சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 June 2010

ஸ்கூல்னாலே டென்ஷன்தானா..?!?
























அது எங்க வீட்டுக்கு
பக்கத்தில இருக்கிற ஸ்கூல்..,

என் சின்ன பையனை
Pre KG-ல Admission பண்ண
அங்கே போயிருந்தேன்.

அங்கே Admission பண்ணிட்டு
இருந்த Madam என்னை
கொஞ்சம் Wait பண்ணுங்கன்னு
சொன்னாங்க.

( ஒருவேளை நம்ம Blog பத்தி
பாராட்டறதுக்கா இருக்குமோ..!! )

ஒரு மணிநேரம் ஆச்சு..
எனக்கு பின்னாடி வந்தவங்க
எல்லாம் Admission பண்ணிட்டு
போறாங்க.. ஆனா என்னை
கூப்பிடற மாதிரி தெரியல.,

அப்புறம் நானே போயி..

" Madam என்ன Problem..? "

" உங்க Family-ல எல்லாரும்
குழந்தைகளை இங்கே LKG
வரைக்கும் தான் படிக்க வெக்கறீங்க..
அப்புறம் வேற School மாத்திடறீங்க..! "

" ஆமா.. அதனால என்ன..? "

" அதனால ஆயிரம் ரூபா Donation
குடுங்க அப்பதான் உங்களுக்கு
சீட் தருவோம்னு.." சொல்லிட்டாங்க..

எனக்கும் அந்த Madam-க்கும்
பெரிய Arguement நடந்தது..

நானும் Donation தர மாதிரி இல்ல.
அவங்களும் சீட் தர மாதிரி இல்ல..

Donation கேட்டது தப்பில்ல..,
ஆனா அதுக்கு அவங்க
சொன்ன காரணமும்,
கேட்ட விதமும் தான் தப்பு.

எனக்கு சரியான கோவம்..

கோகுலத்தில சூரியன்
Blog Owner-க்கே இந்த
நிலைமைன்னா..?!!
அப்பாவி ஜனங்க எல்லாம்
என்ன பாடு படுவாங்க..??

இந்த பிரச்சினைய
இப்படியே விடக்கூடாது..

நேரா Principal ரூமுக்கு
போனேன்..

அவர் நல்ல மனுஷன்..
இந்த பிரச்சினைய கேட்டு
அவர் டென்ஷன் ஆயிட்டாரு..

உடனே அந்த Madam-க்கு
போன் பண்ணி சீட் குடுக்க
சொல்லிட்டாரு...

என்கிட்ட திரும்பி...
" நீங்க ஒண்ணும் மனசுல
வெச்சுக்காதீங்க சார்.. உங்க
Son-ஐ Special-ஆ கவனிக்க
சொல்றேன்..!! " சொன்னார்

நானும் சந்தோஷமா Admission
பண்ணிட்டு வெளிய வந்தேன்..

அங்கே Admission-க்கு
என் Friend நின்னு இருந்தான்..

ஆஹா நம்ம வெற்றியை
கொண்டாட ஒரு ஆள் சிக்கிட்டான்ல..

அவன்கிட்ட எல்லாத்தையும்
சொன்னேன்.. கேட்டுகிட்டான்..
அப்புறம்..

Friend : உன்கிட்ட ரவுசு பண்ணின
அந்த மேடம் யார் தெரியுமா..?

நான் : தெரியாதே..

Friend : அவங்கதான் Principal சாரேட Wife..

நான் : ஆ...! அட கடவுளே..!!
என் பையனை வேற
Special-ஆ கவனிப்பாங்கன்னு
Principal சொன்னாரே..!!

நிஜமாலுமே " Special-ஆ "
கவனிச்சிடுவாங்களோ..?!

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கவிதா )
உங்க Answer Paper-ல கூட 3 புள்ளி,
3 கேள்விக்குறி, 4 ஆச்சரியக்குறி
எல்லாம் போட்டு தான் எழுதுவீங்களா..?

என்ன இப்படி கேட்டுட்டீங்க..?
ஒரு தடவை எங்க மேடம்
என்னை கூப்பிட்டு...

" இந்த புள்ளி, கேள்விக்குறி,
ஆச்சரியக்குறி எல்லாம் ஓ.கே..
அப்படியே நாலு வரி எதையாவது
எழுதி வைடான்னு திட்டினாங்க..!! "

இன்று ஒரு தகவல் :
---------------------

நீங்க உங்கள மாதிரி இருங்க..
மத்தவங்க மாதிரி இருக்க
மத்தவங்க இருக்காங்க..
.
.

36 Comments:

பெசொவி said...

special கவனிப்பு பத்தி இன்னொரு போஸ்டிங் போடுவீங்களா?
கேள்வி பதில் சூப்பர்!
இன்று ஒரு தகவல் உண்மையில் நல்ல அறிவுரை.

அருண் பிரசாத் said...

// ஒருவேளை நம்ம Blog பத்தி
பாராட்டறதுக்கா இருக்குமோ..//
என்னது ப்ளாக்-அ பாராட்டவா? சும்மா காமெடி பண்ணாதிங்க வெங்கட். ப்ளாக்-அ பாத்திருந்தா உள்ளவே விட்டிருக்க மாட்டாங்க. இருந்தாலும் உங்க நம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு.

// கோகுலத்தில சூரியன்
Blog Owner-க்கே இந்த
நிலைமைன்னா..? //
ஏதோ இது நம்ம ப்ளாக் நம்ம ப்ளாக் னு 100 வது பதிவுல சொன்ன மாதிரி ஞாபகம்!

Chitra said...

கோகுலத்தில சூரியன்
Blog Owner-க்கே இந்த
நிலைமைன்னா..?!!
அப்பாவி ஜனங்க எல்லாம்
என்ன பாடு படுவாங்க..??


...... அதானே? இதை கேக்க ஆளு இல்லைன்னு நினைச்சிட்டாங்க..... நாங்க வந்து பிரின்சிபால் கிட்ட "உண்மையை" சொல்லி சீட் வாங்கி இருப்போம்ல.

அன்புடன் அருணா said...

( ஒருவேளை நம்ம Blog பத்தி
பாராட்டறதுக்கா இருக்குமோ..!! )
இப்பிடில்லாம் கூட நினைப்பிருக்கா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒருவேளை நம்ம Blog பத்தி
பாராட்டறதுக்கா இருக்குமோ..!! //

இல்லைங்க நீங்க அஞ்சு நாளா பதிவு எழுதாம இருந்து மக்களை காப்பாத்தினதுக்கு பாராட்டுரதுக்கா இருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாடா அஞ்சு நாளா கலாய்க்கிறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். தானே வந்து மாட்டிக்கிட்ட தானைய தலைவர் வெங்கட் வாழ்க.

@ அனு,ரசிகன், பெயர் சொல்ல விருப்பமில்லை,அருண் பிரசாத்,ஜெகன்,சுதா,கவிதா வாங்க எல்லோரும் சேர்ந்து வெங்கட்டை கும்மலாம்

Anonymous said...

அப்பாடா அஞ்சு நாளா கலாய்க்கிறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். தானே வந்து மாட்டிக்கிட்ட தானைய தலைவர் வெங்கட் வாழ்க.எல்லோரும் சேர்ந்து வெங்கட்டை கும்மலாம்...


யாங்க‌ இந்த‌ கொலைவெறி....ச‌ரி போனா போக‌ட்டுமே என்று....ந‌ம்ம‌லை விட்டா யாரு இருக்காங்க‌ என்று "ந‌ம்ம‌" கோகுல‌த்தில்சூரிய‌ன் ப்ளாக்ல‌ க‌லாய்க்க‌ எவ்வ‌ள‌வு சுத‌ந்திர‌ம் த‌ருகிறார்...எப்ப‌டிஎல்லாம் கலாய்க்றோம்...ந‌ன்றியோடு இருப்போமுங்க‌...என்ன‌ சொல்ல‌ வர்றேனா...மொத்த‌மா வேண்டாமே...

movithan said...

அழகான குறும்பு.

அருண் பிரசாத் said...

வெங்கட், ADMISSION அப்போ இந்த INTERVIEW லாம் வெச்சி " ALEXANDER குதிரை பேர் எல்லாம் கேக்க மாட்டாங்களா?" தெரிஞ்சா நமக்கும் சொலுங்க பின்னாடி USE ஆகும்!

அனு said...

வெங்கட்,சில விஷயங்களை விட்டுட்டீங்களே..

//" உங்க Family-ல எல்லாரும்
குழந்தைகளை இங்கே LKG
வரைக்கும் தான் படிக்க வெக்கறீங்க..
அப்புறம் வேற School மாத்திடறீங்க..! "

" ஆமா.. அதனால என்ன..? "//

அதனால ஒன்னுமில்ல. நீங்க ஒரு ப்ளாக் வச்சி எல்லோருக்கும் torture குடுக்குறீங்களாமே??

இல்ல madam.. நான் நிஜமாவே ஒரு பெரிய ப்ராபள சாரி பிரபல பதிவர்.. எனக்கு இருக்குற followers, comments, votes இதையெல்லாம் பாத்தா இப்படி சொல்ல மாட்டீங்க..

எல்லாத்தையும் சொல்றீங்க.. நீங்க எழுதுற post-அ சொல்ல மாட்டேன்றீங்க..

ஹிஹி..

உங்க போஸ்ட்-ட படிச்சதுல இருந்தே என் கணவர் ஒரு மாதிரியா இருக்கிறார்.. ப்ளாக்ல நீங்க போட்டிருக்க photoவ பாத்தா கூட tension ஆறார்.. இப்போ உங்களை நேருல அடிக்கடி பார்த்தார்-னா என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு.. இதை மாதிரி எத்தனையோ? அதனால, நீங்க செஞ்ச பாவத்துக்கு எல்லாம் பிரயாசித்தமா நம்ம ஊரு அம்மன் கோயிலுக்கு 1000 ரூபாய் donation குடுத்திடுங்க..

(மீதி continued in post)

டிஸ்கி:
இதுக்கு அப்புறம் ஸ்கூல் பக்கமே வரமாட்டேன்னு வெங்கட் கையெழுத்து பொட்டு குடுத்த பிறகு தான் principal admission குடுத்தார்.
so, பையனுக்கு admission..
வெங்கட்டுக்கு no admission...

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_09.html

:-)

ரசிகன் said...

//உடனே அந்த Madam-க்கு
போன் பண்ணி சீட் குடுக்க
சொல்லிட்டாரு... //

சீட் குடுக்க சொன்னாரு ச‌ரி..
Donation குடுக்க‌ சொன்னாரா இல்ல‌யா..?

Madam சொன்ன‌ கார‌ண‌த்துக்காக‌ 1000 ம‌ட்டுமில்லாம‌,
கோகுலத்தில சூரியன் Blog Owner ஆ இருந்தும்
சீட் த‌ர்ற‌ அவ‌ங்க‌ ம‌ன தைரிய‌த்தை பாராட்டி
இன்னொரு 1000 சேர்த்து த‌ர‌ சொன்னதா,
ந‌ம்ப‌த்த‌குந்த‌ வ‌ட்டார‌ங்க‌ள்ல‌ இருந்து செய்திக‌ள் வ‌ருதே..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்க போஸ்ட்-ட படிச்சதுல இருந்தே என் கணவர் ஒரு மாதிரியா இருக்கிறார்.. ப்ளாக்ல நீங்க போட்டிருக்க photoவ பாத்தா கூட tension ஆறார்.. இப்போ உங்களை நேருல அடிக்கடி பார்த்தார்-னா என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு.. இதை மாதிரி எத்தனையோ? //

இது கூட பரவாயில்லை. ஜனான்னு ஒரு குழந்தை. வெளிநாட்டுல நல்லாத்தான் இருந்துச்சு. கொஞ்ச நாளா நம்ம வெங்கட் ப்ளாக் படிச்சு கமெண்டும் போட்டுச்சு. அப்புறம் அந்த ப்ளாக் படிச்சதில் எதோ ஆகி இப்ப அந்த குழந்தை என்ன ஆச்சுன்னே தெரியலை. நானும் அந்த குழந்தைக்கு ஏதும் ஆக கூடாதுன்னு கூகிளாண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

வெங்கட் said...

innikku inge Powercut. I will reply later..

கவிதா said...

ஸ்கூல்னாலே டென்ஷந்தாங்க,
ஏன்னா,நாம முதல் முதல்ல
ஸ்கூல் போனப்ப டென்ஷனா
இருந்திருப்போம்,அப்புறம்
ஸ்கூல் முடிஞ்சு 'டிசி' வாங்கறப்ப
இருந்திருப்போம்,இப்ப நீங்க உங்க
பசங்கள ஸ்கூல்ல சேர்த்தறப்ப
டென்ஷனாயிருக்கீங்க, அதனால
ஸ்கூல்னாலே டென்ஷந்தாங்க.

jashomaxm said...

thanks for email

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// special கவனிப்பு பத்தி இன்னொரு
போஸ்டிங் போடுவீங்களா..? //

இப்பவே Special கவனிப்புதான்..
Principal சாரே Gate வரைக்கும் வந்து
என் பையனை கையை பிடிச்சி
கூட்டிட்டு போறார்னா பாருங்களேன்..

ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..

வெங்கட் said...

@ அருண்.,

// ப்ளாக்-அ பாத்திருந்தா உள்ளவே
விட்டிருக்க மாட்டாங்க. //

உண்மைதான் ஒத்துக்கறேன்..,
நல்லவேளை அவங்க பார்க்கலை..
நம்ம Blog-ல வேற
உங்க Blog-க்கும் Link இருக்கு.

அதையும் படிச்சி..
என்னை ஊரைவிட்டு தள்ளி
வெச்சிட்டாங்கன்னா..?!!
ஐயோ..!! நினைச்சி பார்க்கவே
பயமா இருக்கே..!

வெங்கட் said...

@ சித்ரா.,

// நாங்க வந்து பிரின்சிபால் கிட்ட
"உண்மையை" சொல்லி சீட்
வாங்கி இருப்போம்ல. //

வேணாங்க..!!
நீங்க மட்டும் உண்மைய
சொல்லி இருந்தீங்க..
அவரு என் பையனுக்கு
பிரின்சிபால் சீட்டே தந்து இருப்பாரு..

ஸ்கூல் கொஞ்ச நாளைக்காவது
நல்லா இருக்கட்டும்..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
என்னது இது COMPANY SECRET லாம் வெளிய சொல்லிக்கிட்டு, நமக்குள்ளேயே இருக்கட்டும். இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அப்பாடா அஞ்சு நாளா கலாய்க்கிறதுக்கு
ஆள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம்.
தானே வந்து மாட்டிக்கிட்ட தானைய தலைவர் //

இதுக்கு பேருதான்

" சிங்கத்து குகைக்குள்ள வந்து
சிறு நரி Film காட்டுறது..!! "

" இது சிங்கம்லே.... "

" சிங்கத்துக்கு " முன்னாடி
யாரவது " அ " சேர்த்து
மறுபடியும் Comment போட்டீங்க..
அது Reject செய்யப்படும்..

வெங்கட் said...

@ அனானி.,

// ந‌ன்றியோடு இருப்போமுங்க‌...
என்ன‌ சொல்ல‌ வர்றேனா...
மொத்த‌மா வேண்டாமே... //

மொத்தமா கும்மினா மயக்கம் வந்துடும்.,
அப்புறம் வலி தெரியாது..
So., தெளிய வெச்சி, தெளிய வெச்சி
அடிக்கலாம்கறீங்க..

ஆஹா என்ன ஒரு நன்றி உணர்ச்சி..!!!

வெங்கட் said...

@ அருண்

// இந்த INTERVIEW லாம் வெச்சி,
ALEXANDER குதிரை பேர் எல்லாம்
கேக்க மாட்டாங்களா?" //

சொல்ல மறந்துட்டேனே.. கேட்டாங்க..

மேடம் : Alexander குதிரை பேர் என்ன..?

நான் : தெரியாது..!

மேடம் : இது கூட தெரியலை., உங்க
பையனை எப்படி எங்க ஸ்கூல்ல
சேர்த்தறது..??

நான் : எங்க பக்கத்து வீட்டு நாய் பேர்
தெரியுமா உங்களுக்கு..?

மேடம் : தெரியாது..

நான் : இந்த தெரியாதுக்கும்.,
அந்த தெரியாதுக்கும் சரியா போச்சு..
இப்ப சேர்த்துக்கோங்க..

ரசிகன் said...

//இந்த தெரியாதுக்கும்.,
அந்த தெரியாதுக்கும் சரியா போச்சு..
இப்ப சேர்த்துக்கோங்க..//

Madam : உங்க பையனை சேர்த்துகிட்டa blog எழுதறதை விட்டுடுவீங்களா?

வெங்கட் : முடியாது..

Madam : ஐ.. நீங்க மட்டும் முடியாது சொல்லுவீங்க நான் சொல்ல கூடாதா?பையனை சேர்த்துக்க முடியாது..

வெங்கட் : என் blogக்கும், பைய‌ன் admissionக்கும் ச‌ம்ப‌ந்தமே இல்ல... நீங்க செய்யறது தப்பு..

Madam : 4 பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...‌

வெங்கட் said...

@ அனு.,

இதுவரைக்கும் நீங்க நிறைய
கதை சொல்லிட்டீங்க.. So..
இன்னிக்கு நான் ஒரு கதை
சொல்லப்போறேன்.

அனு ஆபீஸ்ல ஒரு
முக்கியமான Meeting.

என்ன ஆச்சரியம்...,
அந்த Meeting-ல அனுவும்
வேற இருந்தாங்க..

" ஆமா அயிரை மீனுக்கு
ஐயர் வீட்ல என்ன வேலை..? "

Meeting ஆரம்பிச்சி ஒரு மணி
நேரம் போயிருக்கும்..

அனுவுக்கு Bore அடிக்குது..
Meeting-ல என்ன பேசறாங்கன்னே
புரியலை..

பின்ன ஆபீஸ்ல ஒரு நாளாவது
ஒழுங்கா வேலை பார்த்திருந்தா
பரவாயில்ல..,

Blogs படிச்சிகிட்டு.,
Comments போட்டுட்டு.,
FarmVille விளையாடிட்டு
இருந்தா எப்படி புரியும்..?

சரி.., Meeting தான் ஒண்ணும் புரியலை.
Friend-கிட்டயாவது பேசுவோம்னு
Mobile எடுத்து Call பண்றாங்க..
( விளங்குமா அந்த Company..? )

அந்த Friend Busy..
அட நம்மள தவிர மத்தவங்க
எல்லாம் பிஸியாத்தான்
இருக்காங்க போலன்னு மனசில
நினைச்சுக்கிட்டு..

புரியுதோ., புரியலையோ
இன்னும் ஒரு மணி நேரம்
Meeting-ல இருக்கறதுன்னு
முடிவு பண்றாங்க..

வந்த வேலை ஆகணும்ல..

( Lunch இன்னும் ஒரு மணி நேரம்
கழிச்சி தானே வரும்..! )

வெங்கட் said...

@ ரசிகன்..,

நீங்களும்., அனுவும் கூட்டணி
அமைச்சிகிட்டதா நம்பத்தகுந்த
வட்டாரங்களல் இருந்து எனக்கு
தகவல் வந்தது....

2012-ல உலகம் அழிஞ்சிடும்னு
சொன்னாங்க.. ஆனா..,
இப்பவே அழிஞ்சிடும் போல
இருக்கே..!!!

அனு said...

Behind the Scenes சொல்லி ரொம்ப நாள் ஆச்சு.. இன்னைக்கு நடந்தத சொல்லியே ஆகனும்..

'அனு meeting' கமெண்ட் போட்ட பிறகு வெங்கட் அனுவுக்கு போன் பண்ணுகிறார்..

வெங்: என்னைத் திரும்பவும் மன்னிச்சுடுங்க.. as usual, உங்க கைய காலா நினைச்சு கெஞ்சி கேக்குறேன்.. என் ப்ளாக்-க popular ஆக்குறதுக்கு வேற வழி தெரியல.. பிரபலமானவங்கள தாக்கி எழுதி popular ஆகுறது தான் இப்போ fashion. அதான் உங்களை கலாய்ச்சு எழுதிட்டேன்..

அனு: யோசிக்காம எதையாவது எழுதிட்டு என்கிட்ட மன்னிப்பு கேக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு.. நட்புக்காக இன்னொரு தடவை மன்னிச்சு விடுறேன்..இனி ஒரு தரம் இப்படி நடக்கக்கூடாது..

வெங்(பாதி அழுகையுடன்):ம்ம்ம்.. உங்க கட்சிக்காரங்க கிட்டயும் சொல்லிடுங்க..

அனு (மிதப்பலாக): ம்ம்ம்..

போன் கட்...

(கழக கண்மனிகளே... உருட்டுக்கட்டை, அரிவாள், சைக்கிள் செயின், சோடா பாட்டில் எல்லாத்தையும் ரெடியா எடுத்து வச்சுக்கோங்க.. வேட்டை ஆரம்பமாக போகுது..)

வெங்கட் said...

@ கவிதா.,

// ஸ்கூல் முடிஞ்சு 'டிசி' வாங்கறப்ப
டென்ஷனா இருந்திருப்போம்.. //

அப்ப நான் டென்ஷனா இல்லைங்க..
நான் +1 -க்கு மறுபடியும்
அங்கேயே சேர்ந்துடுவேனோன்னு
எங்க Principal மேடம் தான்
டென்ஷனா இருந்தாங்க..

அப்புறம் நான் வேற ஸ்கூல்
போறேன்னு சொன்னதும்..,
எனக்கு ஸ்வீட் எல்லாம் குடுத்து
வழியனுப்பினாங்க..

பெசொவி said...

பதிவுகளை விட பின்னூட்டங்களில் கலக்குகிறீர்கள், வெங்கட். கீப் இட் அப்!

வெங்கட் said...

@ அனு.,

// என்னைத் திரும்பவும் மன்னிச்சுடுங்க.. //
உங்க கைய காலா நினைச்சு கெஞ்சி கேக்குறேன்.. //

பொய்..! சுத்த பொய்..!!

" பொய் எனக்கு ரொம்ப பிடிக்கும்..,
ஆனா சொல்றது நானா இருக்கணும்..! "

// என் ப்ளாக்-க popular ஆக்குறதுக்கு
வேற வழி தெரியல.. பிரபலமானவங்கள
தாக்கி எழுதி popular ஆகுறது தான் இப்போ fashion. //

ஹி., ஹி., ஹி..
என் Blog Popular ஆக்க வேணா
எனக்கு வழி தெரியாம இருக்கலாம்..
ஆனா பிரபலமானவங்க யாருன்னு
கூடவா எனக்கு தெரியாது..??

ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆவதில்ல..

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// பதிவுகளை விட பின்னூட்டங்களில்
கலக்குகிறீர்கள், வெங்கட். கீப் இட் அப்..! //

அப்ப இனிமே பதிவை கூட
Comment Section-ல எழுதிட
வேண்டியது தான்..
ஹி., ஹி., ஹி..

அனு said...

@வெங்கட்

ஏற்றுக் கொண்ட வேஷத்தை நல்லாவே போடுறீங்க..திரும்ப திரும்ப தாக்கி எழுதி popularity-a increase பண்ணலாம்னு பாக்குறீங்க.. நடத்துங்க.. என்னை மாதிரி பிரபலமா இருந்தாலே இதை எல்லாம் சமாளிச்சு தான் ஆகனும்...

ப்ளாக்-ல வால்டர் வெற்றிவேல் ரேஞ்ச்-க்கு பில்ட் அப் குடுத்துட்டு, பின்னாடி வந்து கைப்புள்ள வடிவேல் ரேஞ்ச்-க்கு பொங்கி பொங்கி அழுவுற உங்களைப் பாக்கும் போது பாவமா தான் இருக்கு...

வெங்கட் said...

@ அனு..,

// என்னை மாதிரி பிரபலமா இருந்தாலே
இதை எல்லாம் சமாளிச்சு தான் ஆகனும்... //

ஹா., ஹா., ஹா..!!
நல்ல காமெடி..
ஒரு வாரத்துக்கு
நினைச்சி நினைச்சி
சிரிப்பேன்..

// திரும்ப திரும்ப தாக்கி எழுதி
popularity-a increase பண்ணலாம்னு
பாக்குறீங்க. //

நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி..??!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
இப்படியே தலைவிய தாக்கி தாக்கி COMMENTS ல இன்னொரு HALF CENTURY போட பிளான் பண்ணிடீங்க போல, BE CAREFUL (நான் எல்லாரையும் சொன்னேன்)

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

பள்ளிக்கூடம் போனமா புள்ளயச் சேத்தோமான்னு வரணும் - சும்மா சண்டை போட்டுக்கிட்டு - ம்ம்ம் - பய பாவம்ல

நல்வாழ்த்துகள் பையனுக்கு - வெங்கிட்டுக்கு இல்ல
நட்புடன் சீனா ( பய கூடவும் வெங்கிட்டு கூடவும் )

Anonymous said...

நீங்க உங்கள மாதிரி இருங்க..
மத்தவங்க மாதிரி இருக்க
மத்தவங்க இருக்காங்க..

Anna inda words Super......