16 November 2010
பீ ஹாப்பி..!!
10th Result வந்திருந்த சமயம்..
நானும், என் Friend Mani-யும்
10th Pass ஆயிட்டோம்..,
( நாங்களே ஒருதடவை எங்களை
கிள்ளி பாத்துகிட்டோம்.. )
அப்பல்லாம் ஸ்கூலுக்கு போயி
Marksheet-ஐ வாங்கினாதான்
Marks Detail தெரியும்..
Mark Sheet-ஐ வாங்கினா..
அவன் Maths-ல 58%.. நான் 62%..
ஒரே குஷி எங்களுக்கு..
நான் : டேய் நீயும் Pass., நானும் Pass.
எப்படிடா..?
மணி : ஒருவேளை Valuation
சரியில்லயோ என்னமோ..?!!
நான் : ஹி., ஹி., ஹி..!!
இப்படி நாங்க சந்தோஷமா
சிரிச்சிட்டு இருந்தோம்..
கொஞ்சம் தள்ளி எங்க Classmate சுதா
அழுதுட்டு இருந்தாங்க..
மணி : Maths-ல Centum வரலையாம்..
4 மார்க் கம்மியா போச்சாம்...!!
நான் : டேய்.., இதெல்லாம் Too Much-ஆ
இருக்கேடா..
மணி : உன் Friend தானே..! போயி ரெண்டு
வார்த்தை ஆறுதலா சொல்லிட்டு
வாயேன்..
நான் : ஏன்டா இந்த கொலைவெறி..?!!
நான் அசிங்கப்படறதை பாக்க
அவ்ளோ ஆசையா உனக்கு..??
மணி : ஹி., ஹி., ஹி..!!
சரி நீ +1 எங்கே சேர போற..?
நான் : நல்ல School-ஆ பாத்து சேரப்போறேன்..
மணி : நல்ல School-ஆ..? அது எந்த School..?
நான் : இந்த சுதா பொண்ணு எந்த School-ல
சேரலையோ., அதெல்லாமே நல்ல
School தான்டா!!
( இதனால் தாங்கள் கூற வரும்
கருத்து என்னவோ..?? )
Wait.., Wait.. என்ன அவசரம்..?!!
இவ்ளோ சொல்லிட்டு அதை சொல்லாம
உங்கள விட்டுடுவோமா..?!!
கருத்து : சந்தோஷம்கிறது Mark-ல இல்ல.,
மனசுல இருக்கு..!!
டிஸ்கி 1 : இப்ப அந்த சுதா பொண்ணு
டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..
ஆனா நாங்க Blog எழுதிட்டு / படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்..
டிஸ்கி 2 : நானும்., சுதாவும் Drawing Competition-ல
கலந்துகிட்ட அழகை படிக்க ஆசைப்படறவங்க..
Click Here..
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
48 Comments:
//இப்ப அந்த சுதா பொண்ணு
டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..
ஆனா நாங்க Blog எழுதிட்டு / படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்..//
இதுவல்லவா உண்மையான சந்தோசம்
ஆனா நாங்க Blog எழுதிட்டு / படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்.
எங்களையும் சந்தோசப்படுத்திகிட்டு இருக்கீங்க
//டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..ஆனா நாங்க Blog எழுதிட்டு படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்.//
ஒங்க 'பிளாக' படிகுரதுனால தான், அவங்களுக்கு கஷ்டமே வருதேமே ?
//Madhavan said... //டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..ஆனா நாங்க Blog எழுதிட்டு படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்.//
ஒங்க 'பிளாக' படிகுரதுனால தான், அவங்களுக்கு கஷ்டமே வருதேமே ?//
இந்த மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா.
//இப்ப அந்த சுதா பொண்ணு
டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..
ஆனா நாங்க Blog எழுதிட்டு / படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்..//
ஆமா ஸ்கூல் படிக்கும்போது சுதாவ பொண்ண டார்ச்சர் பண்ணினீங்க. இப்ப ப்ளாக் எழுதி எங்கள டார்ச்சர் பண்றீங்க.
நீதி: வெங்கட் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் டார்ச்சர் என்பது உறுதி...
@வெங்கட்
//
சந்தோஷம்கிறது Mark-ல இல்ல.,
மனசுல இருக்கு..
//
சத்தியமான வார்த்தைகள் பாஸ்!
ஆனாலும் ஆண்டவன் இவ்ளோ அறிவையும் உங்களுக்கு மட்டுமே தந்த்துட்டான் ப்ச் இந்த VKS ஆளுங்களுக்கும் கொஞ்சம் தந்துர்கலாம்
@மாதவன்
//
ஒங்க 'பிளாக' படிகுரதுனால தான், அவங்களுக்கு கஷ்டமே வருதேமே ?//
யெஸ் மாதவன் எங்க பாஸ் ரொம்ப பிஸினால டெய்லி போஸ்ட் போட முடியல அதான் ரொம்ப கஸ்டமா இருக்காம் அதுகாக என்ன பண்ண முடியும்?!
@ரமேஷ்
//
நீதி: வெங்கட் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் டார்ச்சர் என்பது உறுதி...//
அது VKS ஆளுங்களுக்கு...
போலீஸ் போங்க போய் முதல்ல உங்க
ஸ்டமக் ஃபயர்க்கு எதனா ட்ரீட்மெண்ட் எடுங்க...!!!
சந்தடி சாக்குல நீங்க 10வது பாஸ்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா?
//10th Result வந்திருந்த சமயம்..//
ஓ இப்போ புரியுது...10th ன்னு நீங்க சொன்னது அந்த மாசம் 10 ஆம் தேதி ரிசல்ட் வந்து இருந்ததுனு எடுத்துக்கனுமா? ஓகே
//நானும், என் Friend Mani-யும்
10th Pass ஆயிட்டோம்..,//
நானும், என் Friend Mani-யும் first standard - 10th time எழுதி Pass ஆயிட்டோம்..,
என திருத்தி வாசிக்கவும்
//சந்தோஷம்கிறது Mark-ல இல்ல.,
மனசுல இருக்கு..//
மேலோட்டமாப் பாத்தா . . . உங்க கருத்து சின்னதா தெரியலாம் . . . ஆனா மார்க் மேனியாவுல மாட்டிக்கிட்டு பல பேரு கஷ்டப் படுறதப் பாக்கும் போது . . .
யப்பா சாமீ, படிக்கிறது மார்க்கு வாங்க மட்டும் தான்னு செஞ்சுட்டாங்களேன்னு தோணும்,
ரொம்ப நல்லா இருக்கு இந்தப் பதிவு
@அருண்
//
சந்தடி சாக்குல நீங்க 10வது பாஸ்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா?
//10th Result வந்திருந்த சமயம்..//
ஓ இப்போ புரியுது...10th ன்னு நீங்க சொன்னது அந்த மாசம் 10 ஆம் தேதி ரிசல்ட் வந்து இருந்ததுனு எடுத்துக்கனுமா? ஓகே
//நானும், என் Friend Mani-யும்
10th Pass ஆயிட்டோம்..,//
நானும், என் Friend Mani-யும் first standard - 10th time எழுதி Pass ஆயிட்டோம்..,
என திருத்தி வாசிக்கவும்//
அட அட என்ன ஒரு விளக்கம் Mr.sun`snetway உங்கள சொல்லி குத்தமில்ல ஆண்டவன சொல்லனும்
:)
//கருத்து : சந்தோஷம்கிறது Mark-ல இல்ல.,
மனசுல இருக்கு..!!
//
இந்தப் பதிவை அப்படியே வைத்திருந்து உங்கள் மகன் பத்தாம் வகுப்பு வரும்போது அவனுக்குக் காட்டப் போகிறேன்.
சூப்பரா இருக்கு
நிஜமாகவே நீங்க வகுப்பு பத்தாம் பாஸ் பண்ணிட்டிங்களா? ஆச்சர்யமா இருக்கு
நான் : இந்த சுதா பொண்ணு எந்த School-ல
சேரலையோ., அதெல்லாமே நல்ல
School தான்டா
அப்ப பத்தவதுலே எழுத ஆரம்பிச்சுட்டிங்கனு சொல்லுங்க
பதிவு எழுத எந்த எந்த ஃபிளாஸ்பேக் எல்லாம் போறீங்க.. நல்லா இருக்கு..
*** நாங்களே ஒருதடவை எங்களை
கிள்ளி பாத்துகிட்டோம்..***
we too venkat LOL
u r giving cute posts ma
ok wt abt ur 12th story
we r eagerly waitng for tat ;)
any collector frm there? ha ha ha
if sudha happens see ur blog tat ll b t utmost comedy
may god make it true ha ha ha
***********************************
"சந்தோஷம்கிறது Mark-ல இல்ல.,
மனசுல இருக்கு.."
same pinch ;)
***********************************
" நான் : டேய் நீயும் Pass., நானும் Pass. எப்படிடா?
மணி : ஒருவேளை Valuation
சரியில்லயோ என்னமோ"
adhu seri!!ungalaaaa...
unga post madhiri photo-um superrrrr :)
""நீதி: வெங்கட் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் டார்ச்சர் என்பது உறுதி"
ha ha ha
@ தமிழ் வினை.,
// எங்களையும் சந்தோசப்படுத்திகிட்டு
இருக்கீங்க //
இதை அப்படியே கொஞ்சம்
சத்தமா சொல்லுங்க..
இங்கே ஒரு 5 பேருக்கு காது
கேக்காது ( என்னை யாராவது
புகழ்ந்தா மட்டும்.. )
@ Arun Prasath.,
// இதுவல்லவா உண்மையான சந்தோசம் //
ஹி., ஹி., ஹி..!!
@ மாதவன்.,
// ஒங்க 'பிளாக' படிகுரதுனால தான்,
அவங்களுக்கு கஷ்டமே வருதேமே ? //
ஆமாம்.. உண்மைதான்..
ஹாஸ்பிடல்ல இருந்து தான்
நம்ம பிளாக் படிக்கறாங்களாம்..
திடீர்னு நம்ம பிளாக் படிச்சி, சிரிச்சிட்டு
இருக்கும் போது பெரிய டாக்டர்
வந்துடறாராம்.
அப்போல்லாம் சிரிப்பை அடக்க முடியாம
ரொம்ப கஷட்டப்படறாங்களாம்.
சொன்னாங்க..!!
@ ரமேஷ்.,
// ஸ்கூல் படிக்கும்போது சுதா பொண்ண
டார்ச்சர் பண்ணினீங்க. //
டார்ச்சரா..? இது அபாண்டம்..!!
நாம நிறைய மார்க் எடுத்துட்டா
சுதாவுக்கு டாக்டர் சீட் கிடைக்காம
போயிடுமேன்னு.,
வேணும்னே கம்மியா மார்க் எடுத்து..,
சுதா டாக்டருக்கு படிக்க உதவி
பண்ணினவுங்க நாங்க..
எங்களை போயி...
// இப்ப அந்த சுதா பொண்ணு
டாக்டர் ஆகி கஷ்டப்பட்டுட்டு இருக்கு..
ஆனா நாங்க Blog எழுதிட்டு / படிச்சிட்டு
சந்தோஷமா இருக்கோம்..//
நம்ம கட்சியப் பத்தி சொல்லலையே தலைவா ..
அடுத்த முதல்வர் நீங்கதானே .!!
@venkat
//இங்கே ஒரு 5 பேருக்கு காது
கேக்காது ( என்னை யாராவது
புகழ்ந்தா மட்டும்.. )
ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphobia முத்தி போய் இப்படி ஆகிடுச்சி...
@venkat
//நான் Maths-ல 62%..
நாங்களே ஒருதடவை எங்களை
கிள்ளி பாத்துகிட்டோம்.. )//
நியாயமா பாத்தா நீங்க 62 தடவை கிள்ளி பாத்துகிட்டு இருந்திருக்கணும்..
@venkat
//நானும், என் Friend Mani-யும்
10th Pass ஆயிட்டோம்..,
இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை இன்னொரு தடவை வேண்டாம்னு பாஸ் மார்க் போட்டுட்டு இருட்டுல Teachers அழுதது ஊருக்கும் தெரியாது.. யாருக்கும் தெரியாது..
//வேணும்னே கம்மியா மார்க் எடுத்து..,
சுதா டாக்டருக்கு படிக்க உதவி
பண்ணினவுங்க நாங்க..//
இந்த மாதிரி நல்ல மனசு அவுங்களுக்கு (VKS) வராது தல .,
நீங்க ஏன் இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு ..
//இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை இன்னொரு தடவை வேண்டாம்னு பாஸ் மார்க் போட்டுட்டு இருட்டுல Teachers அழுதது ஊருக்கும் தெரியாது.. யாருக்கும் தெரியாது..///
ஹி ஹி ஹி .. அவுங்க அதுக்கு அழுகளைங்க , இப்படி நல்லா படிக்கிற பையன் அந்தப் பொண்ணு டாக்டருக்குப் படிக்கணும் அப்படிங்கிறதுக்காக இப்படி கம்மியா எழுதிருக்கானே அப்படிங்கற வருத்ததுல தாங்க அழுதாங்க .. இது உங்களுக்குப் புரியரக்கு வாய்ப்பு இல்லை ..!!
சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..! correct thaaan :)
@ ஷாலினி.,
// ஆண்டவன் இவ்ளோ அறிவையும் உங்களுக்கு
மட்டுமே தந்த்துட்டான் ப்ச் இந்த VKS
ஆளுங்களுக்கும் கொஞ்சம் தந்துர்கலாம் //
ஹா., ஹா., ஹா..!!
ஆனா ஷாலினி..
இந்த VKS -காரங்க ரொம்ப பாவம்..
ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்க..
உங்க கமெண்ட்டை படிச்சிட்டு
ரமேசு போன் பண்ணி என்கிட்ட
கேக்கறாரு..
" அறிவா..? அப்படின்னா இன்னாப்பா..? "
// யெஸ் மாதவன் எங்க பாஸ் ரொம்ப
பிஸினால டெய்லி போஸ்ட் போட முடியல
அதான் ரொம்ப கஸ்டமா இருக்காம் //
இது சுப்பரு..!!
@ அருண்.,
// நானும், என் Friend Mani-யும் first standard -
10th time எழுதி Pass ஆயிட்டோம்..,
என திருத்தி வாசிக்கவும் //
ஆஹா.. கூடவே இருந்துட்டு., இப்படி
போட்டு குடுத்துட்டீங்களே நண்பா..
அது சரி.., அப்ப நம்ம மிஸ்
உங்களை பாத்து...
" என்ன அருண்..! இந்த தடவையும்
நீ பெயிலா..? இப்பவே 1st Std-ஐ
10 வருஷம் எழுதிட்ட.. எப்பதான்
Pass பண்றதா உத்தேசம்னு.??? "
திட்டினாங்களே அதை சொல்லலை..!!
@ரமேஷ்
//நீதி: வெங்கட் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் டார்ச்சர் என்பது உறுதி...//
ஆமாம். வெங்கட் எங்க போனாலும் VKS பின்தொடர்வதால் டார்ச்சர் உறுதி. ஆமாம் ரமேசு.. வருஷா வருஷம் அகில உலக டார்ச்சர் சங்கம் அவர்ட் வாங்கறிங்களே அதை எல்லாம் சேட்டு கடைல வாங்க மாட்டோம் சொல்லியும் வாங்க சொல்லி டார்ச்சர் பண்றிங்களாமே...:))
@ மார்கண்டேயன்..,
// யப்பா சாமீ, படிக்கிறது மார்க்கு வாங்க
மட்டும் தான்னு செஞ்சுட்டாங்களேன்னு தோணும்,
ரொம்ப நல்லா இருக்கு இந்தப் பதிவு //
நன்றிங்க..!!
நீங்க சொல்றது உண்மை..!!
நாங்கல்லாம் படிச்ச காலத்தில
ஸ்கூல் விட்டு வந்து., வெளியே
விளையாட ஓடினா 2 மணி நேரம்
கழிச்சி தான் வீட்டு வருவோம்..
ஆனா இப்ப குழந்தைக ரொம்ப பாவம்..!!
@ரசிகன்
//நியாயமா பாத்தா நீங்க 62 தடவை கிள்ளி பாத்துகிட்டு இருந்திருக்கணும்..//
ப்ச்.. எங்க பாஸ் பாவம். ஆனா நீங்க ஒருவாட்டி கூட கிள்ளி பாக்க வேண்டாம் ஜாலிதான்... :)) . ஒரு ஒரு சப்ஜக்டா பார்த்தாலும் அதே மார்க். எல்லா சப்ஜக்ட் கூட்டி பார்த்தாலும் அதே மார்க். நீங்க கிரேட்... :))
@பெயர் சொல்ல விருப்பமில்லை
//இந்தப் பதிவை அப்படியே வைத்திருந்து உங்கள் மகன் பத்தாம் வகுப்பு வரும்போது அவனுக்குக் காட்டப் போகிறேன்.//
சரி சரி எப்படியும் நீங்க அவர் பையன் கூட தான் பத்தாவது எக்ஸாம் எழுத போறிங்க. அப்பொ காட்டிக்கலாம். இப்பொ லேப்டாப் ஆப் பண்ணுங்க. பதிவு போட்டதுல இருந்து ஸ்கீரின் மாத்தாம அப்படியே வச்சி இருக்கிங்க... :)) . Computer ஆப் பண்ணா பதிவு கலையாது சொல்லி யாராவது இவருக்கு புரிய வைங்க ப்ளீஸ்...
@ரசிகன்
//ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphobia முத்தி போய் இப்படி ஆகிடுச்சி...//
VKSல சேர்ந்து அளவுக்கு அதிகமா பொய் சொல்லி கடைசில இந்த ஸ்டேஜ் வந்துடிங்களா?? அய்யோ பாவம்... :))
@ பெ.சொ.வி.,
// இந்தப் பதிவை அப்படியே வைத்திருந்து
உங்கள் மகன் பத்தாம் வகுப்பு வரும்போது
அவனுக்குக் காட்டப் போகிறேன். //
இப்படி நீங்க ஏடா கூடமா எதாவது
செய்வீங்கன்னு தெரிஞ்சி தான்
_ _ % மார்க்கை நான் அதிகமா
சொல்லி இருக்கேன்..
ஹி., ஹி., ஹி..!!
@terror
//ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphobia முத்தி போய் இப்படி ஆகிடுச்சி...//
VKSல சேர்ந்து அளவுக்கு அதிகமா பொய் சொல்லி கடைசில இந்த ஸ்டேஜ் வந்துடிங்களா?? அய்யோ பாவம்... :))
Dehonestaphobia is for fear of lies. Not Fear to Lie. So the cause for it could not be VKS but only VAS ... ( ஐ... இங்கிலிபீச்...)
@terror
/@ரசிகன்
//நியாயமா பாத்தா நீங்க 62 தடவை கிள்ளி பாத்துகிட்டு இருந்திருக்கணும்..//
ப்ச்.. எங்க பாஸ் பாவம். ஆனா நீங்க ஒருவாட்டி கூட கிள்ளி பாக்க வேண்டாம் ஜாலிதான்... :)) . ஒரு ஒரு சப்ஜக்டா பார்த்தாலும் அதே மார்க். எல்லா சப்ஜக்ட் கூட்டி பார்த்தாலும் அதே மார்க். நீங்க கிரேட்... :))
//
ஹி ஹி... இந்த உண்மையை உணர்ந்ததால தான் யாரயும் ப்ளாக் போட்டு கூப்பிட்டு வாங்கி கட்டிகறதில்ல..
யோவ் , நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு யோசிச்சு வச்சேன் , நீ முந்திக்கிட்ட , சரி விடு நான் அடுத்து போட்டுக்கிர்றேன்
@ரசிகன்
//Dehonestaphobia is for fear of lies. Not Fear to Lie. So the cause for it could not be VKS but only VAS ... ( ஐ... இங்கிலிபீச்...)//
அட அட அட!! இந்த VKSக்கு சுருக்கமா சொன்னா எதும் புரியாது. அதிகமா பொய் சொல்லி சொல்லி இப்பொ பொய்னாலே பயம் (கண்ணாடிய பார்த்தா பயம், உங்க ஆளுங்கள பார்த்தா பயம்) வியாதி முத்தி இப்பொ காது வேற கேக்கல.. :))
@ரசிகன்
//ஹி ஹி... இந்த உண்மையை உணர்ந்ததால தான் யாரயும் ப்ளாக் போட்டு கூப்பிட்டு வாங்கி கட்டிகறதில்ல.//
தில்லு இருந்தா தான் தீ மிதிக்கலாம்.
பல்லு இருந்தா தான் பட்டாணி சாப்பிடலாம்.
விஷயம் இருந்தா தான் விளம்பரம் பண்ணலாம்.
@மங்கு
//யோவ் , நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு யோசிச்சு வச்சேன் , நீ முந்திக்கிட்ட , சரி விடு நான் அடுத்து போட்டுக்கிர்றேன்//
மங்கு!! இப்படி சொல்லி சொல்லியே ஒரு ஒரு ப்ளாக்கா காப்பி அடிக்கிற நீ. நேத்து கூட நம்ம நாட்டு தேசியகீதம் நீ எழுதினது சொல்லி சண்டை போட்டியாம் இல்ல?
@ லேகா.,
// u r giving cute posts ma
ok wt abt ur 12th story
we r eagerly waitng for tat ;)
any collector frm there? ha ha ha //
இருக்கே..
+2-ல State 1st வந்தது..
University-ல Gold Medal வாங்கினது..
நீங்க MBA எங்க University-ல தான்
படிக்கணும்னு Oxford University &
University of London போட்டி போட்டது..
இதையெல்லாம் சொல்லலாம் தான்..
அப்புறம் எனக்கு திருஷ்டி பட்டுடுமே..
@ லேகா.,
// unga post madhiri photo-um superrrrr :) //
எங்க பாட்டி அடிக்கடி என்னை பாத்து
" நீ சின்ன வயசுல அப்படியே
வெள்ளக்காரன் மாதிரி இருப்பேன்னு "
சொல்லுவாங்க..
அது ஏன்னு இப்ப புரிஞ்சி இருக்குமே..?!!
அது என் சின்ன வயசு போட்டோ தான்..
ஹி., ஹி., ஹி..!!
@ ரசிகன்.,
// இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை
இன்னொரு தடவை வேண்டாம்னு பாஸ் மார்க்
போட்டுட்டு இருட்டுல Teachers அழுதது ஊருக்கும்
தெரியாது.. யாருக்கும் தெரியாது.. //
ஆனா உங்க பேப்பரை திருத்தறதுக்கு
Teachers -கிட்ட ' நான்..' ' நீன்னு '
போட்டி இருக்குமாமே..
ஒரு இழுப்பு இழுத்து.,
ஒரு சுழி ( " 0 " ) போட்டுட்டா
வந்த வேலை ஈஸியா முடிஞ்சிடும்ல..
அப்ப ஏன் போட்டி இருக்காது..?!!
@ மங்குனி.,
// நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு
யோசிச்சு வச்சேன் , நீ முந்திக்கிட்ட , //
என்னாது இந்த டாக்டரை வெச்சா..?!!!!
அப்ப Dr.சுதாவால பாதிக்கப்பட்டவங்க
ஊருக்குள்ள நிறைய பேர் இருப்பாங்க
போல..!!
@ டெரர்.,
// நேத்து கூட நம்ம நாட்டு தேசியகீதம்
நீ எழுதினதுன்னு சொல்லி சண்டை
போட்டியாம் இல்ல? //
அதுவும் யார்கிட்ட..
அதை எழுதின என்கிட்டயே..
( ஹி., ஹி., ஹி..!!
போன வாரம் என் பையன்
நோட்ல பாத்து எழுதினேனுங்க.. )
@terror
//தில்லு இருந்தா தான் தீ மிதிக்கலாம்.
ம்ம்ம்... ஸ்டார்ட் மீஜிக் சொல்லிட்டு தீ மிதிக்க வர்றவங்களுக்கு எவ்ளோ தில்லு இருக்கும்னுதான் உலகத்துக்கே தெரியுமே..
@venkat
//ஆனா உங்க பேப்பரை திருத்தறதுக்கு
Teachers -கிட்ட ' நான்..' ' நீன்னு '
போட்டி இருக்குமாமே..//
சே சே.. அது நம்ம டெரர் பேப்பர்க்கு தான்.. நான் இந்த ப்ரச்சனை வரக்கூடாதுன்னுதான், சப்ஜெக்ட் பேரு க்ரீக்டா எழுதிடுவேன். தமிழ் பேப்பர்ல சுழிக்கற உரிமை தமிழைய்யாவுக்கு மட்டுமே. ரெண்டு பேர மோத விட்டு வேடிக்கை பார்க்கறதுல நான் உங்க அளவுக்கு எக்ஸ்பர்ட் கிடையாது..
//ஒரு இழுப்பு இழுத்து.,
ஒரு சுழி ( " 0 " ) போட்டுட்டா
வந்த வேலை ஈஸியா முடிஞ்சிடும்ல..
//
ha ha ha venkattttttt epdi pa?
//நீங்க MBA எங்க University-ல தான்
படிக்கணும்னு Oxford University &
University of London போட்டி போட்டது//
tn y u did MCA venkat?
dont say i dont have interest ;)
//எங்க பாட்டி அடிக்கடி என்னை பாத்து
" நீ சின்ன வயசுல அப்படியே
வெள்ளக்காரன் மாதிரி இருப்பேன்னு "
சொல்லுவாங்க//
:O
//அதுவும் யார்கிட்ட..
அதை எழுதின என்கிட்டயே..
//
may b manguni would hav copied them from his babies note.. just like u !!!
copy cats
Post a Comment