நேத்து காலை : 9.30 AM
அப்ப நான் ரொம்ப Busy-யா
இருந்தேன்..
( ஹி., ஹி.,ஹி.. சாப்பிட்டுட்டு
இருந்தேன்.. )
அப்ப எங்க கடை பையன்
பதட்டமா ஓடி வந்தான்..
" அண்ணே... உங்கள தேடி
போலீஸ் வந்திருக்கு.."
எனக்கு பக்-னு இருந்தது..
( ஆஹா.. நாம தான்
யாருக்கும் தெரியற
மாதிரி எந்த தப்பும் பண்ணலையே..?!! )
சரின்னு அவசர அவசரமா சாப்பிட்டுட்டு
கடைக்கு போனா.. அங்கே நாலு
Lady போலீஸ் கடை வாசல்ல
நின்னுட்டு இருந்தாங்க..
( நம்மள தேடி நாலு போலீஸ்..!!
அவ்ளோ பெரிய ரவுடியா நாம..?? )
நான் அவங்க பக்கத்துல போயி..
" ஐயோ.. நான் இல்ல.. நான் இல்ல.."
" இல்ல.. நீயேதான்.., நீயேதான் "
எங்கேயோ கேட்ட குரல்..!!
சொன்னது யார்ரான்னு பாத்தா..
அட என் College Mate ரேணுகா..
" ஹாய்..ரேணு நீயா..? என்ன இவ்ளோ
தூரம்..? "
" உன்னை அரஸ்ட் பண்ணலாம்னு
தான்..!! "
" அரெஸ்டா..? எதுக்கு..? "
" நான் காலேஜ் படிச்சப்ப.. என்னை
நீ கலாட்டா பண்ணுனேயில்ல
அதுக்கு தான்.. "
" என்னது.. காலேஜா..? நான் காலேஜ்ல
படிக்கவே இல்ல.. இந்த கேஸ் செல்லாது.,
செல்லாது..! "
" நீ படிச்சேன்னு நான் சொல்லவே
இல்லயே..!! நான் காலேஜ் படிச்சப்பன்னு
தான் சொன்னேன்.. "
" சரி., சரி... பப்ளிக்.பப்ளிக்.."
Actually அவங்க வந்தது எங்க
கடையில Sarees எடுக்க..
அடுத்த வாரம் எதோ Function வருதாம்..
அதுக்கு ஒரே கலர்ல 40 Sarees கேட்டாங்க..
ஆனா எங்ககிட்ட ஒரே கலர்ல
40 Sarees இல்ல..
" வெங்கட்.. ஒரு Help பண்ண முடியுமா.? "
" என்ன ரேணு.., I.G ஆகணுமா.? நான்
வேணா ஒரு Recommendation Letter தரவா..? "
ரேணு முறைச்சாங்க..
" வேற எதாவது தெரிஞ்ச துணிகடை
இருந்தா காட்டு.. "
சரி வாங்கன்னு நான் முன்னாடி
பைக்ல கிளம்பவும்.. அவங்க நாலு
பேரும் 2 ஸ்கூட்டியில வந்தாங்க..
துணிக்கடைக்கு போற வழியில
தான் என் Friend சுரேஷ் Medical Shop..
கரெக்டா அப்ப சுரேஷூம் வெளியே
நின்னுட்டு இருந்தான்..
அட இவனை கொஞ்சம் கலாய்க்கலாமே..!!
சரின்னு வண்டியை அவன் பக்கத்துல
போயி Slow பண்ணி.. அவனை கை காட்டி..
" மேடம்.. நீங்க தேடிட்டு வந்த
ஆளு இவரு தான்..!! "
" ஓ.. இவர்தானா அது..? நாங்க திரும்பி
வர வரைக்கும் கடையிலயே இருக்கணும்..
உங்ககிட்ட ஒரு Enquiry இருக்கு.. "
இப்படி ரேணு மிரட்டவும்..
சுரேஷ் கொஞ்சம் பயந்துட்டான்..
நான் ரேணுவை பாத்து...
" என்ன மேடம் நீங்க..
சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்கீங்க..?
வந்தோமா..,'டக்' னு எண்கவுண்டர்
பண்ணுனோமான்னு இல்லாமா..."
சுரேஷ் என்னை பாத்து..
" ஏன்ன்ன்ன்..? எதுக்குடா இந்த கொலைவெறி..?!! "
" வாங்கின பணத்தையும்.,
வாங்கின
பல்பையும் எப்பவும்
வட்டியோட திருப்பி குடுத்துதான்
நமக்கு பழக்கம்..!! "
ஹா., ஹா., ஹா..!!
( வில்லன் சிரிப்பு..! )
.
.