சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 December 2010

Mobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.?
















இன்னிக்கு எனக்கு
ஒரு ஆச்சரியம்..,
ஒரு அதிர்ச்சி..

மொபைல் மூலமா
தமிழ் Blogs-ஐ எப்படி படிக்கறதுன்னு
பிரபல பதிவர் மங்குனி அமைச்சருக்கு
தெரியல.. - இது எனக்கு ஆச்சரியம்..

ஆனா எப்படி படிக்கணும்னு
பிராப்ள பதிவர் சிரிப்பு போலீஸ்க்கு
தெரிஞ்சி இருக்கு - இது எனக்கு அதிர்ச்சி..

( என்ன கொடுமை இது..?!! )

அதான் இது பத்தி இன்னும் தெரியாத
சில பேருக்காக இந்த Post..

1. முதல்ல GPRS Support பண்ற
Mobile வேணும்..

( * GPRS [ General Packet Radio Service. ] is a
packet oriented mobile data service on the
2G and 3G cellular communication systems )

2. அந்த Mobile-க்கு GPRS Activate பண்ண
Customer Care-க்கு ஒரு Call பண்ணினா
அவங்க GPRS Settings அனுப்பிடுவாங்க..
நீங்க அதை உங்க Mobile-ல Save பண்ணுங்க
போதும்..

3. Mobile Net-க்கு தனி Recharges இருக்கு..
Daily Pack - Rs 5.,
3 Days Pack - Rs 15,
Monthly Pack - Rs 98.. இப்படி..
எது தேவையோ அதை Recharge
பண்ணிக்கோங்க.

4. இப்ப Mobile மூலமா Websites பாக்க
நமக்கு ஒரு நல்ல Browser வேணும்..
அதுக்கு Opera Mini Browser ரொம்பவே Best..

5. ஒருவேளை Opera Mini Browser
உங்க மொபைல்ல இல்லைன்னா..
இங்கே போயி Download பண்ணிக்கோங்க.

நான் Use பண்றது Opera Mini 4.2.

6. Net Connect ஆகும்போது
தமிழ் எழுத்துக்களை படிக்க
Opera Mini Browser open பண்ணி
Address Bar-ல opera:config -ன்னு
டைப் பண்ணி Net Connect பண்ணுங்க.

7. அதுல Use Bitmap Fonts for Complex Scripts- ன்னு
கடைசில ஒண்ணு வரும்.. அதை " YES " -ன்னு
Change பண்ணிடுங்க..

அவ்ளோ தான்.. So Simple..!!

8. இப்ப நீங்க உங்க மொபைல் வழியா
* தமிழ் பதிவு / தமிழ் மெயில் எல்லாம் படிக்கலாம்.,
* Comments படிக்கலாம்.,
* Comments Publish / Reject பண்ணலாம்.,
* எத்தனை Votes வந்திருக்குன்னு பாக்கலாம்.,
* Visiters Stats பாக்கலாம்.

But தமிழ்ல எதுவும் எழுத முடியாது.
English-ல வேணா எழுதிக்கலாம்..

Enjoy Mobile தமிழ் Browsing.....!!

:-)
.
.

95 Comments:

sawme said...

hello venkat, thanks for you post...swami

ம.தி.சுதா said...

நல்ல ஒரு தகவலுங்க மிக்க நன்றி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழில் எழுத ஏதாவது வழி கண்டுபிடித்து சொல்லுங்கண்ணா..,

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// தமிழில் எழுத ஏதாவது வழி
கண்டுபிடித்து சொல்லுங்கண்ணா.., //

அதுக்கு வாய்பில்ல..

அங்கே தமிழ்ல இருந்தாலும் சரி
சைனீஸ்ல எழுதி இருந்தாலும் சரி
அதை அப்படியே Opera Mini நமக்கு
Bitmap -ஆ Convert பண்ணி தருது..
அவ்ளோ தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனா எப்படி படிக்கணும்னு
பிராப்ள பதிவர் சிரிப்பு போலீஸ்க்கு
தெரிஞ்சி இருக்கு - இது எனக்கு அதிர்ச்சி..///

இதை எனக்கு சொல்லிகொடுத்தவர் பேரை கேட்டா ரொம்ப அதிர்ச்சி ஆயிடுவீங்க. இதுக்கு முன்னால எங்கயாவது travel பண்ணும்போது பாட்டு கேப்பேன். அவர் சொல்லி கொடுத்த பிறகு ப்ளாக் படிக்கிறேன். மொபைல் பில் அதிகமா வருது. இதுக்கு அவர் மேல கேஸ் போடலாமா?

Madhavan Srinivasagopalan said...

அட எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. நா ரெடி..
ஆனா.. ஆனா.. யாராவது என்னோட செல்போன் (GRPS) பில்லு பேமென்ட் பண்ண ரெடியா இருந்தா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//But தமிழ்ல எதுவும் எழுத முடியாது.
English-ல வேணா எழுதிக்கலாம்..//

மொபைல்ல எழுத முடியாது. type தான் பண்ண முடியும். அய்யோ அய்யோ

யூர்கன் க்ருகியர் said...

thx

வெங்கட் said...

@ மாதவன்.,

// யாராவது என்னோட செல்போன்
(GRPS) பில்லு பேமென்ட் பண்ண
ரெடியா இருந்தா.. //

சரியான கஞ்சப்பிரபுவா இருப்பீங்க
போல.. Monthly Rs 100 தான்பா..
For unlimited Browsing..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// மொபைல்ல எழுத முடியாது. type தான்
பண்ண முடியும். அய்யோ அய்யோ. //

மக்களே இப்ப புரியுதா..?
இவருக்கெல்லாம் இந்த விஷயம்
தெரியும்னு தெரிஞ்ச உடனே
நான் ஏன் ஷாக் ஆனேன்னு..!!

அருண் பிரசாத் said...

ஆமா... இதுக்கு sim card வாங்க வேணாமா? அதை பத்தியே சொல்லலையே...

பெசொவி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தமிழில் எழுத ஏதாவது வழி கண்டுபிடித்து சொல்லுங்கண்ணா..,
//

வெங்கட்,
இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது!

@ SUREஷ் (பழனியிலிருந்து)

சார்,
வெங்கட்டுக்கு எழுதறது எப்படின்னே தெரியாது, தமிழ்ல எழுதக் கேட்டா, அவர் என்ன பண்ணுவாரு?

பெசொவி said...

//மொபைல் மூலமா
தமிழ் Blogs-ஐ எப்படி படிக்கறதுன்னு
பிரபல பதிவர் மங்குனி அமைச்சருக்கு
தெரியல.. - இது எனக்கு ஆச்சரியம்.//

ஹா.....ஹா...........அசிங்கப் பட்டான் மங்குனி!

சி.பி.செந்தில்குமார் said...

யாரது மிட்நைட்ல பதிவு போடறது?


ஆ, மொக்கைப்பதிவு இல்லையா?(அதிர்ச்சி நெம்பர் ஒன்)

மக்களுக்கு யூஸ் ஆகற பதிவா?((அதிர்ச்சி நெம்பர் 2)

சி.பி.செந்தில்குமார் said...

இந்த மாதிரி சீரியஸ் பதிவு போட்டா எப்படி நாங்க கலாய்ப்பது?

பை வி கே எஸ்

Philosophy Prabhakaran said...

நீங்கள்லாம் ரொம்ப லேட் நான் ரொம்ப காலமாகவே மொபைல்ல ப்ளாக் படிச்சிட்டு இருக்கேன்... opera mini யை விட uc browser கலக்கலாக இருக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொபைலே இல்ல..அப்புறம் எங்கே படிக்கறது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தகவலுக்கு நன்றி..

அப்படியே உங்க காசுல ஒரு மொபைலும் வாங்கி குடுத்தா டெய்லி உங்களுக்கு ஒரு மெசேஜ் இல்லைனா மெயில் அனுப்பி வணக்கம் சொல்லிட்டு அப்புறம் படிக்கிறேன்,....

மாணவன் said...

Opera Mini Browser மொபைலுக்கு நல்ல ஒரு ப்ரவுசர் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

தேவன் மாயம் said...

பெரிய போராட்டத்துக்குப் பிறகு சமீப காலமாகத்தான் தெரிந்துகொண்டேன்! புதியவர்களுக்கு நல்ல தக்கவல்!

வெங்கட் said...

@ அருண்.,

// ஆமா... இதுக்கு sim card வாங்க வேணாமா?
அதை பத்தியே சொல்லலையே... //

ஆமா உங்களுக்கு Sim Card
பத்தியெல்லாம் தெரியுமா.?
ஆச்சரியமா இருக்கு..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஹா.....ஹா...........அசிங்கப் பட்டான் மங்குனி! //

ஆமாம்., ஆமாம்.. உங்களுக்கும்
மொபைல் Browsing பத்தி தெரியாது..
ஆனா நான் அதை இங்கே சொல்லலை..
அதனால தனியா அசிங்கப்பட்டார் மங்குனி..

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// யாரது மிட்நைட்ல பதிவு போடறது? //

நான் இந்த பதிவை Publish பண்ணும்
போதும் இதே கேள்வியை Google-ல
இருந்தும் கேட்டாங்க..

" நான் சி.பி.செந்தில்குமார் Friend" -ன்னு
சொன்னேன்..

" ஓ.. அவனா நீயி..? அவருதான்
நேரங்காலம் இல்லாம பதிவு போட்டு
எல்லார் தூக்கத்தையும் கெடுக்கறார்னா..
நீயும் ஏன்ப்பா இப்படி கெட்டுப்போற..?
போயி கம்னு தூங்குன்னு " சொன்னாங்க...

Mohamed Faaique said...

last month -manguny...
this month - neenga..
ipdi mokkai thilahangal ellam serious pathivu elutha thodanginaa naadu uruppadumaa... konjam yosinga boss

ராஜி said...

இப்படி விளக்கமா?! பதிவு போட்டால் மட்டும் மங்குனிக்கு புரிஞ்சுடுமாக்கும். சிரிப்புக்கு, மொபைல்ல இருந்து கமெண்ட் போடுறது எப்படினு சொல்லிக்குடுக்கறதுக்குள்ள நீங்க எப்படி டரியல் ஆனீங்க னு கொஞ்சம் ரிவைன்ட் செஞ்சு பாருங்க. வார்த்தையால் சொல்லிக்குடுக்கும்போதே இந்த லட்சணம்னா?? இப்போ.,

அனு said...

இது உங்களுக்கு தெரிஞ்சுருக்கே.. #அச்சரியம் + அதிர்ச்சி

அதையும் நீங்க மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்குறீங்களா? #கலி முத்தி போச்சு

வைகை said...

@ சுரேஷ்.,

// தமிழில் எழுத ஏதாவது வழி
கண்டுபிடித்து சொல்லுங்கண்ணா.., ///////////////


உங்களோட மொபைல் ஐ போன் 3 or 4 ஆ இருந்தா அதுல ப்ரீ டவுன் லோட்ல போயி செல்லினம் டவுன் லோட் செஞ்சி வச்சுகிட்டா, அதுல தமிழா டைப் பன்னி கமென்ட் பாக்சுக்கு காபி பேஸ்ட் பண்ணலாம், நான் இங்க அதுதான் பண்றேன்!

£€k#@ said...

//இதை எனக்கு சொல்லிகொடுத்தவர் பேரை கேட்டா ரொம்ப அதிர்ச்சி ஆயிடுவீங்க.//

மறைமுக புகழ்ச்சி!! ;)

மங்குனி அமைச்சர் said...

மொபைல், மொபைல் அப்படின்னு சொல்லி இருக்கிங்களே . "மொபைல்" அப்படின்னா ஏன்னா சார் ???

வெங்கட் said...

@ பிரபாகரன்.,

// நீங்கள்லாம் ரொம்ப லேட்
நான் ரொம்ப காலமாகவே மொபைல்ல
ப்ளாக் படிச்சிட்டு இருக்கேன்... //

நீங்க சொல்றது கரெக்ட் தானுங்க..
நாங்க ஒரு 3 வருஷமா தானுங்க
Mobile-ல ப்ளாக் படிச்சிட்டு இருக்கோம்.

வெங்கட் said...

@ வெறும்பய.,

// அப்படியே உங்க காசுல
ஒரு மொபைலும் வாங்கி குடுத்தா
டெய்லி உங்களுக்கு ஒரு மெசேஜ் //

இவ்ளோ தானே..!!!

நேரா NOKIA கம்பெனிக்கு போங்க..
எந்த Model Phone பிடிச்சிருக்கோ
அதை எடுத்துக்கோங்க..
எவனாவது காசுன்னு கேட்டா..
என் பேரை சொல்லுங்க போதும்..

குடுப்பாங்க.. வாங்கிட்டு வந்துடுங்க..

karthikkumar said...

"Mobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.?///
இதுலென்ன சந்தேகம்? மொபைல்- ல மட்டுமில்ல எதுல படிச்சாலும் வாய்லதான் படிக்கணும்.

ராஜி said...

வெங்கட் கூறியது
NOKIA கம்பெனிக்கு போங்க எந்த MODEL புடிக்குதோ அதை எடுத்துக்கோங்க. ஃஃஃ

காசுக்கேட்பாங்க, என் பேரை சொல்லுங்கஃஃஃஃ

குடுப்பாங்க வாங்கிட்டு வாங்க
ஃஃஃஃஃஃஃஃஃஃ
என்னது உதையா? அடியா? இல்ல குத்தா

அனு said...

@வைகை

//உங்களோட மொபைல் ஐ போன் 3 or 4 ஆ இருந்தா அதுல ப்ரீ டவுன் லோட்ல போயி செல்லினம் டவுன் லோட் செஞ்சி //

ஐ போனா?
ட்வுன்லோட் பண்றத விடுங்க.. அதுல தான் பட்டனே இல்லையே. அதை வச்சு கால் எப்படி பண்ணுறது? அதை சொல்லுங்க முதல்ல..

இப்படிக்கு,
வெங்கட்

ராஜி said...

மங்குனி கூறியது

மொபைல் மொபைல் ன்றீங்களே அப்படினா என்னா சார்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அங்கதான் நிக்குறார் மங்குனி அண்ணன்

£€k#@ said...

//என் பேரை சொல்லுங்க போதும்..

குடுப்பாங்க.. வாங்கிட்டு வந்துடுங்க..
//
மொபைல் தருவாங்களானு
சொல்லுங்க

//நேரா NOKIA கம்பெனிக்கு போங்க.. //
nokia மட்டும் ஏன்?
வேற நல்ல கம்பெனி போன் வாங்கி குடுங்க!! ;)

சேலம் தேவா said...

டெக்னிக்கல் பதிவ கூட டெக்னிக்கா போடறீங்க..!! நல்லா பயன்படும்..!! நன்றி..!!

பெசொவி said...

//வெங்கட் said...
@ மாதவன்.,

// யாராவது என்னோட செல்போன்
(GRPS) பில்லு பேமென்ட் பண்ண
ரெடியா இருந்தா.. //

சரியான கஞ்சப்பிரபுவா இருப்பீங்க
போல.. Monthly Rs 100 தான்பா..
For unlimited Browsing..//

மாதவன், வெங்கட் use பண்ணும்போதே தெரியலையா, ரொம்ப செலவு ஆகாதுன்னு.....

Prabu said...

ஐயோ... ஏதும் அட்ரஸ் மாறி வந்துட்டேனா?


/முதல்ல GPRS Support பண்ற
Mobile வேணும்../

அத கடையில வாங்கிக்கலாம். ஆனா அதுக்கு முதல்ல படிக்கிறதுக்கு நல்ல தமிழ் பிளாக் வேணுமே.

உங்க மொக்கை பேனாவுக்கு என்ன ஆச்சு?

வெங்கட் said...

@ பிரபாகரன்.,

// opera mini யை விட uc browser கலக்கலாக
இருக்கும்... //

உங்க Comment-ஐ படிச்சிட்டு UC Browser
Download பண்ணி use பண்ணி பார்த்தேன்..
எனக்கு என்னவோ Opera Mini தான்
நல்லா + Easy-ஆ இருக்கிற மாதிரி தோணுது..

வெங்கட் said...

@ தேவன் மாயம்.,

// பெரிய போராட்டத்துக்குப் பிறகு
சமீப காலமாகத்தான் தெரிந்துகொண்டேன்!
புதியவர்களுக்கு நல்ல தக்கவல்! //

நிறைய பேருக்கு Mobile-ல தமிழ் Browsing
பத்தி தெரியலைன்னு எனக்கு சமீபத்தில்
தான் தெரிய வந்தது.. அதான் மக்கள்
எல்லோரும் தெரிஞ்சிக்கட்டுமேன்னு
இந்த பதிவு..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//#கலி முத்தி போச்சு//

சரி அறுவடை பண்ணிடுங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikumar

//இதுலென்ன சந்தேகம்? மொபைல்- ல மட்டுமில்ல எதுல படிச்சாலும் வாய்லதான் படிக்கணும்.//

மச்சி!! நாங்க எல்லாம் கண்ணால படிப்போம். நீ இன்னும் LKG பையன் மாதிரி சத்தமா படிப்ப்பியா? # டவுட்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஐ போனா?
ட்வுன்லோட் பண்றத விடுங்க.. அதுல தான் பட்டனே இல்லையே. அதை வச்சு கால் எப்படி பண்ணுறது? அதை சொல்லுங்க முதல்ல..

இப்படிக்கு,
வெங்கட்//

அட!! ஐ போன்ல பட்டன் இருக்காதுங்கர விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//மாதவன், வெங்கட் use பண்ணும்போதே தெரியலையா, ரொம்ப செலவு ஆகாதுன்னு.....//

எங்க தல சீப் & பெஸ்ட் தான் உபயோகம் பண்ணுவாருனு அவருக்கு தெரியலை. சரி விடுங்க உங்களை போலே அவருக்கும் GK கம்மியா இருக்கும்.. :))

(GK - General Knowledge, உங்களுக்கு Generalaவே Knowledge கம்மி கமெண்ட் போட கூதாது.., அதான் உங்களுக்கே தெரிஞ்சி இருக்கேனும் கமெண்ட் போட கூடது :) )

வெங்கட் said...

@ Mohamed.,

// ipdi mokkai thilahangal ellam serious pathivu
elutha thodanginaa naadu uruppadumaa... //

ஆஹா.. இப்படியெல்லாம் சொல்லி
என் அரசியல் பிரவேசத்தை
தடுக்க சதியா..?!! முடியவே முடியாது..

நான் அரசியலுக்கு வருவேன்..
போதுசேவை பண்ணியே தீருவேன்...

அதுக்கான முதல் படியா..
இப்பவே 4 ஸ்கூல் பசங்கள
என் சொந்த செலவுல படிக்க வெக்கிறேன்..
Book., Note., Pencil etc.. எல்லாமே
என் செலவு தான்..

( * 4 பசங்க = என் பசங்க 2 + தம்பி பசங்க 2 )

நம்ம குடுமபத்து ஆளுங்களுக்கு
என்ன வேணுமோ அதை
செஞ்சி குடுக்கறதுக்கு பேரு தானே
அரசியல்..?!! # டவுட்..

வெங்கட் said...

@ ராஜி.,

// இப்படி விளக்கமா?! பதிவு போட்டால்
மட்டும் மங்குனிக்கு புரிஞ்சுடுமாக்கும். //

இந்த பதிவை படிச்ச உடனே
மங்குனி எனக்கு போன் பண்ணினார்..

மங்குனி : என் கண்ணை திறந்துட்டீங்க
வெங்கட்..

வெங்கட் : இதென்னங்க சின்ன மேட்டரு..

மங்குனி : அப்படியே Customer Care-க்கு
போன் போட்டு என் போனுக்கு Settings
வாங்கி குடுங்களேன்..

வெங்கட் : நீங்களே கேக்கலாமே..

மங்குனி : நான் கேட்டா அவனுங்க
இல்லைன்னு சொல்றாங்க..

வெங்கட் : ஏன்..?

மங்குனி : எப்பவாச்சும் Bore அடிச்சா.,
அவனுகளுக்கு தான் போன் போட்டு
கலாய்ப்பேன்..

வெங்கட் : உருக்குள்ள ஒருத்தனையும்
நிம்மதியா விடறதில்லையா..? சரி உங்க
மொபைல் நம்பர் சொல்லுங்க..

மங்குனி : 98767-908.....

வெங்கட் : அட.. உங்க போன் நம்பர் கேக்கலைங்க..
உங்க மொபைல் மாடல் நம்பர் சொல்லுங்க..

மங்குனி : அப்படி விளக்கமா கேளுங்க..
NOKIA - 1100..

வெங்கட் : என்னாது..? NOKIA 1100..?
அதெல்லாம் கம்பியூட்டர் கண்டுபிடிக்கறதுக்கு
முன்னாடி இருந்த மாடல் ஆச்சே..
அவ்வ்வ்வ்வ்....

வெங்கட் said...

@ அனு.,

// இது உங்களுக்கு தெரிஞ்சுருக்கே..
#அச்சரியம் + அதிர்ச்சி

அதையும் நீங்க மத்தவங்களுக்கு
சொல்லி கொடுக்குறீங்களா? #கலி முத்தி போச்சு //

இந்த பதிவு உங்களுக்கு நிஜமாலுமே
புரிஞ்சிடுச்சா..? Double ஆச்சரியம் +
Double அதிர்ச்சி..

நிஜமாலிமே கலி முத்தி போச்சுடோய்......

வெங்கட் said...

@ வைகை.,

// உங்களோட மொபைல் ஐ போன் 3 or 4 ஆ
இருந்தா //

ஏங்க,, சின்ன டவுட்..,

எங்கப்பா முதன் முதலா எனக்கு
மொபைல் போன் வாங்கி குடுத்தப்ப
நான் " ஐ மொபைல் போன்னு "
சவுண்ட் விட்டேன்..

அப்ப அது தான் " ஐ போனுங்களா..? "

வெங்கட் said...

@ லேகா.,

// மறைமுக புகழ்ச்சி!! ;) //

ஹி., ஹி., ஹி..!!
நமக்கு விளம்பரம் பிடிக்காதுல்ல
அதான்..

வெங்கட் said...

@ மங்குனி.,

// மொபைல், மொபைல் அப்படின்னு
சொல்லி இருக்கிங்களே . "மொபைல்"
அப்படின்னா ஏன்னா சார் ??? //

ஓ.. அதுவா..அது நைட் கரெண்ட்
போயிட்டா இருட்டுல தீப்பெட்டி
தேடுறதுக்கு Use ஆகும் ஒரு பொருள்..!!!

மேலும் விரிவான விவரங்களுக்கு..
இது எந்த ஊரு Dictionary..??

NaSo said...

@வெங்கட்,

நான் பிளாக்பெரி 9500 ஸ்டோர்ம் பயன்படுத்தறேன். இதில் எப்படி தமிழ் படிக்கிறது?

செல்வா said...

//நான் Use பண்றது Opera Mini 4.2.///

தல சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க ..!!
நான் 5.1 பயன்படுத்துறேன் ..!!
அப்புறம் இந்தப் போலீசுக்கு version அப்படின்னா என்னனு தெரியாது
VAS ல தலைவர விட அதிகமா பயன்படுத்துறாங்க அப்படின்னு சொல்லுவார் ..!!

செல்வா said...

////But தமிழ்ல எதுவும் எழுத முடியாது.
English-ல வேணா எழுதிக்கலாம்..//

மொபைல்ல எழுத முடியாது. type தான் பண்ண முடியும். அய்யோ அய்யோ
///


நல்ல வேளை , இது உங்களுக்கு வச்ச டெஸ்ட் ., இத கண்டுபிடிச்சா உங்களுக்கு நீங்க மேல கேட்ட கேள்விக்கு எங்க தல சொல்லி கொடுக்கலாம்னு எழுதினது .. சரியா கண்டுபிடிச்சிட்டீங்க ..!!

செல்வா said...

// நாகராஜசோழன் MA said...
@வெங்கட்,

நான் பிளாக்பெரி 9500 ஸ்டோர்ம் பயன்படுத்தறேன். இதில் எப்படி தமிழ் படிக்கிறது?//



TAMIL அப்படின்னு எழுதி படிங்க .! ரொம்ப சிம்பிள் ..!!

Nokia N900 said...

In Nokia N900 mobile you can type in tamil too.

You need to install latha.ttf font in to nokia n900

Meerapriyan said...

tamil font download seythu tamilil adikkalaam endru oru pathivar ezhuthiyathaaka ninaivu.
nanparkale! sellame thodar vimarsanam padikka vaanga-meerapriyan.blogspot.com

£€k#@ said...

//நம்ம குடுமபத்து ஆளுங்களுக்கு
என்ன வேணுமோ அதை
செஞ்சி குடுக்கறதுக்கு பேரு தானே
அரசியல்..?!! # டவுட்//

வெங்கட் என்னது இது !!
உண்மைய வெளிய சொன்ன ஜெயில்ல போட்ருவாங்க!!

samhitha said...

venkat
u r looking like siva n kana kaanum kaalangal
u knw wt? i read ur posts and comments with a mind voice of him n tat serial
funny posts!! which makes me feel light!!
ur comedy s very decent too .....
i simply like u for this..
ur family s a gifted one to hav u!!
may god shower all his blessings to u and ur family
bye 4 now
(ur fan with a new name)

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல ........உபயோகாமான பதிவு மக்கா ......

S.முத்துவேல் said...

மிக அருமையான தகவல்..

நன்றி .....

அனு said...

@samhitha
//u r looking like siva n kana kaanum kaalangal //

ஆஹா.. ஏற்கனவே, அலைபாயுதே மாதவன் இவரை மாதிரி இருக்காரு-ன்னு உதார் விட்டுட்டு இருக்காரு[sentence formationஐ கவனிக்கவும்]... உதாரணம்: இங்க + இங்க ...

சரி, மாதவனுக்காவது வயசாகிடுச்சுன்னு விட்டுடலாம்.. நீங்க கனா காணும் காலங்கள் சிவா-ன்னு வேற சொல்லிட்டீங்களா.. இனிமேல் என்னென்ன நடக்கப் போகுதோ..

[samhitha எங்கயோ கேட்ட பேரா இருக்குதே.. ஆனா, எனக்குத் தெரிஞ்ச shamhithaவுக்கு இன்னும் ரெண்டு வயசு கூட ஆகல.. ;-) ]

அருண் பிரசாத் said...

//samhitha said...

venkat
u r looking like siva n kana kaanum kaalangal //

அடடா இது வேறய்யா...வெங்கட் உங்களுக்கு கமெண்ட் வேணும்கறதுக்காக இப்படியா????

என் பொண்ணை கேட்டா... உங்க பிளாக்ல உங்க போட்டோவை பார்த்தவுடனே பூச்சாண்டினு சொல்லிட்டு அழுவுறா...

கமெண்ட் போட வேற பேரு வேணும்னா என்ன கேட்டு இருக்கலாம்ல... இப்படியா மாட்டிகிறது... இதுல ஓவர் தற்புகழ்ச்சி வேற...

வெங்கட் said...

@ ராஜி.,

// அங்கதான் நிக்குறார் மங்குனி அண்ணன் //

அவரு ஏன் அங்கே நிக்கறாரு..?!!

ஒருவேளை இந்த ஜவுளி கடை.,
நகை கடைக்கு முன்னாடியெல்லாம்
ஒருத்தர் நின்னு கதவு தொறந்து விடுவாரே..
அது மாதிரி எதாவது இருக்குமோ..!!?

வெங்கட் said...

@ லேகா.,

// nokia மட்டும் ஏன்? வேற நல்ல கம்பெனி
போன் வாங்கி குடுங்க!! ;) //

வேற கம்பெனி எல்லாம் சுத்த வேஸ்ட்..
Nokia கம்பெனியில தான் நல்லா குடுப்பாங்க..
சந்தேகமா இருந்தா சிரிப்பு போலீசை
கேட்டு பாருங்க..

அவருக்கே ரெண்டு - மூணு தடவை
நான் Nokia கம்பெனியில வாங்கி
குடுத்து இருக்கேன்..!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ நாகராஜ சோழன்.,

// நான் பிளாக்பெரி 9500 ஸ்டோர்ம்
பயன்படுத்தறேன். இதில் எப்படி தமிழ்
படிக்கிறது? //

எனக்கு இதுபத்தி தெரியாது..
எதுக்கும் Opera Mini Website போயி..
பிளாக்பெரிக்கும் எதாவது Opera Mini Version
இருக்கான்னு Check பண்ணி பாருங்களேன்..

வெங்கட் said...

@ அனு.,

// ஐ போனா? ட்வுன்லோட் பண்றத விடுங்க..
அதுல தான் பட்டனே இல்லையே.
அதை வச்சு கால் எப்படி பண்ணுறது?
இப்படிக்கு, வெங்கட் //

போன வாரம் அனு எனக்கு போன்
பண்ணி..

அனு : இன்னிக்கு நான் புதுசா ஒரு
Nokia Music Xpress போன் வாங்கினேன்..
ஆனா பாட்டு பாட மாட்டேங்குது..

நான் : Memory Card போட்டுடீங்களா.?

அனு : ஓ. இதோ பாருங்க..

நான் : சுத்தம்.. முதல்ல அந்த
Memory Card-ஐ கழட்டுங்க..

அனு : ஏன்.?

நான் : அது Sim Card போடுற இடம்ங்க..

வெங்கட் said...

@ செல்வா.,

// தல சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க ..!!
நான் 5.1 பயன்படுத்துறேன் ..!! //

என்னோட மொபைல் மாடலுக்கு
4.2 தான் Recommended..

வெங்கட் said...

@ லேகா.,

// உண்மைய வெளிய சொன்ன
ஜெயில்ல போட்ருவாங்க!! //

அச்சசோ.. நாங்கல்லாம் அரிச்சந்திரன்
மாதிரி.. உண்மையை மட்டும் தானே
பேசுவோம்..

என்ன ஒரு சின்ன வித்தியாசம்..
அவரு பொய் சொல்லமாட்டாரு..
நான் " பொய் " ன்னு கூட சொல்ல மாட்டேன்..

samhitha said...

@anu

//ஆனா, எனக்குத் தெரிஞ்ச shamhithaவுக்கு இன்னும் ரெண்டு வயசு கூட ஆகல.. ;-//

he he that is not my name
but i have selected this name for future use

//இனிமேல் என்னென்ன நடக்கப் போகுதோ..//
lets see what s going to happen

@arun

//என் பொண்ணை கேட்டா... உங்க பிளாக்ல உங்க போட்டோவை பார்த்தவுடனே பூச்சாண்டினு சொல்லிட்டு அழுவுறா..//

i tnk she had mistakenly saw ur photo
jk arun ;)
wts ur baby's name ?

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// venkat u r looking like siva n kana kaanum kaalangal
u knw wt? i read ur posts and comments with a
mind voice of him n tat serial //

ஓ.." கனா காணும் காலங்கள் சீரியல் "

பாலா ( சிவா ), ஜோ, பாண்டி, பச்சை
வினித்,கிருஷ், ரிஷி, கௌதம்
சங்கவி, ராகவி.. இன்னும் கூட
அதுல வர்ற Characters Name கூட
எனக்கு ஞாபகம் இருக்கு..
Its My Favourite..

( அந்த சீரியல் Title Song யார்கிட்டயாவது
இருந்தா எனக்கு அனுப்புங்கபா.. )

For ur Info..
சிவா சேலம்காரர் தான்.. :-)

Anonymous said...

nice info

£€k#@ said...

//வேற கம்பெனி எல்லாம் சுத்த வேஸ்ட்..
Nokia கம்பெனியில தான் நல்லா குடுப்பாங்க..
//

செங்கல மாதிரி இருக்கும் (shape)
நோ நியூ மொடலஸ் :(

//மூணு தடவை
நான் Nokia கம்பெனியில வாங்கி
குடுத்து இருக்கேன்..!! //

அப்போ எங்களுக்கும் N series செட்
வாங்கி தாங்க!! ;)

//நான் " பொய் " ன்னு கூட சொல்ல மாட்டேன்..
//

நம்பிட்டோம் வெங்கட்!!!
இத உங்க wife,kids கிட்ட சொல்லுங்க

எங்க பதில அவங்க சொல்லுவாங்க!!

வெங்கட் said...

@ அனு.,

// மாதவனுக்காவது வயசாகிடுச்சுன்னு
விட்டுடலாம்.. நீங்க கனா காணும் காலங்கள்
சிவா-ன்னு வேற சொல்லிட்டீங்களா..
இனிமேல் என்னென்ன நடக்கப் போகுதோ.. //

இப்ப உங்களுக்கு என்ன வேணும்..?
என் Autograph தானே..
இந்தா வாங்கிக்கோங்க..

அதுக்காக இப்படி எல்லாம் பீல் பண்ணி
Comment போடாதீங்க..

samhitha said...

venkat
i saw that in your community list in a social networking site

evergreen cute serial!!

அந்த சீரியல் Title Song யார்கிட்டயாவது
இருந்தா எனக்கு அனுப்புங்கபா

how did u miss that man !!!!!!

பெசொவி said...

@ venkat

//என்ன ஒரு சின்ன வித்தியாசம்..
அவரு பொய் சொல்லமாட்டாரு..
நான் " பொய் " ன்னு கூட சொல்ல மாட்டேன்..
//

உண்மைதான்.நீங்க 'பொய்'னு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல,
(எங்களுக்கே தெரியும்னு சொல்ல வந்தேன்)
எல்லாரும் தெரிஞ்சுக்குங்க. வெங்கட் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர்.
(அதாவது ரெண்டு பேரும் எதிர் எதிர், புரிஞ்சுதா?)

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// // venkat u r looking like siva n kana kaanum kaalangal //

ஆங் சொல்ல மறந்துட்டேனே..
இதை படிச்சிட்டு என் Wife என்கிட்ட..

" ஏங்க.. இது உங்களுக்கே ஓவரா
தெரியல..? "

( வீட்டுக்குள்ளயே ஒரு VKS Member-ஐ
வெச்சிகிட்டு நான் படற அவஸ்த்தை
இருக்கே.. உஸ்ஸப்பா.. முடியல.. )

Unknown said...

sir ninga engayo poyittinga romba nanri sir

சேலம் தேவா said...

மொபைல்ல தமிழை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க..!! தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை..!! இந்த மாதிரி தமிழ் சேவை செய்ற உங்கள ஏன் செம்மொழி மாநாட்டுக்கு அழைக்கல..?! :-)

வெங்கட் said...

@ அருண்.,

// கமெண்ட் போட வேற பேரு வேணும்னா
என்ன கேட்டு இருக்கலாம்ல.. இப்படியா
மாட்டிகிறது... இதுல ஓவர் தற்புகழ்ச்சி வேற.. //

அதானே.. என்னை யாராவது புகழ்ந்தா
பொறுக்காதே...

இங்கே வர்ற Comments-க்கு Reply
பண்ணவே நேரம் இல்ல.., இதுல
நானே Comment போட்டு., அதுக்கு
வேற Reply பண்ற அளவுக்கு நிச்சயமா
எனக்கு நேரம் இல்ல..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தேங்க்ஸ் வெங்கட்..
நேத்துதான் இது விஷயமா ரமேஷுக்கு போன் பண்ணி கேட்டேன்..
உங்களுக்காகவே வெங்கட் பதிவு போட்டுருக்கார் போய் பாருங்கன்னு சொன்னார்.
தேங்க்ஸ் ரமேஷ்,
தேங்க்ஸ் வெங்கட்....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

எங்கள் தானைத்தலைவர்
தே.மு.தி.க. கொள்கை பருப்பு செயலாளர் அண்ணன் டாக்டர்.சிரிப்பு போலீஸ் ஐ தொடர்ந்து தங்களும் ஒரு பயனுள்ள பதிவை போட்டதற்கு
மிக்க நன்றி!...

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// யாரது மிட்நைட்ல பதிவு போடறது? //

நான் இந்த பதிவை Publish பண்ணும்
போதும் இதே கேள்வியை Google-ல
இருந்தும் கேட்டாங்க..

" நான் சி.பி.செந்தில்குமார் Friend" -ன்னு
சொன்னேன்..

" ஓ.. அவனா நீயி..? அவருதான்
நேரங்காலம் இல்லாம பதிவு போட்டு
எல்லார் தூக்கத்தையும் கெடுக்கறார்னா..
நீயும் ஏன்ப்பா இப்படி கெட்டுப்போற..?
போயி கம்னு தூங்குன்னு " சொன்னாங்க...

அடப்பாவமே,நான் எப்பவும் காலைல தான் பதிவு போடறேன்?

வெங்கட் said...

@ லேகா.,

// அப்போ எங்களுக்கும் N series செட்
வாங்கி தாங்க!! ;) //

அவ்ளோ தானே...!!!

வாங்கித்தர நான் ரெடி..
வாங்கிக்க நீங்க ரெடியா.?!!! :-)

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அந்த சீரியல் Title Song யார்கிட்டயாவது
இருந்தா எனக்கு அனுப்புங்கபா //

// how did u miss that man !!!!!! //

அந்த பாட்டு கிடைக்க எதாவது
வழி சொல்லுங்கன்னா..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// எல்லாரும் தெரிஞ்சுக்குங்க. வெங்கட்
அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர்.
(அதாவது ரெண்டு பேரும் எதிர் எதிர், புரிஞ்சுதா?) //

ஆமா உங்க எதிர்வீட்டுக்காரர் கூட
ரொம்ப நல்லவர் + புத்திசாலின்னு
கேள்விப்பட்டேனே..!!

ஹி., ஹி., ஹி..!!!

Anonymous said...

good

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// இந்த மாதிரி தமிழ் சேவை செய்ற
உங்கள ஏன் செம்மொழி மாநாட்டுக்கு
அழைக்கல..?! :-) //

அழைச்சாங்க.. நான் தான் போலை..
பின்ன நாம என்ன தமிழ்க்கு மட்டுமா
சேவை செய்யறோம்..

சம்ஸ்கிருதம்,தெலுங்கு, மலையாளாம்,
கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி,
ஒரியா, மராட்டி,கொங்கினி, இங்கிலீஸ்,
பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், சைனீஷ்.,
ஜப்பானீஷ் முதலிய 72 மொழிக்கு சேவை
செய்யறோம்...

அப்புறம் ஒவ்வொருத்தரும் மாநாடுன்னு
கூப்பிட்டா நம்ம Blog-ல யாரு
Comment Reply போடுறது..?!!

வெங்கட் said...

@ மணி.,

// அண்ணன் டாக்டர்.சிரிப்பு போலீஸ் ஐ
தொடர்ந்து தங்களும் ஒரு பயனுள்ள
பதிவை போட்டதற்கு மிக்க நன்றி!... //

இதுக்கு நீங்க என்னை கெட்ட வார்த்தை
சொல்லியே திட்டி இருக்கலாம்..!!

£€k#@ said...

//வாங்கித்தர நான் ரெடி..
வாங்கிக்க நீங்க ரெடியா.?!!! ://

mobile set தானே வாங்கிகறோம்
வேற எதாவது தந்தா உங்களுக்கு !!
ஓகே?

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// அடப்பாவமே,நான் எப்பவும் காலைல
தான் பதிவு போடறேன்? //

ஓ.., அப்ப 5.30 மணி., 6 மணி எல்லாம்
நடுராத்திரி இல்லைங்களா..? # டவுட்டு

samhitha said...

hii venkat

http://www.zedge.net/ringtones/457264/kana-kanum-kalangal-ringtone/

i have checked this.. but just a small portion of the song :(

http://www.oonly.com/search/kana-kanum-kalangal-title-song/1/mp3

try this too.. i haven't checked this link

by the way did u ask for the ringtone or full song

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

Wow.. உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்..
ஆனா என் Bad Luck லிங்க் Work ஆகலை...
:(

Anonymous said...

மொபைல்ல தமிழை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க..!! தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை..!
from,
ESWARAN ,Italy

Rajaaaaa said...

Its really working ya...Thanks