சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 June 2010

தில்லாலங்கடி..!!
எங்க காலேஜ்
Speech Competition-க்கு நான்
Prepare பண்ணிட்டு இருந்தேன்..

அப்போ எங்க Class பசங்க
என்னை ரவுண்ட் பண்ணிட்டாங்க..

" மேடைக்கு போனோமா..,
Topic-ஐ பேசினோமான்னு
இருக்கணும்.., அதை விட்டுட்டு
Prize வாங்கறதுக்காக
உன் தில்லாலங்கடி வேலைய
அங்கே போயும் காட்டினே..
பிச்சிபுடுவோம் பிச்சி..!! "

ஏன் இந்த கொலைவெறி..?

ஏன்னா எல்லோரும் வணக்கம்
சொல்லிட்டு தான் Matter-ஐ
ஆரம்பிப்பாங்க..

நான் தான் வணக்கத்திலயே
Matter வெச்சி இருப்பேனனே..!!

ஹா., ஹா.., ஹா.. ( வில்லன் சிரிப்பு )
இந்த மிரட்டலுக்கு எல்லாமா
நான் பயப்படுவேன்..

ஊதி அணைக்கறதுக்கு
நான் ஒண்ணும் தீக்குச்சியில்ல - " எரிமலை "

அன்னிக்கு நான் மேடையில
இப்படிதான் பேச ஆரம்பிச்சேன்...

இங்கே Super Star போல் உட்கார்ந்து
இருக்கும் Chief Guest அவர்களே..!!

இந்தியாவின் ஜனாதிபதியாககூட
வர தகுதி உடைய Principal Sir அவர்களே...!!

Computer புயல்., இந்தியாவின் Bill Gates
எங்கள் தங்கம் H.O.D Sir அவர்களே..!!

Windows என்ன ஜுஜுபி.,
அதை விட சிறப்பான Doors-சே
Develop செய்யும் திறமைமிக்க ஆசிரியர்களே...!!

மற்றும்

என் ரசிகர்களே..,
என் ரத்தத்தின் ரத்தங்களே..!!

நீதி : யார் என்ன சொன்னா என்ன..?!
நமக்கு எப்பவும் Target தான் முக்கியம்..
அதை அடையறதுக்கு இப்படி தில்லாலங்கடி
வேலை பண்ணுறது தப்பே இல்ல...

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( அருண் பிரசாத் )
" கோகுலத்தில் சூரியன்னு "
ஏன் ப்ளாக் பெயர் வெச்சிருக்கீங்க..?
குமுதத்தில் நிலா.,
ஆனந்த விகடனில் நட்சத்திரம்.,
நக்கீரனில் செவ்வாய் கிரகம்னு வெச்சிருக்கலாம்ல.?

ஏன் இந்த குங்குமம்., கல்கண்டு.,
ஜூனியர் விகடன், கிரைம் நாவல்
இதையெல்லாம் விட்டுட்டீங்க..?

கோகுல் & சூர்யா ரெண்டும்
என் பசங்க பேரு..

இன்று ஒரு தகவல் :
---------------------

Stage-ல யார் வேணா பேசலாம் - ஆனா..,
Coma Stage-ல யாருமே பேச முடியாது..!!
.
.

31 Comments:

Chitra said...

Stage-ல யார் வேணா பேசலாம் - ஆனா..,
Coma Stage-ல யாருமே பேச முடியாது..!!


....... நீங்க கோமா stage ல கூட வணக்கம் சொல்ற ஆளாச்சே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//....... நீங்க கோமா stage ல கூட வணக்கம் சொல்ற ஆளாச்சே!//

மாத்தி சொல்லிட்டாங்க.....நீங்க வணக்கம் சொல்ற ஸ்டைல்ல எதிராளி தான் கோமா ஸ்டேஜுக்குப் போவான்! எப்புடீ?

தர்மா said...

//அப்போ எங்க Class பசங்க
என்னை ரவுண்ட் பண்ணிட்டாங்க.//

அடிக்காம விட்டாங்களே...


//கோகுல் & சூர்யா ரெண்டும்
என் பசங்க பேரு..//

நல்லவேல... உங்களுக்கு ஐந்து ஆறு பசங்க இருந்தா, உங்க ப்ளாக் பேரு ரொம்ப பெருசா இருந்திருக்கும்...

அருண் பிரசாத் said...

FARMVILLE - FRIEND REQUEST கேட்டிருக்கும் வெங்கட் அவர்களே நம்ம பதிவ கொஞ்சம் பாருங்க

http://arunprasathgs.blogspot.com/2010/06/blog-post_10.html

அருண் பிரசாத் said...

CHIEF GUEST , பிரின்சிபால், HOD , எல்லோருக்கும் அடைமொழி கொடுத்துவிட்டு ரசிகர்களான எங்களுக்கு எந்த அடை மொழியும் கொடுக்காத வெங்கட்டை வன்மையாக கண்டிக்கிறோம்

கவிதா said...

இப்பதான் புரியுது நீங்க எவ்வளவு
பெரிய தில்லாலங்கடினு,

இன்னைக்கு உங்க பதிவு அருமை!!
அட்டகாசம்!!!!!!!!!!

ஜெய்லானி said...

//Stage-ல யார் வேணா பேசலாம் - ஆனா..,
Coma Stage-ல யாருமே பேச முடியாது..!//

ஆத்தாடி!! எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்...!!!

Anonymous said...

நீங்க கோமா stage ல கூட வணக்கம் சொல்ற ஆளாச்சே!

மாத்தி சொல்லிட்டாங்க.....நீங்க வணக்கம் சொல்ற ஸ்டைல்ல எதிராளி தான் கோமா ஸ்டேஜுக்குப் போவான்! எப்புடீ?

நல்லவேல... உங்களுக்கு ஐந்து ஆறு பசங்க இருந்தா, உங்க ப்ளாக் பேரு ரொம்ப பெருசா இருந்திருக்கும்...


எப்பாடி என்னாமா யோசிக்கிறாங்க....ஸ்மார்ட்... நல்ல ரசிக்கும்படியா கமண்ட் போடுறாங்கப்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" கோகுலத்தில் சூரியன்னு " ஏன்
ப்ளாக் பெயர் வெசிருக்கிங்க..?
குமுதத்தில் நிலா,
ஆனந்த விகடனில் நட்சத்திரம்,
நக்கீரனில் செவ்வாய் கிரகம்னு வெச்சிருக்கலாம்ல.?
//

நான் இத பதிவர்களின் நேர்முகத்தேர்வு என்கிற என்னுடைய பதிவுலையே சொல்லிட்டனே. யாருப்பா அது காப்பி அடிக்கிறது. வெங்கட் ப்ளாக் வந்ததும் அந்த கெட்ட பழக்கம் வந்துடுச்சோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Stage-ல யார் வேணா பேசலாம் - ஆனா..,
Coma Stage-ல யாருமே பேச முடியாது..!!
//

Coma ங்கிறவர் யாருங்க நான் ஏன் அவரோட Stage-ல போய் பேசணும்?

அக்பர் said...

அய்யா! முடியலையா!! :)

கோகுல் சூர்யாவை நலம் விசாரித்ததாக சொல்லவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Stage-ல யார் வேணா பேசலாம் - ஆனா..,
Coma Stage-ல யாருமே பேச முடியாது..!!
//
டாக்டர்: Coma Stage-வர்றத்துக்கு மூணு காரணம்:
1 ) மூளைக்கு ரத்தம் சரியா போகாமல் இருக்கும்
2 ) மூளை இயங்காமல் இருக்கும்
3 ) வெங்கட் ப்ளாக் படிக்கிரவங்களா இருக்கும்

ஏன் அப்படி?

டாக்டர்: வெங்கட் ப்ளாக் படிச்ச மூளை செயலிழக்க ஆரமிச்சிடும்.

Keerthi Kumar said...

//Coma Stage-ல யாருமே பேச முடியாது..!! //

அவங்கள பார்க்க வந்தவங்க கூடவா பேச முடியாது?

Anyway... நல்ல பஞ்ச்.

//Windows என்ன ஜுஜுபி.,
அதை விட சிறப்பான Doors-சே
Develop செய்யும் திறமைமிக்க ஆசிரியர்களே...!!//

Himalayan ICE!

ரசிகன் said...

Wow... There is no surprise that u grabbed lots of prices during your study days, After these kind of intro's, What ever matter(if any) u spoke after that... Awaiting to hear ur finishing punches too in some other blogs later.. (ippovae vendaam... U already exhausted your quota.தெளிய வெச்சி, தெளிய வெச்சி அடிக்கலாம் ). The Picture too is opt to the matter... I liked it.. :-)

அனு said...

//இங்கே Super Star போல் உட்கார்ந்து
இருக்கும் Chief Guest அவர்களே..!//

Make up போடாத சூப்பர் ஸ்டார தானே சொன்னீங்க???

//இந்தியாவின் ஜனாதிபதியாககூட
வர தகுதி உடைய Principal Sir அவர்களே...!!//

இந்தியா-ல ஜனாதிபதிக்கு எவ்வளவு பவர்-னு எல்லோருக்கும் தெரியும்.. இதுக்கு மேல சொன்னா எனக்கு தான் ரிஸ்க்.. அதனால...

//Computer புயல்., இந்தியாவின் Bill Gates எங்கள் தங்கம் H.O.D Sir அவர்களே..!!//

ஸோ, இவரால ஒன்னையும் ஆக்க முடியாது.. அழிக்க தான் முடியும்னு சொல்ல வர்றீங்க??

//Windows என்ன ஜுஜுபி.,
அதை விட சிறப்பான Doors-சே
Develop
செய்யும் திறமைமிக்க ஆசிரியர்களே...!!//

என்னாது??? public-கா உங்க ஆசிரியர்கள carpenter-னு சொன்னீங்களா??
-------------------------------
இதெல்லாம் டூ மச்-ங்க.. எல்லோரையும் இப்படி பப்ளிக்கா டேமேஜ் பண்ணின அப்புறமும் உங்களை அந்த காலேஜ்-ல படிக்க விட்டாங்களா?? ஆச்சரியம் தான்...


//என் ரசிகர்களே..,
என் ரத்தத்தின் ரத்தங்களே..!!//

இதுக்கு மட்டும் எனக்கு அர்த்தம் நல்லாவே தெரியும்ங்க.. மொக்கை-ன்ற பேருல எத்தனை பேர கடிச்சிருப்பீங்க.. அதோட effect தானே இது???

அனு said...

@தர்மா

// உங்களுக்கு ஐந்து ஆறு பசங்க இருந்தா, உங்க ப்ளாக் பேரு ரொம்ப பெருசா இருந்திருக்கும்..//

இது எனக்கு பிடிச்சிருக்கு

@அருண் பிரசாத்

உங்க போஸ்ட் பார்த்தேன்..
அதை ஏன் கேக்குறீங்க.. farmvilleவால வீட்டுல நடக்கிற கூத்து எல்லாம் சொல்லனும்னா ஒரு புக்-கே பொடனும்.. :(

@ரமெஷ்

full formல இருக்குறீங்க பொல இருக்கு?? சீக்கிரமே கடி ஜோக் specialist ஆகிடுவீங்க .. உங்க பதிவுல கலக்கி இருக்கீங்க..

@ரசிகன்

தொர இங்க்லீஸ் எல்லாம் பேசுது...

வெங்கட் said...

naan veliyoorla irukken. so i will reply after 4pm.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//full formல இருக்குறீங்க பொல இருக்கு?? சீக்கிரமே கடி ஜோக் specialist ஆகிடுவீங்க .. உங்க பதிவுல கலக்கி இருக்கீங்க..//

நன்றி அனு

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க வணக்கம் சொல்ற ஸ்டைல்ல
எதிராளி தான் கோமா ஸ்டேஜுக்குப்
போவான்..! //

எல்லோரும் வணக்கம் சொன்னவுடனே
கோமா ஸ்டேஜுக்கு போயிட்டா.,
Speech-ஐ யார் கேக்குறது..?
பரிசு யார்கிட்ட வாங்கறது..?

வெங்கட் said...

@ தர்மா..,

// உங்களுக்கு ஐந்து ஆறு பசங்க இருந்தா,
உங்க ப்ளாக் பேரு ரொம்ப பெருசா இருந்திருக்கும்... //

அஞ்சு ஆறு பசங்க இருந்தா நான்
ஏன் Blog ஆரம்பிக்க போறேன்..?!
அவங்கள மேய்க்கவே நேரம்
சரியா இருக்குமே..!!!

வெங்கட் said...

@ அருண்..,

// FARMVILLE - FRIEND REQUEST கேட்டிருக்கும்
வெங்கட் அவர்களே நம்ம பதிவ கொஞ்சம் பாருங்க.. //

சரி ராயல்டி எப்ப தருவீங்க...?

// ரசிகர்களான எங்களுக்கு எந்த
அடை மொழியும் கொடுக்காத //

நல்லா பாருங்க..
எழுதும் போது தான்
தப்பு தப்பா எழுதறீங்கன்னா..
படிக்கும் போது கூடவா..?

" ரத்தத்தின் ரத்தங்களே..! "

வெங்கட் said...

@ கவிதா..,

// இப்பதான் புரியுது நீங்க எவ்வளவு
பெரிய தில்லாலங்கடினு.. //

வெறும் " வணக்கம் " சொன்னதுக்கே
பெரிய தில்லாலங்கடின்னு ஒத்துகிட்டீங்களே..
அப்ப நான் Speech-ல பேசினதையும்
எழுதினா நீங்கல்லாம் என்ன சொல்லுவீங்க..??

வெங்கட் said...

@ அனு.,

//Computer புயல்., இந்தியாவின் Bill Gates,
எங்கள் தங்கம் H.O.D Sir அவர்களே..!!//

// So., இவரால ஒன்னையும் ஆக்க முடியாது..
அழிக்க தான் முடியும்னு சொல்ல வர்றீங்க..?? //


இதை தான்
தில்லாலங்கடிக்கு தில்லாலங்கடின்னு
சொல்வாங்க..

நல்லவேளை நான் சொன்னதை
மேடையில இருந்தவங்க யாரும்
இப்படி அர்த்தம் பண்ணிக்கலை..

பின்னியிருப்பாங்க..
I like ur Comment..

ஆங்.. அதே மாதிரி நான் Training
குடுத்த மாதிரியே எல்லோருக்கும்
Reply பண்ணிட்டீங்க..
Keep it up..

வெங்கட் said...

@ கீர்த்தி..,

// Himalayan ICE..! //

ஐஸ் வெக்கிறதை பத்தி
நான் ஒரு Research பண்ணிட்டு
இருக்கேன்..
இன்னும் கொஞ்ச நாள்ல
அதை பத்தி ஒரு Report
Submit பண்றேன்.. பாருங்க..

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// டாக்டர்: Coma Stage-வர்றத்துக்கு மூணு காரணம்:
3 ) வெங்கட் ப்ளாக் படிக்கிரவங்களா இருக்கும் //

நாலாவதா ஒரு காரணமும் இருக்கு..
ஆனா அதை நான் சொல்ல மாட்டேன்..
நான் என்ன சொல்ல போறேன்னு
எல்லோருக்கும் தெரியும்..

இந்த எச்சரிக்கையையும் மீறி
அங்கே போனீங்கன்னா...
அப்புறம்..,

ஸாதிகா said...

இப்ப தான் உங்கள் வலைப்பு கண்ணில் பட்டது.அசந்து போய் விட்டேன்.அது சரி அந்த காலத்தில் மாதிரி ஒரு அரை டசனுக்கு குறையாமல் குழந்தைகள் பெற்று இருந்தால் பிளாக்குக்கு என்ன பெயர் வச்சி இருப்பீங்க?

வெங்கட் said...

@ ஸாதிகா..,

// இப்ப தான் உங்கள் வலைப்பு
கண்ணில் பட்டது. //

என் Blog எப்பவும் கண்ணுல
படாதுங்க.. மனசுல தான் படும்..
ஹா., ஹா.., ஹா...!!

// ஒரு அரை டசனுக்கு குறையாமல்
குழந்தைகள் பெற்று இருந்தால்
பிளாக்குக்கு என்ன பெயர் வச்சி இருப்பீங்க? //

ஆறாவது அறிவுன்னு பெயர்
வெச்சி இருப்பேன்..
ஏழுன்னா - ஏழாவது அறிவு..
Very Simple..

மீனாமுத்து said...

யப்பா...! எவ்ளோ அறிவு !!!

(வழக்கம்போல மிக ரசித்தேன்!)

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

பேச்சுக்கலை சிறந்த கலை - கேட்பவர்களை மயக்க வசதி உண்டு
அதில் சிறந்தவனாக வாழ வாழ்த்துகள்
நட்புடன் சீனா

தனுசுராசி said...

என்னது உங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்குராங்களா... ?

ஹையோ... நான் அப்புடியே நம்பிட்டேன் தெரியுமா ?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு.. ஐஸ் வந்தாலும் வைத்தீங்க பெரிய ஐஸ்ஸால்ல வைச்சிருக்கீங்க... தொடரட்டும். நல்லாவே யோசிக்கிறீங்க..எப்படி இதல்லாம்