24 June 2010
யதார்த்தம்..!!!
Early Morning 5 மணிக்கு எந்திரிச்சி.,
Refresh பண்ணிட்டு.,
கொஞ்ச நேரம் Walking & Exercise
முடிச்சிட்டு வீட்டுக்கு
வந்தா மணி 6.10.
Wife குடுக்கிற ஒரு Cup Coffee-ஐ
வாங்கிட்டு Morning News Paper-ஐ
ஒரு Look விட்டுட்டு திரும்பினா
மணி 6.30.
Laptop-ஐ எடுத்து.,
என் Blog-ஐ Open பண்ணி
Comments எதாவது வந்திருந்தா
Reply பண்ணிட்டு.,
Chat-ல யாராவது இருந்தா
ஒரு 10 Minutes பேசிட்டு.,
Time -பாத்தா மணி 7.30
ஓ.. குழந்தைங்களுக்கு வேற
School -க்கு Time ஆச்சே..!!.
Wife Lunch Prepare பண்ணிட்டு
இருப்பாங்க..
குழந்தைங்களுக்கு Uniform போட்டு.,
School Bag-ல - Book., Note., Pencil Box
எல்லாம் எடுத்து வச்சு.,
Shoe Polish போட்டு., மாட்டி விட்டு
School Bus-ல ஏத்தி விட்டுட்டு
வந்தா மணி 8.10.
அவசர அவசரமா Shaving.,
குளியல் முடிச்சி Ready ஆகி
Breakfast-அ Very Fast-ஆ முடிச்சி.,
Bus Stop-க்கு ஓடினா...
Thank God.. நான் போக வேண்டிய
Bus அப்பதான் வரும்..
Bus-ல ஏறி., Ticket வாங்கி.,
Seat கிடைச்சா உக்கார்ந்துட்டு.,
இல்லைன்னா Standing-லயே
போயி Office வாசல்ல இறங்கி..,
உள்ளே போகும் போது
10 Minutes Late ஆகியிருக்கும்..
Boss-கிட்ட சின்ன Excuse கேட்டுட்டு.,
நேத்து Pending வெச்ச Work-ஐ
எல்லாம் முடிச்சிட்டு நிமிர்ந்தா
Lunch Break..
Canteen-ல ஒரு Meals Order
பண்ணி சாப்பிட்டுட்டு வந்து.,
Work-ஐ மறுபடியும் Continue
பண்ண வேண்டியது தான்..
Evening 6.30-க்கு வீட்டுக்கு வந்தா
ரொம்ப Tired-ஆ இருக்கும்..
அப்படியே ஹாயா Chair-ல
உக்கார்ந்திட்டு.,
Tv Remote-ஐ தேடி எடுத்து.,
Tv-ஐ ON பண்ணினா...
" செம்மொழி., செம்மொழின்னு
ஓடிட்டு இருக்கு..!! "
சூன் 23 - சூன் 28 வரை இப்படிதானாம்..
அதென்ன சூன்..? 'ஆனி ' சொல்லலாமே..!! )
என் மனசுல ஒரு சின்ன கேள்வி..
" செம்மொழி " - தமிழ்..,
சரி.., ஆனா...
இப்ப நம்மொழி தமிழா..??!!
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( என் மனைவி )
ஒரு நாள் முழுக்க English கலக்காம
உங்களால பேச முடியுமா..?
Oh Sure..!!
இன்று ஒரு தகவல் :
---------------------
மூணு சினிமா தயாரிப்பாளர்களோட
சினிமா Companies பெயர் இது...
கலாநிதி மாறன் - Sun Pictures
உதயநிதி ஸ்டாலின் - Red Giant Movies
தயாநிதி அழகிரி - Cloud Nine Movies
அப்படியே " ஊருக்கு உபதேசம்னு "
யாராவது ஒரு Company ஆரம்பிச்சா
நல்லா இருக்கும்..!!
ஹி., ஹி., ஹி..!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
79 Comments:
Nice :-)
Oorukke ithe kathaithaan
இன்றைய 'ஒரு தகவல்', தெரிந்த தகவல், ஆனாலும் சரியான சந்தர்பத்தில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
//அவசர அவசரமா ஷேவிங்//
தினமுமா?
//" செம்மொழி., செம்மொழின்னு
ஓடிட்டு இருக்கு..!! "//
எதார்த்தம் = 'தமிளிஷ்'
நன்றாக சிரிக்க / சிந்திக்க வைத்தது..
//Wife Lunch Prepare பண்ணிட்டு இருப்பாங்க..//
சின்ன திருத்தம் உங்க வீட்ல சமையல், துணி துவைக்கிறது எல்லாம் நீங்கதான்ன்னு கேள்விப்பட்டேன். அதெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரியாமே?(இதுக்கும் போன பதிவுக்கும் நோ சம்மந்தம்)
What are you telling. Semmozhi means Red language. O tamil is a funny language u know
ரொம்பதான் வெறுப்பாய் இருக்கீங்க ....
அன்பின் வெங்கட்
அப்பாலிக்கா வாரேன் - படிக்க வேண்டியது நெரெய சேந்து போச்சே ! சரி சரி டைம் இல்ல - பாக்கறேன் - வலைச்சரம் நினைவில் இருக்கிறதா
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
////வலைச்சரம் நினைவில் இருக்கிறதா///
..... Great! Best wishes! :-)
" செம்மொழி " - தமிழ்..,
ஆனா இப்ப நம்மொழி தமிழா..??!!
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( என் மனைவி )
ஒரு நாள் முழுக்க English கலக்காம
உங்களால பேச முடியுமா..?
Oh Sure..!!
...... So, You know - like - you know - for your kelvi: " செம்மொழி " - தமிழ்..,
ஆனா இப்ப நம்மொழி தமிழா..??!!
..... the answer is like - you know - "Oh Sure....!!"
:-)
-
இப்படி எழுதினால் வீட்டுக்கு தானி வரும்
(இன்னாபா கேட்ட? தானின்னா என்னாவா.....அதாம்பா.........ஆட்டோ)
Well Said Venkat!!!
(for follow up.. அப்பாலிக்கா வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்..)
காலீல ஏந்திரிச்சி..
சாயா அடிச்சிட்டு..
நாஷ்டா துன்னுட்டு..
ஜோலிக்கு போயி..
டரியல் ஆகி..
ஊட்டாண்ட வந்து..
உஸ்ஸப்பானு குத்திகினு..
பாதி பேர் அப்படின்னா..
மீதி பேர் இப்படி..
ஆங்கிலம் கலந்தோ கலக்காமலோ..
தமிழ் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்ல..
ஆனா பார பட்சமில்லாம...
Englishஐயும் கொல்றோம்...
சிந்திக்க தூண்டும் பதிவு.!!
Keep it up.. ஹி..ஹி..
"June -23 to June 27"...Aanee....good question....
O tamil is a funny language u know
this is too much...
ஏன் வெங்கட், பசங்களுக்கு Home work எழுதுறது, இல்ல friend கடைல அவரை மொக்கை போடுறது, இல்லைனா உங்க friend ஏ ஆர் ரஹ்மான், மாதவன் இடம் பேசி அனுவுக்கு பாடவோ, நடிக்கவோ chance வாங்கி தரது. இவ்வளவு busyல உங்களுக்கு “ஆனி” எங்கே போச்சுனு தெரியனுமா?
நம்ம மங்குனி சொன்னது போல போய் ind vs SL finals, இல்லனா world cup football பாருங்க
”ஆனி” தேடி கண்டுபிடிச்சி புடுங்க நம்ம அமைச்சர்கள் எல்லோரும் போய் இருக்காங்க
@ வெங்கட்
மறுபடி இந்த “ஆனி” அந்த “ஆணி” இல்லைனு வாத்தியார் மாதிரி spelling mistakes class எடுக்க ஆரம்பிச்சிங்க அவ்வள்வு தான். ஏன்னா, Tamil is a Funny Language You know!
@ரசிகன்
சூப்பரப்பூ... கலக்கிட்டீங்க போங்க..
ஒரு சமுதாயம் வளர்ச்சி அடையும் போது அதற்கேற்ப அந்த மொழியும் வளர்ச்சி அடைய வேண்டும்.. இதைத் தான் survival of the fittest என்று சொல்கிறோம்..
ஆங்கிலம் எப்படி ஒரு international language-ஆக accept ஆகியிருக்கு?? அவங்க மத்த மொழிகள்ல உள்ள வார்த்தைகளை தங்கள் மொழியிலும் சேர்த்துக் கொள்ள தயங்குவதில்லை.. அந்த flexibilityயே முதல் காரணம்..
coir (கயிறு), catamaran (கட்டுமரம்), curry (கறி), editor (ஏடிட்டோர், ஏடு இட்டோர்), mango (மாங்கா[ய்]), Betrothal (பெற்றோர் ஒத்தல்) இதெல்லாம் சில உதாரணங்கள்..
சொல்ல போனா, நம்ம இப்போ பேசுற தமிழும் கலப்படமானதே. இது ஒரு modernised தமிழ்.. பண்டைய கால தமிழை (Proto-tamil??) படிக்க சொன்னா இங்க இருக்குற எல்லோரும் பேபே-ன்னு தான் முழிப்போம்.. அதை விடுங்க.. நம்மல்ல எத்தனை பேருக்கு திருக்குறளை படிச்சு சரியான அர்த்தம் சொல்ல முடியும்??
ஸோ, நான் என்ன சொல்ல வர்றேன்னா, முடிஞ்ச வரைக்கும் பிழையில்லாமல் பேசுவோம்.. நமக்கு தெரிஞ்சத புள்ளகுட்டிகளுக்கு சொல்லி கொடுப்போம்.. ஒரு மொழி சூழ்நிலைக்கேற்ப மாறுதல் அடைவது இயல்பு.. அது தான் வளர்ச்சிக்கான அறிகுறியும் கூட..
என்னோட கமெண்ட்-ட பார்த்துட்டு என்னை கும்ம தயாராகி விட்ட அன்பு உள்ளங்களே.. அது ஜஸ்ட் என்னுடைய புரிதல் மட்டுமே.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.. என்னால அடியெல்லாம் தாங்க முடியாது..
கட்சிக்காரவுகளுக்கு..
நான் ஏதோ சீரியஸ் கமெண்ட் போட்டிருக்கேன்னு யாரும் கும்மியை நிறுத்திடக் கூடாது.. இந்த தடவை ஜனாவே வந்தாலும், அவரா நாம்மலான்னு ஒரு கை பார்த்துட வேண்டியது தான் :)
@ அனு
wait, wait, wait ஏதோ பெருசா சொல்ல வர்றீங்கனு மட்டும் தெரியுது. எதுக்கும் நான் ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிக்கிறேன்
@அருண்
நான் கும்மிய நிறுத்தக்கூடாதுன்னு சொன்னது வெங்கட்-ட கலாய்க்குறத பத்தி.. நீங்க என்னடான்னா சங்கத்துத் தலைவலி.. சாரி.. தலைவி-ன்ற எண்ணம் கூட இல்லாம, எனக்கே கும்மியா..
அப்புறம் நானும் "ஆனி" "ஆணி"யப் பத்தி எழுதிடுவேன் ஆமா..
//" செம்மொழி " - தமிழ்..,
ஆனா இப்ப நம்மொழி தமிழா..??!!//
நல்ல கேள்வி...
பதில் எங்க ..??
//ஏன்னா, Tamil is a Funny Language You know!//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
[நாங்களும் அரசியல் பண்ணுவம்ல..]
@ மாதவன்.,
// இன்றைய 'ஒரு தகவல்', தெரிந்த தகவல்,
ஆனாலும் சரியான சந்தர்பத்தில்
ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள். //
எனக்கும் இந்த விஷயம்
கொஞ்சம் தமாஷா தான் இருக்கு..
ம்ம்.. என்ன பண்றது..?
" அரசியல்ல இதெல்லாம் சதாரணமப்பா..! "
@ ரமேஷ்
// உங்க வீட்ல சமையல், துணி துவைக்கிறது
எல்லாம் நீங்கதான்ன்னு கேள்விப்பட்டேன். //
அடபாவிகளா.. இப்படிகூடவா.??
ஆமா இந்த Matter உங்களுக்கு எப்படி
தெரிஞ்சது..??
// Semmozhi means Red language..? //
O.. This is Very Funny..
@ சீனா சார்..,
// வலைச்சரம் நினைவில் இருக்கிறதா //
ஓ.., நல்லா இருக்கு..
கொஞ்சம் Time Please..
@ பெ.சொ.வி.,
// இப்படி எழுதினால் வீட்டுக்கு தானி வரும் //
நல்லவேளை பாரஉந்து வரும்னு
சொல்லாமா போனீங்க..!!
( என்ன கேட்டீங்க..?
பாரஉந்துன்னா என்னாவா..?
அதாங்க லாரி.. )
@ ரசிகன் said...
// காலீல ஏந்திரிச்சி.. சாயா அடிச்சிட்டு.
நாஷ்டா துன்னுட்டு.. ஜோலிக்கு போயி..
டரியல் ஆகி.. ஊட்டாண்ட வந்து..
உஸ்ஸப்பானு குத்திகினு.. //
படா சோக்காகீதுபா இது..,
இன்னாமா டக்கரா பேசற நீ..,
எந்த ஸ்-கூல்ல்லபா நீ படிச்ச..?
மெய்யாலும் சொல்றேன்..
உன்னாண்ட மட்டும் நா டகால்டி
வேலயே காட்டமுடியலபா.,
எல்லாமே புஸ்னு பூடுது..
@ அருண்..,
// இந்த “ஆனி” அந்த “ஆணி” இல்லைனு
வாத்தியார் மாதிரி spelling mistakes class
எடுக்க ஆரம்பிச்சிங்க அவ்வள்வு தான். //
எனக்கு இன்னிக்கு Class இல்ல..
இன்னொரு Madam வந்து எடுப்பாங்க..
@ அனு...,
சபாஷ்..!!
நான் கோடு போட்டா..,
நீங்க ரோடே போட்டு இருக்கீங்க..
இன்னிய தேதியில English கலக்காம
நம்ம யாராலயும் பேச முடியாது..
காரணம் அறிவியல் வளர்ச்சி..
அவங்க ஒரு பொருளை கண்டுபிடிச்சா.,
நம்ம ஆளுங்க அதுக்கு தமிழ்ல
ஒரு பேரு மட்டும் கண்டுபிடிக்கறாங்க..
அதுக்கு பேசாம உலகம் அந்த பொருளை
எப்படி சொல்லுதோ அப்படியே சொல்லலாம்..
ஒரு பேச்சுக்கு Cycle-ல மிதிவண்டின்னு
சொல்லலாம்..
ஹேண்டில் பார்., ஸ்டேண்ட்.,
மங்கார்ட்., சைக்கிள் செயின்.,
பெடல்., பெல்., சீட்., வீல்.,
பிரேக்., டயர்., டியூப்., பஞ்சர்.,
இதையெல்லாம்...??
@ அருண்.,
// @ அனு
wait, wait, wait ஏதோ பெருசா சொல்ல
வர்றீங்கனு மட்டும் தெரியுது. எதுக்கும்
நான் ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிக்கிறேன். //
அக்கவுண்டுக்கு பணம் கரெக்டா
வந்திடுச்சில்ல..? அப்ப ஓ.கே..!
அடுத்த மாஸ்டர் பிளான் என்னான்னு
மெயில் பண்றேன்..
@ அனு..,
// நீங்க என்னடான்னா சங்கத்துத் தலைவலி..
சாரி.. தலைவி-ன்ற எண்ணம் கூட இல்லாம,
எனக்கே கும்மியா..? //
அவசரப்பட்டு அருணை கட்சியில
இருந்து நீக்கிடாதீங்க.. அவர் இன்னும்
உங்க கட்சிக்குள்ள பண்ணவேண்டியது
நிறைய இருக்கு..
அப்புறம் என் பணம் வேற Waste-ஆ
போயிடும்..
@ பிரபு..,
// ஏன்னா, Tamil is a Funny Language You know.!
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
[ நாங்களும் அரசியல் பண்ணுவம்ல.. ] //
நீங்க கண்டிச்சது ரொம்ப சரி..
இதை சொன்னது நம்ம ரமேஷ் தான்..
சிக்கனம் பார்க்காமா நல்லா அடிபின்ற
மாதிரி நாலு பேரை கூப்பிட்டுக்கோங்க..
ரமேஷ் அட்ரசை உங்களுக்கு மெயில் பண்றேன்..
( ஹி., ஹி., ஹி.. !
நாங்களும் அரசியல் பண்ணுவம்ல.. )
சிக்கனம் பார்க்காமா நல்லா அடிபின்ற
மாதிரி நாலு பேரை கூப்பிட்டுக்கோங்க..
ரமேஷ் அட்ரசை உங்களுக்கு மெயில் பண்றேன்..
( ஹி., ஹி., ஹி.. !
நாங்களும் அரசியல் பண்ணுவம்ல.. )
venkatta summaavaa
@ வெங்கட்,
// ஹேண்டில் பார்., ஸ்டேண்ட்.,
மங்கார்ட்., சைக்கிள் செயின்.,
பெடல்., பெல்., சீட்., வீல்.,
பிரேக்., டயர்., டியூப்., பஞ்சர்.,//
அப்புறம் இந்த
லைட், கேரியர், டபுள்ஸ் போறது இதெல்லாம் விட்டுடீங்களே!
ஒரு டீ குடிக்கப்போனது தப்பா?
@ அனு
இந்த வெங்கட் கட்சிக்குள்ளே உடைக்க முயற்சிக்கிறார்.
(pls refer: super singer பதிவு கடைசி கமெண்ட் from venkat
// @ அனு & Co..,
இவிங்க ரவுசு தாங்கலையே..!!
World Bank-ல கடன் வாங்கியாவது
இந்த கட்சியை உடைச்சே ஆகணும்..
வெங்கட் Counting Starts..
( வேற எதுக்கு எல்லாம்
சதி திட்டம் தீட்டறதுக்கு தான்.. ) //
பூனை மாதிரி இங்க புது பதிவை போட்டுட்டு அதுல சதி திட்டம் தீட்டறார்.
Be Careful
எங்கள் கட்சி தென்றலை தீண்டியது இல்லை ஆனால் தீயை தாண்டி இருக்கிறோம்.
@மாலா:
//லைட், கேரியர், டபுள்ஸ் போறது இதெல்லாம் விட்டுடீங்களே!//
வெங்கட் வச்சிருந்த சைக்கிள்'ல இது மூணுமே (லைட், கேரியர், டபுள்ஸ்) கிடையாதுங்க.. but சைக்கிள் கேப்ல எப்படி "மட்கார்ட்"-ஐ "மங்கார்ட்"-ஆ தமிழ் படுத்தி இருக்கார் பார்த்தீங்களா?
@ அருண்.,
// எங்கள் கட்சி தென்றலை தீண்டியது இல்லை
ஆனால் தீயை தாண்டி இருக்கிறோம். //
ம்ம்.. அப்படிதான் Perfect..
இப்படியே Maintain பண்ணுங்க.,
கடைசி வரைக்கும் நம்ம மேல
அங்கே யாருக்குமே சந்தேகம்
வரக்கூடாது.. O.K..!!
அதுக்காக ரொம்ப Over Acting பண்ணி
மாட்டிக்கப் போறீங்க..
Be Careful..!!
@ ஜெகன்.,
// சைக்கிள் கேப்ல எப்படி "மட்கார்ட்"-ஐ "மங்கார்ட்"-ஆ தமிழ் படுத்தி இருக்கார் பார்த்தீங்களா? //
அது "மட்கார்ட்"-ஆ...?
நான் இது நாள் வரை அதை
"மங்கார்ட்"-ன்னுல நினைச்சிட்டு
இருக்கேன்..
ஹி., ஹி.., ஹி..!
//சொல்ல போனா, நம்ம இப்போ பேசுற தமிழும் கலப்படமானதே. இது ஒரு modernised தமிழ்.. பண்டைய கால தமிழை (Proto-tamil??) படிக்க சொன்னா இங்க இருக்குற எல்லோரும் பேபே-ன்னு தான் முழிப்போம்.. அதை விடுங்க.. நம்மல்ல எத்தனை பேருக்கு திருக்குறளை படிச்சு சரியான அர்த்தம் சொல்ல முடியும்?? //
அனு நீங்க ஒளவையாரோட கிளாஸ்மேட் ன்னு சொல்லவே இல்லியே.
//அவசரப்பட்டு அருணை கட்சியில
இருந்து நீக்கிடாதீங்க.. அவர் இன்னும்
உங்க கட்சிக்குள்ள பண்ணவேண்டியது
நிறைய இருக்கு..
//
அனு நம்ம கட்சில கருப்பு ஆடு(வெங்கட்) புகுந்துடுச்சுன்னு நினைக்கிறேன். பீ அலர்ட்
//ரமேஷ் அட்ரசை உங்களுக்கு மெயில் பண்றேன்..//
நான் வீட்டை மாத்திட்டேனே....
//எங்கள் கட்சி தென்றலை தீண்டியது இல்லை ஆனால் தீயை தாண்டி இருக்கிறோம்.//
கரக்கிட்டா சொன்னீங்க அருண்
//அவங்க ஒரு பொருளை கண்டுபிடிச்சா.,
நம்ம ஆளுங்க அதுக்கு தமிழ்ல
ஒரு பேரு மட்டும் கண்டுபிடிக்கறாங்க..//
சரியாச் சொன்னீங்க..
ஒன்னாம் வகுப்பு படிக்கும் பொது... (எல் கே ஜி , யு கே ஜி பிரபலமாகாத நாட்கள்) 'slate' என்பதை தூய தமிழாக நினைத்துக்கொண்டு, பிறகு ஆங்கிலத்திலும் அப்படித்தான் அழைப்பார்கள் எனத் தெரிந்தபோது.. ஆச்சரியப்பட்டேன்..
@ ரமேஷ்.,
// அனு நீங்க ஒளவையாரோட கிளாஸ்மேட்-ன்னு
சொல்லவே இல்லியே. //
ம்ம்.. ரெண்டாவது Plan-ம் Success..
கலக்கற வெங்கட்..
//ம்ம்.. ரெண்டாவது Plan-ம் Success..கலக்கற வெங்கட்..//
இதெல்லாம் போட்டு வாங்குறது பாஸ். அப்பதான நீங்க எங்ககிட்ட எங்க கட்சிய கலைக்கிறதுக்காக நீங்க வச்சிருக்குற ஐடியாவ சொல்லுவீங்க. நாங்களும் அலேர் ஆவோம்....
//சபாஷ்..!!
நான் கோடு போட்டா..,
நீங்க ரோடே போட்டு இருக்கீங்க..
//
ம்ம்ம்.. அப்படி வாங்க வழிக்கு..
இல்ல...
கோடு போட்டுட்டு இருக்கும் போதே ரோடு போட்டுடுவோம்..
அப்பதான் நசுக்கப்பட்டுடேன்னு புலம்ப முடியாது...
ரெண்டு பேரும் சேர்ந்து,
"புது வார்த்தைகளை கண்டு பிடிச்சி தமிழை வளர்க்கவும் வேண்டாம்..
புழக்கத்துல இருக்கற வார்த்தைகளை அழிக்கவும் வேண்டாம்"னு
கருத்து சொல்லி இருக்கீங்க..
WE'll try to follow...
நாங்க முயற்சி பண்ணுறோம்...
(மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி மாத்தி மாத்தி
ஒரே விஷயத்தை தமிழ்லையும் englishலையும் சொல்ல ஆரம்பிச்சிடேனே... ம்ஹீம்ம்... )
//நல்லவேளை பாரஉந்து வரும்னு
சொல்லாமா போனீங்க..!!
( என்ன கேட்டீங்க..?
பாரஉந்துன்னா என்னாவா..?
அதாங்க லாரி.. )
//
தூய தமிழ்ல எழுதின நினைப்போ..........சாரி தல, பாரம் தமிழ்ச் சொல் அல்ல, வடமொழிச் சொல். அதற்கு பளு என்பதே சரியான தமிழாக்கம்.
(VKS தலைவி.....நோட் பண்ணிக்குங்க, இன்னைக்கு தலையை ஒரு வழி பண்ணாம விடறதில்லை)
VKS உறுப்பினர்களே!
போன பதிவில் வெங்கட் நம்மை சமாளிக்க முடியாமல் கட்சியை உடைக்க முயற்சிப்பதாலும், World bank ல் கடன் வாங்க முடிவு செய்ததாலும் - நம்ம plan படி தலைவியை தாக்குவது போல பேசி வெங்கடை கொஞ்சம் சந்தோஷபடுத்தியாச்சு. போதும். மறுபடி கும்மலாம்
இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்மப்பா!
@ பெயர் சொல்ல விருப்பமில்லை
// தூய தமிழ்ல எழுதின நினைப்போ..........சாரி தல, பாரம் தமிழ்ச் சொல் அல்ல, வடமொழிச் சொல். அதற்கு பளு என்பதே சரியான தமிழாக்கம் //
சூப்பருங்க.
lorry க்கு இனையான தமிழ்ச்சொல் சுமையுந்து. பாருங்கள் wikipedia.
http://ta.wikipedia.org/wiki/சுமையுந்து
யப்பா... ரொம்ப நாளைக்கு முன்னாடி வாங்கின மொக்கைக்கு பழி வாங்கியாச்சி
ஹ ஹ ஹா (நம்பியார் சிரிப்பு)
jolly, I am very happy
49.......
48.....
47.....
50....ஹைய்யா. ஐம்பதாவது கமெண்டை போட்டாச்சு.
//போன பதிவில் வெங்கட் நம்மை சமாளிக்க முடியாமல் கட்சியை உடைக்க முயற்சிப்பதாலும், World bank ல் கடன் வாங்க முடிவு செய்ததாலும் - நம்ம plan படி தலைவியை தாக்குவது போல பேசி வெங்கடை கொஞ்சம் சந்தோஷபடுத்தியாச்சு. போதும். மறுபடி கும்மலாம்//
வெங்கட் தொப்பி தொப்பி
இது கட்சிக்காரங்களுக்கு..
இது நமக்கு சோதனைக் காலம்.. எவ்வளவு சதிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், நமது ஒற்றுமையை நிருபிக்க வேண்டிய தருணம்.. ஒன்று கூடுவோம் தோழர்களே & தோழியரே.. (சே.. தலைவின்னு சொன்ன உடனே இந்த மாதிரி தான் பேச வருது..)
@வெங்கட்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
//பாரம் தமிழ்ச் சொல் அல்ல, வடமொழிச் சொல்//
//lorry க்கு இனையான தமிழ்ச்சொல் சுமையுந்து. பாருங்கள் wikipedia.
//
ஹிஹி.. வெங்கட்.. உங்களைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு :)
@அருண்
//எங்கள் கட்சி தென்றலை தீண்டியது இல்லை ஆனால் தீயை தாண்டி இருக்கிறோம்.//
எப்படி இப்படி??
@Madhavan
அப்போ, ஸ்லேட் தமிழ் வார்த்தை இல்லயா??
@பெ சொ வி
//பளு என்பதே சரியான தமிழாக்கம்//
அப்படி தான்... பிடிங்க.. விடாதீங்க...
@ரசிகன்
//WE'll try to follow...
நாங்க முயற்சி பண்ணுறோம்...//
முழு விண்ணப்பத்தில (full form) இருக்கீங்க போல இருக்கு..
@ ரமேஷ் & அருண்..,
// இதெல்லாம் போட்டு வாங்குறது பாஸ்.
அப்பதான நீங்க எங்ககிட்ட எங்க கட்சிய
கலைக்கிறதுக்காக நீங்க வச்சிருக்குற
ஐடியாவ சொல்லுவீங்க. நாங்களும் அலேர் ஆவோம்.... //
// நம்ம plan படி தலைவியை தாக்குவது போல
பேசி வெங்கடை கொஞ்சம் சந்தோஷபடுத்தியாச்சு.
போதும். மறுபடி கும்மலாம் //
எல்லாம் நம்ம திட்டப்படிதான்
நடக்குது.. Very Good..!!
ரமேஷ் உங்க அக்கவுண்ட்ல Rs 10,000
கம்மியா இருக்குன்னு சொன்னீங்கல்ல..
போட்டுட்டேன்.. Check பண்ணிக்கோங்க..
அருண்., உங்க Performance Super..
வாங்கின காசுக்கு மேல நடிக்கறய்யா நீ..
Keep it Up..!!
btw, form-க்கு தமிழ் வார்த்தை விண்ணப்பம் தானே.. இல்ல, அது applicationனோட தமிழ் வார்த்தையா???
இல்லாட்டி, எனக்கே யாராவது திரும்ப rivet அடிப்பாங்க..
@ பெ.சொ.வி.,
// பாரம் தமிழ்ச் சொல் அல்ல, வடமொழிச் சொல்.
அதற்கு பளு என்பதே சரியான தமிழாக்கம். //
என்னாது " பாரம் " தமிழ் சொல் இல்லையா..?
அவமானமா போச்சே..!! என் முகத்தை எங்கே
கொண்டு போய் வெச்சிக்கறது..?
என்னாது.. " முகம் " தமிழ் சொல் இல்லயா..?
ஆஹா.. எது சொன்னாலும் குத்தம்
கண்டுபிடிக்கறாங்களே..
@ அனு.,
// இது நமக்கு சோதனைக் காலம்..
எவ்வளவு சதிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும்,
நமது ஒற்றுமையை நிருபிக்க வேண்டிய தருணம்.. //
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..
For your Information..
உங்க கட்சியில இன்னொரு ஆளை
நான் கரெக்ட் பண்ணிட்டேன்..
அது யார்னு கேட்காதீங்க..
அது ரசிகயம் Sorry ரகசியம்..!!
@ அருண்..,
// 47.., 48.., 49... //
50 Comments போடணும்கறதுக்காக
இப்படியா..?! அடங்க மாட்டீங்க
போல இருக்கே..
// 50 Comments போடணும்கறதுக்காக
இப்படியா..?! அடங்க மாட்டீங்க
போல இருக்கே //
ஹி ஹி ஹி நாங்க யாரு. சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக... (ஓ... இது நம்ம ப்ளாக் Caption ஆ).
சரி, விடு நாங்க நிலாவுக்கே மெழுகுவர்த்தி காட்டுற குழந்தைக...
வெங்கட்: அருண் & ரமேஷ் எப்படி பாத்தாலும் எனக்கு முப்பது கமெண்டுக்கு மேல போகமாட்டேன்குது ஏதாச்சும் உங்க கட்சில இருந்து பத்து செய்யக்கூடாதா?
அருண்: எவ்ளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டமா!!. நீங்க வேற எங்க கட்சிக்கு வேண்டப்பட்ட விரோதியாச்சே.
// 47.., 48.., 49... //
வெங்கட்: தேங்க்ஸ் அருண் உங்க கட்சி காரங்களை நாங்க மறக்க மாட்டோம்.
நீதி: உதவின்னு கேட்டா எதிர் கட்சிக்குகூட ஹெல்ப் பண்ணுவோம்ல...
@ அருண் & ரமேஷ்..,
Blogger-ன்னா ஆயிரம் பிரச்சினை..,
எனக்கு மட்டும் ஆயிரத்தி ரெண்டு..!!
அட..,
நான் இவிங்கள சொல்லலைன்னு
சொன்னாலும்..
நீங்கல்லாம் நம்பவா போறீங்க..!!
//Blogger-ன்னா ஆயிரம் பிரச்சினை..,
எனக்கு மட்டும் ஆயிரத்தி ரெண்டு..//
அதுல ஒன்னு உங்க கம்ப்யூட்டரும் உங்க chairக்கும் நடுவுல இருக்கு..
அழகிரி அண்ணனுக்கும்,சேலத்து சிங்கத்துக்கும்,இந்த பதிவ forward பண்ணிடலாம் இல்ல!!!
நல்லா எழுதுரீங்க சார்.
செம்மொழி மாநாடால எம்புண்ணுக்கு ரொம்ப சந்தோசம் சார், நம்ம டிவி பக்கம் போகததால, அவங்க தொதரவு இல்லாம, சுட்டி டிவி, போகோ பார்த்திட்டு சந்தோசமா இருக்காங்க.
எல்லா விசயமும் நல்லா இருக்குங்க.
@ தேவா.,
// அழகிரி அண்ணனுக்கும்,சேலத்து சிங்கத்துக்கும், இந்த பதிவ forward பண்ணிடலாம் இல்ல!!! //
தாராளமா..
யாருக்கு புரியுதோ இல்லையோ
அழகிரி அண்ணனுக்கு நல்லா புரியும்
நம்ம பதிவில இருக்கிற நியாயம்..
English, ஹிந்தி தெரிஞ்ச தயாநிதி மாறன்,
தமிழ் மட்டும் தெரிஞ்ச அழகிரி அண்ணன்,
ரெண்டு பேருமே Cabinet Ministers தான்..
ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி
தான் மரியாதைதான் கிடைக்குதா டெல்லியில..??
ஸோ, நான் என்ன சொல்ல வர்றேன்னா, முடிஞ்ச வரைக்கும் பிழையில்லாமல் பேசுவோம்///
i already told you venkat , thats why தான் foreing ledies கூடெல்லாம் பழக்கம் வைக்க கூடாது , பாரு நம்மள போயி "டமில்" பெசசொல்லுது
கலக்கிட்டீங்க
தலைவா நான் கழக கண்மணியோ ரத்தத்தின் ரத்தமோ இல்ல.சும்மா தமாசுக்கு கமெண்ட் போட்டேன் .நீங்க டென்ஷன் ஆகாதிங்க !!!
நீங்க இதேமாதிரி போட்டு தாக்குங்க!!நாங்க நல்ல உசுப்பேத்தி உடுவோம்!
//btw, form-க்கு தமிழ் வார்த்தை விண்ணப்பம் தானே.. இல்ல, அது applicationனோட தமிழ் வார்த்தையா???//
form = படிவம் (தலைவி கேட்டுட்டா சொல்லாம விடலாமா?)
நான் கூட படிக்க ஆரம்பிச்ச உடனே இந்த மாதிரி ஏதாவதோன்னு நினைச்சேன்...
யதார்த்தம்தான் பாஸ் :)
தானே எழுதி, தானே அடிவாங்கும் தானை தலைவன் "வெங்கட்" வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.
குறிப்பு : தொண்டர்கள் யாரும் இல்லை.
நாங்களும் vks தொண்டர் அவ துடிகிரவங்க.
நல்ல பதிவு... ஓட்டம் சரியாக இருந்தது...
@Anonymous
வாங்க வாங்க.. VKS உங்களை அன்புடன் வரவேற்கிறது.. அப்படியே ஊரு பேரு எல்லாம் சொன்னா, உங்க அக்கவுண்ட்ல காசு போட வசதியா இருக்கும் :-P
(ஆனா, கமெண்ட்ட பாத்தா VKSல சேர வந்தா மாதிரி தெரியலயே.. ஒரு வேளை இதுவும் வெங்கட்டோட சதி வேலைகளில் ஒன்றா??)
@பெ.சொ.வி
உங்களை மாதிரி ஒருத்தர் இருக்குறது நம்ம சங்கத்துக்கு பெருமை..
by the way, நீங்க திருவள்ளுவர் வீட்டுக்கு பக்கத்து வீடா??
//அப்படியே " ஊருக்கு உபதேசம்னு "
யாராவது ஒரு Company ஆரம்பிச்சா
நல்லா இருக்கும்..!!//
கலக்கல் வரிகள்
veetuku veedu looty..mm enga veetlayum idhe kuthuthan..
indha cinema company payar ithuvarai ennaku thonave illai super kalakitenga..
enga kudumbham sarbhula ungalukku oru oooooooooooooooooooo
Post a Comment