சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 January 2010

மாசம் 20000 ரூபாய் மிச்சப்படுத்துவது எப்படி..?



ஏன்..? எதுக்கு..?

இப்படியல்லாம் குறுக்கு கேள்வி

கேட்காம நான் சொல்லுறதை
மட்டும் கேளுங்க..,

* ஞாயிற்றுக்கிழமை ஒரு 5000 ரூபாவை
எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுகோங்க..

* வெளிய போயி உங்க இஷ்டப்படி

செலவு பண்ணுங்க.. ஆனா வீட்டுக்கு
வரும்போது பணம் காலியாயிருக்கணும்.,
அவ்வளவுதான்.

* ஒரு வாரம் மட்டுமில்ல தொடர்ந்து 

நாலு வாரம் இதே மாதிரி செய்யணும். 
( இது ரொம்ப முக்கியம். )

* அப்ப மாசக் கடைசியில 20,000 ருபாய்
செலவாயிருக்கும். கரெக்டா..?

* இப்ப குப்புற படுத்து யோசிப்பீங்களோ..,

இல்ல மல்லாக்க படுத்து யோசிப்பீங்களோ
எனக்கு தெரியாது. - ஆனா 
" ஏன் செலவாச்சின்னு " யோசிங்க.

* ஆங்..! கண்டுபிடிச்சிடீங்களா..?


ஞாயிற்றுக்கிழமை வெளியே போனதால..

* அப்ப இனிமே ஞாயிற்றுகிழமை 

வெளியே போகாம வீட்டுலையே இருங்க..
20,000 ரூபாய் மிச்சம் தானே..!

( ஏன்.., ஏன்.. உணர்ச்சிவசப்படறீங்க.. 

பொறுமை., பொறுமை. )

" பொறுமை.., எருமையை விட 

பெருசுன்னு.. " நீங்க கேள்விப்பட்டதில்ல..
.
.

10 Comments:

தஞ்சாவூர்க்காரன் said...

ok ok

வெங்கட் said...

thanks

cheena (சீனா) said...

ஆகா இப்படியும் சேமிக்கலாமோ - தெரியாமப் போச்சே

ப.கந்தசாமி said...

இத்தன நாளா இது தெரியாமப் போச்சுங்களே. 75 வருசத்துல எத்தனை சேத்தியிருக்கலாம்?

வெங்கட் said...

சீனா சார்..,
மக்களுக்கு தெரியாததை சொல்லி
குடுக்கறது தான் நம்ம வேலையே..
இதை நான் ஒரு பொது சேவையாவே
செய்யறேன்னா பாருங்களேன்..!!!

வெங்கட் said...

வருத்தப்படாதீங்க Doctor சார்..,
இந்த வாரமும்
ஞாயிற்றுக்கிழமை வரும்ல..
இப்ப இருந்து Start பண்ணுங்க..!

Anonymous said...

mudiyala.....

வெங்கட் said...

பெயரில்லா..,
அப்படியெல்லாம் மனசு விடக்கூடாது..
முடியாதுன்னு நினைச்சிருந்தா
அமெரிக்காகாரன் நிலாவுக்கு போயி
இருப்பானா..?
முயற்சி பண்ணுங்க...!

செல்வா said...

வாய்ப்பே இல்ல ..!! இப்படி எல்லாமா யோசிப்பீங்க ..!! சரி மொக்க ..!!

மங்களூர் சிவா said...

haa haa
nice
:))