெல்லாம்
என்ன பண்றதாம்..?!

லேட்டஸ்ட் "சமச்சீர் கல்வி ரத்து.!"

கிச்சா said...

//நாங்கல்லாம் காந்தி வம்சம்..!//
இந்திரா குடும்பம் காந்தே அப்டிங்கறத தன் வசதிக்காக காந்தின்னு வச்சுக்கிட்ட மாதிரி ஆளாளுக்கு காந்திய சொந்தம் கொண்டாடுறாங்கையா

middleclassmadhavi said...

லொள்ளு டிப்ஸா... எதுக்கும் காபிரைட் வாங்கி வைச்சுக்கோங்க!

வெங்கட் said...

@ ஸ்பீட் மாஸ்டர்.,

// நம்ம பதிவர் சங்க மீட்டிங்கை
இங்கே வைக்கலாம் //

இம்புட்டு பேரையும் ஒரே இடத்துலயா..?!
சுத்தம்..! அந்த மீட்டிங்குக்கு பாதுகாப்பு
குடுக்க ராணுவத்தை தான் கூப்பிடணும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

11. டாகுடர் விஜய் ரசிகர் மன்ற தலைமையகத்திற்கு கொடுத்திடலாம்

12. குரல் டிவிக்கு கொடுக்கலாம்

13. கேப்டனுக்கு மெகாசைஸ் பார்வெச்சுக் கொடுக்கலாம்

Suresh Kumar M said...

ஐடியா சிகாமணிய... கண்டிப்பாக 2016 தமிழ்நாடு "CM" வெங்கட் தான் என்று பெருமையோடு மார்தடிக்கொள்கிறேன்... திமுக-மஞ்சள், அதிமுக-பச்சை, VAS-நீலம்...

வெங்கட் said...

@ செல்வா.,

// தினமும் எனக்கு எக்கச்சக்க
கால்ஸ் வருது //

உன்னையும் தொந்தரவு பண்றாங்களா..?

நாம தான் அமெரிக்கா வெள்ளை
மாளிகையே நமக்கு வேணாம்னு
சொல்லிட்டோம்.. அப்புறம் இந்த
" இந்தியன் ஆயில் எண்ணை டாங்க்கை "
வெச்சிட்டு என்ன பண்ண போறோம்..?

தெளிவா சொல்லிடுப்பா...

வெங்கட் said...

@ லேகா.,

// ம்ம் இந்த யோசனைகளை
செயல்படுத்தினாலும் ஆச்சர்யம்
இல்லை :D //

ஆமாம்.. ஆனா...,

" பெரிய மெகா சைஸ் மூடி
ஒண்ணு ரெடி பண்ணினா..
இதை குப்பை தொட்டியா
Use பண்ணிக்கலாம்..! "

இப்படி யாராச்சும் என்னைவிட
சிறந்த யோசனை சொல்லிட்டா..
அதை செயல்படுத்தினாலும்
ஆச்சர்யம் இல்லை..

வெங்கட் said...

@ கிச்சா.,

// ஆளாளுக்கு காந்திய சொந்தம்
கொண்டாடுறாங்கையா //

காந்தி நம்ம தேச தந்தை.,
அப்படி பார்த்தா அவரு நமக்கு
சொந்தம்தாம்லே..!

ஆமா நீரு என்ன
உகாண்டாவுயாலயா இருக்கீரு..?

வெங்கட் said...

@ மாதவி.,

// லொள்ளு டிப்ஸா... எதுக்கும் காபிரைட்
வாங்கி வைச்சுக்கோங்க! //

காப்பி ரைட்., டீ ரைட்.,
ஹார்லிக்ஸ் ரைட்,
போர்ன்விட்டா ரைட்னு
எல்லா ரைட்டும் வாங்கிட்டோம்ங்க..

:-)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// 11. டாகுடர் விஜய் ரசிகர் மன்ற
தலைமையகத்திற்கு கொடுத்திடலாம் //

இதுக்கு பேசாம பாம் வெச்சு
கட்டிடத்தை தரை மட்டமாக்கிடலாம்..!

// 12. குரல் டிவிக்கு கொடுக்கலாம் //

இதுக்கு பாம் எல்லாம் வெக்க வேணாம்..
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும்..,
Building தானாவே இடிஞ்சி விழுந்துடும்.

// 13. கேப்டனுக்கு மெகாசைஸ்
பார்வெச்சுக் கொடுக்கலாம் //

அப்படியே கட்சி ஆபீஸும் ஓரமா
நடத்திக்கலாம்.. பார்ல இருந்து
நேரா வந்து நாலு பேரையாவது
அடிக்கணும்ல..!

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// ஐடியா சிகாமணிய... கண்டிப்பாக 2016
தமிழ்நாடு "CM" வெங்கட் தான் என்று
பெருமையோடு மார்தடிக்கொள்கிறேன்... //

சே..சே.. இந்த லோக்கல் பாலிடிக்ஸ்ல
எல்லாம் நமக்கு Interest இல்ல..

நம்ம ரேஞ்சே வேற..!

royal ranger said...

கலக்கல் கமெண்ட்ஸ் பன்னிகுட்டி & வெங்கட்

அப்டியே இந்த gokulathilsuriyan.blogspot.com ப்ளாக் அஹ பிளாக் பண்ண எதாச்சும் டிப்ஸ் இருந்த சொல்லுங்க

முடியல்

கோமாளி செல்வா said...

//அப்டியே இந்த gokulathilsuriyan.blogspot.com ப்ளாக் அஹ பிளாக் பண்ண எதாச்சும் டிப்ஸ் இருந்த சொல்லுங்க///

இது ஏற்கெனவே ப்ளாக் தானுங்க :-) வேண்ணா வெப்சைட்டா மாத்துறதுக்கு டிப்ஸ் தரோம் . அதுக்காக நீங்க பணம் தரேன்னு சொல்லி அழ கூடாது!
ஏன்னா இங்க VKS காரங்க ஏற்கெனவே பணம் தரேன்னு சொல்லி அழறாங்க, அப்புறம் அவுங்களுக்கு சங்கட்டமா இருக்கும்!

Shalini(Me The First) said...

@செல்வா
//தினமும் எனக்கு எக்கச்சக்க கால்ஸ் வருது . எப்படியாவது உங்க தலைவர் கிட்ட பேசி சம்மதிக்க வைங்க வைங்கன்னு பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் ஒரே டார்ச்சர் .. இந்தப் போஸ்ட் போட்ட அப்புறமாவது குறையுதான்னு பார்க்கலாம்!
//
இங்கேயும் இதே தொல்லை தான் செல்வா! நல்லவேளை பாஸ் இந்த போஸ்ட் போட்டாரே :)

Shalini(Me The First) said...

@Royal ranger
//கலக்கல் கமெண்ட்ஸ் பன்னிகுட்டி & வெங்கட்

அப்டியே இந்த gokulathilsuriyan.blogspot.com ப்ளாக் அஹ பிளாக் பண்ண எதாச்சும் டிப்ஸ் இருந்த சொல்லுங்க

முடியல்
//

வாங்க சார் வாங்க எந்தூர்ல நாட்டாமயா இருக்கீங்க எங்க பாஸ்கே கலக்கல் சொல்ற அளவு ;)
நாங்கள்லாம் யார் தெரியும்ல சூரியனுக்கே டார்ச் அடிக்ரவங்க சார் :)