சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 June 2010

கிளி பேச்சு கேட்கவா..!!?























அது ஒரு ஏல கம்பெனி..,

அன்னிக்கு ஏலம் ஒரு
அழகான கிளி..

இந்த கிளி பேசும்., பாடும்.,
புத்திசாலி கிளின்னு வேற
எழுதி வெச்சிருந்தாங்க..

அதை பார்த்த ஒருத்தனுக்கு
ஆசை வந்துடுச்சி..

எவ்ளோ செலவானாலும் சரி
இந்த கிளியை வாங்கிடணும்னு
முடிவு பண்ணி ஏலத்துல
கலந்துக்கறான்..

ஆனா ஏலத்துல பயங்கர போட்டி.,

இவன் எவ்வளவுக்கு கேட்டாலும்
அதைவிட அதிகமா ஏலம்
கேட்டுட்டே இருக்காங்க..

இவனும் விடறதா இல்ல..
நூறு ரூபாய்க்கு ஆரம்பிச்ச ஏலம்
10,000 ரூபாய்க்கு வந்து முடிஞ்சது..

இவன் ஜெயிச்சி கிளியை
கையில வாங்கிடறான்..

ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தேகம்.,
கடைக்காரன்கிட்ட கேட்கறான்..

" ரொம்ப அதிக விலை கொடுத்து
இந்த கிளியை வாங்கிட்டேன்..
இது பேசுமா..? "

அப்ப அந்த கிளி சொல்லுது..

" ஏய்.. லூசு..!! இவ்ளோ நேரம்
உனக்கு போட்டியா ஏலம் கேட்டது
யார்னு நினைச்சே..? "

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

(ரமேஷ்)
மூட்டைப்பூச்சி எத்தனை கிலோ
மூட்டை தூக்கும்..?

வரிக்குதிரை எவ்ளோ வரி
கட்டுமோ அவ்ளோ..

இன்று ஒரு தகவல் :
---------------------

நாம நிதானமா வருத்தப்படறதெல்லாம்
அவசரத்துல எடுத்த முடிவுக்காதான்
இருக்கும்..!!
.
.

30 Comments:

பெசொவி said...

ஒரே வரியில் சொல்லனும்னா : கலக்ஸ்!

dheva said...

Hello thambi.. kalakkala irukkupa !
Vaazthukkal!

கவிதா said...

ரொம்ப நல்லாயிருக்கு,
இதேயே மெயிண்டைன்
பண்ணுங்க

Chitra said...

நாம நிதானமா வருத்தப்படறதெல்லாம்
அவசரத்துல எடுத்த முடிவுக்காதான்
இருக்கும்..!!

..... true. :-)

அனு said...

ஒரு கிளிக்கு பத்தாயிரம் குடுத்தீங்களா??

------------------------------
ஹிஹி.. follow up-க்காக இந்த கமெண்ட்...

பெசொவி said...

//நாம நிதானமா வருத்தப்படறதெல்லாம்
அவசரத்துல எடுத்த முடிவுக்காதான்
இருக்கும்..!!//

இந்த தத்துவத்துக்கும் போன பதிவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா?
(சாரி, நோ உள்குத்து)

Anonymous said...

நாம நிதானமா வருத்தப்படறதெல்லாம்
அவசரத்துல எடுத்த முடிவுக்காதான்
இருக்கும்..!!


---- its true

Anonymous said...

hai Mr.Venkat,

am used to read your blogs, nice work - jayanthi

பருப்பு (a) Phantom Mohan said...

வெறித்தனமான பதில் "வரிக்குதிரை". முடியல!

அருண் பிரசாத் said...

முடிவா என்ன சொல்ல வரிங்க? கிளி பேச்ச கேட்கலாமா? வேண்டாமா?

இதில் இறுதியா யார் ஜெயிச்சது?
தன்னை பெரிய தொகைக்கு விற்று கொண்ட கிளியா?
திறமையான பேசும் கிளியை வாங்கிய அந்த மனிதனா?
திறமையாக விற்ற ஏலக்காரனா?

(ரொம்ப யோசிகிறனோ? அடுதடுத்து சீரீயஸ் பதிவை படித்ததன் விளைவு இது)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வரிக்குதிரை எவ்ளோ வரி கட்டுமோ அவ்ளோ..//

முதல்ல வரிக்குதிரையோட டாக்ஸ் லிமிட் என்ன, எவ்ளோ இன்சூரன்ஸ் போட்டிருந்ததுன்னு சொல்லுங்க. அப்புறம் நான் கணக்கு பாத்துக்கிறேன்

அருண் பிரசாத் said...

ஏன் ரமெஷ், அப்புறம் அவர் மூட்டை பூச்சி எவ்வளவு கிலோனு சொல்லுங்க நான் எத்தனை கிலோ மூட்டை தூக்கும்னு சொல்லுறன்னு சொல்லுவாரு.

(நமக்கு நாமே சூனியம் வச்சிகலாமா?)
@வெங்கட்
நீங்க வேற பதில் சொல்லியே ஆகனும்

அனு said...

வெங்கட் கிளி-ய வாங்கிட்டு போன அடுத்த நாள், கிளி பேசுறத நிறுத்திடுச்சு..

வெங்கட்-க்கு டென்ஷன்.. பத்தாயிரமாச்சே!!! உடனே டாக்டர் கிட்ட போய் கேட்கிறார்..

டாக்டர் 'புது இடம் இல்லயா..அதான் பேசல போல இருக்குது.. ஏதாவது விளையாட்டு சாமான் வாங்கி குடுங்க"-ன்னு சொல்றார்..

வெங்கட்-டும் வாங்கி குடுக்கிறார்.. அப்பவும் கிளி பேசல...

(to be continued...)

அனு said...

Next Day...

வெங்கட் in டென்ஷன் + சோகம்..

ஒரு சின்ன மணிய அந்த கிளி கழுத்துல கட்டி விடுறார்.. அந்த கிளியோட தலைய அப்படி இப்படி ஆட்டிவிடுறார் (அப்போ தான் அந்த sound கேட்டு கிளி சந்தோஷ படுமாம்)

கிளி, 'இன்னும் எனக்கு எவ்வளவு டார்ச்சர் தான் குடுக்குறதா ஐடியா?", அப்படின்ற மாதிரி சோர்வா ஒரு லுக் விட்டுச்சு..

அப்பவும் கிளி ஒன்னும் பேசல..

(to be continued...)

அனு said...

Next day...

சரி, விளையாட்டு பொருட்கள் தான் பிடிக்கலன்னு ஒரு அழகான ஊஞ்சல் வாங்கி அந்த கிளியை உக்கார வச்சு தள்ளி விட்டு வேடிக்கை காட்டுறார்..

கிளி-க்கு கிறுகிறு-ன்னு வந்துடுச்சு.. வெங்கட்-ட ஒரு லுக் விட்டுட்டு தலைய திருப்பிகிச்சு..

கிளி இன்னும் பேசல...

(to be continued...)

அனு said...

Next Day...

ஒரு வேளை கிளி-க்கு தனியா இருக்க bore அடிக்குதோ-ன்னு ஒரு கண்ணாடி வாங்கி கிளிக்கு எதிர்புறத்தில வைக்கிறார்.. (கிளி-யோட பிம்பத்த பாத்து ஏமாந்திடுமாம்.. இன்னொரு பத்தாயிரம் குடுத்து கிளி வாங்கிற ரிஸ்க் எடுக்க தைரியம் இல்ல..)

கிளி கண்ணாடியில் இருந்த இன்னொரு கிளிய பாத்து பாவமான லுக் விட்டுச்சு.. ஆனா ஒன்னும் பேசல..

(to be continued...)

அனு said...

Next Day...

கிளி நாளுக்கு நாள் சோர்வாகிட்டே போகுதே feel பண்ணி கிளி-க்குன்னு தனியா ஒரு சேர் (chair) வாங்கி குடுக்கிறார் வெங்கட்..

பாதி மயங்கிய நிலையில் இருந்த கிளிய தூக்கி சேர்-ல வைக்கிறார்.. கஷ்டப்பட்டு கண்ணை திறந்து வெங்கட்-டைப் பார்த்து கிளி ஒரே ஒரு லைன் பேசிட்டு மயக்கமாகிடுச்சு..

"எனக்கு சேர் போடனும்னு தோணிச்சே, சோறு போடனும்னு தோணிச்சா??" !!!

டொய்ங்க்.....

THE END

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இந்த தத்துவத்துக்கும் போன
பதிவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா?
(சாரி, நோ உள்குத்து) //

ஏங்க இப்படி..?

சரியாவே யோசிக்க மாட்டேன்னு
குலதெய்வத்துக்கு சத்தியம் எதாவது
பண்ணிட்டீங்களா..??

இந்த தத்துவம் இந்த பதிவுக்கு
சம்பந்தப்பட்டதுங்க..

வெங்கட் said...

@ கவிதா.,

// ரொம்ப நல்லாயிருக்கு,
இதேயே மெயிண்டைன்
பண்ணுங்க.. //

ஹி., ஹி., ஹி..!
என் லெவலுக்கு இது தான்
Correct-ன்னு சொல்றீங்க..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// முதல்ல வரிக்குதிரையோட டாக்ஸ் லிமிட் என்ன, எவ்ளோ இன்சூரன்ஸ் போட்டிருந்ததுன்னு சொல்லுங்க. அப்புறம் நான் கணக்கு பாத்துக்கிறேன் //

மூட்டைப்பூச்சி எவ்ளோ மூட்டை
தூக்குமோ அவ்ளோ..

A = B..
அப்ப B = A
இது கூட தெரியாதா..?

வெங்கட் said...

@ அருண்..,

// நமக்கு நாமே சூனியம் வச்சிகலாமா..? //

இதுக்கு முதல்ல எனக்கு விளக்கம்
தெரிஞ்சாகணும்..

சூன்யம் = 0 ( Zero )
வெறும் Zero-க்கு Value இல்ல..
அப்ப ஒண்ணுமில்லாததை
நீங்க ஏன் வெச்சுக்கணும்..?

வெங்கட் said...

@ அனு.,

// "எனக்கு சேர் போடனும்னு தோணிச்சே,
சோறு போடனும்னு தோணிச்சா??" !!! //

நான் கிளியை வாங்கிட்டு
வீட்டு போனவுடனே..

நான் : ஏய் கிளி.., உனக்கு ஏதாவது
பேரு இருக்கா..?

கிளி : இல்ல.. நீயே ஒரு நல்ல பேரா வை..

நான் : " அனு " இது எப்படி இருக்கு..?

கிளி : நான் ஒரு புத்திசாலின்னு தெரிஞ்சும்
இந்த பேர் வெக்கறியே.. நியாயமா..?

நான் : " அனு "- ங்கிற பெயர்ல புத்திசாலிகளும்
இருக்காங்கன்னு இந்த உலகம் தெரிஞ்சிக்க
வேணாமா.. அதுக்கு தான்..

கிளி : அப்படியா..? சரி அந்த பக்கத்து
வீட்டு நாய் பேரு என்ன..?

நான் : " டைகர் "..

கிளி : ஏய் டைகர்..! இவனை பிடிச்சி கடி..!!

ஆஹா " அனு " -ன்னு பேரு வெச்சதுக்கே
இந்த கிளிக்கு என் மேல கொலை வெறி
வந்துடுச்சே..!!

இப்ப தெரியுதா நான் ஏன் அந்த கிளிக்கு
சோறு வைக்கலைன்னு...

கவிதா said...

@வெங்கட்
உங்க கிளி பேச்சை கேட்டதை விட,
அனுவோட கிளி "எனக்கு சேர் போடனும்னு
தோணிச்சே, சோறு போடனும்னு தோணிச்சா??"
சூப்பர்!!!!!!! ஐ லைக் வெரிமச்

கவிதா said...

ஆமா உண்மை சொன்னா ஏதேனும்
கோவிச்சுக்குவிங்களா?????


(ஒரு சந்தேகம் அவ்வளவுதான்)

அருண் பிரசாத் said...

வெங்கட்,
சூன்யம் = மாந்திரீகம், பில்லி சூன்யம்
ZERO = சுழியம்

so உங்க Logic தப்பு.

நல்ல வேளை உங்க பெயரை கிளிக்கு வைக்க Try செய்யலை, செய்திருந்த கிளி _______ ஆக மாறி இருக்கும். (________ - நான் எதையும் குறிப்பிடவில்லை, அவர் அவர்களுக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்ளலாம்)

வெங்கட் said...

@ அருண்..,

// சூன்யம் = மாந்திரீகம், பில்லி சூன்யம்
ZERO = சுழியம் //

ஆ.. அப்படியா..??
அப்ப ஏன் Wikipedia-ல இப்படி போட்டு இருக்கு..?!!

" Zero என்பதற்கு நேராக சுழி என்னும் சொல்லை ஆள்வது நல்லது.
பூஜ்யம், சூன்யம் என்பனவற்றை விட சுழி என்பது நல்ல தமிழ்.
எனினும் சூனியம் என்பது தமிழ் முறைக்கு ஒத்ததாக இருக்கு.. "

நீங்க எதுக்கும் அங்கே ஒரு எட்டு போயி
உங்க தமிழ் அறிவை ஒரு Sample காட்டிட்டு வாங்க..

வெங்கட் said...

@ கவிதா..,

// ஆமா உண்மை சொன்னா ஏதேனும்
கோவிச்சுக்குவிங்களா..????? //

நான் ஏங்க கோவிச்சுக்க போறேன்..??!!
இந்த அராஜகம் தான் நான் Blog
ஆரம்பிச்சப்ப இருந்தே நடக்குதே,,
( நற நற..)

ரசிகன் said...

ஒரே ஒரு சந்தேகம்..
அந்த கிளிக்கு தமிழிஷ்ல லாகின் பண்ணி
ஓட்டுப் போட கத்து குடுத்திட்டீங்க போல..?
ஓட்டு எண்ணிக்கை எகிறிட்டிருக்கு...!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

அதான் எனக்கும் புரியல..
நம்ம Friends எப்படி மனசு வந்து
இத்தனை Vote போட்டாங்க..?

அப்ப அந்த கிளி சொல்லிச்சி..

" ஏய் லூசு.., Vote போட்டது
உன் Friends இல்ல என் Friends.. !! "

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

கலக்கல்ஸ் - வெங்கட் லூசுன்னு அதுக்குக் கூட தெரிஞ்சிருக்கே - ஆமா மூட்டைப்பூச்சி வரிக்குதிர சூப்பர்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா