16 August 2010
சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3
இது சுதந்திர தின விழா
பேச்சுப்போட்டியில்
3rd Std படிக்கும் என் மகன் பேசியது..
தலைப்பு : சுதந்திர இந்தியாவின் சாதனைகள்..
இந்தியா - ஒரு மிகப்பெரிய
ஜனநாயக நாடு...
அதுவே ஒரு சாதனை தான்..
குண்டூசி முதல் ராக்கெட் வரை
நாம தயாரிக்காத பொருளே இல்ல..
விளையாட்டு முதல் விண்வெளி வரை
நாம சாதிக்காத Area-வே இல்ல..
ஆஸ்கார் முதல் நோபல் வரை
நாம வாங்காத அவார்டே இல்ல..
இது மாதிரி
இந்தியாவோட சாதனைகளை
வரிசையா அடுக்கினா
சீனப்பெருஞ்சுவரே
சிறுசா போயிடும்...
நிலாவுல கால் வெச்ச அமெரிக்காகாரங்க
இன்னிக்கு நம்மள பாத்து
மூக்கு மேல விரலை வெக்கிறாங்க..
ஏன்னா..
நிலாவுல தண்ணி இருக்குங்கறதை
கண்டுபிடிச்சதே நம்ம இந்தியா தான்..
இப்ப நாம எல்லா துறையிலயும்
எவ்ளோ முன்னேறி இருக்கோம்னு
பார்க்கலாம்...
முதல்ல கல்வி துறை :
எல்லோரும் படிக்கணும்னு
ஆசைப்பட்டார் மகாகவி பாரதி.,
அவர் ஆசையை நிறைவேத்திட்டு
இருக்கு நம்ம வித்யா பாரதி...
நாம சுதந்திரம் வாங்கினப்ப
இந்தியாவுல படிச்சவங்க
வெறும் 12%.. ஆனா இப்ப
அது 80% எட்டி பார்க்குது..
அமெரிக்காவுல
நாசா விஞ்ஞானிகள்ல 36 % இந்தியர்கள்.,
Bill Gates கம்பியூட்டர் கம்பெனியில
Work பண்றவங்கல்ல 34% இந்தியர்கள்..
ஒரு தடவை Bill Gates-கிட்ட
Tv-காரங்க கேட்டாங்களாம்...
" உங்க கம்பெனியில இருந்து
இந்தியாகாரங்களை எல்லாம்
வேலையை விட்டு தூக்ககுங்கன்னு
சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு..? "
அதுக்கு Bill Gates சொன்னாராம்..,
" இந்தியாகாரங்களை தூக்க மாட்டேன்.,
என் கம்பெனியை தூக்கிட்டு
இந்தியாவுக்கு போயிடுவேன்னு..!! "
சொன்னாராம்...
நம்மள அடிமையா வெச்சிருந்த
இங்கிலீஸ்காரங்ககிட்டயே
இங்கிலீஸை கத்துகிட்டு
இன்னிக்கு நாம உலகம்
முழுக்க கலக்கிட்டு இருக்கோம்..
அடுத்து மருத்துவ துறை:
பெரியம்மை - போயிந்தே...,
காலரா - போயே போச்சு...,
போலியோ - It's Gone...
இந்த மாதிரி நோய்ல இருந்தெல்லாம்
நம்ம இளைய தலைமுறைய காப்பத்திட்டாங்க..
அது மட்டுமா
32 வயசா இருந்த நம்ம இந்தியரின்
சராசரி ஆயுள் இப்போ 65 வயசா
மாறி இருக்கு..
Treatment-காக வெளிநாடு போன
காலம் எல்லாம் மாறி.,
இப்ப வெளிநாட்டுக்காரங்க தான்
Treatment-க்காக இங்கே வர்றாங்க..
அதுக்கு காரணம் நம்ம
மருத்துவ வளர்ச்சி..
அடுத்து விவசாயத் துறை :
நம்ம நாட்ல 100 கோடி மக்கள் இருக்காங்க.
அதனால உணவு உற்பத்தியை பெருக்க
பல புரட்சிகள் நடந்திருக்கு..
விவசாயத்தில - பசுமை புரட்சி
பாலுக்கு - வெண்மை புரட்சி
எண்ணைக்கு - மஞ்சள் புரட்சி
மீன் வளத்துக்கு - நீலப் புரட்சி
இப்படி நாம கலர், கலரா
புரட்சி பண்ணி இருக்கோம்..
அடுத்து ராணுவத் துறை :
உலகத்திலேயே 4வது பெரிய ராணுவம்
நம்ம ராணுவம் தான்
நாம யார் கூடவும் சண்டைக்கு
போனதும் இல்ல..
நம்ம கூட சண்டைக்கு வந்தவங்கள
சும்மா விட்டதும் இல்ல..
நம்மகிட்ட
சமாதான புறாவும் உண்டு - எதிரியை
சமாளிக்க பலமான படையும் உண்டு..,
நாம நல்லவங்களுக்கு நல்லவங்க.
கார்கில் ஆனாலும் சரி.,
காஷ்மீர் ஆனாலும் சரி.,
அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம்
தர்மம் தர்ம அடி போடும்..
இது தான் நம்ம ராணுவ ரகசியம்..
இவ்ளோ சாதனைகள் செஞ்சும்
நாம இன்னும் பொருளாதார வளர்ச்சியில
ரெண்டாவது இடத்தில தான் இருக்கோம்..
சுற்றும் வரை பூமி.,
சுடும் வரை நெருப்பு.,
போராடும் வரை இந்தியன்..
இந்தியாவை முதல் இடத்துக்கு
கொண்டு வர போராடிட்டே இருப்போம்..
ஜெய் ஹிந்த்..
டிஸ்கி : இந்த Speech-க்கு
1st Prize குடுத்து., நேத்து விழா
மேடையிலயும் பேச வெச்சாங்க.
I'm Very Happy..
உங்க திறமைய சோதிக்க
ஒரு சின்ன கேள்வி...
இந்த Speech-லயும் Prize வாங்க
ஒரே ஒரு தில்லாலங்கடி
வேலை நான் பண்ணியிருக்கேன்..
கண்டுபிடிக்க முடியுதா..??!!
பேச்சுப்போட்டி - 1
பேச்சுப்போட்டி -2
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
57 Comments:
இந்த Speech தயாரிக்க எனக்கு
Points எடுத்து குடுத்து உதவியா
இருந்த
அருண்,
ரசிகன்,
பெ.சொ.வி,
சீனா சார்,
ஜெகன்,
டெரர்,
சேலம் தேவா,
ஜெய்.,
இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..
அதே மாதிரி..,
ஒரு Point கூட சொல்லாத
அனுவையும், ரமேஷையும் கண்டித்து
வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நடைபெறும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்
பையனுக்கு வாழ்த்துக்கள்!
நல்ல வேலை, points குடுத்தவங்க லிஸ்ட்ல உங்க பேரும் இல்லை, நீங்க எழுதி கொடுத்திருந்தா வழக்கம் போல பரிசு இல்லாமதான் வந்திருப்பார்
//எல்லோரும் படிக்கணும்னு
ஆசைப்பட்டார் மகாகவி பாரதி.,
அவர் ஆசையை நிறைவேத்திட்டு
இருக்கு நம்ம வித்யா பாரதி...//
இப்படி ஒரு இமயமலையையே ஐஸ்ஸா வெச்சா யார் தான் first prize கொடுக்க மாட்டாங்க
//ஒரு Point கூட சொல்லாத
அனுவையும், ரமேஷையும் கண்டித்து
வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் //
எதிர் கட்சிய கண்டிச்சி இது கூட செய்யலைனா நீங்க கட்சி தலைவரா இருக்கறதே வேஸ்ட்.
ஆனா நல்லா பிளான் பண்ணி லீவ் நாளாதான் பாத்து Date Fix பண்ணி இருக்கீங்க
உங்கள் மகனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..மேலும் மேலும் சிறப்புர நெஞ்சார வாழ்த்துகிறோம்..உங்களோடு கூட நானும் சந்தோசத்தை பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..என்னத்தான் சொல்லிக்கோடுத்தாலும், மேடையில் போய் திறமையுடன் பேசி முதல் பரிசு வாங்குவதென்பது அவர் அவர்களின் திறமையே..அது உங்கள் மகனிடத்தில் இருக்கிறது..அதைப்பாராட்டியே ஆகனும்... அதோடுக்கூட நல்லப்பேசவேண்டும்,வெற்றி அடையவேண்டும் என்ற ஒன்றே குறிக்கோலாகக்கொண்டு பயிற்ச்சி அளித்து அதில் வெற்றியும் பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள்...உங்களைப்புகழ்ந்தால் நிறையப்பேருக்கு பிடிக்காது அதனால போதும்...பொன்...அந்த தில்லாலங்கடி..யோசிக்கோனும்..
இதை பற்றி கேட்கலாம் என்று இருந்தேன்.. நீங்களே எழுதி விட்டீங்க...
//இந்த Speech-லயும் Prize வாங்க
ஒரே ஒரு தில்லாலங்கடி
வேலை நான் பண்ணியிருக்கேன்..
கண்டுபிடிக்க முடியுதா..??!!//
Ans:
எல்லோரும் படிக்கணும்னு
ஆசைப்பட்டார் மகாகவி பாரதி.,
அவர் ஆசையை நிறைவேத்திட்டு
இருக்கு நம்ம வித்யா பாரதி...
இது உங்க பையன் படிக்கிற பள்ளியின் பெயர்தானே...
//வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நடைபெறும் //
நானும் அதே தேதியில இங்க உங்களுக்கு ஆதரவா டெல்லியில ஒரு மெகா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துறேன்.
இந்த Speech-க்கு
1st Prize குடுத்து., நேத்து விழா
மேடையிலயும் பேச வெச்சாங்க.
I'm Very Happy..
...... Great!!!
Convey our wishes to your child!
என்னதான் மத்தவங்க பாய்ண்ட்ஸ் எடுத்துக் குடுத்தாலும், மேடையில போய் பேச ஒரு தைரியம் வேணும், அந்த தைரியத்துக்கும், பரிசு பெற்றதற்கும் உங்க மகனுக்கு என்வாழ்த்துகள்!
உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ..
என்னதான் பாயிண்ட்ஸ் எழுதி கொடுத்தாலும் அத பேசுறக்கு தைரியம் வேணும்..! அப்புறம் நீங்க பண்ணின தில்லாலங்கடி
வேலை ..
//
எல்லோரும் படிக்கணும்னு
ஆசைப்பட்டார் மகாகவி பாரதி.,
அவர் ஆசையை நிறைவேத்திட்டு
இருக்கு நம்ம வித்யா பாரதி... //
//அதே மாதிரி..,
ஒரு Point கூட சொல்லாத
அனுவையும், ரமேஷையும் கண்டித்து
வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நடைபெறும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்
///
நல்ல வேளை என்னைய எதுவும் சொல்லலை ...
தலைவா! உங்களுக்கும் உங்க மகனுக்கும் பாராட்டுக்கள். நீங்க சொல்லி கொடுத்ததை, உங்க மகன் கம்பீரமாக மேடையில் நின்று பேசற சீன் என் கண் முன்னால் கற்பனையில் விரிகிறது.
இந்த சுதந்திர தினம் உங்க குடும்பத்தில இருக்கிற எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு நாளா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
அப்புறம் தல! நானு புதுசா கடை திறந்திருக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். கடைக்கு வாங்க! சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு, உங்க பொன்னான கருத்த சொல்லுங்க. நம்ப வளர்ச்சிக்கு அது பயனா இருக்குமில்ல. என்ன அப்பு நான் சொல்றது?
நம்ப VKS நண்பர்களுக்கும், VAS நண்பர்களுக்கும் கூட நம்ப கடைக்கு வாங்கன்னு அழைப்பு விடுக்கிறேன். வாங்க அப்பு! உங்க வரவை ஆவலோட எதிர்பார்திருக்கிறேன்.
நன்றி!
உங்க..உறவுகாரன்.. அப்பு!
@ venkat
//ஒரு Point கூட சொல்லாத
அனுவையும், ரமேஷையும் கண்டித்து
வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நடைபெறும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்//
இந்த சாதாரண மேட்டருக்குல்லாம் நான் அருண், ரசிகன் மூணு பேரும் ஐடியா கொடுத்தாலே போதும்கறதால தான் எங்க சங்கத் தலைவி தனியா எதுவும் சொல்லலை, ஆனா இதையும் மீறி நீங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தனும்னு முடிவு பண்ணிட்டா, ஒரு யோசனை:-
திங்கள்- சோம வாரம் கண்டனத்துக்கு கண்டம் வரும்கறதால வேண்டாம்.
செவ்வாய்- கேக்கவே வேணாம், ராகு கேது தோஷம் இருக்கும் விட்டுடுங்க.
புதன்- அறிவுள்ளவங்களை கலாய்ச்சா தெய்வக் குத்தம் ஆகிடும், வேணாம்.
வியாழன்- குரு வாரம் - கெட்ட நடவடிக்கைகள் அறவே ஆகாது.
வெள்ளி - மகாலட்சுமிக்கு உகந்த நாள், பெண்கள் மேல கோவம் காட்டக் கூடாது.
சனி - வேண்டவே வேண்டாம், எந்த காலத்துலயும் ஆகாது.
ஞாயிறு - அன்னிக்குத்தான் எல்லாருக்கும் லீவு, டிஸ்டர்ப் பண்ணாதீங்க.
ஆகையினால மத்த எந்த கிழமையிலயாவது உங்க ஆர்ப்பாட்டத்தை வச்சுக்குங்க, என் கணக்குப் படி அடுத்த வருஷம் பிப்ரவரி மாசம் 30-ந்தேதி தான் சரிப்பட்டு வரும், அன்னிக்கு நாள் நல்லா இருக்கிறதா காரமடை ஜோசியர் சொல்லியிருக்கார்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
தலைக்கு பிறந்தது வால் ஆகுமா...
வாழ்த்துகள் தல...
(நீங்க தயார் பண்ண speech . பரிசு கிடைக்கலன அருண் காலவரையட்ற உண்ணாவிரதம் இருந்து இருப்பாரு..)
@என்னது நானு யாரா? said...
//நம்ப VKS நண்பர்களுக்கும், VAS நண்பர்களுக்கும் கூட நம்ப கடைக்கு வாங்கன்னு அழைப்பு விடுக்கிறேன். வாங்க அப்பு! உங்க வரவை ஆவலோட எதிர்பார்திருக்கிறேன்.//
அருண்... கொஞ்ச நேரம் சமாதானம்... நண்பர் கூப்பிடறாரு... நம்ப இரண்டுபேரும் ஒன்ன போய்ட்டு வரலாமா?
//அதே மாதிரி..,
ஒரு Point கூட சொல்லாத
அனுவையும், ரமேஷையும் கண்டித்து
வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நடைபெறும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்//
நாங்க ஏதாவது கருத்து சொல்லி உங்க பையன் 1st prize வாங்கிட்டா அப்புறம் நீங்க எங்க கைய காலா நினைச்சு அழுது ஆர்பாட்டம் பண்ணிட்டா அப்புறம் நாங்க யார கலைக்கிறது!!!!!!!
பையனுக்கு வாழ்த்துக்கள்!
//எதிர் கட்சிய கண்டிச்சி இது கூட செய்யலைனா நீங்க கட்சி தலைவரா இருக்கறதே வேஸ்ட்.
ஆனா நல்லா பிளான் பண்ணி லீவ் நாளாதான் பாத்து Date Fix பண்ணி இருக்கீங்க//
Repeattu
அது சரி
அடுத்த பதிவுல ட்ரீஈஈஈஈஈஈட் கொடுத்துடுங்க :)
@ அருண்.,
// நீங்க எழுதி கொடுத்திருந்தா வழக்கம்
போல பரிசு இல்லாமதான் வந்திருப்பார் //
என் மகனுக்கு
இது 5வது Speech Competition...
கடந்த 4 முறையும் Prize
வாங்கி இருக்கான்.. But
எல்லாமே 2nd Prize தான்..
அதுக்கு தான் நான் Feel பண்ணினேன்..
Then.., இவங்களுக்கு எப்பவும்
Competition கொஞ்சம் Tough..
ரெண்டு Standard-க்கு சேர்த்து
ஒரே Competition-ஆ நடக்கும்..
இப்போ கூட 3rd & 4th சேர்த்து
ஒரே Competition..
3rd- ல - 120 Students படிக்கறாங்க
4th- ல - 120 Students
இதுல எத்தனை பேர் Competition-ல
கலந்துகிட்டாங்கன்னு தெரியாது..
எப்படியும் Class-க்கு 4 பேர்னு
வெச்சா கூட Min 32 பேர் வருது..
அதுல 1st & 2nd Prize வாங்கறது
அவ்ளோ Easy-யா என்ன..??
@ அருண்.,
// நல்ல வேலை, points குடுத்தவங்க
லிஸ்ட்ல உங்க பேரும் இல்லை, //
ஹி., ஹி., ஹி...!!!
சிக்கன் பிரியாணி பண்ணனும்னா
அதுக்கு
அரிசி.,சிக்கன்.,
தண்ணி., எண்ணெய்.,
உப்பு., காரம்...etc.,etc
வேணும்.. ஒத்துக்கறேன்..
அதுக்காக இதெல்லாம் இருந்துட்டா
மட்டும் சிக்கன் பிரியாணி ரெடி ஆகிடுமா..??
இதை எல்லாத்தையும் கலந்து
பக்குவமா சமைக்கணும்லே..
இதுல நம்ம வேலை எவ்ளோ
முக்கியம்னு..இப்ப புரியுதா..,??!!
@ To All.,
என் மகனையும்.,
என்னையும் ( ??!! ) பாராட்டிய
அனைவருக்கும் என் நன்றிகள்..
மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் .
@ பிரபு.,
// நானும் அதே தேதியில உங்களுக்கு
ஆதரவா டெல்லியில ஒரு மெகா கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்துறேன். //
UKG -ல பெயில் ஆன என்கிட்டேயும்.,
School-க்கு Spelling கூட தெரியாத
ரமேஷ்கிட்டேயும்
Points எதிர்பார்த்தது உங்க தப்பு தான்னு
எனக்கு போன் பண்ணி அனு
டோஸ் விட்டதால்..
கண்டன ஆர்ப்பாட்டங்கள் ( சேலம் & டெல்லி )
கைவிடப்படுகிறது..
// நம்ம வித்யா பாரதி...
இது உங்க பையன் படிக்கிற
பள்ளியின் பெயர்தானே...? //
அதே.. அதே..
Very Good..
இதே Answer சொன்ன
அருண் & செல்வாவுக்கும்
வாழ்த்துக்கள்..
Good points and a nice speech. It was a big speech for a 3rd std kid to memorize it and speak before everyone on a stage. I really appreciate his big effort! Tell my wishes to him.
ஜில்தண்ணி Said:
//அடுத்த பதிவுல ட்ரீஈஈஈஈஈஈட் கொடுத்துடுங்க :)//
@வெங்கட்
//சிக்கன் பிரியாணி பண்ணனும்னா
......
......
இதை எல்லாத்தையும் கலந்து
பக்குவமா சமைக்கணும்லே..
//
என்னது ட்ரீட்டு- சிக்கன் பிரியாணியா??
எனக்குப் பிடிக்காதே!!
மட்டன் பிரியாணியா பண்ணிடுங்க..
//UKG -ல பெயில் ஆன என்கிட்டேயும்., //
அப்ப அனு LKG பாஸ் பண்ணிட்டாங்களா??!!!!
//வெங்கட் said...
@ To All.,
என்னையும் ( ??!! ) பாராட்டிய
அனைவருக்கும் என் நன்றிகள்..//
நான் படிச்சு பார்த்த வரைக்கும் உங்க மகனைத் தான் எல்லாரும் பாராட்டியிருக்காங்க, (டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார்). உங்களை யாரும் பாராட்டியதா தெரியலை. ஆனா பதிவுல நீங்களே இப்படி
//இந்த Speech-லயும் Prize வாங்க
ஒரே ஒரு தில்லாலங்கடி
வேலை நான் பண்ணியிருக்கேன்.. //
போட்டிருக்கறதால, உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிகிட்டிருக்கீங்க!
VAS-க்கு நீங்களே தலைவரா இருக்கும்போது இது புதுசாவும் தோணலை!
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//புதன்- அறிவுள்ளவங்களை கலாய்ச்சா தெய்வக் குத்தம் ஆகிடும், வேணாம்.//
@வெங்கட்
(32ம் தேதி புதன் கிழமை)
புதன் கிழமைதான் சரியான நாள்-னு முன்னக்கூடியே எப்படி தெரிஞ்சது??
பெ.சொ.வி வழக்கம் போல (ரகசியமா) உங்ககிட்ட முன்னாடியே சொல்லிட்டாரா??
WOW.. சூர்யாவுக்கு என் வாழ்த்துக்கள்.. எம்மாம் பெரிய speechu.. இந்த வயசுல எல்லாத்தையும் மனப்பாடம் செய்து எல்லோர் முன்னாடியும் தைரியமா பேசுறதுன்னா, he is really great..
//ஒரு Point கூட சொல்லாத
அனுவையும், ரமேஷையும் கண்டித்து//
நான் பாட்டுக்கு எதாவது pointஅ கமெண்ட்ல போட, அதை உங்க பையன் கூட compete பண்ணுற யாராவது copy பண்ணி, அவனுக்கு முன்னாடி பேசிட்டாங்கன்னா? அப்புறம் சூர்யா தான் காப்பி பண்ணி பேசுற மாதிரி தெரியும்.. அதான், என் pointsஅ நானே சீக்ரட்டா வச்சுக்கிட்டேன்.. ஹிஹி..
(Actually, நீங்க அந்த பதிவு போட்ட சமயம் எனக்கு ஆணி அதிகம். thats why)
@வெங்கட்
//UKG -ல பெயில் ஆன என்கிட்டேயும்.,//
ஹய்யோ.. ஹய்யோ.. அதுக்குப் பேரு பெயில் இல்ல.. double promotion.. எத்தனை தடவை தான் சொல்லிக் குடுக்கிறது??
என்னை மாதிரி LKGல இருந்து direct-ஆ 1st std போனா அது double promotion..
டெரர் மாதிரி LKGலயே இருந்தா பெயில்..
உங்களை மாதிரி 1st stdல இருந்து LKGக்கு வந்தா double demotion...
இப்போ புரிஞ்சதா????
-----------------------------------
@Prabu
//அப்ப அனு LKG பாஸ் பண்ணிட்டாங்களா??!!!!//
உங்களுக்கும் புரிஞ்சது தானே?? இல்ல, நீங்க படிச்ச வகுப்புகளை வச்சு explain பண்ணனுமா??
@ venkat
// அதுக்காக இதெல்லாம் இருந்துட்டா
மட்டும் சிக்கன் பிரியாணி ரெடி ஆகிடுமா..??
இதை எல்லாத்தையும் கலந்து
பக்குவமா சமைக்கணும்லே..
இதுல நம்ம வேலை எவ்ளோ
முக்கியம்னு..இப்ப புரியுதா..,??!!//
பிரியாணிக்கு இவ்வளவு அழகா பக்குவம் சொல்றீங்களே? அப்போ வீட்டில சமையலும் நீங்க தானா?
super...all the best to ur son..good luck
ஹலோ பாஸ் !!!
உங்களோட 131st follower நான்...
First-ஆ follow பண்றது உங்களத்தான்...
நான் எதில் சேரட்டும்? VAS or VKS?
உங்க மொக்கைக்கு என் பாராட்டுக்கள்...
{This is my general opinion of all your posts not about this particular post}
By,
Venravan
Hearty Congrats to Surya dear...!!
VKS is awaiting for the arrival of the young junior soon into the team, as he has strong basement.. Let him get much more good trainings in the similar way.. :-)
@ அனானி.,
// உங்களைப் புகழ்ந்தால் நிறையப் பேருக்கு
பிடிக்காது அதனால போதும்... //
நிறைய பேரா...?!!
அங்கிட்டு இருக்கறதே 5 பேர்தான்..
அதுலயும் ஒருத்தர் நம்ம ஆளு..
அது யார்னு கேட்காதீங்க..
அது மட்டும் ரசிகயம்.
Sorry ரகசியம்..
@ என்னது நானு யாரா.,
// நம்ப VKS நண்பர்களுக்கும்,
VAS நண்பர்களுக்கும் //
குழப்பறீங்களே...!!
எனக்கு இங்கிலீஸ்ல பிடிக்காத
ஒரே வார்த்தை VKS.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
// டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார். உங்களை யாரும் பாராட்டியதா தெரியலை. ஆனா பதிவுல நீங்களே இப்படி //
1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.... பூனை கண்ணா மூடிட்ட உலகம் இருண்டு போயிடும?
//எனக்கு இங்கிலீஸ்ல பிடிக்காத
ஒரே வார்த்தை VKS.//
VKS-ங்கறது ஒரு வார்த்தையா? அதுவும் English வார்த்தையா? அடக் கடவுளே! இவருக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே?
அது சரி, எங்க சங்கத் தலைவி சொன்ன மாதிரி double demotion வாங்கின ஆளுகிட்ட இதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது.
@ பிரபு.,
// (32ம் தேதி புதன் கிழமை)
புதன் கிழமைதான் சரியான நாள்-னு
முன்னக்கூடியே எப்படி தெரிஞ்சது?? //
காரமடை ஜோசியர் தான் சொன்னார்..
புதன்- அறிவுள்ளவங்களை கலாய்ச்சா
மட்டும் தான் தெய்வக் குத்தம் ஆகிடும்,
மத்தபடி நீங்க பண்ற கண்டன
ஆர்பாட்டத்து தெய்வம் சந்தோஷமா
வரமே குடுக்கும்னு சொன்னார்..!!
//இல்ல, நீங்க படிச்ச வகுப்புகளை வச்சு explain பண்ணனுமா?? //
ஹி.. ஹி.. ஹி..
நான் PreKG, LKG, UKG
-இதுல எந்த வகுப்பும் படிக்கல...
நேரா 1ம் வகுப்புதான் படிச்சேன்.
ஆமா..
தமிழ் எனது மூச்சு..
தமிழ் எனது பேச்சு..
தமிழ் எனது வாச்சு..
//அங்கிட்டு இருக்கறதே 5 பேர்தான்..
அதுலயும் ஒருத்தர் நம்ம ஆளு..//
அதுல நாலு பேரு உங்க ஆள்தானே..
ஏன் மத்த மூனு பேர விட்டுட்டீங்க..
@ அனு.,
// என்னை மாதிரி LKGல இருந்து direct-ஆ
1st std போனா அது double promotion.. //
ஓ.. இப்ப நீங்க 1st Std-ஆ..??
( Behind the Scene...)
அனுவின் LKG மிஸ் & UKG மிஸ்..
LKG மிஸ் : இந்த அனு பொண்ணை
என்ன பண்றதுன்னே தெரியல..
UKG மிஸ் : ஏன்..?
LKG மிஸ் : நான் Rhymes சொல்லி
குடுத்தா.. சினிமா பாட்டு படுது..
UKG மிஸ் : ஓ..
LKG மிஸ் : நாலு பிள்ளைகளை
Set சேர்த்துகிட்டு Class எடுக்க விடாம
என்னை கலாய்ச்சிட்டே இருக்கு..
UKG மிஸ் : அப்புறம்..
LKG மிஸ் : நான் Home Work குடுத்தா
அதை எழுதாம., Internet-ல காப்பி
அடிச்சி தப்பு தப்பா கணக்கு எழுதிட்டு
வந்து.. " இதுல ஏழு தப்பு இருக்கு
கண்டுபிடிங்க மிஸ்னு " சொல்லுது..
UKG மிஸ் : அப்ப பேசாம Pass பண்ணி
விட்டுட வேண்டியது தானே..!!
LKG மிஸ் : அப்ப அடுத்து உன் Class தான்..
UKG மிஸ் : ஐயோ..!! இதை நான்
யோசிக்கவே இல்லையே..
பேசாம Principal Sir -கிட்ட சொல்லி
Double Promotion போட்டு 1st Std
அனுப்பிடலாம்..
அந்த 1st Std மிஸ் வேற
என் கிட்ட கொஞ்ச நாளா
வம்பு பண்ணிட்டே இருக்கா..
பழி வாங்கின மாதிரியும் ஆச்சு..
LKG மிஸ் : சூப்பர் ஐடியா..!!
@ வென்றவன்.,
// நான் எதில் சேரட்டும்? VAS or VKS? //
இதென்ன கேள்வி..??
அந்த 5 பேரை தவிர மற்ற
உலக தமிழர்கள் அனைவரும்
Default-ஆவே VAS தான்..
நீங்க VKS-ல சேரணும்னா மட்டும்
தான் " சேரட்டுமான்னு " கேட்கணும்..
But VKS-ல Membership Close
பண்ணியாச்சே..!!!
இது VKS சங்கத்தலைவி
அனுவுக்கே தெரியாது...
ஏன்னா Comment Moderation
என் கையில தானே இருக்கு..
ஹா., ஹா., ஹா ( வில்லன் சிரிப்பு )
@ பெ.சொ.வி & டெரர்..,
// டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு
வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார் //
// பூனை கண்ணா மூடிட்ட உலகம்
இருண்டு போயிடும? //
பூனையை விட புலிதான்
பயங்கரமானதுன்னு சொன்னா.. அதை
எலிங்க ஒத்துக்கவா போகுது..!!?
விடுங்க டெரர்.,
@ பெ.சொ.வி..,
// VKS-ங்கறது ஒரு வார்த்தையா.?
அதுவும் English வார்த்தையா? //
அப்ப இது Chinese-ஆ இருக்குமோ..?!!
சே.. சே.. அப்படி இருந்திருந்தா
நமக்கு புரிஞ்சி இருக்குமே..!!!
@வெங்கட்
//எலிங்க ஒத்துக்கவா போகுது..!!? //
நாந்தான் அவசரபட்டு பூனை கூட compare பண்னிடனா?
///அந்த 5 பேரை தவிர மற்ற
///உலக தமிழர்கள் அனைவரும்
///Default-ஆவே VAS தான்..
சரி... Amount-ஐ எப்ப என் Account-க்கு அனுப்புறீங்க...???
.....
@ டெரர்.,
// நாந்தான் அவசரபட்டு பூனை கூட
compare பண்னிடனா? //
Yes., Yes.,
பூனைங்க எல்லாம் ரொம்ப
Feel பண்ணிச்சுப்பா..!!
எதுக்கும் எலிகளையும்
விசாரிச்சு பார்க்கணும்..!!
அதுகளும் Feel பண்ணுதோ
என்னவோ..??!!
ரமேஷ்
//நாங்க ஏதாவது கருத்து சொல்லி உங்க பையன் 1st prize வாங்கிட்டா//
தன்ன தானே கலாய்க்கரதுல VKS அடிச்சிக முடியாது
@ வென்றவன்..,
// Amount-ஐ எப்ப என் Account-க்கு
அனுப்புறீங்க...??? //
Haaaah.., Haaaah., Haaah..
கண்ணா.., இது காசு குடுத்து
சேர்த்த கூட்டம் இல்லப்பா..
தானா சேர்ந்த கூட்டம்..
@ Terror
//1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.... பூனை கண்ணா மூடிட்ட உலகம் இருண்டு போயிடும? //
1000 கை மறைக்குதோ இல்லையோ 6 மணியான சூரியன் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.
பூனன மட்டும் இல்லை, யார் கண்னை மூடிகிட்டாலும் இருட்டாதான் இருக்கும்
- வேற எதாவது பழமொழி இருந்தா டிரை பண்ணுங்க. Better Luck Next time.
அன்பிப் வெங்கட்
நல்வாழ்த்துகள் எழுதியவருக்கும் - உதவியவர்களுக்கும் - எல்லாவற்றிலும் மேலாக - திறமையினை வெளிப்படுத்திய செல்ல மகனுக்கு. இரண்டாவது பரிசு வாங்கிக்கொண்டே இருந்து- திறமையினை வளர்த்துக் கொண்டு - முதல் பரிசு வாங்கியதற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்.
இபோழுது பேசியதில் எதிர்மறைச் சிந்தனைகள் இல்லை. முன்பெல்லாம் அவை இருக்கும். அப்புறம் தில்லாலங்கடி வேல - உச்சி குளிர்ந்திருக்கும்.
மேன்மேலும் பல வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் வெங்கட்
எப்போதுமே கோகுலத்தில் சூரியனில் - மறு மொழிகள் படிப்பது தான் சுவார்ஸ்யம். இடுகை கூட ஸ்கிப் பண்ணலாம். நான் சொல்றது சரியா.
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
தலைக்கு பிறந்தது வால் ஆகுமா...
வாழ்த்துகள் தல...
yen yen ethukuthan vijay padam pakakodathunu cholren..
சூர்யாவிற்கு (மட்டும்) வாழ்த்துகள்,
//நான் படிச்சு பார்த்த வரைக்கும் உங்க மகனைத் தான் . . . ஆனா பதிவுல நீங்களே இப்படி//
அதானே . . .
//1000 கை மறைக்குதோ இல்லையோ 6 மணியான சூரியன் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.
பூனன மட்டும் இல்லை, யார் கண்னை மூடிகிட்டாலும் இருட்டாதான் இருக்கும்
- வேற எதாவது பழமொழி இருந்தா டிரை பண்ணுங்க. Better Luck Next time.//
ராசா, எங்கேயோ போயிடீங்களே ராசா, நாளையில இருந்து, நான் இருக்கிற எடத்துல இருந்து 'மொரீஷியஸ்' பாத்து கும்புடறேன் ராசா . . .
@ Mrs.அருண்..,
// Good points and a nice speech. //
ரொம்ப நன்றி..,
உங்க பாராட்டுகளை
என் மகன்கிட்ட சொல்லிடறேன்..
அப்படியே அருண்கிட்ட
புத்திசாலிகளை ( அட., என்னைதான் )
கலாய்க்கறது தப்புன்னு
நல்ல புத்தி சொல்லி வைங்க
//புத்திசாலிகளை ( அட., என்னைதான் )
கலாய்க்கறது தப்புன்னு
நல்ல புத்தி சொல்லி வைங்க//
யாரு?
யாரு??
யாரு???
Post a Comment